THIRU VALGOLIPUTHOOR
57.திருவாழ்கொளிபுத்தூர்
THIRU VALGOLIPUTHOOR
Suntherer who has prayed in the mani padikarai temple place and then he has forgotten to pray in thiru valkoli puthoor and moved away from that place and accidently remembered that place and then came back and then prayed in this temple
In this decade there is only thing to remember in this world is lard Siva only in this way he thinks over and sang the following decade
சுந்தர மூர்த்தி சுவாமிகள் மண்ணிப் படிக்கரையைத் தரிசித்து விட்டுச் செல்லுகையில் அருகில் உள்ள திருவாழ்கொளிபுத்தூர்க்குப் போகாமல் செல்லும் போது இடையில் நினைவு வந்து மீண்டும் இப்பதிகம் பாடி அத்தலத்துக்கு வந்து சிவபெருமானைத் தரிசித்தார்.
இப்பதிகம் இறைவனை அன்றி நினைப்பதற்குரிய பொருள் வேறு இல்லை என்பதனை நினைத்து அருளிச் செய்தது
தலைக்க லன்றலை மேல்தரித் தானைத்
Thalaik ka lan ralai meal thari thaanai
தலையாகிய அணிகலனைத் தலையில் அணிந்தவனும்
தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்
thannai yennai ninaikkath tharu vaanai
Lard Siva who gave himself to me so as to think over him all the times
தன்னை எனக்கு நினைக்குமாறு தருபவனும்
கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்
Kolaik kai yaanai uri porththugan thaanai
The killer instinct filled and long nose possessed the elephant and its skin is pealed and adorned it happily
கொலைத் தொழிலையும் கையையும் உடைய யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனும்
கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை
Kuut ruthai thakurai ser kazha laanai
Lard Siva who has kicked the death god ema that sound raising anklet adorned sacred feet possessed form of
கூற்றுவனை உதைத்த ஒலித்தல் பொருந்திய கழலை அணிந்த திருவடியை உடையவனும்
அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை
alaiththa sengan vidai eaara val laanai
And those who are defied the bull and that bull will give pain to them in that way red eyes are possessed that bull is tamed and used as travelling vehicle to all the places by lard Siva
எதிர்த்தவரை வருத்தும் சிவந்த கண்களை உடைய இடபத்தை ஊர வல்லவனும் ஆகிய
ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
aanai yaal adiyen adi naayean
As per the order of lard I am surrendered under his feet as slave in that way I am last grade dog in this world
அவன் ஆணை வழியே அவனுக்கு அடிமை ஆனேன் ஆகிய அடி நாய் போன்ற யான்
மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
malaiththa sennel vayal vaal koli puththoor
The paddy fields are sprouted form of red color paddy surrounded place is thiru valgoli putoor temple where lard Siva descended
பயிர்கள் தம் தலை மேற்கொண்ட செந் நெல்களை உடைய திருவாழ் கொளிப்புத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
Maanik ka thai maran then ninaik kenea
That ruby diamond form of lard Siva will I forget him I do not and I will not think over anything in this world
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
Padaik kat soolam payila val laanai
Out of so many battle forces he is always practicing the soolam battle force
படைக்களுள் சூலம் பழக வல்லவனும்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
paavi paar manam paavi kon daanai
Those who think over him and in their mind he spread over and then trapped by him
தன்னை நினைவாரது உள்ளத்தில் பரவி அகப்பட்டுக் கொள்பவனும்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
Kadaik kat pich chai kichchai kaathali thaanai
In the door steps place stands and then collecting begging food which is always liked by him
வாயில்களில் நின்று ஏற்கும் பிச்சையை விரும்புதலைச் செய்பவனும்
காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
kaaman aa kan thanai kattalith thaanai
He gave at first life to Kaman and afterwards he destroyed him
காமனது உடலை அமைத்து அழியச் செய்தவனும்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
Sadaik kat kangaiyai thaazha vai thaanai
He allowed Ganges to be stayed in his hair
கங்கையைச் சடையில் தங்கும் படி வைத்தவனும்
தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
thanneer man neekkarai yaanaith thak kaanai
The cool water filled mani river bank he is dwelling and all the qualities filled form
தண்ணிய நீரை உடைய மண்ணியாற்றின் கரையில் இருப்பவனும் எல்லா தகுதிகளையும் உடையவன் ஆகிய
மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்
Madaik kan nee lam alar vaalkoli puth thoor
In the water bodies the dark color flower named neeloorpavam boomed where lard Siva descended
நீர் மடைகளில் நீலோற் பவ மலர் மலர்கின்ற திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
maanikka thai maran then ninai kene
That ruby diamond form of lard Siva and will I forget and then think over any other thing in this world
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
வெந்த நீறுமெய் பூசவல் லானை
ventha neeru mei poosa val laanai
The burnt down ashes are applied all over the body in paste form
வெந்த சாம்பலை உடலில் பூச வல்லவனும்
வேத மால்விடை ஏறவல் லானை
Vetha maal vidai ear vaal laanai
The veeta form of good bull on it he is ascended
வேதமாகிய சிறந்த விடையை ஊர வல்லவனும்
அந்தம் ஆதிஅறி தற்கரி யானை
antham aathi ari thark ari yaanai
The begging and end is not known that rare form of lard Siva
முடிவும் முதலும் அறிதற்கு அரியவனும்
ஆறலைத் தசடை யானைஅம் மானைச்
Aar alai tha sadai yaanai am maa nai
The Ganges river water is lashing that type of hair possessed lard Siva who is senior to all
ஆற்று நீர் மோதுகின்ற சடையை உடையவனும் பெரியோனும்
சிந்தை யென்றடு மாற்றறுப் பானைத்
sinthai yen radu maat raru paanai
That lard Siva who has removed my mind bogging problems
எனது மனக் கலக்கத்தைக் களைப்பவனும்
தேவ தேவனென் சொல்முனி யாதே
theva theva nen sol muni yaathea
He is deevas leader and at first I have cursed and teased him but he is not given regard to those wards
தேவர்களுக்கு தேவனும் யான் இகழ்ந்து சொல்லிய சொல்லை பெறாமல்
வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
vanthen ullam pugum valkoli puth thoor
And then he has entered in to my mind and stood there forever in that form he has descended in the thiru valgoli puthoor temple place
வந்து என் உள்ளத்திலே புகுந்து நிற்பவனும் ஆகிய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
Maanik ka thai maran then ninaik kinrenea
That ruby diamond form of lard Siva and will I forget and think over any other thing in this world
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்
thadangai yaanmalar thooith thozhlu vaarai
Those devotees who are collected big flowers on their hands and then sprayed under the feet of lard Siva and then prayed with oneness form of mind
பெரிய கைகளால் மலர்களை எடுத்துத் தூவிக் கும்பிடுகின்றவர்கள்
தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்
thannadi ke sellu maaru val laanai
At first allowed to wander everywhere and then ultimately made to enter under his feet in that philanthropist he is
பிறவிடத்துச் சென்று தன் திருவடியிடத்தே செல்லுமாறு செரித்த வல்லவனும்
படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப்
padan gol naagam arai aarth thugan thaanai
The dancing snake is tied willingly on his waist
படத்தை உடைய பாம்பை அரையில் விரும்பிக் கட்டி உள்ளவனும்
பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
pallin vel laith thalai uoon udaiyaa nai
The white teeth filled the skull on it, he collects the begging food and then eat it
முன்னர் விளங்கும் பற்களை உடைய வெள்ளிய தலையில் உண்ணுதல் உடையவனும்
நடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானை
nadunga aa nai uri porth thugan thaanai
His wife got shivering form of pealed the elephant skin and then adorned it as upper dress
தன் தேவியர் நடுங்கும்படி யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனும்
நஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை
nanjam undu kan dan garuth thaanai
The poison consumed so that he got the dark color throat
நஞ்சினை உண்ட கண்டம் கரியதாகியவனும்
மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
madanthai paa ganai vaalkoli puththoor
He is appearing in the form of artha nares wara (half part of his body lardess parvathi body) and in that form he is descended in the thiru Vaal goliputoor temple place
மாதொரு பாகம் ஆகிய திகவாழகொழிப்புத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
maanikka thai maran then ninaik kenea
That ruby diamond form of lard Siva and will I forget him and then think over any other thing in this world
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்
valaikkai mun kai malai mangai manaa lan
The bangles are adorned fore hand possessed lardess parvathi who is his wife
வளையலை அணிந்த முன் கையை உடைய மலை மகளுக்கு மணாளனும்
மார னார்உடல் நீறெழச் செற்றுத்
maara naar udal neerezha ch setru
The lust creating god named manmatha whose body is converted as ashes form
மன் மதனது கரிய உடம்பை சாம்பலாய் ஒழியுமாறு அழித்தவனும்
துளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை
thulaiththa anga thodu thuu malark konrai
The holed bone ornaments and pure konrai flower
துளை செய்யப்பட்ட எலும்பும் தூய கொன்றை மலரும்
தோலும்நூ லுந்துதைந் த வரை மார்பன்
tholumnoo lun thuthai tha varai maarpan
And skin dress adorned on the bosom of lard Siva
தோலும் நூறும் நெருங்கிய கீற்றுகளை உடைய மார்பை உடையவனும்
திளைக்குந் தெவ்வர் திரிபுரம் மூன்றும்
Thilaik kun thev var thiripuram moonrum
In the space place wandering three castles and in it living three assurass who have enjoyed happiness that three opponents
வானத்தில் திரிகின்ற மூன்று திரிபுறங்களும் அதன் கண் வாழ்ந்து இன்பம் நுகர்கின்ற பகைவர் மூவரும்
அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
avunar pendirum makkalum veva
And those assures who are pro to them and their wives and children all are burnt down form
அவரைச் சார்ந்த அசுரரும் அவர்தம் பெண்டிரும் பிள்ளைகளும் வெந்து ஒழியுமாறு
வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்
valaiththa villi yai vaalkoli puth thoor
In that way lard Siva who has shot an arrow from the bow in that who has descended in this valgoliputoor temple place
வளைத்த வில்லை உடையவனும் ஆகிய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளி உள்ள
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
Maanik ka thai maran then ninaik kenea
That ruby diamond form of lard Siva and will I forget and then think over anything in this world
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
திருவின் நாயகன் ஆகிய மாலுக்
thiruvin nayagan aagiya maalu
The wealth god Lakshmi whose husband Thirumal in so many times
திருமகளுக்குக் கணவனாகிய திருமாலுக்குப் பல பொழுதுகளில் பல
கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
karulkal sei thidum thevar piraa nai
Lard Siva gave special powers and boons and then blessed him and whose leader
திருஅருளைச் செய்த தேவர் தலைவனும்
உருவி னானைஒன் றாவறி வொண்ணா
uruvi naanai one raa vari von naa
In that form of lard Siva and that lard is not in single form and innumerable form of known by his disciples
உருவம் உடையவனும் அந்த உருவம் ஒன்றாக அறியப்படாத அளவற்றவனாய் அறியப்படும் கடவுளும்
மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
moorthi yai visa yark arul seivaan
In that deity form of lard Siva who has tried to put his grace on Arujuna
அருச்சுனனுக்கு அருள் செய்தல் பொருட்டு
செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று
seruvil eanthi yoor kelar pin senru
Lard Siva who has carried bow on his hand and followed on the back of the pig
போருக்கு உரிய வில் ஒன்றை ஏந்திக் கொண்டு ஒரு பன்றியின் பின்னே சென்று
செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
sengan veda naai ean nodum vanthu
The red color eyed hunter form moved there and who is come near to me
சிவந்த கண்களை உடைய வேடனாய்ச் சென்றவனும் என்னிடத்தில் வந்து
மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
maruvi naan ranai vaalkoli puth thoor
And then mingled with me in that form lard Siva descended in the thirvalgoliputoor temple place
பொருந்தி உள்ளவனும் ஆகிய திருவாழ்கொளிப்புத்தூரில் எழுந்தருளி உள்ள
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
maanikka thaimaran then ni naik keanea
That ruby diamond form of lard Siva will I forget him
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
எந்தை யைஎந்தை தந்தை பிரானை
eanthai yai enthai thanthai piranai
He is my father and father’s father and my leader
என் தந்தையும் என் தந்தை தந்தைக்கும் தலைவனும்
ஏத மாயஇடர் தீர்க்கவல் லானை
eatha maa ya idar theerkka val laanai
To the sorrows and from it emanated impediments all are removed form
துன்பத்திற்கு வழியாகிய இடையூறுகளைப் போக்க வல்லவனும்
முந்தி யாகிய மூவரின் மிக்க
munthi yaakiya moovarin mikka
To all in the world he is first person and the three sub lards named bharma thirumal and ruthira he is above to command them
யாவர்க்கும் முன்னோராகிய மும்மூர்த்திகளினும் மேலான மூர்த்தியும்
மூர்த்தி யைமுதற் காண்பரி யானைக்
Moorth thi yai muthar kaan pari yaanai
He is not known in physical form
தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய
கந்தின் மிக்ககரி யின்மருப் போடு
kanthin mikka kariyin marup podu
In the manni river place tied the elephant on the pole that ferocious elephant horns
மண்ணியாறு வழியாக தறியிடத்தில் நின்று சினம் மிகுகின்ற யானையின் தந்தங்களும்
கார கில்கவ ரிம்மயிர் மண்ணி
kaarakil kavarim mayir manni
The dark color agil tree wood and KAVARI stage hairs
கரிய அகில் கட்டைகளும் கவரி மானின் மயிர்களும்
வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்
vanthu van thili valkoli puth thoor
In that thiruvalgoliputoor place filed that river bed place descended lard Siva
வந்து வந்து வீழ்கின்ற திருவாழ்கொளிப்புத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
maanikka thai maran then ninaik kenea
That ruby diamond form of lard Siva will I forget him and then think any other thing in this world
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
தேனை ஆடிய கொன்றையி னானைத்
thenai adiya konrai yi naanai
In the honey dipped form of konrai flower garland adorned lard Siva
தேனில் மூழ்கிய கொன்றை மலர் மாலையை உடையவனும்
தேவர் கைதொழுந் தேவர் பிரானை
thevar kaith tholunth thevar piraanai
All the devas are prayed under lard Siva’s feet that prime lard he is
தேவர்கள் வணங்கும் தலையாய தேவர்களும்
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை
uoonam aayina theerk ka vallaa nai
All the deformities are removed by him
குறையாயவற்றை எல்லாம் போக்க வல்லவனும்
ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்
ottrai eat ranai netrik kan naanai
The single bull on its back moving form and fore head eye possessed form
ஒற்றை எருதை உடையவனும் நெற்றிக் கண்ணை உடையவனும்
கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த
kaana aanai yin kompi nai peeln tha
In the forest place living elephant horns are broken form
காட்டில் வாழும் யானையின் கொம்பை ஒடித்த
கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய
kalla pillaik kung kaan pari thaaya
Those who are culprit form to whom he is rare to see by them
கள்ளத் தன்மை உடைய சிறுவனுக்கும் காண அரிதாய பொருளாய் உள்ளவனும்
வான நாடனை வாழ்கொளி புத்தூர்
vaana naa danai vaal koli puth thoor
He is living in the upper world and who is descended in the thiru valgoliputoor temple place
வான் உலகத்தில் வாழ்பவனும் ஆகிய திருவாழ்கொளிப்புத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
maanikka thai maran then ninaik keenea
That ruby diamond form of lard Siva and is it possible to forget him and then think over any things in this world there is nothing permanent thing available in this world
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
காளை யாகி வரையெடுத் தான்றன்
kaalai yaaki varai yeduth thaan ran
The bull like power possessed ravana who has tried to excavate the kaiyilai hills
காளை மாடு போன்று கயிலாயத்தைப் பெயர்தவனாகிய இராவணனது
கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
Kai kal etra van moi thalai eal lam
That ravan’s hands are broken and his heads are smashed
கைகள் முரிந்து நெருக்கின தலைகளினின்றும்
மூளை போத ஒருவிரல் வைத்த
muulai potha oru viral vaith tha
And in that way lard Siva who has put on the land the leg thump finger
முளை வெளிப்படுமாறு தனது கால்விரலை ஊன்றிய
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
moorththi yai muthal kaan pari yaanai
That deity form of lard Siva and his clear appearance is not known by anybody in this world
கடவுளும் தோற்றம் அறியப் படாதவனும் ஆகிய
பாளை தெங்கு பழம்விழ மண்டிச்
paalai thengu palam vila mandi
And the coconut tree and palm tree ripped fruits are fallen down from the trees
பனையையும் தென்னை மரத்தினது நெற்றுக்கண் வீழ
செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
sengan methi gal se derin thengum
And where the red color eyes are possessed buffalos are made the land in to slush form
சிவந்த கண்களை உடைய எருமைகள் நெருங்கி சேறு செய்ய எங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
vaalai paai vayal vaalkoli puththoor
And in the all the water bodies where the vallai fishes are jump up and turned around and that place is thiru valgoli puthoor where lard Siva descended
எங்கும் வாளை மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருவாழ்கொளிப்புத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
maanikka thai maran then ninaik keenea
That ruby diamond form of lard Siva and is it possible to forget him
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
திருந்த நான்மறை பாடவல் லானைத்
thiruntha naan marai paada val laanai
The four veethass are Cristal clear form sung by lard Siva
நாங்கு வேதங்களையும் செவ்வனே பாட வல்லவனும்
தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்
thevark kun theri thark ari yaania
The deevass are not known that rare form he is
தேவர்கள் அரிதற்கு அரியவனும்
பொருந்த மால்விடை ஏறவல் லானைப்
poruntha maal vidai eara val laa nai
The big bull is ascended on it back by lard Siva and wandering every where
பெரிய விடையினை ஏற்புடைத் தாமாறு ஏற வல்லவனும்
பூதிப் பைபுலித் தோலுடை யானை
poothi pai puli thol udai yaanai
The sacred ashes small bag and tiger skin adorned form
திருநீற்றுப்பையும் புலித்தோலுமாகிய இவற்றை உடையவனும்
இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்
irunthun therum nin runuj samanum
Seated form consuming buthass and standing form consuming that samanas
இருந்து உண்கின்ற சாக்கியரும் நின்று உண்கின்ற சமணரும்
ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்
easa nira van aar oyir kel laam
Those above two people are cursed form of lard Siva and, that lard Siva is to all the living beings
இகழ நிற்பவனும் அரிய உயிர்கட்கு எல்லாம் அமுத
மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்
maruntha naan ranai valkoli puththoor
He is nectar form and that lard Siva is descended in the thiru valgoli puthoor
அமுதம் போல்பவனும் ஆகிய திருவாழ்கொள்புத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
Maanik ka thai maran then ninaik kenea
That ruby diamond form of lard Siva and is it possible to forget him
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை
meiyanai meiyin nin runar vaanai
He is never perishable form in this world and true form he is known by all
என்றும் ஓர் அழிவில்லாதவனும் மெய்மையில் நின்று உணரப்படுபவனும்
மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்
meiyi laa thavar thangaluk kellam
Those who are false person he is not known by them
அம்மெய்மையை இல்லதவர்க் கெல்லாம் உரைப்படாதவனும்
பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்
poyya naip puram moon reri thaa nai
That lard Siva who is destroyed three castles
முப்புரங்களை எரித்தவனும்
புனித னைப்புலித் தோலுடை யானைச்
punitha naip puli thol udai yaanai
He is pure and punier form and tiger dress adorned form
குற்றம் இல்லாதவனை புலித்தோலாகிய உடையை உடையவனும்
செய்ய னைவெளி யதிரு நீற்றில்
seyya naiveli ya thiru neetril
His body color is red one and white ashes are adorned form of appearing
சிவந்த நிறம் உடையதாய் வெள்ளிய திருநீற்றால் விளங்குகின்ற
திகழு மேனியன் மான்மறி ஏந்தும்
thigalu meni yan maan mari ean thum
That sacred body possessed lard Siva and carried stage on his hand
திருமேனியை உடையவனும் மான் கன்றை ஏந்துகின்ற
மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்
Mai kol kandanai val koli puth thoor
And that lard has dark color throat and who has descended in the thiru valgoli puthoor temple place
கருமை நிறத்தை கொண்ட கண்டத்தை உடையவனும் ஆகிய திருவாழ்கொளிப்புத்தூரில் எழுந்தருளி உள்ள
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
Maanik ka thai maran then ninaik keenea
That ruby diamond form of lard Siva and is it possible to forget him
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதை நினைப்பேன் ஒன்றையும் நினையேன்
வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
Valan gi lar polil vaalkoli puth thoor
The powerful place of plantation covered one is thiru Val goli puthoor and where lard Siva descended
வலிமை மிக்க சோலைகளை உடைய திருவாழ்கொளிப்புத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென்
Maanik ka thai maran then ninai keenen
In that ruby diamond form of existing lard Siva will it be possible to forget and then think over any other thing in this world and it is impossible one and in this way said
மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதனை நினைப்பேன் என்று சொல்லிப்
றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்
Rulan ku lir thamil uooran van rondan
That hard disciple named suntherer who has sung this benefit giving Tamil poems
வன் தொண்டனும் பாடிய பயன் மிகுந்த இத்தமிழ்ப் பாடல்களை
சடையன் காதலன் வனப்பகை அப்பன்
sadaiyan kaathalan vanap pagai appan
And that suntherer is son of sadaiya naar and that suntherer adopted daughter named singadi
சடையனார் மகனும் வனப்பகை சிங்கடி என்னும் நங்கையர்க்கு தந்தையும்
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
nalangi lar vayal naa valar venthan
The fertile and productive fields are filled place is thiru navallor and that place leader
விளைவு மிகுகின்ற வயல்களை உடைய திருநாவலூரில் உள்ளார்க்கு தலைவனும்
நங்கை சிங்கடி தந்தை பயந்த
nangai singadi thanthai payantha
சிங்கடி என்ற பெயரை உடைய பெண்ணின் தந்தை
That suntherer who has sung
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்
palangi lar thamil paada val laar meal
That nambi aaroorer who has sung that mind cooled form of singing Tamil poems
இறைவனை உளம் குளிர்ந்து பாடும் தமிழை உடையவனும் ஆகிய நம்பி ஆரூரன் பாடிய
பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே
paraiyu maan seitha paavan gal thaanea
Those who sang it before lard Siva and those people’s sins are removed firmly
பாடல்களை பாட வல்லவர் இடத்தில் நின்றும் அவர்கள் செய்த பாவங்கள் திண்ணமாகப் பறந்து நீங்கும்
Om thiru chitrambalm