OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAN PAARTHAAN PANNAM KAATOOR

ganesheit June 12, 2019

86 திருவன்பார்த்தான்பனங்காட்டூர்
THIRU VAN PAARTHAAN PANNAM KAATOOR


OM THIRU CHITRAMBALAM
பண் – சீகாமரம்
திருச்சிற்றம்பலம்


SUNTHARER moorthy nayanar prayed in the thiru kachi and anegathanga vathem place temples are prayed and then stayed there some more days and then entered in to the thiru panam kaadu place where he sang the following decade
நாயனார் திருக்கச்சி அநேகதங்காவதத்தைப் பணிந்து அருகில் உள்ள பதிகளை வணங்கி சில நாள் தங்கி வன் பார்த்தான் பனங்காட்டு சென்று இறைஞ்சி பாடி அருளியது இத்திருப்பதிகம்.
இத்திருப்பதிகம் சிவ பெருமானை உரை மாட்டாரது நிலைமைக்கு இரங்கி அருளியது
872 விடையின்மேல்வருவானை வேதத்தின்பொருளானை
VIDAIYIN MEAL VARUVAANAI VETHATH THIN PORULAANAI

Lard Siva who has ascended on the back of the bull and veetha meaning form existing in this world
இடப வாகனத்தின் மேல் ஏறி வருபவனும் வேதத்தின் பொருளாய் உள்ளவனும்
அடையில்அன்புடையானை யாவர்க்கும்அறியொண்ணா
ADAIYIL ANPUDAI YAANAI YAAVARKKUM ARIYONNAA

Those disciples who are approached him to whom he has showered love towards them
தன்னை அடைந்தால் அவ்வாறு அடைந்தவர்களிடம் அன்புடையான் ஆகின்றவனும் ஆகிய
மடையில்வாளைகள்பாயும் வன்பார்த்தான்பனங்காட்டூர்ச்
MADAIYIL VAALAIGAL PAAYUM VAN PAARTHTHAAN PANAG KAATTURCH

In the water ponds the vallai fishes are rolling and leap forward in that place named Thiruven parthan panamkatoor place descended lard Siva
நீர் மடைகளில் வாளை மீன்கள் துள்ளுகின்ற திருவன்பார்த்தான் பானங்காட்டூரில் எழுந்தருளி இருக்கின்ற
சடையிற்கங்கைதரித்தானைச் சாராதார்சார்பென்னே.
SADAIYIR KANGAI THARITHTHANAI SARATHAAR SAAR PENNEEA

Lard Siva who has bears the Ganges on his head that lard is not approached that persons what are they going to get in life
சடை முடியில் கங்கையைத் தாங்கி உள்ள பெருமானை அடையாதவர்கள் அடைவு தான் என்னே
873 அறையும்பைங்கழலார்ப்ப அரவாடஅனலேந்திப்
ARAIYUM PAING KALALARPPA ARVAADA ANALENTHI

The sound raising form of pure gold anklets are raising the sound and the snakes are rotating form dancing and fire is carried on hands

ஒலிக்கின்ற பசிய பொன்னாய் ஆகிய கழல்கள் கலிப்பவும் அணியப்பட்ட பாம்புகள் சுழன்று ஆடவும் கையில் நெருப்பை ஏந்தி
பிறையுங்கங்கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும்பெருமானார்
PIRAIYUNG KANG KAIYUNJ SOODI PEYARNTH AADUM PERUMAANAR

On the head carried the cut form of curved moon and Ganges and in that form dancing lard Siva
தலையில் பிறையையும் கங்கையையும் சூடிக் கொண்டு ஆடி பெயர்ந்து நின்று நடனம் ஆடுகின்ற பெருமானாகிய
பறையுஞ்சங்கொலிஓவாப் படிறன்றன்பனங்காட்டூர்
PARAIYUNJ SANGOLI OVAAP PADI RANRAN PANAGAATTUR

All are not known him in that concealed and culprit form of existing lard Siva where the ever sound raising drums and couches which are not stopped
யாவராலும் அறிய முடியாமல் கள்வனாய் முழங்குகின்ற பறைகளும் சங்குகளும் ஒலித்தல் ஒழியாத
உறையுமெங்கள்பிரானாரை உணராதார்உணர்வென்னே.
URAIYU MENGAL PIRAANAARAI UNARATHAAR UNAR VENNEEA

In that form descended Lard Siva in thiru van partan panam katoor where lard Siva descended and those disciples who do not realized him with their intuitive way of mind that persons mentality is what form we do not know it
தனது திருவன்பார்த்தான் பானங்காட்டூரில் எழுந்தருளி இருக்கின்ற எங்கள் இறைவனை உணராதவர் உணர்வுதான் என்னே
874 தண்ணார்மாமதிசூடித் தழல்போலுந்திருமேனிக்
THANNAR MAA MATHI SOODI THALAL POLUN THIRU MEANI

The cool form of moon is adorned on the head and in culprit form fire like body possessed
குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனை முடிமேல் சூடி கள்வனாய் நெருப்புப் போலும் தனது திருமேனிக்கு உரியவையாக
கெண்ணார்நாண்மலர்கொண்டங் கிசைந்தேத்தும்அடியார்கள்
KONNAR NAAN MALAR KONDANG KISAIN THEETH THUM ADIYAAGAL

And in that thinking over form of and to day bloomed flowers are adorned in fragrance filled form and in that form prayed lard Siva by their disciples
எண்ணுதல் பொருந்திய அன்று மலர்ந்த மலர்களைக் கொண்டு மனம் பொருந்தித் துதித்து வழிபடும் அடியார்களது
பண்ணார்பாடல்அறாத படிறன்றன்பனங்காட்டூர்ப்
PANNAAR PADAL ARAA THA PADIRANRAN PANAG KAATTUR

Where all the time musical notes are filled form singing the prayer songs that place is thiruven parthan panam kaatoor where lard Siva descended
பண் நிறைந்த பாடலின் ஒலி நீங்காத தனது திருவன்பார்த்தான் பானங்காட்டூரில் எழுந்தருளி இருக்கின்ற
பெண்ணாணாயபிரானைப் பேசாதார்பேச்சென்னே.
PEN NAANAYA PIRAANAIP PESAATHAAR PECH SENNEEA
Lard Siva in the arthanari form (half part male and another half part female) and those disciples who are not chanting lard Siva’s name and that persons wards are not worthwhile one
பெண்ணும் ஆணும் ஆகிய உருவத்தினனாகிய பெருமானைச் சொல்லாதவரது சொல்தான் என்னே

875 நெற்றிக்கண்ணுடையானை நீறேறுந்திருமேனிக்
NETRI KAN NUDAI YAANAI NEERERUN THIRU MEEANIK

On the fore head place yet another third eye possessed form of lard Siva and who has adorned on the whole body the sacred ashes
நெற்றியில் கண்ணை உடையவனும் திருநீறு பொருந்திய திருமேனியை உடையவனும்
குற்றமில்குணத்தானைக் கோணாதார்மனத்தானைப்
KUTRAMIL KUNATH THANAIK KOONAATHAAR MANATH THAANAI

The flawless form of mannerism filled person and those persons who do not have any requirements and that persons mind are dwelling form of
குற்றம் இல்லாத இயல்பை உடையவனும் கோருதல் இல்லாதவரது மனத்தில் உள்ளவனும்
பற்றிப்பாம்பரையார்த்த படிறன்றன்பனங்காட்டூர்ப்
PATRI PAAMPARAI YAARTHTHA PADIRANRAN PANAGKAATTUR

And snakes are caught and tied on the waist place that culprit form of lard Siva who has descended in the panam kaatoor temple place
பாம்பைப் பிடித்து அரையில் கட்டிய கள்வனும் ஆகிய தனது திருவன்பார்த்தான் பானங்காட்டூரில் எழுந்தருளி இருக்கின்ற
பெற்றொன்றேறும்பிரானைப் பேசாதார்பேச்சென்னே.
PETRON REERUM PIRANAI PESAATHAAR PECH CHENNEEA

And lard Siva who has ascended on the back of the bull and those disciples who are not praised him that persons wards are worthless one
எருது ஒன்றின் மேல் ஏறுகின்ற கடவுளைச் சொல்லாதவரது சொல்தான் என்னே
876 உரமென்னும்பொருளானை உருகிலுள்ளுறைவானைச்
URAMENNUM PORULAANAI URUKIL ULLURAI VAANAICH

Lard Siva who is in gaana matter meaning form and those disciples who are in melted heart where lard Siva stands there permanently
ஞானம் என்று சொல்லப்படும் பொருளாய் உள்ளவனும் உள்ளம் அன்பால் உருகுவர் அதன் கண் நீங்காது தங்குகின்றவனும்
சிரமென்னுங்கலனானைச் செங்கண்மால்விடையானை
SIRAMEN NUNG KALA NAANAI SENGAN MAAL VIDAIYANAI

The skull is carried on the hand to get begging food and the red color eyes are possessed bull has been possessed as his chariot to travel every where
தலை ஓடாகிய உண் கலத்தை உடையவனும் சிவந்த கண்களை உடைய பெரிய இடபவாகனத்தை உடையவனும்
வரம்முன்னமருள்செய்வான் வன்பார்த்தான்பனங்காட்டூர்ப்
VARUM MUNNA MARUL SEIVAAN VAN PAARTH THAAN PANAG KAATTURP

Those who are pray him and those persons required boons are fastly blessed and then gave it to them and highly regarded that form of lard Siva who has descended in the thiu ven pathan panam kaatoor temple place
தன்னை வழிபடுவார் விரும்பும் வரத்தை விரைந்து அருளுபவனும் மேலானவனும் ஆகிய திருவன்பார்த்தான் பானங்காட்டூரில் எழுந்தருளி இருக்கின்ற
பரமன்எங்கள்பிரானைப் பரவாதார்பரவென்னே.
PARAMAN ENGAL PIRAANAI PARAVAATHAAR PARA VENNEEA

That form of my lard Siva who is not prayed that persons wards are not worthwhile one
எங்கள் இறைவனைத் துதியாதவரது துதிதான் என்னே
877 எயிலார்பொக்கம்எரித்த எண்டோள்முக்கண்இறைவன்
EAYI LAAR POK KAM EARI THTHA ENDOL MUK KAN IRAIVAN

The well attractive decorated castles are fired and eight shoulders are possessed and three eyes are possessed form of lard Siva
பொழிவு நிறைந்த சில மதில்களை எரித்தவனும் எட்டு தோள்களையும் மூன்று கண்களையும் உடைய கடவுளும்
வெயிலாய்க்காற்றெனவீசி மின்னாய்த்தீஎனநின்றான்
VEYILAAIK KAATRENA VEESI MINNAI THEE YENA NINRAAN

And in the sun rays form all are dried up and wind form flowing and lightning form glittering and fire from burning and all these ways standing in this world
வெயிலாய்க் காய்ந்து காற்றாய் வீசி மின்னாய் மின்ன தீயாய் எரிந்து நிற்பவனும் ஆகிய
மயிலார்சோலைகள்சூழ்ந்த வன்பார்த்தான்பனங்காட்டூர்ப்
MAYILAAR SOOLAI GAL SOOLNTHA VANPARTHTHAN PANAGKATTUR

The peacocks are filled the plantations are covered place is thiru panam kaatoor where ever permanent form dwelling
மயில்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவன்பார்த்தான் பானங்காட்டூரில் நீங்காது இருக்கும்
பயில்வானுக்கடிமைக்கட் பயிலாதார்பயில்வென்னே.
PAYIL VAANUK KADI MAIK KAT PAYILAATHAAR PAYILVENNEEA

That lard Siva’s slavery service not getting practice, those persons activities are not worthwhile one
பெருமானுக்குச் செய்யும் தொண்டில் பயிலாதவரது பயிற்சி தான் என்னே
878 மெய்யன்வெண்பொடிபூசும் விகிர்தன்வேதமுதல்வன்
MEIYAN VEN PODI POOSUM VIGIRTHAN VETHA MUTHAL VAN

The true matter form of existing lard Siva and the white asheses are adorned in different form and who is leader to deevaas
மெய்ப் பொருளாய் உள்ளவனும் வெள்ளிய நீற்றை பூசுகின்ற வேறுபட்ட இயல்பினனும் வேதத்திற்குத் தலைவனும்
கையில்மான்மழுவேந்திக் காலன்காலம்அறுத்தான்
KAIYIL MAAN MALU VENTHI KAALAN KAALAM ARUTH THAAN

On the hand carried malu battle force and then death god ema whose life period is broken in that half period
கையில் மான் மழுக்களை ஏந்துபவனும் காலனது காலத்தை இடைமுரி வித்தவனும்
பைகொள்பாம்பரையார்த்த படிறன்றன்பனங்காட்டூர்
PAI KOL PAM PARAI YAARTHTHA PADI RAN RAN PANGKATTUR

The dancing snake is tied on the waist place as belt in culprit form and is leader to all in that form of lard Siva who has descended in the thiru ven parthan panam kaatoor temple place
படத்தை கொண்ட பாம்பினை அரையின் கண் கட்டியுள்ள கள்வனும் யாவர்க்கும் தலைவனும் ஆகிய தனது திருவன்பார்த்தான் பானங்காட்டூரில் எழுந்தருளி இருக்கின்ற
ஐயன்எங்கள்பிரானை அறியாதார்அறிவென்னே.
AIYAN ENGAL PIRAANAI ARIYAATHAAR ARI VENNEEA

That form of lard Siva whose gaana knowledge not known that persons other knowledge is worthless one
எங்கள் பெருமானை அறியாதவரது அறிவு தான் என்னே
879 வஞ்சமற்றமனத்தாரை மறவாதபிறப்பிலியைப்
VANJASA MATRA MANATH THAARAI MARAVAATHA PIRAP PILIYAI

Without any vengeance possessed that pure form of mind possessed persons are not forgotten by lard Siva and who do not have any birth in this world
வஞ்சனை அற்ற தூய மனம் உடையவரை என்றும் மறவாதவனும் பிறப்பு இல்லாதவனும்
பஞ்சிச்சீறடியாளைப் பாகம்வைத்துகந்தானை
PANJIN SEERADI YAALAI PAAGAM VAITH THU KANTHAANAI

The red color cotton like the small sort feet are possessed that form of lardess is given willingly his left part of his body
செம் பஞ்சு ஊட்டிய சிறிய அடிகளை உடையாளாகிய உமாதேவியை ஒரு பக்கத்தில் விரும்பி வைத்துள்ளவனும் ஆகிய
மஞ்சுற்றமணிமாட வன்பார்த்தான்பனங்காட்டூர்
MANJUTRA MANI MAADA VAN PAARTH THAAN PANAGKATTUR

The clouds are crawyalling and ruby diamonds are studded mansions are filled place is thiru ven paarthan panam kaatoor place
மேகங்கள் பொருந்திய மணிகள் இழைத்த மாடங்களை உடைய திருவன்பார்த்தான் பானங்காட்டூரிலும்

நெஞ்சத்தெங்கள்பிரானை நினையாதார்நினைவென்னே.
NENJASATH THENGAL PIRAANAI NINAIYAATHAR NINAI VENNEEA

In that form lard Siva descended in my mind and those disciples whose do not thinking him that persons thinking are not worth one
எங்கள் நெஞ்சத்திலும் எழுந்தருளி இருக்கின்ற பெருமான நினையாதவரது நினைவுதான் என்னே
880 மழையானுந்திகழ்கின்ற மலரோனென்றிருவர்தாம்
MALAIYAANUN THIGAL KINRA MALARO NEN RIRUVAR THAAM

The dark color cloud form of thirumal and flower place dwelling bharma and those two persons are

மேகம் போலும் நிறத்தினர் ஆகிய திருமாலும் மலரில் இருப்பவனாகிய பிரமனும் என்ற இருவரும்
உழையாநின்றவருள்க உயர் வானத் துயர்வானைப்
ULAIYAA NINRAVAR ARULGA UYAR VAANATH THUYAR VANAI

Doing service under lard Siva’s feet and then pray under lard Siva’s feet and in that space place standing form
பணி செய்கின்றவராய் நினைந்து நிற்க உயர்ந்த வானத்தினும் உயர்ந்து நிற்பவனும்
பழையானைப்பனங்காட்டூர் பதியாகத்திகழ்கின்ற
PALAIYANAI PANAGATTUR PATHI YAGATH THIGAL KINRA

And in all the place he is good old person and who has taken thiruven parthan temple place as his dwelling place
எல்லாரினும் பழையவனும் ஆகிய திருவன்பார்த்தான் பானங்காட்டூரைத் தனது ஊராக கொண்டு விளங்குகின்ற
குழைகாதற்கடிமைக்கட் குழையாதார்குழைவென்னே.
KULAI GATHAR KADIMAIK KAT KULAI YAATHAAR KULAI VENNEEA

That ear ornament named kulai adorned lard Siva under his feet those who are not melted down that form persons mind is not worth while one
குழை அணிந்த காதினை உடைய பெருமானுக்குத் தொண்டு பெருதலின் மனம் நெகிழாதவரது மன நெகிழ்ச்சி தான் என்னே
881 பாரூரும்பனங்காட்டூர்ப் பவளத்தின்படியானைச்
PAA ROORUM PANAGATTUR PAVALATHTHIN PADI YAANAI

Lard Siva’s glory is spread all over the thiru panam kaattan temple place that coral red color form body possessed lard Siva
தனது பெயர் நிலம் முழுதும் பரவிய திருவன்பார்த்தான் பானங்காட்டூரில் எழுந்தருளி இருக்கின்ற பவளம் போலும் உருவத்தை உடைய பெருமானை
சீரூருந்திருவாரூர்ச் சிவன்பேர்சென்னியில்வைத்த
SEERURUN THIRU VAA ROOR SIVAN PER SENNIYIL VAITHTHU

The glory filled place is thiruvaaroor where descended lard Siva whose name is embedded on the head place
புகழ் மிக்க திருவாரூரில் எழுந்தருளி இருக்கின்ற சிவ பெருமானது பெயரைத் தலையில் வைத்துள்ள
ஆரூரன்அடித்தொண்டன் அடியன்சொல்அடிநாய்சொல்
AAROORAN ADITH THONDAN ADIYAN SOL ADINAAI SOL

To whom doing menial service under lard Siva’s feet by suntherer who is surrender just like dog form of I am
அப்பெருமானுக்கு அடித் தொண்டு செய்யும் அடியவனாகிய அவன் அடியின் கீழ் கிடக்கும் நாய் போலும் நம்பி
ஊரூரன்உரைசெய்வார் உயர்வானத்துயர்வாரே.
UOORAN URAI SEIVAAR UYAR VANATH THUYAR VAAREEA

That suntherer who has sung the above poems which is disseminated in other places by disciples and those disciples will ultimately settle down in the sivalogam
ஆரூரன் பாடிய இப்பாடலை அவரவர் ஊரின் கண் உரை செய்வாரும் சிவலோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர்

திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAMBALAM

June 12, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: