OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEDAI MARUTHOOR

ganesheit May 13, 2019

60.திருவிடைமருதூர்

THIRU VEDAI MARUTHOOR

OM THIRU CHITRAMBALAM

Once Sunthera moorthi nayanar got gold in the thiru pugaloor place and then returned to thiruvaroor and then stayed there. After some time he went to so many temple places and then prayed in the thiru vavadu thurai place and then after wards the southern side of river Cauvery situated so many abodes are prayed and then ultimately prayed in the thiru vedai maruthoor where he sang the following songs

So as to get upliftment in life he sang the following decade

  சுந்தர மூர்த்தி நாயனார் திருப்புகலூரில் பொன் பெற்றுத் திரும்பித் திருவாரூரை அடைந்து அமர்ந்திருந்த பின்னர் பல தலங்களை வணங்கப் புறப்பட்டு வணங்கி வரும் காலத்தில் திருவாவடுதுறையை வணங்கிய பின் காவிரியின் தென்கரையில் உள்ள பல தலங்களைப் பணிந்து திருவிடைமருதூரை அடைந்து இறைவரை வழிபட்டுப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

   இஃது உய்யும் நெறிக்கண் உள்ள பெரு விருப்பால் தம் நிலையை மறந்து அதனை வேண்டி அருளிச் செய்தது

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்

kaluthai kun gumam thaan suman theith thaar

The donkey carried the kum kum bundle and then toiled and moiled

கழுதையானது குங்குமப் பொதியைச் சுமந்து மெய் வருந்தினால்


 கைப்பர் பாழ்புக மற்றது போலப்

Kaip par paal puga mat rathu pola

So there is no special in it so that all are laughed at it and just like

அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி அனைவரும் நகைப்பர் அது போல


பழுது நான்உழன் றுள்தடு மாறிப்

paluthu naan ulan rul thadu maari

I am your disciple accepted to do service under your feet and did not get the benefit from it and my mind in the shattered manner

அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனம் தடுமாறி


 படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்

padusu lith thalai patta nan en thaai

And I am trapped in the deep fastly flowing squired water that way I am trapped in the family life

வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல இந்த உலக வாழ்க்கையில்


அழுது நீயிருந் தென்செய்தி மனனே
aluthu nee yirun then sei thi mananea

And in that way I am my mind got trouble after wards my mind will instruct me and if you do not doing the true menial service then what else you will do and then from it what benefit will you get from this world

அலமருவேனாயினேன் மனமே நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப் பட்டு இருந்து என்ன பெறப் போகின்றாய் என்று நெஞ்சம் அறிவுறுத்தவும்

 அங்க ணாஅர னேயென மாட்டா
anga naa arane yena maatta

The fore head eye possessed my dear king in that way I am not prayed with love

அங்கணனே அரனே என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத

இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்

iluthai yen ukkor uivakai arulaai

The idiot person I am so you may get down from your place and then and then show me to get upliftment in life and then bless me

அறிவில்லேனாகிய எனக்கு நீ மனம் இறங்கி உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருள்வாயாக


 இடைம ருதுறை எந்தைபி ரானே.

idaima ru thurai enthai pi raane

My dear father you have descended in the thiru vedai maruthoor temple place as my sect god form

என் அப்பனே திருவிடை மருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதெய்வமே

நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
naraip pu moopodu pini varum innea

The grey hair and old age and deceases will approach instantly

நரையும் மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும்

 நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்

nanri yil vinai yethunin theith theean

The bad acts are liked and forcefully did it so that I have got tiredness and weak

நன்மை இல்லாத செயல்களையே பற்றாகத் துணிந்து செய்து இளைத்தேன்


அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்

Arath tha mansala thaa vathai arin thean

The grinded cucumber like I have lost my lovely appearance and then perished

அரைக்கப்பட்ட மஞ்சள் போல அழகு இழந்து ஒழிவதாம்


 அஞ்சி னேன்நம னாரவர் தம்மை

ANGI NEAN NAMA NAAR AVAR THAMAI

So I have feared to death god

அதனால் கூற்றுவனுக்கு அஞ்சுதல் உடையனாயினேன்


உரைப்பன் நானுன சேவடி சேர

Uraip pan naanuna sevadi sera

And in that fear some mood now I am surrendered under your feet and I prayed for protection

ஆகவே இது போழ்து நான் உன் திருவடிகளை அடைய உன்னை வேண்டுவேனாயினேன்


 உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத

unarum vaalk kaiyai onrari yaatha

The best way of life is not known in micron form

அறிவது அறிந்து வாழும் வாழ்க்கையைச் சிறிதும் அறியாத


இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்

iraippa ne nukkor ui vakai aru laai

That emotional filled glittering way of life is followed and then spoilt myself so you may show the way to get upliftment in life

ஆரவாரச் செயல்களை உடையேனாகிய எனக்கு நீ உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்


 இடைம ருதுறை எந்தைபி ரானே.

idaima ru thurai enthai pi raane

So lard Siva you are dwelling in the thiruvedai maruthoor temple place and you are my prime god

திருவிடை மருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதேவனே

புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்

punnu naip pini ven gathir kan daar

In the tip of the grass there is a snow dew when it is confronted with the sun rays

புல்லின் நுனியில் உள்ள பனித்துளி வெவ்வியலாகிய கிரணங்களை உடைய சூரியனை

 போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
polum vaalkkai porulilai naalum

It will vanish from our eye sight in that way this life is not at all permanent one

எதிர்பட்டால் போல்வதாகிய இம்மானுட வாழ்க்கை ஒரு பொருள் ஆதல் இல்லை

என்னெ னக்கினி இற்றைக்கு நாளை

enne nak kini itraik ku naalai

And today it will give happiness and tomorrow it will give happiness such away

ஏனெனில் இன்றைக்கு இன்பம் உளதாகும் நாளைக்கு இன்பம் உளதாகும்


என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்

enri runthidar utranan en thaai

In this way daily thinking it and I am failed in the life so here after what is going to give me permanent happiness

என்று நாள்தோறும் நினைந்து ஏமாறினேன் இனி மேல் நான் எனக்கு என்ன உண்டாக இருக்கின்றது


முன்ன மேஉன சேவடி சேரா

munna meuna sevadi seraa

So at first I do not want to enter your feet

ஆதலால் முன்பே உன்னுடைய செவ்விய திருவடியைச் சேர விரும்பாது


மூர்க்க னாகிக் கழிந்தன காலம்

moorkka naaki kalinthana kaalam

That idiot form of mentality all the life time is gone away

கொண்டது விடாத மூர்க்கனான நிலையிலே காலம் எல்லாம் போய்விட்டன


இன்னம் என்றனக் குய்வகை அருளாய்

innam en ranak kui vagai aru laai   

So today itself you may show me the way to upliftment in life and then bless me

இப்பொழுதே எனக்கு நீ உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்


இடைம ருதுறை எந்தைபி ரானே.

Idai ma ruthurai enthai pi raaneea

My dear father you have descended in the thiruvedai maruthoor temple place and you are my prime lard

என் அப்பனே திருவிடை மருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதெய்வமே

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
munthi sei vinai immaik kan naliya

In the previous birth did bad acts are coming in this life and then giving me sorrow

முற்பிறப்பில் செய்த வினைகள் இந்த பிறப்பில் வந்து துன்புறுத்துதலினால்

மூர்க்க னாகிக் கழிந்தன காலம்

moorkka naaki kalin thana kaalam

And I am attracted by it and all the life span is spoilt

அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலம் எல்லாம் போயின


சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன்

sinthi the manam vaikkayum maat tean

I do not think good and bad and then remove the world attachment and I am not put you in mind as dweller to help me

நன்மை தீமைகளைச் சிந்தித்து உலகப் பற்று அகற்ற உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேன் ஆயினேன்


சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்

Siruch siri th eriap paar katkon ree yeean

And in this world those who are begging I do not help him

உலகியலிலும் இரப்பவர்கட்கு அவர் விரும்பிய தொன்றை ஒரு சிறிதும் ஈதலும் செய்திலேன்


அந்தி வெண்பிறை சூடும்எம் மானே

anthi venpirai soodum em maane

In the evening time appeared the curved moon is adorned by lard Siva

மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடியவனே


ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
aaroor meviya amarargal thalaivaa

You are dwelling in the thiruvaaroor temple place as deevass leader

திருவாரூர் இருக்கும் தேவர் தலைவனே

எந்தை நீயெனக் குய்வகை அருளாய்
enthai neeyena kuivakai arulaai

My dear father you may show me the right path to attain upliftment in life

என் தந்தையே எனக்கு நீ உய்யும் நெறியை வழங்கி அருளாய்

இடைம ருதுறை எந்தைபி ரானே

idaima ru thurai enthai pi raaneea

In the thiruvedai maruthoor place descended my dear lard Siva you are my prime lard

திருவிடை மருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதேவனே

அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
alippar aivai pura udai yaarkal

To destroy all the good things that five sense organs who are ruling me in the wrong direction

நன்மைகளை எல்லாம் அழிப்பவராகிய ஓர் ஐவர் என்னை ஆளுதல் உடையர்

ஐவ ரும்புர வாசற ஆண்டு

aiva rum puravaa sara aandu

That five sense organs are well ruling me in the wrong direction

அந்த ஐந்து பேரும் என்னை ஆளுதலை நன்றாகச் செய்து


கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்

kaliththu kaarpeithu poyina pinnai

After my body and wealth strength is completely vanished from my part and then I am thrown away in to dust bin and then gone away from me

இனி இவனால் பயன் இல்லை என்று கழித்து என்னைத் தங்கள் கால் கீழ் போட்டுப் போய்விட்ட பின்பு


கடைமு றைஉனக் கேபொறை ஆனேன்

Kadai mu rai unak ke porai aanean

And at last I am burden to me

முடிவில் உனக்கே நான் சுமை ஆயினேன்


விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை

viliththu kandanan meip porul thannai

And then I have got awareness and then known the truth

அதன் பின்பே நான் விழிப்படைந்து உண்மையை  உணர்ந்தேன்


 வேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்

venden maanuda valkkai yi thaakil

This family life this form of one so here after I will not like it

மானுட வாழ்க்கை தான் இத்தன்மையதே  என்றால் இனி இதனை நான் விரும்பேன்


இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய்

Ilith then enranak kui vakai aru laai

Now this life much degraded one and in that way I have realized so to get relief and then show me the way to get upliftment in life

இதனை மிக்க இழிவுடையதாக உணர்ந்து விட்டேன் எனக்கு நீ உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்


இடைம ருதுறை எந்தைபி ரானே.

Idai ma ru thurai enthai pi raane

Lard Siva you have dwelling in the thiruvedai maruthhor temple place and you are my prime lard

திருவிடை மருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதேவனே

குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
kutra than nodu kunam pala perukki

The good as well as bad deed as abundantly did

தீவினையும் நல்வினையுமாகிய இரு வினைகளை மிகுதியாகச் செய்தும்

கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்

kola nun nidai yaa rodu mayangi

The lovely narrow waists are possessed and those ladies I have mingled and then got giddiness

அழகிய நுண்ணிய இடையினை உடைய மகளிரோடு கூடி மயங்கி நின்று


கற்றி லேன்கலை கள்பல ஞானங்

katri lean kalai kal pala gnaanag

I do not enter in to the good books and then not enquired the gaana way of life

மெய் நூல்கள் பலவற்றில் புகுந்து ஞானத்தை உணராதும்


கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்

kadiya aayina kodu maigal seitheean

So that wild bad acts I have did

மிகவும் கொடுமையான செய்களைச் செய்தேன்


பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்

patra laavathor patru mat rilean

So I do not got good guiding pole in this world

அதனால் பற்றத்தக்க தொரு பற்றுக் கோடு இலனாயினேன்


பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்

paavi yean pala paavangal seithean

So I am sinner so many sins I have did and then I am sinner in this world so what is the reason to live

இவ்வாறு பலவாகிய பாவங்கள் செய்து பாவியாகிய நான் எதன் பொருட்டு


எற்று ளேன்எனக் குய்வகை அருளாய்

eatru leean enak kui vakai arulaai

In this world so show me the good path and in that way I will move and then get upliftment in life

உயிர் வாழ்கின்றேன் நீ எனக்கு உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்


இடைம ருதுறை எந்தைபி ரானே.

idaima ru thurai enthai pi raane

Lard Siva you have descended in the thiruvedai maruthoor temple place

திருவிடை மருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதேவனே

கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்

Koduk ka kitri leean one porul thannai

That philanthropist act of giving to others because of enmity I will not give it to others

ஈகை வழியாகப் புகழைத் தரத்தக்க பொருளை உருவமும் பகைமையும் காரணமாகப் பிறருக்கு யான் கொடுக்க மாட்டேன்


குற்றஞ் செற்றம் இவைமுத லாக

kutranj setram ivai mutha laaga

The lust and angry all are eradiated

ஆசையும் கோபமும் ஆகிய இவைகளை ஒழிக்க


விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்

vidukka kit rilean vet kaiyunj sina mum

And so as to give up on the five sense organs likings

மாட்டேன் ஐம்புலன்கள் மேல் செல்கின்ற ஆசைகளை விட நினைத்தால்


 வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல
vendil aipulan enva sam alla

And it is not under my control and I am under its control

அவற்றின் வயத்தேன் அல்லது அவை என் வயத்தன அல்ல

நடுக்கம் உற்றதோர் மூப்புவந் தெய்த

nadukkam utra thoor muppu van thei tha

So at last the hand and body shivering form of old age is set in

அதனல் உடல் நடுங்குதல் பொருந்தியதாகிய மூப்பு என்பது ஒன்று வந்து அடைய


நமன்த மர்நர கத்திடல் அஞ்சி

Naman tha mar nara kath thidal anji

And at that time death god ema’s diplomats corned me and then put in to the hell and now it is thinking over

அப்போது இயமனது ஏவலர் என்னைக் கொண்டு சென்று நரகத்தில் இருதலை நினைந்து


இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்

idukkan utranan yuivakai arulaai

Now I am got afraid of and got sorrow so please show me the way to get upliftment in life and bless me

அஞ்சித் துன்புறுவேனாயினேன் எனக்கு நீ உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்


இடைம ருதுறை எந்தைபி ரானே.

idaima ruthurai enthaipi raane

Lard Siva you have descended in the thiru vedai maruthoor temple place and your my sub-sect prime god

திருவிடை மருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதேவனே

ஐவ கையர் ஐயரவ ராகி
aiva kaiyar aiyaravaraaki

The five different mannerism filled king form

ஐவகை வேறுபட்ட தன்மை உடைய அரசராய்

ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்

Aatchi kondoru kaalavar neengaar

All the kings are ruled me and at any cast they did not left me alone

என்னை ஆட்சி கொண்டு ஒருகாலூம் விட்டு நிங்காதிருக்கின்றனர்


அவ்வ கையவர் வேண்டுவ தானால்
avva kai yavar venduva thaa naal

So that five kings are in different way liked to rule me

அவ்வாறு அவர் தாம் தாம்வேறு வேறு வகையில் என்னை ஆள விரும்பினால்

அவர வர்வழி ஒழுகிநான் வந்து

avaravar vali olukin naan vanthu

I am went under their command and as per their wish all the acts are did

யான் அவர் வழியே அவர் வேண்டும் படி எல்லாம் சென்று நடந்து


செய்வ கையறி யேன்சிவ லோகா
seivakai yari yen sivaloga

And I do not know what I should do

செய்வது இன்னது என்று அறிகின்றிலேன்

தீவ ணாசிவ னேயெரி யாடீ

Thee vanaa sivane yeri yaadi

lard Siva you have fire like red body color and you are Sivaloga leader and then carried fire on hands and be always dancing form

நெருப்பு போலும் நிறம் உடையவனே சிவலோகத்திற்குத் தலைவனே தீயோடு நின்று ஆடுபவனே


எவ்வ கையெனக் குய்வகை அருளாய்

Evvakai yenak kui vakai arulaai

Please show me and then tell me which one to get upliftment in life and give me and then bless me

எனக்கு உய்யும் நெறியாவது எந்நெறி அதனை வழங்கி அருளாய்


இடைம ருதுறை எந்தைபி ரானே.

idaima ruthurai enthai pi raane

Lard Siva you have descended in the thiruvedai maruthoor temple place

திருவிடை மருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதேவனே

ஏழை மானுட இன்பினை நோக்கி
ealai maanuda inpinai nookki

The idiot life of happiness is thinking

அறிவில்லாத மானுட இன்பத்தைக் கருதி

இளைய வர்வலைப் பட்டிருந் தின்னம்

ilaiyavar valai pattirun thin nam

The youth will always give me happiness and in that way got fainting and there trap I am fallen

இளமை உடையராய் இன்பம் தந்த மகளீர் என்றும் அவ்வாறே இருந்து இன்பம் தருவர் என்று கருதும் மயக்கமாகிய வளையில் அகப்பட்டு


வாழை தான்பழுக் கும்நமக் கென்று

vaalai thaan paluk kum namak kenru

Once the banana tree gave me the fruits in the same way here after it will give me in that mentality form of thinking

முன்னர் பழத்தைத் தந்த வாழை இனியும் நமக்கு அவ்வாறே தரும் என்று கருதுவாரைப் போல


வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்

vanja valvinai yul valai pattu

So that the wild bad deed trap I have captured and then trapped

அதனாலே வஞ்சனையை உடைய வலியவினை என்னும் வலையிலும் அகப்பட்டு


கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்

koolai maanthar thanj sel kathip pakkam

That not ripped mentality possessed persons way I have followed

அறிவு முதிராத பொது மக்கள் செல்லும் வழியிடத்து நின்று


போக மும்பொருள் ஒன்றறி யாத

pogamum porul onerariyaatha

The ganna knowledge nature and from this way seeing the material things nature not known even a grain amount

அறிவின் இயல்பையும் அதற்குப் புலனாய் நிற்கும் பொருளின் இயல்பையும் சிறிதும் அறியாத


ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்

Ealai yenukkor uivagai arulaai

I am poor person lard Siva you may show me the good way to get upliftment in life and then bless me

எளியேனுக்கு உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்


இடைம ருதுறை எந்தைபி ரானே.

idaima ru thurai enthai pi raaneea

Lard Siva you have descended in the thiruvedai maruthoor temple place

திருவிடை மருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதேவனே

அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி

araikkunj santhanath tho dakil yunthi

The paste form of converted the sandal wood and then the agil tree wood on both side of the river pushes forward

அரைக்கப்படும் சந்தன கட்டையையும் அகில் கட்டையையும் இருமருங்கும் தள்ளிக் கொண்டு


ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும்

aiva naj suman thaarth thiru paalum

And hill paddy is plucked with the root and carried away

மலை நெல்லைத் தாளோடு மேல் இட்டுக் கொண்டு

இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்

iraikkung kaaviri thenkarai than meal

That water filled form of water sound raising that river Cauvery southern side

நிறைந்து ஒலிக்கின்ற காவிரியாற்றின் தென்கரைமேல்


இடைம ருதுறை எந்தைபி ரானை

Idai maruthurai enthai pi raanai

Where situated thiru vedai maruthoor temple place descended lard Siva who is my sect god whose glory is singing form

உள்ள திருவிடைமருதூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் குலதேவனாகிய பெருமானைப் பாடிய


உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை

uraikkum yuoran oli thigal maalai

I am named nambi arrooren and my intuition filled those above songs

நம்பி ஆரூரனாகிய எனது உணர்வு மிக்க இப்பாடல்களை


உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்

ullaththaal ugan theththaval laarkal

Those disciples who are think over in mind and chanted it daily before lard Siva

உள்ளத்தால் உகந்து எத்த வல்லவர்கள்


நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
naraippu mooppodu nadalai yum inri

Their hair do not turned in to gray and old age and do not die

நரைத்தலும் மூத்தலும் இறத்தலும் இன்றி

நாதன் சேவடி நண்ணுவர் தாமே.

naathan sevadi nannuvar thaameea

That people will enter lard Siva’s feet and it is certain one

அந்த இறைவனது செவ்விய திருவடிகளை அடைவர் இது திண்ணம்

OM THIRU CHITRAM BALAM

May 13, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: