OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU NEDUM KULAM

ganesheit July 8, 2019

1.52 திருநெடுங்களம்
THIRU NEDUM KULAM


பண் – பழந்தக்கராகம்
This is Cauvery southern side temple where saint agastiyar prayed. Ganasambanther prayed in Thiru erumbiyoor and then other temple places and then entered in the thiru nedum kulam and then sang the following decade
காவிரி தென்கரைத் தலம் அகத்தியர் வழிபட்டது திருஎறும்பியூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு ஆளுடைய பிள்ளையார் திருநெடுங்கலத்தை அடைந்து வழிபட்டு நின்பால் நேசம் செல்லாவகைத் தடுக்கும் இடும்பை தீர்த்தருள்வாய் என வேண்டி மறையுடையாய் என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்


559 மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
MARAI YADAIYAAI THOL UDAIYAAI VAAR SADAI MEL VALARUM

Lard Siva you have chanted vethaas and then got it as your wealth and then you have adorned skin dress and then on the long hair place living
வேதங்களை தனக்கு உடைமையாகக் கொண்டவனே தோல் ஆடை உடுத்தவனே நீண்ட சடை மேல் வாழும்


பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
PIRAI YUDAIYAAI PINJAKANEA YEND RUNAIP PESIN ALLAAL

Living moon is adorned and then well decorated hair style possessed lard Siva and in this way you are praised by your disciples
இளம் பிறையைச் சூடியவனே தலைக் கோலம் உடையவனே என்று உன்னை வாழ்த்தினால் அல்லது


குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
KURAI YUDAI YAAR KUTRA MORAAI KOLKAI YINAAL YUYAR NTHA

The deficiency filled persons sins you do not kept in to your mind and then those disciples who are only think over that you are the prime god in this world and did not think over any other sub gods with that principle form of living persons
குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துள் கொள்ளாத நீ மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாது கொள்கையில்


நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
NIRAI YUDAI YAAR IDAR KALAI YAAI NEDUNG KALA MEYA VANEA

In that way full-fledged thinking persons whose problems are removed and then blessed them
மேம்பட்ட இறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள்வாயாக

560 கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
KANAI THELUTH THA VEN DIRAI SOOL KADAL IDAI NANJU THAN NAITH

The emotional form of roaring the white sea waves which is covered form of emanated the sea poison
ஆரவாரித்து எழுந்த வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத்


தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
THINAI THANAI YAA MIDATRIL VAITH THA THIRUN THIYA DEEVA NINAI

That poison is converted as small grain form and then ate it and placed it in the throat place and that form of highly regarded prime lard Siva you are
தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே


மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
MANTH AKATH THOR PAADAL AADAL PENI YIRAPI PAKALUM

Those disciples who are place you in their mind place and those persons dancing and singing are liked and then day and night
நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல் பாடல்கள் விரும்பி இரவும் பகலும்


நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
NINAITH TOLUVAAR IDAR KALAI YAAI NEDUNG KALA MEYA VANEA

Think over you in their prayer and those disciples problems are removed and then bless them
நின்னையே நினைத்து எழும் அடியார்களின் இடர்களை நீக்கி அருளுக

561 நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
NIN ADIYEA VALI PADUVAAN NIMALAA NINAI KARUTHA

Lord Siva your sacred feet alone is prayed by margandaya and the at the end of sixteenth year who has surrender under your feet
நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிக் சரண்புக


என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
ENN ADIYAAN UYIRAI VAV VEEAL END RADAL KOOT RUTHITHA
The death god ema who has come to kill him at the last day of his life and then lard Siva got angry with him and who is my disciple s you should not corner his life and then kicked the death god ema and then killed him
அவனைக் கொல்ல வந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து என் அடியவர் உயிரைக் கவராதே என்று உதைத்தருளிய உன்


பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
PON ADIYEA PARAVI NAALUM POO VODU NEER SUMAK KUM

So your golden feet are prayed daily and then flowers and water carried daily
பொன் அடிகளையே வழிபட்டு நாள்தோறும் பூவும் நீரும் சுமந்து


நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
NIN ADIYAAR IDAR KALAI YAAI NEDUNG KALA MEYA VANEA

And in that way praying your disciples problems should be removed and in that benevolent way you have descended in the thiru nedung kalam temple place
வழிபடும் உன் அடியார்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக

562 மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
MALAI PURINTHA MANA VAN RAN MAKALAI YOR PAAL MAKILNTHAAI

The rock king daughter lardess parvathi is taken left part of body and got happy for it
இமவான் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியின் ஒரு பாதியாகக் கொண்டு மகிழ்பவனே


அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
ALAI PURINTHA KANGAI THANGUM AVIR SADAI AARURAA

The waves are emanating Ganges river water is carried on the spread over hair and in that form you are dwelling in the thiruvaaroor temple
அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினை உடைய திருவாரூர் இறைவனே


தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
THALAI PURIN THA PALI MAKILVAAI THALAVA NIN THAAL NILAL KEEL

Lard Siva you have bharma skull willingly carried on your hand and then going every door steps for begging food and then accept it and got happy for that act. You are my leader and then under your feet
தலையோட்டை விரும்பி ஏந்தி அதன் கண் பலியேற்று மகிழ்பவனே தலைவனே நினது திருவடி நிழற்கீழ்


நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
NILAI PURIN THAAR IDAR KALIYAAI NEDUNG KALA MEYA VANEA

Standing form liked your disciples and whose problem in life is removed and then blessed him my dear lard Siva you have descended in the thiru nedumklam temple place
நிற்றலையே விரும்பும் அடியார்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக திருநெடுங்களம் மேவிய இறைவனே

563 பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
PAANGKI NALLAAR MADIMANJ SEI VAAR PAARIDA MUM PALI SEEAR

The character filled good people and penance performing form of saints who are collecting begging food from the land pace living people and then because of your act
குணங்களால் நல்லவர்களும் தவவேடம் தாங்கியவர்களும் பாரிடை வாழும் மக்களிடம் பலர் உடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களால்


தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
THOONGI NALLAR PAADA LODU THOLU KALALEA VANANGITH

With oneness of mind the good people are singing good prayer songs and then prayed under your feet
மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழுத்தக்க உன் திருவடிகளை வணங்கிக்


தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
THAANKI NILLAA ANBI NODU THALAVA NIN RAAL NILAR KEEL

There is no boundary to the love towards you and that form of leader you are ,and those disciples who are surrender under your feet
கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடி நிழலை நீங்கி


நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
NEEENGKI NILLAR IDAR KALAI YAAI NEDUNG KALA MEYAVANEA

And then all the time stand under your feet and that form of disciple’s problem may be removed and then bless them
நீங்கி நில்லாதவர்களாகிய அடியார்களின் இடர்களைக் கலைத்தருள்வாயாக

564 விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
VIRUNTHA NAAKIP PAALAN AAKI VEDHDA MOR NAAN KUNARNTHU

The elderly appearance form and then young appearance form and then four veethaas are better form understood
மூத்த வேடம் தாங்கியும் இளமை வடிவம் கொண்டும் வேதங்கள் நான்கையும் நன்கு உணர்ந்த தலைவனாய்


கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
KARUTHA NAAKI KANGAI YAALALI KAMAL SADAI MER KARANTHAAI

The Ganges lady is kept on the fragrance filled hair in concealed form and you are my lord
கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே


அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
ARUTHA NAAYA AATHI DEVAN ADI INAIYEA PARAVUM

The art gaana and true gaana and matter form of prime god and in that way your sacred feet are praised and then dancing and singing form praised those disciples
கலை ஞானங்கள் மெய் ஞானங்கள் பொருளான முதற் கடவுளாய் உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியார்களின்


நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
NIRUTH THAR KEETHAR IDAR KALAI YAAI NEDUNG KALA MEYA VANEA

And those disciples problems may be removed and then bless them
இடர்களைப் போக்கி அருள்வாயாக

565 கூறு கொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
KOORU KONDAAI MOONDRU MOND RAAK KOOTI YOR VENG KANAIYAAL

Lardess yumaadevi is given left part of your body and then lard Siva you have thirumal fire and wind is clubbed form of created single arrow in unique form
உமையம்மையைக் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவனே அரி எரி காற்று ஆகிய முன்றையும் ஒன்றாகக் கூட்டி ஒப்பற்ற அம்பினால்


மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
MAARU KONDAAR PURAM ERITH THA MANNAVANE KODI MEL

The general form veetha way of life is defied form of those three castle assuraa’s castile’s are destroyed by fire and that form of king you are and then on the flag place
வேத வழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே கொடி மீது


ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
EERU KONAAI SAANTHA MEE THEN REM PERU MAAN ANINTHA

BULL EMBLAM STUDDED FORM you have carried flag on your hands and then fragrance filled sandal paste form
இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே இதுவே மணம் பொ ருந்திய சந்தனமாகும் என்று எம் பெருமானே


நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
NEERU KONDAAR IDAR KALAIYAAI NEDUNG KALA MEYA VANEA

Lord Siva you have adorned sacred paste all over the body willingly and then those disciples problem you may remove it and then bless them
நீ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடரை நீக்கி அருள்வாயாக

566 குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
KUNDRIN UCHCHI MEL VILANGUM KODI MATHIR SOOL ILANGAI

The meru hills has three mountain ranges and out of one is existing in ravana place and on the top of it flags are tied and encircled by castles and that place is srilanga and its king is ravana
மேருமலையின் சிரங்களின் மூன்றில் ஒன்றாகிய குன்றின் மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகல் மன்னனும்


அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
ANDRI NINDRA ARAKKAR KOONAI ARU VARAIK KEEL ADARTH THAAI

That ravana who has tried to lift the kailai hills and the assura leader ravana is stamped under the kailai hills
உன்னோடு மாறுப்பட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமாகிய அரக்கர் தலைவனுமாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழ் அடர்த்தவனே


என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
ENDRU NALLA VAAI MOLIYAAL ETHTHI YI RAAP PAKALUM

And in that way good prayer songs are singing form of day and night you are praised by your disciples
என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே எத்தி


நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
NINDRU NAI VAAR IDAR KALAI YAAI NEDUNG KALA MEYA VANEA

In that way melted mind disciples problems are to be removed by you and then bless them
நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக

567 வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
VELAVOMKOM POSITHTHAMAALUM VILANGIYA NAANMUGANUM

One assura named kangen who has driven an elephant to kill thirumal and then who has broken the tusks of that elephant and then glory filled bharma
கஞ்சனால் ஏவப்பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குலவயா பீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும் புகழ் பெற்ற நான்முகனும்


சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
SOOLAVENGUM NEDAVAANGKOR JOTHIYUL AAKI NINDRAAI

Those above ego filled persons are searched lard Siva’s feet and head but you have appeared in between them fire pole form
தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு இருவருக்கும் இடையே ஜோதிப் பிழம்பாய் தோன்றி நின்றவனே


கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
KELALVEN KOM PANIN THA PEM MAAN KEEDILAAP PON NADIYIN

Lard Siva you have adorned pig teeth as ornament form
பன்றியினது கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே


நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
NEELAL VALLVAA RIDAR KALIYAAI NEDUNG KALA MEYAVANEA

Those disciples who are living under lard Siva’s feet shadow and whose hindrances may be removed and then bless them
திருவடி நிழலின் வாழும் அடியார்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக

568 வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
VENJ SOL THANJ SOL LAAKKI NINDRA VEDA MILAANJ SAMANUNTH

Harsh wards are uttered as ordinary form of wards and as per their saintly appearance not co inside with their acts and that way living samanas and good mannerism not possessed those buthaas
கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பு இல்லாத புத்தர்களும்


தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
THANJA MILLACH SAAKI YARUNTH THATHUVA MONRU ARIYAAR

The Siva religion stating the true wards meaning is not understood not even a fraction amount
சைவ சமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள்


துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
THUNJA ILAAL VAAI MOLIYAAL THOTHIRAM NIN ADIYEA

You may go away from those samanass and buthaas and then approach lard Siva dwelling in thiru nedum kulam and not perishable form of glory filled with veetha and prayer songs lard Siva is glorified and those disciples who are thought over your feet in their mind and that persons impediments are to be removed and then bless them. Lard Siva you have descended in the thiru nedum galam temple place
அவர்களை விடுத்து திருநெடுங்குளம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை


நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
NENJIL VAIPAAR IDAR KALAIYAAI NEDUNGKALA MEYAVANEA

In that way those disciples who are thinking over in their mind and that disciples problems may be removed and then bless them
நெஞ்சில் கொண்டு வாழும் அடியர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக

569 நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
NEEDA VALLA VAAR SADAIYAAN MEYA NEDUNG KALATHTHAI

More and more long form growing hair possessed lard Siva who has descended in the thiru nedum kulam temple place
மேலும் மேலும் நீண்டு வளரத் தக்க சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தைச்


சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
SEAR VAALUM MAA MARUKIR SIRA PURAK KON NALATH THAAL

The elderly people are living in broad streets are possessed seergali place leader gaanasambanther
பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப் பதியின் தலைவனாகிய ஞானசமந்தன்


நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
NAADA VALLA PANU VAL MAALAI GNANASAMATHAN SONNA

Gaanasambather who has prayer form of singing the above poems
போற்றிப் பாடிய நன்மைப் பொருளால் ஆராய்ந்து உரைத்தக்க இப்பாடல்கள்


பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.
PADAL PATH THUM PAADA VALLAAR PAAVAM PARAI YUMEA

Those disciples who are sung the above poems whose sins will be removed
பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும் .

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நித்தியசுந்தரர், தேவியார் – ஒப்பிலாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

July 8, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: