THIRUPUNAVASAL
50.திருப்புனவாயில்
THIRUPUNAVASAL
SUNDERER WHO has stayed in the thiru gannappear temple place and prayed lard Siva and then entered into thirupunavayil temple place and prayed and then sang the following decade
In this decade to rectify the mind and on seeing it and firm mind instruction form sang the decade
சுந்தர மூர்த்தி நாயனார் திருக்கானப் பேர் இறைஞ்சிச் சில நாள் தங்கி இருந்து திருப்புனவாயில் அடைந்து பெருமானைத் தொழுது பாடி அருளியது இத்திருப்பதிகம்.
இத்திருப்பதிகம் நெஞ்சைத் திருத்த அதனை நோக்கி உறுதி கூறியவறாக அருளிச் செய்தது.
சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
siththam nee nenai eannodu sool arum vai kalum
my dear mind with the right path following way you will not get any benefit in that way you are swearing form talking, you must get rid of it
மனமே நீறும் நெறியால் பயன் கிட்டாது என்று இப்பொழுது என்னோடு சூள் செய்தலை ஒழி
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
maththa yaanai yin eeruri poorth tha manaalan oor
The madness filled form of elephant skin is pealed is adorned as your upper dress that lard Siva’s lovely place it is
மதத்தை உடைய யானையின் உரித்த தோலைப் போர்த்த அழகனாகிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கின்ற ஊர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
paththar thaam palar paadi nin raadum pazham pathi
The disciples are so many in numbers are so many sacred prayer songs are singing and dancing that good old place it is
அடியார் பலர் திருப்பாடல்கள் பலவற்றைப் பாடி ஆடுகின்ற பழைய ஊராகிய
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.
poththil aanthai gal paatta raap puna vaayilea
In the tree holes the awls are always singing songs without fail and in that place named thiru punavail temple where lard Siva descended and you may think over him daily and then afterwards
மரப்பொந்துகளில் ஆந்தைகளின் பாட்டு ஒழியாத திருப்புனவாயிலே அதனை நாள்தோறும் தப்பாது நினை பின்னர் என்னோடு சொல்
கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
karuthu nee manam ennodu soolarum vaikalum
So here after you should stop to instruct to my mind and rule me
மனமே நீ இப்பொழுது என்னொடு ஆள் செய்தலை ஒழி
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
earuthu mer kolum emperu maar kida maavathu
Lard Siva who is travelling on the back of the bull and your residential place
எருதினை ஊர்கின்ற எம்பெருமானுக்கு இடமாய் இருப்பது
மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
marutha vaanavar vaikum idam mara veduvar
Where Indira and other devas are not left over that place where hunters are waging war with the merchants
இந்திரன் முதலிய தேவர் நீங்காதிருக்கின்ற இடமாகிய வேடர்கள் வாணிகச் சாத்தோடு
பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே.
poruthu saaththodu poosal a raap puna vaayile
That war sound not stopped that place is thiru punavayil temple you may daily pray without fail and they think with me my dear mind
போர் செய்தலால் ஆரவாரம் ஒழியாத திருப்புனவாயிலே அதனை நாள்தோறும் தப்பாது நினை பின்னர் என்னோடு சொல்
தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும்
thokkaa ya manam ean nodu soolarum vaikalum
The innumerable mind bogging problems you are daily analyzing so here after you have pledged form of arguments please stop it
அளவற்ற நினைவுகள் பொருந்தி ஆராய்கின்ற மனமே நீ இப்பொழுது என்னோடு சூள் செய்தலை ஒழி
நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
nakkaan namai yaal udai yaan navi lum midam
The naked vastness form of lard Siva and who has ruled us that persons residential place
ஆடை இல்லாது இருப்பவனும் நம்மை ஆளாக உடையவனும் ஆகிய சிவபெருமானுக்கு இடமாய் இருப்பது
அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராய்ப்
akko dara vaar tha piraa nadik kan paraai
The bones and snakes are adorned that lard Siva’s be friend form of
எலும்பையும் பாம்பையும் அணிந்த அப்பெருமானுக்கு அன்பராய்
புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே.
pukka ravar porrozhli yaap puna vaayile
That lard Siva alone is our protector in that way those who are thinking over and then praised him daily and then think over him daily and then afterwards
அவனைப் புகலிடமாக அடைந்தவர் அவனைப் போற்றுதல் ஒழியாத திருப்புனவாயிலே அதனை நாள்தோறும் தப்பாது நினை பின்னர் என்னோடு சொல்
வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும்
varken riruththi gandaai mana men nodu soolarum vaikkalum
My dear mind you are fairy tale form happily living in this place so you may stop your swerved form of talking
மனமே நீ முருகுடையாய் இருக்கின்றாய் என்னொடு இப்பொழுது சூள் செய்தலை ஒழி
பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல்
porkunranj sentha thor kaakkai pon naa mathu ve pugal
The golden rock approached the crow also appeared in the golden form so on the land place
பொன்மலையைச் சேர்ந்த காக்கையும் பொன்னிறமாம் ஆதலின் கரையில்
கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
karkunru thoorung kaduveli pung kadar kaanal vaai
The small hillocks and bushes and heated vacant place
சிறிய கல் குன்றுகளும் புதர்களும் வெப்பம் மிக்க வெற்றிடமும்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.
purkenru thonridu mem peru maan puna vaayile
That shattered form of appearing those above places lard Siva is the cause and effect form seated in the thiru punavail temple place and then daily pray him without fail and then after wards
பொழிவிழந்து தோன்றுதற்குக் காரணம் ஆன எம் பெருமானது திருப்புனவாயிலே அதனை நாள்தோறும் தப்பாது நினை பின்னர் என்னோடு சொல்
நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும்
nillaai manam ean nodu soolarum vaikalum
My dear mind here after you are swerved form of taking wards are kept it away
மனமே நீ இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி
நல்லான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
nallaan namai yaal udai yaan navi lum midam
Our only relation is lard Siva and who is ruled us that lard Siva whose residential place is
நன்மையே உறவுமானவனும் நம்மை ஆளாக உடையவனுமாகிய சிவபெருமான் பெரிதும் உறையும் இடம்
வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெருண்டுபோய்ப்
villaai kanai vettuvar aatta verun du poi
The hunters are with their bow and arrow frightened so that ran away fast with that fearful mind
வேடர்கள் தம் வில்லின் கண் தொடுத்த அம்பினால் வெருட்ட வெருண்டு ஓடி
புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.
pulvaai kanam pukkoli kum puna vaayile
That stage’s cluster penetrated and then in the thirupunavayil temple place you may daily think over without fail and talk with me
மான் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே அதனை நாள்தோறும் தப்பாது நினை பின்னர் என்னோடு சொல்
மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
maraval nee manam ean nodu soolarum vaik kalum
So my dear mind you are swerved form of talking that mentality to be kept away
மனமே நீ இப்பொழுது என்னோடு சூள் செய்தலி ஒழி
உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது
Ura yum uoozhliyu maaya pem maarki da maavathu
To all the living beings relative form and then time factor form that lard Siva’s residential place is
எல்லா உயிர்களுக்கும் உறவும் காலமுமாய் நிற்கும் சிவபெருமானுக்கு இடமாய் இருப்பது
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
piravu kalli yin neelk avat terith than pedai yai
The male dove which has separated from its female dove and then climbed above the bushes and then cried to call its better half
சேவற் புறா தன் பெடை பிரிந்த பின்பு அதனை சுள்ளிப்புதரின் வளர்ந்த கிளையில் ஏறி நின்று கூப்பிட
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.
puravang koop pida pon punanj soozhi puna vaayile
In that wealth filled place is thiru punavail and that place you may think over it daily without fail and then afterwards
புவனங்களில் பொன் நிறைந்து காணப்படுகின்ற திருப்புனவாயிலே அதனை நாள்தோறும் தப்பாது நினை பின்னர் என்னோடு சொல்
ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்
easatru nee ninai yennodu sool arum vaikkalum
So my dear mind you have now swerved form of talking wards are to be kept it away
மனமே நீ இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி
பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி
paasar ravar paadi nin raadum pazham pathi
With relationships are kept away with that intuition filled form of singing and dancing that good old place it is
பாசம் நீங்கிய மெய் உணர்வினர் புகழ்ந்து பாடி நின்று ஆடுகின்ற பழமையான ஊர்
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
thesath thadi yavar vanthiru pothum vanan kida
In so many nation residing disciples are come over here and then pray in the morning and evening
பல நாட்டிலும் உள்ள அடியவர் பலரும் வந்து காலையிலும் மாலையிலும் வணங்க
பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே.
poosar rudi poosa laraap puna vaayile
The war drums are beaten by the hunters that emotional filled place is thiru punavail you may daily think over it without any cursing form and then talk with me
வேடுவர்களது போர்ப் பறை ஆரவாரத்தை ஒழியாத திருப்புனவாயிலே அதனை இகழ்தலி அற்று நாள்தோறும் தப்பாது நினை பின்னர் என்னோடு சொல்
கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
kolli vaayina kooreyir renag kizhlik kavea
The pigs face is red one and long mouth possessed and sharpened teeth with it land is excavated
கொள்ளி போல முனை சிவந்த நீண்ட வாயினை உடையவன் ஆகிய கூரிய பற்களை உடைய பன்றிகள் நிலத்தைக் கீண்ட
தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
thelli maa mani thee vizhlik kum midanj sen tharai
At that time the best Rubi diamond from it emanated fire spark will show that place as red one
வெளிப்பட்ட சிறந்த மாணிக்க மணியோடு நெருப்பு தோன்றும் இடத்துச் சிவந்து காட்டும்
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே
kalli vatrip pul theenthu veng kaanag kazhlik kave
From it emanated the spark the dried cactus leaves are caught fire and then the dried nearby grass are caught fire and then the wild forest is engulfed with the fire and then converted in to ashes
நிலத்தின் கண் உள்ள கள்ளி உலர்ந்து புல் தீய்ந்து கொடிய காடு அழிகையினாலே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.
pulli maaninam pukkolik kum puna vaayile
So the doted skin possessed the deer cluster ran away fastly and then entered in to the thiru punavayil place
புள்ளி மானின் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே
எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும்
earre ninai eannodunj soolarum vaikkalum
My dear mind what type of act you have possessed so you are talked with swerved form please give it away
மனமே நின் செய்கைதான் எத்தன்மையது என்னோடு சூள் செய்தலை ஒழி
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
mat rethum vendaa val vinai yaayina main thara
Our hardened form of bad deeds are completely to be eradicated there is no other way we need not search it
நம் வலிய வினையெனப்படுவன யாவும் அடியோடு கெட்டு ஒழிதற்கு மற்றுச் சூழ்ச்சி யாதும் வேண்டா
கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
katrooru kaark kaattidai meeintha gaar kozhli poi
In the stone encircled bushes and dark color forest where the prey is consumed that forest cock and hen
கல்லைச் சூழ்ந்த புதரிலும் கரிய காட்டிடத்தும் இரையை உண்ட கரிய கானங்கோழிகள்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.
purrerik kookoo eana azhai kum puna vaayle
And then claimed on the flying ants sand heap and then raised the koko sound that place is thiru punavail so you may think over it without fail
ஈயற் புற்றுக்களின் மேல் ஏறி நின்று கூ கூ எனக் கூப்பிடுகின்ற திருப்புனவாயிலை நாள்தோறும் தப்பாது நினை
பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
podiyaadu meniyan pon punaj soozhi puna vaayilai
Lard Siva who has dipped his body into sacred ashes and red color body lard Siva that descended place is thiru punavayil
திருநிற்றியின் கண் மூழ்கிய திருமேனியனாகிய சிவபெருமானது புலன்களில் பொன் நிறைந்துள்ள திருப்புனவாயிலை
அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன
adiyaar adiyan naavala vooran uraith thana
sundered who is disciple’s disciple who has sung this decade
அடியார்க்கு அடியானாகிய திருநாவலூரன் பாடிய இப்பாடல்கள்
மடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
Madi yaathu katrivai yeththa val laar vinai maainthu poi
Without any clumsiness all are memorized and praised lard Siva with those songs and then those people’s bad deeds are perished form
சோம்பி இராது கற்று அவற்றால் அப்பெருமானை ஏத்த வல்லவர் முன் செய்த வினைகள் எல்லாம் மாய்ந்து போகப் பெற்று
குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.
kudiyaaga paadi nin raadaval lark killai kutramea
Those disciples who are living lard Siva’s disciples form and then praised lard Siva with songs and dancing that person’s omission and commission defects are not affected him
அப்பெருமானுக்கு அடியராய் வாழ அவற்றை இசை வழிப்பாடி நின்று ஆடவல்லவர்க்கு செய்வன தவிர்வனவற்றிற் பிற்ழ்தலால் வரும் குற்றம் இல்லையாம்
OM THIRU CHITRAMBALAM