THIRUNEEDOOR
56.திருநீடூர்
THIRUNEEDOOR
OM THIRUCHITRAMBALM
SUNTHERER WHO HAS PRAYED IN THE thiru ninriyoor and then started his sojourn from that place and while moving away he has forgotten to pray in the thiru nee door temple and after some time his intuition reminded form he sang the following sons and then approached the thiru nee door
திருநின்றியூரைத் தரிசித்த திருநாவலூரர் அவ்வூரை விட்டுப் புறப்பட்டு அருகில் உள்ள திருநீருரைப் பணியாமல் செல்லும் பொழுதில் இடையில் உணர்வு பெற்று இப்பதிகத்தை ஓதி திருநீடூர் வந்து பணிந்தார்
திருச்சிற்றம்பலம்
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
Oor vathor vidai onrudai yaanai
Lard Siva has possessed the moving bull as his chariot
எருது ஒன்றினை ஓர் ஊர்த்தியாக் உடையவனும்
ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக்
ondruthal thanik kanuthal aanai
The light glittering fore head possessed lard Siva
ஒளியை உடைய நெற்றியை உடைய ஒப்பற்ற சிவபெருமானும்
கார தார்கறை மாமிடற் றானைக்
kaarathaar karai maa midar aanaai
The dark color poison tainted throat possessed lard Siva
கருமை பொருந்திய நஞ்சினை உடைய கண்டத்தை உடையவனும்
கருத லார்புரம் மூன்றெரித் தானை
karuthalaar puram moonerith thannai
The opponent three castles are destroyed
பகைவர்களது ஊர்கள் மூன்றை எரித்தவனும் ஆகிய
நீரில் வாளை வரால்குதி கொள்ளும்
neeril vaalai vaaral kothi kollum
In the water bodies living valai and varal fishes are jumping and leaping forward
நீரில் வாழ்வதுமாகிய வாளை மீனும் வரால் மீனும் குதி கொள்ளுகின்ற
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
Nirai punar kalanich selva needoorp
That water filled fields and wealth filled place is tiru needoor
நிறைந்த நீரை உடைய கழனிகளை உடைய செல்வம் பொருந்திய திருநீடுரின் கண்
பாரு ளார்பர வித்தொழ நின்ற
parulaar para vith thola nindra
In this world people all are prayed and praised form of lard Siva who has descended in this place
நிலவுலகில் உள்ளார் யாவரும் துதித்து வணங்குமாறு எழுந்தருளி இருக்கின்ற
பரம னைப்பணி யாவிட லாமே.
Paramanai paniyaa vida laamea
That lard Siva is slipped away from the prayer so it is not appropriate one and so we went back and then pray in the thiruneeroor temple
இறைவனை நாம் வணங்காது விடுதல் ஆகுமோ ஆகாது எனவே அங்குச் சென்று அவனை வணங்குவோம்
துன்னு வார்சடைத் தூமதி யானைத்
thunnu vaar sadaith thuu mathi yannaith
The thick long hair possessed lard on that hair of lard Siva where the pure moon is adorned
நெருங்கிய நீண்ட சடையின் கண் தூயதாகிய பிறையைச் சூடினவனும்
துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
thuyangu naa vagai thondru vipp pannai
The giddiness is not affected form showing the right path by lard Siva
மயக்கம் வராதவாறு உய்யும் நெறியைக் காட்டுகின்றவனும்
பன்னு நான்மறை பாடவல் லானைப்
pannu naan marai paada vallaanai
The highly regarded persons are chanting the four veethass which is composed by lard Siva
உயர்ந்தோர் ஓதும் நான்கு வேதங்களைச் செய்ய வல்லவனும்
பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
Paarth thanuk karul seitha piraanai
To arjuna to whom lard Siva who has put his grace on him
அருச்சுனனுக்கு அருள் புரிந்த தலைவனும்
என்னை இன்னருள் எய்துவிப் பானை
ennai in narul eithu vip paanai
That sacred grace is also allowed to enjoy me
அந்த இனிய அருள் என்னை அடைய எய்துவிப்பவனும்
ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்
ethi laar thamak kethilan rannai
Those who are stood away from him and the same way he has stood away from them
அயலாய் நிற்பார்க்கு அயலாய் நிற்பவனும் ஆகிய
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
punnai mathavi pothalavar needur
The punnai and kurukkathi flower buds are bloomed place is thiruneedoor where lard Siva descended
புன்னையும் குருக்கத்தியும் அரும்புகள் மலர்கின்ற திருநீடூரின் கண் எழுந்தருளி இருக்கின்ற
புனித னைப்பணி யாவிட லாமே.
punithanai paniyaa vidalaa mea
That pure form of lard Siva shall we left over in our prayer schedule so we went back and pray him
இறைவனை நாம் வணங்காது விடுதல் ஆகுமோ ஆகாது எனவே அங்குச் சென்று அவனை வணங்குவோம்
கொல்லும் மூவிலை வேலுடை யானைக்
kollum moovila veludai yaanaik
The killer instinct filled three leaves battle force possessed lard Siva
கொல்லும் கருவியாக சூலத்தை உடையவனும்
கொடிய காலனை யுங்குமைத் தானை
kodiya kaalanaiyung kumaintha thaani
And the wild death god ema is destroyed by lard Siva
கொடிய எமனை அழித்தவனும்
நல்ல வாநெறி காட்டுவிப் பானை
nallavaa neri kaatuvip paanai
The ethical way is showed to us
நல்லவனவாகிய நெறிகளையே காட்டுவிக்கின்றவனும்
நாளும் நாம்உகக் கின்ற பிரானை
naalum naam ukak kindra piraa nai
All the days we are enjoying lard Siva who is also leader to us
எந்த நாளும் நாம் விரும்புகின்ற தலைவனும்
அல்ல லில்லரு ளேபுரி வானை
alla lill arulea puri vaanai
Without sorrow that type of grace is put up on us that prime form of lard Siva
துன்பம் இல்லாத திருஅருளைச் செய்பவனும் ஆகிய முழுமுதற்குரிய
ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
aadu neer vayal sool punal needoork
That water filled fields are covered place is thiru needoor where lard Siva you have descended
நீரை உடைய வயல்கள் சூழ்ந்த திருநீடூரின் கண் எழுந்தருளி இருக்கின்ற
கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக்
kollai vellearuthu thera val laanai
The hilly place mighty powerful bull on it claimed and travel everywhere
முல்லை நிலத்து எருது ஏறி வருபனையும்
கூறி நாம்பணி யாவிட லாமே.
koori naam paniyaa vida laamea
We should not left over that place so we will go back and pray there
சிவபெருமானை நாம் வணங்காது விடுதல் ஆகுமோ ஆகாது அதனல் அங்குச் சென்று அவனை வணங்குவோம்
தோடு காதிடு தூநெறி யானைத்
thodu kaa thidu thuu neri yaanaaith
In the ear place ornament named thoodu is adorned on the ear that
pure way of life follower
தோட்டைக் காதில் இட்ட தூய நெறியாய் உள்ளவனும்
தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப்
thotra mun thurap paa yavan rannai
And all the living being he is giving the birth and death
உயிர்களுக்குப் பிறப்பும் இறப்புமாய் நிற்பவனும்
பாடு மாமறை பாடவல் லானைப்
Paadu maa marai paada vallaa naip
With musical notes are filled form of veethass are composed that lard Siva
இசையோடு பாடுதற்குரிய சிறந்த வேதத்தை செய்ய வல்லவனும் ஆகிய
பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
paim mozhir kuyil koo vida maa dea
The lust green plantations are filled place where the coco birds are raised sound and in that place
பசிய சோலைகளில் குயில்கள் கூவ அந்த இடத்தே
ஆடு மாமயில் அன்னமோ டாட
Aadu maa mayil anna moodu aada
The dancing form of peacocks are dancing with the anna birds
ஆடும் தன்மை உடைய சிறந்த மயில் அன்னத்துடன் நின்று ஆட
அலைபு னற்கழ னித்திரு நீடூர்
alai punar kalanith thiru niidoor
The waves emanating water filled place of thiru nee door where lard Siva descended
அலைகின்ற நீரை உடைய வயல்களை உடைய திருநீடூரின் கண் எழுந்தருளி இருக்கின்ற
வேட னாயபி ரானவன் றன்னை
vedanaaya piraan avan thannai
That lard Siva who has taken the hunter form to bless Arjuna with the pasupatha battle force
இறைவனை அருச்சுனனுக்கு வேட்டுவ வேடம் எடுத்த இறைவனை
விரும்பி நாம்பணி யாவிட லாமே.
virumpi naam paniyaa vida laamea
With willingness form we are not prayed will we left over this place and it is not appropriate one so we will go back and pray him
நாம் விரும்பி வணங்காது விடுதலாகுமோ ஆகாது எனவே அங்கு சென்று அவனை வணங்குவோம்
குற்றம் ஒன்றடி யார்இலர் ஆனாற்
kutram ondradiyaar ilar aanaar
Those disciples who do not have sin on their part
அடியவர் குற்றம் சிறிதும் இலர் ஆயினர் எனின்
கூடு மாறத னைக்கொடுப் பானைக்
koodu mar athanaik kodup panai
Those disciples are easily approached form he is available to them
அவர்கள் அடையுமாறு தன்னைக் கொடுப்பவனும்
கற்ற கல்வியி லும்மினி யானைக்
katra kalviyilum mini yannai
To learn the heard form of knowledge from it emanated happiness he is above give more happiness
வருந்திக் கற்ற கல்வியினும் மேலான இனிமையை செய்கின்றவனும்
காணப் பேணும வர்க்கெளி யானை
kaanap penumvaark keni yaanai
Those who are daily cleaning lard Siva and his surrounding places who is simple to them
தினமும் வந்து இறைவனை பராமரிப்பவர்களுக்கு எளிமையானவனை
முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை
mutra anjunth thiran thirup paanai
The five sense argons commands are dissuaded form that no liking form stands in this world
ஐம்புலன்கள் முற்றத்துறந்து பற்றின்றி இருப்பவனும்
மூவ ரின்முத லாயவன் றன்னைச்
moovarin mutha laayavan thannai
The cause and effect form of three sub lards named bharma thirumal and ruthira who is stood above them and guide them in their activities
காரணக் கடவுள் மூவருள் முதல்வன் ஆயினனும்
சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த்
sutri niil vayal sool thiru needurth
In the surrounding place paddy fields are covered form of existing place thiru needoor where lard Siva descended
சுற்றிலும் நீரை உடைய வயல்கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளி இருக்கின்ற
தோன்ற லைப்பணி யாவிட லாமே.
thotralaip paniyaa vidal aamea
That lard Siva is not prayed form will we cross this place so we go back and pray him
இறைவனை நாம் வணங்காது விடுதல் ஆகுமோ ஆகாதன்றே அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்
காடில் ஆடிய கண்ணுத லானைக்
kaadil aadiya kannutha laanai
In the burial ground place forehead eye possessed lard Siva
காட்டில் ஆடுகின்ற கண்ணை உடைய நெற்றியை உடையவனும்
கால னைக்கடிந் திட்டபி ரானைப்
Kaala naik kadin thitta praannai
That death god ema is destroyed that, that mannerism filled lard Siva
கூற்றுவனை அழித்தத் தலைவனும் அன்பினால்
பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப்
paadi aadum parise puri thannai
And he is liked to dance all the time that act is liked by him
ஆடுகின்ற செயலையே விரும்புபவனும்
பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்
Patri nodu sutram molip paanai
The material wealth and relationship power is dissuaded and eliminated by lard Siva
பொருள் சார்புகளையும் உயிர்சார்புகளையும் நீக்குபவனும்
தேடி மாலயன் காண்பரி யானைச்
thedi maal ayan kaan pari yaanai
Thirumal and Bharma are searched his feet and head but he is rare to them
மாயனும் அயனும் தேடிக் காணுதற்கு அரியவனும்
சித்த முந்தெளி வார்க்கெளி யானைக்
siththa mun thelivaar keli yaanai
He is simple form to those who are got clear knowledge by wards and mind
சொல்லால் அன்றி உள்ளத்தாலும் தன்னைக் தெளிந்தவருக்கு எளியவனும் ஆகிய
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்
kodi devarkal kumpidu needurk
And innumerable devas are praying in the thiru needoor temple place where lard Siva descended
அளவற்ற தேவர்கள் தொழுகின்ற திருநீடூரின் கண் எழுந்தருளி உள்ள
கூத்த னைப்பணி யாவிட லாமே.
Kooth thanai paniyaa vida laamea
That lard Siva is left out in advertently so we go back and then pray there
இறைவனை நாம் வணங்காது விடுதல் ஆகுமோ ஆகாதே எனவே அங்குச் சென்று அவரை வணங்குவோம்
விட்டி லங்கெரி யார்கையி னானை
Vitilang keriyaar kaiyi naanai
The well burning form of fire carried on the hands of lard Siva
கனவ விட்டு விளங்குகின்ற தீப் பொறியைக் கையில் உடையவனும்
வீடி லாதவி யன்புக ழானைக்
Vidilaatha viyan puga laanai
Without perishable form of ever glory filled lard Siva
அழியாத பரந்த புகழை உடையவனும்
கட்டு வாங்கந் தரித்தபி ரானைக்
katu vaanga kan tharitha piraanai
The mallu battle force carried on his hand
மழுவை ஏந்திய தலைவனும்
காதி லார்கன கக்குழை யானை
kaathillar kanak kulai yaanai
In the ear place adorning the gold kulai ornament adorned form
காதின் கண் பொருந்திய பொன் குழையை உடையவனும்
விட்டி லங்குபுரி நூலுடை யானை
vitilangu puri nuul udai yaanai
In the bosom place rolling down the three knotted thread adorned form of
மார்பின் கண் எடுத்து விடப்பட்டு விளங்குகின்ற முப்புரிநூல் உடையவனும்
வீந்த வர்தலை ஓடுகை யானைக்
Veen thavar thalai oodu kai yaanai
The dead man skull is carried on the hands
இறந்தவர்கள் தலை ஓட்டைக் கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவனை நாம்
கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க்
kattiyin karum poong kiya needoot
The sugar candy is given that sugar field surrounded place is thiruneedoor
கட்டியைத் தரும் கரும்புகள் வளர்ந்துள்ள திருநீடூரின்கண்
கண்டு நாம்பணி யாவிட லாமே.
kandu naam paniyaa vidal aamea
To see and pray him so we must go back and pray him
கண்டு வணங்காது விடுதல் ஆகுமோ ஆகாதன்றே ஆதலால் நாம் அங்கு சென்று அவனை வணங்குவோம்
மாய மாய மனங்கெடுப் பானை
Maaya maaya manag kedup paanai
The non-permanent form of things on it our mind is not wandering way, we are gone away from it and then go in the god’s path only
நிலை இல்லாத பொருள்கள் மேல் செல்லுகின்ற மனத்தோடு ஒற்றித்து நின்று அதன் வழியே செல்லும் அறிவாய் இருப்பவனும்
மனத்து ளேமதி யாய்இருப் பானைக்
Manath thulea mathiyaai irup pannai
And then after wards that wavering mind is destroyed and ganna knowledge is given by him
பின்னர் அந்த மனத்தின் செயலைக் கெடுத்து அறிவை ஒரு நெறிபடுத்துபவனும்
காய மாயமும் ஆக்குவிப் பானைக்
Kaaya maayamum aakku vip paa nai
The five vast forces form the material from it created the body
பஞ்ச பூதங்கள் முதலிய ஐந்து கருவிகளால் நின்று உடம்பாகிய காரியத்தைப் பண்ணுவிப்பானும்
காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
katru maaik kanallai kalip paa nai
And after some time this body is destroyed by him
பின்னர் அதனை அழிப்பவனும்
ஓயு மாறுரு நோய்புணர்ப் பானை
oyu maa ruru nooi punarp paa nai
To give pain to the souls in that way he gave bad deed cause and effect to them
உயிர்கள் வருந்துமாறு அவற்றை அடையற்பாலதாகிய வினைப்பயன்களைக் கூட்டுவிக்கின்றவனும்
ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
ollai val vinaikal kedup panai
And then afterwards that bad are destroyed by him
பிறகு விரைவில் அந்த வினைகளை அழிப்பவனும்
வேய்கொள் தோள்உமைப் பாகனை நீடூர்
veikol thol umaip paakanai needur
To do all the activities he gets the help from the lardess parvathi who has possessed the powerful shoulders in that twin form seated lard Siva in the thiruneedoor temple place
அவை எல்லாவற்றையும் செய்தற்கு மூங்கில் போலும் தோள்களை உடைய உமையைத் துணையாகக் கொள்பவனும் ஆகிய திருநீடூரின் கண்
வேந்த னைப்பணி யாவிட லாமே.
Ventha naip paniya vidalaamea
In that form lard Siva descended in the thiru needoor temple place we will not go away without pray him so we will go back and pray him
எழுந்தருளி உள்ள முதல்வனை நாம் வணங்காது விடுதல் ஆகுமோ ஆகாது எனவே அங்குச் சென்று அவனை வணங்குவோம்
கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்
Kandamung karuth thidaa pira nnai
To convert his throat as dark form that form of leader lard Siva
கண்டத்தைக் கறுப்பாகவும் செய்து கொண்ட தலைவனும்
காணப் பேணும வர்க்கெளி யானைத்
kannap penum vark keli yaanaith
Those disciples who are wanted to see him and he is simple form to them
தன்னைக் காண விரும்பும் அடியார்களுக்கு எளியவனும்
தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்
thondaraip perithum mukap pannai
Those who are doing menial service he will liked them
தனக்குத் தொண்டு பூண்டவரைப் பெரிதும் விரும்புபவனும்
துன்ப முந்துறந் தின்பினி யானைப்
thunba mun thurath thini pini yaanai
Without sorrow that type of happiness is given to all
துன்பம் இல்லாத இன்பத்தைத் தரும் இனியவனும்
பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்
pandai val vinaikal kedup paannai
The good old previous bad deeds are destroyed by him
பழைய வலிமை வாய்ந்த வினைகள் எல்லாம் அழிப்பவனும்
பாக மாமதி யாயவன் தன்னைக்
paaka maa mathiyaaya van thannaik
The cut form of moon that is third day moon form in that form adorned lard Siva and we are
பகுதிப்பட்ட சந்திரனுக்குக் களை கண் ஆயினவனும் ஆகிய இறைவனை நாம்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
Kendai vaalai kilar punal needurk
That kenndai and vallai fishes are leap forward that water bodies are filled place is thiruneedoor
கெண்டை மீன்களும் வாளை மீன்களும் துள்ளுகின்ற நீரை உடைய திருநீடூரின் கண்
கேண்மை யாற்பணி யாவிட லாமே.
kenmaiyaar paniyaa vidalaamea
And wise form we are not prayed and left over this place and it is not acceptable one so we go back and pray him
கேண்மையோடு வணங்காது விடுதல் ஆகுமோ ஆகாது எனவே அங்குச் சென்று நாம் வணங்குவோம்
அல்லல் உள்ளன தீர்த்திடு வானை
allal ullana theerth thidu vannai
All the sorrows are removed by lard Siva
துன்பம் எனப்படுவனவற்றைப் போக்குகின்றவனும்
அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்
adanthavar kamuthaayidu vaannai
Those who are attained him he is nectar form to them
தன்னை அடைந்தவர்களுக்கு அமுதம் போல் பயன் தருபவனும்
கொல்லை வல்லர வம்மசைத் தானைக்
kollai valara vam masaith thaani
The killing poison filled snack is tied on his waist as belt
கொல்லுதலை உடைய வலிய பாம்பைக் கட்டி இருப்பவனும்
கோல மார்கரி யின்னுரி யானை
kolamaar kariyin nuri yaanai
The lovely form of elephant skin is adorned as upper dress
அழகு பொருந்திய யானையின் தோலை உடையவனும்
நல்ல வர்க்கணி யானவன் தன்னை
naallavar kaniyaa navan thannai
Those who are following ethical form of life he is ornament to them
நன்னெறியில் நிற்பவர்கட்கு அணிகலமாய்த் திகழ்பவனும்
நானுங் காதல்செய் கின்றபி ரானை
naanung kathal sei kindra piraa nai
Lard Siva who is always liked his disciples that form of leader he is
அடியேனையே விரும்புகின்ற தலைவனும் ஆகிய இறைவனை நாம்
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்
elli mallikaiyea kamal needoor
In that thiru needoor place where jasmins are spread over fragrance in that thiru needoor temple we are not prayed
மல்லிகை மலர்கள் மிகவும் மணம் வீசுகின்ற திருநீடுரைத் துதித்து வணங்காது
ஏத்தி நாம்பணி யாவிட லாமே.
Eaath thi naam paniyaa vidal aamea
We should not missed this place so we will go back and pray him
விடுதல் ஆகுமோ ஆகாது எனவே அங்குச் சென்று அவனை வணங்குவோம்
பேரோர் ஆயிர மும்முடை யானைப்
Per oor aayiramum udai yaanai
Lard Siva who has thousands of names
எல்லாம் பெயர்களையும் உடையவனும்
பேரி னாற்பெரி தும்மினி யானை
perinnar porithum mini yaanai
With our mouth talking he is tit bits form to all
வாயால் பேசும் வழி பெரிதும் இனிப்பவனும்
நீரூர் வார்சடை நின்மலன் தன்னை
neerool vaar sadai nin malan thannai
The water is spill over that long hair possessed lard Siva that pure form of lard Siva
நீர் ததும்புகின்ற நீண்ட சடையினை உடைய தூயவனும் ஆகிய
நீடூர் நின்றுகந் திட்டபி ரானை
needur nind ru kanthitta piraan nai
In the thiruneedoor temple place descended lard Siva
திருநீடுரை விரும்பி எழுந்தருளி இருக்கின்ற இறைவனை
ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்
aaruranndi kaan pathar kan paai
Whose sacred feet is seen and love form prayed under his feet
அவன் திருவடியைக் கண்டு வணங்குதற்கு அன்போடு விரும்பி
ஆத ரித்தழைத் திட்டஇம் மாலை
Aathari thalitha titta im malai
Our suntherer who has called all and then sang the above decade
நம்பி ஆரூரன் அனைவரையும் அழைத்துப் பாடிய இத்தமிழ் மாலையால்
பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
Paa rurum paravi thola val laar
In this land place those disciples who are prayed him and praised him
நில உலகத்தில் உள்ள எவ்வூரின் கண்ணும் இறைவனைப் பாடி வணங்க வல்லவர்
பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.
Path tha raai muththi thaam peru vaarea.
All are converted his disciples and then got the heavenly abode mukthi
அவனுக்கு அடியராகி முத்தியைப் பெறுவார்கள்
திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAMBALAM