OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAALGOLI PUTHOOR

ganesheit July 3, 2019

1.40 திருவாழ்கொளிபுத்தூர்
THIRU VAALGOLI PUTHOOR


பண் – தக்கராகம்
It is Cauvery northern side temple. Now it is called Thiruvaalaputhoor. In this temple place arujuna Thirumal VANNDU big bee prayed
At first Ganasambanther prated in the Thiruvoomaam puliyoor and then afterwards entered in to thiruvaalgoli puthoor. In that temple place he prayed the darkened throat possessed lard Siva and then sang the following decade
காவிரி வடகரைத்தலம் திருவாளப்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனர் திருமால் வண்டு வழிபட்டது.
திரு ஓமாம் புலியூரை வணங்கி எழுந்தருளிய பிள்ளையார் திருவாழ்கொளிபுத்தூரை அடைந்தார்கள். கார்வளர் கண்டர் தாள் பணிந்தார்கள். பார் புகழ் பதிகமாகிய “பொடியுடை”என்றும் இப்பதிகத்தை அருளினார்கள்.

பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்பூதகணம் புடை சூழக்
PODI YUDAI MAAR PINAR POR VIDAI YEERIP POOTHA KANAM PUDAI SOOLA

Lard Siva who has adorned sacred ashes all over the body and then ascended on the back of the brave bull and then demon forces are encircled form moving
திருநீறு அணிந்த மார்பினராய் வீரம் மிக்க விடைமீது ஏறி பூதகணங்கள் புடை சூழ்ந்து வர


கொடியுடை யூர்திரிந் தையங் கொண்டு பலபல கூறி
KODI YUDAI YOR THIRINTH AIYANG KONDU PALA PALA KOORI

And then wandering the flag tied hamlets so as to collect begging food who has uttered the good blessing wards
கொடிகள் கட்டிய ஊர்களில் திரிந்து பற்பல வாசகங்களைக் கூறி பலியேற்று


வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
VADIV UDAI VAAL NEDUNG KANNUMAI PAAKAM AAYAVAN VAALKOLI PUTHOORK

That form of lard Siva who has given left part of his body to lardess yumadevi who has possessed sphere like long eyes and that lard Siva descended place is thiru vaalgoli puthoor
அழகிய வாள் போன்ற நெடிய கண்களை உடைய உமையோடு பாகராகிய சிவபிரனார் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர்


கடிகமழ் மாமல ரிட்டுக் கறைமிடற் றானடி காண்போம்.
KADI KAMAL MAAMALR ITU KARAI MIDAR RAA NADI KAAN POM

In that temple place we enter and then doing poojaas with best flower and then surrender under lard Siva’s feet
சென்று மணம் கமழும் சிறந்த மலர்களால் அர்ச்சித்து அக்கறை மிடற்றார் திருவடிகளை காண்போம்,

427 அரைகெழு கோவண ஆடையின் மேலோர்ஆடரவம் அசைத் தையம்
ARAI KELU KOVANA AADAIYIN MELOOR AAD ARAVAM ASAITH THAIYAM

In the waist place tied the loin cloths and then on the cobra snake tied as belt form
இடையில் கட்டிய கோவண ஆடையின் மேல் ஆடும் அரவம் ஒன்றைக் கட்டிக் கொண்டு


புரைகெழு வெண்டலை யேந்திப்போர்விடை யேறிப் புகழ
PURAI KELU VENDALAI YENTHIP POR VIDAI YERIP PUGALA

The hole possessed the white skull is carried on his hands and then accepting the begging food in to it and then ascended on the back of angry filled bull and all are praised form
துளை பொருந்திய வெண் தலையோட்டைக் கையில் ஏந்திப் பலியேற்று சினம் பொருந்திய விடை மீது ஏறிப் பலவரும் புகழ


வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்ஆயவன் வாழ்கொளி புத்தூர்
VARAI KELU MAGAIYA THAAKA MOR PAAKAM AAYAVAN VAAL KOLI PUTH THOOR

That form of lard Siva who has accepted the rock king daughter on his left part of his body whose descended place is thiru vaal goli puthoor where we are
இமவான் மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாழ் கொளிபுத்தூர் சென்று


விரைகெழு மாமலர் தூவி விரிசடை யானடி சேர்வோம்.
VIRAI KELU MAA MALAR THOOVI VIRI SADAI YAAN ADI SEARVOM

The fragrance filled flowers are on the hands and which is sprayed on lard Siva’s feet and pray that spread over hair possessed lard Siva
மணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி அவ்விரி சடையான் திருவடிகளைச் சேர்வோம்.

428 பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்புன்றலையங்கையி லேந்தி
POON NEDU NAAGAM ASAITH THANA LAADIP PUNDRALAI YANGAIYI LENTHI

The long snakes are adorned as ornaments form and then carried fire on his hands
நெடிய பாம்பை அணிகலனாகக் பூண்டு அனலைக் கையின் கண் ஏந்தி


ஊணிடு பிச்சையூ ரையம் உண்டி யென்று பலகூறி
OONIDU PICHAI YOO RAIYAM UNDI YENDRU PALA KOORI

And in dancing form and then carried bharma skull on his hands and then wandering so many hamlets and then collecting the begging food and then so many blessing wards are uttering form
ஆடிக் கொண்டும் பிரமனது தலை யோட்டை அழகிய கை ஒன்றில் ஏந்தி பல ஊர்களிலும் திரிந்து மக்கள் உணவைத் தரும் பிச்சையைத் தனக்கு உணவாக ஏற்றுப் பற்பலவாறு கூறிக் கொண்டும்


வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்
VAA NEDUNG KANNUMAI MANGAI YOR PAAKAM AAYAVAN VAALKOLI PUTH THOOR

That place is thiru vaalgoliputhoor where lard Siva carried lardess parvathi in his left part of his body and that pavathi possessed the broad and long attractive kayal fish like eyes
வாள் போன்ற நீண்ட கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக ஏற்று விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர்


தாணெடு மாமல ரிட்டுத் தலைவன தாள்நிழல் சார்வோம்.
THAA NODU MAA MALAR ITUTH THALAI VANA THAAL NILAL SAARVOM

In that temple place we may enter and then lovely flowers are sprayed form under leader feet of lard Siva and then surrender under him
சென்று அப்பெருமான் திருவடிகளில் சிறந்த மலர்களைத் தூவித் தலைவனாக விளங்கும் அவன் தாள் நிலைச் சார்வோம்.

429 தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கைதாழ்சடை மேலவை சூடி
THAA RIDU KONDRAI YOR VENMATHI KANGAI THAALSADAI MELAVAI SOODI

Lard Siva who has adorned on the lowly hanging hair the konrai flower garland the white curved moon and the flooded Ganges river
கொன்றை மாலையையும் வெண்மதியையும் கங்கையையும் தாழ்ந்து தொங்கும் சடைமுடியில் சூடி


ஊரிடு பிச்சை கொள்செல்வம்உண்டி யென்று பலகூறி
OORI DU PICHAI KOLSELVAM YUNDI YENDRU PALA KOORI

And then the street people are giving food is accepted as begging food form and then said that it is my wealth and food and then in this way so many words are talking form
ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்றுக் கொண்டு அதுவே தனக்குச் செல்வம் உணவு என்று பலவாறு கூறிக் கொண்டு


வாரிடு மென்முலை மாதொரு பாகம்ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
VAARIDU MEN MULAI MAA THORU PAAKAM AAYAVAN VAALKOLI PUTHOOR

Lardess parvathi who has adorned bra on the breast place and that parvathi is taken left part of his body and that together form descended place is thiru valgoli puthoor where we disciple form, we may enter
கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட சிவபிரான் எழுந்தருளிய திருவாழ் கொளிபுத்தூர் சென்று


காரிடு மாமலர் தூவி கறைமிடற் றானடி காண்போம்.
KAARIDU MAA MALR THOOVI KARAI MIDAR RAANADI KAANPOM

In the summer time bloomed the konrai flower garland is adorned by lard Siva under his feet flowers are spread over form and that darkened throat possessed lard Siva’s feet we may see it
கார் காலத்தே மலரும் சிறந்த கொன்றை மலர்களைதூவிக் கறை மிடற்றினனாகிய அப்பெருமான் திருவடிகளைக் காண்போம்.

430 கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்காதிலொர் வெண்குழை யோடு
KANAMALARK KONDRAI ALANGKAL ILANGAK KAATHILOR VENKULAI YODU

That summer time bloomed the konrai flower garland is adorned and then on one ear the white kulai ornament adorned form of lard Siva
கார் காலத்து மலராகிய கொன்றை மலர் மாலை தன் திருமேனியில் விளங்க ஒரு காதில் வெண்குழை அணிந்த


புனமலர் மாலை புனைந்தூர்புகுதி யென்றே பலகூறி
PUNA MALAR MAALAI PUNAI THOOR PUGUTHI YENDRE PALA KORI

In the hilly place bloomed flowers are tied as garland and then adorned it in the neck place and then wandering so many hamlets and then accepted as begging food
முல்லை நிலத்து மலர்களால் தொகுக்கப் பெற்ற மாலைகலைச் சூடிப் பல ஊர்களிலும் சென்று பலியேற்று


வனமுலை மாமலை மங்கையொர் பாகம்ஆயவன் வாழ்கொளி புத்தூர்
VANA MULAI MAA MALI MANGAI YOR PAAKAM AAYAVAN VAALKOLI PUTH THOR
The lovely breasts are possessed lardess parvathi and that hill lady is accepted as left part of his body and that artanareswarer form lard Siva descended place is thiru valgoli puthoor
அழகிய தனங்களை உடைய மலை மகளாகிய பார்வதியை ஒரு பாகமாகக் கொண்ட எம்பிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர்


இனமல ரேய்ந்தன தூவி எம்பெரு மானடி சேர்வோம்.
INAMALA REINTHANA THOOVI EM PERUMAANADI SERVOM

And in that place we enter and then variety of flowers are sprayed form and then we may enter under his feet
சென்று நமக்குக் கிட்டிய பல விதமான மலர்களைத் தூவி அவன் அடிகளைச் சேர்வோம்.

431 அளைவளர் நாகம் அசைத்தன லாடிஅலர்மிசை அந்தணன் உச்சிக்
ALAI VALAR NAGAM ASAITH THANA LAADI ALAR MISAI ANTHANAN UCHCHIK

In the sand don place living the snakes are tied in the waist place and then dancing in the burial ground and then in the lotus place dwelling bharma’s one head is clipped
புற்றின் கண் வாழும் பாம்பினை இடையில் கட்டி சுடுகாட்டில் ஆடி தாமரை மலர் மேல் உரையும், பிரம்மனின் உச்சித்தலையைக்கொய்து


களைதலை யிற்பலி கொள்ளுங்கருத்தனே கள்வனே யென்னா
KALAI THALAIYIR PALI KOLLUM KARUTH THANE KALVANE YENNA

And in that head place accepting the begging food and that leader form of lard Siva who has corner our mind in that culprit form of lard Siva
அத்தலையோட்டில் பலி கொள்ளும் தலைவனை நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கள்வனே என்று


வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் VALAIPOLI MUNKAI MADANTHAI YOR PAAKAM AAYAVAN VAALKOLI POOTH THOR And then lardess yumadevi who has adorned bangles in the fore hand place in sound raising form and then lard Siva who has accepted left part of his body and whose dwelling place is thiru vaalgoli puthoor and then where we enter வளையல் ஒலிக்கும் முன் கையை உடைய பார்வதி தேவியே ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் உறையும்

திருவாழ்கொளிபுத்தூர் சென்று தளையவிழ் மாமலர் தூவித் தலைவன தாளிணை சார்வோம். THALAIY AVIL MAA MALR THOOVITH THALAIVAN THAAL INAI SAARVOM                                                                                                                                           The about to bloom that flower are sprayed form and then his twin feet are prayed we may surrender under his feet மொட்டு அவிழ்ந்த நறுமலர்களைத் தூவி அப்பெருமானின் தாள் இணைகளைச் சார்வோம்

432 அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்துவழிதலை யங்கையி லேந்தி
ADARSEVI VELATH THIN EER URI PORTHTHU VALI THALAI YANGAIYI L EANTHI

The spread over winnow form of broad ears are possessed elephant which is killed and then its skin is pealed with blood shedding form and then adorned it as upper dress and then afterwards bharma skull is carried on hands
பரந்த காதுகளை உடைய யானையைக் கொன்று அதன் உதிரப் பசுமை கெடாத தோலை உரித்துப் போர்த்து பிரம்மன் தலை யோட்டைக் கையில் ஏந்தி


உடலிடு பிச்சை யோடையமுண்டி யென்று பலகூறி
UDA LIDU PICHAI YODAIYA MUNDI YENDRU PALA KOORI

The tharugavanam saints wives are giving the begging food is accepted and then I will happily accept it and in this way so many wards are said and then that cried form accepting the food
தாருகாவன முனிவர் மகளிர் தம் கைகளால் இட்ட பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூவிப் பலியேற்ற


மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
MADAL NEDU MAA MALRK KANNI YOR PAAKAM
AAYAVAN VAALKOLI PUTHOORTH

The shy form of the long flower like eyes are possessed that blue color eyes are possessed and that parvathi is given left part of his body that place is thiru vaalgoli puthoor
மடப்பம் வாய்ந்த நீண்ட நீலமலர் போன்ற கண்களை உடைய உமையோடு பாகமாக உள்ள திருவாழ்கொளிபுத்தூர்


தடமல ராயின தூவி தலைவன தாள்நிழல் சார்வோம்.
THADA MALA RAAYINA THOOVI THALAIVANA THAA LNILAL SAAR VOM

That form of lard Siva is prayed with the bloomed flowers with it conducted poojaas and then enter under his feet
இறைவன் விரிந்த மலர்கள் பலவற்றால் அருச்சித்து அப்பெருமான் தாள் நிழலைச் சார்வோம்.

433 உயர்வரை யொல்க எடுத்த அரக்கன் ஒளிர்கட கக்கை யடர்த்து
UYAR VARAI YOLKA EDUTH THA ARAKKAN OLIR KADA KAKAI YADARNTH THU

The high raise the kaiyilai hills which is shaken form of Ravana who is tried to lift it that powerful ornament adorned shoulders are stamped whose mighty power is destroyed by lard Siva
உயர்ந்த கயிலை மலையை அசையுமாறு பெயர்த்த இரவாணனது ஒளி பொருந்திய கடகத்தோடு கூடிய தோள் வலிமையை அடர்த்தவனே என்றும்


அயலிடு பிச்சை யோடையம்ஆர்தலை யென்றடி போற்றி
AYAL IDU PICHAI YOD AIYAM AAR THALAI YEN RADI POTRI

Those hamlet peoples are giving food is accepted as begging one and then eat it that leader lard Siva and in this way
ஊர் மக்கள் இடும் பிச்சை ஐயம் ஆகியவற்றை உண்ணும் தலைவனே என்றும்


வயல்விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
VAYAL VIRI NEELA NEDUNG KANI PAAK AMAAYAVAN VAALKOLI PUTHOOR

In the water bodies place bloomed the water flowers form of long eyes are possessed lardess parvathi is given left part of his body and in the thiru vaalgoi puthoor leader in that way praised him
வயலின் கண் தோன்றி மலர்ந்த நீர் மலர் போன்ற நீண்ட கண்களை உடைய உமையம்மை பாகனே என்றும் திருவாழ்கொளிபுத்தூர் இறைவனே


சயவிரி மாமலர் தூவி தாழ்சடை யானடி சார்வோம்.
SAYAVIRI MAAMALAR THOOVITHAALSADAI YAANDI SAARVOM

And then in winning force filled form of bloomed flowers are sprayed form and then that lowly hanging lard Siva’s hair whose sacred feet we will enter
என்றும் வெற்றியோடு மலர்ந்த சிறந்த மலர்களைத் தூவி அத்தாழ்சடையன் அடிகளைச் சார்வோம்.

434 கரியவன் நான்முகன் கைதொழு தேத்தகாணலுஞ் சாரலு மாகா
KARI YAVAN NAAN MUGAN KAI THOLU THETHTHA KAANALUNJ SARALU MAAKAA

Thirumal and Bharma who are prayed with folded hands and praised him as prime got but unable to see him and not in a position to approach him
திருமாலும் நான்முகனும் கைகளால் தொழுது ஏத்தின் கானவும் சாரவும் இயலாத


எரியுரு வாகி யூரையம் இடுபலி யுண்ணி யென்றேத்தி
ERI YUR VAAGI YUURAIYAM IDUPALI YUNNI YEN REETH THI

And that fire glow form appeared before him and then wandering so many place and then accepting the begging food and then eat it in this way praised him
எரி உரு ஆகியவனே என்றும் பல ஊர்களில் திரிந்து ஐயம்,பிச்சை ஆகியவற்றை உண்பவனே என்றும் போற்றிப்


வரியர வல்குல் மடந்தையொர் பாகம்ஆயவன் வாழ்கொளி புத்தூர்
VARI YARA VALKUL ADANTHAIYOR PAAKAM AAYAVAN VAALKOLI PUTHOOR

The stripped form of snake dancing like spread over head form of waists are possessed lardess yumadevi is given left part of lard Siva’s body and that form of lard Siva descended in the thiruvaalgoli putoor temple place
பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனாகிய திருவாழ்கொளிபுத்தூர் இறைவனை


விரிமல ராயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம்.
VIRI MALA RAAYI NA THOOVI VKIR THANA SEVADI SERVOM

The bloomed form of flowers are sprayed and prayed that unique form of lard Siva’s feet we will apporach
விரிந்த மலர்கலைத் தூவி வழிபட்டு விகிர்தனாகிய அவன் சேவடியைச் சேர்வோம்.

435 குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில்கொள்கை யினார் புறங்கூற
KUNDA MANAR THUVARK KOORAI KAL MEIIYIL KOLLAI YINAAR PURANG KOORA

The bulky samanaas and saffron color dress adorned the buthaas who are talking ill about lard Siva
கொழுத்த சமணர்களும் துவர் ஆடைகள் போர்த்த புத்தர்களும் புறம் பேசுமாறு


வெண்டலை யிற்பலி கொண்டல்விரும்பினை யென்று விளம்பி
VENDALAI YIR PALI KONDAL VIRUM BINAI YENDRU VILAMBI

And that form of lard Siva who has accepted the begging food in the white skull willingly and in that way glorify him and praised him
வெண்மையான தலையோட்டின் கண் பலியேற்றவை விரும்பியவனே என்று புகழ்ந்து போற்றி


வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
VAN DAMAR POONG KULAL MAGAI YOR PAAKAM AAYAVAN VAAL KOLI PUTH THUR

The honey bees are encircling that lovely hair possessed lardess Yumadevi is given left part of lard Sivas body and in that temple named thiru vaalgoli puthoor temple place enter
வண்டுகள் மொய்க்கும் அழகிய கூந்தலை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவன் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று


தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றி நின்றான் அடிசேர்வோம்.
THONDARKAL MAAMAR THOOVATH THONDRI NINDRAAN ADI SERVOM

And then disciples are, the best flowers are sprayed form prayed to whom lard Siva giving his visual appearance and that lard Siva’s sacred feet we may approach it
அடியார்கள் சிறந்த மலர்களைத் தூவி வழிபட அவர்கட்குக் காட்சி அளிப்பவன் ஆகிய சிவன் அடியை சேர்வோம்


436 கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்கரைபொரு காழிய மூதூர்
KALLUYAR MAAK KADAL NINDRU MULAN GUNG KARAI PORU KAALIYA MOOTHOOR

The rock like form of appearing the big waves are lashed on the sea shore place and then raised the roaring sounds and in that seergale place descended
மலை போல உயர்ந்து வரும் அலைகளை உடைய பெரிய கடல் பெரிய கரையோடு மோதி, முழங்கும் காழிப்பழம் பதியில் தோன்றிய


நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம் பந்தன்
NALLUYAR NAAN MARAI NAAVIN NATRAMIL GNANA SAMANTHAN

Ganasambanther who has all the time chanting the four veethaas that pure form of Tamil ganasambanther
உயர்ந்த நான் மறைகள் ஓதும் நாவினை உடைய நற்றமிழ் ஞானசம்பந்தர்


வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
VALLUYAR SOOLAMUM VENMALU VAALUM VALLAVAN VAALKOLI PUTH THOR

The mighty powerful soolam battle force carrier and white malu battle force and sphere all are handling in the excelled form and who has descended in the thiruvalgoli puthoor temple place
வலிதாக உயர்ந்த சூலம் வெண்மையான மழு வாள் ஆகியவற்றைப் பயன் படுத்துவதில் வல்லவனாகிய சிவபெருமான் விளங்கும் வாழ்கொளிப்படித்துறைப்


சொல்லிய பாடல்கள் வல்லார்துயர்கெடு தல்எளி தாமே.
SOLLIYA PAA DALKAL VALLAAR THUYAR KEDU THAL ELI THAA MEA

The above prayed Songs who are excelled in the chanting daily before lard Siva whose sorrows will be terminated easily
போற்றிசொல்லிய பாடல்களை ஓத வல்லவர்கள் துயர் கெடுதல் எளிதாம்.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாணிக்கவண்ணவீசுரர், தேவியார் – வண்டார்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

July 3, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: