THIRU KALU MALAM
58.திருக்கழுமலம்
THIRU KALU MALAM
OM THIRU CHITRAMBALAM
Suntherer after prayed in Chidambaram temple and then
Crossed the Kolidam River and then entered in to seergaali. It is the place where Thiru ganasambather descended so he got afraid of to touch this place with his feet so he went around the place and at that time lard Siva appeared before him and instantly he sang the following songs
சுந்தர மூர்த்தி சுவாமிகள் சிதம்பரத்தைத் தரிசித்துக் கொண்டு கொள்ளிடத்தைக் கடந்து சீகாழியை நோக்கி வந்தவர் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அவதரித்த அந்தலத்தைக் காலினால் மிதிக்க அஞ்சி ஊர் புறத்தே நின்று வண்ங்கி வலம் வருகையில் சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்து அருளினார் அப்பொழுது ஆளுடைய நம்பிகள் பாடிய பதிகம் இது.
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
Saa thalum pirath thalun thavirth thenai vakuth thu
At the end of this birth duration period and this body died and then entered in to yet another body and taken birth that twine acts are eliminated and in this birth itself I am created
இந்த உடம்பில் கால எல்லையில் இதன் கண் நின்று சாதலும் பின்பு வேறு ஒர் உடம்பில் பிறத்தலும் என்னும் இரண்டையும் விலக்கி இந்த ஒரு பிறப்பிலே என்னைப் படைத்து
தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின்
thannarul than thaen thalai vanai malaiyin
And in this way he has entered in this body and put his grace on me and then blessed me
அவ்வாற்றானே இதன் கண் வந்து தனது திருஅருளை எனக்கு அளித்து அருளியவனும்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
Maa thinai mathith thangoor paal konda maniyai
He gave regarded to lardess parvathi and then gave his left part of his body to lardess Yumadevi and in that ruby diamond form existing in this world
மலை மங்கையை நன்கு மதித்துத் தன் திருமேனியின் ஒரு பகுதியில் வைத்த மாணிக்கம் போல்பவனும்
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
Varu punal sadai eadai vaith thaem maanai
From the heaven place descended the Ganges is kept on his hair and blessed her
வானில் நின்று வந்த வெள்ளத்தைச் சடை இடையில் வைத்து அருளியவனும்
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
eaathilen manaththu kkor irum punda neerai
Lard Siva you are to my mind not far away and the heated iron has absorbed the water instantly in that way you are
அயலதாகிய என் நெஞ்சிற்கு அயலாகாது காய்ந்த இரும்பு கவர்ந்த நீர் போல்
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
En vakai oru vanai engal piraa nai
You are mingled in to my mind and eight type of matter form you are standing here in unique form and you are our leader
உள்ளே கலந்து நிற்பவனும் எட்டுவகைப் பொருளாய் நிற்கும் ஒருவனும் எங்கள் தலைவனை
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
Kaathil ven kulai yanai kadal kola mithan tha
And in the ear place with conch ornament is adorned form of lard Siva and who has seated at the kaiyilai hills and that ultimate destruction of whole world but this seerkali place is floated form stood there
காதில் வெள்ளிய குழையை அணிந்தவனும் ஆகிய இறைவனை அடியேன் அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே ஊழிக்காலத்தில் உலகத்தைக் கடல் கொள்ளவும் தான் கொள்ளப்படாது மிதந்து நின்ற
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
kalumala vala nagar kandu konde nea
This kalumalam temple place I have seen lard Siva in naked eyes so I do not have any type of deficiency in this world
திருக்கழுமலம் என்னும் இவ் வளனகரின் நகரிடத்தின் கண் கண்டு கொண்டேன் இதனால் இனி ஒரு குறையும் இலன் ஆகினேன்
மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்
matroru thunai yini marumaik kung kaa neean
That Siva is seen by me in this thirkalumalam temple place so in this life and upper world life I will not expect any other guide
இறைவனை திருக்கழுமலம் என்னும் வளநகரில் கண்டு கொண்டேன் ஆகவே இம்மைக்கேயன்றி மறுமைக்கும் இனி மற்றொரு துணையை நாடேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
Varuntha lur ren mara vaa varam petrean
Once I have forgotten and put in to miserable situation so now I have got the boon not to forget him and that sacred grace I have got
முன்பு அவனை மறந்து வருந்திய யான் இனி ஒரு போதும் அவனை மறவாதிருக்கும் திருஅருளைப் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
sutriya sut ramunth thunai yenru karu thean
The covered form of relatives are not considered as relatives
சூழ்ந்துள்ள சுற்றத்தாரையும் துணை என்று நினையாது
துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
thunai yenru naan thozha patta one sudarai
And lard Siva is the only guide in this world and in that way got clear idea and then always prayed by me as light glowing form existing in this world
இவனே துணை என்று தெளிந்து நாள்தோறும் என்னால் வணங்கப்படுகின்ற ஒளியை உடைய விளக்குச் சுடரை போல்பவனும்
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
Muth thiyum gnana mum vaanavar ariyaa
The mukthi and gaana is given by lard Siva and who is not known by deevass
வீடாவதுன் ஞானமாவதும் அவற்றை அடைவிப்பனவாய் அமைந்த தேவராலும் அறியப்படாத
முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
Murai murai pala pala neri kalung kaatti
In not measurable form of innumerable rules are created and followed in his life and which is instructed to me by lard Siva that prime lard he is
அளவற்ற நெறிகள் ஆனவனும் எனக்கு உணர்த்தி அருளிய கடவுளும் ஆகிய பெருமானை
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
karpanai karpith tha kada yulai adiyeean
And I have seen him in the kaiyilai hills seated form I have found him out
அவனை கயிலையில் வீற்றிருந்தவாறே அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
kalumala vala nagar kandu kondenea
And in this thiru kalumalam temple place I have seen
திருக்கழுமலம் என்னும் இந்த வள நகரில் கண்டு கொண்டேன்
திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
Thiruth thinai nagar urai senthan appan en
In the thiruthenai city place descended lard Muruga and whose father is lard Siva
திருத்தினை நகரின் கண் எழுந்தருளி இருக்கின்ற முருகக் கடவுளுக்குத் தந்தையும்
செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
seivinai aruth thidunj sem ponai ampon
My previous birth misdeeds are removed in that golden glow body color possessed lard Siva
என்னுடைய முன் வினைகளை எல்லாம் விளங்குகின்ற செம்பொன்போலும் சிறப்புடையவனும் பொன்போலும் திருமேனியை உடைய
ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்
oruth thanai alla thing kaarai yum una reean
That unique form of lard Siva who is the only god to me
ஒப்பற்றவனும் ஆகிய எங்கள் சிவபெருமானை அல்லாது வேறு யாரையும் யான்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
unarvu petreean uyyung kaaranan thannaal
Only by him alone I will be given upliftment in life and that form of intuition I have got and any how
யான் உய்யும் காரணம் கூடியமையால் இத்தகைய உணர்வைப் பெற்றேன் ஆயினும்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
Viruth thanai paalanai kana vidai viravi
In that form I have seen in the dream so near to me
விருத்தனும் பாலனும் ஆகிய அவனை யான் கனவில் என் அருகே கண்டு
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
Vilith thengu kaana maat taathu vit tirun theean
And in the awareness state I did not see him anywhere and then separated from him
நனவில் எங்கும் காண மாட்டாது பிரிந்திருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
Karuth thanai niruth thanjsei kaalanai velai
He is leader to all and always dancing form of feet possessed that form of lard Siva I have seen him in thr kayilai hill place seated form
யாவருக்கும் தலைவனும் நடனம் புரிகின்ற திருவடிகளை உடையவனும் ஆகிய அவனை அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
kalumala vala nagar kandu kondenea
The sea side place situvated thiru kalumalam that wealth filled place I have seen him so hear after I will not be separated from him
கடலை அடுத்துள்ள திருக்கழுமலம் என்னும் இந்த வள நகரில் கண்டு கொண்டேன் அதனால் இனி இப்பிரிவு இலனாயினேன்
மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை
malaik karum pum malar konrai yi naanai
Because of rain the flower buds are appeared in the konrai flower garden and which is adorned by lard Siva who is also my lard
மழையினால் அரும்புகின்ற கொன்றையினது மலரைச் சூடியவனாகிய எங்கள் பெருமானை
வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
Valaikka lut reean mara vaa manam petrean
I will always be thinking over mind I have got so he is kept by me into it and did not allow him to go away from my mind
என்றும் மறவாது நினைக்கின்ற மனத்தைப் பெற்றேன் ஆதலின் யான் அவனைப் புறம் போக ஒட்டாது என்னிடத்தே பிணித்துக் கொள்ளுதலைப் பொருந்தினேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
Pilaith oru kaal inip poi pira vaamai
Here after I will not get yet another birth in this world
இனி ஒரு போதும் இந்த நிலையில் நின்றும் தவறி உலகில் போய்ப் பிறவாத
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
perumai petrean petra thaar peru kir paar
In that form of greatness I have got and this type of boon is there anybody to get it in this world and I have seen him here
பெருமையைப் பெற்றுவிட்டேன் யான் பெற்ற இப்பேற்றினை வேறு யார் பெற வல்லார் அல்லாதாயின் இனி ஒரு கால் இந்த இடத்தில் யான் நேர்படக் காணாதேயும் இந்த உடம்பு
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
Kulaik karung kandanai kandu kol vaaneea
Any how I will see him in the upper world but my mind will always be longing form that lard who has adorned kulai ornament in his ear
நீங்கிய பின் அவனை அடையவும் வல்லேன் என்றாலும் அவனைக் காணாது என் நெஞ்சம் அமையாமையின் காதில் குழையை உடைய நீலகண்டனாகிய அவனி மீளக் காணுதல் வேண்டியே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
Paadu kin rean senru koovum valeean
I am singing him all the places and in that form he has seated in the kailai hills
பாடி நிற்கின்றேன் இந்த நிலையில் அவனை இது போழ்து அவன் கயிலையில் வீற்றிருந்தவாரே
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்
Kalaik karum pun gatha lip pala solai
The sugar cane banana and so many plantations are covered form
கழைக்கரும்பும் வாழையும் பல சோலையுடன் நிறைந்துள்ள
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
kalumala vala nagar kandu kondenea
In this fertile place named kalumalam I have seen him so I will not here after any deficiency on my part
திருக்கழுமலம் என்னும் இந்த வள நகரில் கண்டு கொண்டேன் இனி ஒரு குறையும் இலனாயினேன்
குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்
kundalang kulai thigal kaathanea enrung
I am at the sleeping time I will chant him that he has adorned that kulai and kundalam ornaments of adorned lard Siva
யான் உறக்கத்தில் குண்டலமும் குழையும் விளங்குகின்ற காதினை உடையவனே என்றும்
கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
Kodu mazhlu vaat padai kuzha kanea enrum
The wild malu battle force carried in glittering form in his hand and
கொடிய மழுவகிய ஒளியை உடைய படையை உடையவனே என்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்
vandalam pum malar konrai yan enrum
The honey bees are raising sound that konrai flower garland adorned form and then
வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரைச் சூடியவனே என்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
vaai veru vithth ozhlu theen vithi yaaleea
In that way murmured by the mouth in habitual form and in that form of verity of mind is kept away
வாய் பிதற்றி விழித்தபின் பழக்கமாய் நமக்கு உள்ள பலவாறான மனத்தை ஒழித்து ஒரு
