NAMBI EANRA THIRUPATHIGAM
7.63 நம்பி என்ற திருப்பதிகம்
NAMBI EANRA THIRUPATHIGAM
OM THIRUCHITRAMBALAM
NAMBI MEANS RELIYABLE PERSON
After prayed in the thiru kudalai attoor, suntherer went to the thiru muthugunram temple and then encircle the temple and the decade starting with nangidai ward and then requested from lard Siva the gold coins. After wards he got 12000 thousand gold coins
This decade he has variety of ways praised and then said you are the guide to me in all the births in that way he submitted under his feet. He call lard Siva in the name of nambi (reliable person) I variety of places and got happy for calling in this name
சுந்தரர்திருக்கூடலை ஆற்றூர் தொழுது திருமுதுகுன்றம் அடைந்து திருக்கோயில் வலம் கொண்டு இறைஞ்சி நஞ்சியிடை என்னும் திருப்பதிகம் பாடிப் பெருமனை பொன் வேண்டும் குறிப்பினரயாய்ப் பாடி அருளியது இத்திருப்பதிகம். இப்பதிகத்தின்படிப் 12000 பொன் பெற்றார் சுந்தரர்
இத்திருப்பதிகம் இறைவனை பலவற்றால் ஏத்தி நீரே எங்களுக்கு எப்பிறப்பிலும் துணை என்று குறையிரந்து அருளியது இங்கே இறைவரை நம்பி என்ற சிறப்புப் பெயரால் பலகாலம் சுவாமிகள் கூறி மகிழ்தல் அறிந்து இன்புறத்தக்கது.
திருச்சிற்றம்பலம்
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
meimai mutra podi poosiyor nambi
In the whole body lard Siva you have applied sacred ashes that unique form your
திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே
வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
Vedham naankum viriththothi yor nambi
The veethas in elaborate form sang that unique nambi you are
வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய ஒப்பற்ற நம்பியே
கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
kaiyilor venmalu enthiyor nambi
In the hand place the malu battle force you have carried on your hands
கையில் ஒரு வெள்ளிய மழுவை ஏந்திய ஒப்பற்ற நம்பியே
கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
Kannu moondrudai yar oru nambi
Nambi you have possessed three eyes
கண்கள் மூன்றையும் உடையவனாகிய நம்பியே
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
Seiyya nam pisiru senjadai nambi
Nambi you have possessed red color body and you have gray color hair possessed
செம்மை நிறம் உடைய நம்பியே புல்லிய சிவந்த சடையை உடைய நம்பியே
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
thiripurath theeyealach setrathor villal
with a bow you have destroyed the three castles with a
முப்புரங்களை நெருப்பு எழுமாறு வளைக்கப்பட்ட தொரு வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
Eitha nam pi yenannai aaludaiya nambi
Fire arrow shot on them and then Nabi you have taken me as slave
எய்த நம்பியே என்னை ஆளாக உடைய நம்பியெ
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
Elup pirapum engal nambi kandaayea
You are the only leader in my seven births
நீயே எங்களுக்கு எப்பிறப்பிலும் தலைவன்
திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால்
Thingal nambi moodi meal adi yaarpal
In the sacred hair place you have adorned the tender moon and in your disciple
திருமுடியில் பிறையை அணிந்த நம்பியே அடியார்கள் இடத்து
சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம்
Sirantha nambi pirantha uyirk kellaam
You are best reliable form and all the creations in this world
இனிது விளங்கி நிற்கும் நம்பியே பிறப்பினை எடுத்த உயிர்களுக்கு எல்லாம்
அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்
angkan nambi yarul maal visum paalum
You have embedded in their soul concealed form put your grace on them and to give fainting those devas who are ruling the upper world
அவ்விடத்தில் மறைந்து நின்று அருள் செய்யும் நம்பியே மயக்கத்தைத் தரும் வானுலகத்தை ஆள்கின்ற
அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்
amarar nambi kumaran muthal devar
Those devas you are leader to them and other lards such as lard muruga you are elderly person
தேவர்களுக்குத் தலைவனாகிய நம்பியே முருகன் முதலிய மூத்தவர்களுக்கு
தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி
thangal nambi thavath thukkoru nambi
And lard to all other sub lards and to pray you are unique form
தலைவனாகிய நம்பியே வழிபாட்டிற்கு ஒப்பற்ற நம்பியே
தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
thaathai entru en saran panith thethum
You are the world leader and in this form I am praying you in this world and then daily conducting poojaas
நீயே உலகத்திற்கு தந்தை என்று தெளிந்து உன் திருவடிகளைப் பணிந்து துதிக்கின்ற
எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி
engal nambi ennai aaludaiya nambi
You are the best leader in nambi name and you are all the times employing me as your slave
எங்களுக்குச் சிறந்து நிற்கின்ற நம்பியே என்னை ஆளாக உடைய நம்பியே
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
Elu pirappum engal nambi kandaa yea
you’re the leader to me in seven births
நீயே எங்களுக்கு எப்பிறப்பிலும் தலைவன்
வருந்த அன்றுமத யானை உரித்த
varuntha antru matha yaanai uritha
Once the mad elephant is got sorrow and pain and in that way you have pealed its skin
அன்று மதத்தை உடைய யானையை அது வருந்துமாறு உரித்த
வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம்
valakku nambi mulangu kadal nanjam
That balanced nambi form you are and in the sound raising waves filled the sea from it emanated poison
நீதியை உடைய நம்பியே ஓசையைச் செய்கின்ற கடலில் உண்டாகிய நஞ்சினை
அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த
arunthum nambi amarark amuthu eentha
Lard Siva you have consumed it and afterwards appeared the nectar you have given it to deevaas
உண்ட நம்பியே அதன் கண் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்த
அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்
Arul ean nambi porulaal varu nattam
you are grace filled person and that grace matter form you have been dancing the rare dace all the times
அருளுடைய நம்பியே அந்த அருளாகிய பொருள் காரணமாக அரிய நடனத்தைச் செய்கின்ற
புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி
purintha nambi puri nooludaiya nambi
You are nambi to me and you are adorning the three knotted thread
நம்பியே முப்புரி நூலை உடைய நம்பியே
பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
poluthum vinnum mulu thum palavaagi
You are time factor form and space form all the things form and you are standing in this world variety of ways
காலமும் வானமும் முதலிய எல்லாப் பொருள்களுமாய்ப் பலவாகி
இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
iruntha nambi ennai aaludaiya nambi
And then appeared in this world in the nambi name and you have taken me as your slave
நிற்கின்ற நம்பியே என்னை ஆளாக உடைய நம்பியே
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
Elu pirappum engal nambi kan dayea
You are in all the births leader form to me
நீயே எங்களுக்கு எப்பிறப்பிலும் தலைவன்
ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
ooru nambi amutha yuirk kellam
In the mind oasis form nectar is oozing out you are available to me and to all the living beings
உள்ளத்தில் அமுதம் போல ஊற்று எழுகின்ற நம்பியே எல்லா உயிர்களுக்கும்
உரிய நம்பிதெரி யம்மறை அங்கங்
uriya nambith theriyam marai angkang
You are the only protection to me and to saints you have preached veethass and angaass
புகலிடமாகிய நம்பியே முனிவர்கட்கு வேதத்தையும் அதன் அங்கத்தையும்
கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக்
kooru nambi muni vaark karung kootrai
In elaborate form explained to them and not destroyable that form of death god ema
அறியக் கூறிய நம்பியே அழித்தற்கரிய கூற்றுவனை
குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ்
kumaintha nambi kumaiyaap pulan ainthunj
You have kicked and then killed him and not to be controlled that five sense organ’s likings
அழித்த நம்பியே அடக்குதற்கு அரிய ஐம்புல ஆசைகளையும்
சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி
seeru nambi thiru velladai nambi
You have cursed and then kept it away and thiru vellaidai temple place you are living in the name of nambi
கடிந்து ஓதுக்கிய நம்பியே திருவெள்ளடைக் கோயிலில் வாழும் நம்பியே
செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்
senkan vellath selung kottoru thenrum
The red color eyes and good grown the horns are possessed the white bull and you have ascended on it and then travelling on it every where
சிவந்த கண்களையும் செழுமையான கொம்புகளையும் உடைய வெண்மையான எருதையே எந்த நாளும் ஏறுகின்ற
ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி
eru nambi ennai aaludaiya nambi
In that ascended on it and you have taken me as your slave
ஏறுகின்ற நம்பியே என்னை ஆளாக உடைய நம்பியே
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
elup pirappum engal nambi kandaayea
In the seven births you are the leader to me
நீ எப்பொழுதும் எப்பிறப்பிலும் தலைவன்
குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக்
kutra nambi kuru kaar eaiyil moondrai
And then the opponent three castles are destroyed
பின்பு அதனால் பகைவரது மதில்கள் மூன்றை
குலைத்த நம்பிசிலை யாவரை கையிற்
kulaitha nambi silai yaa varai kaiyir
That form of leader you are and you have converted the hill as a bow and then carried it in your hand
அழித்த நம்பியே மலையை வில்லாக வளைத்த நம்பியே பின்பு அதனைக் கையில் பிடித்து
பற்று நம்பிபர மானந்த வெள்ளம்
patru nambi para maanantha vellam
And stand there in the reliable form and to the disciples the bliss form of water is given
நின்ற நம்பியே அடியார்களுக்குப் பேரின்ப வெள்ளத்தை அளித்து
பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால்
panikkum nambi enap paduthal allaal
And then put your grace on them and then in this way I am singing your glory in this world and in this unique form you are existing in this world
அருளுகின்ற நம்பியே எனப் பாடுவதை அன்றி ஒப்பற்ற
மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன்
matru nambi unakkendseya vallen
I am in this world only singing your glory there is no other power on my part to do anything in this world
பெரிய நம்பியாகிய உனக்கு யான் வேறு என் செய்யவல்லேன்
மதியி லேன்படு வெந்துயர் எல்லாம்
mathiyilen padu ven thuyar ellam
I am ignorance filled person so I am affected that wild pain and sorrows
அறிவிலேனாகிய யான் படுகின்ற கொடிய துன்பங்களை எல்லாம்
எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி
etru nambi ennai aaludaiya nambi
You have driven it away from me and you are employing all the time in this world
ஓட்டுகின்ற நம்பியே என்னை ஆளுடைய நம்பியே
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
Elu pirappum engal nambi kandaayea
You are the only lard to me in the seven births
நீயே எங்களுக்கு எப்பிரப்பிலும் தலைவன்
அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்
aritha nambi adikai tholuvaar nooi
Your sacred feet are prayed with hands that those disciples sorrows are destroyed completely in that nambi name you are
உனது திருவடியைக் கைகளால் தொழுகின்றவரது துன்பங்களை அழித் தொழிக்கின்ற நம்பியே
ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்
aanda nambi munnai eendulakangkal
You have created so many worlds in thick cluster form previously
நெருங்கிய உலகங்கள் பலவற்றையும் முன்பு ஆக்கிய நம்பியே
தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி
theriththa nambi oru sevudai nambi
And then you are preserving it and then the wonder full bull you have possessed
பின்பு அவைகளை காக்கின்ற நம்பியே ஒற்றை எருதை உடைய நம்பியே
சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடந்
sippalik kondrakanth thoru meivedanth
To go every door steps to collect begging food so that you have carried that appropriate appearance before the people
இல்லம் தோரும் சென்று ஏற்கும் சில பிச்சைக் கென்று திருமேனியில் அதற்குரிய வேடத்தைப்
தரித்த நம்பிசம யங்களின் நம்பி
tharitha nambi samayang kalin nambi
And in that beggar appearance and you are leader to so many religions
பூண்ட நம்பியே சமயங்கள் பலவற்றிற்கும் தலைவனாகிய நம்பியே
தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
Thakkan ran velvi puk kanrimai yorai
Once you have entered in the thakken yaga fire pit place where all the deevaass are appeared
அன்று தக்கன் வேள்விச் சாலையில் புகுந்து அங்கிருந்தத் தேவரை எல்லாம்
இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
iritha nambi ennai aaludaiya nambi
You have made them in frightened form and you have taken me as your slave
அஞ்சியோடச் செய்த நம்பியே என்னை ஆளாக உடைய நம்பியே
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
Elup pirappum engal nambi kandaa yea
And you are in every birth leader to me
நீயே எங்களுக்கு எப்பிறப்பிலும் தலைவன்
பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும்
pinnai nambum puyath thaan nedumaalum
The long body possessed thirumal who is liked by the lady named nappinai
நப்பின்னை என்பவள் விரும்புகின்ற தோள்களை உடையவனாகிய நீண்ட உருவத்தை உடைய திருமாலும்
பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
pramanum entrivar naadiyung kaanaa
And bharma and thirumal are searched him but they are unable to see his feet and head
பிரமனும் திருமாலும் என்று சொல்லப்படுகின்ற இவர்கள் தேடியும் காணமாட்டாத அடிமுடியை உடைய
உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே
unnai nambi oruvark keitha lamea
You are the only got to this world
நம்பியே உலகிற்கு ஒருவனாய நம்பியே
உலகு நம்பிஉரை செய்யும தல்லால்
Ulagu nambi urai seiyyuma thallal
Except by praising form there is no other way to approach you
உன்னை வாழ்த்துதலாகிய அதுவன்றி அணுகுதல் ஒருவர்க்கு இயல்வதோ
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
Munai nambi pinum varsadai nambi
You are at first appeared in this world and then after wards all other things are appeared in this world and you have possessed long pigtail
எல்லாப் பொருளுக்கும் முன்னே உள்ள நம்பியே பின்னிய நீண்ட சடையை உடைய நம்பியே
முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
mulithivai ethanai yun thoguth thanda
Your nature is in this form but are all are controlled form and suppressed it
உன் இயல்பெல்லாம் இவைபோல்வனவே ஆயினும் இத்தனையும் தோன்றாவாறு அடக்கி
தென்னை நம்பிஎம் பிரானாய நம்பி
thenai nambi eam piranaaya nambi
Lard Siva you have ascended on the back of the bull and then carried me under your control and then ruled me and that form of leader you are
பெருநம்பியாகிய நீ ஏறி வந்து என்னை ஆண்டது என்னையோ எமக்குப் பெருமான் ஆகிய நம்பியே
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
elupirap pum engal nambigan dayea
And then you are in my all the births leader to me
நீயே எங்கட்கு எம்பிறப்பிலும் தலைவன்
சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி
sollai nambi poru laai nindra nambi
Lard Siva you are manthra wards form standing in this word (Om si VA ya Na ma and Om Na ma si VA ya and Om pon am ba la em) and in these wards meaning form existing in this world
சொற்களாய் நிற்கும் நம்பியே அச்சொற்களின் பொருள்களாய் நிற்கும் நம்பியே
தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
thotram eeru muthalaa kiya nambi
To all appearance and conservation of things in this world you are the principal form
எப்பொருளின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் முதல்வனாகிய நம்பியே
வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய
Valvai nambi adiyaark Arul seiyya
You have power to put your grace on your disciples
அடியவர்களுக்கு அருள் செய்ய வல்லையாகிய நம்பியே
வருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார்
varunthi nambi unak kaat seya killer
Those who are not surrender under your feet those people are got sorrow
உனக்கு ஆட்செய்ய மாட்டாதார் உலகில் வருத்தத்தை அடைந்து
அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி
allal nambipadu kintra then naadi
And then toiling and moiling in this world please tell me the reason for it
அல்லால் படுதற்கு காரணம் என் நம்பி
அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
angkoru paakam vai thenkanam potra
Lard Siva you are prayed by eighteen types of demon forces and you have placed lardess parvathi on your left part of the body
நம்பி பதினெண்கணங்களும் போற்ற உமை ஒரு பாகத்தில் வைத்திருக்கும்
இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி
illa nambi yidu pichaikol nambi
And every door steps you are approached and then collecting the begging food
இல்லங்களை நாடிச் சென்று அங்கு உள்ளவர் இடுகின்ற பிச்சையை ஏற்கின்ற நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
Elup pirampum engal nambi kandaayea
Lard Siva you are the leader to all the births
நம்பி நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்
காண்டு நம்பிகழற் சேவடி என்றுங்
kaandu nambi kalar sevadi enrung
Nambi your anklet adorned sacred feet are to be seen in that way
நம்பியாகிய உனது கழல் அணிந்த திருவடியைக் காண்போம் காண்போம் என்றும்
கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
Kaln thunaik kaa thalith thaat seikir paarai
Those disciples are liked you and then serving under your feet
மனம் பற்றி உன்னை விரும்பி உனக்கு ஆட்செய்கின்றவாறு
ஆண்டு நம்பியவர் முன்கதி சேர
aandu nambi yavar munkathi sera
And then you have taken them under your fold and then got upper world
நீ ஆட்கொண்டு அவர் விரைந்து உயர் கதி அடையுமாறு
அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத்
arulum nambi guru maarp pirai paambaith
In that form you have put your grace on them and the light emanating form of moon and snakes are
அருள் செய்கின்ற நம்பி, நம்பி ஒளியை உடைய சிறந்த பிறை பாம்பைப்
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
thindum nam pi senniyir kanni thangath
Dwelling on your hair and then allowed Ganges on your head to be stayed form
பொருந்துகின்ற முடியில் கங்கை என்னும் நங்கை தங்கும் படி
திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி
thiruthu nambi poich saman porulaaki
Lard Siva all are carried on your head and to samanass you are false matter form appearing to them in concealed form
இனிது வைத்துள்ள நம்பி சமணர்க்குப் பொய்ப் பொருளாய் மறைந்து நின்று
ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி
eendu nambi imaiyor tholu nambi
Lard Siva you are true form appeared to me and deevass are praying form of nambi you are
எங்களுக்கு மெய் பொருளாக வெளிப்படுகின்ற நம்பியே தேவர்கள் வணங்குகின்ற நம்பியே
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
Elup pirappum engal nambi kandaayea
In the seven births you are my lard to me and leader to me
நீயே எங்களுக்கு எப்பிறப்பிலும் தலைவன்
கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை
karakkum nambi kasi yaa thavar thammai
Before you those who are not melted mind form and you have concealed from them
உன்னிடத்து மனம் உருகாதவருக்கு உன்னை மறைத்துக் கொள்கின்ற நம்பியே
கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம்
kasinthavark kimmaiyo dammai yil inbam
Those who are showering love on you and you are not only in this life but also in the coming birth
அன்பு செய்பவர்க்கு இப்பிறப்பிலும் வரும் பிறப்பிலும்
பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா…
perukum nambi perukak karuththaa…
You are giving happiness in the reliable form
இன்பத்தைத் தருகின்ற நம்பியே
திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAM BALM.