THIRUVEDAI MARUTHOOR
1.32 திருவிடைமருதூர்
THIRUVEDAI MARUTHOOR
பண் – தக்கராகம்
It is Cauvery southern side temple which is situated under chola kingdom and it is called in the name of mathiyaachunam alias maruthavanam which is also called in the name of sanbakaarunyam and sathi puram. In this temple place the king named varaguna pandiyan got relief from the curse of bharamagasthi
In this temple place lardess yumadevi Vishnu Lakshmi saraswathi and veetham are prayed and conducted poojaas
Ganasambanther while going towards the temple at that time sand the following songs
சோழநாடு காவிரி தென்கரைத்தலம் மத்தியாச்சுனம் என்று வழங்கப் பெறும் மருதவனம் சண்பகாரண்யம் சத்திபுரம் என்ற பெயர்களும் உண்டு வரகுண பாண்டியனுக்குப் பிரமஹத்தி (சாபம்) நீங்கிய தலம்.
உமாதேவி விஷ்ணு, இலட்சுமி, சரஸ்வதி வேதம் முதலியவர்கள் பூசித்தது.
ஞானசம்பந்தர் திருக்கோயிலை நோக்கி செல்லும்போது பாடியது திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருநாகேச்சரத்து இனிதமரும் செங்கங்கைத் தணிகின்ற வணங்கி நாரதப் பெருமானின் பிணி தீர்க்கும் பெருங் கருணையைப் போற்றித் திருவிடை மருதுருக்கு வழிக் சொல்கின்றன “ஓடேகலன்” இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
338 ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
ODEA KALAN UNBATHUM OORIDU PICHAI
The begging bowel is bharma skull and then eating food is begged one
உண்ணும் பாத்திரம் பிரம கபாலமாகும் அவர் உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும்.
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
KADEA YIDA MAA VATHU KALLAL NILAR KEEL
Whose dwelling place is burial ground and that form of lard Siva seated under the papal tree shadow
அவர் வாழும் இடமோ இடுகாடாகும் அத்தகைய சிவபிரான் கல்லால் மர நிழற்கிழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்
VAADAA MULAI MANGAI YUNTH THANUM MAKILNTH
The attractive breasts are possessed lardess parvathi and lard Siva mingled together and got happy from it
நன்முலை நாயகியும் தானுமாய் மகிழ்ந்து
தீடாவுறை கின்ற இடைமரு தீதோ.
THEEDAA VURAI KINDRA IDAI MARU THEE THO
In that glory filled form seated place is thiru vedai maruthoor and that place is it
பெருமையோடு விளங்கும் திருத்தலமாகிய இடைமருது இதுதானோ
339 தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
THADAM KONDA THOTAR THAA MARAIP PONMUDI THAN MEL
In the flower pond place plucked big lotus flower and which is adorned on the lovely hair of lard Siva
தடாகங்களில் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
KUDANG KONN ADI YAAR KULIR NEER SUMATH THAAT TAP
And disciples are carried sacred water on the pot and then entered in to the temple
அடியவர்கள் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரை முகந்து சுமந்து வந்து
படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
PADANG KONDA THOR PAAM PARAI YAARTH THA PARAMAN
And then giving sacred bath to lard Siva who has tied the dancing snake on his waist place and that prime god liking place is
அபிஷேகிக்குமாறு படம் எடுத்தாடும் நல்ல பாம்பை இடையிலே கட்டிய பரமன் தான் விரும்பிய
இடங்கொண்டிருந் தான் றன் இடைமரு தீதோ.
IDANG KON DIRUNTH THAAN DRAN IDAI MARU THEETHOO
Thiru vedai maruthoor temple place is it
இடமாகக் கொண்டு உறையும் இடைமருது இதுதானோ
340 வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
VEN KOVANAG KONDORU VEN DALAI YEENTHI
The white color loin cloth is tied in the waist place and unique form of white bharma skull is carried on hands
வெண்மையான கோவணத்தை அணிந்த ஒப்பற்ற வெள்ளிய பிரம காபலத்தை கையில் ஏந்தி
அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
ANG KOLVALAI YAALAI YOR PAAKAM AMARNTHU
In the lovely form well decorated bangles are adorned on the hand place by lardess yumadevi who has been willingly given left part of body and then willingly accepted it
அழகியதாய்த் திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒருபாகமாக விரும்பி ஏற்று
பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்
PONGAA VARU KAAVERIK KOLAK KARAI MEEAL
In the bubbling form of flowing on the river Cauvery banks
பொங்கி வரும் காவிரி நதியின் அழகிய கரை மீது
எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ.
ENGONU URAI KINDRA IDAI MARU THEETHOO
Where lard Siva who is my leader and hose residential place Idai maruthu is it
எம் தலைவனாயுள்ள சிவபிரான் எழுந்தருளிய இடைமருதூர் இதுதானோ
341 அந்தம்மறி யாத அருங்கல முந்திக்
ANTHAM MARIYAATHA ARUNG KALA MUNTHIK
The rare form of ruby diamonds are thrown on the Cauvery river banks
அறிய அணிகலங்களிக் கரையில் வீசி
கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்
KAN THANG KAMAL KAVERIK KOLAK KARAI MEEAL
In the fragrance filled form flowing river Cauvery river banks
மணம் கமழ்ந்து வரும் காவிரி நதியின் அழகிய கரை மீது
வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்
VENDHA PODIP POOSIYA VEDHA MUTHAL VAN
Lard Siva who has adorned sacred ashes all over the body in paste form and infinitive form of existing veetha chanting prime god form existing in this world
திருவெண்ணீறு அணிந்தவனாய் முடிவு அறியாத வேத முதல்வனாய் விளங்கும்
எந்தையுறை கின்ற இடைமரு தீதோ.
ENTHAI YURAI KINDRA IDAI MARU THEETHOO
That lard Siva who is also my father whose residential place Idai maruthu is it
எம் தந்தையாகிய சிவபிரான் உறைகின்ற இடம் இடைமருதூர் இதுதானோ
342 வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
VAASANG KAMAL MAA MALARCH SOLAIYIL VANDEA
The fragrance filled the best flowers are bloomed in the flower plantations where honey bees are conducted festivals and got happy from it
மணம் கமழும் சிறந்த மலர்களை உடைய சோலைகளில் வண்டுகளைக் கொண்டதும்
தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்
THESAM PUGUNTH THEENDI YOR SEMMAI YUDAITH THAAI
Where world peoples are clubbed form in good minded form
உலக மக்கள் பலரும் கூடிச் செம்மையாளராய்த்
பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
POOSUM THAADIP POLIN THAALA KAAYA
In the Tamil month thai poosam festival at that time taking sacred Bath and prayed lard Siva and in the form decorated lard Siva
தைப்பூசத் திருநாளில் நீராடி வணங்குவதும் பொலிவும் அழகும் உடையவனாய்
ஈசனுறை கின்ற இடைமரு தீதோ.
EESAN URAI GINRA IDAI MARU THEETHOO
Descended in this place named thiru eadaimaruthe is it hitherto I do not know it
ஈசன் எழுந்தருளி விளங்குவதுமாகி இடைமருதூர் என்னும் தலம் இதுதானோ
343 வன்புற்றிள நாகம் அசைத் தழகாக
VANPUT RIL NAGAM ASAITH THALA KAAKA
The mighty sand don place living the small cobra sakes which is tied in lovely form in waist place
வலிய புற்றுகளில் வாழும் இளநாகங்களை இடையிலே அழகாக
என்பிற்பல மாலை யும் பூண்டெரு தேறி
EN PIRPALA MAALAI YUM POON DORU EARU THEERI
And then bones garlands are so many in number garland form adorned
கட்டிக்கொண்டு எலும்பால் இயன்ற மாலைகள் பலவற்றையும் அணிகலன்களால் பூண்டு
அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய்
ANBIR PIRIYAA THAVAL LODU MUDANAAI
Not separated from love with that lardess parvathi appeared together form
அன்பிற் பிரியாத உமையம்மையோடு உடனாய்
இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ.
IN BUT RIRUTH THAAN RAN IDAI MARU THEETHOO
And then ascended on the back of the bull and happily travelling and then dwelling place Idai maruthu is it
எருதேறிச் சிவபிரான் இன்புற்று உறையும் இடம் இடைமருதூர் இதுதானோ
344 தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்
THEK KUN THIMILUM PALAVUM SUMAN THUINTHIP
The trees named teak vengai jack all are carried form and then
தேக்கு வேங்கை பலா ஆகிய மரங்களைச் சுமந்து வந்து இரு கரைகளிலும் அம்மரங்களை எடுத்து வீசி
போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
POOKI PURAM POOSAL ADIPPA VARUMAAL
All the trees are thrown away in the river banks and then lashed on the shores
இம்மரங்களை இருகரை மருங்கும் எடுத்து வீசி கரையுடன் மோத
ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
AARK KUN THIRAIK KAAVERIK KOLAK KARAI MEL
In that emotional roaring form coming waves in that form of River Cauvery lovely banks
ஆரவாரித்து வரும் அலைகளை உடையதாய் காவிரி நதியின் அழகிய கரைமேல்
ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ.
ERKA IRUN THAAN RAN IDAI MARU THEETHOO
Where lard Siva dwelling place Idimaruthu temple is it
சிவபெருமான் பொருந்த உறையும் இடைமருதூர் என்னும் தலம் இதுதானோ
345 பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப
POOVAR KULA LAARA AKIL KONDU PUGAIPPA
The flowers are adorned hair possessed ladies are emanating the perfume fumes
மலர் சூடிய கூந்தலை உடைய மங்கள மகளிர் அகில் தூபம் இட
ஓவாதடி யாரடி யுள்குளிர்ந் தேத்த
OOVAA THADI YAARADI YUL KULIRNITH THEETH THA
And the disciples are lard Siva’s sacred feet are praised with prayer songs with cool minded form conducted poojaas
அடியார்கள் இடையீடு இன்றித் திருவடிகளை மனம் குளிர்ந்து ஏத்த
ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த
AAVAA ARAK KAN DRANAI AATRAL ALITH THA
And then those who are seen lard Siva’s act of stamping Ravana under the kailai hills and then disciples are chanting O and O form of prayer songs
கண்டவர் ஆஆ என இரங்குமாறு இரவானது ஆற்றலை அழித்த
ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ.
EEAVAAR SILAI YAANRAN IDAI MARU THEETHOO
To convert meru hills as bow and then carried bow on his hands and that lard Siva’s Idai maruth temple place is it
அம்பு பொருந்தாற் கேற்ற மலை வில்லைக் கையில் கொண்ட சிவபெருமானது இடைமருது என்னும் தலம் இதுதானோ
346 முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
MUTRAA THA THOOR PAAL MATHI SUUDU MUTHAL VAN
Not yet ripped that milk like white young moon is adorned on the hair of lard Siva who is principal form
முற்றாத பால் போன்ற இளம்பிறையை சூடி மிசைச் சூடிய முதல்வனாய்
நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்
NAAT RAAMARAI YAANODU MAAL NAYANTH THEETHAP
The good lotus flower on it dwelling bharma and Thirumal who are willingly praying lard Siva
நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் திருமாலும் விரும்பித் தொழ
பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக
POR ROLIYUNTH THAANUM POLIN THALA KAAKA
Lard Siva and parvathi appearing together that lovely form of blessed all
உமையம்மையும் தானுமாய்ச் சிவபெருமான் அழகாகப் பொழிந்து
எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ.
EAATRAI YURAI KINDRA IDAI MARU THEETHOO
In that way lard Siva dwelling temple place is it
உறைகின்ற இடைமருது என்னும் தலம் இதுதானோ
347 சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
SIRU THEERARUM SIL SAMANUM PURANG KOORA
The short sight mind possessed Buthaas and deficient knowledge possessed Samanass who are talking ill about lard Siva
சிறு மதியாளராகிய தேவர்களும் சிற்றறிவினராகிய சமணர்களும் புரம்கூறித் திரிய
நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
NERI YEA PALA PATH THARKAL KAI THOLU THEE THA
And lard Siva’s disciples are so many in number who are one after another in row form of prayed with folded hands
சிவ பக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதித்துப்
வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
VERIYAA VARU KAVERI KOLAK KARAI MEL
Where the fragrance filled form of flowing River Cauvery on its River banks
மனம் கமழ்ந்து வரும் காவிரி நதியின் அழகிய கரைமேல்
எறியார்மழு வாளன் இடைமரு தீதோ.
ERIYAAR MALUVAALAR IDAI MARU THEETHOO
Situated lard Sivas temple where lard Siva dwelling who has winning force filled the mallu battle force carried on hands and that Idai maruthu place is it
பகைவரை வென்று ஒழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான் எழுந்தருளி உள்ள இடைமருது என்னும் தலம் இது அன்றோ
348 கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
KANNAAR KAMAL KAALIYUL GAANA SAM PANTHTHAN
The broad place and fragrance filled place is seergali where descended Ganasambanther
இடம் அகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தர்
எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
ENNAAR PUGA LEN THAI YIDAI MARU THIN MEL
In the mind place thinking form of glory filled temple place is thiru eadai maruthu and on it
எண்ணத்தில் நிறைதுள்ள புகழை உடைய எம்பெருமனுடையை இடைமருது மீது
பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
PANNOO EAYANRA DISAI YAAL PAADIYA PATH THUM VALLAAR KAL
With musical notes are filled form of the above poems and who are memorized it and then sang it before lard Siva
பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் வல்லார்
விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே.
VINOOR ULA KATH THINIL VEETRU EARUP PAAREA
They will seated in the upper world and that specialty they will get
விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
June 28, 2019