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
Pandai nam pala mana mun galai thon raai
That single coded form of mind I have got and his abodes are enquired and then known it
நெறிப்பட்ட மனத்தை உடையேனாய் அவனது தலங்களை வினாவி அறிந்து
பசுபதி பதிவின விப்பல நாளுங்
Pasu pathi pathi vina vip pala naalung
In those abode he will be seen and in that way I have gone in to so many temple places and then prayed there
அத்தலங்களில் கிடைப்பன என்று எண்ணிப் பல நாளும் சென்று முறைபடியே வணங்கினேன்
கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங்
Kandal ang kalik karai ootham van thulayung
In that way moving time where the thaalai plantations are grown in the sea shore place where waves are wandering form
அவ்வாற்றால் வருமிடத்து தாழைகளை உடைய கழிக்கரையிடத்துக் கடல் அலைகள் வந்து உலவுகின்ற
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
Kalu mala vala nagar kandu kondeneea
In this fertile place of thir kalumalam where lard Siva seated in the kailai hills form I have seen him so here after I have no deficiency in this world
திருக்கழுமலம் என்னும் இந்த வள நகரிடத்தே அவனை கயிலையில் வீற்றிருந்தவாறே கண்டு கொண்டேன் இனி அக்குறையும் இலனாயினேன்
வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி
varoom perm Val vinai en rirun then ni
The uncountable bad deeds will come and then give me trouble in that way think over
அளவற்ற வலிய வினைகள் வந்து வருத்துமே என் செய்வது என்று எண்ணி இருந்து
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
varunthalur ren mara vaa manam petreen
And then got sorrow and in that way not got sorrow and my lard Siva appeared before me and that form of not forgettable mind I have got
வருந்தினேன் அவ்வாறு வருந்தாதபடி எம்பெருமானை மறவாத மனம் வாய்க்கப் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
virumpi en manath thidai mei kulir peithi
So with my mind I have liked him and got emotional filled way my body hairs are stood up and then requested from him not to curse me in that way
அதனால் என் மனத்தால் அவனை விரும்பி மெய் சிலிர்த்து என்னை இகழாது ஒழியுமாறு
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
vendi nin re tholu thean vithi yaalea
And in that way I have as per rule prayed before him
அவனை இரந்து நின்று முறைப்படியே வணங்கினேன்
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
arumpinai alarinai amu thinai theenai
The flower buds form and nectar and honey and sugar juice way giving taste to me
அரும்பும் பூவும் அமுதும் தேனும் கரும்பும் போல இன்பம் தருபவனும்
ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்
Ai yanai aravanen piravi veer aruk kung
Lard Siva who is leader to all and ethical form and all the time the root cause of birth is cut of in that form of existing lard Siva
யாவர்க்கும் தலைவனும் அறவடிவினனும் எனது பிறவியை வேரோடு அறுப்பவனும் ஆகிய அவனை
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
Karum pinai peruj sennel nerunkiya kazhani
And much red color paddy filled fields are possessed place is
மிக்க செந்நெல் நிறைந்த வயல்களை உடைய
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
kalumala vala nagar kandu kondenea
In that kalumalam temple place I have seen him
அவன் கயிலையில் வீற்றிருந்த வாரே திருக்கழுமலம் என்னும் இந்த வளநகரிடத்துக் கண்டு கொண்டேன்
அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
ayal avar parava yum adiyavar thozha yum
Those who are faraway places all are chanted his mantharass and nearby people pray him
சேய்மையில் உள்ளார் அவனைத் துதிக்கவும் அண்மையில் உள்ளார் அவனை வணங்கவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
anparkal saayalul adaiyal lut rirunthen
To whom showered love that appearance I have followed
அவனிடத்து அன்புடையாரது தோற்றத்தை மேற்கொண்டிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
Muyal pavar pin senru muyal valai yaanai
And that lard Siva is try to attain in forceful way and I have followed their way and tried to trap him in the web of kitten and then that web is used to trap the elephant in that way think over
அவனைத் தங்கள் வன்மையால் அடைய முயல்பவர் பின்னே சென்று முயல் அகப்படும் வலையில் யானை அகப்படும்
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
padumena molinthavar vali mulu thenni
And in that way that person’s way are followed and go behind them but in vain
என்று சொல்லிய அவர்களது சொல்லைக் கேட்டு அந்த வழியே முற்றிலும் கடைபிடித்து
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை
Puya linai thiru vinai pon nina tholiyai
Lard Siva is in the form of clouds pouring rain form and gold form and its glittering form
மேகமும் செல்வமும் போல்பவனும் பொன் ஒளியும் மிண்டு
மின்னின துருவை என்னிடைப் பொருளைக்
minnina thuru vai enni dai porulai
The lightning like body color possessed lard Siva and I have got wealth form that form of lard Siva I have tried to attain him
மின்னொளியும் போலும் திருமேனியை உடையவனும் என்னிடத்தில் கிடைத்த பொருள் போல்பவனும் ஆகிய எங்கள் பெருமானை யான் அடைய நினைத்து
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
kayalinaj seal lodu vayal vilai yaadung
The kayal fishes and sale fishers are playing in the water bodies
கயல் மீன்களும் சேல் மீன்களும் வயலின் கண் விளையாடுகின்ற
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
kalumala vala nagar kandu kondenea
That form of lard Siva I have found out in the kalumalam place so my thinking of seeing him has been attained
ஆயினும் முன்னை தவத்தால் அவனை அவன் கயிலையில் வீற்றிருந்தவாரே திருக்கழுமலம் என்னும் இந்த வள நகரில் கண்டு கொண்டேன் அதனால் எண்ணம் கைகூடப் பெற்றேன்
நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
ninaitharu paavangal naasanga laaga
To think over and then realized that concept form of sins are to be perished form
நினைத்து உணரப்படும் கருத்துப் பொருள்களாகிய பாவங்கள் அழிதல் உளவாகும்படி
நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
Ninainthu mun tholu thezha patta one sudarai
I am thinking over in mind and prayed with folded hands that sun light form appearing lard Siva
யான் மனத்தால் நினைந்தும் கையால் தொழுதும் எழப்பட்ட ஒளி பொருந்திய ஞாயிறு போல்பவனும்
மலைதரு மலைமகள் கணவனை வானோர்
Malai tharu malai magal kana vanai vaanoor
To give bride that hill king daughter lardess yumadevi whose husband lard Siva and deevass
தனக்கு மனைவியைத் தர விரும்பிய மலை மகளாகிய உமைக்குக் கணவனும் தேவர்கள்
மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
maamani maanaikka thaim marai porulai
That crown adorned ruby diamond form and veetha meaning form
தலை மணியாகிய மாணிக்கம் போல்பவனும் வேதத்தின் பொருளாய் உள்ளவனும்
புனைதரு புகழினை எங்கள தொளியை
punaitharu pugalinai engala tholiyai
That lovely glory filled form who is guiding lamp to me
அழகியவாகச் சொல்லப்படுகின்ற புகழை உடையவனும் எங்கள் விளக்குப்போல்பவனும்
இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
iruvarum oruva nen runar vari yavanai
Thirumal and bharama unable to see his feet and head that rare form of lard Siva
மாலும் அயனும் இன்னன் என்று அறிதற்கு அரியவனும் ஆகிய இறைவனை
கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங்
kanai tharu karung kadal ootham van thulayung
The sound raising sea waves are wandering in the sea shore place
ஒலிக்கின்ற கரிய கடலினது அலைகள் வந்து உலவுகின்ற
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
kalumala valanagar kandu kondenea
In that kalumalm fertile place I have found him out in the kaiyilai appearance form
கழுமல வளநகர்க் கண்டு கொண்டேன் அவன் கயிலையில் வீற்றிருந்தவாரே திருக்கழுமலம் என்னும் இந்த வளநகரிடத்துக் கண்டு கொண்டேன்
மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப
Marai yidaith thunin thavar mania vidai iruppa
The yaga fire and other rituals are considered as true one and they are in the family life
வேள்வி முதலிய கருமங்களையே மெய் என்று துணிந்தவர்கள் பற்று மாட்டாது மனை வாழ்க்கையிலே
வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத்
vanjanai sei thavar poi kaiyum maaya
They are dissuaded form showing others that fake persons and other efforts are fastly perished form and it is seen with visual eyes
முற்றுத் துறந்தவர் போல காட்டினோரது பொய்யாகிய தவர்கள் ஏனையோரது முயற்சிகளோடு ஒப்பக் கடிதில் அழிந்து போதலும் கண் கூடாய் இருந்து
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த
thuraiyura kulith thula thaa gavaith thuith tha
Those who are following that way of life is not known that they are dipped in to the slush and in the water bodies
அவற்றை மேற்கொண்டவர்கள் தாம் சேற்றில் அழுந்தி இருத்தலை அறியாது நல்ல நீர்த்துறையிலே
உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்
unmai yenun thaga vin maiyai oorean
They are considered themselves that taking bath in the good water in that way thinking in that bad way I am not followed and then disregarded it
நன்கு மூழ்கி இருப்பதாகக் கருதிப் பிறரையும் தம் வழியிலே செல்லக் காட்டிய தீ நெறியாகிய பொருந்தா நெறியை யான் பொருட்படுத்தாது வந்து
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
Pirai yudai sadai yanai engal piraa nai
Lard Siva who has adorned on the hair moon as ornament and who is my leader
பிறையை உடைய சடையை உடையவனும் எங்கள் தலைவனும்
பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
peraru laalnai kaar irul ponra
The much grace possessed form and then dark color
கருணையை மிக உடையவனும் ஆகிய கருமை நிறம் போன்ற
கறையணி மிடறுடை அடிகளை அடியேன்
Karai yani mida rudai adigalai adi yean
Throat possessed lard Siva and I am his disciple
கழுத்தை உடையவன் ஆகிய சிவபெருமானை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
kalumala vala nagar kandu kondenea
In that kalumalam temple place I have seen him As kaiyilai appearance form
அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே திருக்கழுமலம் என்னும் இந்த வள நகரில் கண்டு கொண்டேன்
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
selumalar kon raiyung koovila malarum
The rich konrai flowers and vilvam leaves and flowers
செழுமையான கொன்றையினது மலரும் வில்வ இலையாகிய மலரும்
விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்
viraviya sadai mudi adigalai ninain thit
All are clubbed form of garland adorned that form of leader is think over
கலந்துள்ள சடை முடிய உடைய தலைவனை நினைந்து
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
Dalu malar kanninai adiyavark kal laal
With love form of shedding tears that flower like eyes are possessed disciple
அன்பினால் அழுகின்ற மலர் போலும் கண்ணினை உடைய அடியார்க் கல்லது
அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்
arivari thavan riru vadi yinai irandu
To whom easily available feet
அறிதற்கரிய இணையாகிய அவன் திருவடிகளை இரண்டினையும்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
kalumala valanagar kandu kon dooran
In this kalumalam fertile place is seen in visual form
திருக்கழுமலம் என்னும் இந்த வளநகரிடத்துக் கண்டு கொண்டு
சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
sadaiyanran kaa thalan paadiya paththu
Suntherer who is son of sadaiya naar and who has sung the above ten poems
சடையனார்க்கு மகிய நம்பி ஆரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களாலும்
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்
tholu malar eduth thagai adiyavar thammai
Those disciples who are carried flowers on their hands to pray lard Siva
தொழுகின்ற மலரைத் தாங்கிய கைகளை உடைய அடியார்களை
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.
Thunpa mum idumpai yunj soola gi laavea
The sorrow and poverty won’t affect them
துன்பமும் இடும்பையும் அணுக மாட்டா
OM THIRU CHITRAMBALAM