THIRUVEELI MELALAI
1.35 திருவீழிமிழலை
THIRUVEELI MELALAI
பண் – தக்கராகம்
371 அரையார் விரிகோ வணஆடை
ARAIYAAR VIRI KOVANA AADAI
IN THE WAIST PLACE tied the loin cloths
இடையில் கட்டிய விரிந்த கோவண ஆடையையும்
நரையார் விடையூர் திநயந்தான்
NARAIYAAR VIDAI YUR THIYAI NAYAN THAAN
The white color bull is used as travelling medium which is willingly accepted and that lard residential place is thiruveeli melalai
வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்த்தியையும் விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபிரான் உறைவதும்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
VIRAIYAAR POLIL VEELIM MILALAI
Which is encircled by the fragrance filled thiruveeli melalai temple place
மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருவிழிமிழலையின்
உரையால் உணர்வார் உயர்வாரே.
URAIYAAL UNAR VAAR UYAR VAAREA
That glory filled place is known by books that people are considered as highly regarded persons
புகழை நூல்களால் உணர்வார் உயர்வடைவர்
372 புனைதல் புரிபுன் சடைதன்மேல்
PUNAITHAL PURI PUN SADAI THAN MEL
The crown form of tied twisted hair of lard Siva and on it flowers are decorated form
மலரால் அலங்கரிக்கப்பட்ட முறுக்குகளை உடைய சிவந்த சடைமுடி மீது
கனைதல் லொருகங் கைகரந்தான்
KANAI THAL LORU KANGAI KARATHI THAAN
Where the emotional filled form of flooded Ganges is adorned on the hair place in concealed form and that lard Siva’s dwelling place is thiru veelimelalai temple
ஆரவாரித்து வந்த ஒப்பற்ற கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபிரான் உறையும்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
VINAIYILLAVAR VILIMMILALAI
In that place only good people are living
தீவினை இல்லாத மக்கள் வாழும் திருவிழிமிழலையே
நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே.
NINAI VIL LAVAR NENSA MUM NEJEA
Those people who do not think over that persons mind is not at all be a good mind
நினையாதவர்கள் நெஞ்சமும் ஒரு நெஞ்சமோ
373 அழவல் லவரா டியும்பாடி
ALA VALLARAVAR AADIYUM PAADI
Those disciples are in weeping form and others are dancing and singing form
அழ வல்லவரும் ஆடியும் பாடியும்
எழவல் லவரெந் தையடிமேல்
ELA VALLAVA RENTH THAI YADI MEL
Those who are emotional raise up form praying lard Siva’s feet
எழ வல்லவரும் எந்தையாகிய இறைவன் திருவடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
VILA VALLAVAR VEELIM MILALAI
Fallen down form prayed and those type of people are filled place is thiruveei melalai temple place
விழ வல்லவருமாய் அடியவர் நிறைந்துள்ள திருவிழிமிழலையைத்
தொழவல் லவர்நல் லவர்தொண்டே.
THOLA VALLAVAR NALLAVAR THONDEA
And those who are praying here are good people and then whose services are good service in this world
தொழ வல்லவரே நல்லார் அவர் தொண்டே நல் தொண்டாகும்
374 உரவம் புரிபுன் சடைதன்மேல்
URAVAM PURI PUN SADAI THAN MEL
On the mighty power is revealed on the red color hair of lard Siva and then on his waist
வலிமையை வெளிப்படுத்த நிற்கும் சிவந்த சடைமுடி மீதும் இடையிலும்
அரவம் மரையார்த் தஅழகன்
ARAVAM MARAI YAARTH THA ALAGAN
Where dancing form of snakes are tied in that lovely appearance form of lard Siva
பாம்பை அணிந்தும் கட்டியும் உள்ள அழகனாகிய சிவபிரான்
விரவும் பொழில்வீ ழிம்மிழலை
VIRAVUM POLIL VILIM MILALAI
Where descended lard Siva which is covered by flower plantations and that form of place is thiruveeli melalai temple
எழுந்தருளியருளும் பொழில்கள் விரவிக் சூழ்ந்ததுமாகிய திருவிழிமிழலையைப்
பரவும் மடியார் அடியாரே.
PARAVUM MADIYAAR ADIYAREA
Where those disciples are praying and those disciples are good disciples
பரவித் துதிக்கும் அடியாரே அடியவராவர்
375 கரிதா கியநஞ் சணிகண்டன்
KARI THAKIYA NAJSANI KANDAN
The dark color poison is consumed and then which is stagnated in the throat place is ruby diamond form and that form of lard Siva’s descended place it is
காரியதாகிய நஞ்சினை உண்டு அதனை அணியாக நிறுத்திய நிலகண்டன் எழுந்தருளியதும்
வரிதா கியவண் டறைகொன்றை
VARI THAAKIYA VANDARAI KONDRAI
The stripped bees are raising sound around the konrai flower garland
வரிகளை உடைய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மலர்கள்
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
VIRITHAAR POLIL VILIM MILALAI
The bloomed bunch form of flower plantations are covered place it is
விரிந்த மலைபோலக் கொத்தாக மலரும் சோலைகளால் சூழப் பெற்றும் ஆகிய
உரிதா நினைவார் உயர்வாரே.
URITHAA NINAIVAAR UYAR VAAREA
And those disciples who are considered as good sacred temple place and that disciples are good disciples in this world
தமக்கு உரிய தலமாகக் கருதுவோர் சிறந்த அடியார் ஆவர்
376 சடையார் பிறையான் சரிபூதப்
SADAIYAAR PIRAI YAAN SARI POOTHAP
On the hair place adorned the curved moon that appearance form of lard Siva
சடை மிசைச் சூடிய பிறைமதியை உடையவனும் இயங்கும் பூதப் படையை உடையவனும்
படையான் கொடிமே லதொர்பைங்கண்
PADAI YAAN KODI MELA THOR PAING KAN
The flag place embedded the bull emblem which is used as travelling medium
கொடிமேல் பசிய கண்கள் உடைய ஒன்றை விடையேற்றை
விடையான் உறைவீ ழிம்மிழலை
VIDAIYAAN URAI VEELIM MILALAI
And that form of lard Siva dwelling place is Thiru veeli melalai
உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் திருவிழிமிழலையை
அடைவார் அடியார் அவர்தாமே.
ADAI VAAR ADIY AAR AVAR THAAMEA
Where gone and then conducted prayers and those disciples are considered as best persons in this world
அடைபவர்கள் சிறந்த அடியார்கள் ஆவார்
377 செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
SERIYAAR KALUNJ SILAM PAARKKA
In the leg anklet place tied the bell ornaments are raised sound while dancing
கால்களில் செறிந்த கழல் சிலம்பு ஆகிய அணிகளை ஆர்க்கச்
நெறியார் குழலா ளொடுநின்றான்
NERIYAAR KULALAALODU NINDRAAN
The curling form of hair possessed lardess yumadevi and with her where lard Siva stands there and then blessing all and whose descended place it is
சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்றருளும் சிவபிரான் எழுந்தருள்வதும்
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
VERI YAAR POLIL VEELIM MILALAI
The fragrance filled flower plantations are covered place is thiruveeli melalai temple place
மணம் கமழும் பொழில்களால் சுழப் பெற்றதுமான திருவிழிமிழலையைத்
அறிவார் அவலம் அறியாரே.
ARIVAAR AVALAM ARIYAAREA
Those who are thinking in the meditation they will not affected by sorrows
தியானிப்பவர் அவலம் அறியார்
378 உளையா வலியொல் கஅரக்கன்
ULAIYAA VALI YOL KA ARAKKAN
Ravana with his mighty power is used to excavate the kailai hills
மிக வருந்திக் கயிலை மலையைப் பெயர்த்த
வளையா விரலூன் றியமைந்தன்
VALAIYAA VIRAL YOON RIYA MAINTHAN
That Ravana’s power is destroyed form of ,Lard Siva raised his leg thumb finger and put it on the kailai hills and then stamped him that lard descended place it is
இராவணனது வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபிரான் எழுந்தருளியதும்
விளையார் வயல்வீ ழிம்மிழலை
VILAI YAAR VAYAL VEELIM MILALAI
The encircled form of paddy fields are covered place is thiruveeli melalai
விளைவு மிகுந்த வயல்களை உடையவதுமான திருவிழிமிழலையை
அளையா வருவா ரடியாரே.
ALAIYAA VARU VAAR ADIYAAREA
Where encircled form praying disciples are best people in this world
நினைத்து வருபவர் சிறந்த அடியவராவர்
379 மருள்செய் திருவர் மயலாக
MARUL SEI THIRUVAR MAYA LAAKA
Bharma and thirumal because of their ignorance filled ego mind they have searched lard Siva’s feet and head and then got fainting in this world
திருமால் பிரம்மன் ஆகிய இருவரும் அஞ்ஞானத்தினால் அடிமுதி காணாது மயங்க
அருள்செய் தவனார் அழலாகி
ARUL SEI THAVA NAAR ALAL AAKI
After wards they realized lard Siva is prime got to the whole universe and then where lard Siva appeared before them in fire glow form gave fear to them
அரிய அழல் உருவாய் வெளிப்பட்டு நின்று வெருட்டியவனும்
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
VERULSEI THAVAN VEELIM MILALAI
Afterwards they beg under his feet to forgive their sins and blessed them and that form of lard descended place is Thiruveeli melalai temple place
பின் அவர்களுக்கு அருள் செய்தவதுமான சிவபிரான் எழுந்தருளிய திருவிழிமிழலையைச்
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.
THRUL SEITH AVAR THEE VINAI THEAIVEA
This is best temple place in that mentality those disciples who are entering in to the temple that persons bad deeds will be removed
சிறந்த தலம் என்று சேர்ந்தவர்கள் தீவினைகள் தேய்தல் உறும்
380 துளங்குந் நெறியா ரவர்தொன்மை
THULANG NERI YAA RAVAR THONMAI
The shaking form of doctrine possessed buthaas and samanass
தடுமாற்றம் உடைய கொள்கைகளை மேற் கொண்டுள்ள
வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
VALANG KOLLAN MIN PULL AMAN THEERAI
Whose ignanimus form of religious service is not to be considered as special one
அற்பமானவராய் சமணர் தேரர் ஆகியோரின் சமயத் தொண்மைச் சிறப்பைக் கருதாதீர்
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
VILANGUM POLIL VEELIM MILALAI
Ever active form of thiruveeli melalai temple place
விளங்கும் பொழில்கள் சூழ்ந்த திருவிழிமிழலையை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே.
ULANGKOL PAVAR THAM VINNAI YOOIVEA
Who are thinking over it and that persons bad deeds will be slowly vanished and then cut off for ever
நினைபவர்களின் வினைகள் ஓய்ந்து அறுந்து போகும்
381 நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்
NAR KALIYUL GNANA SAMANTHAN
In the cool place is seergali where descended Thiru ganasambanther
குளிர்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன்
குளிரார் சடையான் அடிகூற
KULIRARA SADAIYAAN ADI KOORA
The cool form of hair possessed lard Siva whose sacred feet glory
தண்மையான சடைமுடியை உடைய சிவபிரானுடைய திருவடிப் பெருமைகளைக்
மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
MILIR AAR POLIL VEELIM MILALAI
If you try to propagate it and this thiruveeli melalai which is covered by flower plantations and that glory filled acts will get main place
கூறத் தொடங்கி விளக்கமான பொழில்கள் சூழ்ந்த திருவிழிமிழலைப் பெருமான் புகழ் கூறும்
கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே.
KILAR PAADAL VALLARK KILAI KEEDEA
Those who are singing the above decade that persons will not entertain any bad things in their life period
இப்பதிகப்பாடல்களை ஓத வல்லவர்கட்குக் கேடு இல்லை
திருச்சிற்றம்பலம்
June 29, 2019