OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU SERAPURAM

ganesheit July 5, 2019

1.47 திருச்சிரபுரம்
THIRU SERAPURAM


விளக்கம்: பதிக்க எண் ஒன்று காண்க.
பண் – பழந்தக்கராகம்


504 பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
PAL ADAINTHA VEN THALAIYIL PALI KOLVATHU ANDRIYUM POI

The teeth are filled the white skull carried on hands and then wandering everywhere for begging food
பற்கள் பொருந்திய வெண்மையான தலையில் பல இடங்களுக்கும் போய்ப் பலியேற்றதோடு


வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே
VIL ANDANTHA PURUVA NALLAAL MENIYIL VAITH THAL ENNEA

The bow like eye lashes are possessed lardess yumaadevi is given left part of your body please tell me reason for it
வில் போன்ற புருவத்தை உடைய உமையம்மையை உன் திருமேனியில் ஒரு பகுதியாக கொண்ட காரணம் யாதோ?


சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
SOL ADAINTHA THOL MARAI YODU ANGAM KALAIKAL ELLAAM

The inner meanings are filled wards are filled form of good old veethaas and its component parts of six angaass and other arts are well learnt and then understood its meanings
பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் பிறகலைகளையும் கற்றுணர்ந்த


செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே.
SEL ADAINTHA SEVAR VAALUM SIRA PURA MEYA VANEA

The rich fellows are living in the seergaali temple place where descended lard Siva
செல்வர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப்பதியுள் எழுந்தருளிய இறைவனை

505 கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்
KOLLAI MULLAI NAGAI YINAAL OR KOORU ATHU ANDRI YUM POI

In the hilly area place appeared lardess parvathi whose teeth are mullai flower buds form possessing lordess parvathi is given left part of his body please give me the reason for it
முல்லை நிலத்தே தோன்றிய முல்லை அரும்பு போன்ற பற்கள் உடைய உமையம்மை ஓர் கூற்றில் விளங்கவும்.


அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
ALLAL VAALK KAI PALI KONDU UNNUM AATHARAVU EANNI KOLAAM

Even though you have wife but your wandering in toiling and moiling form everywhere and then collecting begging food and then eat it willingly please tell me the reason for it
சென்று அல்லற்படுவோர் ஏற்கும் பலி உணவை ஏற்று உண்ணுதலில் விருப்பம் கொள்வது ஏனோ?


சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
SOLLA NEEDA PERU MAI YAALAR THOL KALAI KATRU VALLAAR

The infinite glory filled glory filled persons and then good old arts are well learnt form of excelled in it that pundits are living place
சொல்லச் சொல்ல நீண்டு செல்லும் பெருமையாளரும் பழமையான கலைகளைக் கற்று வல்லவர்களுமாகிய அறிஞர்கள் வாழ்வதும்


செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே.
SELA NEENDA SELVA MALGU SIRA PURA MEYAVANEA

THAT INFINITIVE WEALTH not to be exhausted while giving to others and that wealth filled the seergali place living lard Siva
வழங்கத் தொலையாத செல்ல வளத்தை உடையதுமான சிரபுரம் மேவிய இறைவனை

506 நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
NEER ADAINTHA SADAIYIN MEL OR NIKAL MATHI YANDRI YUM POI

On the Ganges adorned hair besides one curved moon is adorned
கங்கையை அணிந்த சடைமுடியின் மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்து


ஊரடைந்த எருது ஏறியுண்பலி கொள்வதென்னே
OOR ADAINTHA EARUTHU EEARI UN PALI KOLVATHU ENNEA

SO AS TO TRAVEL SO MANY HAMLETS
in that way you have one bull form of chariot possessed and then collecting the begging food please tell me the reason for it
பல ஊர்களையும் அடைதற்கு எதுவாய ஆனேற்றில் ஏறிச் சென்று பலரிடமும் பலிஏற்று கொள்வது ஏனோ?


காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
KAAR ADAIN THA SOLAI SOOLNTHU KAAMARAM VANDISAIP

CLOUDS ARE CRAWLING IN THE flower plantations are covered place where honey bees are raising the seegamaram form of musical notes sounds form singing and then got happy from it and then taking shelter in this place
மேகங்கள் தவழும் சோலைகளால் சூழப் பெற்றதும் வண்டுகள் சீகாரம் என்னும் பண்ணைப் பாடி மகிழ்ந்து உறைவதும்


சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே.
SEER ADAINTHA SELVAM OONGU SIRIPURA MEYAVANEA

The ethical way earned wealth is multiplied form in this seergaali temple place you are in active form dwelling
அறநெறியில் விளைந்த செல்வம் பெருக்கி விளங்குவதுமாகிய சிரபுரம் மேவிய இறைவனே

507 கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
KAI ADAIN THA MAANI NODU KAAR ARAVU ANDRIYUM POI

On the hand place carrying stage and dark color snake and with it
கைகளில் மான் கரிய பாம்பு ஆகியவற்றைக் கொண்டு


மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
MEI ADAIN THA VETKAI YODU MELLIYAL VAITH THAL ENNEA

But in your body left place soft shivering form of yumaadevi you have possessed so please tell me the reason for it
உனது திருமேனியில் பெரு விருப்போடு உமையம்மையை இடபாகமாகக் கொண்டுள்ளது ஏனோ?


கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
KAI ADAIN THA KALAI KALAAKAK SENG KALI NEER MALAR KAL

The weeds are plucking in the paddy fields the abandon form water plant senkaluneer flowers are plucked
களை எடுப்போர் கைகளில் மிக அதிகமான களைகளாகக் செங்கழுநீர் மலர்கள்


செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.
SEI ADAINTHA VAYAL KAL SOOLN THA SIRIPURA MEYAVANEA

And that lovely paddy fields are filled place is seergali where lard Siva you have descended
வந்தடையும் அழகிய வயல்களால் சூழப்பட்ட சிவபுரம் மேவிய இறைவனே

508 புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக்
PURAM ERITTHA PETRI YODUM POOR MATHA YAANAIYAI THANAIK

Lard Siva who has destroyed the three castles with fire arrow and then the mad elephant with brave form of tried to fought war with lord Siva
திரிபுரங்கள் எரித்தழிந்த பெரு வீரத்தோடு போர் செய்ய வந்த மதயானையைக்


கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே
KARAM EDUTH THU THOL URITHTHA KAARA NAM AAVA THENEA

And then that elephant is lifted with hands and pealed its skin and then adorned it as upper dress please tell me the reason for it
கையால் தூக்கி அதன் தோலை உரித்துப் போர்த்த காரணம் யாதோ?


மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
MARAM URITH THA THOL YUDUTHTHA MAATHAVAR THEVA RODUM

The bark from the tree is pealed and then adorned it as dress by saints and deevaas
மரத்தை உரித்தால் ஆன மரவுரி என்னும் ஆடையை அணிந்த முனிவர்களும் தேவர்களும்


சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே.
SIRAM EDUTH THA KAIKAL KOOP PUM SIRA PURA MEYANEA

Those people are raised their hands above the head and then prayed lard Siva in seergali temple place
கைகளை தலைக்கு மேல் கூப்பி வணங்கும் சிரபுரம் மேவிய இறைவனை

509 கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
KANNU MOONDRUM UDAIYA THU ANDRIK KAIYINIL VEN MALVUM

Three eyes are possessed lard Siva who has carried malu battle force on hand

முக்கண்களை உடையவனாய்க் கைகளில் வெண்மழு
பண் மூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
PANN MOONDRU VEENAI YODU PAAM BUDAN VAITHTHA THENNEA

Three types of musical notes possessed form of veena instrument carried on hand and snakes are crawling form appearing to the world please tell me the reason for it
பண் மூன்றுடைய வீணை பாம்பு ஆகிய கொண்டுள்ள காரணம் யாதோ


எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்
ENNU MOODRU KANALUM OOMBI ELUMAI YUM VILUMI YARAAITH

Three type of yaga fire ( aagavaniyam karugaa patiyam and thachinaagni) is developing by bharmins and in seven births pure form living
ஆகவனியம் காருக பத்தியம் தக்ஷிணாக்கினி என்று எண்ணப்படும் முன்று தீயையும் வேட்பதுடன் ஏழு பிறப்பிலும் தூயவராய் உறுதிப் பாட்டுடன்.


திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.
THINNA MOONDRU VEELVI YAALAR SIRIPURA MEYANEA

And then three types of yaagaas such as veethaa yaga, pirth yaadam, irudi yaagam in their respective fields excelled bharimins are living place is seergali where lard Siva descended
தேவயாகம், பிதிர்யாகம், இருடியாகம் ஆகிய வேள்விகளையும் புரியும் அந்தணர்கள் வாழும் சிரபுரம் மேவிய இறைவனை

510 குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
KURAI PDAATHA VET KAI YODU KOLVALAL YAALYAALI ORUPAAL

Without any deficiency form of love much fore arm bangles are adorned by lordess yumaadevi who has given left part of lard Siva’s body
குன்றாத வேட்கையோடு திரண்ட கை வலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாக


பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
PORAI PADAATHA INBAMODU PUNAR THARU MEIMAI EANNEA

Without any limit that happiness is enjoyed please tell me the reason for it
அளவற்ற இன்பத்துடன் புணர்தற்குக் காரணம் என்னையோ?


இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
IRAI PADAATHA MEN MULAI YAAR MAALIKAI MEL IRUNTHU
well straight tender breast are possessed young ladies who are appeared at the mansion upper place
சிறிதும் சாயாத மெல்லிய தனங்களை உடைய இள மகளில் மாளிகைகளின் மேல் இருந்து


சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே.
SIRAI PADAATHA PAADAL ONGUM SIRA PURA MEYA VANEA

The sin and flawless form of singing where lard Siva you have happily seated in seergaali temple place
குற்றம் அற்ற பாடல்களைப் பாடும் மகிழ்ச்சி மிகுந்துள்ள சிரபுரம் மேவிய இறைவனை

511 மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்
MALAI EDU THTHA VAAL ARAKKA ANJA ORU VIRALAAL

The kaila hills are lifted by ravana who has got afraid of and Siva put with one finger on the land
கயிலை மலை எடுத்த வாள் வரி உடைய இராவணன் அஞ்சுமாறு கால்விரல் ஒன்றியனாய்


நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
NILAI EDUTH THA KOL KAIYAANEA NIN MALANE NINAI VAAR

In that way lard Siva stamped him and then showed his mighty power to him and you are flawless form and then those who are think over him
அடர்ந்துத் தன் நிலையை எடுத்துக் காட்டிய செயலைப் புரிந்தவனே குற்றம் அற்றவனே தன்னை நினைவாரும்


துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
THULAI EDUTH THA SOL PAYILVAAR ME THAGU VEETHI THORUM

In that way to way deeds are in the balanced form of those disciples who are praying lard Siva and who are living in that every street place and then to arjuna
இருவினையொப்புடன் தோத்தரிக்கும் அன்பர்களும் மேன்மை மிக்க வீதி தோறும் வாழ விசயனுக்காக


சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே.
SILAI EDUTHTHA THO LINAANE SIEA PURA MEYIYAVANEA

Lord Siva carried bow and arrow on shoulder place and in that form lard Siva you have descended in the seergali temple place
வில்லை சுமந்த தோளினை உடையவனே சிரபுரம் மேவியவனே

