THIRU KACHI EAGAM BARAM
61.திருக்கச்சி ஏகம்பரம்
THIRU KACHI EAGAM BARAM
OM THIRU CHITRAMBALAM
Once suntherer assured his wife names sangli nachiyar that he will not leave from the thiruvotriyoor place. After some time he surpassed his pledge so he lost his two eye sight. After wards we went with the help of pole he went so many temple places and at last he went to thiru kachi eagambaram (kanchipuram) where he requested to give him his eye sight and then accordingly lard Siva gave his left eye sight. Because of over joy of getting his eye sight he sang the following decade
திருவொற்ற்யூரை விட்டுப் புறப்பட்ட சுந்தர் மூர்த்தி சுவாமிகள் சங்கிலி நாச்சியார்க்கு அளித்த உறுதி மொழியை மீறினமையால் இரண்டு கண்களையும் இழந்து பல தலங்களுக்கும் சென்று பணிந்து காஞ்சிபுரம் வந்தார் அங்கே திருவேகம்பமுடையானை வணங்கி வேண்டிய போது அப்பெருமான் திருஅருளால் இடக்கண் பார்வை மாத்திரம் கிடைக்க உடனே இப்பதிகத்தை பாடி அருளினார்.
இத்திருப்பதிகம் தனக்கு கண் அளித்த இறைவனுடைய திரு அருளை வியந்து பாடியது
திருச்சிற்றம்பலம்
ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை
aalanthaan ugan thamuthu sei thaanai
Lard Siva who has consumed the poison and then gave nectar to deevass
நஞ்சினைத் தான் விரும்பி உண்டு அமுதத்தைத் தேவர்களுக்கு உரிய தாக்கியவனும்
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
aathiyai amrar tholu theth thum
He is prime god to all deevass and who are prayed and praised him
யாவர்க்கும் முதல்வனும் தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
silanthaan perithum mudaiyaanai
The greatness much possessed lard Siva
பெருமையை மிக உடையவனும்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
Sinthip paaravar sinthai yulaanai
Those disciples who are thinking over him in their mind always be existing in guide form
தன்னை நினைப்பவர்கள் நினைவில் விளங்குபவனும்
ஏல வார்குழ லாள்உமை நங்கை
Eaalavaar kulalaal umai nangai
The fragrance filled materials are applied on the long hair of lardess parvathi
மயில் சாந்து அணிந்த நீண்ட கூந்தலை உடையவளாகிய உமை என்னும் நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
Enrum eaththi vali pada Petra
To pray all the times under lard Siva’s feet
தான் என்னாலும் துதித்து வழிப்படுதலைப் பெற்றமைக்கு முதல்வனும்
கால காலனைக் கம்பனெம் மானைக்
Kaala kalanai kampa nem maanai
He is death god to ema who has stayed in the thiru vegambam temple place
காலகாலனும் ஆகிய திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
Kaanak Kan adiyen Petra vaarea
To see him visual eye form so that I have been given eye sight what type of astonishment it is
காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு
உற்ற வர்க்குத வும்பெரு மானை
Utravark kuthavum Peru maanai
Those who are surrendered under his feet and all the time doing goodness to them
தன்னைப் புகலிடமாக அடைந்தவருக்கு நலம் செய்கின்ற பெருமானும்
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
Uoorva thon rudaiyaan umpar konai
He has moving form of bull possessed to travel everywhere and who has leader to all the devass
ஊர்த்தி எருதாகிய ஒன்றை உடையவனும் தேவர்களுக்குத் தலைவனும்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
Patrinaark kenrum patravan rannai
Those who are garbed him he is big creeper pole to them
தன்னை விடாது பற்றினவர்க்கு பெரிய பற்றுக்கோடாய் நிற்பவனும்
பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை
Paavipaar manam paravik kondaanai
Those who are think over him that lard Siva spread over in their mind and then converted in that place as dwelling one
தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய
அற்ற மில்புக ழாள்உமை நங்கை
Atramil pugalaan umai nangai
Without perishable form of glory filled that lady named lardess Yumadevi
அழிவில்லாத புகழை உடையவளாகிய உமை என்னும் நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
Aathariththu valipada Petra
She has served under his feet and then prayed all the times
விரும்பி வழிப்படப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
Katraivaar sadaik kampanem maanai
The thick form of hair possessed lard Siva who has descended in the kanchipuram temple place who is also my lard Siva
கற்றையான நீண்ட சடையை உடைய திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
Kaanak Kan adiyen Petra vaarea
To see him so as to get my eye sight and what type of astonishment it is
காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு
திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
Thiryum muppuram thee pilampaaga
In the space place wandering three castles are fired and then converted in to ashes and at that time
வானத்தில் திரிகின்ற மூப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்த அக்காலை
செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
Senganmaal vidaimet rigal vaanai
The red eyed bull form of thirumal on it ascended and then travel every where
சிவந்த கண்களை உடைய திருமாலாகிய விடையின் மேல் விளங்கியவனும்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
Kariyin eeruri porththuganthaanai
The elephant skin is pealed and then adorned it
யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும்
காம னைக்கன லாவிழித் தானை
Kaamanai kana laavili thaa nai
And then manmatha is fired and then converted in to ashes in that way he has opened his fore head eye
மன்மதன் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும்
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
Varikol vel valaiyaal umai nangai
The stripped form of white bangles are adorned that lardess Yumadevi
வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய உமை என்னும் நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
Maruvi eathi valipada Petra
She mingled with his body and prayed him
அணுகி நின்று துதித்து வழிப்படப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
Periya kampanai engal piraanai
That elderly form of lard Siva who has descended in the thiruvegambam temple place
பெரியோனும் ஆகிய திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
Kaanak Kan adiyen petravaarea
To see him this blind person I am got left eye sight here what type of astonishment it is
காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு
குண்ட லந்திகழ் காதுடை யானைக்
Kundalan thigal kaa thudai yaanai
The ear ornament adorned kundalm in that form appearing lard Siva
குண்டலம் விளங்குகின்ற காதினை உடையவனும்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
Kutruthai ththa kodun tholi laanai
That wild death god ema is kicked and then killed by lard Siva
கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும்
வண்டலம்புமலர்க் கொன்றையி னானை
Vandalampu malar konraiyi naanai
The honey bees are raising the sound that konrai flower garland adorned lard Siva
வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும்
வாள ராமதி சேர்சடை யானைக்
Vaalaraa mathi ser sadai yaanai
The killer instinctive filled the snake and curved moon is living together that hair possessed lard Siva
கொலை தொழிலை உடைய பாம்பு பிறையைச் சேர்த்து வாழும் சடையை உடையவனும் ஆகிய
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
Kondai yan thadang Kan numai nangai
The kendai fish possessed big eyes that form of eyes are possessed lardess yumadevi
கெண்டை மீன் போலும் பெரிய கண்களை உடைய உமை என்னும் நங்கை
கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
Kelumi yeeththi valipada Petra
She has approached lard Siva and prayed all the time
அணுகி நின்று துதித்து வழிப்படப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
Kandam nanjudai kampanem maanai
In the throat place poison stagnated form of lard Siva who is also my god
கண்டத்தில் நஞ்சினை உடைய திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வறே.
Kaanak Kan adiyen petravaarea
To see him in that way I have got my eye sight what type of astonishment it is
காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு
வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
Vellum venmalu onrudai yaanai
To win over all that battle force that malu possessed lard Siva
யாரையும் வெல்லும் தன்மை உடைய வெள்ளிய மழு ஒன்றை உடையவனும்
வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
Velai nanjunda viththagan rannai
In the sea place emanated poison which is consumed that mighty powerful lard Siva and then who has removed his disciples
கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடு உடையவனும் அடியார்களுக்குத்
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
Allal theerththarul seiyaval laanai
That sorrows are removed and then blessed them
துன்பங்களை போக்கி அருள் செய்ய வல்லவனும்
அரும றையவை அங்கம்வல் லானை
Aruma rai yavai angam vallaanai
The rare veethaas and its components of six angass are singing form of lard Siva
அரிய வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய
எல்லை யில்புக ழாள்உமை நங்கை
Eallaiyil pugalaal umai nangai
The unlimited glory filled lardess Yumadevi
அளவற்ற புகழை உடையவளாகிய உமை என்னும் நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
Enrum eaththi valipada Petra
She is all the time praised and prayed under lard Siva’s feet
எந்த நாளும் துதித்து வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானை
Nalla kampanai engal piraanai
Lard Siva who has descended in the thir eagambam temple place and to him
திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
Kaanak Kan adiyen petravaarea
I have got eye sight and what type of astonishment it is
அடியேன் கண் பெற்றவாறு வியப்பு
திங்கள் தங்கிய சடையுடை யானைத்
Thingal thangiya sadaiyudai yaanai
The curved moon adorned on the hair of lard Siva
பிறை தங்கிய உள்ள சடையை உடையவனும
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
Theva thevanai selun gadal valarum
He is devas god and in the spread over sea place grow
தேவர்க்குத் தேவனும் வளவிய கடலில் வளர்கின்ற
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
Sanga venkulai kaathudai yaanai
The conches and from it made white kulai ornament adorned on the ear place
சங்கினால் இயன்ற வெள்ளிய குழையை அணிந்த காதினை உடையவனும்
சாம வேதம் பெரிதுகப் பானை
Saama vetham perithugap paanai
He is all the times liked the saama veetha chanting form
சாம வேததை மிக விரும்புபவனும் ஆகிய
மங்கை நங்கை மலைமகள் கண்டு
Mangai nangai malaimagal kandu
Our lady lards yumadeevi all the time seated in penance and then approached lard Siva
எங்கள் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தால் கண்டு அணுகி
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
maruvi eaththi valipada petra
And then mingled with his half part of his body and then prayed all the time under his feet
துதித்து வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
kangai yaalanai kampanem maanai
And he has adorned the Ganges on the head place and in the kanchipuram temple place seated lard Siva
கங்கையை அணிந்த திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
kaanak kanadiyen petravaarea
To see him I have got left eye sight what type of astonishment it is
காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு
விண்ண வர்தொழு தேத்தநின் றானை
vinnavar tholu theththa nin raanai
All the time deevass are prayed before him
தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும்
வேதந் தான்விரித் தோதவல் லானை
Vethan thaan virith tho thaval laanai
He has elaborate form explain the veetha meaning to all
வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும்
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
nanninark kenrum nalla van rannai
Those who are surrender under his feet as slave and all the time he is doing well to them
தன்னை அடைந்தவர்கட்கு எந்த நாளும் நலத்தையே செய்பனும்
நாளும் நாம்உகக் கின்றபி ரானை
naalum naam ugak kinra piraanai
Daily we are liking lard Siva that leader he is
நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
ennil thol pugalaan umai nangai
The uncountable glory filled lardess yumathevi
எண்ணில்லாத பழமையான புகழை உடையவளாகிய உமை என்னும் நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
enrum eaththi valipada petra
All the time prayed under lard Siva’s feet
எந்த நாளும் துதித்து வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
kannum moon rudai kampa nem maanai
Three eyes are possessed lard Siva who has descended in the thiru eagambam temple place
கண்களும் மூன்று உடைய திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
kaanak kan adiyen petravaarea
I have got astonishment to see him with my eye sight
காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு
சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
sinthi then rum ninain thelu vaargal
Daily think over him and at the time of get up from the bed think over him and those people
நாள்தோறும் தன்னையே சிந்தித்து துயில் எழும் காலத்துத் தன்னையே நினைந்து எழுவார்களது
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
sinthaiyil thigalunj sivan rannai
In the mind place existing auspicious matter form existing in their mind
உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருள் ஆனவனும்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
Panthi thavinai patrarup paanai
The souls are tied with bad deeds are eliminated form
உயிர்களைப் பிணிந்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும்
பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
paalo daananjsum aattu kanthaanai
The five type of cow product are taken as bathing materials willingly
பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய
அந்த மில்புக ழாள்உமை நங்கை
anthamil pugalaal umai nangai
Not ending form of glory filled lardess yumadevi who is liked and then
முடிவில்லாத புகழை உடையவளாகிய உமை என்னும் நங்கை விரும்பி
ஆத ரித்து வழிபடப் பெற்ற
aathariththu valipada petra
Prayed lard Siva’s feet
வழிப்படப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
kantha vaar sadaik kampa nem maanai
The konrai and other flowers fragrance filled hair possessed lard Siva who has descended in the kanchipuram temple place
கொன்றை முதலிய பூக்களின் மனத்தை உடைய நீண்ட சடையை உடைய திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
kaanak kan adiyen petravaarea
So as to see him I have got my eye sight and what type of astonishment it is
காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு
வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
varangal petrulal vaal arakkar tham
Because of penance effect got boons from lard Siva so that three assurass are got the power to wander in the space place that wild asurass
தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால் வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது
வாலி யபுரம் மூன்றெரித் தானை
Vaaliya puram moon reriththaanai
That mighty three castles are fired and then converted in to ashes
வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும்
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
Nirampi yathakkan ranperu velvi All the devas are taken in the thaken yaga fire
தேவர்கள் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெரு வேள்வியை
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
Niran tharanj seitha nitkan daganai
That yaga fired is destroyed that capacity filled lard Siva
அழித்தவன் கண்மை உடையவனும் ஆகிய
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
parantha thol pugalaal umai nangai
That good old glory filled lardess Parvathi lady
பரவிய பழைய புகழை உடையவளாகிய உமை என்னும் நங்கை
பரவி யேத்தி வழிபடப் பெற்ற
paravi yeththi valipada petra
Before him and other times prayed and conducted poojaas
முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
karangal eattudai kampan emmaanai
The eight hands are possessed lardess yumadevi’s husband who has descended in the chithambaram temple place
எட்டு கைகளை உடைய திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
kaanak kan adiyen petra vaare
To see him I have got eye sight and what type of astonishment it is
காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு
எள்க லின்றி இமையவர் கோனை
Elga linri imaiyavar konai
The deevass leader lard Siva
தேவர் பெருமானாகிய சிவபெருமானை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
easanai valipaadu seivaal pol
Lard Siva’s half part of body is taken by lardess parvathi who has prayed lard Siva as other devotees like stand before him and prayed lard Siva
அவனது ஒரு கூறாகிய உமா தேவி தானே தான் வழிபட வேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி ஏனைய வழிபாடு செய்வாருள் ஒருத்தி போலவே நின்று
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
ullaththulki uganthumai nangai
Before in the mind place think over and prayed that form of prayer is completed
முன்னர் உள்ளத்துள்ளே நினைத்து செய்யும் வழிபாட்டினை முடித்து
வழிபடச் சென்று நின்றவா கண்டு
valipada senru ninravaa kandu
And then external form of deity prayer is going to be conducted in that form of
பின்பு புறத்தே வழிபடச் சென்று அந்த வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டுதான்
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
vellang kaatti veruttida anji
And if the Kambai River bed the big flood is created and then try to create fear in her mind
அவ்விடத்தில் கம்பையாற்றின் கண் பெரு வெள்ளத்தைத் தோற்றுவித்து வெருட்ட
வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
veruvi oodi thaluva velippatta
That small creeper vangi plant form of parvathi got fear and ran fast to save lard Siva from the flood water so that embraced lard Siva with her bosom and then lard Siva appeared before him
வஞ்சிக் கொடி போல்பவனாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக் கொண்டு அதன் பின் அவள் முன் வெளிப்பட்டு நின்ற
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
kalla kampanai engal piranai
That culprit form of lard Siva who has descended in the thiru eagambam temple place
கல்லனாகிய திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
kaanak kanadiyen petra vaarea
I have got eye sight to pray him
காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியப்பு
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
petram earuganthera val laanai
The bull is willingly used as his travelling medium
ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
peirya emperumaan enrep poothum
Lard Siva knows all the true gaana books and that way he is considered to superior to all and then all the time
மெய் நூல்களைக் கற்றவர்கள் இவன் எம் பெரிய பெருமான் என்று எப்போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
katravar paravappadu vaanai
Those who are well learnt form of vetthass and all are prayed under his feet
கற்றவரால் மறவாது துதிக்கப் படுபவனும்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
kaanak kan adi yen petra thenru
I have got eye sight and then got astonishment
காணுதற்கு அடியேன் கண் பெற்றவாறு வியந்து
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
kotravan kampan kooththan emmaanai
He is leader to all and all the time dancing form in that way descended lard Siva in kanchipuram temple place
யாவருக்கும் தலைவனும் கூத்தாடுதலை உடையவனும் ஆகிய திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானை
குளிர்பொ ழில்திரு நாவலா ரூரன்
kulir polil thirunaavalaarooran
The cool plantations are covered place descended nambi aarroren
குளிர்ந்த சோலைகளை உடைய திருநாவலூரானாகிய நம்பி ஆரூரன்
நற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார்
natramil ivaie ranthum vallaar
In that way sang the good Tamil poems which are ten in number those who are sung it
என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.
naneri ulageithuvar thaamea
They will ultimately attain the heavenly life certainly
நன்னெறியால் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்
திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAMBALAM