THIRU POKKUVOLIYOOR AVINAASI
92 திருப்புக்கொளியூர் அவிநாசி
THIRU POKKUVOLIYOOR AVINAASI
OM THIRU CHITRAMBALM
பண் – குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
While Suntherer is staying in the thiruvaaroor temple place and who has wanted to travel in the hilly region and then got permission from lard Siva and started his sojourn and prayed on the way so many temples are prayed and then entered in to kongu king dom. Where he entered the thiru pokkoor avinasi place. In that place once long ago one crocodile swallowed a male child. His parents are lard Siva’s disciples so to remove their sorrow to get back the child from the crocodile mouth all are went to that pond place and then sang the following decade and then get back the child. At the end of the fourth song before that the crocodile spitted the child on the pond bank and then that child growth as per his seventh year of chronological age
சுந்தர மூர்த்தி நாயனார் ஆரூரில் இருக்கும் நாளில் மலை நாடு அடைவதற்கு விருப்புக் கொண்டு திருவாரூர் பெருமானிடம் விடை கொண்டு பல பதிகளையும் வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டில் திருப்புக்கொளியூர் அவிநாசி சென்று நெடு நாட்களுக்கு முன்னர் முதலை விழுங்கிய மகனை இறையன்பு மிகுந்த அவனது பெற்றோர்களது துயரத்தை நீங்குதல் பொருட்டு முதலை வாயினின்றும் அழைத்துத் தருதற்கு அக்குளக்கரைக்குச் சென்று பாடி அருளியது இத்திருப்பதிகம். இதன் நான்காவது பாடல் முடிவதற்குள் பெருமான் அருளால் முதலை மகனைக் கரையில் சேர்த்தது. முதலை விழுங்கிய பின்னர் சிறுவன் ஆண்டுக்கு உரிய வளர்ச்சியையும் பெற்றிருந்தான்.
933 எற்றான்மறக்கேன்எழுமைக்கும்எம்பெருமானையே
EATRAN MARAKKEN EALUMAIKKUM EM PERUMAA NAIYEA
How will I forget you and you are in the seven previous births you are the leader to me
உன்னை எக்காரணத்தால் மறப்பேன் ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே
உற்றாயென்றுன்னையேஉள்குகின்றேனுணர்ந்துள்ளத்தாற்
UTRAA YENRUNNAIYEEA ULKU KINREN UNARNTHU LLATH THAAR
And then you are my relative in that way I have been thinking over you in my mind
எனக்கு உறவினன் என்று உணர்ந்து மனத்தால் நினைக்கிறேன்
புற்றாடரவாபுக்கொளியூரவிநாசியே
PUTRAADA RAVAA PUK KOLIYUR AVI NASIYEA
Lard Siva in that sand don place living the snakes adorned in that dancing form and then you are in the thiru pokku oliyoor avinaasi temple place residing for ever
புற்றின் கண் வாழ்கின்ற படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே திருப்புக் கொளியூரில் உள்ள அவிநாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவனே
பற்றாகவாழ்வேன்பசுபதியேபரமேட்டியே.
PATRA GA VAALVEEAN PASUPATHIYE PARA METTIYEEA
You are the only guiding pole to me so with your guidance I will live here for ever
உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்
934 வழிபோவார்தம்மோடும்வந்துடன்கூடியமாணிநீ
VALI POOVAR THAM MODUM VANTHU DAN KOODIYA MAANINEE
Your disciples are all the time praying under your feet and their only son
உன்னை வணங்கச் செல்பவர்களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன்
ஒழிவதழகோசொல்லாய்அருளோங்குசடையானே
OLIVATHA LAKO SOLLAAI ARULONGU SADAI YANEEA
Before your deity to die is this act is acceptable one in this world please tell me lard Siva you are grace filled penance appearance form
உன் திரு முன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ நீ சொல்லாய் அருள் மிக்க தவக் கோலத்தை உடையவனே
பொழிலாருஞ்சோலைப்புக்கொளியூரிற்குளத்திடை
POLI LAARUJ SOLAI PUK KOLIYUURIR KULATH THIDAI
The big trees are covered place and small flower bushes are filled place is this thiru pokkuoliyoor
பெரு மரப் பொழில்களையும் நிறைந்த இளமரக் காக்களையும் உடைய திருப்புக் கொளியூரில்
இழியாக்குளித்தமாணியெனைக்கிறிசெய்ததே.
ILIYAK KULITH THA MAANI YENAK KIRI SEI THATHE
Where existing pond this child entered and then taking bath and is he did any sin in his act
உள்ள குளத்தின் கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது
935 எங்கேனும்போகினும்எம்பெருமானைநினைந்தக்காற்
ENGEE NUM POGINUM EMPERU MAANAI NINAIN THAK KAR
My dear lard Siva while I am thinking over you in that way I have been entering in the kongu kingdom place and moreover
எம் பெருமானெ உன்னை நினைத்தக் கால் கொங்கு நாட்டில் புகுந்தாலும் மற்று
கொங்கேபுகினுங்கூறைகொண்டாறலைப்பாரிலை
KONGE PUKI NUNG KUURAI KONDAA RALAIP PAARILAI
And then wherever I went in that place some people are stealing my cloths
எங்கேனும் சென்றாலும் என்னை ஆறவைத்துக் கூறையைப் பரித்துக் கொள்வார் சிலராவர்
பொங்காடரவாபுக்கொளியூரவிநாசியே
PONGAA DARA VA PUK KOLIYUUR AVI NASIYEA
The much dancing form of snakes are adorned all over the body in that form you have descended in the thiru pukku oliyoor avinaasi temple place
மிகுதியாக ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே திருப்புக் கொளியூரில் உள்ள அவிநாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவனே
எங்கோனேயுனைவேண்டிக்கொள்வேன்பிறவாமையே.
ENGO NEEA YUNAI VENDIK KOLVEN PIRAVAA MAIYE
My dear lard Siva I will pray before you only not to get rebirth in this land
எங்கள் தலைவனே உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன்
936 உரைப்பார்உரையுகந்துள்கவல்லார்தங்கள்உச்சியாய்
URAIPPAR URAIYU KAN THULGA VALLAAR THANGAL UCHIYAAI
Those disciples who are glorifying your acts that wards are liked by you and those disciples who are not forgotten you in their head place always residing and then guiding them in good way
உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே உன்னை எப்பொழுதும் மறவாது நினைக்கவல்லவரது தலை மேல் இருப்பவனே
அரைக்காடரவாஆதியும்அந்தமும்ஆயினாய்
RAIK KKADARAVA ATHIYUM ANTHAMUM AAYINAAI
Lard Siva you have tied the dancing snake on your waist and to all the things in this world you are the first and then end to them
அரையின் கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டி உள்ளவனே எல்லா பொருளுக்கும் முதலும் முடிவும் ஆனவனே
புரைக்காடுசோலைப்புக்கொளியூரவிநாசியே
PURAIK KAADU SOLAIP PUK KOLI YUURAVI NAAASIYE
In the best rock place and then plantations are covered place of thiru pokkuoliyoor avinaasi temple place you have descended
சிறந்த முல்லை நிலத்தையும் சோலைகளையும் உடைய திருப்புக் கொளியூரில் உள்ள அவிநாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவனே
கரைக்கால்முதலையைப்பிள்ளைதரச்சொல்லுகாலனையே.
KARAIK KAAL MUTHALAIYAIP PILLAI THARACH SOLLU KAALANAIYEEA
The death god ema and then the crocodile you may order them to bring back the child in this pond bank and then bless him long life
கூற்றுவனையும் முதலையையும் இக்குளக்கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணை இட்டு அருள்
937 அரங்காவதெல்லாமாயிடுகாடதுவன்றியுஞ்
ARANG AVATHELLA MAAYIDU KAADATHU VANRIYUNJ
And then lard Siva your moving place is all the perishable burial ground
உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது எல்லாரும் அழிகின்ற முதுகாடு
சரங்கோலைவாங்கிவரிசிலைநாணியிற்சந்தித்துப்
SARANGKOLAI VANGI VARI SILAI NAANIYIR SANTHI THU
And then more over you have carried the bow and on it placed the arrow and then shot it
அதுவன்றியும் நீ அம்பை எடுத்து விரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து மூன்று
புரங்கோடஎய்தாய்புக்கொளியூரவிநாசியே
PURANG KODA EITHAI PUK KOLIYUR AVI NASIYE
Those three castles are destroyed form you have shot an arrow and that way you have descended in Thiru vaalgoli puthhoor aninaasi temple place
ஊர்கள் அழிய அழித்தாய் திருப்புக் கொளியூரில் உள்ள அவிநாசி
குரங்காடுசோலைக்கோயில்கொண்டகுழைக்காதனே.
KURANGAADU SOLAIK KOYIL KONDA KULAIK KAATHANE
The monkeys are jumping in that plantations are covered place is existing the temple place you have descended in the ear ornament named kulai adorned on your ear
குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையை உடைய திருக்கோயிலில் இடமாகக் கொண்டு குழையை அணிந்த காதினை உடையவனே
938 நாத்தானும்உனைப்பாடலன்றிநவிலாதெனாச்
NATH THAANUM UNAIP PAADALANRI NAVILAA THENACH
My tongue only sing your glory only and it did not talk any other wards
எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறு ஒன்றையும் சொல்லாது என்றும்
சோத்தென்றுதேவர்தொழநின்றசுந்தரச்சோதியாய்
SOTH THENRU THEVAR THOLA NINRA SUNTHARA SOTHIYAAI
To salute you by the deevaas in that way they are praying in the light form
உனக்கு வணக்கம் என்று சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளி வடிவாய் உள்ளவனே
பூத்தாழ்சடையாய்புக்கொளியூரவிநாசியே
PUTH THAAL SADAIYAY PUK KOLIYUUR AVI NASIYE
Lard Siva you have adorned the flowers on your long pig tail and then in the thiru pukkuoliyoor place of avinaasi temple you have descended
பூவை அணிந்த நீண்ட சடையை உடையவனே திருப்புக் கொளியூரில் உள்ள அவிநாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவனே
கூத்தாஉனக்குநான்ஆட்பட்டகுற்றமுங்குற்றமே.
KOOTHTHA UNAKKU NAAN AAT PATTA KUTRA MUNG KUTRA MEEA
Where you are dancing form appearing and I am surrender under your feet is it sinful one
நடனம் ஆடுபவனே நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ
939 மந்திகடுவனுக்குண்பழம்நாடிமலைப்புறஞ்
MANTHI KADUVANUK KUNPALAM NAADI MALAIP PURAJ
The female monkey prayed before you that male counterpart going on the way it should get fruits in that way
பெண் குரங்கு ஆண் குரங்குக்கு அது செல்லும் மலைப் புறங்களில் உண்ணத் தக்க பழங்கள் கிடைக்க வேண்டி
சந்திகள்தோறுஞ்சலபுட்பம்இட்டுவழிபடப்
SANTHIGAL THORUNJ SALA PUTPAM ITTU VALI PADA
And thrice a day that is morning midday and evening pouring water and placed flowers on your feet and then pray you
காலை நண்பகல் மாலை என்னும் காலங்கள் தோறும் நீரையும் பூவையும் இட்டு வழிபாடு செய்ய
புந்திஉறைவாய்புக்கொளியூரவிநாசியே
PUNTHI URAI VAI PU KOLIYUR AVI NASIYE
And in that way entered in that mind and you have descended in the thirupokkoor avinasi temple place
அதன் மனத்தில் புகுந்து இருப்பவனே திருப்புக் கொளியூரில் உள்ள அவிநாசி எழுந்தருளி இருப்பவனே
நந்திஉனைவேண்டிக்கொள்வேன்நரகம்புகாமையே.
NANTHI UNAI VENDIK KOLVEN NARAGAM PUGAA MAIYE
Lard Siva you are also called in the name of nanthi I am requested before you not enter in the hell and in that way I am praying before you
நந்தி என்ற பெயரை உடையவனே உன்னிடம் நான் நரகம் புகாதிருத்தலை வேண்டிக் கொள்கிறேன்
940 பேணாதொழிந்தேன்உன்னையலாற்பிறதேவரைக்
PENA THOLN THEAN UNNAI YALAR PIRA THEVARAIK
I am your disciple and I am liked only you and any other sub god for material benefits
அடியேன் உன்னை அன்றிப் பிற தேவரை விரும்பியது நீங்கினேன்
காணாதொழிந்தேன்காட்டுதியேலின்னங்காண்பன்நான்
KAANAA THOLIN THEAN KATTU THEEYE LINN NANGAN PAN NAAN
So I did not see them and my gaanna knowledge form of mind only will turned towards you so your glory will be in abundant manner understood by me
அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன் என் அறிவாகிய கண்ணையும் அவ்வாறு அறியச் செய்வாய் ஆயின் உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன்
பூணாண்அரவாபுக்கொளியூரவிநாசியே
POONAAN ARAVAA PUK KOLIYUR AVI NASIYEEA
Lard Siva you have adorned poison as ornament in your throat and that form you have descended in the thiru pokku oliyoor avinaasi temple place
நஞ்சினை அணிந்த கண்டத்தை உடையவனே திருப்புக் கொளியூரில் உள்ள அவிநாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவனே
காணாதகண்கள்காட்டவல்லகறைக்கண்டனே.
KANATHA KAN KAL KATTA VALLA KARAIK KANDA NE
My eyes are not seen form and those eyes are allowed to see it in that way poison throat possessed lard Siva
காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல நஞ்சினை அணிந்த கண்டத்தை உடையவனே
941 நள்ளாறுதெள்ளாறரத்துறைவாய்எங்கள்நம்பனே
NALLARU THOLLARATH THURAIVAI ENGAL NAM PANE
You have also descended in the thirunallaaru and thiru arathurai temple place in that reliable form
திருநள்ளாறு திரு அறத்துறைகளில் உள்ள நம்பனே
வெள்ளாடைவேண்டாய்வேங்கையின்தோலைவிரும்பினாய்
VELLADAI VENDAAI VENGAIYIN THOLAI VIRUMPINAAI
You have not liked the white dress but adorned the tiger skin
வெள்ளாடையை விரும்பாது புலித்தோல் ஆடையை விரும்புபவனே
புள்ளேறுசோலைப்புக்கொளியூரிற்குளத்திடை
PULLERU SOLAIP PUK KOLIYURIR KULATH THIDAI
The birds are staying the plantations are covered that place in that thiru pokkuoliyoor pond place existing
பறவைகள் தங்கும் சோலைகளை உடைய திருப்புக் கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே
உள்ளாடப்புக்கமாணியென்னைக்கிறிசெய்ததே.
ULLADAP PUK KA MAANI YENNAIK KIRI SEITHA THEA
Where that bharamin child did what form of sin
முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது
942 நீரேறஏறுநிமிர்புன்சடைநின்மலமூர்த்தியைப்
NERERA EEARU NIMIR PUNSADAI NIN MALA MUURTHTHIYAIP
The water stagnated form of that glory filled long hair in that pure form you are existing in this world
நீர் தங்குதலால் பெருமை பெற்ற நீண்ட புல்லிய சடையை உடைய தூய பொருள் ஆனவனும்
போரேறதேறியைப்புக்கொளியூரவிநாசியைக்
PORERA THERIYAIP PUK KOLIYUR AVI NASIYAIK
To wage war that ferocious bull you have ascended on it and then in the thirupukku oliyoor avinasi temple place you have descended
போர் செய்யும் எருதை ஏறுபவனும் திருப்புக் கொளியூரில் உள்ள அவிநாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவனே
காரேறுகண்டனைத்தொண்டன்ஆரூரன்கருதிய
KAA RERU KANDA NAITH THONDAN AAR URAN KARUTHIYEAA
The dark color throat you have possessed that form of lard Siva and I am your disciple named suntherer who has tried to get one benefit
கருமை பொருந்திய கண்டத்தை உடையவனும் ஆகிய சிவபெருமான் தொண்டனை நம்பி ஆரூரன் ஒரு பயன் கருதிப்
சீரேறுபாடல்கள்செப்பவல்லார்க்கில்லைதுன்பமே.
SEERERU PADAL GAL SEPPA VALLAARK KILLAI THUN PAME
And in this way sang the glory filled songs and those disciple who are repeatedly sang before lard Siva that persons will not entertain any sorrow in life
பாடிய இப்புகழ் மிக்க பாடல்களைப் பாட வல்லவர்கட்குத் துன்பம் இல்லையாம்
திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAMBALAM