THIRUVATHIGAI VEERATTAANAM
1.46 திரு அதிகைவீரட்டானம்
THIRUVATHIGAI VEERATTAANAM
பண் – தக்கராகம்
This is central kingdom place temple. Now it is situated near banrutti. It is one of the asta veerata temples. Here lard Siva fired the three castles and that form of brave act conducted place
Here thirumal bharaman and five pandava fings are prayed and conducted poojaas. In this temple place the saint Thiru naayukku arasar got relief from stomach pain. Here hirynayukku arasar’s elder sister did menial service under lard Siva’s feet. The saint suntherer who is afraid to touch this place by feet so he stayed in the nearby inn sitavadam. Here lard Siva descended in disciple appearance and then put his feet on suntherer head and then blessed him
நடு நாட்டுத்தலம் பண்ருட்டியின் அருகில் உள்ளது அஷ்ட வீரட்டங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிறைந்த இடம். In this temple place lard Siva showed his sacred dancing appearance to gaana sambanther
திருமால் பிரமன் கருடன் பஞ்சபாண்டங்கள் வழிபட்டது. திருநாவுக்கரசர் சூலை நோய் நீங்கப் பெற்ற திருத்தலம் அவர் தமக்கையார் திலகவதி திருத் தொண்டு செய்த தலம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தை மிதிக்க அஞ்சி அருகில் உள்ள சித்த வடமடத்தில் தங்கி இருக்க அவருக்கு ஈசனே அடியார் திருகோலத்தில் வந்து திருவடி தீட்சை வழங்கினார்.
சைவ சித்தாந்த சாத்திரங்களுள் உண்மை விளக்கம் என்னும் சாத்திர நூலைச் செய்தருளிய ,மணவாசகம் கடந்தானின் தலம்.
திருஞானசம்பந்தருக்கு ஈசன் திரு நடனக் காட்சியை நல்கிய திருத்தலம்.
அதிகை – தலப்பெயர்
வீரட்டானம் – கோயில் பெயர்
திருவக்கரை முதலிய பதிகளை வணங்கிய பிள்ளையார் அடியார் கூட்டத்துடன் திருவதிகைக்கு எழுந்தருளி இருக்கின்ற காலத்து சிவபெருமான் நம் திருநடனத்தைப் புலப்படும் பழக் காட்டியருள குண்டைக் குறட்பூதம் என்னும் இத்திரு பதிகத்தை அருளிச் செய்தார்கள்.
Ganasambanther after prayed in thiru vakkarai and then other temple places and then ultimately entered in to this thiruvathigai temple place and then sang the following songs
493 குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
KUNDAIK KURAT POOTHANG KULUMA ANAL EAANTHI
The bulky demon forces are covered form of lard Siva carried fire on his hands
பருத்த குள்ளமான பூதகணங்கள் தன்னைச் சூழ்ந்து நிற்கக் கையில் அனலை ஏந்தியவனாய்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
KONDAI PIRAL THEN NEER KEDILA VADA PAKKAM
The kenndai fishes are rolling form playing in the pure kedilam river water and its northern side banks
கெண்டை மீன்கள் பிறழ்ந்து விளையாகும் தெளிந்த நீரை உடைய கெடில நதியின் வடகரையில்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
VANDU MARUL PAADA VALAR PON VIRI KONDRAI
The honey bees are emotional filled form humming musical sound is raised form where lard Siva adorned the fully bloomed konrai flower garland on his bosom
வண்டுகள் மருளித் தளப்பண் பாட பொன் போன்ற விரிந்து மலர்ந்த கொன்றை மலர் மாலை அணிந்தவனாய்ச் சிவபிரான்
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.
VINDA THODAI YALAA NAADUM VERT ANAATH THEA
In that temple veerattanam where lard Siva is dancing
உள்ள திருவதினை வீரட்டானத்து ஆடுவான்.
