THIRU NANI LATHU PERUM KOIL
98 திருநன்னிலத்துப்பெருங்கோயில்
THIRU NANI LATHU PERUM KOIL
OM THIRU CHITRAMBALAM
பண் – பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
Suntherer who has stayed in the thiruvaaroor place so many days and then started his journey and then entered into thiru Nan Nilam big temple place where prayed and then sang the following songs. In this decade lard Siva’s glory is elaborately explained
சுவாமிகள் திருவாரூரில் பல நாள் தங்கி இருந்து பின்பு புறப்பட்டு திரு நன்னிலத்துப் பெருங்கோயிலை அடைந்து பணிந்து பாடி அருளியது இறைவனது பெருமைகள் வகுத்து ஓதப்பட்டது இத்திருப்பதிகம்
995 தண்ணியல்வெம்மையினான்றலை யிற்கடைதோறும்பலி
THANNI YAL VEMMAI YINAN RALAI YIR KADAI THORUM PALI
The cool form of mannerism and hot form of body possessed who has approaching every door steps and then collected the begging food in to the skull and then wandering every where
தண்ணிய இயல்பினையும் வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன் வீட்டு வாயில் தோறும் சென்று தலையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிகின்ற
பண்ணியல்மென்மொழியார்இடக் கொண்டுழல்பண்டரங்கன்
PANNIYAL MEN MOLIYAR IDAK KON DULAL PAND ARANGAN
The soft musical notes are filled form of tastier wards are speaking where lard Siva dancing the pandarangam dance
பண் போலும் இயல்பினை உடைய இனிய மொழியை உடைய மகளிரிடம் பாண்டரங்கம் என்னும் கூத்தினை உடையவன்
புண்ணியநான்மறையோர்முறை யாலடிபோற்றிசைப்ப
PUNNIYA NAAN MARAIYOR MURAI YAALADI POT RISAIPPA
To do puniya so that four veethaas are well learnt anthanaas who are as per rule praised lard Siva’s feet and then conducted poojaas
புண்ணியத்தைச் செய்கின்ற நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள் முறைப்படி தன் திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடுகின்ற
நண்ணியநன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனே.
NANNIYA NAN NILATH THUP PERUN GOYIL NAYAN THAVANEEA
So many people are entered and prayed that temple place is thiru nanillam big temple where lard Siva descended willingly
பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமான்
996 வலங்கிளர்மாதவஞ்செய்மலை மங்கையோர்பங்கினனாய்ச்
VALANG KILAR MATHA VANJ SEI MALAI MANGAI YOR PANGINA NAICH
The successful penance is done by the rock spinster is given left part of his body
வெற்றி மிக்க பெரிய தவத்தைச் செய்த மலை மகளை ஒரு பாகத்தில் உடையவனாய்
சலங்கிளர்கங்கைதங்கச்சடை யொன்றிடையேதரித்தான்
SALAN GILAR KANGAI THANGACH SADAI YON RIDAI YE THARITH THAAN
The flooded form of Ganges is allowed to stay in his hair and then stopped there
வெள்ளம் மிகுந்த கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றிலே தங்கும் படி தடுத்து வைத்துள்ளான்
பலங்கிளர்பைம்பொழில்தண்பனி வெண்மதியைத்தடவ
PALAN GILAR PAIM POLIL THAN PANI VEN MATHI YAITH THADAVA
The wealth filled the lust green plantations are embraces by the crawling moon
பயன் மிகுந்த பசிய சோலைகள் குளிர்ந்த வெள்ளிய சந்திரனைத் தடவுதலால்
நலங்கிளர்நன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனே.
NALAN GILAR NAN NILATH THUP PERUN GOYIL NAYAN THAVANEEA
In that lovely place lard Siva descended which is thiru nannillam big temple
அழகு மிகுகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமான்
997 கச்சியனின்கருப்பூர்விருப் பன்கருதிக்கசிவார்
KACHI YANIN KARUPPUUR VIRUPPAN KARUTHIK KASIVAR
That lard Siva who has also descended in the kanchipuram temple place and then all the people are willingly liked the sugar cane in that form of liked lord Siva
கச்சிப் பதியில் எழுந்தருளி இருப்பவன் இனிய கரும்பின் கண் செல்லுகின்ற விருப்பம் போலும் விருப்பம் செலுத்துதற்கு இடமானவன்
உச்சியன்பிச்சையுண்ணியுல கங்களெல்லாமுடையான்
UCHIYAN PICHCHAI YUNNI YULA KALANGA LELLA MUDAI YAAN
Those disciples are melted form think over on those head place stayed there and collecting the begging food and all the worlds are under his control
தன்னை நினைந்து உருகுபவரது தலைமெல் இருப்பவன் பிச்சை ஏற்று உண்பவன் உலகங்கள் எல்லாவற்றையும் உடையவன்
நொச்சியம்பச்சிலையான்நுரை தீர்புனலாற்றொழுவார்
NOCH CHIYAM PACH CHILAI YAAN NURAI THEER PUNALAAR ROLUVAR
The nochi green leaves and without foam that pure water is used for prayer by those disciples
நொச்சியின் பச்சிலையும் நுரை இல்லாத தூய நீரும் கொண்டு வழிபடுவோர்
நச்சியநன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனே.
NACH CHIYA NAN NILATH THUP PERUK KOYIL NAYAN THA VANEEA
That good place is thiru nan nillam big temple where lard Siva willingly descended
விரும்புகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமான்
998 பாடியநான்மறையான்படு பல்பிணக்காடரங்கா
PADIYA NAAN MARAIYAAN PADU PAL PINAK KAADARANGA
Lard Siva who has composed and then sang the four veethaas and the dead man buried ground is used as his dancing stage
தன்னால் பாடப்பட்ட நான்கு வேதங்களை உடையவன் இறந்த பல பிணங்களை உடைய காடே அரங்கமாக
ஆடியமாநடத்தானடி போற்றியென்றன்பினராய்ச்
AADIYA MAA NADATH THAANADI POTRI YENRAN PINA RAAICH
In that way dancing the best dance and then whose sacred feet is praised and then in love form
ஆடுகின்ற சிறந்த நடனத்தை உடையவன் திருவடியை போற்றி மிக்க அன்புடையவராய்
சூடியசெங்கையினார்பல தோத்திரம்வாய்த்தசொல்லி
SOODIYA SEN GAIYINAAR PALA THOTH THIRAM VAAITH THA SOLLI
And then raised their hands above the head in that way so many people are chanted the prayer songs
தலைமேல் குவித்த கைகளை உடைய பலர் மிக்க அன்புடையவர்களாய் என்று பொருந்திய தோத்திரங்களைச் சொல்லி
நாடியநன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனே.
NAADIYA NAN NILATH THUP PERUN GOYIL NAYAN THAVANE
In that way approaching the thiru nanillam big temple willingly taken as his abode by lard Siva
அடைகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமான்
999 பிலந்தருவாயினொடுபெரி தும்வலிமிக்குடைய
PILAN THARU VAAYI NODU PERI THUM VALI MIK KUDAIYA
The big mouth possessed and mighty powerful that assura named
பிலம் போன்ற வாயையும் பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய
சலந்தரன்ஆகம்இருபிள வாக்கியசக்கரமுன்
SALAN THARAN AAGAM IRU PILA VAAK KIYA SAKKA RA MUN
That salanthaasura body is cut in to two and that circle force, once
சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை முன்பு
நிலந்தருமாமகள்கோன்நெடு மாற்கருள்செய்தபிரான்
NILANTHARU MA MAGAL KON NEDU MARK ARUL SEITHA PIRAAN
That thirumal who has engulfed this world and then spit it to whom that circle force is given by lard Siva
மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன்
நலந்தருநன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனே.
NALANTHARU NANNILATH THUP PERUN GOYIL NAYAN THAVANE
That good ness giving temple place is thirunanilam temple place where lard Siva descended
நன்மைகள் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமான்
1000 வெண்பொடிமேனியினான்கரு நீலமணிமிடற்றான்
VEN PODI MENYINAAN KARU NEELA MANI MIDATRAAN
Who has adorned the white ashes all over the body and the ruby diamond form of blue color throat possessed lard Siva
வெண் பொடியைப் பூசிய மேனியை உடையவன் நீல மணி போலும் கரிய கண்டத்தை உடையவன்
பெண்படிசெஞ்சடையான்பிர மன்சிரம்பீடழித்தான்
PEN PADI SEN SADAI YAAN PIRAMAN SIRAM PEED ALITHTHAAN
That lard Siva who has adorned the greatness filled the holly river named Ganges and that lard Who has cut of the head of sub lard bharma
கங்கையாகிய பெண் பொருந்தி உள்ள சடையை உடையவன் பிரம தேவனது தலையை பெருமை கெட அறுத்தவன்
பண்புடைநான்மறையோர்பயின் றேத்திப்பல்கால்வணங்கும்
PAN PUDAI NAAN MARAI YOR PAYIN RETH THUP PALGAAL VANAN GUM
The good qualities are filled Bharmins who are chanting the four veethaas in so many times and then conducted poojaas
நல்ல பண்பினை உடைய நான்கு வேதங்களை உணர்ந்தவர்களாகிய அந்தணர்கள் பல மந்திரங்களை நன்கு பயின்று பன்முறை துதித்து வணங்கும்
நண்புடைநன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனே.
NAN PUDAI NAN NILATH THUP PERUN GOYIL NAYAN THAVANE
In that intimate form of lard Siva who has descended in the thiru nanillam temple place willingly
நட்பாம் தன்மை உடைய திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமான்
1001 தொடைமலிகொன்றைதுன்றுஞ்சடை யன்சுடர் வெண் மழுவாட்
THODAI MALI KONRAI THUNRUJ SADAI YAN SUDAR VEN MALU VAAT
The garland form of konrai flower adorned on the hair of lard Siva and that lard Siva carried on his hand the rays are emanating malu battle force மாலையாக நிறைந்த கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவன் ஒளி வீசுகின்ற வெள்ளிய மழுவாகிய சூலம்
படைமலிகையன்மெய்யிற்பகட் டீருரிப்போர்வையினான்
PADAI MALI GAIYAAN MEIYIR PAKAT TEERURIP PORVAI YINAN
That battle force filled hand possessed lard Siva and on his body the pealed the elephant skin as upper dress
படைக்கலம் நிறைந்த கையை உடையவன் திருமேனியில் யானையினது உரித்த தோலாகிய போர்வையை உடையவன்
மடைமலிவண்கமலம்மலர் மேல்மடவன்னம்மன்னி
MADAI MALI VAN KAMALAM MALAR MEAL MADA VANNAM MANNI
The young anna birds are (where the water bodies are filled place of lotus flower ponds) walked on it and then after wards moved away
இளமையாக அன்னப் பறவைகள் நீர் மடைகளில் நிறைந்துள்ள வளவிய தாமரை மலர் மேல் தங்கிப் பின் அப்பால் சென்று
நடைமலிநன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனே.
NADAI MALI NAN NILATH THUP PERUNG KOYIL NAYAN THAVANE
And then walked on the land place is thiru nanillam big temple place where lard Siva descended happily
நடத்தல் நிறைந்த திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமான்
1002 குளிர்தருதிங்கள்கங்கைகுர வோடரக்கூவிளமும்
KULIR THARU THINGAL KANGAI KURA VODARAK KO VILA MUM
The cool form of moon the Ganges snakes kuraa flowers and then the villvam leaves
குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரன் கங்கை பாம்பு குராமலர் கூவிள இலை
மிளிர்தருபுன்சடைமேலுடை யான்விடையான்விரைசேர்
MILIR THARU PUN SADAI MELUDAI YAN VIDAIYAAN VIRAI SEER
All are adorned on his glittering hair place and the bull on its back all the moving
தனது ஒளி வீசுகின்ற புல்லிய சடையின் மேல் முதலிய இவை உடையவன் இடபத்தை ஊர்கின்றவன்
தளிர்தருகோங்குவேங்கைதடமாதவிசண்பகமும்
THALIR THRU KONGU VEENGAI THADA MAA THAVI SAN PAGAMUM
And then the fragrance filled leaves are filled the vengai tree and then the curved form of kurukkathi sanbagam and other flower trees are so many in number
நறுமணம் பொருந்திய தளிர்களைத் தருகின்ற வேங்கு வேங்கை வளைவை உடைய குருக்கத்தி சண்பகம் முதலிய பூ மர வகைகள் பலவும்
நளிர்தருநன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனே.
NALIR THARU NAN NILATH THUP PERUN GOYIL NAYAN THAVANE
In that cool emanating place is nanilam big temple where lard Siva willingly descended
குளிர்ச்சியைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமான்
1003 கமர்பயில்வெஞ்சுரத்துக்கடுங் கேழற்பின்கான வனாய்
KAMAR PAYIL VENJ SURATH THUK KADUNG KELAR PIN KANA VANAAI
The parched land is broken form of that wild the Desert area the hunter form chasing the big pig
நிலம் பிளப்புக்கள் மிகுந்த கொடிய கற்சுரத்தில் கொடிய பன்றியின் பின்னே வேடுவனாய்ச் சென்று
அமர்பயில்வெய்தியருச்சுன னுக்கருள்செய்தபிரான்
AMAR PAYIL VEI THIY ARUCHCHUNA NUK KARUL SEITHA PIRAAN
And then waged war with arjuna and then on seeing his brave fight lard Siva blessed him with the pasupatha battle force weapon in that leader form of lard Siva
அருச்சுனனோடு போரடுதலைப் பொருத்தி அவனுக்குத் திரு அருள் செய்த தலைவன்
தமர்பயில்தண்விழவில்தகு சைவர்தவத்தின்மிக்க
THAMAR PAYIL THAN VILAVIL THA KU SAIVAR THAVATH THIN MIKKA
And in this land people are conducting the festivals and this sivaa people living place and
உலகத்தவர் மிக்குள்ள நண்ணிய விழாக்களை உடைய தகுதி வாய்ந்த சைவர்களகிய தலத்தில் சிறந்த
நமர்பயில்நன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனே.
NAMAR PAYIL NAN NILATH THUP PERUN GOYIL NAYAN THAVANE
Our people are abundantly living in this Thiru nannilam place big temple and that place lard Siva descended
நம்மவர் மிக்கு வாழ்கின்ற திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமான்
1004 கருவரைபோலரக்கன்கயி லைம்மலைக்கீழ்க்கதற
KARU VARAI POL ARAK KAN KAYI LAIM MALAIK KEEL KATHARA
And the assura named ravana under the kailai hills the dark color hill form fallen and then cried of pain
அரக்கனாகிய இராவணன் கயிலாய மலையின் கீழ் கரிய மலை போலக் கிடந்து கதறும்படி
ஒருவிரலாலடர்த்தின்னருள் செய்தஉமாபதிதான்
ORU VIRA LAAL ADARTH THIN NARUL SEITHA UMAA PATHITHAAN
Lard Siva stamped him with his one leg finger and then on realizing his fault and then bless him with long life and weapon who is lardess yumadevi husband
ஒரு கால் விரலால் நெருக்கிப் பின் அவனுக்கு அருள் புரிந்த உமை கணவனும்
திரைபொருபொன்னிநன்னீர்த்துறை வன்றிகழ்செம்பியர்கோன்
THIRAI PORU PONNI NAN NEEIRTH THURAI VAN RIGAL SEMPIYAR KON
The waves are lashed the Cauvery river bed flowing with abundant water where chola king is ruling
அலை மோதுகின்ற காவிரி ஆற்றினது நல்ல நீர்த்துறையை உடையவனும் சோழர் கோமானும் ஆகிய அரசன்
நரபதிநன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனே.
NARA PATHI NAN NILATH THUP PERUN GOYIL NAYANTHAVANE
In that nanilam temple place where lard Siva willingly descended
செய்த திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமான்
1005 கோடுயர்வெங்களிற்றுத்திகழ் கோச்செங்கணான் செய் கோயில்
KOO DUYAR VENGALI TRUTH THIGAL KOCH SENGANAAN SEI KOYIL
The big horns are possessed that royal elephant on the back of it moving the king named kochangan
தந்தங்கள் உயர்ந்து காணப்படுகின்ற வெவ்விய யானையின் மேல் விளங்குகின்ற கோச்செங்கச் சோழனார் செய்த
நாடியநன்னிலத்துப்பெருங் கோயில்நயந்தவனைச்
NADIYA NAAN NILATHTHUP PERUNGOYIL NAYAN THAVANAICH
Who has construct this thiru nannilam temple where lard Siva descended
யாவரும் விரும்புகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெரும் கோயிலை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற இறைவன்
சேடியல்சிங்கிதந்தைசடை யன்றிருவாரூரன்
SEDIYAL SINGI THANTHAI SADAI YAN RIRUVAA RURAN
The lovely appearance possessed spinster singadi’s father and son to sadaiyanar that nambi arroren
அழகு பொருந்திய சிங்கடிக்குத் தந்தையும் சடையனாருக்கு மகனும் ஆகிய நம்பி ஆரூரன்
பாடியபத்தும்வல்லார்புகு வார்பரலோகத்துள்ளே.
PADIYA PATH THUM VALLAR PUGUVAR PARA LOGATH THULLE
Whose ten poems who are repeatedly sang it and then they ultimately settle down in the Siva land named Sivalogam
பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள் பரலோகத்துள் புகுவர்
OM THIRU CHITRAMBALAM
திருச்சிற்றம்பலம்