OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VOTRIYOOR

ganesheit May 8, 2019

54.திருவொற்றியூர்

THIRU VOTRIYOOR

At first Suntharer swerved before sangili nachiyar that he will not separate her but after some time he has gone away from the thiru votriyoor so he lost his eye sight and at that time he sang the following songs. To remove this sorrow I will sing in this way he sang the following songs

சங்கிலி நாச்சியாரைப் பிரிவதில்லை என்று சபதம் செய்த பிறகு திருவொற்றியூரைப் பிரிந்து செல்லுகையில் தம் பார்வையை இழந்த சுந்தர மூர்த்திச் சுவாமிகள் இப்பதிகத்தைப் பாடினார்.

 எம் பெருமான் இத்துயர் நீங்கப் பாடுவேன் என்று நினைந்து பாடி அருளியது இத்திருப்பதிகம்

அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்

alukku mei kondun thiruvadi adain thean

I am your disciple and without any interruption I am unable to approach your sacred feet, and try to attain with this dirty body, and in this low grade state

அடியேன் உன் திருவடியை இடையீடு இன்றி அடைய மாட்டாது மாசுடைய உடம்பு கொண்டே அடைவேன் ஆயினேன் இந்த இழிநிலை

 அதுவும் நான்படப் பாலதொன் றானாற்

athuvum naan padap paala thon raanaar

This low graded state is attained by me

அந்த இழி நிலைதானும் நான் அடையதக்கது ஒன்றாகி விடுமாயின


பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்

pilukkai vaariyum paal kolvar adikeal

And those who are liked the cow milk that person at first remove the cow dung and then clean the cow and afterwards get milk from the cow. In that manner you should not see my sins and then do not curse me ant those good qualities you are liking from the living beings that qualities are possessed by me so you must once again accept me as your disciple and then put your grace on me

ஏனெனில் பசு முதலியவற்றினிடத்து பாலை விரும்புவோர் அவை இடுகின்ற சாணத்தை எடுத்தல் தொழிலை செய்தாயினும் அதனை கொள்வர் அதுபோல நீ என் குற்றங்களை நோக்கி இகழாது உயிர்கள் இடத்து நீ விரும்புவதாகிய குணம் என்னிடத்தில் இருத்தலை நோக்கி என்னை ஏற்று அருளுதல் வேண்டும் அக்குணமானது


 பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்

Pillai pan aaki lunth thiru vadip pilaiyean

And if will do what type of error on my part emanated but I will not do error under your feet

யான் எப்பிழை செய்வேனாயினும் உன் திருவடிக்குப் பிழையைச் செய்யேன்


வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்

valukki viillinuth thirup peyara alaal

If I have fallen down because slippage even at that time I will chanting your name only

வழுக்கி விழும் பொழுதும் உன் திருப்பெயரைச் சொல்லுதல் 

மற்று நான்அறி யேன்மறு மாற்றம்

matru naan ariyen maru maatram

I do not know any other thing in this world

வேறு ஒன்றும் அறியேன்


ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்

olukka en kaanuk koru marun thuraiyaai

The power lost eye please tell me the medicine at least suggest to me by wards and this is the only request from my part

ஒளியிழந்த என் கண்ணுக்கு ஊற்றத்தக்கதொரு மருந்தையேனும் என் வேண்டுகோளுக்கு விடையாய் நீ சொல்லி அருள்


 ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

ondri y yoorenum oorur yuraivanea

My dear leader you have been dwelling in the vottriyoor temple place (the pledged place and not own place)

தலைவரே ஒற்றியூர் என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளி இருப்பவனே

கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய்

Kat teanen piran thean unak kalaai

To give sorrow that bad deed possessed person I am so that I have taken birth in this world and afterwards I have surrendered under your feet as slave

துன்பத்தைத் தரும் வினையை உடையேன் ஆகிய நான் அந்த வினை காரணமாக இந்த மண் உலகில் பிறந்தேன் பிறந்து உனக்கு ஆளாகி


 காதற் சங்கிலி காரண மாக

kaathar sankili kaarana maaka

In between I have liked ladies and then married them willingly

இடையே மாதரை விரும்பி மணந்தேனாயினும்


எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி

etitnaar thigalum thiru moorthi

The number eight form existing you are in best appearance form

எட்டு என்னும் எண்ணின் வகையினால் விளங்குகின்ற சிறந்த வடிவத்தை உடையவனே


 என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்

enseivaan adiyean eduth thuraikeanea

In what I have to do now explaining me

என்ன செய்தல் பொருட்டு அவற்றை இப்பொழுது எடுத்துரைப்பேன்


பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்

Petta naaki lunth thiruvadi pilaiyean

I am not forgotten your sacred feet, and other acts are failed to do

உன் திருவடியை மறந்திலேன் பிறவற்றைச் செய்ய தவறினேன்

 பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை

Pillaippan aakilunth thiruvadik kadimai

But to serve under your feet and I am always without any interruption did my service

ஆயினும் திருவடிக்குச் செய்யும் அடிமையில் இடையறாது நின்றேன்


ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்

Otti nean ennai nee seiva thellaam

All the sorrows are given to me by you are, I have loved sangili and all are done by you only

இத்துன்பமெல்லாம் என் காதலுக்கு இடமாய் நின்ற சங்கிலி காரணமாக நீ செய்வனவே ஆகும்


 ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

ondri yoor enum oor uraivanea

In the votriyoor place you have descended

ஒற்றி ஊர் என்று ஊர் பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளி இருப்பவனே

கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே

kangai thangiya sadaiyudaik karumbea

The Ganges are stayed in your hair and you are sugar cane cake form to your disciples

கங்கை தங்கி உள்ள சடையை உடையவனே அடியார்க்குக் கரும்பும்


 கட்டி யேபலர்க் குங்களை கண்ணே

kaatiyea palar kungkalai kannea

And all your disciples you are creeper pole form you have been guarding them

கட்டியும் அனைவருக்கும் பற்றுக் கோடாய் உள்ளவனே


அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே

angai nelliyin pala thidai amuthea

In the fore hand available amla fruit like taste and nectar form you have been giving happiness to me

அங்கையில் கிடைத்த நெல்லி கனியில் உள்ள அமுதம் போல இனிமையைத் தருபவனே


 அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்

aththa ennidar aark keduth thurai keean

My dear father if you do sorrow to me and then where I will go and complain it

தந்தையே நீயே எனக்கு துன்பம் செய்வாய் ஆயின் அதனை நான் யாரிடம் நீக்குமாறு எடுத்துச் சொல்வேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல


சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல

sangum ippiyunj salaj salam murala

That so many varieties of conch ornaments are raising sound

சங்கும் சிப்பிகளும் சலஞ்சலம் என்னும் சங்குகளும் ஒலிக்க


 வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி

vayiram muthodu pon mani varandri

And carried away the ruby diamond pearls gold

வயிரம் முத்து மணிகள் பொன் என்பனவற்றை வாரிக்கொண்டு


ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்

Ongu maa kadal otham vanth ulayum

In the big sea place high raised waves are wandering form of

பெரிய கடலின் கண் உயர எழுகின்ற அலைகள் வந்து உலாவுகின்ற


ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

Ontriyur enum oorurai vanea

In that ottri yoor named place you have descended and dwelling here for ever

ஒற்றி ஊர் என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளி இருப்பவனே

ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா
eendru kondathor sutram monranraa

From the mother side relationship if we have got a thing or

தாய் பெற்றதால் கொள்ளப்பட்டதொரு சுற்றம் என்பது ஒரு பொருள் அல்லது


 லியாவ ராகிலென் அன்புடை யார்கள்

Liya varaaki len anbudai yaarkal

Showered love towards me and whoever might be

அன்புடையவர்கள் யாராய் இருப்பினும் என


தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்

thotra ninrarul sei thali th thittar

And in that relationship

என்கின்ற இம்முறைமை பற்றி


 சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்

sollu varai allathana sollaai

Those who are showered love towards you and your natural form is known by them

நீ உன்னிடத்து அன்பு செய்பவரை உனது இயற்கை வடிவம் அவர்கட்குப் புலனாகும்மாறு


மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்

Moon dru kaan udaiyaai adiyen kan

And then you have taken them as your slave and afterwards those disciples who are chanting your name you will not curse with heard wards and you have three eyes but disciples are possessed two eyes only

வெளிநின்று ஆட்கொண்டால் அதன் பின் உன் பெயரையே சொல்லி கொண்டு இருப்பவரை நீ ஒருபொழுதும் கடும் சொல் சொல்வது இல்லை அவ்வாறு ஆக மூன்று கண்களை உடையவன் ஆகிய நீ உன் அடியேனது இரண்டு கண்களைப்


 கொள்வ தேகணக் குவழக் காகில்

kolvathe kanal kuvalak kaakil

Are plucked by you my two eyes as per the veetha rules form

பறித்துக் கொள்வது யான் செய்த குற்றம் காரணமாக நீதி நூலில் உள்ள முறைமையேயாகி


ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்

oondru koal enak kava thon arullaai

So as to stand in this world at least give me a walking stick and then bless me

எனக்கு உதவியாய் நிற்பதோர் ஊன்று கோலையேனும் அளித்தருள்


 ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

Ondri yoor enum oorurai vaanea

Lard Siva you have descended in the thiruvotriyoor temple place

திருவொற்றியூரில் இடம் கொண்டுள்ள பெருமானே

வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்

Valith thalai padu vaan muyal kindrean

I am trying to follow the good path

யான் நன்னெறியைத் தலைப்படவே முயல்கின்றேன்
 உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்

unnaip pol ennaip paavikka maatean

I do not think at any part of time I am glory filled person

ஒருபொழுதும் என்னை உன்னைப் போல் ஒன்றாலும் தாக்குண்ணாத பெருமையேனாக நினைப்பது இல்லை


சுழித்த லைப்பட்ட நீரது போலச்

Sulith thalaip patta neer athu pola

In the running water if put a pole the water will encircled form go and in that way you have taken away my eye sight so that I do not know the way to go moreover my mind also encircling here

குச்சி இடத்துப்பட்ட நீர் போலச் சூழலா நின்றேன் நீ என் கண்ணைப் பறித்துக் கொண்டதால் வழி தெரியாது என் உள்ளமும் ஒன்றும் அறியாது சுழல்கின்றது


 சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளம்

Sulal kindren sulal kindra then yullam 

My mind also encircling here without knowing anything in this world and moreover

என் உள்ளமும் ஒன்றும் அறியாது சுழல்கின்றது இவற்றையும்


கழித்த லைப்பட்ட நாயது போல

Kalith thalaip patta nay athu pola

In the pole tied dog like on person clinging the pole without gone away

கழியிற் பொருந்திய நாயைப் போல ஒருவன் தரும் கோலை விடாது பற்றி நின்று


 ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை

oruvan kol patrik kara kara ilukai

One person garbed the pole and fastly pulling me

அவனால் கறகற என்று இழுக்கப்படுதலையும்


ஒழித்து நீயரு ளாயின செய்யாய்

oliththu nii yaarulaa yina sei yaai

To get rid from it you must showered your grace on me

ஒழித்து நீ திரு அருளை எனக்கு அளித்தருள்


 ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

ondri yur eannum oorurai vaanea

In the votriyoor place lard Siva you are dwelling

ஒற்றியூர் என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளி இருப்பவனே

மானை நோக்கியர் கண்வலைப் பட்டு

maanai nokkiyar kan valaip pattu

Then ladies eye sight is just like stage one and in that web I have trapped

யான் மான் போலும் பார்வையினை உடைய மாதரது கண்ணோக்காகிய வலையில் அகப்பட்டு


 வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்

Varunthi yaan utra val vinaik kanchith

And I have done big sin for that I have got afraid of

செய்துவிட்ட பெரிய குற்றத்திற்கு அஞ்சியே


தேனை ஆடிய கொன்றையி னாய்உன்

thennai aadiya kondrai yinaai yun

Lard Siva you have adorned the honey filled konrai flower garden you have adorned it

தேன் நிறைந்த கொன்றை மாலையா அணிந்தவனே


 சீல முங்குண முஞ்சிந்தி யாதே

Seelamun guna mun sinthi yathea

And your activities and mannerism is not thinking over

உனது செயல் முறையையும் குணத்தையும் நினையாமலே


நானும் இத்தனை வேண்டுவ தடியேன்

naanum ith thanai venduva thadi yen

I am also other sin filled person like I am meekly begging under your feet but I am always your disciple

நானும் பிறர் போல உன்னை இத்துணை இரந்து வேண்டுவதாயிற்று அதனால் என்றும் உன் அடியேன்


 உயிரொ டும்நர கத்தழுந் தாமை

Uyir odum narakath thalunthaamai

So I am with alive form not dipped in to the hell

ஆகிய நான் உயிரோடே நரகத்தில் மூழ்காதபடி


ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்

oonam ullana thirth tharul seiy yaai

You may remove my deformity and then bless me

எனக்கு உண்டாகிய குறையின நீக்கி அருள் செய்யாய்


 ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

ontri yur enum oorurai vanea

Lard Siva you are dwelling in the vottri yoor temple place

ஒற்றி ஊர் என்று ஊர் பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளி இருப்பவனே

மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன்

matruth devarai ninaith thunai maravean

I do not think over any other sub guard and then I will not forget you

பிற ஒரு தேவரை நினைந்து உன்னை மறந்தேன் இல்லை


 எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்

enchinaarodu vaalavum maattean

In that mentality filled persons I will not club and live with them

அத்தன்மையாகி நெஞ்சை உடையவருடன் சேர்ந்து இருக்கவும் மாட்டேன்


பெற்றி ருந்து பெறாதொழி கின்ற

petrirunthu peraa tholi kindra

I am fully got hold on by you but I have deviated from your path

நீ என்னை முற்றும் வெருளுமாறு உன்னை இனிதே பெற்றிருந்தும் பெறாது ஒழிகின்ற


 பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன்

pethaiyen pillaith thitta thai ariyean

I am poor person so I do not know the error which I have committed

பேதையேனாகிய யான் செய்த பிழைதான் இன்னதென்று அறிகின்றிலேன்


முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்

mutrum nee ennai munni thida adiyean

You have got angry towards me and I am your disciple

நீ என்னை முற்றும் கோபப்படுமாறு அடியேன் நான்


 கடவ தென்னுனை நான்மற வேனேல்

Adavathen nunai naan mara veneal

I will not forget you even in a wink time and that way I am your disciple

உன்னை இமைப் பொழுதும் மறவேன் ஆயினேன் இதன்மேல் உன் அடியேன் ஆகிய நான்


உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்

utra noyiru pini thavirth tharullai

There is no duty remains to do in this world so my sorrow and decease are to be removed and then bless me

செய்யக் கடவதாய் எஞ்சி நிற்பதோடு கடமையது ஒன்றுமில்லை ஆதலின் யான் உற்ற துன்பத்தை மிக்க பிணியையும் நீக்கி அருள்


 ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

ontri yur enum oorurai vanea

Lard Siva you have dwelling in the thiruvotriyoor temple place

திருவொற்றியூரில் கோயில் கொண்டு இருக்கின்ற சிவபெருமானே

கூடினாய் மலை மங்கையை நினையாய்

Koodi naai malai mangaiyai ninai thaai

Lard Siva at first you have carried parvthi in your left half part of body

நீ முதலில் மலைமகளை ஒரு பாகமாகப் பொருந்தினாய்


 கங்கை ஆயிர முகம்உடை யாளைச்

kangai aayira mugam udaiyaalai

And then afterwards the thousand faces are possessed Ganges you have adorned on your hair

பின்பு ஆயிரம் முகமுடைய கங்கையாளை முடியில் சூடினாய்


சூடி னாயென்று சொல்லிய புக்கால்

Soodi nay enru solliya pukkaal

You have two wives that matter you did not think over it and now I started to say it

அதனை நினைகின்றிலையே என்று சொல்லப் புகுந்தால்


 தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே

tholumbu panenkuj sollalau mamea

I am your slave so have no right to talk before you

அஃது அடிமையாகிய எனக்குக் கூடுமோ


வாடி நீயிருந் தென்செய்தி மனனே

vaadi nee yirun then seithi manea

And then my dear mind if you got sorrow and from it what you will get from it and in this way I am talking with my mind

மனமே நீ துன்பமுற்று என்ன பெறப் போகின்றாய் என்று மனத்தோடே சொல்லிக் கொண்டு


 வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி

varunthi yaan utra val vinnaik kanji

So that sin what I have done and to this frightened form

யான் அடைந்த குற்றத்திற்கு அஞ்சி


ஊடி னாலினி ஆவதொன் றுண்டே

Oodi naalini aavathon rundea

If I have got angry on you and from it I will not get any benefit from you

உன்னிடத்திலே பிணஞ்கினால் இனி வருவது ஒன்று உண்டோ


 ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

obdri yur enum oorurai vanea

My dear lard Siva you have been dwelling in the votriyoor temple place

ஒற்றி ஊர் என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளி இருப்பவனே

மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்

makathir pukka thor sani enak kaanaai

Lard Siva you have magam star and Saturn planet form to do bad to me

நீ எனக்கு மகம் என்னும் நாள் மீன் கீழ் வந்து சனி என்னும் கோள் போல்பவனாயினை


 மைந்த னேமணி யேமண வாளா

mainthanea maniyea manavalaa

Lard Siva you are the only strength to me and you are ruby diamond to me and handsome form you are appearing

எனக்கு வலிமையாய் உள்ளவனே மணி போல்பவனே அழகுடையவனே


அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்

akaththir pendukal naan ondru sonnaal

In the house place dwelling wife if I command to do any work

வீட்டில் உள்ள பெண்டுகள் நான் ஆவது ஒரு காரியம் சொன்னால்


 அழையேற் போகுரு டாஎனத் தரியேன்

alaiyer po kurudaa enath thariyen

She will reply that you are blind and then what you know in that way she will say so those wards are not tolerated by me

கண்ணிலியே நீ என் அறிவாய் கூவாதே போ என்று சொல்வதை நான் பொறுக்க மாட்டேன்


முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்

mukaththir kann ila thenganam vaal kean

Without eye how will I live in this world?

முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்


 முக்க ணாமுறை யோமறை யோதீ

mukkamuraiyo maraiyo thee

Lard Siva you have three eyes is it right act from your part and you are always chanting veethass from your mouth

மூன்று கண்களை உடையவனே இது முறையோ வேதத்தை ஒதுபவனே


உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்

Ukai kunth thann kadal otham vanthuayum

The ruby diamond and other sea materials are placed on the sea shore by sea waves that is in cool form in

மணி முதலியவற்றைக் கரையிடத்துக் கொணர்ந்து சேர்க்கும் குளிர்ந்த கடல் அலைகள் வந்து உலவுகின்ற


 ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

ondri yurenum oor urai vaanea

Lard Siva you are dwelling in the thiru votriyoor temple place

ஒற்றி ஊர் என்று ஊர் பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளி இருப்பவனே

ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்

otham vanth ulayung karai than meal

In the sea wanes are wandering on the sea shore place existing

கடல் அலைகள் வந்து உலவுகின்ற கரையின் மேல் உள்ள


 ஒற்றி யூருறை செல்வனை நாளும்

Ondri yoor urai selvanai naalum

In that thiru votriyoor place descended lard Siva daily

ஒற்றியூரில் எழுந்தருளி இருக்கின்ற செல்வனை என்றும்


ஞாலந் தான்பர வப்படு கின்ற

gnalanth thaanpara vap padu kindra

And in this world people are worshiped form

உலகத்தவரால் போற்றப்படுகின்ற

 நான்ம றையங்கம் ஓதிய நாவன்

Naan marai yangkam oothiya naavan

The four vetches and its sub parts of six angass are all the time chanted form that tongue possessed lard Siva

நான்கு வேதம் வேதத்தின் ஆறு அங்கங்கள் இவற்றை ஓதிய நாவை உடையவனும்


சீலந் தான்பெரி தும்மிக வல்ல

silanth thaan peri thum miga valla

In the character excelled person and young chap form

ஒழுக்கத்தில் மிக்க வல்ல சீலத்தை உடையவனும் இளமை உடையவனும்


 சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த

siruvan van rodan ooran uraith tha

The hard disciple named nambi aarroran who has sung

வன் தொண்டனும் ஆகிய நம்பி ஆரூரன் பாடிய


பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப்

paadal path thivai vallavar thaam pooi

And those disciples who are excelled in singing it

இப்பத்துப் பாடல்களாகிய இவைகளை வல்லவர்கள்


 பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.

parakathi thinnam nanuvar thaa mea

They will attain the heavenly abode it is certain one

மேலான கதியைப் போய் அடைவார்கள் இது திண்ணம்

OM THIRUCHITRAMBALAM

May 8, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: