KOIL
90 கோயில்
KOIL
OM THIRU CHITRAMBALAM
பண் – குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
Suntherer who has at first prayed in thirumuthu gumram and then wanted to pray in chitham baram and on the way he has been praying in so many temple places and proceeded and then ultimately entered in the chithambarm temple and then seen lard Siva in dancing form and then sang the following songs and in those songs he has also sang the mealai chithambaram aliase peeroor in between those songs
This melai chithambarm is situated the western side of coimbothoor three miles away from it. It is situated on the bank of noiyal river where lard Siva’s name is patiswarer
சுந்தரர் முதுகுன்றத்திலிருந்து தில்லையை வணங்கும் விரும்பினராய்ப் பல பதிகளையும் வணங்கிக் கொண்டு அத்தலத்தை அடைந்து கூத்தப் பெருமானைக் கண்டு ஆடிய திருவடிகளை வணங்கிப் பாடி அருளியது இத்திருப்பதிகம் இதில் மேலைச் சிதம்பரமாகிய பேரூரை நினைந்து பாடி இருத்தல் குறிப்பிடத்தக்கது.
மேலைச் சிதம்பரம் என்பது கோவைக்கு மேற்கே மூன்று கல் தொலைவில் உள்ள பேரூர் என்னும் தலம் நொய்யல் ஆற்றின் கரையில் உள்ளது சுவாமியின் பெயர் பட்டீஸ்சுவரர்.
913 மடித்தாடும்அடிமைக்கண்அன்றியே மனனேநீவாழும்நாளுந்
MADITH THADUM ADIMAIK KAN ANRIYEEA MANANEA NEE VALUM NALUNTH
My dear lard Siva you are happily enjoying form of dancing and to those feet service I am not living and happily eating and adorned with good dress and in those days
மனமே நீர் ரசித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின் கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும்
தடுத்தாட்டித்தருமனார்தமர்செக்கில் இடும் போது தடுத்தாட் கொள்வான்
THADUTH THAATTITH THARUMANAR THAMAR SEKKIL IDUM POTHU THADUTH THAT KOLVAN
I am not allowed to go in that hay way and not to be spoilt so that as per your wish driven me in the right direction and before the death god ema whose diplomats are carried away before that lard Siva only stopped it and then taken you under his control
உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து தனது இச்சை வழி நடத்தி நீ முன் செய்த பாவத்தின் பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய
கடுத்தாடுங்கரதலத்திற்றமருகமும் எரிஅகலுங்கரியபாம்பும்
KADUTH THADUN GARA THAL AATH THITRA MARUGAMUM EARI AGALUN GARIYA PAAMPUM
That form of lard Siva who has carried small drum on his hands and burning fire pot on his hand and angry way dancing the dark color snake
கையில் தமருகத்தையும் நெருப்பு எரிகின்ற தகழியையும் சினந்து ஆடுகின்ற கரிய பாம்பையும்
பிடித்தாடிபுலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
PIDITH THAADI PULIYUUR SITRAM PALA THEM PERU MAANAI PETRAAMANREEA
In that way carrying all by lard Siva dancing in the chithambaram temple place we have entered so hear after what we are going to earn in this world
பிடித்துக் கொண்டு ஆடுகின்ற பெரும் பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோ மன்றே இனி நாம் பெற வேண்டியது யாது
914 பேராதுகாமத்திற்சென்றார்போல் அன்றியேபிரியாதுள்கிச்
PERAATHU KAAMATHTHIR SENRAAR POL ANRIYEA PIRIYA THULKI
My dear mind in the lust full life dipped in to the worldly life and then living happily but those disciple who are left over from that way of shot lived life and then glory filled form surrender under lard Siva’s feet with love filled mind and then think over him without any interruption
மனமே சாங்காறும் நீங்காது உலக இன்பத்தில் சென்றவர் போல அன்றி புகழ் நிறைந்த அன்புடையவராய் தன்னை இடை விடாது நினைந்து
சீரார்ந்தஅன்பராய்ச்சென்றுமுன் னடிவீழுந்திருவினாரை
SIRARN THA ANPARAICH SENRU MUN NADI VEELUN THIRU VINARAI
And go before lard Siva’s deity and then fallen down under his feet and that form of ganaa filled persons
திரு முன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை
ஓராதுதருமனார்தமர்செக்கில் இடும்போதுதடுத்தாட்கொள்வான்
ORAATHU THARU MANAAR THAMAR SEKKIL IDUM POOTHU
THADUTH THAT KOLVAN
And that persons status not known form when the death god ema’s diplomats are tried to corner his life lard Siva stopped it and then taken him under his fold
அவரது நிலையை அறியாமல் கூற்றுவனின் ஏவலர்கள் ஒறுக்க முயலும் பொழுது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய
பேராளர்புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே.
PERALAR PULIYUR SITRAM PALA THEM PERU MAANAI PETRAA MANRE
In that glory filled persons living place is chithambaram where we have entered so here after what we are going to achieve in this world
பெருமை உடையவர்களது பெரும் பற்றப் புலியூரில் உள்ள திருசிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோ மன்றே இனி நாம் பெற வேண்டியது யாது
915 நரியார்தங்கள்ளத்தாற்பக்கான பரிசொழிந்துநாளும்உள்கிப்
NARIYAAR THANGALLATH THAAR PAKKAANA PARI SOLINTHU NALUM ULKI
My dear mind fox like vengeance filled minded persons of darkness filled place we have come out and then daily think over lard Siva
மனமே நரியினது வஞ்சனை போலும் வஞ்சனையினால் இருண்டுபட்ட தன்மையின் நீங்கி நாள்தோறும் தன்னை நினைந்து
பிரியாதஅன்பராய்ச்சென்றுமுன் அடிவீழுஞ்சிந்தையாரைத்
PIRIYAA THA ANPARAAI SENRU MUN ADI VILUNJ SINTHAI YARAITH
And without any deviated form of love filled mind and then go before lard Siva’s deity and pray him that gaana knowledge filled persons of true concept filled form
மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் கருத்துடையவரை
தரியாதுதருமனார்தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
THARIYAA THU THARUMA NAAR THAMAR SEKKIL IDUM POTHU THADUTH THAT KOLVAN
The death god ema’s diplomats are cornered and then gives punishment of putting in the oil extracting machine before that he will stopped us and then taken under his control
கூற்றுவனின் ஏவலர்கள் ஒறுக்க முயலும் பொழுது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய
பெரியோர்கள்புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே.
PULIYUR SITRAM PALA THEM PERU MAANAI PETRAA MANRE
That elderly people living chithamberam place we have entered so here after we do not want anything in this world
பெரியோர்களது பெரும் பற்றப் புலியூரில் உள்ள திருசிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோ மன்றே இனி நாம் பெற வேண்டியது யாது
916 கருமையார்தருமனார்தமர்நம்மைக் கட்டிய கட்டறுப் பிப்பானை
KARU MAIYAR THARU MANAAR THAMAR NAMMAIK KATTIYA KATT ARUPPIP PAANAI
My dear mind the darkness filled the death god ema’s workers are who are tried to bind us with rope that rope is broken and throw it away and that form of lard Siva
மனமே கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர் நம்மைக் கட்டுவாராயின் அக்கட்டினை அறுத்து எறிபவனும்
அருமையாந்தன்னுலகந்தருவானை மண்ணுலகங்காவல்பூண்ட
ARUMAI YAAN THAN NULAGA KAN THARU VAANAI MANNULAGANG KAAVAL POONDA
Lard Siva will give us the rare sivalogam and then in this world is preserved in good ethical form of life and then guard it
நமக்கு பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தையே தருபவனும் பல்லவ மன்னன் இந்த நூல் உலகத்தை நன்னெறியில் வைத்து காத்தலை மேற்கொண்ட உரிமையாற்பல்லவர்க்குத்திறைகொடாமன்னவரைமறுக்கஞ்செய்யும்
URIMAIYAR PALLAVARK KUTH THIRAI KODAA MAN NAVARAI MARUKKAJ SEI YUM
And in nature not give tax by other small kings are punished and that form of king
இயல்பினால் அவனுக்குத் திறை கொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய
பெருமையார்புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே.
PERUMAIYAR PULIYUR SITRAM PALA THEM PERUMANAI PETRAA MANRE
That greatness filled persons chithambarm we have approached so here after we need not get anything in this world
பெருமை உடையவர்களது பெரும் பற்றப் புலியூரில் உள்ள திருசிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோ மன்றே இனி நாம் பெற வேண்டியது யாது
917 கருமானின்உரியாடைச்செஞ்சடைமேல் வெண்மதியக் கண்ணியானை
KARU MAANIN URI YAADAICH SEN JADAI MEAL VENMATHI YAK KANNI YAANAI
My dear mind the elephant skin is adorned as upper dress and his red color hair the white color moon is adorned as flower form
மனமே யானையின் தோலைப் போர்வையாக உடைய சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச் சூடியவனும்
உருமன்னகூற்றத்தைஉருண்டோட உதைத்துகந்துலவாஇன்பம்
URU MANNA KUUTRATH THAI URUN DODA UTHAI THTHU KAN THULAVAA INPAM
The thunder cloud like form raising fear full sound that death god ema is rolled down on the land in that way he is kicked down lard Siva and with whom frightened small child
இடி போல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும் படி உதைத்து பின் அருள் செய்து அவனால் வெருட்டப்பட்ட சிறுவனுக்கு
தருவானைத்தருமனார்தமர்செக்கில் இடும்போதுதடுத்தாட் கொள்வான்
THARU VAANAI THARUMA NAAR THAMAR SEKKIL IDUM POTHU THADUTH THAT KOLVAAN
That margandaya who is given not perishable form of grace and we are tried to corner by death god lard Siva stopped and then taken us under his fold
அழியாத இன்பத்தைத் தந்தவனும் நம்மை அக் கூற்றுவனின் ஏவலர்கள் ஒறுக்க முயலும் பொழுது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய
பெருமானார்புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே.
PERU MAANAAR PULIYUR SITRAM PALA THEM PERU MAANAI PETRAA MANRE
That greatness filled chitrambalam place we have entered and then prayed lard Siva in dancing form and then here after is there anything leftover to attain worthwhile things in this world
பெருமை நீங்காதவர்களது பெரும் பற்றப் புலியூரில் உள்ள திருசிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோ மன்றே இனி நாம் பெற வேண்டியது யாது உளது
918 உய்த்தாடித்திரியாதேஉள்ளமே ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம்
UI THAADITH THIRIYAA THE ULLAME OLI GANDAAI UOON KAN OOTTAM
So my dear mind hear after to show any regarded to this body and wandering everywhere that short sighted form of mind you may give it up
ஆதலின் மனமே இனி நீ உடம்பின் மேல் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது அதனை முற்றிலும் ஒழி
எத்தாலுங்குறைவில்லைஎன்பர்காண் நெஞ்சமேநம்மைநாளும்
EATH THAALUNG KURAI VILLAI ENPAR KAN NENJA ME NAMMAI
NAALUM
So we have got without any deficiency form of life in this world so in that way variety of ways so many peopled are praising us
இதனால் நமக்கு எதனாலும் குறைவில்லாத வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர்
பைத்தாடும்அரவினன்படர்சடையன் பரஞ்சோதிபாவந்தீர்க்கும்
PATH THAADUM ARAVINAN PADAR SADAIYAAN PARAJ SOTHI PAVAM THEERKKUM
My dear mind the dancing snake and spread over hair and highly regarded light form of and those who are approached him those persons are removed form
மனமே படம் எடுத்து ஆடும் பாம்பையும் விரிந்த சடையையும் உடையவனும் மேலான ஒளியாக உள்ளவனும் அடைந்தவர்களது பாவத்தை நீக்குகின்றவனும்
பித்தாடிபுலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப்பெற்றாமன்றே.
PITH THAADI PULIYUR SITRAM PALA THEM PERU MAANAI PETRAA MANRE
The love filled madness form of dancing lard Siva in Chidambaram temple place where we have entered so there is any other permanent thing in this world to attain it
பித்து கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய பெரும் பற்றப் புலியூரில் உள்ள திருசிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோ மன்றே இனி நாம் பெற வேண்டியது யாது
919 முட்டாதமுச்சந்திமூவா யிரவர்க்குமூர்த்திஎன்னப்
MUTTAA THA MUCH SANTHI MOOVA YIRAVARK KU MUURTHTHI YENNAP
My dear mind without any stoppage form of conducting poojaas thrice a day that three thousand bharmins are living in this Chidambaram place and lard Siva is single deity to them in that way being said in this world
மனமே தப்பாத முப்போதும் செய்யும் வழிபாட்டினை உடைய மூவாயிரவர் அந்தணர்க்கும் ஒரு மூர்த்தியே என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும்
பட்டானைப்பத்தராய்ப்பாவிப்பார் பாவமும்வினையும்போக
PAT TANAIP PATHTHARAAI PAVIPPAAR PAVAMUM VINAIYUM POGA
Those disciples who are always think over him that persons sins and punniya good deeds are removed form
அடியவராய் நின்று தன்னை நினைப்பவரது பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும்
விட்டானைமலையெடுத்தஇராவணனைத் தலைபத்தும் நெரியக்காலால்
VITTANAI MALAI YEDUTHTHA IRAAVA NANAI THALAI PATHTHUM NERI YAK KAALAAL
And ravana who has lifted the kailai hills that persons ten heads and twenty shoulders are smashed form of stamped under the kaiyilai hills
விலகுமாறு நீக்குகின்றவனும் தனது மலையை எடுத்த இராவணனை அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால்
தொட்டானைப்புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே.
THOTTANAI PULIYUUR SITRAM PALATHEM PERU MAANAI PETRAA MANRE
And that form of put his feet on the kailai hills who has descended in the chithanbaram temple place we have entered so hear after we are not going to get anything in this world because anything in this world and it is transisnary one only
ஊன்றியவனும் ஆகிய பெரும் பற்றப் புலியூரில் உள்ள திருசிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோ மன்றே இனி நாம் பெற வேண்டியது யாது உளது இந்த பூமியில்
920 கற்றானுங்குழையுமாறன்றியே கருதுமாகருதகிற்றார்க்
KATRANUG KULAIYUMAA RANRIYE KARUTHUMAA KARUTHA KITRAARK
My dear mind those disciples who are praying so as to melt the rock in that soft minded people
மனமே கல்லும் தன் தன்மை மாறி உருகும் படி தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லராயினார்க்கு
கெற்றாலுங்குறைவில்லைஎன்பர்காண் உள்ளமே நம்மை நாளுஞ்
KETRAALUNG KURAI VILLAI ENPAR KAAN ULLAME NAMMAI NALUJ
And that pure matter form they do not got any deficiency in this world in that way the elderly people will say and in that way
எத்தன்மைத் தூய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர் அவ்வகையில் நம்மை நாம்
செற்றாட்டித்தருமனார்தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
SETRATTI THARUMANAAR THAMAR SEKKIL IDUM POTHU THADUTH THAT KOLVAAN
At the end of the life the death god ema’s diplomats are come and then put us in the oil extracting grinding machine and give punishment before that act lard Siva stopped it and protects
கூற்றுவனின் ஏவலர்கள் ஒறுக்க முயலும் பொழுது அதனைத் தடுத்து ஆட்கொள்கின்ற
பெற்றேறிப்புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
PETRERI PULIYUR SITRAM PALATHEM PERUMANAI PETRAA MANRE
Lard Siva who has ascended on the back of bull whose dwelling place is thiruchitrambalam temple we have entered so we do not require any other thing in this world
விடையேறுபவனாகிய பெரும் பற்றப் புலியூரில் உள்ள திருசிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோ மன்றே இனி நாம் பெற வேண்டியது யாது
921 நாடுடையநாதன்பால்நன்றென்றுஞ் செய்மனமேநம்மைநாளுந்
NADUDAIYA NATHAN PAL NANERE NRUJ SEIMANA MEA NAMMAI
NAALUNTH
So my dear mind we are liked by the highly regarded persons and in that lard Siva’s place you may go and do menial service under his feet
அதனால் மனமே நம்மை உயர்ந்தோரால் விரும்பப்படுதலை உடைய அந்த இறைவன் இடத்தில் என்றும் நன்றான தொண்டினைச் செய்
தாடுடையதருமனார்தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
THAA DUDAIYA THARUMANAAR THAMAR SEKKIL IDUMPOTHU THADUTH THAT KOLVAAN
The head form of ema’s employees are so many days put in to the oil extracting machine and then grind it before that act lard Siva stopped them and then taken as slave and then guard them
தலைமை உடைய கூற்றுவனின் ஏவலர் பல நாளும் செக்கில் இட்டு ஆட்ட முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும்
மோடுடையசமணர்க்கும்முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த
MO DUDAIYA SAMANARKKUM MUDAI YUDAIYA SAKKIYARKKUM MUUDAM VAITHTHA
The highly stinking body possessed saanas and big belly possessed the buthas to whom lard Siva put in to ignorance form of mind that greatness filled lard Siva
முடை நாற்றத்தை உடைய சமணர்கட்கும் வயிற்றை உடைய சாக்கியர்க்கும் அறியாமையை வைத்த பெருமையை உடையவனும் ஆகிய
பீடுடையபுலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
PEEDUDAI YA PULIYUR SITRAM PALA THEM PERUMAANAI PETRAA MANRE
We have approached the greatness filled the Chidambaram temple so it is our ultimate aim in life so here after we are not required anything in life
பெரும் பற்றப் புலியூரில் உள்ள திருசிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோ மன்றோ இனி நாம் பெற வேண்டியது யாது
922 பாரூரும்அரவல்குல்உமைநங்கை யவள்பங்கன்பைங்கண் ஏற்றன்
PAA ROORUM ARAVAL KUL UMAI NANGAI YAVAL PANGAN PAINGAN EAATRAN
My dear mind the snake which is crawling on the land that dancing head form of waists are possessed lardess yumadevi whose one part of her body is taken and lust green eyes are possessed the bull which is used as travelling medium
மனமே நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம் போலும் அல்குலை உடைய உமை என்னும் நங்கையது பாகத்தை உடையவனும் பசிய கண்களை உடைய இடபத்தை உடையவனும்
ஊரூரன்தருமனார்தமர்செக்கில் இடும்போதுதடுத்தாட் கொள்வான்
UOORAN THARUMA NAAR THAMAR SEKKIL IDUMPOTHU THADUTH THAAT KOLVAAN
And every hamlet place descended lard Siva and while the death god tried to corner our life that is stopped and then saved from the clutches of ema
ஊர் தோறும் எழுந்தருளி இருப்பவனும் நம்மை கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் பொழுது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும்
ஆரூரன்தம்பிரான்ஆரூரன் மீகொங்கில்அணிகாஞ்சிவாய்ப்
AA ROORAN THAM PIRAAN AROORAN MIGONGIL ANIGANCHI VAAIP
Lard Siva who is leader to Suntherer and whose residential place is thiruvaaroor and in the western side existing kongu kingdom place the lovely kanchi river bed existing
நம்பி ஆரூரனுக்குத் தலைவனும் திருவாரூரை உடையவனும் மேற்கு திசையில் உள்ள கொங்கு நாட்டில் அழகிய காஞ்சி நதியின் கரையில் விளங்கும்
பேரூரர்பெருமானைப்புலியூர்ச்சிற் றம்பலத்தேபெற்றாமன்றே.
PEROORAR PERUMAA NAIP PULIYUR SITRAM PALATHEM PERUMANAI PETRAMANRE
In that chitambaram temple place existing the chitrambalam temple we have approached so it the ultimate aim in life so here after we do not get anything in life
பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை பெரும் பற்றப் புலியூரில் உள்ள திருசிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோ மன்றே இனி நாம் பெற வேண்டியது யாது
திருச்சிற்றம்பலம்
OM THIRUCHITRAMBALAM