THIRUMURUGAN PANDI
49. திருமுருகன் பூண்டி
THIRUMURUGAN PANDI
Sunderer moorthy swamical who has got wealth form his friend and king named Seara maan peruman nayannaar and all are carried on the heads of laborers and then crossed thr thirumuruga pandi place and then while at that time lard Siva’s direction whose demon forces have stolen all the wealth from the laborers. Afterwards sunderer came this temple and then sang the following decade and then on hearing it lard Siva gave back the wealth to sunderer
சுந்தர மூர்த்தி சுவாமிகள் சேரமான் பெருமான் நாயனார் அளித்த பொருட்களை ஆட்களின் தலையில் ஏற்றி திருமுருகன் பூண்டிக்கு அருகில் வரும் பொழுது பெருமான் ஏவலால் பூதங்கள் வேடுவர் ஆகி வந்து அந்தப் பொருட்களைப் பறித்துப் போயின. சுவாமிகள் இத்தலத்தில் வந்து இப்பதிகத்தைப் பாடவே சிவபெருமான் பூதங்கள் கவர்ந்த பொருளை மீண்டும் பெறச் செய்தார்.
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித்
koduku venj silai vaduga veduvar virava laamai solliya
My dear lard Siva the curved form of bow and arrow carried on the hands of vadugar sect of hunters those who are crossed in that place, they used filthy wards and then called them
எம்பெருமானெ வளைந்த கொடிய வில்லை உடைய வரடுக வேடுவர் வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்கு மிடம்
thiduku mot tena kuth thi koorai kon daara laikku midam
They will frighten then with variety of deadly wards and asked them to seat there and then steel their belongings
திடுகு என்னும் மொட்டு என்னும் அதட்டி அச்சுறுத்தி ஆறவைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய்
modugu naariya vadugar vaazhi murugan poondi maanagar vaai
The stinking body odor filled that hunters are living place is Thiru murugu pandi city place
முடை நாற்றம் தூரத்திலும் விரைந்து சென்று நாறுகின்ற உடம்பை உடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன் பூண்டி இம்மாநகரிடத்து இங்கு
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
edugu nunnidai mangai than nodum eath thukking kirunthee rem piraa neerea
The narrow waist possessed lardess parvati and with her for what reason you have stayed here
சிறுகிய நுண்ணிய இடையினை உடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர்
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமை சொல்லிக்
villaik kaatti verutti veduvar virava laamai solli
My dear lard Siva the hunters are showed the bow and arrow and then frightened and filthy wards with it cursed
எம்பெருமானே வேடுவர் வில்லைக் காட்டி வெருட்டியும் பொருந்தாத சொற்களையும் சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளு மிடம்
kalli naal eri thittum mothiyung koorai kollu midam
With stone throwing way hit and then slapped with the hands and grabbed the dress and then chased them away
கல்லால் எறிந்தும் கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
Mullai thaathu mang kamazhi murugan poondi maanagar vaai
Where mullai flower fragrance spread over in that thiru murugu pandi place who approached there
முல்லை மலரின் மகரந்தம் நறுமணத்தை வீசுகின்ற இம்முருகப் பூண்டி மாநகர் வருவோரை
எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
eallai kaappathon rilai yaakil neer eaththuk king kiruntheer em piraa neerea
In that place there is no protection available then why are you stay here
அதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால் அதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவ மொன் றறியார்
pasukka le konru thinru paavigal paava mon rari yaar
My dear lard Siva this sinners are not know what type of sins are doing and all the time animals are killed and then eating it daily
எம்பெருமானே அந்த பாவிகள் பாவம் என்பதொன்றையறியாராய் விலங்குகளையே கொன்று தின்று நாள்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங் கூறை கொள்ளு மிடம்
Usirk ko lai pala nernthu nadorung koorai kollu midam
And then daily so many persons are killed with firm mindedness and then taken away their dress
நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்கள் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
musukkal por pala vedar vaazhi murugan poondi maanagar vaai
And the monkey form of others thinks are forcefully taken away and then with it they are living in that thiru murugupandy temple place
பல குரங்குகள் போலப் பிறர் பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
Esuk ka zhliyap payik kang kondu neer eaththuk king kirunthee rem piraaneerea
You have collecting that begging food in this place and then what reason you are living here
இதன் கண் நீர் இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்
பீறற் கூறை உடுத்தோர் பத்திரங் கட்டி வெட்டன ராய்ச்
peerar koorai uduth thoor paththirang katti vettana raai
