OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU AAVOOR PASUBATHEECHARAM

ganesheit June 18, 2019

1.008 திருஆவூர்ப்பசுபதீச்சரம்
THIRU AAVOOR PASUBATHEECHARAM


Om chitrambalam
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்


Gana sambanther after prayed in the thiru poovaanoor temple place and then entered in to the good old temple place is aavoor where the Siva disciples are raising the praising sounds. The lard Siva’s name is pasubatheeswarer where he prayed and then sang the following songs. Aavoor situated in the southern side of Cauvery and the temple name is pasu batheecharam where inthira and sabtha saints and cows prayed here
திருப்பூவனூர் சென்று வணங்கிய திருஞானசம்பந்தர் சிவனடியார் பலர் ஏத்தொலி எழுப்ப மிகப் பழம் பதியாகிய ஆவுரை அடைந்தார். பசுபதீச்சரத்தை வணங்கி இப்பதிகத்தை அருளிச் செய்தார் ஆவூர் காவிரி தென்கரைத் தலம் திருக்கோயில் பெயர் பசுபதீச்சரம் இந்திரன் சப்தரிஷிகள் பசுக்கள் பூசித்தது.


புண்ணியர் பூதியர் பூதநாதர்
புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
PUNNIYAR BOOTHIYAR BOOTHA NAADHAR PUDAI PADU VAAR THAM MANATHAR THINGAL

LARD Siva who is love filed person and punniya form of appearance possessed person and wealth filled person and then demon forces leader and those disciples who are go nearby and praised and prayed him
அன்புடைய அடியவர் புண்ணியம் திரண்டனைய வடிவினர் என்றும் நிறைந்த செல்வம் உடையவர் எனவும் பூதகனங்களின் தலைவர் எனவும் அருகில் வந்து பரவுவாரின்


கண்ணிய ரென்றென்று காதலாளர்
கைதொழு தேத்த இருந்தவூராம்
KANNIYAR ENTRU EANDRUM KAADHALAR KAI THOLUTHU EAATHTHA IRUNTHA OORAAM

Whose mind he is dwelling and curved moon adorned on his hair and prayed with folded hands that place where lard Siva descended place is
மனத்தார் எனவும் பிறைமதிக் கன்னியர் எனவும் கை தொழுது போற்றச் சிவபிரான் எழுதருளிய ஊர் ஆகிய


விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
VIN NUYAR MAALIKAI MAADA VEEITHI VIRAI KAMAL SOLLAI SULAAVI EANGUM

Where up to the sky level raised mansions are filled place and fragrance filled the flower plantations are covered place is
வானளாவ உயர்ந்த மாட மளிகைகளோடு கூடியதும் மனம் கமழும் சோலைகளால் சுழப்பெற்றதும் எங்கும்


பண்ணியல் பாட லறாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.1
PANNIYAL PAADAL ARAATHA AAVOOR PASUPATHEE CHCHARAM PAADU NAAVEEA

And everywhere the Musial notes filled form of songs are singing without any interruption all the time singing form that place is pasubatheecharam temple and my dear tongue you pray and praise him
பண்ணியலோடு கூடிய பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதும் ஆகிய ஆவூர்பசுபதீச்சரத்தை நாவே தொழுது பாடுவாயாக


முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
MUTHTHIYAR MUUPPILAR AAPPIN ULLAR MUKKANAR THAKKAN RAN VEELVI SAADUM

Lard Siva who has possessed the mukthi wealth which is given to his disciples and then his father in law who has conducted yaaga fire to disregard lard Siva
அடியார்கள் முக்திச் செல்வத்தை உடையவர் என்றும் தம்மை இகழ்ந்து செய்த தக்கன் வேள்வியை


அத்திய ரென்றென் றடியரேத்தும்
ஐயன் அணங்கொ டிருந்தவூராம்
ATHTHIYAR ENT RENDRU ADIYAR EAATHTHUM IYAN ANAGKODU IRUNTHA OORAAM

Which is destroyed by him and all the time praised form praying lard Siva who has descended with lardess parvathi and that hamlet place is
அழித்தவர் என்றும் போற்றித் துதிக்கும் தலைவராகிய சிவபிரான் உமையமையோடு எழுந்தருளிய ஊராகிய


தொத்திய லும்பொழில் மாடுவண்டு
துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற்
THOTHU IYALUM POLIL MAADU VANDU THUTHANTHU ENGUM THUU MATHU PAAYAK KOYIL

In the flower garden place the flowers are bloomed in the bunch form of and in those flowers honey bees are dipped in the honey so that honey droplets are spillover every where
சோலைகளில் கொத்தாக மலர்ந்த பூக்களில் வண்டுகள் தோய்தலால் எங்கும் தூய தேன் துளிகள் பாய்வதும்


பத்திமைப் பாடல றாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.2
PATHIMAI PAADAL ARAA THA AAYOOR PASUPATHEE CHCHARAM PAADU NAAVEEA

In the temple place devotion filled disciples are all the time singing devotional songs which is heard by all in the aavoor pasubatheecharm temple place and in that temple you may pray and then sang his devotional filled songs
கோயில் பக்தி பூண்ட அடியார் பாடும்பாடல் இடைவிடாது கேட்பது மாகிய ஆவூர்பசுபதீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக

.
பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார்
போம்வழி வந்திழி வேற்றமானார்
PONGI VARUM PUNAL SENNI VITHAAR POM VALI VANTHU ILIYU ETRAM AANAR

The angry filled form of Ganges is kept by lard Siva on his hair and every birth because of our miss deeds we are going down graded position and also with good deeds we are getting upper position
சினந்து வந்த கங்கையைத் தம் திருமுடியின் மேல் வைத்தவரும் பிரவிபோதற்கு உரிய பிறப்பான மனிதப் பிறவி எடுத்து இழிவடைதற்கும் ஏற்றம் பெறுதற்கும்.


இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
இறையவ ரென்றுமி ருந்தவூராம்
IYANGU YUYAR GAANATHTHAR VAANOOR EAATHTHUM EARAIYAVAR ENTRUM IRUNTHU OORAAM

Because of previous good deeds some people got elevated place and then some others are got the sivagaanam so as to get mukthi and the deevaas are prayed form of lard Siva descended temple place it is
உரிய மக்களும் அவருள் இப்பிறப்பில் உயர்தர்கரிய சிவஞானத்தைப் பெற்றோரும் வானவரும் துதிக்கக் சிவபிரான் எழுந்தருளிய ஊர்


தெங்குயர் சோலைசே ராலைசாலி
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
THENG UYAR SOLAI SEER AALAI SAALI THILAIKUM VALAI VAYAL SERUM POIGAI

The coco nut grows are grown in high raised form and sugar cane industry and red color paddy well grow form of appearing fields and natural water bodies are filled place
உயரமாக வளர்ந்த தென்னஞ் சோலைகளும் கரும்பாலைகளும் செந்நெற்பயிர்களும் திளைத்து விளைவு தரும் வயல்களை உடையதும் பொய்கைகள் சூழ்ந்ததும்


பங்கய மங்கை விரும்பும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.3
PANGAYA MANGAI VIRUMPUM AAYOOR PASUPATHEE CHCHARAM PAADU NAAVEEA

The wealth god liked this pasubatheecharam temple place so my dear tongue you may pray and praise him with prayer songs
திருமகள் விரும்புவதுமாகிய வளம் சான்ற ஆவூர்பசுபதீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக.


தேவியோர் கூறின ரேறதேறுஞ்
செலவினர் நல்குர வென்னைநீக்கும்
DEVI YOOR KUURINAR EERA THEERUM SELAVINAR NALGURAYU ENNAI NEEKKUM

Lard Siva who has taken lardess yumaadevi in his left part of his body, and then ascended on the back of the bull, I am preserved not to effect of poverty and that form of lard is sole form to me and grace filled person
உமாதேவியை ஒருபாதியாக உடையவன் இடப வாகனத்தை ஏறிவருபவர் வறுமை புகாதவாறு என்னைக் காப்பவர் எனக்கு உயிர் போன்றவர் கருணையர்.


ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
AAVIYAR ANTHANAR ALLAALTHEERKUM APPANAAR ANGEA AMARNTHA OORAAM

Lard Siva who is removing my sorrows so he is my father and whose descended temple hamlet place is
என்துயர் போக்குதலால் எனக்குத் தந்தையாக விளங்குபவன் அவர் எழுந்தருளிய ஊர்


பூவிய லும்பொழில் வாசம்வீசப்
புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
BOO VIYALUM POLIL VAASAM VEESA PURI KULA LLAR SUVADU ONTRI MUTRA

The fragrance spread over everywhere that flower garden surrender where the curling form of hair possessed ladies are dancing and beating the ground in the land by leg fingers as per the musical notes form and that form of temple place it is
பூக்கள் நிறைந்த பொழில்களின் வாசனை வீசுவதும் சுருண்ட கூந்தலை உடைய மகளிர் காலாலே தாளமிட்டு ஆடித் தேர்ந்த


பாவியல் பாடல றாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.4
PAA VIYAL PADAL ARATHA AAVOOR PASUPATHEE CHCHARAM PAADU NAAVEEA

That musical note filled form of singing devotional songs without any interruption that temple place is aavoor pasubatheecharam temple place and my dear tongue you may pray and praise him and then sang the prayer songs
இசையோடு பாடும் பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதுமான ஆவூர்பசுபதீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக.


இந்தணை யுஞ்சடை யார்விடையார்
இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
INTH ANAIYUM SADAIYAAR VIDAIYAAR IP PIRAPU ENNAI ARUKKA VALLAAR

The moon dwelling hair possessed lard Siva and the bull chariot used to travel everywhere and that form of lard Siva who will remove my miss deeds in this life and then ultimately give me mukthi and that mighty powerful lard Siva

திங்கள் தங்கும் சடையினாரும் விடையை ஊர்தியாக உடையவரும் எனைப் பற்றிய இப்பிறவியின் வினையை நீக்கி முக்தி அளிக்க வள்ளவரும்.


வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்
மன்னினர் மன்னி யிருந்தவூராம்
VANTHU ANAINTHU INN ISAI PAADU VAAR PAAL MANI NAR MANNI IRUNTHA OORAAM

Those disciples who are approached lard Siva and then sang the good musical notes filled form and then pray lard Siva and those persons mind lard Siva dwelling in embedded form where lard Siva permanently stayed temple place it is
தம்மை வந்து அடைந்து இன்னிசையால் பாடி வழிபடுவாரிடம் மன்னி இருப்பவரும் ஆகிய சிவபிரான் நிலை பெற்று விளங்கும் ஊர்


கொந்தணை யுங்குழ லார்விழவிற்
கூட்ட மிடையிடை சேரும்வீதிப்
KONDTHU ANAIYUM KULAAR VILA VIL KUUTTAM IDAI IDAI SEEARUM VEETHI

The flower bunches are adorned on the hair of ladies who are happily living this place and in the festival times people groups are in between clubbed form moving in that broad streets are possessed place it is
பூக்கொத்து அணிந்த கூந்தலை உடைய மங்கைகள் மகளிர் வாழ்வதும் திருவிழாக்களில் மக்கள் கூட்டம் இடையிடையே சேரும் அகன்ற வீதிகளை உடையதும்.


பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.5
PAN DHANAIYUM VIRA LAAR THAM AAVOOR PASUPATHEE CHCHARAM PAADU NAAVEEA

பந்தாடும் கைவீரல்களினாராகிய இளம் பெண்கள் நிறைந்ததுமாகிய ஆவூர்பசுபதீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக.


குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
KUTRAM ARUTH THAR KUNATHIN ULLAR KUMPIDU VAAR THAMAKU ANBU SEIVAAR

The disciples sins are removed by him and those who are good character possessed persons in their mind place dwelling lard Siva and then those who are prayed him he showers love towards them
அடியார் செய்யும் குற்றங்களை நீக்கியவரும் நற்குணங்களை உடையோரிடம் வாழ்பவரும் தம்மை கும்பிடுவார்க்கு அன்பு செய்பவரும்


ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
உறைபதி யாகுஞ் செறிகொள்மாடம்
OTRAI VIDAI YINAR NETRI KKANNAAR URAI PATHI YAAKUM SERI KOL MAADAM

The single bull is used as chariot to travel everywhere and other do not possessed that fore head eye possessed that form of lard Siva and whose dwelling place it is
ஓர் எருதை தமக்கு ஊர்த்தியர்கள் கொண்டவரும் பிறர்க்கு இல்லாத நெற்றிக் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி


சுற்றிய வாசலின் மாதர்விழாச்
சொற்கவி பாடநி தானம்நல்கப்
SUTRIYA VAASALIN MADHAR VILAA SORKAVI PADA NITHAANA NALKA

The thick forms of houses built in those rich place while at festival times those ladies who are glorify that rich people by songs and then get reward for that songs the golden coins
செறிந்த மாடவீதிகள் சார்ந்துள்ள வாசலில் விழாக்காலத்தில் பெண்கள் புகழ்ந்து கவி பாடக் கேட்டு அவ்வீடுகளில் வாழும் செல்வர்கள் பொற்காசுகள் வழங்க


பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.6
PATIYA KAI YINAR VAALUM AARVUR PASUPATHEE CHCHARAM PAADUM NAAVEA

Those coins are happily received by ladies in that aavoor pasupatheecharam temple place my dear tongue you may happily pray and praise him with prayer songs
அதனைப் பற்றிய கையினராய் மகளிர் மகிழ்ந்துறையும் ஆவூர்பசுபதீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக.


நீறுடை யார்நெடு மால்வணங்கும்
நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
NEERUDAI YAAR NEDU MAALVANANGU NIMIR SADAIYAAR NINAI VAAR THAM ULLAM

Lard Siva who has adorned the sacred ashes all over the body and he is prayed by sub lard Siva and he has tied his long hair in crown form and those who are think over him in their mind he is dwelling forever
திரு நீற்றை அணிந்தவரும் திருமாலால் வணங்கப் பெறுபவரும் நிமிர்த்துக் கட்டிய சடைமுடி உடையவரும் தம்மை நினைவார் உள்ளத்தில் குடிகொண்டு இருப்பவரும்


கூறுடை யாருடை கோவணத்தார்
குவலய மேத்தஇ ருந்தவூராம்
KUURUDAI YAAR UDAI KOVANA THTHAR KUVALAYAM EAATHTHA IRUNTHA OORAAM

The loin cloths are tied on the waist place that lard Siva descended in this place so as to praise by this world people
கோவண ஆடை தரித்தவரும் ஆகிய சிவபிரான் மண்ணுலக மக்கள் தம்மைப் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய ஊர்


தாறுடை வாழையிற் கூழைமந்தி
தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
THAARUDAI VAALAYIL KUULAI MANTHI THAKU KANI YUNDU MEN DITU INATHTHAI

The short body possessed monkeys are ate the ripped bananas in the plant to fill the stomach and the remaining fruits are tried to eat those other monkeys are chased away
குள்ளமான மந்தி பழுத்துள்ள வாழைத்தாற்றில் உண்ணத் தகுதியான பழங்களை வயிறார உண்டு எஞ்சி உள்ள பழங்களை உண்ணவரும் குரங்குகளை அஞ்சுமாறு


பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.
PAARI DAP PAAINTHU PAYILUM AAVOOR PASUPATHEE CHCHARAM PAADUM NAAVEA

And that jumped and leaf forward way chased away that plantations are covered place is aavoor pasubatheecharam temple place and that place my dear tongue you may pray and praise with devotional songs
பாய்ந்து விரட்டும் தோட்டங்களை உடைய ஆவூர்பசுபதீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக.


வெண்டலை மாலை விரவிப்பூண்ட
மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
VEN THALAI MAALAI VIRAVIP POONDA MEI YUDAI YAAR VIRAL AAR ARAKKAN

The white skulls are adorned as garland form in the neck that lard Siva and then the bees are going round about that flower garland adorned Ravana
வெண்மையான தலைகளை மாலையாகக் கோத்துப் பிற மாலைகளுடன் அணிந்துள்ள திருமேனியை உடையவரும் வண்டுகள் ,மொய்க்கும் மலர்களைச் சூடிய இராவணன்


வண்டமர் பூமுடி செற்றுகந்த
மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
VAN DAMAR PUU MUDI SETR UKANTHA MAINTHAR IDAM VALAM OONGI ENGUM

And that ravana’s head is smashed under the kailai hills and got happy for that act and those form of lard Siva who has descended place it is and fertile place it is
முடியை நெரித்து மகிழ்ந்த வலியவரும் ஆகிய சிவபெருமான் எளிந்தருளி உள்ள இடம் எங்கும் வளம் ஓங்கியதும்


கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்
கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
KAN DAVAR SINTHAIK KARUTH THIN MIKKAR KATHI YARUM ENTRU KAI YAARAK KUUPPI

Where those disciples who are prayed here in elevated mind possessed people and request before him the mukthi in folded hands form
தரிசித்தவர்கள் சித்தத்தால் உயர்ந்தவர்களாகிய தமக்குள் கதியருள் என்று கைகளைக் கூப்பி


பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.8
PANDALAR KONDU PAYILUM AARVUR PASUPATHEE CHCHARAM PAADUM NAVEEA

From good old days under lard Siva’s feet flowers are adorned and sprayed form of praying in that mannerism filled place is aavoor pasubatheecharm temple where my dear tongue you may pray and then praise lard Siva with prayer songs
பழமையை தொட்டு சிவபெருமானுக்கு உரியனவாகிய மலர்களைச் சாற்றி வழிபடும் இயல்பினதும் ஆகிய ஆவூர்பசுபதீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக.


மாலும் அயனும் வணங்கிநேட
மற்றவ ருக்கெரி யாகிநீண்ட


MAALUM AYANUM VANAGI NEADA MATR AVARUKU ERI YAAKI NEENDA

திருமாலும் பிரமனும் வணங்கித் தேட அவர்களுக்குக் ஜோதிப் பிழம்பாய் நீண்டு தோன்றிய


சீலம் அறிவரி தாகிநின்ற
செம்மையி னாரவர் சேருமூராம்
SEELAM ARI VARI THAAKI NINDRA SEM MAI YINAAR AVAR SERUM OORAAM

That rare place where lard Siva descended that place it is
அறிதற்கு அரியராய் விளங்கும் செம்மையராகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர்


கோல விழாவி னரங்கதேறிக்
கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
KOLA VILAAVIN ARANGATHU EAARIK KODI IDAI MADHARKAL MAINTHA ROODUM

The lovely festival time the lean creeper like waists are possessed ladies who are climbed with their husband in the temple elevated place

அழகிய விழாக் காலங்களில் கொடியிடைப் பெண்கள் அரங்கின் கண் ஏறி ஆடவார்களோடு கூடிப்


பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.9
PAAL ENA VE MOLINTHU EAATHTHUM AARVUR PASUPATHEE CHCHARAM PAADUM NAAVEEA

The milk form of soft and good wards used to pray lard Siva in this aavoor pasubatheechrm temple place my dear tongue you may pray and praise him with prayer songs
பால்போன்று இனிக்கும் மொழிகளால் இறைவனை ஏத்தும் ஆவூர்பசுபதீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக


பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
PINNIYA THAAL SADAI YAAR PITHATRUM PETHAIYA RAAM SAMAN SAAKIYARKAL

Lard Siva who has well tied hair possessed and then the ignorance filled samanaas and sakkiyaas are cursed him
பின்னித் தொங்க விடப்பட்ட சடையை உடையவராய் அறிவின்மையோடு சமணர்கள் சாக்கியர்கள் ஆகியோர்


தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்
சைவ ரிடந்தள வேறுசோலைத்
THANI YALUM URAI KOLLA KILLA SAIVAR IDANTH ALA VEERU SOLLAI

That above religious persons are unable to say their religious philosophy where lard Siva willingly descended place it is
தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்த மதங்களின் சிறப்புகளைப் பற்றிக் கூற அவற்றை ஏலாதவராய் விளங்கும் சிவன் விரும்பி உறையும் இடம்


துன்னிய மாதரும் மைந்தர் தாமுஞ்
சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
THUNNIYA MAA DHARUM MAINTHAR THAAMUM SUNAI YIDAI MUULKITH THODARNTHA SINTHAI

The mullai creeper plant spread over in that flower garden where the ladies and the gents are taking bath in the nearby ponds
முல்லைக் கொடி படர்ந்த சோலைகளில் மாதரும் மைந்தரும் நெருங்கிச் சுனையில் முழ்கிக்


பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.10
PANIYA PADAL PAYILUM AAVOOR PASUPATHEE CHCHARAM PAADUM NAVEEA

In that temple place where with oneness of mind singing the prayer songs before the aavoor pasupatheecharam temple place my dear tongue you may pray and then praise him
சிவபிரானை மனம் ஒன்றிப் பாடும் ஆவூர்பசுபதீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக.


எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும்
எம்பெரு மானை யெழில்கொளாவூர்ப்
ENTHISAI YAARUM VANGIKI EAATHUM EM PERUMAANAI ELIL KOL AAVOORP

The eight direction living people are prayed and praised him lard Siva who is my leader in that lovely aavoor temple place
எட்டு திசைகளை உள்ளவர்களும் வணங்கிப் போற்றும் எம் தலைவரும் அழகிய ஆவூரில்


பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்
PANDURI YAAR SILAR THONDAR POTRUM PASU PATHI ECHCHARATHU AADHI THAN MEEAL

In that way so many disciples are pray and praised lard Siva on him
பல அடியார்கள் போற்றப் பெறுபவரும் ஆகிய பசுபதியிச் சரத்து இறைவன் மேல்


கண்டல்கண் மிண்டிய கானற்காழிக்
கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
KANDAL KAN MINDIYA KAANAAL KAALIL KAYUNIYAN GAANASAMPANDHAN SONNA

The thallai trees are filled the sea side plantations are covered place is seergaali where gowniyer sect descended thiru gana sambather who has sung the above poems
தாழை மரங்கள் நிறைந்த கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய பாடல்கள்


கொண்டினி தாவிசை பாடியாடிக்
கூடு மவர்உடை யார்கள்வானே. 1.8.11
KONDINI THAAI ISAI PAADI AADIK KUUDU MAVAR UDAI YARKAL VAANEA

Those above poems are sang with the musical notes are filled form and then dances accordingly and then those people will ultimately enter in to the upper world and then acquire it as their asset
இசையை பாடி ஆடி வணங்குபவர்கள் வானகத்தைத் தமது உடைமையாக பெறுவார்


திருச்சிற்றம்பலம்
Om chitrambalam

June 18, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: