OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PARUPATHAM

ganesheit June 11, 2019

79 திருப்பருப்பதம்
THIRU PARUPATHAM


OM THIRUCHITRAMBALAM
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்


Sunthars mooryhi nayanaar while staying in the thiru kallathi hills who has think over so many temples and sang the following songs
சுந்தர நாயனார் திருகாலத்தி மலையை தொழுது அங்கு இருக்கும் நாளில் திருப்பதிகத்தை நினைந்து அங்கு சென்று பணிந்தது போல் மகிழ்ந்து பாடி அருளியது இத்திருப்பதிகம்.


802 மானும்மரைஇனமும்மயில்இனமுங்கலந்தெங்குந்
MAANUM MARAI INAMUM MAYIL INAMUNG KALAN THENGU

The deer’s and stages cluster and peacocks clusters are mingled every where
மான்களின் கூட்டமும் மறைகளின் கூட்டமும் மயில்களின் கூட்டமும் எங்கும் பொருந்தி
தாமேமிகமேய்ந்துதடஞ்சுனைநீர்களைப்பருகிப்
THAME MIGA MEEINTHU THADANJ SUNAI NEER KALAI PARUGI

As per its wish it has searched its food and ate it and big dames from it water is drunk
தம் விருப்பப் படியே தமக்குரிய உணவுகளை தேடி உண்டு பெரிய அணைகளின் உள்ள நீரைக் குடித்து
பூமாமரம்உரிஞ்சிப்பொழிலூடேசென்றுபுக்குத்
POOMAA MARAM URINSI POLIOODE SENRU PUKKU

And the bloomed form of trees where it touched form moved
பூத்த பெரிய மரங்களில் உராய்ந்து அவற்றின் செறிவூடே சென்று
தேமாம்பொழில்நீழல்துயில்சீபர்ப்பதமலையே.
THEMAAM POLIL NILAL THUYIL SEEPARPATHA MALAIYEEA

In the sweet form of mango tree shadow sleeping place is thiru paruppatham and that hill is lard Siva’s hill
தேமா மரச் சோலையின் நிழலில் உறங்குகின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே எங்கள் சிவபிரானது மலை
803 மலைச்சாரலும்பொழிற்சாரலும்புறமேவரும்இனங்கள்
MALAI SAARALUM POLIR SAARALUM PURAMEEA VARUM INANGAL

The hunters are in the hill valley place and plantations away place where moving elephants are trapped
குறவர்கள் தங்கள் மலைப்பக்கங்களுக்கும் சோலைப் பக்கங்கட்கும் அப்பால் பட்ட இடங்களிலும் வருகின்ற யானைகளைப் பற்றி
மலைப்பாற்கொணர்ந்திடித்தூட்டிடமலங்கித்தனகளிற்றை
MALAI PAAR KONARN THEDI THUUTIDA MALANGI THANA KALITRAI

And then in their house place driven and then tied there and then give trouble to them and then take the food and that female elephants are thinking over that their male counterpart will also be trapped
தங்களது மனையிடத்துக் கொண்டு வந்து பிணித்து வைத்து அவைகளைத் துன்புறுத்தி உணவை உண்டு அதனைக் கண்ட பெண் யானைகள் தனது ஆண் யானைகளும் அவர்களால் பற்றப்படுங் கொல் என
அழைத்தோடியும்பிளிறீயவைஅலமந்துவந்தெய்த்துத்
ALAITH THOO DIYUM PILIREE AYAVAI ALAMANTHU VAN THEITHTHU

And the female elephants are called its male elephants and not knowing that the females are caught by them and then in rebellion way ran so many places and then got weak form
மனம் கலங்கி அவைகளை அழைத்து ஓடவும் அதனை அறியாமல் அந்த ஆண் யானைகள் தம் பெண் யானைகளை அவர்கள் கையகப் பட்டன கொள் என மருண்டு பிளிறுதலைச் செய்து பல இடங்களில் திரிந்து அவைகளைக் கொணர்ந்து இளைத்து வந்து
திகைத்தோடித்தன்பிடிதேடிடுஞ்சீபர்ப்பதமலையே.
THIGAITHODI THAN PIDI THEDIDUNSI PARPPATHA MALAIYE

And then unable to away from trap and then got astonishment and searched everywhere that place is thiru paruppatham which is lard Siva’ s hill
மீளவும் செய்வது அறியாது திகைத்து அவைகளைத் தேடி ஓடுகின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே எங்கள் சிவபிரானது மலை
804 மன்னிப்புனங்காவல்மடமொழியாள்புனங்காக்கக்
MANNIPPUNAGKA VAL MADA MOLIYAAL PUNANG KAAKKA

The corn fields are guarded by the young spinsters and soft wards are talking and while guarding it
தினைப் புனத்தின் காவலை உடைய இளமைச் சொற்களை உடைய குறமகள் அங்கு தங்க அப்புணத்தைக் காத்திருக்கும் கால்
கன்னிக்கிளிவந்துகவைக்கோலிக்கதிர்கொய்ய
KANNIK KILI VANTHU KAVAI KO LIK KATHIR KOYYA

The young form of parrot is come over there and where the sprouted corns are plucking to eat it
இளம் பெண் போலும் கிளி வந்து கிளைத்த தாளின் கண் உள்ள கதிர்களைக் கவர
என்னைக்கிளிமதியாதென்றுஎடுத்துக்கவண்ஒலிப்பத்
ENNAI KILI MATHIYAA THENRU EDUTHTHU KAVAN OLIPPATH

And on seeing it the spinster that this parrot will not give regard to my wards and then got angry and then taken a kavan to shoot a stone towards the parrot and from it raised sound
அதனைக் கண்டு அவர் இக்கிளி என்னை மதியாது போலும் என்று சினந்து கவணை எடுத்து அதனால் கல்லை ஓசை உண்டாக வீச
தென்னற்கிளிதிரிந்தேறியசீபர்ப்பதமலையே.
THENNAR KILI THIRIN THEERIYA SEEPARPPATHA MALAIYEE

And that lovely parrot gives up its mind to eat corns and then fly away that place name is thiru paruppatham which is also lard Siva’s hills
அந்த அழகிய நல்ல கிளி தன் எண்ணம் மாறி வெளியேறுகின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே எங்கள் சிவபிரானது மலை
805 மையார்தடங்கண்ணாள்மடமொழியாள்புனங்காக்கச்
MAIYAAR THADANG KANNAAL MADA MOLIYAAL PUNAGKAKKA

The eye paste is adorned that big eyes are possessed and soft wards are possessed and those spinsters
மை பொருந்திய பெரிய கண்களை உடையவளும் இளமையான சொற்களை உடையவளும்
செவ்வேதிரிந்தாயோவெனப்போகாவிடவிளிந்து
SEVVE THIRIN THAAYOO VENAP POGAA VIDA VILINTHU

And those spinsters are wandered everywhere and raised the sound AAYYAAYOO and then try to chase away the birds from the corn fields but not in a possison to drive away and then got sorrow for it
பல இடத்தும் நன்றாக திரிந்தும் ஆயோ என்று சொல்லி ஒட்டவும் போகாது விடுதலினாலே வருந்தி
கைபாவியகவணால்மணிஎறியஇரிந்தோடிச்
KAIPAAVIYA KAVANAAL MANI ERIYA IRIN THOODI

And in the hand possessed instrument named kavan on it the ruby diamonds are put and then throw it towards the birds
கையில் பொருந்திய காவனால் மணியாகிய கல்லை வீச
செவ்வாயனகிளிபாடிடுஞ்சீபர்ப்பதமலையே.
SEVVAA YANA KILI PADIDUNSI PARPPATHA MALAIYE

That red color mouth possessed parrot got afraid of with fear that place is thiru paruppatham which is also my lard siva’s residential place
சிவந்த வாயினை உடைய கிளி அஞ்சி ஓடி ஒலிக்கின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே எங்கள் சிவபிரானது மலை
806 ஆனைக்குலம்இரிந்தோடித்தன்பிடிசூழலிற்றிரியத்
AANAIK KULAM IRIN THOODITH THAN PIDI SULALIR RIYATH

The male elephant cluster which is not seen the female cluster and then searched so many places
ஆண் யானைக் கூட்டம் தனது பெண் யானைகளின் கூட்டம் மலை சாரலில் பல இடங்களிலும்
தானப்பிடிசெவிதாழ்த்திடஅதற்குமிகஇரங்கி
THAANAPPIDI SEVITHALTHTHIDA ATHARKU MIGA IRANGI

Where the other cluster is not seen so as to hear its tongue sound it has spread over its ears in all the directions so its mental for it we have got melted heart form
சென்ற இடத்தில் அப்பெண் யானைகளின் கூட்டம் ஆண் யானைகளின் கூட்டத்தை காணாது அதன் குரல் ஓசையை கேட்டல் பொருட்டு செவி தாழ்த்தி நிற்க அந்த நிலைக்கு மிக்க இரங்கி
மானக்குறஅடல்வேடர்கள்இலையாற்கலைகோலித்
MAANAK KURA ADAL VEDARGAL ILAIYAAR KALAI KOLITH

Where that mighty brave hunters are winning force filled form and then they have created a bowel with leaves and in to it the honey is squished
வீரத்தை உடைய குரவர்களாகிய வெற்றி பொருந்திய வேடர்கள் இலைகளால் கல்லைச் செய்து அமைத்து
தேனைப்பிழிந்தினிதூட்டிடுஞ்சீபர்ப்பதமலையே.
THENAI PILIN THINI THOT TIDUNJI SEER PARPPATHA MALAIYEEA

And it is given to eat to that female elephant cluster that mountain places thiruparuppatham and that is lard Siva’s hill
அவைகளின் தேனை பிழிந்து வார்த்து அப் பெண் யானை கூட்டத்திற்கு இனிதாக ஊட்டுகின்ற திருபருப்பதம் மலையே எங்கள் சிவபிரானது மலை
807 மாற்றுக்களிறடைந்தாயென்றுமதவேழங்கையெடுத்தும்
MATRU KALIR ADAINTHA YENRU MATHA VELANGAI YEDUTH THUM

The madness filled the male elephant once asked its female elephant that why you have go pro to yet another male elephant in that way said raised it long nose above the head and then got angry for that act
மதத்தை உடைய ஆண் யானை ஒன்று தன் பெண் யானையை நீ மாற்றொரு ஆண் யானையை சார்ந்தது ஏன் என்று சொல்லி கையை உயர எடுத்து சினம் மிகுந்து
ஊற்றித்தழல்உமிழ்ந்தும்மதம்பொழிந்தும்முகஞ்சுழியத்
UTRITH THALAL UMILN THUM MATHAM POLINTHUM MUGANJ SULIYA

And then from its eyes angry fire emanated and the saliva abundantly oozing from the mouth of the elephant and then squeezed its face
கண்களில் இருந்தும் நெருப்பு பொறியை சிதறி மத நீரைப் பொழிந்து முகத்தை சுளிக்க
தூற்றத்தரிக்கில்லேனென்றுசொல்லிஅயல்அறியத்
THUTRATH THARIKKILEN ENRU SOLLI AYAL ARIYA

on hearing it the female elephant if you talk filthy wards I will not live no more in this world and then cried for that sorrow wards and then wept for it and in that way it prove its innocence and cleared its male elephant mind
அதனைக் கண்ட பெண் யானை நீர் இவ்வாறு அடாப் பழி சொல்லித் தூற்றின் உயிர் தரிக்க மாட்டேன் என்று அயலறிய தனது தன தவறின்மையை ஆளறுத்து காட்டி
தேற்றிச்சென்றுபிடிசூழறுஞ்சீபர்ப்பதமலையே.
THETRI SENRU PIDI SULARUN JI PARPATHA MALAIYE

And then cleaned the mind of its counterpart that holly place is thiru paruppatham which is lard Siva’s hills
அந்த ஆண் யானையை தெளிய பண்ணி அதனை அடைகின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே எங்கள் சிவபெருமான் மலை
808 அப்போதுவந்துண்டீர்களுக்கழையாதுமுன்னிருந்தேன்
APPOTHU VAN THUNDEER KALUK KALAI YAATHU MUN NIRUNTHEEAN

These parrots which are already come and then eaten the thenai corns
And I did not chase it away and then be in mum form
தினையை உண்ண வந்த கிளிகளை பார்த்து முன்னே வந்த தினையை உண்ட உங்களுக்கு இரங்கி உங்களை அதட்டாது அப்போது வாளா இருந்தேன்
எப்போதும்வந்துண்டாலெமைஎமர்கள்சுழியாரோ
EPPOTHUM VAN THUNDA LEMAI EAMAR GAL SULIYAARO

But you are without any interruption coming here and then ate the corns and then my relatives got angry with me
ஆயினும் நீ இடையுறாது வந்து தினையை உண்டால் எங்களை எங்கள் உறவினர்கள் கோபிக்க மாட்டார்களோ
இப்போதுமக்கிதுவேதொழில்என்றோடியக்கிளியைச்
IPPOTHU MAK KITHUVE THOLIL EN RODIYA KILIYAI

So this is the act to be done and in this way it chased the birds with the help of cavan she has thrown a stone and then clear the place
ஆதலின் இப்போது உமக்குச் செய்யத்தக்க செயல் இதுதான் என்று சொல்லி அவைகளைக் கவணால் எறிகின்ற
செப்பேந்திளமுலையாள்எறிசீபர்ப்பதமலையே.
SEPPENTHILA MULAIYAAL ERI SI PARP PATHA MALAIYEEA

In that way cup like breasts are possessed that hill place spinster says that this hill is thiru paruppatham and which is lard Siva’s hills
தினைப்புனத்தைக் காக்கின்ற கிண்ணம் போலும் உயர்ந்து தோன்றும் இளமையான தனங்களை உடைய குறமகள் திருப்பருப்பதம் என்னும் மலையே எங்கள் சிவபெருமானது மலை என்று கூறுகின்றாள்
809 திரியும்புரம்நீறாக்கியசெல்வன்றனகழலை
THIRIYUM PURAM NEERAK KIYA SELVAN RANA KALALAI

In the space place wandering three castles are converted it as ashes that rich person lard Siva and then whose feet are
வானத்தில் திரிகின்ற முப்புரங்களை நீறாகச் செய்த செல்வனாகிய சிவபெருமானது திருவடிகளை
அரியதிருமாலோடயன்றானும்மவர்அறியார்
ARIYA THIRU MALOD AYAN RAANU MAVAR ARIYAAR

That rare feet is not seen by Bharama and Thitumal
அரிய திருமாலும் பிரம்மனும் ஆகிய அவர் தாமும் காணமாட்டார்
கரியின்னினம்ஓடும்பிடிதேனுண்டவைகளித்துத்
KARIYIN NINAM OODUM PIDI THENUNDAVAI KALITHTHU

With the male elephant female elephant clusters are consumed the honey and that two clusters are enjoyed it
களிற்று யானைகளின் கூட்டத்தோடு பிடி யானைகளின் கூட்டம் தேனை உண்டு பின் அந்த இரண்டு கூட்டங்களும் களித்துத்
திரிதந்தவைதிகழ்வாற்பொலிசீபர்ப்பதமலையே.
THIRI THAN THAVAI THIGALVAAR POLI SEE PARPATHA MALAIYEEA

In that lovely way wandering in that thirparupatham hills
திரிகின்ற அழகு விளங்குதலால் பொழிவு எய்திய திருப்பருப்பத மலையில்
810 ஏனத்திரள்கிளைக்கஎரிபோலமணிசிதறத்
EANATHTHIRAL KILAIKKA ERI POLA MANI SITHARA

In the hill valley place the pig cluster are ploughing the land and from that place fire firm of ruby diamonds are coming out
மலைச்சாரலில் பன்றியின் கூட்டம் நிலத்தை உழ அந்த இடத்தினின்றும் நெருப்பு போல மாணிக்கங்கள் வெளிப்பட
தீயென்றவைமலைச்சாரலிற்றிரியுங்கரடீயும்
THEY ENRA VAI MALAI SAARALIR RIYUNG KARADIYUM

On seeing that fire spark where grassing the bears cluster ran away from that place
அவற்றைக் கண்டு தினைக் கூட்டத்தை உடைய மலைச் சாரலை விடுத்து ஒடிய கரடியும்
மானும்மரைஇனமும்மயில்மற்றும்பலவெல்லாந்
MAANUM MARAI INAMUM MAYIL MATRUM PALA VELLAAN

And then afterwards stages cluster and peacock and all are
மானும் மரைக் கூட்டமும் மயிலும் மற்றும் பலவும் ஆகிய எல்லாம்
தேனுண்பொழில்சோலைமிகுசீபர்ப்பதமலையே.
THENUN POLIL SOLAI MIGU SI PARPPATHA MALAIYEEA

And then afterwards consuming the honey and got enjoyed it the flower plantations and other plants are filled place is thiru paruppatham which is lard Siva’s hills
பின்பு தேனை உண்டு களிக்கின்ற பூஞ்சோலைகளும் பிற சோலைகளும் மிகுந்து இருக்கின்ற திருப்பருப்பதம் என்னும் மலையே எங்கள் சிவபிரானது மலை
811 நல்லாரவர்பலர்வாழ்தருவயல்நாவலவூரன்
NALLAAR AVAR PALAR VAALTHARU VAYAL NAVAL OORAN

And good people are living and paddy fields are filled place is thiru navaloor and where descended suntherer
நல்லவர்கள் பலர் வாழ்வதும் வயல்களை உடையதுமான திருநாவலூரில் தோன்றிய நம்பி ஆரூரன்
செல்லல்லுறஅரியசிவன்சீபர்ப்பதமலையை
SELLALURA ARIYA SIVAN SI PARP PATHA MALAIYAI

That not sorrow filled place is thiru paruppatham hills which is belonged to lard Siva
துன்பம் உறுதல் இல்லாத சிவபெருமானது திருப்பருப்பத மலையை
அல்லலவைதீரச்சொனதமிழ்மாலைகள்வல்லார்
ALLALAVAI THEERA SONA THAMIL MAALAIGAL VALLAAR

And all people sorrow to be removed form of those disciples who are sung the above Tamil poems
யாவரது துன்பமும் தீருமாறு பாடிய இத்தமிழ் பாமாலையைப் பாட வல்லவர்கள்
ஒல்லைச்செலஉயர்வானகம்ஆண்டங்கிருப்பாரே.
OLLAI SELA UYAR VAANAGAM AANDANG IRUPPAREEA

And after some time they will enter in the upper world and then ruled it happily
சிறிது காலம் செல்லும் அளவிலே உயர்ந்த விண்ணுலகத்தை ஆண்டு அங்கு இருப்பர்

திருச்சிற்றம்பலம்
OM THHIRUCHITRAMBALAM

June 11, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: