OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KEETHARAM

ganesheit June 11, 2019

78 திருக்கேதாரம்
THIRU KEETHARAM


OM THIRU CHITRAM BALAM
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்


While Sunthar moorthy nayanaar prayed in the thiru kaalathi temple and then stayed there some more days. And in those days he went to thiru keatheram temple in that way he thinks over and then sang the following songs
In this decade he described the permanent matter in this world and blessed form to give it to all
நாயனார் திருக்காளத்தி தொழுது அங்கிருக்கும் நாட்களில் திருக்கேதார மலையை நினைந்து அங்கு சென்று பணிந்தார் போல இன்புற்றுப் பாடி அருளியது இத்திருப்பதிகம். இத்திருப்பதிகம் உளகத்தாருக்கு உறுதிப் பொருளை உணர்த்தி அருளிச் செய்தது.


792 வாழ்வாவதுமாயம்மிதுமண்ணாவதுதிண்ணம்
VALVAA VATHU MAAYAM MITHU MAN NAAVATHU THINNAM

In this world permanent form living is false one and this body is created from the soil so ultimately it will be converted in to soil form this is the only true matter to all living beings
உலகில் நிலைத்திருத்தல் என்பது பொய் அது மண்ணாய் மறைந்தொழிவதே மெய்
பாழ்போவதுபிறவிக்கடல்பசிநோய்செய்தபறிதான்
PAALPOVATHU PIRAVI KADAL PASI NOI SEITHA PARITHAAN

So to be terminated in this world is the repeated birth and death sea and the hungry creating this body is to be surrendered under lard Siva’s feet
ஆகவே இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே பசி நோய் உண்டாக்குகின்ற உடம்பு
தாழாதறஞ்செய்ம்மின்தடங்கண்ணான்மலரோனுங்
THAALATHARANJ SEIMIN THANDANKANNAAN MALARONUNG

So from today onwards please do dharma in this world. the fish like long eyes are possessed Thirumal and in the lotus flower place residing Bharma
அதன் பொருட்டு நீவீர் நீட்டி யாது விரைந்து அறத்தைச் செய் மீர்கள் பெரிய கண்களை உடையவனாகிய திருமாலும் மலரில் இருப்பவனாகிய பிரமனும்
கீழ்மேலுறநின்றான்றிருக்கேதாரமெனீரே.
KEEL MELURA NINRAAN IRUKETHAARA MENIRE

The above two persons are excavating the land and fly in the sky place to see feet and head of lard Siva in that way stand by lard Siva whose descended place is Thirukeatheram in that way you may inform it to all
நிலத்தின் கீழும் வானின் மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளி இருக்கின்ற திருக்கேதாரம் என்று சொல்லுமின்கள்
793 பறியேசுமந்துழல்வீர்பறிநரிகீறுவதறியீர்
PARIYE SUMANTHULALVEER PARI NARI KEERU VA THARIYEER

You do not do any good tharma in this world and wander with this body in this world and then after death this body is torn and then eat it by the foxes and which matter is not known by you
வேறு ஒன்றும் செய்யாது உடம்பைச் சுமந்து திரிக்கின்றவர்களே இந்த உடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவதாதலை அறிகின்றீர்
குறிகூவியகூற்றங்கொளும்நாளாலறம்உளவே
KURI KUUVIYA KUTRANG KOLUM NAALAARAM ULAVE

At the ultimate judgment day of death the death god ema come and then cornered your body and that time you will not do tharma act in this world so now itself you may do it
குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்றுவன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் உளவாகுமோ ஆகாது ஆதலின் இப்பொழுதே
அறிவானிலும்அறிவானலநறுநீரொடுசோறு
ARIVAANILUM ARIVAANALANARU NEERODU SORU

To know all the good things that deevaas and comparing with them you have more knowledge possessed person so give to new persons the fragrance filled water and good food to eat them
அறிய வேண்டுவனவற்றை அறியும் வானுலகத்தவரினும் மேலான் அறிவுடன் நல்ல நறுமணத்தை உடைய நீரையும் சோற்றையும் விருந்தினருக்கு
கிறிபேசிநின்றிடுவார்தொழுகேதாரமெனீரே.
KIRI PESI NIN RIDUVAAR THOLU KETHAARA MENEEREEA

And talk good wards and then go to thiru keetharam temple and pray him and then inform this good acts to all
இன்சொல் பேசி இடுகின்றவர்கள் வணங்குகின்ற திருக்கேதாரம் என்று சொல்லுமின்கள்
794 கொம்பைப்பிடித்தொருக்காலர்கள்இருக்கால்மலர்தூவி
KOMPAI PIDITHORUKKAALARGAL IRUKKAAL MALAR THUUVI

In this world yoga pole is put in straight form and then seated in the meditation in that form of saints and those saints are sprayed the flowers on the feet of lard Siva
உலகில் யோக தண்டத்தை ஊன்றி ஒரு வழிப் படுத்துகின்ற உயிர்ப்பினை உடைய யோகிகள் மலர்களைத் தூவி
நம்பன்னமைஆள்வானென்றுநடுநாளையும்பகலுங்
NAM PANNAMAI AALVAA NENRU NADU NAALAIYUM PAGALUNG
And day and night he is the only ruler in this world and then manthiraas are chanted form of those saints and who are liking lard Siva and who is
இவனே நம்மை ஆள்பவன் என்று நள்ளிரவிலும் பகலிலும் மந்திர ஒலியோடு விரும்பப் படுகின்ற இறைவனது
கம்பக்களிற்றினமாய்நின்றுசுனைநீர்களைத்தூவிச்
KAMPAK KALITRINAMAAI NINRU SUNAI NEER KALAI THUUVI

And ever moving form of the elephant cluster have taken so many river water and pour it on the lard Siva’s head and then prayed and then
அசைதலை உடைய ஆண் யானையின் கூட்டம் தொடர்ந்து வந்து நின்று பல அணைகளின் நீரை இறைத்து
செம்பொற்பொடிசிந்துந்திருக்கேதாரமெனீரே.
SEMPOR PODI SINTHUN THRU KETHAARA MENEEREA

And then spread over fragrance filled dust before lard Siva and that place is thiru keatharm in that way you inform to all
செம் பொன்னினது பொடியை உதிர்க்கின்ற திருக்கேதாரம் என்று சொல்லுமின்
795 உழக்கேயுண்டுபடைத்தீட்டிவைத்திழப்பார்களுஞ்சிலர்கள்
ULAKKE UNDU PADAITH THITTI VAITHTHILAPPAAR KALUNJ SILARGAL

In this world abundant wealth is earned and then in miser form of a small measurement of rice is taken and then cook it and the remaining wealth is preserved and then lost it in that way of persons are also available in this world
பொருளைத் தேடி உழக்கரிசியை இட்டு உண்ணுதல் ஒன்றைச் செய்து விட்டு எஞ்சியவற்றை தொகுத்துவைத்து பின் இழந்து போவாரும் சிலர் இந்த உலகில் உளர்
வழக்கேயெனிற்பிழைக்கேமென்பர்மதிமாந்தியமாந்தர்
VALAKE YENIR PILAIK KE MENPAR MATHI MAAN THIYA MAANTHAR

And if we talk before them tharma acts and they say it is not liked by me and then talk the philosophy that their only aim in this world is to eat and live happily and then gone away in that way real knowledge spoilt in that form of people
அவர்கள் அறம் என்றாலோ அஃது எமக்கு வேண்டா யாம் உண்டு உயிர் வாழ்வோம் என்று போவார் அறிவை அழித்துக் கொண்ட மாந்தர்களே
சழக்கேபறிநிறைப்பாரொடுதவமாவதுசெயன்மின்
SALAKKE PARI NIRAIP PAARODU THAVA MAAVATHU SEYAN MIN

In that vengeance filled form of minded persons those who are fed up their stomach this is the only penance did by them in this world so you may go away from them and do not do their act in this world
வஞ்சனையால் தம் வயிற்றை மட்டுமே நிரம்பிக் கொள்கின்ற அவர்களோடு கூடி அவர்களது நோன்பாகிய அச்செயலை நீவீர் செய்யன்மின்
கிழக்கேசலமிடுவார்தொழுகேதாரமெனீரே.
KELAK KE SALA MIDUVAAR THOLUKE THAARA MENEERE

In the early morning sacred manthra water spill over before the sun appeared in the east that early morning prayer is completed those persons are praying place is thiru keatharam and in that way you inform to all
விடியற்காலை சூரியன் வருகையை எதிர் நோக்கி நின்று மந்திர நீரை இறைத்துக் காலைச் சந்தியை முடிக்கின்றவர்கள் வணங்குகின்ற திருக்கேதாரம் என்று சொல்லுமின்
796 வாளோடியதடங்கண்ணியர்வலையிலழுந்தாதே
VAALODIYA THADAN GANNIYAR VALAIYIL ALUN THATHEEA

The sphere like long eyes are possessed and the two sides are moving the eye lids and those ladies lust web not to be trapped
வாள் போல இரு பக்கமும் ஓடுகின்ற அகன்ற கண்களை உடைய மகளிரது ஆசையாகிய வலையில் சிக்காமல்
நாளோடியநமனார்தமர்நணுகாமுனம்நணுகி
NAALOODIYA NAMANAAR THAMAR NANUKKA MUNAM NANUKI

And our living days are going to end shortly so the death god ema before come and corner our life and then now itself
உலகில் நாட்கள் ஓடிவிட்டன ஆதலின் இயமன் தூதுவர் வருவதற்கு முன் இப்பொழுதே
ஆளாயுய்ம்மின்அடிகட்கிடம்அதுவேயெனில்இதுவே
AALAYUIM MIN ADIKAT KIDAM ATHUVE YENIL ITHUVEEA

You may surrender under the feet of lard Siva and then get upliftment in life and so as to get away from death god ema you may surrender under his feet as slave and get guarded life in this world that lard Siva’s residential place is
இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழை மின்கள் அவ்வாறு பிழைத்தற்கு அவனுக்கு இடமாவது தான் யாது எனில்
கீளோடரவசைத்தானிடங்கேதாரமெனீரே.
KELOODARA VASAITH THAANIDANG KETHAARA MENEEREEA

Where lard Siva who has adorned snakes all over the body and then tied in the waist as belt and whose residential place is thru keatharam you may pray him
அரையில் கீளுடன் பாம்பைக் கட்டி உள்ள அவனது இடம் இங்கு சொல்லப்பட்டுவரும் திருக்கேதாரமே ஆதலின் அதனைத் துதிமின்கள்
797 தளிசாலைகள்தவமாவதுதம்மைப்பெறிலன்றே
THALI SAALAIGAL THAVAMAA VATHU THAMMAI PERILANRE

My dear world people in this world lard Siva’s residential places are considered as yoga fire developing place in that way people are approaching in that places and then get benefits from that places
உலகீர் தேவகோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது மக்கள் அந்த இடங்களை அடைந்தால் அன்றோ
குளியீருளங்குருக்கேத்திரங்கோதாவிரிகுமரி
KULIYEE RULANG KURUK KE THTHIRANG KOTHAAVIRI KUMARI

You may put it in to your mind and then and then go to guruchethiram Gothavari and Kumari sacred water bodies
இதனை மனத்துள் கொண் மின்கள் அவ்வாறு கொண்டு எதற்கு என்றும் திசை கிடைக்க கோதாவரி குமரி என்னும் திர்த்தங்களிலும்
தெளியீருளஞ்சீபர்ப்பதந்தெற்குவடக்காகக்
THELIYI RULANJ SI PARPPATHAN THERKU VADAKKAGA

And in the northern side direction that place guru chathiram sacred water and where you may go and then pray him in that way in the southern part situated sri parpathem and in the northern side
வடக்கென்னும் திசைக் கிடைக்க அழகிய குருச்சேத்திரத்தில் உள்ள தீர்த்தத்திலும் சென்று முழுகு மின்கள் அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும் வடக்கில்
கிளிவாழையொண்கனிகீறியுண்கேதாரமெனீரே.
KILI VAALAI YONKANI KEERI YUN KETHAARA MENIREERA

In the same manner where parrots are torn the fruits and then eat it that place thiru keathersam you may go and pray him
கிளிகள் பழத்தைக் கீறி உண்ணுகின்ற திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதிமின்கள்
798 பண்ணின்றமிழ்இசைபாடலின்பழவேய்முழவதிரக்
PANNINRAMIL ISAI PAADALIN PALAVEI MULAV ATHIRA

In this world people the musical notes are filled the Tamil poems while Singing it with it in consonance the good old the bamboo flute and mathalm drum all are raised the sounds
உலகீர் பண்ணாகிய தமிழ்ப் பாடலினது இசையைப் பாடுமிடத்து அதற்கு இசையப் பழையது ஆகிய வேய்க்குழலும் மத்தளமும் ஒலித்தலினாலும்
கண்ணின்னொளிகனகச்சுனைவயிரம்மவைசொரிய
KANNIN NOLI GANGAS SUNAI VAYIRAM MAVAI SORIYA

To give attraction to the eyes the golden like color possessed natural ponds and from it the waves are carried away and then place it on the shores and that ruby diamonds
கண்ணுக்கு இனிதாகிய ஒளியை உடைய பொன் வண்ணமாக சுனைகள் வயிரங்களை அலைகளால் எடுத்து வீசுதலினாலும்
மண்ணின்றனமதவேழங்கள்மணிவாரிக்கொண்டெறியக்
MAN NINRANA MATHA VELANGKAL MANI VAARI KON DERIYA

And on the lane place standing the mad elephants are carried the ruby diamonds and then throw it away in shattered form
நிலத்தில் நிற்கின்ற மதயானைகள் மாணிக்கங்களை வாரி இறைத்தலினாலும்
கிண்ணென்றிசைமுரலுந்திருக்கேதாரமெனீரே.
KIN NEN RISAI MURA LUNTH THIRUK KEATHAARA MENEEIRE

That place is all the time the sound KINN form raising that place is thiru keatharam and then you may inform it to all
கிண் என்கின்ற ஓசை இடையறாது ஒலிக்கின்ற திருக்கேதாரம் என்று சொல்லுமின்கள்
799 முளைக்கைப்பிடிமுகமன்சொலிமுதுவேய்களைஇறுத்துத்
MULAIK KAI PIDI MUGAMAN SOLIMUTHU VEEI GALAI IRUTHTHU

In this world people you may know it that female elephant which has short hands and to male elephant in relationship form stood and then plucked the tender bamboo leaves and then gave to the female elephant to eat it in loveable form
உலகீர் சிறிய கையை உடைய பெண் யானைகள் துளையை உடைய கையை உடைய ஆண் யானைகட்கு உறவாய் நின்று முகமன் கூறி பெரிய மூங்கில்களை ஒடித்துக் கொடுத்து
துளைக்கைக்களிற்றினமாய்நின்றுசுனைநீர்களைத்தூவி
THULAIK KAI KALIT RINA MAAI NINRU SUNAI NEER KALAI THUUVI

And then from the natural ponds taken water and sprayed on lard Siva
சுனைகளில் நீரைத் தெளித்தலால்
வளைக்கைப்பொழிமழைகூர்தரமயில்மான்பிணைநிலத்தைக்
VALAIK KAI POLI MALAI KOOR THARA MAYIL MAAN PINAI NILATH THAI

And then from the curved hands and poured water abundantly so that it is considered as rain and then male and female peacock excavated the land to catch pests
அவற்றின் வளைவை உடைய கையினின்றும் பொழிகின்ற மழை மிகுதியாக மயிலும் பெண் மானும் நிலத்தைக்
கிளைக்கமணிசிந்துந்திருக்கேதாரமெனீரே.
KILAI KAMANI SINTHUN THIRUK KOTHAARA MENEEIREEA

And then from the land the ruby diamonds are shattered away that place is thiru keatharam and in that way you may inform to all
கிண்டுதலால் மாணிக்கங்கள் தெரிக்கின்ற திருக்கேதாரம் என்று சொல்லுமின்கள்
800 பொதியேசுமந்துழல்வீர்பொதிஅவமாவதும்அறியீர்
POTHIYEEA SUMANTH ULALVEER POTHI AVA MAAVAHUM ARIYER

In this world people this flesh filled body you have carried and then you do not know that flesh body is not worth one and you do not know it
உலகில் நீவிர் இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையும் செய்வீர் அப்பொதி தான் பயனற்று ஒழிவதை அறியமாட்டீர்
மதிமாந்தியவழியேசென்றுகுழிவீழ்வதும்வினையாற்
MATHI MAAN THIYA VALIYEEA SENRU KULI VILVATHUM VINAIYAAR

You have lost your mental balance of knowledge and slipped in to the pit of repeated birth and death which is your cause and effect form of miss deed so dissuaded from it
அறிவை இழந்த வழியிலே சென்று நீவீர் குழியில் வீழ்வதும் உம் வினைப்பயனே யாம் இதனை விடுத்து
கதிசூழ்கடல்இலங்கைக்கிறைமலங்கவரைஅடர்த்துக்
KATHI SOOL KADAL ILANGAI KIRAI MALANGA VARAI ADARTH THU

The sri langaa which is encircled the sea water that sri langa king ravana who is at first stamped under the kaiyilai hills and then after wards
முழுதும் கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மெலிவடையும்படி அவனை மலையால் முன்பு நெருக்கிப் பின்பு
கெதிபேறுசெய்திருந்தானிடங்கேதாரமெனீரே.
KETHI PEERU SEI THIRUN THA NIDANG KETHAARA MENIREEA

Gave him good boons where lard Siva seated that place is thiru keatharam and you may pray there
நன்னிலையைப் பெறச் செய்து தான் அம்மலை மேல் இனிதாக இருந்தவனாகிய சிவபெருமானது இடம் திருக்கேதாரமே அதனைத் துதிமின்கள்
801 நாவின்மிசைஅரையன்னொடுதமிழ்ஞானசம்பந்தன்
NAAVIN MISAI ARAIYAN NODU THAMIL GNANA SAMPANTHAN

The Tamil poems are sung by the saints named thiru gaana sambanthar and thiru nayukku araser

தமிழ்ப் பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும்
யாவர்சிவன்அடியார்களுக்கடியானடித்தொண்டன்
YAAVAR SIVAN ADIYAAR KALUK KADIYAAN ADI THONDAN

And who ever do service under lard Siva’s feet I am slave to them in that way menial service is done by Nambi aarroren
மற்றும் எவராயினும் சிவன் அடியார்களுக்கு அடிகளாகி அவர்களுக்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பி ஆரூரன்
தேவன்றிருக்கேதாரத்தைஊரன்னுரைசெய்த
THEVAN RIRUK KETHAARATH THAI UOORAN NURAI SEITHA

That lard Siva’s thiru keatharam poems are sung by those disciples
இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள்
பாவின்தமிழ்வல்லார்பரலோகத்திருப்பாரே.
PAAVIN THAMIL VALLAAR PARALOGATH THIRUPPAARE

And all the worlds above existing in that sivalogam place they will ultimately settle down
எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவலோகத்தில் இருப்பவர் ஆவர்.
THIS ABODE IS SITUATED IN THE NORTH INDIA SO SUNTHERER IN THIS PLACE THINK OVER AND SANG THE ABOVE SONGS
இத்தலம் வட நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கேதாரேசுவரர், தேவியார் – கேதாரேசுவரியம்மை.
திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAMBALAM

June 11, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: