KEELAI THIRU KAATUPPALLI
5.கீழைத் திருக்காட்டுப்பள்ளி
KEELAI THIRU KAATUPPALLI
OM THIRU CHITRAMBALAM
பண் – நட்டபாடை
Gana sambanther prayed in the thiruven kaadu temple and other places and then entered in to seerkaali place. Afterwards he wanted to pray in the eastern place situated temples are named mayanthirappalli, kurugaaloor and other temple places. In the south east direction situated thiru kaatuppali, which is twelve kilometers away from seerkaali. Where he sang the following songs
It is Cauvery northern side temple and which is situated near thiru ven kaadu. Where Inthira and grab conducted poojaas
திருவெண்காடு முதலிய தலங்களை வணங்கி கொண்டு சீகாழியை வந்தடைந்த பிள்ளையார் கீழ் பாலுள்ள தலங்களாகிய மாயேந்திரப்பள்ளி குருகாலூர் முதலியவற்றையும் வணங்க திருவுள்ளம் கொண்டு எழுந்தருளிய பொழுது தென்கீழ்த் திசையில் உள்ள காழி நகருக்கு 12கி.மீ தொலைவில் உள்ள கீழைத் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து வணங்கினார்கள். வணங்கிய சுவாமிகள் “செய்யருகே” என்னும் இப்பதிகத்தை அருளி செய்கிறார்கள்.
காவிரி வடகரைத் தலம் திருவெண்காட்டுக்கு அருகில் உள்ளது.
இந்திரனால் பூசிக்கப் பெற்றது. நண்டு பூசித்த தலம்.
செய்யருகேபுனல்பாயஓங்கிச்
செங்கயல்பாயச்சிலமலர்த்தேன்
SEI YARUKEEA PUNAL PAAYA OONGKI
SENG KAYAL PAAYA SILA MALAR THEEN
So as to fishes are jumping in the flower ponds where honey spillover from the flowers
வயல்களில் தண்ணீர் பாய அதனால் களித்த செங்கயல் மீன்கள் துள்ள அதனால் சில மலர்களில் இருந்து தேன் சிந்துதலும்
கையருகேகனிவாழையீன்று
கானலெலாங்கமழ்காட்டுப்பள்ளிப்
KAIYARU KEEA KANI VAALAI EEINDRU
KAANAL ELLAAM KAMAL KATTUP PAALI
To touch with hand in that low place banana plant are yielded ripped fruits and the whole place honey fragrance and fruit fragrance filled place is Thirukattuppalli
கைக்கு எட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று முதிர்ந்ததாலும் காடெல்லாம் தேன் மணமும் வாழைப் பழ மணமும் கமழும் திருக்காட்டுப்பள்ளி
பையருகேயழல்வா யவைவாய்ப்
பாம்பணையான்பணைத்தோளிபாகம்
PAI YARUKEEA ALAL VAAY AVAIVAAI
PAAM PANAIYAAN PANAI THOZHI PAAKAM
In the poison filled five headed teeth possessed snack named Aaathi seadan which is used as pillow by Thirumal
நஞ்சுப்பையின் அருகே சுழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நஞ்சு பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட பெருமாளையும்
மெய்யருகேயுடையானையுள்கி
விண்டவரேறுவர்மேலுலகே.
MEI YARUKEEA YUDAI YAANAI YULKI
VINDAVAR EAARU VAR MEALYULAKEEA
Lard Siva who has carried lardess yummadevi in his left part of his body appeared in arta naari form and those disciples who are liked lard Siva and then given up all other desires and then they will ultimately attain upper world
உமையம்மையையும் தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு அரியர்த்தர் அர்த்தநாரீஸ்வரர் விளங்கும் இறைவன் மீது பற்று கொண்டு ஏனைய பற்றுகளை விட்டவர் வீட்டு உலகை அடைவார்.
46 திரைகளெல்லாமலருஞ்சுமந்து
செழுமணிமுத்தொடுபொன்வரன்றிக்
THIRAI KAL ELLAA MALARUM SUMANTHU
SELU MANI MUTH ODU PON VARANRIK
In the river Cauvery water which carries flowers and good ruby diamonds and pearls and gold
காவிரியில் வாய்க்கால்கள் எல்லா மலர்களையும் சுமந்தும் செழுமையான மணிகள்,முத்துகள்,பொன் ஆகியவற்றை வாரிக் கொண்டு வந்து
கரைகளெல்லாமணிசேர்ந்துரிஞ்சிக்
காவிரிகால்பொருகாட்டுப்பள்ளி
KARAIKAL ELLAAM ANI SEERNTHU YURINJI
KAVERI KAAL PORU KATTUP PALLI
On the two sides of the river banks water is touched form moving and fertility is given to fields that place is thirukattuppalli
இரு கரைகளிலும் அழகு பொருந்த உராய்ந்து வளம் சேர்க்கும் திருக்காட்டுப்பள்ளியுள்
உரைகளெல்லாமுணர்வெய்திநல்ல
உத்தமராயுயர்ந்தாருலகில்
URAI KAL ELLAM UNARVU EITHI NALLA UTHAMARAAI YUYARNTHAAR ULAGIL
From veethas and other religious matters are well learnt form if you do service to society then you will terminate your problems in life
வேதம் முதலான மேம்பட்ட உரைகள் யாவற்றையும் உணர்ந்த நல்ல உத்தமராய் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.
அரவமெல்லாமரையார்த்தசெல்வர்க்
காட்செயஅல்லல்அறுக்கலாமே.
ARAVAM ELLAM ARAI AARTHI THA SELVAR KUM AAT SEIYA ALLAL ARUK KALAAMEA
Lard Siva who has tied snakes on his waist as belt that rich person lard Siva to whom
பாம்புகள் இடையில் கட்டிய செல்வராய் எழுந்தருளி இருக்கும் சிவ பிரானுக்கு
47 தோலுடையான்வண்ணப்போர்வையினான்
சுண்ணவெண்ணீறுதுதைந்திலங்கு
THOOL UDAIYAAN VANNA PORVAI YINAAN
SUNNA VENNEERU THUTHAIN THILAGU
Lard Siva you have adorned tiger skin as lower dress and lovely elephant skin as upper dress are adorned and scared asheses adorned all over the body in paste form
புலித்தோலை ஆடையாக உடுத்தவன்,யானை தோலை அழகிய போர்வையாக போர்த்தவன் திருவெண்ணீராகிய சுண்ணத்தில் செறிந்து விளங்கும்
நூலுடையானிமையோர்பெருமான்
நுண்ணறிவால்வழிபாடுசெய்யுங்
NUUL YUDAI YAAN IMAI YOOR PERUMAAN
NUN ARI VAAL VALI PAADU SEIYUM
He has adorned three knotted thread on his bosom and he is deva’s leader and in deity form, disciples are praying
பூணூலை மார்பகத்தை உடையவன்,தேவர்கட்கு தலைவன், பதி ஞானத்தாலே அன்பர்கள் வழிபாடு செய்யும்
காலுடையான்கரிதாயகண்டன்
காதலிக்கப்படுங்காட்டுப்பள்ளி
KALUDAI YAAN KARITHU AAYA KANDAN KATHALIKKAP PADUM KAATUP PALLI
That scared feet possessed form existing in this world and dark color throat form existing in this world and then all the people are liking in Thirukattuppalli place
திருவடிகளை உடையவன்,கரிய கண்டத்தை உடையவன் பலராலும் விரும்பபெரும் திருக்காட்டுப்பள்ளியில்
மேலுடையானிமையாதமுக்கண்
மின்னிடையாளொடும்வேண்டினானே.
MELUDAI YAAN IMAIYATHA MUKKAN
MINIDAI YAAL ODUM VENDI NAANEEA
Lard Siva who has possessed three eyes in not winking form and then who is dwelling with lardess yumaadevi who has possessed lightning’s like waist
இமையாத மூன்றாவது கண்களை நெற்றியை உடைய அந்த இறைவன் மின்னல் போன்ற இடையினை உடைய உம்மையாம்மையோடு விரும்பி எழுந்தருளி உள்ளான்.
48 சலசலசந்தகிலோடும்உந்திச்
சந்தனமேகரைசார்த்தியெங்கும்
SALASALA SANTHU AAKIL OODUM YUNTHICH
SANTHANA ME KARAI SAAR THTHI EANGUM
With the water moving sound of sala sala form and in that water sandal wood and agil trees washed with the water and then placed on the banks of river
சலசல என்னும் ஒலிக் குறிப்போடு சந்தனம்,அகில் முதலியவற்றை அடித்து வந்து சந்தனத்தைக் கரையில் சேர்த்துப்
பலபலவாய்த்தலையார்த்துமண்டி
பாய்ந்திழிகாவிரிப்பாங்கரின்வாய்
PALA PALA VAITH THALAI AARTHTHU MANDI
PAAIYINTHU ILI KAAVERIP PAANNKARIN VAAI
And so many distributaries of River channel water is emotional filled way leap forward and then entered in to paddy fields in fertile form in south part
பற்பல வாய்கால்களில் தலைப்பில் ஆரவாரித்து ஓடிப் பாய்ந்து வயல்களில் இருந்து வளம் சேர்க்கும் காவிரியின் தென் பங்கரில்
கலகலநின்றதிருங்கழலான்
காதலிக்கப்படுங்காட்டுப்பள்ளிச்
KALA KALA NINDRU THIRUG KALALAAN KAADHALIKA PADUM KAATTUP PALLI
And with that sound sala sala viberation form and waves are emanating form entered in to thiru kattuppalli place and that place is liked by lard Siva
கலகல என்னும் ஓசையோடு அதிரும் அலைகளை அணிந்த இறைவனால் விரும்பப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து
சொலவலதொண்டர்களேத்தநின்ற
சூலம்வல்லான்கழல்சொல்லுவோமே.
SOLAVALA THONDAR KAL EAATHTHA NINDRA
SUULAM VAALLAN KALAL SOLU VOOMEA
இறைவனது பொருள்சேர் புகழ் பேசும் தொண்டர்களால் துதிக்கப்படும் அச்சூல பாணியின் திருவடி பெருமையை நாமும் கூறி தோத்தரிப்போம்
Lard Siva’s glory is propagated by his disciples and prayed him that lard Siva who is carried soolam battle force on his hand so we will also praise him
தளையவிழ்தண்ணிறநீலம்நெய்தல்
தாமரைசெங்கழுநீருமெல்லாங்
THALAI AVIL THAN NERA NEELAM NEITHAL
THAA MARAI SENKALU NEERUM ELLAAM
That bloomed form of cool blue color water flower named neelorpavam neithal lotus senkalluneer and all other flowers are plucked as weeds and throw it away by farmer ladies
கட்டவிழ்ந்த குளிர்ந்த நிறத்துடன் கூடிய நீலோற்பவம், நெய்தல்,தாமரை,செங்கழநீர் ஆகிய எல்லா மலர்களும்
களையவிழுங்குழலார்கடியக்
காதலிக்கப்படுங்காட்டுப்பள்ளித்
KALAI YA VILUM KULAAK KADIYA KAADHALIKKAP PADUM KAATTUP PALLI
That un tied form hair falling women who are plucked it and throw it away that wealth filled place of Thirukattupalli place is liked by all
அவிழ்ந்து விழும் கூந்தலை உடைய உழத்தியர் களைகளாய் பிடுங்கி எரியும் வளம் உடையனவும் பலராலும் விரும்ப படுவதும் ஆகிய திருகாட்டுபள்ளியில்
துளைபயிலுங்குழல்யாழ்முரல
துன்னியஇன்னிசையால்துதைந்த
THULAI PAYILUM KULAL YAAL MURALA
THUNNIYA INNISAI YAAL THUTHAINTHA
From the holes are filled flute instrument and yaal musical instrument without any interruption sounds are emanating
துளைகளால் ஓசை பயிலப் பெரும் புல்லாங்குழல், யாழ் ஆகிய இடைவிடாமல் ஒழிக்கும் இன்னிசை முழக்கோடு
அளைபயில்பாம்பரையார்த்தசெல்வர்க்
காட்செயஅல்லல்அறுக்கலாமே.
ALAI PAYIL PAMBU ARAI AARTH THA SELVAK KUM AAT SEYA ALLAL ARUKLAAMEA
From the sand holes not separated snakes which are tied as waist belt by lard Siva to whom if we serve under his feet we will get relief from our problems
வளையினின்றும் பிரியாத பாம்புகளை இடையிற் கட்டி எழுந்தருளிய செல்வர் ஆகிய பெருமானுக்கு ஆளாய் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்
50 முடிகையினாற்றொடும்மோட்டுழவர்
முன்கைத்தருக்கைக்கரும்பின்கட்டிக்
MUDI KAIYI NAAL THODUM MOTU YLAVAR
MUNKAITH THARUK KAIK KARUMPIN KATT
The paddy seedlings are plucked by farmers that mighty persons who are got thenayue (prickling) on their hands so as to remove it they broke the jagery with their hands
நாற்று முடியை கையில் பறிக்கும் வலிய உழவர்கள் தங்கள் முன்கைத் தினவை வெல்லக்கட்டியை உடைப்பதால் போக்கிக் கொள்கின்ற
கடிகையினாலெறிகாட்டுப்பள்ளி
காதல்செய்தான்கரிதாயகண்டன்
KADI KAIYI NAAL ERI KATTUPPALLI
KADHAL SEI THAAN KARITHU AAYA KANDAN
In the Thirukattupalli place willingly dwelling and that dark color throat possessed lard Siva
திருகாட்டுபள்ளியில் விரும்பி உறைபவனும் கரிதான கண்டம் உடையவனும்
பொடியணிமேனியினானையுள்கிப்
போதொடுநீர்சுமந்தேத்திமுன்னின்
PODI YANI MEENI YI NAANAI YULKI
POTHODU NEER SUMANTHU ETHTHI MUN NINDRU
Lard Siva who has adorned sacred ashes in paste form and we collect sacred water and flowers are collected and carried in hands and then pray before lard Siva
திருநீறு அணிந்த மேனியனும் ஆகிய பெருமனை நினைந்து அபிஷேக நீர் மலர்கள் ஆகியவற்றை எடுத்து சென்று துதித்து முன் நின்று
றடிகையினாற்றொழவல்லதொண்டர்
அருவினையைத்துரந்தாட்செய்வாரே.
ADIKAYI NAAL THOLA VALLA THONDAR
ARU VINAI YAITH THURATHU AAT SEI VAAREEA
Those disciples who are pray with folded hands under his feet and they are left out from bad deeds and then surrender under his feet and then serve him
அவன் கையினால் தொழ வல்ல தொண்டர் அருள்வினையைத் துரந்து ஆட்செய்வரே அவன் திருவடிகளை கையால் தொழ வல்ல தொண்டர்கள் நீக்குதற்கு அரிய வினைகளில் இருந்து நிங்கி அவ் இறைவனுக்கு ஆட்செய்வார்
51 பிறையுடையான்பெரியோர்கள்பெம்மான்
பெய்கழல்நாடொறும்பேணியேத்த
PIRAI YUDAI YAAN PERIYOR KAL PEM MAAN
PEI KALAL NAAL THORUM PEENI EAATHTHA
Lard Siva who has adorn moon on his head who is leader to elderly persons
தலையில் பிறையை அணிந்த வனும் பெரியோர்கள் தலைவனும்
மறையுடையான்மழுவாளுடையான்
வார்தருமால்கடல்நஞ்சமுண்ட
MARAI YUDAI YAAN MALU VAAL YUDAIYAAN VAAR THARU MAAL KADAL NANJAM YUNDA
Lard Siva who has blessed and then gave veethas to this world and carried malu weapon on his hands and long sea from it emanated dark color poison which is consumed so that his throat is converted into dark color
வேதங்கள் அருளியவனும் மழுவாகிய வாளை உடையவனும் நீண்ட கரிய கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்ட கரைக் கண்டனும்
கறையுடையான்கனலாடுகண்ணாற்
காமனைக்காய்ந்தவன்காட்டுப்பள்ளிக்
KARAI YUDAI YAAN KANAL AADU KANNAL
KAMANAIK KAAIN THAVAN KAATUP PALLI
With his fore head eye fire he has fired lust creating god kaaman
கனல் சேர்ந்த நூதல் விதியால் காமனை காய்ந்தவனும்
குறையுடையான்குறட்பூதச்செல்வன்
குரைகழலேகைகள்கூப்பினோமே.
KURAI UDAIYAAN KURAL BOOTHACH SELVAN KURAI KALALEEA KAI KAL KUUP PI NOOMEEA
Who has daily heard his disciples problems and he is leader to short demon forces whose sacred feet are daily prayed and praised by his disciples under his feet
அன்பர்களின் குறையை கேட்டு அறிபவனும் குறட்பூதச்செல்வனுமாகிய திருக்காட்டுபள்ளியில் உள்ள இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்த அத் திருவடிகளையே கை கூப்பினோம்
52 செற்றவர்தம்அரணம்மவற்றைச்
செவ்வழல்வாயெரியூட்டிநின்றுங்
SETRAVAR THAM ARANAM AVATRAI
SEV VALAL VAAI ERI YUUTI NINDRUM
Those three castle assures are defied the deevass and whose castles are destroyed by fire arrow and then stood there in brave form
தேவர்கட்கு பகைவராய் திரிபுரத்து அசுரர் தம் அரனங்களை செவ்வழலால் எரியூட்டி பெரு வீரத்தோடு நிற்கும்
கற்றவர்தாந்தொழுதேத்தநின்றான்
காதலிக்கப்படுங்காட்டுப்பள்ளி
KATRAVAR THAAM THOLUTHU ETHTHA NIND RAAN KAATHA LIKKAP PADUM KAATUPPALLI
The learned people are prayed and praised lard Siva that highly regarded form of existing in Thirukattuppalli place and we may enter there
கற்றவர் தொழுது ஏத்த மேம்பட்டு விளங்கும் இறைவனால் காதலிக்கப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து
உற்றவர்தாமுணர்வெய்திநல்ல
உம்பருள்ளார்தொழுதேத்தநின்ற
YUTRAVAR THAAM YUNARYU EITHI NALLA
UMBARULLAAR THOLUTHU ETHTHA NINDA
The devotion filled Deevass are prayed under his feet
மெய் உணர்வு பெற்ற தேவர்கள் பலரும் தொழுது ஏத்தும்
பெற்றமரும்பெருமானையல்லால்
பேசுவதும்மற்றோர்பேச்சிலோமே.
PETRAM AMRUM PERUMAANAI ALLAAL
PESUVATHU MATROR PECH CHILOOMEA
Lard Siva who has ascended on the back of bull whose glory only be talked and nobody else
விடை மீது ஏறி அமரும் அப்பெருமான் புகழால் மற்றோர் பேச்சை பேசுவது
53 ஒண்டுவரார்துகிலாடைமெய்போர்த்
துச்சிகொளாமையுண்டேயுரைக்குங்
ONDU VAR AAR THUGIL AADAI MEI PORTHTHU UCHI KOLLAAMAI YUNDEEA YURAI KUM
The saffron color dress is covered on the whole body that buthaas who are consumed food abundantly and always talked lies only
நிறம் பொருந்திய காவியாடையை மேனியில் போர்த்து உச்சி வேலையில் வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய்கூறும்
குண்டர்களோடரைக்கூறையில்லார்
கூறுவதாங்குணமல்லகண்டீர்
KUNDARKA LODU ARAI KUURAI ILLAR
KURUVA THAAM GUNAM ALLA KANDEER
That bulky buthaas and nacked samanaas whose wards are won’t give good benefits and you may realize it
உடல் பருத்த புத்தர் இடையில் உடையில்லாத திகம்பர சமணர் கூறுவது நற்பயனை தராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள்
அண்டமறையவன்மாலுங்காணா
ஆதியினானுறைகாட்டுப்பள்ளி
ANDA MARAI YAVAN MAALUM KAANNA
AATHIYI NAAN YURAI KAATUP PALLI
This world is created and preserved by Bharma and Thirumal who are not in a position to see head and feet of lard Siva whose Thirukattuppalli place we may enter
உலகைப் படைத்த வேதாச்சாரியான பிரமனும் மாலும் காணதா முதல்வன் உறையும் திருக்காட்டுபள்ளிக்கு சென்று
வண்டமரும்மலர்க்கொன்றைமாலை
வார்சடையான்கழல்வாழ்த்துவோமே.
VANDU AMARUM MALAR KONDRAI MAALAI
VAAR SADAIYAAN KALAL VAALTHTHU VOMEEA
The honey bees are seated konrai flower garland which is adorned by lard Siva on his head whose feet are praised and live in this world
வண்டு அமரும் மலர் கொன்றை புனைந்தவார் சடையோன் கழல்களை ஏத்தி வாழுவோம்
பொன்னியல்தாமரைநீலம்நெய்தல்
போதுகளாற்பொலிவெய்துபொய்கைக்
PONNIY IYAL THAA MARAI NEELAM NEITHAL
POOTHU KALAAL POLI VEITHU POIKAI
The wealth god dwelling lotus flower pond and neithal flowers so that attractive form of appearing in that pond
திருமகள் வாழும் தாமரை நிலம் நெய்தல் ஆகிய மலர்களால் பகலும் இரவும் பொலிவு எய்தும் பொய்கைகளில்
கன்னியர்தாங்குடைகாட்டுப்பள்ளிக்
காதலனைக்கடற்காழியர்கோன்
KANNIYAR THAAM KUDAI KAATUPPALLI
KAA DHALANAIK KADAL KAALIYAR KON
The spinsters are daily plunged in to the water and swim there in that Thirukattuppalli place lard Siva where Thiruganasambanther who is leader to sea covered seerkali place
கன்னிப்பெண்கள் குடைந்து ஆடும் திருக்காட்டுபள்ளியை விரும்பும் இறைவனை கடல் சூழ்ந்த காழிமாநகரத் தலைவனான ஞானசம்பந்தர்
துன்னியஇன்னிசையாற்றுதைந்து
சொல்லியஞானசம்பந்தன்நல்ல
THUNNIYA INN ISAI YAAL THUTHAINTHU
SOLLIYA GNANA SAMBHANTHAN NALLA
That appropriate musical notes are filled poems
பொருந்திய இன்னிசை கூட்டிச் சொன்னதும்
தன்னிசையாற்சொன்னமாலைபத்துந்
தாங்கவல்லார்புகழ்தாங்குவாரே.
THANN ISAIYAAL SONNA MAALAI PATHTHUM
THAANGA VALLAR PUGAL THAANGU VAAREEA
Those who are with their musical notes filled form singing the above ten poems and prayed lard with their mind they will get glory in this world
தானே தன் இசையால் பாடியும் ஆடியும் இத் திருப்பதிகப்பாடல்கள் மாலை பத்தையும் மனத்திடை தரிசிக்க வல்லவர் புகழ் எய்துவர்.
OM THIRUCHITRAMBALAM