THIRU CHEN GAATAAN KUDI
1.61 திருச்செங்காட்டங்குடி
THIRU CHEN GAATAAN KUDI
பண் – பழந்தக்கராகம்
GAANASAMBATHER WHO HAS prayed in the keel veloor and then other places are prayed form moving. on hearing this message the nayanaar named thiru thunder ran fast received him and then entered in to thirucheng kaattaan kudi Ganasambanther got his friendship and then stayed there at that time went to ganabathcharm and then sang the following decade
நாகை கீழ்வேலூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளிகின்ற போது இச் செய்தியை செவுயுற்ற சிறுத் தொண்டர் ஓடிப்போய் அழைத்து வந்து திருச் செங்காட்டான் குடியைச் சேர்ப்பித்தார்.
சிறுத் தொண்டரோடு நட்பு கொண்டு அங்கு எழுந்தருளி இருக்கின்ற காலத்துக் கணபதீச்சரம் வழிபடச் சென்றார்.
கோயிலை வலம் கொண்டார் அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து எழுந்து திரு முன் கைக் கூப்பி நின்று சிறுத் தொண்டர் தொழ இருந்த பெருமையைச் சிறப்பித்து.
“நறை கொண்ட மலர் தூவி” என்னும் பொங்கி எழுந்த இசைப் பதிகமாகிய இதனைப் பாடினார்.
656 நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும்
NARAI KONDA MALAR THOOVI VIRIAI YALIPPA NAA DORUM
Your disciples are daily as per rule the filled new flowers are collected and then sprayed under lard Siva’s feet
அடியவர்கள் நாள்தோரும் விதிப்படி தேன் பொருந்திய இன்றைய நாள் மலர்களைத் தூவி மணம் கமழ செய்வித்துத்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
MURAI KONDU NIND RADIYAAR MUTTAMEA PANI SEIYYA
Daily without fail doing menial service under his feet and then prayed lard Siva
தவறாமல் நின்று பணி செய்து வழிபட
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
SIRAI KONDA VAND ARAYUNJ SENG KAATTANG KUDI YATHANUL
The wings are possessed honey bees are raising the humming sound and in that thiru chengkaatan place existing
சிறகுகள் உடைய வண்டினங்கள் ஒலிக்கும் திருச் செங்காட்டான் குடியில் விளங்கும்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.
KARAI KONDA KANATH THAAN GANAPA THEECH SARATH THANEA
The poison tainted throat possessed lard Siva whose descended place is thiruchengkaatan kudi place situated ganabathhcharm temple
விடக்கறை பொருந்திய கண்டத்தினாகிய சிவபிரான் எழுந்தருளி இருக்கும் கோயில் கணபதீச்சரமாகும்.
657வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
VAAR EETRA PARAI YOLIYUM SANG OLIYUM VAN THIYAMPA
The skin rope tied the drum sound and then conches are raising sounds
வாரால் இடித்துக் கட்டப்பட்ட பறைகளின் ஒலியும் சங்குகளின் ஒலியும் வந்திசைக்க
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச்
OOR EETRA SELVATH THDU ONGIYA SEER VILA VOOVAACH
In the whole hamlet place wealth filled form glory spread over place it is
ஊர் முழுவதும் நிறைந்த செல்வ வழங்களோடு பரவிய புகழை உடைய
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
SEER EETRA MUDAITH THAAYA SENG KAATTANG KUDI YATHANUL
The festivals are all the time conducting without any interruption in that thirucheng kaattan place existing
திருவிழாக்கள் இடைவிடாது நிகழும் திருச்செங்காட்டான் குடியில் விளங்கும்
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே.
KAAR EETRA KONDRAI YAAN GANAPA THEECH SARATH THANEA
In the summer time bloomed konrai flowers are adorned by lard Siva who has descended in the ganabatheecharam temple place
கார் காலத்தே மலரும் கொன்றை மலர் அணிந்த சிவபிரான் கணபதீச்சரம் என்றும் கோயிலில் எழுந்தருளி உள்ளார்.
658வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
VARANTHAI YAAN SO PURATH THAAN MANTHIRA TH THAAN THAN THIRATH THAAN
Lard Siva who has descended in varanthai soburam places
வரந்தை சோபுரம் ஆகிய தலங்களில் எழுந்தருளி இருப்பவன்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
KIRANTHAI YAAN KOVANATH THAAN KIN KINI YAAN KAI YATHOR
Lard Siva who has blessed and then gave four veethaas and agamaass and then who has adorned the loin cloths and in the leg place sound raising anklets are form
வேதா ஆகமங்களை அருளிச் செய்தவன் கோவணம் அணிந்தவன் காலில் கிண்கிணி அணிந்தவர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
SIRAN THAIYAAN SEN KAATTANG KUDI YAAN SENJ SADAI SEEARUM
In the hand place small drum named yudukkai carried in sound raising form and in the thiru senkaattaan temple place on his red color hair
கையில் உடுக்கை ஒன்றை ஏந்தியவன் சிவந்த சடை முடிமேல் திருச்செங்காட்டான் குடியில்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே.
KARANTHAI YAAN VENNEET RAAN GANAPA THEECH SARATH THANEA
Karanthai flowers are adorned and then white asheses are adorned all over the body that lard Siva’s descended place is ganabatheecharm
கரந்தை பூ சூடியவன் திருவெண்ணீறு அணிந்தவன் அப்பெருமான் கணபதீச்சரத்தில் எழுந்தருளியவன்
659தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண்
THONG KALUM KAMAL SAAN THUM AKIR PUGAI YUM THONDAR KON
The fragrance filled long garland and then sandal paste and the agil fumes all are carried by the disciples
மணம் கமழும் மாலைகளும் சந்தனமும் அகில் புகையும் கொண்டு தொண்டர்கள்
டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
KONDA KAIYAAL THOLU THETH THA ARUCHCHU NAR KAN ARUL SEI THAAN
With their lovely hand folded form prayed and praised and then conducted poojaas to who lard Siva instantly put his grace on them
தம் அழகிய கைகளால் தொழுது போற்றி வணங்கி அருச்சிக்க அவர்களுக்கு உடனே அருள் செய்த பெருமான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
SENG KAYAL PAAI VAYAL UTHTHA SENG KATTANG KUDI YATHANUL
The red color kayal fishes are leap forward and that water bodies filled place is thrucheng kaattan kudi
சிவந்த கயல் மீன்கள் பாயும் வளமான வயல்கள் புறமாகச் சூழ்ந்த திருச்செங்காட்டான் குடியில்
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே.
KANGAI SER VAAR SADAI YAAN GANAPA THEECH SARATH THANEA
The Ganges are stagnated on the long hair of lord Siva who has descended in the ganabathecharam temple place
கங்கை தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் கணபதீச்சரத்தில் எழுந்தருளி உள்ளான்
660 பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
PAALI NAAL NARU NEIY YAAR PALATH THINAAR PAYIND RAATTI
As per agama rule lard Siva is given sacred bath with milk ghee and then fruit juice in willing form
அடியார்கள் ஆகம விதிப்படி பாலினாலும் மணம் கமழும் நெய்யாலும் பலவற்றாலும் விரும்பி அபிஷேகம் செய்து
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
NOOLI NAAL MANA MAALAI KONARN THADI YAAR PURIN THETH THA
With fragrance filled garlands are adorned form and then with love filled form prayed
மணம் கமழும் மாலைகளைக் கொண்டு வந்து சூட்டி அன்போடு வழிபடுமாறு
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
SELINAAR VAYAL PUDAI SOOL SENG KAATTANG KUDI YATHA NUL
The sale fishes are filled the water bodies in encircled form and in that thiruchangkaatan kudi temple place
சேல் மீன்கள் நிறைந்த வளமான வயல்கள் புடை சூழ்ந்துள்ள திருச் செங்காட்டான் குடியில்
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.
KAALI NAAR KOOT RUTHAITH THAAN GANAPA THEECH SARATH THANEA
Lard Siva with his left feet kicked and then killed the death god ema who has descended in the gana batheecharm temple place
தனது இடது திருவடியால் இயமனை உதைத்தருளிய இறைவன் கணபதீச்சரத்தின் எழுந்தருளி உள்ளான்
661நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்
NUNI YAAN MIGA PERI YAAN OOVULAAR VAAY ULAAN
Lard Siva is micro form comparing other micro objects in this world and then comparing the bigger the bigger objects in this world eh the biggest form and then those who are affected by diseases those disciples will be praying with their mouth
இறைவன் நுண்ணியன யாவற்றிலும் மிக நுண்ணியன் பருமையான பொருள்கள் யாவற்றிலும் மிகப் பருமையானவன் நோய் முதலியவற்றால் வருந்துவோர் தம் வாயினால் துதிக்கப் பெறுபவன்.
தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
THAN NIYAAN VEIY YAAN NAN THALAI MELAAN MANATH THULAAN
He is calm form and to other religious people he is fire form and that for of lard Siva who is dwelling in the head and sole place
தன்மையானவன் புறச்சமயிகட்கு வெய்யவன் நமது முடியினதும் மனத்தில் கண்ணும் உறைபவன்
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
THINNI YAAN SENG KAATTANG KUDI YAAN SENJ SADAI MATHIYA
He is firm person and then on his hair place the curved moon adorned form
உறுதியானவன் தமது சிவந்த சடைமுடிமீது பிறை மதிக் கண்ணியைச் சூடியவன்
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.
KANNI YAAN KAN NUTHA LAAN GANAPA THEECH SARATH THANEA
Who has possessed the fore head eye
கண்ணியைச் சூடியவன் நெற்றிக்கண் உடையவன்
662மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
MAIYI NAAR MALAR NEDUNG KAN MALAI MAKALOR PAAKA MAAM
The dark color kuvalai flower like broad eyes are possessed lardess parvathi is given left part of his body
கருங்குவளை மலர் போன்ற நீண்ட கண்களை உடைய மலை மகளாகிய பார்வதி தேவியை ஒருபாகமாகக் கொண்டுள்ள
மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்
MEI YINAAN PAI YARAVAM ARAI KAITH THAAN MEEN PIRALATH
And that artanaari form of body possessed and then the dancing snake is tied on the waist place as belt
திருமேனியனும் படம் பொருந்திய பாம்பை இடையிலே கட்டியவனும்
செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள்
SEIYI NAAR THAN KALA NICH SENG KAATTANG KUDI YATHANUL
The fishes are all the time swimming and that water bodies are filled place is thiru cheng kaattaan kudi
மீன்கள் விளங்கித் திரியும் வயல்களாலும் அகன்ற கழனிகளாலும் சூழப்பட்ட திருச் செங்காட்டான் குடியில்
கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே.
KAIYI NAAR KOOR ERIYAAN GANAPA THEECH SARATH THANEA
That lard Siva who has carried burning fire pot on his hands and who has descended in the thiru seng kaattan kudi
கையிலே மிகுந்துள்ள தீயை ஏந்தியவனுமாகிய சிவபிரான் கணபதீச்சரத்தில் எழுந்தருளி உள்ளான்
663தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த
THOD UDAIYAAN KULAI YUDAIYAAN ARAK KAN DRAN THOL ADARNTHA
One ear place ear ornament thoodu adorned form and in yet another ear kulai adorned form and then ravana who has tried to lift the kaiyilai hills and that ravana’s shoulders are smashed that glory filled lard Siva
ஒரு காதில் தோட்டினை அணிந்தவன் பிறிதொரு காதில் குழை அணிந்தவன் கயிலையைப் பெயர்த்த இராவணன் தோள்களை நெரித்த பெருமை உடையவன்
பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
PEED UDAIYAAN POR VIDAI YAAN PEN PAAKAM MIGAP PERI YAAN
The fighter bull possessed as vehicle to travel and then lardess yumaaevi is given left part of his body and he is highly regarded person
போரிடும் காளையை உடையவன் பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன் மிகவும் பெரியவன்
சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்
SEDUDAI YAAN SENG KAATTANG KUDI YUDAIYAAN SEARNTH THAADUNG
And then greatness filled person who is dwelling in the thiuchengkaattaan kudi temple place
பெருமைகட்கு உரியவன்
காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.
KAAD UDAIYAAN NAAD UDAIYAAM GANAPA THEECH SARATH THANEA
To dance with demon force that burial ground place dwelling form and then in every nation who has temple to bless all
பூதகணங்களோடு சேர்ந்தாடும் சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டவன் நாடுகள் பலவற்றிலும் கோயில் கொண்டு அருள் புரிபவன்
664ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
AAN URAA YOOLI THARUVAAN AND RIRUVAR THERN THA THUNARAA
To climb on the bull back and then moving every place and then once bharma and thirumal tried to search lard Siva’s head and feet but failed in their mission
விடை மீது ஏறி அதனை ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவன் முன்னொரு காலத்தை திருமால் பிரமன் ஆகிய இருவர் அடிமுடிகளைத் தேர்ந்து உணர முடியாதவாறு
வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
VAAN OORAAN VAIYAKATH THAAN VAALTH THUVAAR MANATH THULAAN
Lard Siva in that way appeared before them in fire glow form
வானளாவ ஓங்கி நின்றவன்
தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
THEN OORAAN SENG KAATTANG KUDI YAAN SITRAM PALATH THAAN
And in this world appearing in chitambaram place and theenoor place and then kaanoor place and the seergaali place
இவ்வுலகில் சிற்றம்பலத்திலும் தேனூரிலும் கானூரிலும் கழு மலத்திலும் விளங்குபவன்
கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே.
KAAN OORAN KALU MALATH THAAN GANAPA THEECH SARATH THANEA
And that form of lard Siva who is also dwelling in thiru sebgaataan kudi and ganabatheesaram temple place
அவ் இறைவன் திருச் செங்காட்டான் குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளி உள்ளான்
665 செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
SEDI NUGARUM SAMANAR KALUM SEEVARATH THA SAAKI YARUM
The highly stinking body possessed saanaas and saffron dress adorned the buthaas
முடைநாற்றத்தை நுகரும் சமணர்களும் காவியாடை கட்டிய புத்தர்களும்
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
PADI NUGARAA THAYA RULAP PAAR KARULAA THA PAN PINAAN
Those persons are not known lord Siva’s good mannerism so they are put in to miseries so lord Siva did not put his grace on them
எம் பெருமானுடைய இயல்புகளை அறிந்துணராது துன்புறுபவர்கள் அவர்களுக்கு அருள் புரியாத இயல்பினனாகிய சிவபெருமான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
PODI NUGA RUNJ SIRUTH THONDAR ARUL SEIYUUM PORUT TAAKA
Those disciples who are adorned the sacred ashes all over the body those small disciples he will shower his grace on them
திரு நீற்று மனத்தையே நுகரும் சிறுத் தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டுத்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே.
KADI NAGA RAAI VEETE ERUNTH THAAN GNAPA THEECH CHARATH THANEA
So lard Siva seated in the thirucheng kaataan kudi place of ganabatheecharm who has descended
திருச்செங்காட்டான் குடியை விளங்கிய தலமாகக் கொண்டு அங்குள்ள கணபதீச்சரத்தில் எழுந்தருளி உள்ளான்
666 கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
KARAI YILANGU MALARK KU VALAI KAAN KAATTAK KADI POLILIN
The darkness filled flower kuvali flowers are bloomed and the spread over the fragrance everywhere in that flower plantations are covered place
கருமை பரவி விளங்கும் மலராகிய குவளை கண் போன்ற மலர்ந்து விளங்குவதும் மணம் கமழும் சோலைகளிலுள்ள
நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
NARAI YILANGU VAYAL KAALITH THAMIL GNANA SAMANTHAN
The honey fragrance spread over that water bodies are filled place of seergali where descended Ganasambanther who is excelled in the Tamil poems
தேனின் மணம் வீசுவதுமான வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
SIRAI YILANGU PUNAR PADAIP SENG KAATANG KUDI SEEARTH THUM
With boundaries covered form of water bodies are filled place is thiru sengkaatan kudi where dwelling lard Siva and on him sang the above songs
கரைகளோடு கூடி நீர் நிறைந்து தோன்றும் வயல்கள் சூழ்ந்த திருச்செங்காட்டான் குடியில் விளங்கும் கணபதீச்சரத்து இறைவன் மீது பாடிய வேதப் பொருள்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே.
MARAI YILANGU THAMILVALLAAR VAANULA KATH THIRUP PAAREA
Those disciples who are chanting this Tamil garland form of poems and then ultimately they will in the upper world
நிறைந்த இத்திருப்பதிகத் தமிழ் மாலையை ஓத வல்லவர் வானுலகில் வாழ்வர்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கணபதீசுவரர், தேவியார் – திருக்குழல்மாதம்மை.
திருச்சிற்றம்பலம்