493 அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
ARUM BUNG KURUM BAIYUM MALATH THA MEN KONGAI
Lardess yumadevi appeared in the form of lotus flower bud and thender coco nut in that form of breast possessed
சிவபிரான் தாமரை அரும்பு குரும்பை ஆகியவற்றை அழகால் வென்ற மென்மையான தனங்களையும்
கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்
KARUMBIN MOZHI YAALODU UDAN KAI ANAL VEESIK
Who has sugar juice like tastier wards are talking and that form of parvathi deevi, lard Siva mingled with her and then carried fire in his hands carried form
கரும்பு போன்ற இனிய மொழில்களையும் உடைய உமையமையோடு கூடிக் கையில் அனல் ஏந்தி வீசிக் கொண்டு
சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
SURUM PUN VIRI KONDRAI SUDAR POR SADAI THAALA
The bees are honey sucking that konrai flower garland adorned on the golden color hair hanging form
வண்டுகள் தேன் உண்ணும் இதழ் விரிந்த கொன்றை மாலை அணிந்த ஒளி மயமான பொன் போன்ற சடைகள் தாழத்
விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே.
VIRUM BUM ATHIKAI YUL AADUM VEERAT TAANATH THEA and this place is abundantly loved by lard Siva that is thiru veerattaanam where lard Siva is in dancing form
தன்னால் பெரிதும் விரும்பப்படும் அதிகை வீரட்டானத்து ஆடுவான்
494 ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்
AADAL ALALNAAGAM ARAIKKUM ITU ASATHTHU AADA
The winning force filled and fire like wild poison filled the snake is tied as belt form on the waist place and then allow those snakes are dancing form
வெற்றியையும் அழல் போலும் கொடிய தன்மையையும் கொண்ட நாகத்தை இடையில் பொருந்தக் கட்டி ஆடுமாறு செய்து
பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்
PAADAL MARAI VALLAAN PADUTHUN PALI PEYAR VAAN
all the time chanting veethaas are excelled form and then dancing the dance named paduthem and ten wandering every place for begging food
பாடப்படும் வேதங்களில் வல்லவனாய் படுதம் என்னும் கூத்தினை ஆடிக் கொண்டு பலிதேடித் திரிபவராய்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
MAADA MUKATIN MEL MATHI THOI ATHI KAIYUL
In that thiru veerattanam place on the high raised storied buildings where the moon is crawling form
சிவபிரான் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்த மாடவீடுகளை உடைய திருவதிகையில் உள்ள வீரட்டானத்தில்
வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே.
VEDAM PALA VALLAAN AADUM VERAT TANAATH THEA
In variety of character disguised appearance form and then excelled in dancing
பல்வேறு கோலங்களைக் கொள்ளுதலில் வல்லவனாய் ஆடுவான்
496 எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
ENNAR EYIL EITHAAN IRAIVAN ANAL EAANTHI
The opponents three castles are destroyed by fire by lard Siva who has carried fire on his hands
பகைவரது திரிபுரங்களை எய்தி அழித்த இறைவன் அனலை கையில் ஏந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
MANNAR MULAVU ATHIRA MUTHIRAA MATHI SOODI
Ever permanent form big drum vibrated form of raised sound and then young moon is adorned on his hair place
மார்ச்சனை இடப்பட்ட முழவு முழங்கி இளம் பிறையை முடியில் சூடிப்
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
PANAAR MARAI PAADAP PARAMAN ATHIKAI YUL
The musical notes are filled form of veethaas are all the time chanting by bharamins
பண் அமைப்பு உடைய வேதங்களை அந்தணர் ஓதத்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே.
VIN NORR PARAVA NIND RAADUM VEERAT AANATH THEA
In this thiru vatigai veerattaanam temple place deevaas are praising form and praying form standing there where lard Siva dancing all the times
திருவதிகை வீரட்டானத்தே தேவர்கள் போற்ற நின்று ஆடுவான்
497 கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
KAARI PUN PURA MAAYA KALIN THAAR IDU KAATIL
The dark color outer place burial ground place where dead bodies are burning down in that pyre place
கரிந்த புல்லிய ஊர்ப்புறமாய் இறந்தவர்களை எறிக்கும் சுடுகாட்டில்
திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
THIRU NINDRU ORU KAIYAAL THIRU VAAM ATHI KAIYIL
On the one hand fire is carried and then dancing where the wealth god always staying there and in that thiru vathigai temple place
ஒரு திருக்கரத்தால் எரி ஏந்தி ஆடும் பெருமான் திருமகள் நிலைபெற்ற திருவதிகையில் உள்ள வீரட்டானத்தில்
எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
ERIY EEANTH THIYA PERU MAAN ERI PUN SADAI THAALA
The fire like form of red color hair possessed lard Siva whose hair is lowly hanging form
எரி போன்ற சிவந்த தன் சடையை தாழ்ந்து
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே.
VIRIYUM PUNAL SOODI AADUM VEERAT TAANATH THEA
And then in that hair the spread over Ganges are adorned and dancing and that temple place is thiru veerattaansm
விரியும் புனல் சூடி ஆடும் வீரட்டானத்தே
498 துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
THUAN GUM SUDAR ANGAITH THU THAIYA VIALAI YAADI
Ever swaying form of burning fire is carried on his lovely hands and then dancing and playing all the times
அசைந்து எரியும் அனலை அழகிய கையில் பொருந்த ஏந்தி விளையாடி
இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
ILANG KOM PANA SAAYAL UMAI YODU ISAI PAADI
The young tender pole like lardess Yumaadevi with her clubbed form singing
இளங்கொம்பு போன்ற உமையம்மையோடு இசைபாடி
வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
VALANG KOL PUNAL SOOLN THA VAYAL AAR ATHIKAI YUL
The fertile water encircling the paddy fields are possessed place is thiru vathigai veerattam temple place
வளமை உள்ள புனல் சூழ்ந்த வயல்களை உடைய திருவீதிகையில்
விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே.
VILANGUM PIRAI SOODI AASUM VEERAT TAANATH THEA
Lard Siva in this thiru veerattam temple place the moon is adorned on the hair place and then dances
வீரட்டானத்தே முடிமிசை விளங்கும் பிறை சூடி ஆடுவான்
499 பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
PAADHAM PALAR EAATH THA PARAMAN PARA MEETTI
The prime lard Siva whose sacred feet are, so many people are praised and then prayed form
பரம்பொருளாகிய பரமன் தன் திருவடிகளைப்பலரும் பரவி ஏந்தி வணங்கவும்
பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக்
POOTHAM PUDAI SOOLAP PULITH THOL UDAI YAAKA
The demon forces are covered form and then adorned the tiger skin
பூதகணங்கள் புடை சூழவும் புலித் தோலை உடுத்து
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
KEE THAM UMAI PAADAK KEDILA VADA PAKKAM
Where lardess yumaa devi singing prayer songs and in that kedilam northern side
உமையம்மை கீதம் பாடக் கெடில நதியின் வடகரையில்
வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே.
VEDHA MUTHALAN NEND RAADUM VEERAT TAANATH THEA
The principal for veethaas and that prime form of lard Siva who is dwelling in the thiru veerattanam temple place all the time dancing
வேத முதல்வனாய் வீரட்டானத்தே ஆடுவான்
500 கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
KALAAR VARAI YARAKKAN THADANTH THOL KAVIN VAADA
The rock stones are filled the kilai hills which is tried to lift by Ravana whose lovely shoulders are shattered form
கற்கள் பொருந்திய கயிலை மலையை எடுத்த இராவணின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறு
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
OLLAI ADARNTH THU AVANUKU ARUL SEITHU ATHIKAI YUL
IN THAT WAY COMPLETELY SMASHED HIS SHOULDRS and then after wards realized his fault and then lard Siva blessed him with long life and sward and gave name ravana
அடைந்துப் பின் அவனுக்கு அருள் பல செய்தும்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
PALLARR PAGU VAAYA NAGU VEN THALAI SOODI
The teeth are filled the laughing skull garland is adorned on his neck place
பற்கள் பொருந்திய பிளந்த வாயை உடைய வெள்ளிய தலை மாலையைச் சூடித்
வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே.
VILLAAL EYIL EITHAAN AADUM VEERAT TAANATH THEA
That form of lard Siva who has destroyed the three castles with bow and arrow that dancing lard Sivas residential place is thiru vathigai veerattam
மூப்புறங்களை வில்லால் எய்து அழித்தும் திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்
501 நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
NEDI YAAN NAAN MUGANUM NIMIRN THAANAIK KAAN KILAAR
The gigantic form of raised thirumal and bharma they are unable to see lard Sivas face and then lard Appeared before them fire pole form from land to space level
பேர் உருவம் கொண்ட திருமாலும் நான்முகனும் அழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தவனை
பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
PODI YODU MAAR PAANAIP PURINOOLUDAI YAANAI
The sacred asheses are adorned bosom possessed lard Siva and three knotted thread adorned lard Siva is not seen by necked eyes
திருநீறு அணிந்த மார்பிணனை முப்புரிநூல் அணிந்தவனைக் காண்கிலார்
கடியார் கழுநீலம் மலரு மதிகையுள்
KADIYAAR KALU NEELAM MALARU MATHIKAI YUL
In that form of lard Siva who has adorned the blue color adorned flower garland and in that place existing
அப்பெருமான் மணம் கமழும் நீலப் பூக்கள் மலரும் திருவதிகையில் உள்ள
வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே.
VEDI YAAR THALAI YEENTHI AADUM VEERAT TAANA THEA
In that veerattam temple place who has carried highly stinging the human skull and then dancing always
வீரட்டானத்தே முடை நாற்றம் உடைய தலை ஒட்டைக் கையில் ஏந்தி ஆடுகின்றான்
511 அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
ARAI YODU ALAR PINDI MARU VIK KUNDI KAI
The papal tree and fully grown ashoka tree are considered as holly one by buthhaass and samanaas and the carried vessel form of
அரசமரத்தையும் தழைத்த அசோகா மரத்தையும் புனித மரங்களாகக் கொண்டு குண்டிகையாகக்
சுரையோ டுடனேந்தி உடைவிட் டுழல்வார்கள்
SURAI YODU UDAN ENTHI UDAI VITU ULAL VAARKAL
Surai kudukkai carried on the pole end place tied form wandering everywhere by buthhas and naked samanaas
சுரை குடுக்கையை ஏந்தித் திரியும் புத்தர்கள் ஆடையற்று திரியும் சமணர்கள் ஆகியவர்களின்
உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
URAI YODU URAI OVVAA THU UMAI YODU UDAN AAKI
Whose preaching wards are not acceptable to the day to day life so you do not hear it and lard Siva appearing with lordess Yumaadevi
பொருந்தாத வார்த்தைகளைக் கேளாதீர் சிவபிரான் உமையம்மையோடு உடனாய்
விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே.
VIRAI THOOI ALAR THAA RAAN AADUM VEERAT TANAATH THEA
The fragrance filled flower garland adorned lard Siva who is dancing I the thru vathigai veerattam temple place you may pray him there
மணம் கமழும் மாலை அணிந்த சிவபிரான் அதிகை வீரட்டானத்தே ஆடுவார் அவனை வணங்குங்கள்
512 ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
GNAALAL KAMAL KAALIYUL GNANA SAMAN THAN
In the gnaalal creeper plant place bloomed the fragrance filled flower sand in that seergali place descended gaana sambanther
ஞாலற் செடிகளின் மலர்கள் மணம் கமழும் சீகாழியுள் தோன்றிய ஞானசமந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
VELAM PORU THEN NEER ATHIKAI VEERAT TAANATH THUCH
The long grass name naanal which is in the river bed so that not to erode the river banks in that clear water flowing in the thiru vathigai veerattam temple place
நாணல்களால் கரைகள் அரிக்கப் படாமல் காக்கப்படும் தெளிந்த நீர் வளம் உடைய திருவதிகை வீரட்டானத்தில்
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
SOOLUM KALA LANAAI SONNA THAMIL MAALAI
Lard Siva who has adorned the anklet on his dancing feet who has been praised form of sang the above Tamil poems
ஆடும் கழல் அணிந்த அடிகளை உடைய சிவபிரானைப் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை
வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே.
VAALUM THUNAI YAAKA NINAI VAAAR VINAI EILAAREA
Those disciples who are thinking the above ten sings as their guide in life they will not affected by bad deeds
வாழ்வுத் துணையாகக் நினைப்பவர் வினையிலராவர்.
இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.
சுவாமிபெயர் – அதிகைநாதர், வீரட்டானேசுவரர்;
தேவியார் – திருவதிகைநாயகி.
திருச்சிற்றம்பலம்
July 5, 2019