Lard Siva those hunters who have adorned the torn cloths and the dagger tied inside the dress in concealed form and then those who are moving with that dagger cut them then sin filled persons who are collected the stolen things are divided among them selves
எம்பெருமானீரே கிழிந்த உடையை உடுத்துக் கொண்டு அதற்குள் உடைவாளையும் கட்டிக்கொண்டு வருவோரை அந்த உடைவாளால் வெட்டி குற்றமுடைய வேடுவரே கூடி ஆற வைத்த பொருளின்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங் கூறை கொள்ளு மிடம்
soorai pangiya raaki naaderung koorai kollu midam
That best dress are garbed place it is
பங்காகிய பொருளை உடையவராய் நாள்தோறும் அவர்கள் உடைகளை பறித்து கொள்ளும் இடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
morai veduvar koodi vaazhi murugan poondi maanagar vaai
That sinful persons are living in clubbed form of this murugu pandi big city place
குற்றமுடைய வேடுவர் கூடி வாழ்கின்ற இம்முருகன் பூண்டி மாநகர்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
eaaru kaalitra thillai yaai vidil eaththung kir untheer em piraa neere
And your bull is in good walking state without broken legs and then why you are not moved away please tell me the reason for it
உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றது என்றால் அதன்மேல் ஏறி அப்பால் போகாமல் இதன் கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்
தயங்கு தோலை உடுத்த சங்கரா சாம வேத மோதி
thayangu thoolai uduth tha sangaraa saama vetha mothi
Lard Siva the ever active form of skin dress is adorned and then giving happiness that samaveetha songs are always singing
எம்பெருமானே நீர் விளங்குகின்ற தோலை உடுத்தி இன்பத்தைச் செய்கின்ற சாம வேததை பாடிக் கொண்டு
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறி யீர்
mayangi uooridu pichchai kondu num maark ka mon rari yir
With that songs the city place people made in mesmerized form and then collected begging from them then you do not know any other way to collet begging food
அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளவர் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர் வாய்
muyangu poon mulai mangaiyaa lodu murugan poondi maanagar vaai
To embraced form of ornaments are adorned on the breast place that parvathi you have stayed in the thirumurugu pandi temple place
தழுவுகின்ற அணிகளை அணிந்த தனங்களை உடைய தேவியோடும் இம்முருகன் பூண்டி மாநகர் இடத்து
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
eyanga yum miduk kudai ya raai vidil eaththuk king kiruntheer em piraaneere
you have muscle and body power to move away from this place then what is the reason to stay here please tell me
பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீர் என்றால் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்
விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங்
vitti saip pana kokka rai kodu kotti thaththa lagang
Lard Siva you are dancing as per the musical instruments named kokkkari, kodu kotti thathalm, thunthubi kudamullaa
எம்பெருமானே நீர் கொட்டிப் பாடுதற்கு உரிய தாள இறுதிக்கு ஏற்ப விட்டு விட்டு ஒலிக்கின்ற கொக்கரை கொடு கொட்டி தத்தளகம் துத்துமி குடமுழா
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர்
kotti paadumith thunthu mi yodu kudamuzha neer magizhi veer
And all liked form you are staying here and then
என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீர் என்றால்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
motta larnthu manang kamazhi murugan poondi maangar vaai
In this thiru murugu pandi temple place where so many flower buds are bloomed form of
பலவகை அரும்புகள் அலர்ந்து மணம் கமழ்கின்ற இம்முருகன் பூண்டி மாநகரிடத்து
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
etta pichchaikon dunpa thaakil neer eaththuk king kiruntheer em piraaneere
And then this sinful persons are giving begging food you have consumed and then living here please tell me the reason for it
மற்றும் ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்டீரென்றால் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்
வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்ற யலே
veetham oothiven neeru poosiven kovanan thatra yale
Lard Siva you are always veethaas are chanting form and adorned the white ashes all over the body and white loin cloths are tied in the waist and then near by
எம்பெருமானே நீர் வேதத்தை ஓதிக் கொண்டு வெண்ணிற்றைப் பூசிக் கொண்டு வெள்ளிய கோவணத்தை உடுத்து பக்கத்தில்
ஓதம் மேவிய ஒற்றி யூரையும் முத்தி நீர் மகிழ்வீர்
ootham meviya otri yurai yum muththi neer makizhi veer
And the waves are emanating form of thiru votriyoor place where festivals are conducted which is liked by you
அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய்
mothi veduvar kooraikollum murugan poondi maanagar vaai
And you have not moved to that place and stayed in this thirumurugu pandi temple place where hunters are stealing in this place why are you staying here
அங்கு போகாமல் வேடர்கள் வருவோரைத் தாக்கி அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம்முருகன் பூண்டி மாநகரிடத்து
ஏது காரணம் எது காவல்கொண் டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
eathu kaaranam eathu kaaval kon deth thukking kiruntheer em piraa neere
Tell me the reason for it and what you want to preserve it here please tell me the reason for it
யாது காரணத்தால் எதனைக் காத்துக் கொண்டு எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர்
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் தோள்வ ரிநெடுங் கண்
padava rayu nun neeri daippanai thol va ri nedung kan
my dear lard Siva you are not living in alone and the dancing snake like narrow waist is possessed and broad shoulders are possessed and strips are filled broad eyes are possessed form
எம்பெருமானே நீர் தனிமையாக இல்லாது படத்தை உடைய பாம்பு போலும் மிக நுண்ணிய இடையினையும் பருத்த தோள்களையும் வரிகளை உடைய நீண்ட கண்களையும்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர் பாகம் வைத்து கந்தீர்
madava rall umai nangai thannai yor paagam vaiththu kantheer
That young lardess yumadevi you have possessed in your left part of the body willingly
உடைய இளமை பொருந்திய உமையம்மை என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன் பூண்டி மாநகர் வாய்
mudava ralleer edari leer murugan poondi maanagar vaai
You are not deformed limbs so you may move away from this place and then there is no impediment to you then what the reason to stay here is
முடவர் அல்லீர் ஆகவே பெயர்ந்து போதர்கண் இடரொன்றும் இல்லீர் இம்முருகன் பூண்டி மாநகரிடத்து
இடவ மேறியும் போவ தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
edava meri yum pova thaakil neer eaththuk king kiruntheer em piraa neere
your liked destination you may move on your bull that power you have possessed then why are you stay here please tell me the reason for it
நீர் விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைக லனா
saantha maaga ven neeru poosi ven patra laika lanaa
My dear lard Siva you have adorned the white ashes all over the body and white teeth are possessed the skull carried on the hands
எம்பெருமானே வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக் கொண்டு வெள்ளிய பற்களை உடைய கபாலம் பாத்திரமாக ஏந்தி
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து கந்தீர்
Vein tha ven pirai kanni thannai yor paagam vaith thu kantheer
And in the hair place you have adored the white moon willingly
முடியில் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம்முடியின் மேல் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே
மோந்தை யோடு முழக்கறா முருகன் பூண்டி மாநகர் வாய்
moonthai yodu muzhak kara murugan poondi maanagar vaai
You have carried the monthai musical instrument on hand and the hunters drum sounds are not stopped that muruga pandi temple place
நீர் மொந்தை என்னும் வாத்தியதோடு வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநகரிடத்து
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
eaanthu poonmulai mangai than nodum eath thukking kiruntheer em piraaneere
The well ornaments are adorned the breast place and with that lady why are you staying here
அணிகளைத் தாங்கிய தனங்களை உடைய மங்கை ஒருத்தியோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்
முந்தி வானவர் தாந்தொழு முருகன் பூண்டி மாநகர் வாய்ப்
munthi vaanavar than thozhlu murugan poondi maanagar vaai
Deevass are one after another stood in the queue form and then pray before you in that thiru murugupandi temple place descended
தேவர்கள் ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்குகின்ற திருமுருகன் பூண்டி மாநகர் இடத்து எழுந்தருளி இருக்கின்ற
பந்த ணைவிரற் பாவை தன்னையோர் பாகம் வைத்த வனைச்
pantha nai virar paavai thannaiyor paagam vaiththa vanai
The ball like finger tips are possessed that lardess parvathi is kept the left part of your body that lard Siva
பந்தின் பொருந்திய விரல்களை உடைய பாலைபோலும் மங்கையை ஒரு பாகத்தில் வைத்துள்ள சிவபெருமானை
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் உரைத்தன பத்துங் கொண்
sinthai yir siva thonda nooran uraith thana paththung kon
Whose disciple named nambi aarrooren with love filled form of sang this ten poems
அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினால் பாடிய இப்பத்துப் பாடல்களால்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர் ஒன்றுந் தாமி லரே.
dentham madigalai eaaththu vaaridam onrun thaami lare
Those who are praying lard Siva with prayer songs they won’t get any sorrow in this world
அந்த எம்பெருமானைத் துதிப்பவர்கள் துன்பம் ஒன்றும் இல்லாதவர் ஆவர்
OM THIRUCHITRAMBALAM