512 மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
MAALI NODU MALAR INAANUM VNTHU AVAR KAANATHU
bharna and thirumal two are fought each other because of their supremacy prime position
தாமே பெரியார் என வந்த திருமாலும் தாமரை மலரில் உறையும் நான்முகனும்


சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
SAALUM ANJAP PANNI NEENDA THATHUVA MEYATHU ENNEA

But they are unable to establish their supremacy so lard Siva appeared before them in fire pole form please explain the reason for it
இயலாது மிகவும் அஞ்சுமாறு செய்து மிக நீண்ட திரு உருவைக் கொண்டது ஏன்


நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
NAALU VEDHAM OTHA VALLAAR NAM THUNAI ENDRU IRAIJACH

The four veethaas are chanting bharamins who are considered lard Siva as their guide and in that way submitted under his feet and prayed and then conducted poojaas
நான்கு வேதங்களும் ஓதும் அந்தணர்கள் நம் துணைவனே என்று கூறி இறைஞ்ச


சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.
SELU MEYUM KALANI SOOLNTHA SIRIPURA MEYAVANEA

In the water bodies sale fishes are living that paadu fields are covered place is seergali
சேல் மீன்கள் மேயும் வயல்கள் சூழ்ந்த சிவபுரம் மேவிய சிவனே

513 புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
PUTHTHA RODU SAMANR SORKAL PURA NURAI YEND RIRUKKUM

OUTER religious people are preaching their doctrines which are considered as not acceptable one
புத்தர்கள் சமணர்கள் ஆகிய புறச் சமயிகளின் வார்த்தைகள் புறனுரை என்று கருதும்


பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
PATHAR VANTHU PANIYAVAITHTHA PAAN MAIYATHU ENNAI KOLLAM

Those disciples are come over under his feet and submitted before him what type of mannerism it is please explain it to me
பத்தர் வந்து பணியுமாறு செய்த பான்மை யாதோ


மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
MATHTHA YAANAI URIYUM PORTHTHU MANGAI YODUM MUDANEA

The mad elephant skin is pealed and then adorned it as upper dress and then appeared together with lardess parvathi
மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்த உமையம்மையாருடன்


சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே.
SITHTHAR VANTHU PANIYUM SELVACH SIRIPURA MEYAVANEA

The saints named sithers are come over here and then submitted under his feet and in that form lard Siva you have descended in the seergaali temple place
சித்தர்கள் பலரும் பணியச் செல்லக் சிரபுர நகரில் மேவிய இறைவனே!

514 தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை
THEANGU NEENDA SOLAI SOOLNTHA SIRA PURA MEYAVANEA
The coco nut trees are grown in the high place and that plantations are covered place is seergali where lard Siva descended in this temple place
தென்னை மரங்கள் நீண்டு வளர்ந்து பயன் தரும் சோலைகள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனை


அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை
ANGAM NEENDA MARAKAL VALLA ANIKOL SAMPANTHAN URAI

The four veethass and its six component part of angaass which are well known lovely Gana sambanther
ஆறு அங்கங்களுடன் விரித்துள்ள வேதங்களை அறிந்துணர்ந்த அழகிய ஞானசமந்தன்


பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
PANGAM NEENGAP PAADA VALLA PAKTHARKAL PAAR ITHAN MEL

Who has praised lard Siva with the above prayer Songs and then those disciples are who are sung it repeatedly before lard Siva and then whose sins will be removed
போற்றிப் பாடிய இப்பதிக்க வாசகங்களைத் தம் குற்றங்கள் நீங்கப் பாட வல்ல பக்தர்கள்


சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.
SANGA MODU NEEDI VAALVAR THAN MAIYINAAL AVAREA

And then in this world disciples cluster living form they will live long life in this world
இவ் வுலகில் அடியவர் கூட்ட்டங்களோடு வாழும் தன்மையினால் வாழ்நாள் பெருவி வாழ்வார்.

சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்

July 5, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: