OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru kar kudi

ganesheit July 4, 2019

1.43 திருக்கற்குடி
Thiru kar kudi

பண் – தக்கராகம்

காவிரித் தென்கரைத்தலம் தற்போது உய்யக்கொண்டான் திருமலை என அழைக்கப்படுகின்றது.
கரன் வழிபட்டது.நாரதர்,உபமன்யுமுனிவர், மார்க்கண்டேயர் ஆகியோரும் வழிபட்டதலம்.
This is River Cauvery southern side temple. Now it is called in the name of yuiya gondaan thirumalai
Gaanasambanther prayed in Thirupparaai thurai temple and then afterwards entered in to thiru kal kudi hill place. In this place he sang the following songs
திருப்பராய்த் துறையை வழிபட்டு வந்தருள்கின்ற காழிப் பிள்ளையார் திருக்கற்குடி மலையை அடைந்தார்கள். அம்மலைமேல் எழுந்தருளிய கனகக் கொழுந்தழை திரிபுரம் எரித்த வீரனை விடையாளியைப் போற்றி வடந்திகழ் என்றும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
VADAN THIKAL MEN MULAI YAALAIP PAAKA MATHAAKA MATHITHU

Lordess Yumaadevi who has adorned pearl garland in the neck place and then who has been given respectable left part of lord Siva’s body
முத்து வடம் விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடது பாகமாகக் கொண்டு


தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
THADAN THIRAI SER PUNAL MAATHAI THAAL SADAI VAITHTHA SATHURAR

The big waves are emanating Ganges lady on his lowly hanging hair place kept and that mighty powerful person is lord Siva
பெரிய அலைகள் வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடை மிசை வைத்துள்ள சதுரப்பாடு உடையவர்


இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
IDAN THIKAL MUP PURI NOOLAR THUNBA MODUINPAMA THELLANG

In the bosom place lord Siva adorned sacred thread
திருமேனியில் இடப்பாகத்தே விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர்


கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
KADAN THAVAR KAA DHALIL VAALUNG KARKUDI MAAMALAI YAAREA

Lord Siva who has crossed happiness and sorrow and that lord willingly dwelling place is thiru kal kudi
இன்ப துன்பங்களைக் கடந்தவர் திருக் கற்குடி மாமலையை விரும்பி அதன் கண் வாழும் இறைவர்

460 அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்
ANGKA MOR AARUDAI VEELVI YAANA ARUMARAI NAANGUM

With six angaass and rare four veethaas and in that embedded flawless rules are explained
ஆறு அங்கங்களுடன் கூடிய அரிய வேதங்கள் நான்கு அகிய குற்றமற்ற விதிகளை விளக்கி


பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்
PANGKA MIL PAADAL OO DALAL PAANI PAYIN DRA PADIRAR

Lord Siva who has been practicing singing dancing musical notes accordingly
பாடல், ஆடல், தாளச்சதிகள் ஆகியவற்றைப் பழகியவர்


சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்
SANGAMA THAAR KURA MAADHAR THANG KAIYIN MAINTHARKAL THAAVIK

The conch bangles are adorned hunter ladies who has carried children on hands and that night time jumped
சங்கு வளையல்கள் அணிந்த குறப் பெண்களின் கைகளில் விளங்கும் பிள்ளைகள் இரவு நேரத்தில் தாவிப்


கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே.
KANGKULIN MAAMATHI PATRUP KARKUDI MAAMALAI YAAREA

And then tried to catch with their hands the moon crawling on the space place
பெரிய மதியைக் கைகளால் பற்றும் திருக்கற்குடி மாமலை இறைவன்

461 நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்
NEERAKAN THARU SENNI NEEDIYA MATH THAMUM VAITH THU

In the spread hair of lord Siva who has carried Ganges water and then yoomathai flower adorned
பறந்து விரிந்து வந்த கங்கை நீரை உடைய முடி மீது நீண்டு மலர்ந்த ஊமத்தை மலரை அணிந்த


தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
THAARAGAI YIN OLI SOOLNTHA THANN MATHI SOODIYA SAIVAR

Where the stars are covered form the glittering moon is adorned and that form of appearing lord Siva
விண்மீன்களின் ஒளி சூழ்ந்து விளங்கும் குளிர்ந்த பிறை மதியைச்சூடிய சைவர் ஆவார் அம் மலையில் மாமாலையை ஆகியின்றிப் பிரதில்லை என்பதாகும்


போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்
PORAKALN THARU VEDAR PUNATH THIDAI YITTA VIRAKIL

To wage war that broad bosom possessed hunters who has cut the wood from the forest place and the carried to their home place
போர் செய்தற்கு ஏற்ற அகலமான மார்பினைக் கொண்டு உள்ள வேடர்கள் காடுகளில் இருந்து வெட்டிக் கொணர்ந்து


காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.
KAAR AKILIN PUKAI VIMMUNG KARKUDI MAA MALAI YAAREA

And then burnt down to prepare food and that agil tree emanated fumes are scented form spread over place is thiru kal kudi where lord Siva
எரிக்கும் விறகுகளின் கரிய அகிலின் புகை மணம் வீசும் திருக்கற்குடி மாமலை இறைவன்

462 ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண்
ORUNG KALI NEE IRAIVAA VEND RUM PARKAL OLLA MIDAKKANN

Those deevaas are in oneness form cried to save their life and then prayed under lord Siva’s feet
அனைவரையும் ஒருங்கு காத்தளிப்பாயாக என ஓலமிடுவதைக் கேட்டுப்


டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர்
ARNG KALA MAARA VIDATH THAI INNAMU THUN NIYA EESAR

In the milk sea place emanated poison is consumed and then his throat is dark color tainted form appeared and that lord Siva consumed it as nectar and then saved deevaass from death
பாற்கடலிடை எழுந்த நஞ்சைத் தமது மிடறு கருமைக்கு இடமாகுமாறு இனிய அமுதமாகக் கருதி உண்டு காத்து ஈசராவார்.


மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக்
MARUNG KALIYAAR PIDI VAAYIL VAALVETHIRIN MULAI VAARIK

The madness filled the male elephant and its nearby place love form approaching the female elephant and its mouth the sprouted form of bamboo leaves are placed
மதம் கொண்ட கரிய களிறு அருகில் அன்பு காட்டி வரும் பெண் யானையின் வாயிலில் பசுமையோடு முளைத்து வரும் மூங்கில் முளைகளை


கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே.
KARUNGKALI YAANAI KODUNG KARKUDI MAA MALAI YAAREA

And then allowed to eat it and that place is thiru kalkudi
வாரிக் கொடுத்து ஊட்டும் திருக்கற்குடிமாமலை இறைவர் தேவர்கள் பெருமானே

463 போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப்
POR MALI THIN SILAI KONDU POOTHA KANAM PUDAI SOOLAP

Where lord Siva to wage war that mighty powerful bow is carried on hand place and then demon forces are covered form moving
போர் செய்யத்தக்க வலிய வில்லைக் கையில் கொண்டு பூதகணங்கள்புடை சூழ்ந்து வர


பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார்
PAAR MALI VEDURU VAAKI PANDOORU VARK KARUL SEI THAAR

And in this way in this land hunter form taken and then once upon a time lord Siva blessed Arjuna with pasupatha battle force
மண்ணுலகில் தாமொரு வேடர் உருத் தாங்கி முற்காலத்தில் அருச்சுனருக்கு அருள் செய்தவர் ஆவார்


ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங்
EEAR MALI KELAL KILANTH THA INNOLI MAA MANI YENGUM

The lovey form of pigs are excavated the land and from it emanated the light glittering form of ruby diamonds
அழகிய பன்றிகள் நிலத்தைக் கிலைத்தலால் வெளிப்பட்ட இனிய ஒளியோடு கூடிய சிறந்த மணிகளைக்


கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே.
KAAR MALI VEEDAR KOOVI KUVKUNG KARKUDI MAA MALAI YAAREA

Which are collected the dark color hunted and then placed it in heap form and that place is thiru kal kudi
கரிய நிறமுடைய வேடர்கள் பல இடங்களிலும் குவித்துள்ள திருக்கற்குடி மாமலை இறைவன்


464உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி
ULARNTHAVA RENBA THANINTHEA OORIDU PICHAIYA RAAKI

Where lord Siva adorned the dead man bone as garland and that hamlet place dwelling people are giving begging food is accepted as beggar form
இறந்தவர்களின் எலும்பை அணிந்து ஊர்மக்கள் இடும் பிச்சையை ஏற்கும் பிச்சாடனராய்


விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்
VILANG KAL VIL VEN GANALAA LEA MOOVEYIL VEVA MUNI THAAR

And that form of lord Siva got angry and then converted meru hill as bow form and then shot an arrow and then destroyed three castles
மேருமலையாகிய வில்லிடைத் தோன்றிய கொடிய கனலால் முப்புரங்களையும் வெந்து அழியுமாறு முனிந்தவர்


நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே
NALAN THARU SINTHAI YARAAKI NAA MALI MAALAIYI NAALEA

The goodness filled mind form and then with tongue chanting the poems in garland form
நன்மை அமைந்த மனமுடையவராய் நாவினால் புகழும் சொல் மலைகளாகிய தோத்திரங்களினாலே


கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
KALAN THAVAR KAATHALIL VAALUNG KARKUDI MAA MALI YAAREA

Where the disciples are mingled with lord Siva’s feet and love filled form living and that place is thiru kalkudi
இறைவன் திருவடிகளில் கலந்த மெய் அடியார்கள் அன்போடு வாழும் திருக்கற்குடி மாமலை இறைவர்


465மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார்
MAA NIDA MAAR THARU KAIYAR MAA MALU VAARUM VALATH THAAR

Where lord Siva carried stage on left hand and malu battle force on right hand
மானை இடக் கையிலும் மழுவை வலக் கையிலும் தரித்தவர்


ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார்
OONIDAI YAAR THALAI YOOTTIL UN KALA NAAKA UKAN THAAR

And that form of lord Siva who has carried dead man skull as begging bowel willingly
ஊன் பொருந்திய தலையோட்டை உண் கலனாக உகந்தவர்


தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக்
THEEN IDAIYAAR THARU SANTHIN THIN SIRAIYAAL THINAI VITH THIK

The beehives are filled the sandal tree in between the boundaries are raised and then thenai corns are planted to grow as

தேன் அடைகள் பொருந்திய சந்தன மரங்களுக்கிடையே வலிய கரைகளைக் கட்டி திணைகளை விதைத்துக்


கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே.
KAAN IDAI VEDAR VILAK GUNG KAR KUDI MAA MALAI YAAREA

And in that way the forest hunters are growing the thenai corns and that place is thiru kal kudi
கானகத்தில் வேடர்கள் தினைப் பயிர் விளைக்கும் திருக்கற்குடி மாமலை இறைவன்


466வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த்
VALAMAAR VEERAM NINANTHA IRAAVANAN MAA MALAIYIN KEEZHL

Ravana who has excelled the sphere battle whose big heroic thinking form lifted kailai hills who has trapped under the hills and then
வாள் போரில் செல்ல தனது பெரு வீரத்தை நினைந்து இராவணனைப் பெருமை பொருந்திய கயிலை மலையின் கீழ்


தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்
THOLA MAR VANDAR ALAI KUNDRATH THOLVIRAL OONDRU THUNAI VAR

And that ravana’s shoulders and mighty powerful heads are smashed form lord Siva put his good old thump finger on the top of the hills
அவன் தோள்களும் வலிய தலைகளும் நெரியுமாறு தமது பழம் புகழ் வாய்ந்த கால் விரலால் ஊன்றிய துணைவராவார்


தாளமர் வேய்தலைப் பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்
THAAL AMAR VEEITH THALI PATRIP THAAL KARI VITTA VISAI POIK

The trunk possessed the bamboo tree is pulled and then its leaves are eaten and then with full strength form it goes upward
அடிமரத்தோடு கூடிய மூங்கிலினாது தழையைப் பற்றி வளைத்து உண்ட களிறு அதனை வேகமாக விடுதலால் அம்மூங்கில் விசையோடு சென்று


காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே.
KAALA MATHAAR MUKIL KEERUG KARKUDI MAA MALAI YAAREA

And then dark color clouds are penetrated that place is thiru kal kudi where lard Siva
கரிய நிறம் பொருந்திய மேகங்களைக் கீறும் திருக்கற்குடி மாமலை இறைவர்


467தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை அளந்து
THAN DAMAR THAAMARAI YAANU THAAVIYIM MANNAI ALNTHU

The col place seated bharma on lotus place and then thirumal who has scaled the whole world
குளிர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனாலும் உயர்ந்த இவ்வுலகை அளந்த திருமாலும்


கொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை யூர்வர்
KONDAVANUM MAARIVONNAK KOLLAIYAR VELVIDAI YOORVAR

Who are not known lord Siva who has adorned white ashes all over the body and then travel on the back of the bull
அறிய வொண்ணாத இயல்பினர் வெண்ணீறமான விடையை ஊர்ந்து வருபவர்


வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
VANDISAI YAA YINA PAADA NEEDIYA VAAR POLIL NEELAL

வண்டுகள் இசைபாட நீண்ட பொழிலின் நிழலைக் கண்டு
The honey bees are singing humming form of songs and where the tree shadow on seeing it


கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே.
KANDAMAR MAA MAYILADUG KARKUDI MAA MALAI YAAREA

Peacocks are got happy and then dancing place is thiru kal kudi place where lord Siva
மகிழும் சிறந்த மயிலகள் ஆடும் திருக்கற்குடி மாமலை இறைவர்


468மூத்துவ ராடையி னாரும் மூசு கருப்பொடி யாரும் MOOTH THUVARA AADAI YIN AARUM MOOSU KARUPPODI YAARUM The saffron color dress adorned buthaass and beetle nut dust is abundantly consuming samanaass காவியாடை அணிந்த புத்தர்களும் கடுக்காய் பொடியை நிரம்ப உண்ணும் சமணர்களும்

நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார் NAATH THUVAR POIM MOZHI YAARKAL NAYAMILA RAA MATHI VAITH THAAR With tong enmity emanating wards are talking and falsehood filled form talking and then talking deficiency filled knowledge and those form of persons they are நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய் மொழி பேசுபவர்களாய் நேயமற்ற அறிவு உடையவராய் இருப்போராவர்

ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங் EAITH THUYAR PATH THARKAL SITH THAR IRAINJA AVAR IDAR ELLAANG                                                                                                        Who are left over and the those disciples praised lord Siva and that disciples and saints and then conducted poojaass and then those people confronted அவர்கள் விடுத்துத் தம்மை ஏத்தி வாழ்த்தி உயரும் பக்தர்களும் சித்தர்களும் வணங்க அவர்கட்கு வரும் காத்தவர்

காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே. KAATH THAVAR KAAMARU SOLAIK KAR KUDI MAA MALAI YAAREA Problems are removed and then guard them and that form of lord Siva seated the lovely plantations covered place இடர்கள் அகற்றித் காத்தவன் அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடி மாமலை இறைவர் () மூசு கடுப்பொடி என்றும் பாடம்.

469 காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை
KAA MARU VAAR POLIL SOOLUNG KAR KUDI MAA MALAI YAAREA

The long plantations are covered thiru kalkudi hill lord Siva
அழகிய நீண்ட பொழில்களால் சூழப்பட்ட திருக்கற்குடி மாமலை இறைவரை


நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்
NAA MARU VAN PUGAL KAALI NALANTHG THIKAL GNANA SAMANTHAN

With tongue form of good prayer poems are chanting ganasambanther who has descended in the seergaali temple place
நாவிற் பொருந்திய வண் புகழால் போற்றப் பெறும் சீகாழிப் பதியில் தோன்றிய நன்மை அமைந்த ஞானசம்பந்தன்


பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்
PAA MARU SEN TAMIL MAALAI PATH THIVAI PAADA VALLAR KAL

Who has sung the pure ten Tamil poems are singing before lord Siva
பாடிய செந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லர்கள்


பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே.
POO MALI VAA NAVARODUM PONNULAKIL POLI VAAREA

Who will ultimately enter in to deeva land and then sivalogam place and then live there for ever
பொலிவுடன் கூடிய தேவர்களோடும் பொன்னுலகில் பொலிவோராவர்.


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – முத்தீசர், தேவியார் – அஞ்சனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
July 4, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: