OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEELI MELALAI

ganesheit June 25, 2019

1.020 திருவீழிமிழலை THIRU VEELI MELALAI


Om thiruchitrambalam
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்


Thiru veeli melali is chola kingdom place. Lard Siva here appears in the marriage attire form. Thirumal here conducted poojaas and got circle force here. Gaanasambanther and thiru naayukku arasar prayed here and then got step gold coin so as to remove poverty here. Gaanasambanther got the glimpse of seer gaali place lard Siva in this temple place
திருவீழிமிழலை சோழநாட்டின் தென்கரைத்தலம் ஈசன் திருமணக் கோலத்துடன் இருக்கும் திருத்தலம் திருமால் துதித்து ஆழிப்படையைப் பெற்ற தலம். ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பாடி படிக் காசு பெற்ற தலம் சீர்காழிப் பதியில் உள்ள காட்சியை ஈசன் இத்திருத்தலத்தில் ஞானசம்பந்தருக்குக் காட்டி அருளிய சிறப்புடையது.


தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொடு
THADA NILAVIYA MALAI NIRU VIYOR THALALU TAMIL THARU PADA ARAYUU KODU

The bog manthra hill is converted as grinding pole and the wild poison is spitting the vasugi snake is used as pole grinding rope and tied
பெரியதாகிய மந்திர மலையை மத்தாக நிறுத்தி அழல்போலும் கொடிய நஞ்சை உமிழும் படத்தோடு கூடிய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கட்டி


அடல்அசு ரரொடம ரர்கள்அலை கடல்கடை வுழியெழு மிகுசின
ADAL ASURA RODU AMA RARKAL ALAI KADAL KADAI ULI ELU MIGU SINA

And with mighty body power possessed aasuraas and deevaas where the waves are emanating the milk sea is grinded and at that time emanated the wild poison
வழிய அசுரர்களோடு தேவர்கள் அலைகள் பொருந்திய திருப்பாற்கடலை கடைந்த இடத்துத் தோன்றிய உக்கிரமான ஆலகாலம்


விடம்அடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
VIDAM ADAI THARU MIDA RUDAI YAVAN VIDAI MISAI VARUM AVAN URAI PATHI

and that poison is collected and then consumed by lard Siva and the converted his throat as poison tainted one and that lard Ascended form moving on the back of the bull everywhere and whose residential place it is
என்னும் நஞ்சு அடைந்த கண்டத்தை உடையவர்களும் விடையின் மீது வருபவனும் ஆகிய சிவபிரான் உறையும் தலம்


திடமலிதருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே. 1.20.1
THIDA MALI THARUMARAI MURAI UNAR MARAI YAVAR NIRAI THARU MILAIYEA

Where the four veethaas are as per rule chanted and realized its meaning and that bharamins are filled place is thiru veeli melalai
நான் மறைகளை முறையாக ஓதி உணர்ந்த உறுதி வாய்ந்த மறையவர் நிறைந்துள்ள திருவீழிமிழலை ஆகும்


தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது
THARAI YODU THIVI THALA NALI THARU THAGU THIRAL URU SALA THARA NATHU

Not only to this world but also to upper world giving pain and sorrow that capacity possessed one asura named jalantharaaswarn
மண்ணுலகத் தோடு விண்ணுலகையும் நலிவுறுத்துகின்ற வலிமை பொருந்திய சலந்தராசுரனின்


வரையன தலைவிசை யொடுவரு திகிரியை அரிபெற அருளினன்
VARAI YANA THALAI VISAI YODU VARU THIKI RIYAI ARI PERA ARULINAN

And that powerful asuraa head is speedily cut off by the circle forces and the circle force is requested by thirumal and that circle force is given to him by lard Siva
மலை போன்ற தலையை வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கராயுதத்தை த் திருமால் வேண்ட அவர்க்கு அருளியவனும்


உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
URAI MALI THARU SURA NATHI MATHI POTHI SADAI YAVAN URAI MATHI MIGU

The glory filled Ganges River and moon embedded on the hair of lard Siva and that lard’s residential place it is
புகழ் மிக்க கங்கை நதி மதி ஆகியன பொதிந்த சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் தலம்


திரைமலி கடல்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே. 1.20.2
THIRAI MALI KADAL MANAL ANI THARU PERU THIDAR VALAR THIRU MILAIYEA

This thiru veeli melalai place is lovely form the sea waves brought the sea sand and then placed it there
பெரிய அலைகளை உடைய கடற்கரை மணலால் அழகு பெரும் மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலை ஆகும்


மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்
MALAI MAGAL THANAI IKAL VATHU SEITHA MATHI YARU SIRU MANA VANA THU THYAR

The rock lady named parvathi is cursed by thakkan who has short sighted knowledge
மலை மகளாகிய பார்வதி தேவியை இகழ்ந்த அறிவற்ற அற்பபுத்தியை உடையன தக்கனுடைய


தலையினொ டழலுரு வனகரம் அறமுனி வுசெய்தவ னுறைபதி
THALAI YIN NODU ALALURU VANA KARAM ARA MUNIVU SEITHA VAN URAI PATHI

So as to punish him lard Siva through veerabathra cut off his head and one hand and in that way angry is revealed that lard Siva’s residential place it is
தலையோடு அழலோனின் கை ஒன்றையும் அறிந்து தன சினத்தை வெளிப்படுத்திய சிவபிரான் உறையும் தலம்


கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு
KALAI NILAVIYA PULAVAR KAL IDAR KALAI THARU KODAI PAYIL PAVAR MIGU

The gaana art knowledge filled pundits and whose poverty is alleviated form the philanthropists living place it is
கலை ஞானம் நிரம்பிய புலவர்களின் வறுமைத் துன்பம் நீங்க நின்ற செல்வத்தை வழங்கும் கொடையாளர் வாழ்வதும்


சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே. 1.20.3
SILAI MALI MATHIL PUDAI THALU VIYA THIGAL POLIL VALAR THIRU MILAIYEA

In that way the big protection walls are covered place it is and the flower gardens are fully bloomed form of existing place it is
பெரிய மதில்களால் சூலப்பெற்றதும் விளங்குகின்ற பொழில்கள் வளர்வது மாய திருவீழிமிழலை ஆகும்


மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய
MARU VALAR PURA MORI YINAN PADI THARA ORU KANAI SELA NIRU VIYA

To develop enmity that three castle assuraa’s places are destroyed by the single arrow that mighty power full lard Siva
பகைமை பாராட்டிய திரிபுராதிகளின் முப்புரங்களையும் ஏரியில் அழியுமாறு கணை ஒன்றைச் செலுத்திய பெரு வலிமை படைத்தவனும்


பெருவலி யினன்நலம் மலிதரு கரனுர மிகுபிணம் அமர்வன
PERU VALI YINAN NALA MALI THARU KARAN URA MIGU PINAM AMAR VANA

The goodness filled the sacred hands are possessed lard Siva and the abundant dead body filled in the burning burial ground place
நன்மைகள் நிறைந்த திருக்கரங்களை உடையவனும் வழிய பிணங்கள் நிறைந்த சுடுகாட்டில்


இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி
IRU LIDAI ADAI URA VODU NADA VISAI URU PARAN INI THURAI PATHI

In the mid night dark time lard Siva singing and dancing with the ghost forces and that form of lard’s residential place it is
நள்ளிருட் போதில் சென்று அங்குத் தன்னை வந்தடைந்த பேய்களோடு நடனமாடி இசைபாடு பவனுமாகிய பரமன் மகிழ்வோடு உறையும் பதி


தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே. 1.20.4
THERU VINAL VARU PERU VILA OLI MALI THARA VALAR THIRU MILALAIYEA

And every street place emotional filled form of big festivals are conducted place is thiruveeli melalai
தெருக்கள் தோறும் திகழும் பெருவிழாக்களின் ஆரவாரம் நிறைந்த வளரும் திருவீழிமிழலை ஆகும்

லி மலிதர வளர்திரு மிழலையே. 1.20.4
THERU VINAL VARU PERU VILA OLI MALI THARA VALAR THIRU MILALAIYEA

And every street place emotional filled form of big festivals are conducted place is thiruveeli melalai
தெருக்கள் தோறும் திகழும் பெருவிழாக்களின் ஆரவாரம் நிறைந்த வளரும் திருவீழிமிழலை ஆகும்


அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள்
ANI PERU VADA MARA NILA LINIL AMAR VODUM ADI INAI IRUVAR KAL

Under the papal tree shadow descended lard Siva and whose sacred twin feet
அழகிய கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்தும் திருவடி இணைகளைச்


பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளி
PANI THARA ARA NERI MARAI YODU ARULI YA PARAN URAI VIDAMOLI

Where on the one side seated that sananthaner and ganager and on the other side sanaatharer and sanath kumaarer are submissive seated and then preached them the ethical way of life with veethaas and that form of lard Siva

சனகர் சனந்தனர் ஆகிய இருவர் ஒரு புறமும் சனாதனர் சனற்குமாரர் ஆகிய இருவர் மறுபுறமும் பணிய அவர்களுக்கு அறநெறியை வேதங்களோடு அருளிச் செய்த சிவபிரான்


மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
MANI PERU VARU MARA KATHA NILA MALI PUNAL ANAI THARU VAYAL ANI

And in that residential place the light glittering form of ruby diamonds and maragatham all are pushed forward by the river water and then place in the fertile field place
உறையும் இடம் ஒலி பொருந்திய மணிகள் ஒப்பிலாத மரகதம் ஆகியவற்றை அடித்துவரும் ஆற்று நீர் நிலம் எல்லாம் நிறைந்து வளங்களால் அணி செய்யப் பெறுவதும்


திணிபொழில் தருமணம் மதுநுக ரறுபத முரல்திரு மிழலையே. 1.20.5
THINI POLIL THARU MANAM MATHU NUGAR ARU PATHAM MURAL THIRU MILALAI YEA

The thick form of flower plantations are spread over fragrance that pace where honey bees are raised the humming sound place is thiru veeli melalai
செறிந்த பொழில்கள் தரும் மனத்தை நுகரும் வண்டுகள் முரல்வதுமான திருவீழிமிழலை ஆகும்


வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்
VASAI YARU VALI VANA SARA URU VATHU KODU NINAI VARU THAVA MUYAL

The flawless form of the mighty powerful hunter form taken and the hard penance performing Arjuna
குற்றமற்ற வழிய வேடர் உருவைக் கொண்டு நினைத்தற்கும் அரிய கடுந்தவத்தை செய்யும்


விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல் கொடுசெய்து
VISAI YANA THIRAN MALAI MAKAL ARIV URU THIRAL AMAR MIDAL KODU SEITHU

So as to instruct that mighty power to lardess parvathi and then waged hard fighting battle with him and then that Arjuna
விசையனுடைய வலிமையை உமையமைக்கு அறிவுறுத்தும் வகையில் அவனோடு வழிய பேரைத் தன் வலிமை தோன்றச்செய்து அந்த விசயனுக்குத்


அசைவில படையருள் புரிதரு மவனுறை பதியது மிகுதரு
ASAI VILA PADAI ARUL PURI THARUM AVAN URAI PATHI YATHU MIGU THARU

And then winning force filled the pasupatha battle force is given to him and then blessed him that lard Siva’s residential place it is and the thick trees are grown
தோல்வி எய்தாத பாசுபதக்கணையை வழங்கி அருள் புரிந்த சிவபிரான் உறையும் பதி செறிந்த மரங்கள்


திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிருமிழலையே. 1.20.6
THISAI YININ MALAR KULA VIYA SERI POLIL MALI THARU THIRU MILAIY EEA

And in all the directions the flowers are bloomed form appearing and that flower plantations are covered place is thiruveeli melalai
திசைகள் எங்கும் மலர்கள் பூத்துக் குலாவும் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலை ஆகும்


நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை யொளிமுதல்
NALA MALI THARU MARAI MOLI YODU NATHI YURU PUNAL PUGAI OLI MUTHAL

The goodness form of giving the veetha chanting mantharraass are chanted and then the River water and fragrance emanating fumes and lamps are lit up form
நன்மைகள் பலவும் நிறைந்த வேத மந்திரங்களை ஒதி ஆற்று நீர் மணப்புகை தீபம்


மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு
MALA RAVAI KODU VALI PADU THIRAN MARAI YAVAN UYIRATHU KOLA VARU

And then with flowers where boojaas are conducted form of that bharamin named marganday’s life is going to corner it
மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு பூசை செய்து வழிபடும் மறையவன் ஆகிய மார்கண்டேயன் உயிரை கவர வந்து


சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவர னுறைபதி
SALA MALI THARU MARA LI THAN UYIR KEDA UTHAI SEITHA ARAN URAI PATHI

Then vengeance filled death god ema’s life is put an end form lard Siva kicked and then killed him and that lard Siva’s residential place it is
வஞ்சகம் மிக்க இயமனின் உயிர்கெடுமாறு உதைத்தருளிய சிவபிரான் உறையும் பதி


திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே. 1.20.7
THILAGAM ITHU ENA ULA KUKAL PUGALTHARU POLIL ANI THIRU MILAI YEA

This world people are glorified this place is prime one and then plantations are covered place is thiru veeli melalai
உலகமக்கள் திலகம் எனப் புகழ்வதும் பொழில்கள் சூழ்வதுமான திருவீழிமிழலை ஆகும்


அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது
ARAN URAI THARU KAYI LAIYAI NILAI KULAI VATHU SEITHA THASA MUGA NATHU

Lard Siva who is dwelling the kaiyilai hills are shattered form and on seeing it by lard Siva and then that ravana’s ten heads
சிவபிரான் எழுந்தருளிய கயிலை மலையை நிலைகுலையச் செய்து அதனைப் பார்த்த பத்துத் தலைகளை உடைய இராவணனுடைய


கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்
KARA MIRU PATHU NERI THARA VIRAL NIRU VIYA KALAL ADI UDAI YAVAN

And twenty shoulders are smashed form lard Siva stamped him with his thumb leg finger and that brave anklets are adorned on the feet and that form of lard He is
இருபது கரங்களும் நெரியுமாறு தன்கால் விரலை ஊன்றிய வீரக்கழல் அணிந்த திருவடிகளை உடையவரும்


வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய
VARAN MURAI ULA KAVAI THARU MALAR VALAR MARAI YAVAN VALI VALU VIYA

And as per the past deeds this world living beings are created that bharama who has seated on the lotus flower
வரன் முறையால் உலகைப் படைத்தும் பூவின் நாயகனான பிரம்மன் வழி வழியாதல்


சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே. 1.20.8
SIRA MATHU KODU PALI THIRI THARU SIVAN URAI PATHI THIRU MILALAI YEA

And that bharma has once possessed the five heads and then to smash his ego so as to nip with nail one head and then used it as begging bowel by lard Siva and whose residential place is thiru veeli melalai
ஐந்தாய் இருந்த அவன் சிரங்களில் ஒன்றைக் கிள்ளி எடுத்து அதன் கண் பலியேற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் பதி திருவீழிமிழலை ஆகும்

அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட ஒழியவொர் AYAN NODUM ELIL AMAR MALAR MAGAL MAGIL KANAN ALA VIDAL OLIYA OOR
Bharma and thirumal and that two are afraid form standing there
நான்முகன் அழகிய மலர்மகள் செல்வனாகிய கண்ணணும் அளவிட முடியாது அஞ்சி நிற்க


பயமுறு வகைதழல் நிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
PAYA MURU VAGAI THALAL NIGAL VA THOR PADI YURU VATHU VARA VARAN MURAI

And in between them lard Siva appeared in fire pole form and then that two are respectively
ஒரு ஜோதிப் பிழம்பாய்த் தோன்ற அவ்விருவரும் முறையாக


சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
SAYA SAYA ENA MIGU THUTHI SEIYA VELI YURU VIYA AVAN URAI PATHI

Prayed and then praised lard Siva in Jaya Jaya wards are uttered form ant that lard Siva go beyond the universe and then his residential place is
ஜய ஜய எனப் போற்றி துதி செய்யுமாறு அண்டங்களைக் கடந்த அச்சிவபிரான் உறையும் பதி


செயநில வியமதில் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே. 1.20.9
SEYA NILA VIYA MATHIL MATHI YATHU THA VALTHARA UYAR THIRU MILALAI YEA

Where the winning force filled the protection wall are covered form moon crawling place is thiru veeli melalai place
வெற்றி விளங்கும் மதில்களில் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்து தோன்றும் திருவீழிமிழலை ஆகும்


இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர்
IKAL ORU VODU PARI THALAI KODU ME ILI THOLIL MALE SAMAN VIRA KINAR

Others are cursed form of appearance possessed and head hair is plucked and then thrown it away and that baled head form appearing samanaas and vices filled activities are doing that samanaas who are vengeance filled persons
பிறரால் இகழப்பட்ட உருவோடும் உரோமங்களைப் பறித் தெடுத்தவார் முண்டிதமான தலையோடும் இழிதொழில் மிகுதியாகப் புரியும் சமணர்கள் தந்திர சாலிகள்


திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடஅடி யவர்மிக அருளிய
THIKAL THUVAR UDAI UDAL POTHI PAVAR KEDA ADIAYAVAR MIGA ARULIYA

And buthaas who has adorned the saffron tainted the dress and the covered the body with that dress who are perished form where lard Siva blessed his disciples
விளங்கும் மருதத்துவராடையை உடலில் போர்த்துத் திரியும் சாக்கியர்களும் அழிந்து ஒழியத் தன் அடியவர்களுக்கு மிகவும் அருள் புரிபவனும்


புகழுடை யிறையுறை பதிபுன லணிகடல் புடைதழு வியபுவி
PUGAL UDI IRAI URAI PATHI PAVARKEDAADIYAVAR MIGA ARULIYA

And that glory filled form of lard Siva’s dwelling place where the water bodies filled form and then sea covered form appearing place is thiru veeli melalai temple place
புகழாளனுமாகிய இறைவன் உறையும் பதி நீர்வளம் மிக்கதும் கடலால் சூழப்பட்டதும் ஆகிய இவ் வுலகில் விளங்கும்


திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திருமிழலையே. 1.20.10
THIKAL SURAR THARU NIGAR KODAI YINAR SERI VODU THIKALTHIRU MILALAI YEA

Where the upper world devaass and karpaga tree like philonthorapits are filled place is thiru veeli melalai temple place
சுரர்(வானவர்) தருவாகிய கற்பகம் போன்ற கொடையாளர்கள் மிக்கு விளங்குவதுமாகிய திருவீழிமிழலை ஆகும்


சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
SINA MALI KARI URI SEITHA SIVAN URAI THIRU THIRU MILALAI YEA MIGU

With ferocious angry filled form of elephant is pealed and then its skin is adorned as upper dress by lard Siva that place where lard Siva descended is thiruveeli melalai which is wealth filled persons are living place
சின வேகத்தோடு வந்த யானையை உரித்துப் போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையை மிக்க செல்வங்களால்


தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
THANA MANAR SIRA PURA NAGAR IRAI THAMILVIRA KANA THU URAI ORU PATHUM

And that happily living persons where thiru gaanasambanther who has sung the above Tamil poems are number ten
நிறைந்த மனமகிழ் உடையவர்கள் வாழும் சிவபுர நாதரின் மன்னும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தர் உரைத்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும்


மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
MANA MAGILVODU PAYIL PAVAR ELIL MALAR MAKAL KALAI MAKAL SAYA MAKAL

And those disciples who are happily memorize it and those persons are blessed by Lakshmi wealth god and knowledge god saraswathi and power god parwathi and in addition
மன மகிழ்வோடு பயில்பவர் எழில் மலர் மகள் கலைமகள் சயமகள் மான மகிழ்வோடு பயில்பவர் அழகிய திருமகள் கலைமகள் சயமகள்


இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே. 1.20.11
INA MALI PUGAL MAKAL ISAI THARA IRU NILAN IDAI INITHU AMAR VAREA

The glory filled form goodness all are clubbed form happily living here
இவர்க்கு இனமான புகழ் மகள் ஆகியோர் தம்பால் பொருந்த பெரிய இவ் உலகின் கண் இனிதாக வாழ்வர்
om thiruchitrambalam
திருச்சிற்றம்பலம்.


இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே. 1.20.11
INA MALI PUGAL MAKAL ISAI THARA IRU NILAN IDAI INITHU AMAR VAREA

The glory filled form goodness all are clubbed form happily living here
இவர்க்கு இனமான புகழ் மகள் ஆகியோர் தம்பால் பொருந்த பெரிய இவ் உலகின் கண் இனிதாக வாழ்வர்
om thiruchitrambalam
திருச்சிற்றம்பலம்.

June 25, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: