OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thirupuththur

ganesheit June 26, 2019

1.26 திருப்புத்தூர்

Thirupuththur


பண் – தக்கராகம்
Gaanasambather has liked to pray in so many pandiya kingdom places and then at first entered thiru ani appanoor place and then went to thiru puthoor and where he stayed some more days and at that time he sang the following songs. This pandiya kingdom temple and the temple name is thiru thali where lardess yumaadevi and Lakshmi conducted poojaass
பாண்டிய நாட்டுப் பதிகள் பலவற்றையும் வணங்கத் திருவுளங் கொண்ட பிள்ளையார் அணியாப்பனூர் அணைந்து பணிந்து பாடிய படி ஏறனந்த வெங்கொடியார் வீற்றிருத்தருளும் திருப்புத்தூரை அடைந்து சில நாள் வீற்றிருந்தார்கள் அப்போது வெங்கள் விம்மு என்றும் இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
பாண்டிய நாட்டுத் தலம்
திருக்கோயிலின் பெயர் திருத்தளி உமாதேவியும் லட்சுமியும் பூசித்த தலம்


272வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
VENGAL VIMU VERIYAAR POLIL SOLAITH

Ever liked form of honey filled flowers are bloomed fragrance filled place it is
விரும்பத்தக்க தேன் விம்மிச் சுரந்துள்ள மணம் பொருந்திய சோலைகள்


திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
THINGALODU THILLAIKUTH THIRU PUTHOOR

That plantations are grown up to the sky level where the moon is crawling and that wealth covered place is thiru puthoor where descended lard Siva
வானளாவ உயர்ந்து அங்குத் தவழும் திங்களோடு பழகித் திளைக்கும் வளம் உடைய திருப்புத்தூரில் எழுந்தருளிய


கங்கை தங்கு முடியா ரவர்போலும்
KANGAI THANGU MUDIYAAR AVARPOLUM

In the River Ganges adorned form of who is also dwelling in our brain place
கங்கை தங்கிய சடைமுடியினராகிய பெருமானார்


எங்கள் உச்சி உறையும் இறையாரே.
ENGAL UCHI URAIYUM IRAIYAREA

In that form lard Siva stayed in the sagasarathalam (ten inches above the head place)
எங்கள் சிரங்களின் மேல் தங்கும் இறைவன் ஆவார்

273 வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
VENAL VOMMU VERIYAAR POLIR SOLLAITH

In the early summer days appeared the fragrance filled the plantations place and water bodies
வேனிற்காலத்தில் வெளிப்படும் மணம் நிறைந்துள்ள பொழில்களிலும் சோலைகளிலும்


தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
THENUM VANDUM THILLAIKUTH THIRUPUTH THUR

Where living honey bees are consumed honey and then raised the humming sounds all the times and that place is thiru pathoor
வாழும் வண்டுகள் தேனை உண்டு திளைத்து ஒலி செய்யும் திருப்பத்தூரில்


ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
UNAM INDRI YARAI VAAR AVAR POLUM

Where lard Siva without any deficiency form dwelling
குறையின்றி உறையும் பெருமான் ஆவார்


ஏன முள்ளும் எயிறும் புனைவாரே.
ENA MULLAM EYIRUM PUNAI VAAREA

Once thirumal has taken the pig form and then started to destroy the whole world so that deevaas are requested before lard Siva to control it and then lard Siva plucked its teeth and horns and then and adorn it as garland on his bosom
தேவர்கள் வேண்டுகோளை ஏற்றுப் பன்றி வடிவ மெடுத்த திருமால் உலகை அழிக்கத் தொடங்கிய காலத்து அதனை அடக்கி அதன் பல்லையும் கொம்பையும் பறித்துத் தன் மார்பில்

274 பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
PANGU NALLA VIRIVANDISAI PADATH

Where the stripped form of bees are singing in humming songs
நல்ல வரிகளை உடைய வண்டுகள் பாங்கரிலிருந்து இசைபாடத்


தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
THENGKOL KONDRAI THILLAIKU THIRUPUTHTHUR

The honey filed kondrai flowers are adorned as head garland of lard Siva that place is thiru pathoor
தேன் நிறைந்த கொன்றை மலர்கள் முடி மிசைத் திளைத்து விளங்கத் திருப்பத்தூரில்


ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந்
ONGU KOYIL URAIVAA RAVAR POLUM

Where lard Siva in the high raised temple tower place dwelling
ஓங்கி உயர்ந்த கோயிலில் எழுந்தருளிய பெருமானார் ஆவார்


தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.
THANGU THINGAL THAVALPUN SADAIYAAREA

The moon surrender under lard Siva for protection so that lard Siva has taken it and then adorn it on the head place
தம்மை அடைக்கலம் ஆக அடைந்த திங்கள் வாழும் செந்நிறச் சடை முடியை உடைய இறைவர் ஆவார்

275 நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
NAARA VINDA NARUMAA MALAR KAVITH

Where fragrance is spread over form of bloomed good flowers and then on it the honey bees are penetrated with its mouth
மனம் வீசுமாறு மலர்ந்த சிறந்த நறுமலர்களைத் தம் வாயால் கவ்வி வண்டுகள்


தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
THERAL VANDU THILLAI KUTH THIRU PUTHTHUR

And then sucked the honey from the flowers and got enjoyment and that place is thiru pathoor
தேனை உண்டு திளைக்கும் திருப்பத்தூரில்


ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
OORAL VALKAI UDAIYAA RAVAR POLUM

Where lard Siva dwelling so many yugaas and live here family life for ever
பலகாலம் தங்கிய வாழ்க்கையினை உடையார் ஆவார்


ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.
ERU KONDA KODIYEM IRAI YAARE

The bull emblem studded flag carried by lard Siva on his hand
ஆண் ஏற்றுக் கொடியைத் தனதாகக் கொண்ட எம் இறைவன்

276 இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்
ISAI VILANGUM ELILSUULNTHA THIYAL PAKATH

That glory filled form of and in the natural way beautiful appearance possessed place it is
புகழால் விளக்கம் பெற்றதும் இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவதும்


திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
THISAI VILANGUM POLIL SOOL THIIRU PUTHTHUR

And on four directions are plantations are covered place it is
நால் திசைகளிலும் பொழில்கள் இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவதும்


பசை விளங்கப் படித்தா ரவர்போலும்
PASAI VILANGAP PADITHTHRA VAR POLUM

And those disciples who are prayed him where love growing form taking intimate relationship with them
தம்மை வழிபடுவர்க்கு அன்பு வளருமாறு பழகும் பெருமானார் ஆவார்


வசை விளங்கும் வடிசேர் நுதலாரே.
VASAI VILANGUM VADISER NUTHALAAREA

The Ganges is adorned on the head place and that lovely form appearing on the head place that form of lard Siva
கங்கையாகிய பெண் விளங்கும் அழகிய சென்னியினராகிய இறைவர்


277 வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
VEN NERATHTHA VIRAI YODA LAR UNTHITH

Where the white fragrance filled flowers are pushed form
வெண்மை நிறமுடையவனாய் மணம் பொருந்திய மலர்களை அடித்துக் கொண்டு


தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
THEN NIRATHTHA PUNAL PAAI THIRUP PATHTHUR

That clear water flowing thirupatoor place it is
தெளிந்த தன்மை உடையதாய் தண்ணீர் பாயும் திருப்பத்தூரில்


ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
ONN IRATHTHA OLIYAAR AVAR POLUM

Where lard Siva descended in light form in this place
எழுந்தருளிய ஒண்மை பொருந்திய ஒளியை உடைய பெருமானார் ஆவார்


வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.
VEN NIRATHTHA VIDAI SER KODI YAAREA

The white color flag on it bull emblem studded form which is carried on his hand by lard Siva
வெண்மை நிறமுடைய விடை உருவம் எழுதிய கொடியைஉடைய இறைவர்

278 நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்
NEI THALAAM PAL KALUNEER MALARTH THENGUJ

Where the neithal flowers ambal and sengaluneer flowers all are bloomed in the water bodies
நெய்தல் ஆம்பல் செங்கழுநீர் ஆகிய மலர்கள் வயல்கள் எங்கும் மலர்ந்து


செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
SEIKAN MALGU SIVANAAR THIRUPUTHTHUR

All that water bodies are filled place is thiru pathoor where lard Siva descended
நிறைந்து விளங்கும் திருப்பத்தூரில் எழுந்தருளிய


தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
THAIYAL PAKAM MAGILNTHARAVAR POLUM

With lardess parvathi in his left part of his body and then got happy in that appearance form
உமையொரு பாகம் மகிழ்ந்த சிவனாராவர்


மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே
MAIYUN NANJAM MARUVUM MITTARAREA.

And that form of lard Siva who has possessed poison tainted throat
கருமை பொருந்திய நஞ்சு மருவும் மிடற்றினராய இறைவன்


279 கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்
KARUKKAM ELLAANG KAMALUM POLIR SOLAITH

And in that clouds are spread over form of where fragrance filled plantations and water bodies are filled place it is
மேகங்களிலும் பரவிக் கமழும் மணமுடைய பொழில்காளலும் சோலைகளாலும்


திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
THIRUKKOL SEMMAI VILA VAAR THIRU PUTHTHUR

That rich place it is and good people living place it is and so many festivals are conducted thirupathoor place it is
செல்வம் நிறைந்தும் செம்மையாளர் வாழ்வதும் திருவிழாக்கள் பல நிகழ்வதுமாகிய திருப்பத்தூரில்


இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
IRUKKA VALLA IRAIVAR AVER POLUM

Where lard Siva descended and stayed here for ever
எழுந்தருளிய இருக்க வல்லவராய இறைவராவர்


அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
ARAKKAN OLKA VIRALAL ADARNTH THAAREA

Who has stamped ravana with his toe finger
இராவணனாகிய அரக்கனைக் கால் விரலால் தளர அடர்ந்தவரும் ஆகிய பெருமானார்


280 மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
MARUVI YENGUM VALARUM MADAMANJAI

In all the place matting form of living the young peacocks
எங்கும் பொருந்தியவனாய் வாழும் இள மயில்கள்


தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
THERUVU THORUTH THILLAIKUNTH THIRUP PUTHTHUR

And then wandering in the street place and enjoy it and that place is thirupathhoor
தெருக்கள் தோறும் உலவிக் களிக்கும் திருப்பத்தூரில்


பெருகி வாழும் பெருமா னவன்போலும்
PERUKI VAALUM PERU MAAN AVAN POLUM

In that glory filled form lard Siva dwelling place it is
பெருமை பெருகியவனாய் வாழும் பெருமனாவார்


பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.
PRAMAN MALUM ARIYAAP PERI YONEA

Bharma and thirumal not known that form of elderly person is lard Siva
பிரம்மனும் திருமாலும் அறிய முடியாத பெரியோனாகிய இறைவருக்கு


281 கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்
KOORAI PORK KUNTH THOLILAA RAMAN KOORAL

Buthaas who are covered their upper body by saffron color cloths and then wander every where
மேல் ஆடையைப் போர்த்து திரிதலைத் தொழிலாகக் கொண்ட பௌத்தர் சமணர்


தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
THERAL VENDAA THELI MIN THIRU PUTHTHUR

Those persons wards are not given regard to it
ஆகியவர்கள் உரைகளை நம்பாதீர்கள் திருப்பத்தூரில்


ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
AARUM NAANGUM AMARN THAAR AVAR POLUM

And in thirupathhoor place lard Siva appears four veethas and then six angas form and that form of lard Siva you may got clear idea about him
ஆறு அங்கங்களும் நான்கு வேதங்களும் விளங்கும் பெருமானாகிய அவரைத் தெளிமின்


ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.
EERU KONDA KODI YEM IRAI YAAREA

That form of lard Siva who has carried bull flag on his hands
ஆனேறு எழுதிய கொடியினை உடையவாராய்


282 நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
NALLA KELVI GNANASAMANTHTHAN

The goodness giving veethaas are realized by thiru ganasambanther
நன்மை தரும் வேதங்களை உணர்ந்த ஞானசம்பந்தன்


செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்
SELVAR SEDAR URAIYUNTH THIRU PUTHTHUR

And in that thirupathoor place is wealthy people and lard Siva’s dwelling place it is
செல்வரும் உயர்ந்தவருமாகிய சிவபெருமான் உறையும் திருப்பத்தூரில்


சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
SOLALAL PAADAL VALLAAR THAMAK ENDRU

And those disciples who are sang the above ten poems and then excelled in it
அடைந்து வழிபடச் சொல்லிய பத்துப் பாடல்கள் வல்லவர்கட்குத்


அல்லல் தீரும் அவலம் அடையாவே.
ALLAL THEERUM AVALAM ADAI YAAVEA

Those disciples problems will be removed and all the time problem will not disturbed them
துன்பங்கள் நீங்கும் எக்காலத்தும் அவலம் அவர்களை அண்டாது.(அடையாது)
And those disciples who are sang the above ten poems and then excelled in it
அடைந்து வழிபடச் சொல்லிய பத்துப் பாடல்கள் வல்லவர்கட்குத்


அல்லல் தீரும் அவலம் அடையாவே.
ALLAL THEERUM AVALAM ADAI YAAVEA

Those disciples problems will be removed and all the time problem will not disturbed them
துன்பங்கள் நீங்கும் எக்காலத்தும் அவலம் அவர்களை அண்டாது.(அடையாது)

திருச்சிற்றம்பலம்

June 26, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: