OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUNALLARU

ganesheit July 8, 2019

1.49 திருநள்ளாறு

THIRUNALLARU


பச்சைத்திருப்பதிகம்
GREEN LEAF DECADE


This palm leaf while put in to the fire it did not burnt down at the time of oratation with samana saints
இது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது
வேகாதிருந்தது.
இப்பதிகம் சமணர் செய்த அனல் வாதத்தில் (தீயில் இடுதல்) வெற்றி கூட பச்சைப் பதிகம் ஆயிற்று
Ganasambanther after prayed in the thiru bharma puram and then entered in to the thiru nallaru temple place in melted form sand the following decade and then prayed before lard Siva and then guarded it safely and then asked thiru neela gander to turn with yawl musical instrument and then gave happiness to all
திருத்தருமபுரத்தை வழிபட்டுத் திரு நள்ளாற்றை அடைந்த காழிவேந்தர் அன்புருகாதலினால் உள்ளுருகி இறைவனை வணங்கி பொருவில் திருப்பதிகமாகிய காப்பும் இட்டு திருநீலக்கண்ட பாழ்ப்பானரை யாழில் வைத்து வாசிக்கச் செய்து தரும் படி எல்லோரையும் மகிழ்வித்தார்
இப்பதிகமே சமணர்கள் செய்த அனல் வாதத்தில் வெற்றிகண்ட பச்சைப் பதிகம்


526 போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
POKKAM AARTHTHA POON MULAIYAAL THANODUM PON NALKALAM

To give happiness to every living beings and then ornaments are adorned form of breasts are possessed lordess yumaadevi who has been given lard Siva’s left part of his body and ever permanent artanaari form appeared in this world
இன்பத்துக்கு நிலைக் கலனாகவும் அணிகலன்கள் பொருந்தியவுமாகிய தனங்களை உடைய உமையம்மையத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப்பாகமாக ஒன்றாக இருக்க செய்தவனும்

பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
PAAKAM AARTHTHA PAINKAN VEL LETRANANL PARAMETI

The lust green form of eyes are possessed the bull which is white in color that bull is used lard Siva as his travelling vehicle to travel everywhere who is to all
பசிய கண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்த்தியாகக் கொண்ட தலைவனும்


ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
AAKAM AARTHTHA THOL UDAIYAN KOVANA AADAIYIN MEL

Lard Siva on his sacred body skin dress covered form and then in the waist place tied loin cloth on it
திருமேனியின் மேல் போர்த்த தோலாடை உடையவனும் இடையில் கட்டிய கோவண ஆடையின் மேல்


நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
NAAGAM AARTH THA NAMPERUMAAN MEYATHU NALLAREA

Snake is tied as belt form and in that way appearing lard Siva’s descended place is thiru nallaru temple place
நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமாகிய நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு

527 தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
THO DUDAIYA KAATHU UDAIYAN THOLUDAI YAN THOLAI YAA

Lardess yummadevi is given left part of lard Siva’s body where ear ornament named thodu adorned form of and then skin dress tied form of
அம்மை பாகத்தே உள்ள இடச் செவியில் தோடு அணிந்த காதினை உடையவனும் தோலை ஆடையாகக் கொண்டவனும்


பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
PEED UDAIYA POR VIDAIYAN PONNUMOOR PAALUDAIYAN

There is no deficiency that glory filled fighter bull is taken as vehicle to travel all the places and then lardess yumaa devi is kept one part of his body
குன்றாப் புகழ் உடையதும் போர் செய்தலில் வல்லவனுமான விடை ஊர்தியனும் மலைமகளை ஒருபாகமாக கொண்டவனும்


ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
EAADU UDAIYA MELULA GO DEEL KADALUNJ SOOLNTHA

The seven layer form of appearing seven worlds and which is encircled by seven seas
அடுக்குகளாக அமைந்த மேல் உலகங்களோடு ஏழு கடலாலும் சூழப்பட்ட நாடு


நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.
NAADU UDAIYA NAM PERUMAAN MEYATHU NALLAA REA

And this world is also possessed by lord Siva who is willingly dwelling place is thiru nallaru
என்னும் இந்த நில உலகமும் உடையவனுமாகிய பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்

528 ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
AAN MURAIYAAL AATRA VEN NEER AADI ANI YILAIYOOR

From the cow pace collected the cow dung and then which is dried form burnt down and then its ashes are collected as sacred form and then applied all over the body and then lovely form of lardess yumaadevi
பசுவிடம் இருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை மேனி முழுவதும் பூசி அழகிய


பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
PAAN MURAIYAAL VAITHTHAPAATHAM PATHTHAR PANITH THEETHA

Who has been decorated by ornaments that lardess parvathi is given left part of lard Siva’s body in that arta nareswarer form of sacred feet are prayed and then praised by disciples
அணிகலன்களைப் புனைத்து உமையம்மையை ஒரு பாகம் வைத்துள்ள தம் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்ற


மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
MAAN MARIYUM VEN MALUVUNJ SOOLAMUM PATRIYA KAI

Lard Siva who has carried the young stage on his hand and then malu soolam carried form
இளமான் வெண்மையான மழு சூலம் ஆகியவற்றை ஏந்திய கையினராய்


நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.
NAAN MARAIYAAN NAM PERUMAAN MEYATHU NALLAAREA

That form of lard Siva who has blessed and then gave four veethaas to this world whose descended temple place is tiru nallaaru
நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்

529 புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
PULGA VALLA VAAR SADAI MEL POOM PUNAL PEITH AYALEA

The well form possessed pigtail on it Ganges are adorned and its nearby place
பொருந்திய நீண்ட சடையின் மேல் கங்கையை அணிந்து அதன் அருகில்


மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
MALGA VALLA KONDRAI MAALAI MATHI YOODUDAN SOODI

Konrai garland adorned and then curved moon is adored form
கொன்றை மாலையையும் பிறை மதியையும் ஒரு சேரக் சூடிக்


பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
PALKA VALLA THONDAR THAM PORPAADHA NELAL SEARA

Those disciples who are surrender under lard Siva’s feet and the who gave them mukthi state
தன்னை சார்ந்து வாழும் தொண்டர்கட்குத் தனது திருவடி நிலைச் சேரும்


நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
NALGA VALLA NAM PERUMAAN MEYATHU NALLAREA

That boon is given by lard Siva and whose residential place is thiru nallaru
பேற்றை நல்கும் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்

530 ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
EAARU THAANGI OORTHTHI PEENI YEAR KOL ILA MATHIYAM

Lard Siva who has carried bull flag on his hands and then used real bull as his travelling medium and then lovely form of young moon
அதன் ஏற்றைக் கொடியாகத் தாங்கியும் அதனையே ஊர்தியாக விரும்பி ஏற்றும் அழகிய இளம்பிறை கங்கை


ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
AARU THAANGU SENNI MEE LOR AAD ARAVANJ SOODI

And Ganges and all are adorned on the hair place one more item snakes are also adorned
கங்கை ஆகியன பொருந்திய சடைமுடியின் மேல் ஆடும் பாம்பைச் சூடியும்


நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
NEERU THAANGI NOOL KIDAN THA MAARPIL NIRAI KONDRAI

Lard Siva who has applied sacred ashes all over the body in paste form and in the bosom three knotted thread and then konrai flower garland
திருநீறு பூசிப் பூனுளோடு விளங்கும் மார்பில் கொன்றை மாலையின்


நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
NAARU THAANGU NAM PERU MAAN MEYATHU NALLAAREA

That fragrance filled form of appearing our lard Siva whose residential place is thiru nallaaru
மணம் கொண்டவனுமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்

531 திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
THING KAL UCHI MEL VILAN GUNTH DEVAN IMAI YORKAL

Moon existing on the top of the hair who is deevass leader
திங்கள் திருமுடியின் உச்சி மீது விளங்கும் தேவனாய் தேவர்கள் எங்கள் உச்சியாய் உள்ள எம்பெருமானே என்று அடிபரவவும்


எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
ENGAL UCHCHI YEM MIRAIVAN ENDRADI YAE YIRAIJI

Lard Siva is prime god in this way praying
எங்கள் உச்சியாய் உள்ள எம் பெருமானே என்று அடிபரவவும்


தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
THANGAL YUCHI YAAL VANANGUNTH THAN NADIYAAR KAT KELLAM

In this way disciples are bowed their head under lard Siva’s feet
தலையால் தன்னை வணங்கும் அடியவர்களும் எங்கள் முடி மீது


நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.
NANGAL YUCHI NAM PERUMAAN MEYATHU NALLAAREA

In this way lard Siva dwelling ten inches above the place named as sagasarathalam and in this way lard dwelling place is thiru nallaaru
விளங்கும் நம் பெருமான் என்று போற்றவும் விளங்கும் சிவபெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்

532 வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
VEN SUDAR THEE YANGAI YEENTHI VIN KOL MULAU ATHIRA

The wild light filled fire is carried on the hand and the up to the space place vibrating the drum sounds and then so many people afraid of
கொடிய ஒளி பொருந்திய நெருப்பைக் கையில் ஏந்தி விண்ணளவும் ஒலிக்கும் முழவு முழங்கப் பலரும்


அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
ANJIDATH THOR AADAL PAADAL PENUVA THANDRI YUM POOI

In that burial ground pace with dancing and singing form
அஞ்சும் சுடுகாட்டில் ஆடல் பாடலுடன்


செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
SEN SADAIK KORR THINGAL SOODITH THIKAL THARU KANDATH THULLEA

And young moon adorned form and wild poison stagnated in the throat place that form of our lard Dwelling place is thiru nallaaru
ஓர் இளம் பிறையைச் சூடி விளங்கும் கண்டத்தில்


நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
NANJ ADAITHA NAM PERUMAAN MEYATHU NALLAAREA

நஞ்சை நிறுத்திய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்

533 சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
SITTAM AARNTHA MUM MATHILUNJ SILAI VARAITH THEE YAMPI NAAL

The greatness filled three castles are destroyed by rock bow and fire arrow
பெருமை மிக்க முப்புரங்களையும் வரை சிலையில் பொருந்திய தீயாகிய அம்பினால்


சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
SUTTU MAATICH SUNNA VENNEE RADUVA THANDRI YUM POI

And then burnt down form of sacred ashes are adorned all over the body
சுட்டு அழித்து திருவெண்ணீற்றுப் பொடியில் திலைத்து சூடி


பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
PATTAM AARNTHA SENNI MELOR PAAL MATHI YANJ SOODI

On the head place adorned ornament pattam and then milk like curved moon ear ornament named thodu and then
பட்டம் என்னும் அணிகலன் கட்டிய சென்னியின் மேல் பால் போலும் நிறமுடைய தோடு பிறை மதியைச் சூடி


நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
NATTAM AADUM NAMPERUMAAN MEYATHU NALLAAREA

Dancing our lard whose residential place is thiru nallaru
நடனம் ஆடும் நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்

534 உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
UNNAL AAGAA NANJU KANDATH THOON DUDANE OODUNGI

No one consume that poison is consumed by lard Siva and then stagnated form kept in the throat place
யாராலும் உண்ண முடியாத நஞ்சினை உண்டு அதனைத் தம் கண்டத்தில் நிறுத்தியவரும்


அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
ANNAL AAKAA VANNAN NEEL AARALAL POL URUVAM

No one go near to him and that leader ship possessed lard Siva and light and heat form of lard Siva
யாராலும் அணுக இயலாத தலைவரும் ஒளி பொருந்திய அழல் போன்ற திரு உருவினரும்

ல் போலுருவம்
ANNAL AAKAA VANNAN NEEL AARALAL POL URUVAM

No one go near to him and that leader ship possessed lard Siva and light and heat form of lard Siva
யாராலும் அணுக இயலாத தலைவரும் ஒளி பொருந்திய அழல் போன்ற திரு உருவினரும்


எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
ENNAL AAGAA YUL VINAI YEN RELKA VALITH THIRUVAR

Because of infinitive form of bad deeds lard Siva is not put in the place of meditation that thirumal and bharma
அநாதியாகவே உள்ள வினையால் எண்ண இயலவில்லையே என மனம் பொருந்திய திருமால் பிரமர்களால்


நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
NANNAL AAGAA NAM PERUMAAN MEYA THU NALLA REA

Not to be approached who is our lard’s residential place is thiru nallaru
நணுக முடியாதவருமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்

535 மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
MAASU MEIYAR MANDA TH THERAR KUNDAR KUNA MILIGAL

The dirty filled body possessed samanaas and then in the hand place carrying and wandering with mandai bowel and those buthhass are bulky samanaas are not good mannerism possessed persons
அழுக்கேரிய உடலினராகிய சமணரும் கையில் மண்டை என்னும் உண் கலத்தை ஏந்தித் திரியும் புத்தர்களும் ஆகிய குண்டர்களும் நற்குணம் இல்லாதவர்கள்.


பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
PESUM PECHAI MEI YEN RENNI AN NERI SELLAN MIN

Those persons wards are not relied upon so you may not enter in to their religion
அவர்கள் பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அவர்கள் சமயங்களைச் சாராதீர்


மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
MOOSU VANDAAR KONDRAI SOODI MUM MATHILUM MUDANEA

The honey bees are encircling form of konrai flower garland adorned and three castles are instantly
வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி மும்மதில்களையும் ஒரு சேர


நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
NAASAJ SEITHA NAM PERUMAAN MEE YATHU NALLAAREA

Destroyed by fire arrow so he guarded the devas cluster who is our god and his residential place is thiru nallaaru
அழித்துத் தேவர்களைக் காத்தருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்

536 தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
THANN PUNALUM VEN PIRAI YUNTH THAANKIYA THAAL SADAIYAN

The cool Ganges and white moon stagnated on the lowly hanging hair and that lard Siva’s descended place is
குளிர்ந்த கங்கையும் வெண்மையான பிறையையும் தாங்கிய தாழ்ந்த சடை முடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய


நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
NANBU NALLAR MALGU KAALI GNANA SAMANTHAN NAL LA

To get good friends that good people are living seergali temple place descended gaana sambanther
நட்புக்கு ஏற்ற நல்லோர் வாழும் சீகாழிப்பத்தியில் தோன்றிய ஞானசமந்தர்


பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
PANBU NALLAR EAATHTHUM PAADAL PATHTHUM IVAL VALLAAR

The good qualities filled people are living in the thiru nallaru temple place is praised form of sang the above songs number in ten those disciples who are chanting it repeatedly
நல்லியல்பு வாய்ந்தோர் வாழும் திருநள்ளாற்றைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லார்


உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.
YUNBU NEENGI VAANAVA RO DU LAKIL YURAIVAAREA

In this bad deeds are reduced form and then enter in the upper world and then happily live there for ever
பிராரத்த கன்ம வலிமை குறையப் பெற்று வாணர்களோடு தேவர் உலகில் வாழ்வார்.

இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் – தெர்ப்பாரணியர்,
தேவியார் – போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்

July 8, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: