THIRU CHOTRUTHURAI
94 திருச்சோற்றுத்துறை
THIRU CHOTRUTHURAI
OM THIRUCHITRAMBALAM
பண் – கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
Sunthar moorthy nayanar prayed at thiru kalaiya nallor and then sang songs there and then afterwards prayed in thir kudamukku, thiruvalam suli, and thiru nal loor and other temple places are prayed and then ultimately entered in to thiru chotru thurai and then sang the following decade
சுந்தர மூர்த்தி நாயனார் திருக்கலய நல்லூரைப் பணிந்து பாடிய பின் திருக்குடமுக்கு , திருவலஞ்சுழி , திருநல்லூர் முதலிய பல தலங்களையும் வணங்கிக் கொண்டு திருச்சோற்றுத்துறை அடைந்து பணிந்து பாடி அருளியது இத்திருப்பதிகம்.
954 அழல்நீர்ஒழுகியனையசடையும்
ALAL NEER OLUKI YANAIYA SADAI YUM
The fire in water form of coming in that form of long hair possessed lard Siva
நெருப்பு நீர்த் தன்மை உடையதாய் ஒழுகினாற் போலும் சடையையும்
உழையீருரியும்உடையான்இடமாம்
ULAI YEER URIYUM UDAIYAAN IDA MAAM
Lard Siva who has adorned then pealed the stage and elephant skin that lard Siva’s residential place
மானையும் யானை புலி இவைகளை உரித்த தோலையும் உடையவனாகிய இறைவனது இடமாகும்
கழைநீர்முத்துங்கனகக்குவையுஞ்.
KALAI NEER MUTH THUNG KANAGAK KU VAIYUJ
From the booboo tree place emanated the pearls like seeds and golden heap
மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துகளும் பொற்குவியல்களும்
சுழல்நீர்ப்பொன்னிச்சோற்றுத்துறையே
KULAL NEERP PONNICH SOTRUTH THURAI YEEA
In the deep place water is moved in circle form of Cauvery River bank place situated the thiru chotru thurai temple place it is
சுழிகளில் சுழல்கின்ற நீரை உடைய காவிரியாற்றை உடைய திருச்சோற்றுத்துறை என்னும் தலமே
955 பண்டைவினைகள்பறியநின்ற
PANDAI VINAI GAL PARIYA NINRA
The life forms are did the wild bad acts which are to be removed form
உயிர்கள் செய்த பழைய வலிமையான வினைகள் நீங்குமாறு நிற்கின்ற
அண்டமுதல்வன்அமலன்இடமாம்
ANDA MUTHAL VAN AMALAN IDAMAAM
That first person to this world and pure form that lard Siva’s residential place it is
உலகிற்கு முதல்வனும் தூயவனும் ஆகிய இறைவனது இடமாகும்
இண்டைகொண்டன்பிடையறாத
INDAI KONDAN BIDAI ARAATHA
The fast form of love not to be terminated in the middle way that form of disciples and then the head garland
அன்பு இடையில் அற்றுப்போதல் இல்லாத அடியார்கள் இண்டை மாலை
தொண்டர்பரவுஞ்சோற்றுத்துறையே.
THONDAR PARUJ SOTRUTH THURAIYEEA
And other flowers are carried form prayer conducted place is thiruchotruthurai temple place
முதலியவற்றைக் கொண்டு வழிபடுகின்ற திருச்சோற்றுத்துறை என்னும் தலமே
956 கோலஅரவுங்கொக்கின்இறகும்
KOLA ARAYUNG KOKKIN IRAKUM
The lovely snakes and the koku bird feathers
அழகிய பாம்பையும் கொக்கின் இறகையும்
மாலைமதியும்வைத்தான்இடமாம்
MALAI MATHIYUM VAITH THAAN IDAMAAM
And in the evening time appears moon is adorned in his hair that lard Siva’s residential place it is
மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையையும் முடியில் வைத்துள்ளவனாகிய இறைவனது இடமாம்
ஆலும்மயிலும்ஆடல்அளியுஞ்
AALUM MAYI LUM AADAL ALIYUJ
In the plantations place dancing the peacock and encircled form of bees
சோலைகளில் ஆடுகின்ற மயில்களையும் சூழுலுதல் உடைய வண்டுகளையும்
சோலைதருநீர்ச்சோற்றுத்துறையே.
SOLAI THARU NEER SOTRUTH THURAI YEEA
In that way abundant water bodies are filled place is thiru chot ru thurai temple place
கொண்டு காட்டுகின்ற மிக்க நீரை உடைய திருச்சோற்றுத்துறை என்னும் தலமே
957 பளிக்குத்தாரைபவளவெற்பிற்
PALIKKUTH THAARAI PAVALA VER PIR
The red color hair on it running the clear water falls form of
பவள மலையின் மேல் பதிந்து ஓடுகின்ற பளிங்கு
குளிக்கும்போல்நூற்கோமாற்கிடமாம்
KULIK KUM POOL NOR KOMAAR KIDA MAM
And the water falls form of adorned the three knotted thread on the bosom that lard Sivas residential place is
அருவி போலும் முப்புரி நூலை அணிந்த தலைவனாகிய இறைவனுக்கு இடமாகும்
அளிக்கும்ஆத்திஅல்லான்மதுவந்
ALIKKUM AATHTHI ALLAA MATHU VANTH
The much amount of honey is drinking form of bees and then moreover
தேனை வண்டுகள் நிரம்ப உண்ணச் செய்து மேலும்
துளிக்குஞ்சோலைச்சோற்றுத்துறையே.
THULIK KUJ SOLAICH SOTRUTH THU RAIYEEA
Spill over that honey on the land scape that place is thiru chotru thurai temple place
நிலத்தில் சிந்துகின்ற சோலைகளை உடைய திருச்சோற்றுத்துறை என்னும் தலமே
958 உதையுங்கூற்றுக்கொல்காவிதிக்கு
UTHAI YUNG KUUTRUK KOLGAA VITHIK KU
The death god ema is given the kick by the feet and the yooli time
கூற்றுவனுக்கு உதையையும் ஒன்றற்கும் தோலாத ஊழிற்கு
வதையுஞ்செய்தமைந்தன்இடமாம்
VATHIUJ SEI THA MAIN THAN IDAMAAM
Is put an end to it that mighty capacity possessed lard Siva’s residential place it is
அழிவையும் ஈந்த வலிமை உடையவனாகிய இறைவனுக்கு இடமாகும்
திதையுந்தாதுந்தேனுஞ்ஞிமிறுந்
THITHAI YUN THAATHUN THENUJ GNIMIRUNTH
The ever permanent pollen and honey and honey bees are thick form appearing in that plantations are covered form
நிலை பெற்ற மகரந்தமும் தேனும் வண்டும் சோலைகளில் நெருங்கி இருக்கின்ற
துதையும்பொன்னிச்சோற்றுத்துறையே.
THU THAIYUM PON NICH SOTRUTH THURAI YEEA
That place river Cauvery flowing place is thiru chotru thurai temple place
காவிரியாற்றை உடைய திருச்சோற்றுத்துறை என்னும் தலமே
959 ஓதக்கடல்நஞ்சினையுண்டிட்ட
OOTHAK KADAL NANJSINAI YUNDITTA
In the much water filled sea place emanated the poison which is consumed
மிக்க நீரை உடைய கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட
பேதைப்பெருமான்பேணும்பதியாம்
PETHAIP PERU MAAN PENUM PATHI YAAM
That grace filled god liking place is it is
அருள் மிகுந்த பெருமான் விரும்பும் ஊராகும்
சீதப்புனலுண்டெரியைக்காலுஞ்
SITHAP PUNALUND ERIYAIK KAALUJ
The cool water is consumed and then spit out the fire
குளிர்ந்த நீரை உண்டு தீயை உமிழ்கின்ற
சூதப்பொழில்சூழ்சோற்றுத்துறையே.
SOOTHAP POLIL SOOL SOTRUTH THURAIYEEA
That place is mango trees are covered place it is
மாஞ்சோலைகள் சூழ்ந்த திருச்சோற்றுத்துறை என்னும் தலமே
960 இறந்தார்என்பும்எருக்குஞ்சூடிப்
IRANTHAR ENPUM ERUK KUJ SOODIP
The dead men bones and the earukku flowers are adorned form of
இறந்தவரது எலும்புகளையும் எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு
புறங்காட்டாடும்புனிதன்கோயில்
PURAN GAAT TAADUM PUNITHAN KOYIL
Dancing in the outer place situated the burial ground which is lard Siva’s residential place
புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம்
சிறந்தார்சுற்றந்திருவென்றின்ன
SIRAN THAAR SUTRAN THIRU VEN RINNA
The soul form of fast attachment possessed the wife and the children and relatives and much earned wealth and other material things in this world
உயிர் போலச் சிறந்த மனைவி மக்களும் ஏனைய சுற்றத்தாரும் செல்வமும் என்று சொல்லப் பட்ட இன்னோரன்னவற்றைத்
துறந்தார்சேருஞ்சோற்றுத்துறையே.
THURAN THAAR SERUJ SOTRUTH THURAIYEEA
All are kept away by the saints and then their approaching place is thiru chotuthurai temple place
துறந்த ஞானியர் சேர்கின்ற திருச்சோற்றுத்துறை என்னும் தலமே
961 காமன்பொடியாக்கண்ணொன்றிமைத்த
KAMAN PODIYAAK KAN NON RIMAITHTHA
The lust creating got is converted in to ashes form and in that way lard Siva opened his eyes
மன்மதன் சாம்பல் ஆகுமாறு கண் ஒன்றைத் திறந்த
ஓமக்கடலார்உகந்தஇடமாம்
OOMAK KADA LAR UGANTHA IDA MAAM
That yaggaa doing place is lard Siva’s willingness filled place
வேள்வியாகிய கடலை உடையவராகிய இறைவன் விரும்பும் இடமாகும்
தேமென்குழலார்சேக்கைபுகைத்த
THEA MEN KULALAR SEEAK KAI PUGAITHTHA
The honey filled flowers are adorned that soft hair possessed ladies who have placed on their bed
தேன் பொருந்திய மெல்லிய கூந்தலை உடைய மகளீர் தம் இருக்கையில் இட்ட
தூமம்விசும்பார்சோற்றுத்துறையே.
THUUMAM VISUM PAR SOTRUTH THURAIYEA
That fragrance filled the fumes are moved upward on the space place that place is thiru chotru thurai
நறும் புகைகள் வானத்தில் சென்று நிறைகின்ற திருச்சோற்றுத்துறை என்னும் தலமே
962 இலையால்அன்பால்ஏத்துமவர்க்கு
ILAIYAL ANPAAL EATHTHU MAVARKKU
Even with leaves are carried on hands in that love form of praying god by those disciples
இலையாலாயினும் அன்போடு துதிக்கின்ற அவர்களுக்கு
நிலையாவாழ்வைநீத்தார்இடமாம்
NILAI YAVAAL VAI NETHTHAAR IDAMAAM
Whose nonpermanent worldly life is removed form of that lard Siva’s residential place it is
நிலையாத இந்த உலக வாழ்வை நீக்குபவராகிய இறைவனது இடமாகும்
தலையாற்றாழுந்தவத்தோர்க்கென்றுந்
THALAIYAT RALUN THAVATH THORK KENRU
Those disciples who are prayed with head bowed form that form of penance performing saints
தன்னைத் தலையால் வணங்குகின்ற தவத்தினை உடையோர்க்கு
தொலையாச்செல்வச்சோற்றுத்துறையே.
THOLAIYACH SELVACH SOTRUTH THURAI YEEA
To whom all the time not perishable form of wealth is given that place is thiru chotru thurai temple place
எங்ஙான்றும் அழியாத செல்வத்தைத் தரும் திருச்சோற்றுத்துறை என்னும் தலமே
963 சுற்றார்தருநீர்ச்சோற்றுத்துறையுள்
SUTRAR THARU NEERCH SOTRUTH THURAI YUL
The water is encircled form of thirucho truthurai temple place where lard Siva descended
சுற்றிலும் நிறைந்த நீரை உடைய திருச்சோற்றுத் துறையில் எழுந்தருளி இருக்கின்ற
முற்றாமதிசேர்முதல்வன்பாதத்
MUTRAA MATHI SEEAR MUTHALVAN PAATHATH
The young moon is adorned that principal form of lard Siva and then whose sacred feet
இளமையான சந்திரனைச் சூடிய முதல்வனது திருவடிக்கண்
தற்றார்அடியார்அடிநாய்ஊரன்
THATRAR ADIYAAR ADI NAAI YUOORAN
The saint suntherer who has sang the above songs and then those disciples who are without any attachment in this world to whom dog like form surrender under his feet
இப்பாடல்களைப் பாடினான் பற்றற்றவராகிய அடியர்களது அடிக்கு நாய் போலும் நம்பி ஆரூரன்
சொற்றான்இவைகற்றார்துன்பிலரே.
SOTRAAN IVAI KATRAAR THUN PILAREA
And those disciples who are memorized the above songs and they will not entertain any form of sorrow in this world
இவைகளைக் கற்றவருக்கு யாதொரு துன்பமும் அடையாதவர் ஆவர்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM
June 14, 2019