OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU SULIYAL

ganesheit June 12, 2019

82 திருச்சுழியல்
THIRU SULIYAL


OM THIRUCHITRAM BALAM
பண் – நட்டபாடை


SUNTHERER with searaman peruman went to thiru rameshwaram temple and then prayed there. Afterwards went to thiru keatheecharam prayed there and then went to thiru chulaiyal where prayed and then sang the following songs
In this decade describes those who are prayed lard Siva and because of that prayer the benefits are attained by them are described here

 சுந்தர மூர்த்தி நாயனார் கழறீற்றறிவாருடன் பாண்டி நாட்டில் திரு இராமேச்சுரம் பணிந்து அங்கிருந்தே திருக்கேதீச்சரத்தையும் பாடிப் பிற பதிகளையும் வணங்கிக் கொண்டு திருச்சுழியலை அடைந்து தொழுது பாடி அருளியது இத்திருப்பதிகம்.
இத்திருப்பதிகம் இறைவரை வழிபடுவார் எய்தும் பயன்களை வகுத்து அருளிச் செய்தது

திருச்சிற்றம்பலம்


832 ஊனாய்உயிர்புகலாய்அகலிடமாய்முகில்பொழியும்
YUUNAAI UYIR PUGALAAI AGAL IDAMAAI MUKIL POLIYUM


Lard Siva you are this flesh filled body form and then entered in to it in soul form and then in this broad land space form where the clouds are stayed form of pouring rain
உடம்புகள் ஆகியும் அவைகளில் புகுதலை உடைய உயிர்களாகியும் அகன்ற நிலமாகிய மேகங்கள் நின்று மழையைப்ப் பொழியும்
வானாய்வருமதியாய்விதிவருவானிடம்பொழிலின்
VANAAI VARU MATHIYAAI VITHI VARUVAA NIDAM POLILIN

and the above place existing space form and then cause and effect form of coming in this mind form stood there in the concealed form that lard Siva’s residential place is where the plantations are covered place
வானமாகியும் வினைப்பயன் வருதற்கு வழியாகிய உள்ளமாகியும் நிற்பவன் ஆகிய இறைவனது இடம் சோலைகள்
தேனாதரித்திசைவண்டினம்மிழற்றுந்திருச்சுழியல்
THENAA THARITH THISAI VAN DINAM MILATRUN THIRUCH SULIYAL

Where the honey bees are consumed honey and then singing songs that place is thirusuliyal
தேனை விரும்பி வண்டுக் கூட்டம் இசைபாடுகின்ற திருச்சுழியலாகும்
நானாவிதம்நினைவார்தமைநலியார்நமன்தமரே.
NANA VITHAM NINAI VAAR THAMAI NALIYAAR NAMAN THAMAREEA

In that place is so many ways prayed and think over and that type of disciples are not given trouble by the death god ema’s diplomats
அதனைப் பல விதங்களில் நினைப்பவர்கள்களை கூற்றுவன் ஏவலர்கள் துன்புறுத்த மாட்டார்கள்
833 தண்டேர்மழுப்படையான்மழவிடையான்எழுகடல்நஞ்
THANDER MALUP PADAIYAAN MALA VIDAIYAAN EALU KADAL NAJ

The pole form of malu battle force carrier and the young bull is possessed and then to save deevaass who has eaten from the sea emanated poison
தண்டு போல மழுப்படையை ஏந்தியவனும் இளமையான இடபத்தை உடையவனும் தேவர்கள் பொருட்டு கடலில் எழுந்த நஞ்சினை உண்டு
சுண்டேபுரம்எரியச்சிலைவளைத்தான்இமையவர்க்காத்
SUNDE PURAM EARIYA SILAI VALAITH THAAN IMAI YAVARK KAATH

To fire the three castles who has ascended on the chariot and pull the bow to shoot an arrow
திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் திண்ணிய தேரின் மேல்
திண்டேர்மிசைநின்றானவன்உறையுந்திருச்சுழியல்
THINDER MISAI NINRAA NAVAN URAIYUN THIRU CHULIYAL

That form of lard Siva descended place is thiru sulaiyal where we went
நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கின்ற திருச்சுழியலில் சென்று
தொண்டேசெயவல்லாரவர்நல்லார்துயர்இலரே.
THONDE SEYA VALLAR AVAR NALLAAR THUYAR ILAREEA

Those who has gone and then serve under his feet and then they will be happy form and will not attract the sorrow
அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள் இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவர்
834 கவ்வைக்கடல்கதறிக்கொணர்முத்தங்கரைக்கேற்றக்
KAVVAIK KADAL KATHARI KONAR MUTH THANG KARAI KETRA

The sound raising sea which has carried the pearls and then placed it on the sea shore with the help of waves
ஓசை உடைய கடல் முழக்கம் செய்து தான் கொணர்ந்த முத்துகளைக் கரையின் கண் சேர்க்க
கொவ்வைத்துவர்வாயார்குடைந்தாடுந்திருச்சுழியல்
KOVVAITH THUVAR VAAYAAR KUDAIN THAADUN THIRUCHULIYAL

And in that place the kovai fruit like red color mouth possessed ladies who are dipped in the river and then playing there and in that place lard Siva descended
அங்கு கொவ்வைக் கனி போலும் சிவந்த வாயை உடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளி இருக்கின்ற
தெய்வத்தினைவழிபாடுசெய்தெழுவாரடிதொழுவார்
THEIVATH THINAI VALI PAADU SEI THELU VAARADI THOLUVAAR

Those people who are prayed lard Siva here whose feet we will play
கடவுளை வழிபட்டு மீள்கின்றவரது திருவடிகளை வணங்குவோர்
அவ்வத்திசைக்கரசாகுவர்அலராள்பிரியாளே.
AVVATH THISAIK KARASAA GUVAR ALARAAL PIRIYAALE

Those people will rule the state where they are residing and the wealth god will not left from their state
தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர் அந்த அரசிற்கு உரியவளாகிய திருமகள் அவர்களை விட்டு நீங்காள்
835 மலையான்மகள்மடமாதிடமாகத்தவள்மற்றுக்
MALAI YAAN MAGAL MADA MAATHIDAM AGATH THAVAL MATRU

The hill king daughter named lardess Yuma devi is that young lady given his left part of his body
மலை அரசனுக்கு மகளாகிய இளைமாது தனது திருமேனியின் கண் இடப்பகுதியிளாக
கொலையானையின்உரிபோர்த்தவெம்பெருமான்றிருச்சுழியல்
KOLAI YANAIYIN URI PORTH THA VEMPERUMAAN IRUCHULIYAL

The killing instinct filled elephant and its skin is pealed and then adorned it and that form of lard Siva is descended in the thiruchuliyal temple place
கொலைத் தொழிலை உடைய யானையின் தோலைப் போர்த்துள்ள எம் பெருமானாகிய திருச்சுழியலில் எழுந்தருளி இருக்கின்ற
அலையார்சடையுடையானடிதொழுவார்பழுதுள்ளம்
ALAIYAAR SADAI YUDAIYAANADI THOLUVAR PALU THULLAM

That water filled hair possessed lard Siva and then whose feet are prayed and those disciples are without any sin not approached form living in this world
நீர் பொருந்திய சடையை உடையவனது திருவடியைத் தொழுபவர்கள் மனத்தில் குற்றம் பொருந்தாதவர் ஆவர்
நிலையார்திகழ்புகழால்நெடுவானத்துயர்வாரே.
NILAIYAAR THIGAL PUGALAL NEDU VANATH THUYAR VAARE

And then in this world established the glory and with that happiness and then at the end of the life they will go to the upper world
இந்த உலகில் விளங்குகின்ற புகழை நாட்டிய மகிழ்வோடு நீண்ட வான் உலகத்திற்கு மேல் செல்வார்கள்
836 உற்றான்நமக்குயரும்மதிச்சடையான்புலன்ஐந்துஞ்
UTRAN NAMAK KUYARUM MATHI SADAIYAN PULAN AINTHUJ

Lard Siva who is intimate relative to us and glory filled moon is adorned on the hair and then five sense organs
நமக்கு உறவாய் உள்ளவனும் மேன்மை தங்கிய சந்திரனை அணிந்த சடையை உடையவனும் ஐந்து புலன்களையும்
செற்றார்திருமேனிப்பெருமானூர்திருச்சுழியல்
SETRAR THIRU MENI PERUMA NUUR THIRUCHULIYAL

Are won over that form of lard Siva who has descended in the thiru chuliyal temple place
வென்று பொருந்திய திருமேனியை உடைய பெருமானும் ஆகிய இறைவன் ஊர் திருச்சுழியலே
பெற்றான்இனிதுறையத்திறம்பாமைத்திருநாமங்
PETRAAN INI THURAIYATH THIRAM PAAMAITH THIRU NAMAG

Where his disciples are stayed there permanently and chanted his name all the time
அதன் கண் நீங்காது இனிது எழுந்தருளி இருக்கப் பெற்ற அவனது திருநாமத்தைப் பயின்றவர்
கற்றாரவர்கதியுட்செல்வர்ஏத்தும்மதுகடனே.
KATRAR AVAR KATHI YUT SELVAR EATH THUM MATHU KADANE

They will ultimately attain the highly regarded upper world so in this world living people you may chant his name and then praise him and this is your duty in this world
உயர் கதியில் செல்வர் ஆதலின் உலகீர் அவனது திருப்பெயரைப் போற்றுமின் அதுவே உங்களுக்குக் கடமையாவது
837 மலந்தாங்கியபாசப்பிறப்பறுப்பீர்துறைக்கங்கைச்
MALAN THAANGIYA PAASAP PIRAP PARUP PEER THURAI KANGAI

The impurities filled lust feelings from it emanated repeated birth and death and those people who are wanted to cut of these repeated birth and death and where the bathing Ghats are filled the river Ganges
மாசினை உடைய பாசத்தால் வருகின்ற பிறப்பினால் அறுக்க விரும்புகின்றவர்க்ளே துறைகளை உடையதாதற்கு உரிய கங்கையாகிய
சலந்தாங்கியமுடியான்அமர்ந்திடமாந்திருச்சுழியல்
SALAM THANGIYA MUDIYAAN AMARNTHIDA MANN THIRUCHULIYAL

That water filled hair possessed lard Siva who has descended place is Thiru chuliyal
நீரினைத் தாங்கி உள்ள முடியை உடைய சிவபெருமான் எழுந்தருளி இருக்கின்ற இடமாகிய திருச்சுழியலை
நிலந்தாங்கியமலராற்கொழும்புகையால்நினைந்தேத்துந்
NILAN THAANGIYA MALAR KOLUM PUKAIYAL NINAINTH EATHTHU

And this world bearing the flower garden grown flowers and with fragrance filled fumes and with it pray lard Siva
நிலம் சுமந்து நிற்கின்ற மலர்களாலும் செழுமையான நறும் புகைகளாலும் வழிபட்டு
தலந்தாங்கியபுகழாம்மிகுதவமாஞ்சதுராமே.
THALAN THAANGIYA PUGALAAM MIGU THAVA MAANJ SATHU RAAME

And those disciples will live glory filled form in this world and that capacity you have possessed in this world
உமக்கு இந்த உலகம் சுமக்க தக்க புகழோடு கூடிய மிக்க தவம் உளதாகும் திறல் உளதாகும்
838 சைவத்தசெவ்வுருவன்றிருநீற்றன்னுருமேற்றன்
SAIVATH THA SEV YURUVANRIRU NETTRAN NURU MEETRAN

In the siva Ahamaass said form you have possessed that appearance and have red color body and then adorned the sacred white ashes all over the body and thunder clouds sounds are possessed the bull you have
சிவ ஆகமங்களில் சொல்லப்பட்ட வேடத்தை உடைய சிவந்த திருமேனியை உடையவனாய் திருநீற்றை அணிபவனும் இடிபோலும் குரலை உடைய இடபத்தை உடையவனும்
கைவைத்தொருசிலையால்அரண்மூன்றும்மெரிசெய்தான்
KAIVAITH THORU SILAI YAAL ARAN MUNRUM MERI SEI THAAN

On the hand possessed the one arrow three castles are fired and destroyed it
கையின் கண் வைத்த ஒரு வில்லாலே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும்
தெய்வத்தவர்தொழுதேத்தியகுழகன்றிருச்சுழியல்
THEIVATH THAVAR THOLU THEETHTHIYA KULAGAN RIRUCHULIYAL

The godly qualities filled disciples are prayed and then praised that handsome form of lard Siva whose dwelling place is thiruchuliyal
தெய்வத் தன்மை உடைய தவத்தோர் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவனது திருச்சுழியலை
மெய்வைத்தடிநினைவார்வினைதீர்தல்லெளிதன்றே.
MEI VAITH THADI NINAI VAAR VINAI THER THAL ELITHANRE

And those disciples are placed him in there mind that disciples bad deeds will be removed easily
உள்ளத்துள் வைத்து அவனது திருவடியை நினைப்பவரது வினைகள் நீங்குதல் எளிது
839 பூவேந்தியபீடத்தவன்றானும்மடல்அரியுங்
POO VENTHIYA PEEDATH THAVAN RAANUM MADAL ARIYUNG

The lotus flower place seated bharma and mighty powerful thirumal
மலராகிய உயர்ந்த இருக்கையில் உள்ளவன் ஆகிய பிரமனும் வலிமை உடைய திருமாலும்
கோவேந்தியவினையத்தொடுகுறுகப்புகல்அறியார்
KOVENTHIYA VINAI YATH THODU KURUGAM PUGAL ARIYAR

In that sub lard leadership status they are approached him so they are unable to see him
தலைமை அமைந்த வணக்கத்தோடு அணுகச் சென்று அடைதலை மமதையின் காரணமாக அறிய மாட்டர்கள்
சேவேந்தியகொடியானவன்உறையுந்திருச்சுழியல்
SEVENTHIYA KODIYAA NAVAN URAIYUN THIRUCHULIYAL

And lard Siva who has carried bull flag on his hand and that lard descended place is thiruchuliyal
கொடியாகப் பெற்ற சிவபெருமான் எழுந்தருளி இருக்கின்ற திருச்சுழியலில்
மாவேந்தியகரத்தான்எமசிரத்தான்றனதடியே.
MAA VENTHIYA KARATH THAAN EAMASIRATH THANRANA THADIYEEA

And then lard Siva who has carried stage on his hand and my leader who has seated on our heads and then whose sacred feet
மானை போற்றிய கையை உடையவனும் எங்கள் தலைகளின் மேல் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளை
840 கொண்டாடுதல்புரியாவருதக்கன்பெருவேள்விச்
KONDADUTHAL PURIYA VARU THAKKAN PERUVELVI

And thakken who has ego filled state considered as god and then conducted yagaa fire
தன்னையே மதித்துக் கொள்ளுதலைச் செய்கின்ற தக்கனது பெருவேள்வியை
செண்டாடுதல்புரிந்தான்திருச்சுழியற்பெருமானைக்
SEN DAADUTHAL PURIN THAAN THIRU SULIYAR PERU MANAI

Lard Siva who has kicked it just like ball and blasted the yagaa fire and in thatform of lard Siva descended in the thirusuliyal temple place
பந்தாடுதல் போல் தகர்த்தான் பின் வீசி விளையாடியவன் ஆகிய திருச்சுழியலில் எழுந்தருளி இருக்கின்ற இறைவனை
குண்டாடியசமண்ஆதர்கள்குடைச்சாக்கியர்அறியா
KUNDAADIYA SAMAN AATHAR KAL KUDAI SAKKIYAR ARIYAA

Force full idiot form of talking the Smanaas and that ignorant persons and umbrella carried buthas and because of ignorance
மூர்க்கத் தன்மை பேசுகின்ற சமணராகிய அறிவிலிகளும் குடையை உடையவராகிய புத்தர்களும் அறியாமல்
மிண்டாடியஅதுசெய்ததுவானால்வருவிதியே.
MINDAADIYA ATHU SEITHATHU VAANAL VARU VITHI YEEA

The mighty form ward conflict and lost their ground in this world because it is there misdeed only
வலிமை பொருந்திய வாது செய்து அது வண்ணமே யாவர்களாயின் அஃது அவர்கள் வினைப்பயனே ஆகும்
841 நீரூர்தருநிமிலன்றிருமலையார்க்கயல்அருகே
NERUR THARU NIMILAN RIRU MALAIYAARK KAYAL ARUKEEA

The water falls are flowing in that lard Sivas sacred hills where the echo emanated form
அருவிகள் பாய்கின்ற இறைவனது திருமலையில் எதிரொலி உண்டாக
தேரூர்தரும்அரக்கன்சிரம்நெரித்தான்றிருச்சுழியல்
THEROOR THARUM ARAKKAN SIRAM NERITH THAAN RIRUCHULIYAL

Where Ravana who has driven his chariot and that Ravana’s head is smashed and in thirusuliyal place
அதன் அருகில் தனது ஊர்தியைச் செலுத்திய இராவணனது தலையை நெரித்தவனும் திருச்சுழியலைத்
பேரூரெனஉரைவானடிபெயர்நாவலர்கோமான்
PERURENA URAIVANDI PEYAR NAVALAR KOMAN
Is considered as big temple place and then descended there and then where the lard Siva’s name is got and thiru navaloor place leader
தனது பெரிய ஊராகக் கொண்டு எழுந்தருளி இருப்பவனும் ஆகிய இறைவனது திருவடிப் பெயரைப் புனைந்தவனும் திருநாவலூரார்க்குத் தலைவனும்
ஆரூரனதமிழ்மாலைபத்தறிவார்துயர்இலரே.
ARURANA THAMIL MALAI PATH THARIVAAR THUYAR ILAREEA

Whose name is nambi aarroren alias suntherer and those disciples who are realized the meaning of these ten poems they will not entertain any sorrow in this world
ஆகிய நம்பி ஆரூரது இத்தமிழ் பாடல்கள் பத்தினையும் உணர்கின்றவர் துன்பம் யாதும் இலராவர்.

இத்தலம்பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – இணைத்திருமேனிநாதர், தேவியார் – துணைமாலைநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம் om thiru chitrambalam

June 12, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: