THIRU KADAYOOR MAYAANAM
53.திருக்கடவூர் மயானம்
THIRU KADAYOOR MAYAANAM
OM THIRU CHITRAMBALM
The saint named sumthara moorthy nayanaar who has prayed in the thiru temple place and then went to thiru kadavoor mayanam temple place and prayed there and then sang the following songs
In this decade lard Siva’s glory is propagated
சுந்தர மூர்த்தி நாயனார் திருநள்ளாற்று இறைவரைத் தொழுது திருக்கடவூர் சென்று பணிந்து திருக்கடவூர் மயானம் வணங்கி பாடி அருளியது இத்திருப்பதிகம். இப்பதிகம் இறைவன் தன்மைகளைச் சிறப்பித்து அருளிச் செய்தது.
மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல
maruvaar konrai mathi soodi maanik kaththin malai pola
Lard Siva you have adorned the fragrance filled the konrai flower garland on your sacred hair and then the silver hills above one ruby diamond hill is moving form
நறுமணம் நிறைந்த கொன்றை மலர் மாலையையும் பிறையையும் திருமுடியில் சூடிக்கொண்டு வெள்ளி மலையின் மேல் ஒரு மாணிக்க மலை வருவது போல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்
varuvaar vidaimeal maathodu makilnthu poothap padai soozha
Lard Siva with lardess yumadevi assended on the back of bull and then the demon forces are covered form of
உமா தேவியோடு பூதப்படைகள் களிப்புற்றுச் சூழ விடையின் மேல் வருவார்
திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும்
thirumaal piraman enthirarku thevar naagar thaanavark kum
Where you are to thirumal inthiran and other big deevaass and then the snake lower land leaders and then assuraass to whom you are leader
திருமாலும் பிரம்மன் இந்திரன் என்ற பெருந் தேவர்கட்கும் மற்ற தேவர் நாகலோகத்தில் அசுரர் என்பவர்கட்கும் அவரே தலைவர்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
Peru maan kada voor mayanath thu periya perumaan adigalea
திருக்கடவூர் மாயனத்தில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார் ஆவார்
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர்
vinnor thalaivar venpuri nool maarpar vetha keethath thar
தேவர்களுக்குத் தலைவரும் வெள்ளிய முப்புரி நூலை அணிந்த மார்பினை உடைய வரும்
கண்ணார் நுதலர் நகுதலையர் கால காலர் கடவூரர்
kannaar noothalar naku thalaiyar kaala kaalar kada voorar
Lard Siva you have fore head eye possessed and then the laughing firm of skull carried on your hand and you are death god to ema and then you have liked thiru kadayoor as your residential place
கண் பொருந்திய நெற்றியை உடையவரும் சிரிப்பது போலத் தோன்றும் தலை ஓட்டினை ஏந்தியவனாக காலனுக்குக் காலனும் திருக்கடவூரை தனது ஊராகக் கொண்டவரும்
எண்ணார் புரமூன் றெரிசெய்த இறைவ ருமையோ ரொருபாகம்
eannaar pura moon eari seitha iraiva rumai yoor oru paagam
Those asuraas who are not give regard to lard Siva those persons three castles are destroyed by fire and be given left part of his body to lardess Yuma Devi
தம்மை மதியாதவர்கள் ஊர்கள் மூன்றை எரித்த இறைவரும் உமையம்மை ஒரு பாகமும்
பெண்ணா ணாவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
Pen naa naa var mayaa naththu periya perumaa nadi galea
Lard Siva who has appeared half part lady and other half part as male form and in that way appeared in thiru kadayoor mayaanam temple place that big prime lard is lard Siva
தாம் ஒரு பாகமுமாய் பெண்ணும் ஆணுமாய் நிற்கும் உருவத்தை உடையவரும் ஆவர் திருக்கடவூர் மாயனத்தில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார் ஆவார்
காயும் புலியின் அதளுடையர் கண்டர் எண்டோட் கடவூரர்
kaayum puliy in athal udaiyar kandar endol kadavoor
the angry filled the tiger skin is adorned as dress and possessed dark color throat and eight shoulders that form of lard Siva seated in the thiru kadavoor veeratam temple place
சினம் கொள்கின்ற புலியின் தோலாகிய உடையை உடையவர் நீல கண்டத்தை உடையவர் எட்டுத் தோள்களை உடையவர் திருக்கடவூரைத் தம் ஊராக கொண்டவர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமே யாய தலைவனார்
thaayun thanthai palluyirkku thaamea yaaya thalai vanaar
To all the living beings lard Siva alone father mother and leader form
எல்லா உயிர்களுக்கும் தாமே தாயும் தந்தையும் தலைவருமாவார்
பாயும் விடையொன் றதுவேறிப் பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
paayum vidai yon rathu eaaeri pali thern thunnum para meatti
To leap forward that single bull on it ascended form going for begging food and wandering all the places and then accepted the begging food and then consumed it but he is possessing the highly regarded place in this world
பாய்ந்து சொல்லுகின்ற ஒற்றை எருதின் மேல் ஏறிப் பிச்சை கிடைக்கும் இடங்களை நாடிச் சென்று ஏற்று உண்பவர் ஆயினும் யாருக்கும் மேலான இடத்தில் இருப்பவர்
பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
peigal vaazh lum mayaa naththu periya perumaa nadigalea
பேய்கள் வாழ்கின்ற திருக்கடவூர் மாயனத்தில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார்
நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த
naraisear malarai kanai yaanai nayanath thee yaar podi seitha
The honey filled the five types of flower arrow possessed that lust creating god manmatha who is fired and then converted in to ashes by lard Siva with his fore head eye fire
தேன் பொருந்திய ஐந்து வகை மலர்களாகிய அம்புகளை உடைய மன்மதனை கண்ணில் உண்டாகிய நெருப்பால் சாம்பல் ஆக்கிய இறைவர் ஆவார்
இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள்செய்வார்
iraiyaa ravar ellaark kum illai yenna tharul seivaar
Lard Siva is without saying no in that way who are liked what ever things which is given by him
இல்லை என்று சொல்லாமல் யாவர்க்கும் அவரவர் விரும்பியவற்றை ஈபவர்
பறையார் முழவம் பாட்டோடு பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
paraiyaar muzhl vam paattodu payilun thondar payil kadavoor
ஒலிக்கின்ற மத்தளம் பிற இலைகளைப் பாட்டுக்களோடு பயில்கின்ற அடியார்கள்
பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
Pirai yaar sadaiyaar mayaa naththu periya perumaa nadigalea
Lard Siva who has possessed big hair style on it adorned the tender moon who has descended in the thiru kadayoor mayanam temple place in prime force form
பிறை பொருந்திய சடையை உடையவர் திருக்கடவூர் மாயனத்தில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார்
கொத்தார் கொன்றை மதிசூடிக் கோள்நா கங்கள் பூணாக
koththaar konrai mathi soodi koolnaa kangangal poonaaga
The bunch form of konrai flower garland adorned on his hair with it the curved moon and then the killing instinct filled snakes are adorned as ornaments all over the body
கொத்தாகிய பொருந்திய கொன்றை மாலையையும் பிறையையும் திருமுடியில் சூடி கொல்லும் தன்மையை உடைய பாம்புகள் அணிகலன்களாக இருக்க
மத்த யானை உரிபோர்த்து மருப்பும் ஆமைத் தாலியார்
naphtha yaanai uri porththu maruppum aamai thaali yaar
The madness filled the elephant skin is adorned as upper dress and pig teeth and tortoise skull is adorned as chest ornaments
மதத்தை உடைய யானைத் தோலை போர்த்து பன்றியின் கொம்பையும் ஆமையின் ஓட்டையும் உடைய தாலியை உடையவராய்
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலிகொள்ளும்
paththi seithu paari dangal paadi aada pali kollum
The demon forces are dancing and singing way showing love towards Lard Siva and all are covered form of going for begging food
பூதகணங்கள் அன்பு செய்து பாடியும் ஆடியும் சூழப் பிச்சை ஏற்கின்ற
பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
piththar kadavoor mayaa naththu periya perumaa nadigalea
The big love form of appearing lard Siva in the thiru kadavoor mayanam temple place who is appearing in the prime force form
பித்தர் கோலத்தவர் திருக்கடவூர் மாயனத்தில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார்
துணிவார் கீளுங் கோவணமுந் துதைந்து சுடலைப் பொடியணிந்து
Thuni vaar keelung kovana munth thuthainthu sudalai podi yaninthu
The cut out form of old cloth is adorned as low in cloths and then thick form of burnt down ashes are adorned all over the body and on it snakes are adorned as ornaments
வெட்டப்பட்ட நீண்ட கீளும் கோவணமும் நெருங்கப்பட்டு சுடலைச் சாம்பலை பூசி பாம்புகளை மேலே அணிந்து
பணிமே லிட்ட பாசுபதர் பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
Pani me litta paasu pathar panja vadi maar pinar kadavoor
The fighter form of dress adorned and then three knotted thread adorned on his bosom that brave fighter form appearing in this world
பாசுபத வேடத்தை உடையவர் பஞ்சவடியை அணிந்த மார்பினை உடைய மாவீர்த கோலத்தை உடையவர்
திணிவார் குழையார் புரமூன்றுந் தீவாய்ப் படுத்த சேவகனார்
thinivaar kuzhlai yaar pura moonru theevaai paduth tha sevaga naar
The thick form of ear ornament kulai adorned on his ear and thee castles are destroyed by fire that brave fighter he is
திண்ணிய நீண்ட குழையை அணிந்தவர் புரங்கள் மூன்றையும் நெருப்பின் வாய் படுவித்த வீரத்தை உடையவர்
பிணிவார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
pinivaar sadai yaar mayaa naththu periya perumaa nadi galea
Well tied hair style possessed lard Siva who has descended in the thiru kadavoor temple place in prime lard form
கட்டிய நீண்ட சடையை உடையவர் திருக்கடவூர் மாயனத்தில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார்
காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூர் உறைவாணர்
kaaraar kadalin nanjsunda kandar kadavoor urai vaanar
From the dark color sea place emanated the poison consumed which is consumed lard Siva that tainted form of throat possessed lard Siva who is dwelling in the thiru kadavoor mayaanam temple place
கரிய நிறத்தை உடைய கடலில் இருந்தும் தோன்றிய நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவர் திருக்கடவூரில் உறைகின்ற வாழ்க்கையை உடையவர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து சிதைய விரலா லூன்றினார்
theraar arakkan poi vizhinthu sithaiya viralaa loon rinaar
On the chariot place moving ravana and from it fallen down form and then trapped under the kaiyilai hills to smash his body in that way lard Siva who has put his big toy finger on the hills
தேர் மேல் பொருந்திய அரக்கனாகிய இராவணன் அதனை விட்டுக் கீழே போய் விழ்ந்து உடல் சிதையுமாறு கால் விரலால் தமது மலையை ஊன்றினார்
ஊர்தான் ஆவ துலகேழும் உடையார்க் கொற்றி யூராரூர்
Uoor thaan aava thula kezhlum udaiyaar kotri yoor aaroor
Lard Siva who is owner to seven worlds but his dwelling place is pledged one
ஏழு உலகங்களையும் உடையவராகிய அவருடைய ஊராவது ஒற்றியாய் உள்ளது
பேரா யிரவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
pera yiravar mayaanaththu periya perumaa nadigale
It is whose hamlet we do not know it that lard Siva who has thousands of names that form descended in the thiru kadavoor mayanam temple place
அது யாருடைய ஊரோ பெயர் ஆயிரம் உடையவர் திருக்கடவூர் மாயனத்தில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார்
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
vaada mulaiyaal than noodum makilnthu kaanil veduva naai
The well-built breasts are possessed lardess yumathevi with her lard Siva in hunter form chased a pig
தளாத தனங்களை உடைய மங்கை ஒருத்தியோடு வேடராய் கொம்பை உடைய
கோடா கேழற் பின்சென்று குறுகி விசயன் தவமழித்து
kodaar kelar pinsenru kurugi visayan thava maliththu
And then followed its back and then destroyed the penance of Arjuna
பன்றியின் பின் சென்று அருச்சுனனது தவத்தை அழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து ஆவ நாழி நிலையருள்செய்
naadaa vannaj seru seithu aava naazhli nilai yarul sei
Lard Siva whose appearance is not known form waged war with Arjuna and then blessed the boon with pasupatha battle force and its protecting back cloth is given permanent form
அவன் தம்மை அறியாத நிலையில் நின்று போர் புர்ந்த பின்பு அவனுக்கு அம்பறாத் துணியை நிலையாக வழங்கிய
பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
peedaar sadai yaar mayaa naththu periya perumaa nadigalea
That greatness filled hair style possessed lard Siva who has descended in prime lard form in the thiru kadayoor mayanam temple place
பெருமை பொருந்திய சடைமுடியை உடையவர் திருக்கடவூர் மாயனத்தில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார்
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
vezham urippar mazhluvaalar velvi alippar siramaruppar
Lard Siva who has pealed the elephant skin and then carried malu battle force on his hand and then destroyed the thakken yagaa fire and then in that place so many persons head are cut of form
யானையை உரிப்பர் மழுப் படையை உடையவர் தக்கண் வேள்வியை அழிப்பர் அந்த இடத்தில் பலரது தலைகளை அறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்கன் றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்
aali alippar arithanakkan raanaj sugappar aramuraippar
Lard Siva who gave circle force to Thirumal and form the cow milk emanated five type of byproducts who taken bath with it and then four sanagaathi saints who has preached the veeth inner meaning to them
திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுப்பர் என்றும் பசுவிடத்தில் இருப்பதாகிய ஐந்து பொருட்களை விரும்புபவர் நால்வர் முனிவர்கட்கு அறம் உறைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறிக்கையர்
ealai thalaivar kadavooril iraivar sirumaan marik kaiyar
Who is husband to lardess parvathi and who is dwelling in the thiru kadayoor temple place and then small stage is carried on his hand
மங்கை ஒருத்திக்குத் தலைவராவர் திருக்கடவூரில் தங்குவர் சிறிய மான் கன்றை பிடித்த கையை உடையவர்
பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
pelai sadai yar mayanath thu periya perumaa nadi gale
The spread form of hair possessed lard Siva who has descended in the thiru kadavoor mayanam temple place in prime lard form
விரிந்த சடையை உடையவர் திருக்கடவூர் மாயனத்தில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார்
மாட மல்கு கடவூரில் மறையோ ரேத்தும் மயானத்துப்
maada malku kadavooril marai yo r eththum mayanaththu
The mansions are filled place is thiru kadayoor mayanam in that place situated temple where bharmins are daily conducting poojaass
மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில் அந்தணர்கள் துதிக்கின்ற மயானத்தில் எழுந்தருளி இருக்கின்ற
பீடை தீர அடியாருக் கருளும் பெருமா னடிகள்சீர்
peedai theera adiyaaruk karulum perumaa nadi galseer
Those disciples whose sorrows are removed form of boons and grace is given by lard Siva and then whose glory
அடியவர்களுக்கு அவர்களது துன்பம் நீங்குமாறு அருள் செய்கின்ற பெருமான் கால் அடிகளது புகழை
நாடி நாவ லாரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள்
naadi naava laarooran nampi sonna natramilgal
In the thirunavaloor place descended name aarrooren who has sung the above Tamil poems
திருநாவலூரில் தோன்றிய ஆரூரன் என்னும் பெயரை உடையவனாகிய நம்பி ஆராய்ந்து பாடிய இத்தமிழ் பாடல்கள்
பாடு மடியார் கேட்பார்மேற் பாவ மான பறையுமே.
paadu madiyaar ketpaarmer paava maana paraiyuame
Those disciples who are singing the above poems and then who are hearing it and that persons sins are fly away permanently
அந்த பாடல்களை பாடும் அடியார் பாடக் கேட்கின்ற அடியார் இவர்கள் மேல் உள்ள பாவங்கள் எல்லாம் பறந்து ஒழிந்து போதல் நிச்சயம்
OM THIRU CHITRAM BALAM