THIRU KUDALAI AATROOR
85 திருக்கூடலையாற்றூர்
THIRU KUDALAI AATROOR
OM THIRUCHITRAMBALAM
பண் – புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
Saint Suntherer prayed in so many temple places and then entered in the thirkudalai place and then enquired there the way to thiru muthu gunram. At that time lard Siva in the bharmin form appeared before him and then inform him that he should proceed in the way of kudalai aatroor
சுந்தர மூர்த்தி சுவாமிகள் பல தலங்களைத் தரிசித்து வரும் போது கூடலையாற்றூருக்கு அருகில் வந்தும் அத்தலத்திற்குச் செல்லாமல் திருமுதுகுன்றம் நோக்கிச் செல்லல் ஆனார் அப்பொது சிவபெருமான் வழியிடை ஓர் அந்தணராய் நிற்க அவரைக் கண்டு சுந்தரர் முதுகுன்றுக்கு வழியாது என்று வினவினார் அந்தக் கூடலையாற்றூர் வழியாகப் போக வேண்டும் என்று பெருமான்
862 வடிவுடைமழுவேந்திமதகரிஉரிபோர்த்துப்
VADIYUDAI MALU VENTHI MATHAGARI URI PORTH THUP
The sharpened malu battle force carried on hand and madness filled the elephant skin is adorned as upper dress
கூர்மையை உடைய மழுப்படையை ஏந்தி மதத்தை உடைய யானையினது தோலைப் போர்த்துக் கொண்டு
பொடியணிதிருமேனிப்புரிகுழல்உமையோடுங்
PODIYANI THIRU MENIP PURI KULAL UMAI YODUNG
Where lard Adorned the sacred ashes and with well twisted hair style possessed lardess yumadevi
திருநிற்றை அணிந்த பெருமான் பிண்ணிய கூந்தலை உடைய உமாதேவியோடும்
கொடியணிநெடுமாடக்கூடலையாற்றூரில்
KODIYANI NEDU MAADAK KOODALAI YAATRURIL
The flogs are hoisted and high raised mansons are filled place is thiru kudalai aatroor temple place lard Siva descended
கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களை உடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளி இருக்கின்ற
அடிகளிவ்வழிபோந்தஅதிசயம்அறியேனே.
ADIGALIV VALI PONTHA ATHISAYAM ARIYEENEEA
And in that way I am not proceeded and that astonishment form of act I do not know it and what type of poor person I am
இந்த வழி இடை என் முன் வந்து வியத்தகு செயலை அடியேன் அறியாதெ ஒழிந்தேன் அஃது எனது ஏழையை இருந்தவாறு
863 வையகம்முழுதுண்டமாலொடுநான்முகனும்
VAIYAGAM MULUTHUNDA MALODU NAAN MUGANUM
The whole world is engulfed by thirumal and with bharma
உலகம் முழுமையும் உண்ட திருமாலோடும் பிரமதேவனோடும்
பையரவிளவல்குற்பாவையொடும்முடனே
PAIYARA VILAVAL KUR PAAVAI YODUM MUDANE
The dancing snake like the waist possessed the lardess Yumathevi who is you attractive doll form and then mingled with her
அரவப் படம் போலும் அல்குலை உடைய இளைய பாவை போலும் உமாதேவியோடும் உடனாகி
கொய்யணிமலர்ச்சோலைக்கூடலையாற்றூரில்
KOYYANI MALAR SOLAI KOODALAI YAATRURIL
To be easily plucking form of lovely flowers are filled plantations are covered place is Thiru kudalai aattoor where lard Siva descended in leader form
கொய்யப்படுகின்ற அழகிய பூக்களை உடைய சோலைகளை உடைய திருக்கூடலை ஆற்றூரில் எழுந்தருளி இருக்கின்ற தலைவன்
ஐயனிவ்வழிபோந்தஅதிசயம்அறியேனே.
AIYA NIV VALI PONTHA ATHISAYAM ARIYEENEEA
On the way lard Siva appeared before me that form of astonishing act I am his disciple not known it what type of poor person I am
இந்த வழியிடை என் முன் வந்து வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன் அஃது என் ஏழைமை இருந்தவாறு
864 ஊர்தொறும்வெண்டலைகொண்டுண்பலிஇடுமென்று
UOOR THORUM VENDLAI KONDUN PALI IDUMENRU
To travel all the hamlets requested for begging food in the white skull and then consumed it
ஊர் தோறும் சென்று வெள்ளிய தலையோட்டை ஏந்தி பிச்சை இடுமின் என்று இரந்து உண்டு
வார்தருமென்முலையாள்மங்கையொடும்முடனே
VAAR THARU MEN MULAI YAAL MANGAI YODUM MUDANEEA
The bra adorned parvathi with her appearing in together form
கச்சு அணிந்த மெல்லிய தனங்களை உடையவளாகிய உமாதேவியோடு உடனாய்
கூர்நுனைமழுவேந்திக்கூடலையாற்றூரில்
KOOR NUNAI MALU VEEN THIK KUUDALAI YATRURIL
The sharpened malu battle force carried on his hand and then descended in the thirukudalai attroor temple place in bliss form appearing lard Siva
கூரிய முனையை உடைய மழலை ஏந்திக் கொண்டு திருக்கூடலை ஆற்றூரில் எழுந்தருளி இருக்கின்ற பேரன்பு உடைய பெருமான்
ஆர்வனிவ்வழிபோந்தஅதிசயம்அறியேனே.
AARVA NIV VALI PONTHA ATHISAYAM ARIYEENEEA
On the way lard Siva appeared and then instructed me to go to thiru kudalai attoor temple way that astonishing act I am not known it what a poor person I am
இந்த வழி இடை என் முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன் இஃதே என் ஏழைமை இருந்தவாறு
865 சந்தணவும்புனலுந்தாங்கியதாழ்சடையன்
SANTHANAYUM PUNALUN THANGIYA THAAL SADAIYAAN
Lard Siva who has carried the cut form of curved moon and lovely Ganges water on his head that form of long pigtail possessed lard Siva
பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கி இருக்கின்ற நீண்ட சடை முடியை உடையவனாய்
பந்தணவும்விரலாள்பாவையொடும்முடனே
PAN THANAYUM VIRALAAL PAAVAI YODUM MUDANEEA
The ball like finger tips are possessed and that doll like form of appearing lardess Yumadevi with her mingled form
பந்தின் கண் பொருந்திய விரலை உடையவளாகிய பாவை போலும் உமையோடும் உடனாகி
கொந்தணவும்பொழில்சூழ்கூடலையாற்றூரில்
KON THANAVUM POLIL SOOL KODALY ATTRUURIL
The flower bunches are filled in the plantations are covered place is thiru kudalai attoor place lard Siva descended in the grace filled form
பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருக்கூடலை ஆற்றூரில் எழுந்தருளி இருக்கின்ற அழகிய கருணையை உடையவனாகிய பெருமான்
அந்தணன்வழிபோந்தஅதிசயம்அறியேனே.
ANTHANAN VALI PONTHA ATHI SAYAM ARIYEENEEA
On the way lard Siva intervened and then appeared before me that astonishing act I am not known and what type of poor person I am
இந்த வழி இடை என் முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன் அஃது என் ஏழைமை இருந்தவாறு
866 வேதியர்விண்ணவரும்மண்ணவருந்தொழநற்
VETHIYAR VINNAVARUM MANNAVARUN THOLA NAR
The bharmins and deevaas and this land people are praying before me and stands there and then good
அந்தணரும் தேவரும் மக்களும் வணங்கி நிற்க நல்ல
சோதியதுருவாகிச்சுரிகுழல்உமையோடுங்
SOTHIYA THURU VAA KI CHURI KULAL UMAIYODUNG
LIGHT filled hair possessed form of appearing lardess yumadevi
ஒளி உருவமாய் சரிந்த கூந்தலை உடைய உமாதேவியோடும்
கோதியவண்டறையுங்கூடலையாற்றூரில்
KOTHIYA VAND ARAIYUNG KOODALAI YAATROOIL
And in the flower place pollens are penetrated by the honey bees and then which raise the humming sounds and that place is thiru kudalai attoor
பூக்களில் மகரந்தத்தைக் கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலை ஆற்றூரில்
ஆதியிவ்வழிபோந்தஅதிசயம்அறியேனே.
AATHIYIV VALI PONTHA ATHISAYAM ARIYEENEEA
Where lard Siva descended in the principal form who has come over on my way in that astonishing act I am not known and what type of poor person I am
எழுந்தருளி இருக்கின்ற முதல்வன் இந்த வழி இடை என் முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன் அஃதே என் ஏழைமை இருந்தவாறு
867 வித்தகவீணையொடும்வெண்புரிநூல்பூண்டு
VITHTHAGA VEENAI YODUM VEN PURI NOOL POONDU
With the excellent veena instrument and white three knotted thread adorned form of
தான் வல்லதாகிய விணையோடும் வெள்ளிய முப்புரி நூலை அணிந்து
முத்தனவெண்முறுவல்மங்கையொடும்முடனே
MUTHTHANA VEN MURUVAL MANGAI YODUM MUDANEEA
The pearls like white laughter teeth are possessed lardes yumathevi and with her clubbed form of
முத்துப் போலும் வெள்ளிய நகையினை உடைய உமாதேவியோடும் உடனாகி
கொத்தலரும்பொழில்சூழ்கூடலையாற்றூரில்
KOTH THALARUM POLIL SOOL KOODALAI YAAT ROOIL
The flowers are bunch form bloomed of and that flower plantations are covered place is thiru kudalai aattoor temple place where lard Siva descended
பூக்கள் கொத்தின் கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலை ஆற்றூரில் எழுந்தருளி இருக்க
அத்தனிவ்வழிபோந்தஅதிசயம்அறியேனே.
ATHTHAN IV VALI PONTHA ATHISAYAM ARIYEENEEA
Who is my father intervened on the way that type of astonishing act I am not known and what type of poor person I am
எந்தை இந்த வழி இடை என் முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன் இஃதே என் ஏழைமை இருந்தவாறு
868 மழைநுழைமதியமொடுவாளரவஞ்சடைமேல்
MALAI NULAI MATHIYA MODU VAALARA VANJ SADAIMEAL
On the cloud place penetrating the moon and wild snake is kept on the hair place
மேகங்கள் நுழைகின்ற சந்திரனையும் கொடிய பாம்பையும் சடைக் கண் வைத்து
இழைநுழைதுகிலல்குல்ஏந்திழையாளோடுங்
ILAI NULAI THUKILAL KUL EAAN THILAI YALODUNG
The intricate design filled the high value dress is adorned and that attractive ornaments are possessed and that form of lardess yumadevi with her clubbed form
நுண்ணிய இழை பொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும் தாங்கிய அணிகலன்களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி
குழையணிதிகழ்சோலைக்கூடலையாற்றூரில்
KULAIYANI THIGAL SOLAIK KOODALAI YAAT ROORIL
The tender soft leaves are possessed plantation covered place is thiru kudalai aattroor temple place where lard Siva is descended
தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளை உடைய திருக்கூடலை ஆற்றூரில் எழுந்தருளி இருக்கின்ற
அழகனிவ்வழிபோந்தஅதிசயம்அறியேனே.
ALAGAN IV VALI PONTHA ATHISAYAM ARIYEENEEA
That handsome form of lard Siva who has intervened on my way and informed me to go through thiru kudalai attoor way and I am not known it what type of poor person I am
அழகன் அந்த இந்த வழி இடை என் முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன் இஃதே என் ஏழைமை இருந்தவாறு
869 மறைமுதல்வானவரும்மாலயன்இந்திரனும்
MARAI MUTHAL VAANA VARUM MAAL AYAN INTHIRA NUM
In the veetha place said so many deevaas in leader ship possessed place and those deevaas Inthira is the head
வேதத்தில் சொல்லப்பட்ட தலைமைகளை உடைய பலராகிய தேவரும் அத்தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இந்திரனும்
பிறைநுதல்மங்கையொடும்பேய்க்கணமுஞ்சூழக்
PIRAI NUTHAL MANGAI YODUM PEIK KANAMUJ SUULAK
The curved moon like fore head possessed lardess Yumadevi and the ghost clusters are covered form
பிறை போலும் நெற்றியை உடைய உமாதேவியோடும் பேய் கூட்டமும் சூழ்ந்த
குறள்படையதனோடுங்கூடலையாற்றூரில்
KURAN PDAI YATHANO DUNG KOODALAI YAATROORIL
பூதப் படையோடும் திருக்கூடலை ஆற்றூரில் எழுந்தருளி இருக்கின்ற
அறவனிவ்வழிபோந்தஅதிசயம்அறியேனே.
ARAVANIV VALIPONTHA ATHISAYAM ARIYEENEEA
That punniya form of lard Siva who has intervened on my way that form of astonishing act I am not known and what type of poor person I am
புண்ணியனாகிய பெருமான் இந்த வழி இடை என் முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன் இஃதே என் ஏழைமை இருந்தவாறு
870 வேலையின்நஞ்சுண்டுவிடையதுதானேறிப்
VELAIYIN NANJUNDU VIDAIYATHU THANERIP
In the sea place emanated the poison is consumed and then ascended on the back of the bull and then moved everywhere
கடலின் கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து
பாலனமென்மொழியாள்பாவையொடும்முடனே
PAALANA MEN MOLI YAAL PAVAI YODUM MUDANEEA
The milk like sort wards are speaking lardess Yumadevi and with her
பால் போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய
கோலமதுருவாகிக்கூடலையாற்றூரில்
KOLA MATHURU VAAGI KOODALAI YAATROORIL
In that attractive appearance form of appearing in the Thiru kudalai atroor temple place where lard Siva descended
கோலமே தனது உருவமாகக் கொண்டு திருக்கூடலை ஆற்றூரில் எழுந்தருளி இருக்கின்ற
ஆலனிவ்வழிபோந்தஅதிசயம்அறியேனே.
ALANIV VALI PONTHA ATHISAYAM ARIYEENEEA
In the papal tree shadow place seated Lard Siva who has appeared before me that astonishing act I am not known and what type of poor person I am
ஆல் நிழல் பெருமான் அந்த வழி இடை என் முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன் இஃதே என் ஏழைமை இருந்தவாறு
871 கூடலையாற்றூரிற்கொடியிடையவளோடும்
KOODALAI YAAT URIR KODI YIDAI YAVALODUM
In the Thiru kudalai attoor temple place the soft tender creeper like waists are possessed lardess yumadevi and with her
திருக்கூடலை ஆற்றூரில் கொடி போலும் இடையினை உடையவளாகிய உமா தேவியோடும்
ஆடலுகந்தானைஅதிசயம்இதுவென்று
AADAL UGAN THAANAI ATHISAYAM ITHU VENRU
That grace filled form of act enacted by lard Siva where lard Siva descended and that act is magic form of one and in that way said
அருள் விளையாட்டை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற பெருமானை அவன் செய்த இச்செயல் அதிசயம் என்று சொல்லி
நாடியஇன்றமிழால்நாவலவூரன்சொற்
NAADIYA IN RAMILAL NAVALVOORAN SOL
With good wards are selected form sang the Tami poems by thirunavalloor place descended suntherer
ஆராய்ந்து இனிய தமிழால் திருநாவலூரானாகிய நம்பி ஆரூரன் பாடிய
பாடல்கள்பத்தும்வல்லார்தம்வினைபற்றறுமே.
PADALGAL PATH THUM VALLAAR THAM VINAI PAT RARU MEEA
Those disciples who are sang the above ten poems and their bad deeds will be eliminated this is certain one
இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை பற்றறக் கெடுதல் திண்ணம்
திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAMBALAM