Thiru pandi kodumudi
48.திருப்பாண்டிக் கொடுமுடி
Thiru pandi kodumudi
Suntherer prayed in thiru eangooi temple and then entered in to kongu king Dom and then went into the southern side of Cauvery place situated temple named thiru pandi kodumudi where he prayed that I can’t forget this temple deity and in that mentality and put the sacred five letter ward at the end of the poem “namasivaya” and so it is got the name namasivaya decade
This decade described the lovely appearance of lard Siva in deity form and then sang here
சுந்தரர் திருஈங்கோய்மலை முதலாகப் பல தலங்களையும் தொழுது கொங்கு நாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி அடைந்து கோயில் முன் நின்று வணங்கி இங்கு சிலரை மறக்க வொண்ணாது என்று உள்ளத்தில் எழுந்த குறிப்பினால் திருஐந்தெழுத்தை அமைத்துப் பாடி அருளியது இத்திருப்பதிகம் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் சொல்லும் நமச்சிவாயவே என்று அருளி இருப்பதால் இதற்கு நமச்சிவாயத் திருப்பதிகம் என்று பெயர் வழங்கப் படுகின்றது.
இத்திருப்பதிகம் கொடுமுடி கோயிலில் உள்ள பெருமான் அழகிய திருமேனியைக் கண்டு பாடப்பட்டது.
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன்
matrru patrrenak kinri ninrirup paatha memanam paavithean
I have no other guide in this world except your sacred feet in that way I have firmly think over in my mind
எனக்கு வேறு துணையில்லை ஆகும்படி உனது திருவடியையே மனத்தில் துணியப் பெற்றேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன்
perra lum piranth theni nip pira vaatha thanmai van theithi nean
In that way I have firm mind and then and then got in this life and it is the last birth and will not enter in to any womb here after that assurance I have got in this world
அவ்வாறு துணியப் பெற்ற பின்பே நான் மனிதனாய்ப் பிறந்தவனாயினேன் அதுவன்றி இனி ஒரு பிறப்பில் சென்று பிறவாத தன்மையும் என்னை வந்து அடையப் பெற்றேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
katrra var thozhlu theth thuj seerk karai yurir paandi kodumudi
The well learned people are prayed and then praised in this kodu mudi temple place descended
கொடுமுடி என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
nat ra vaa unai naan marakkinuj sollum naa namachi vaayaveea
Here after if I have forgotten you my tongue will not forgotten you and it will always chanting your sacred name namasivaya without any interruption
நல்ல தவ வடிவினனே இனி உன்னை நான் மறந்தாலும் எனது நாக்கு உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதையே இடையறாது சொல்லும்
இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள்———
etta num madi yeththu vaar egazhlin thitta naal maran thitta naal
I am liked by you and your disciples are cursed me as not firm minded person he is so that those days are forgotten you and all those days
உன்னால் விருப்பப் பெற்றவனாகிய யான் உன் திருவடியைத் துதிக்கின்ற அடியவர்களால் இவன் நிலை இல்லாத மனத்தை உடையவன் என்று இகழப்பட்ட நாள்களும் அவ்வாறு அவர்கள் இகழ்தற்கு ஏதுவாக நான் உன்னை மறந்துவிட்ட நாள்களும் ஆகிய இவைகளை
கெட்ட நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி
ketta naali vai eanra laarkaru theen ki lar punar kaaviri
All those days are perished days in that way I have thought it and then abundant form of flowing the River Cauvery river water
அடியேன் அழிந்த நாள் என்று கருதுவது அன்றி வேறாகக் கருத மாட்டேன் மிகுதியாக வருகின்ற காவிரி ஆறு நீர்
வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி
vatta vaasigai konda di thozhlu theth thu paandi kodumudi
The curved form of garland to day bloomed one is adorned on your neck and prayed under your feet that place you have descended in that Thiru pandi Kodumudi place you have descended in friend form
வளைவாக மேலால் விளங்க இடப்படும் மாலையைக் கொணர்ந்து உன் திருவடியை வணங்கித் துதிக்கின்ற திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் ஊரில் எழுந்தருளி இருக்கின்ற தோழமை கொண்டவனே
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
natta vaa unai naan ma rak kinunj sollum naa namachi vaayaveea
Even if I have forgotten you my tongue will not forget you and it will always chant NAMASIVAYA MANTHRA
நான் உன்னை மறக்கினும் எனது நாக்கு உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதையே இடையறாது சொல்லும்
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர் போகும் நாளுயர் பாடைமேல்
oovu naal unar vazhli yum naal uyir pogum naal uyar paadai meal
I am not think over in those days and my Intuition perished days and my sole gone away those dead days and highly elevated those dead man carrying chariot days
அடியேன் உன்னை நினையா தொழிந்த நாள்களை என் உணர்வு அழிந்த நாள்களும் உயிர் போன நாள்களும் உயரமாகத் தோன்ற பாடையின் மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களும்
காவு நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப்
kaavu naal ivai eanra laar karu theean ki lar punar kaaviri
All those days are considered as good days and any other day is considered as good one and Cauvery River place abundantly flowing water
என்று ம் இவைகளாகக் கருதுதல் இன்றி வேறு நல்ல நாளாகக் கருத மாட்டேன் காவிரி ஆற்றில் மிகுந்து வருகின்ற நீரை உடைய
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
paavu than punal vanthi zhli paranj sothi paandi kodu mudi
In that spread over form of flowing the temple named thirupandy kodumudy temple place where you have descended lard Siva
பரந்த வெள்ளம் வந்து பாய்கின்ற திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
naava laa unai naan ma rak kinunj sollum naa namachi vaayaveea
Lard Siva you have tongue power possessed form and highly light glow form you are existing and your sacred name is namasivaya chanted always by my mouth
நா வண்மை உடையவனே மேலான ஒளி வடிவாய் உள்ளவனே ஆதலின் நான் உனது திருப் பெயரை நமச்சிவாய என்பதனை இடையறாது சொல்லும்
எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை தம்பி ரானென்பொன் மாமணி
eal lai yil pugazhi eampi raan enthai thampi raan en pon maa mani
You are gold form and ruby diamond form
பொன் போல்பவனே என் மணி போல்பவனே
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி காவி ரியதன் வாய்க்கரை
kallai yunthi valampo zhlin thizhli kaavi ri yathan vaaik karai
The ruby diamonds are pushed forward and all the place wealth is abundantly pouring form the river Cauvery nearby place
மணிகளைத் தள்ளி வந்து எந்த இடத்திலும் செல்வத்தை மிகுதியாகச் சொரிந்து பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண்
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
nalla var thozhlu theth thunj seerk karai yurir paandi kodumudi
The good people are always chanting and praying that glory filled place in karaiyoor at thiru pandy temple place lard Siva you have descended
நல்லவர்களால் வணங்கித் துதிக்கப்படுகின்ற புகழை உடைய கறையூரில் உள்ள திருப்பாண்டிக் கொடிமுடி என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
valla vaa unai naan ma rak kinunj sollum naa namachi vaayaveea
Lard Siva you are excelled in all types of activities and even if I have forgotten you my tongue will always chanting your sacred name namasivaya without any interruption
எல்லாம் வல்லவனே உன்னை நான் மறந்தாலும் எனது நாக்கு உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதனை இடையறாது சொல்லும்
அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி யேனும் நான்மிக அஞ்சினேன்
anjsi nark karan aathi yen radi yenum naan miga anjinen
Those who are fear filled form of approached you and then you will protect them in that way I have also surrendered under your feet and on knowing it
அச்சமுற்று அடைந்தவர்க்கு பாதுகாப்பாய் என்று அறிந்து அடியேனாகிய யானும் மிகவும் அச்சமுற்று வந்து உன்னை அடைந்தேன் அதனை அறிந்து நீ
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள் நல்கி னாய்க்கழி கின்றதென்
anjasa len radi thonda ner karul nalki naaik kazhli kinra then
In the same way you have informed me that you do not afraid of anything and then you have embraced me and then you have put your sacred feet on me so I have nothing in my hand to give as consideration which has been seen by me
அவ்வண்ணமே அஞ்சாதெ என்று சொல்லி அனைத்து அடித் தொண்டன் ஆகிய எனக்கு உன் திருஅருளை அளித்தாய் அதனால் உனக்குக் கொடுக்கின்றது ஒன்றுமில்லை என்பதனை கண்டேன்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
panjsin mell adi paavai maar kudain thaadu paandi kodu mudi
The soft cotton form of soft feet possessed ladies who are taking bath in the River Cauvery water where playing that thiru pandi kodumudi temple place lard Siva you have descended
ஊட்டப்பட்ட பஞ்சினை உடைய மெல்லிய அடிகளை உடைய பாவை போலும் மகளீர் காவிரித் துறையில் மூழ்கி விளையாடுகின்ற திருப்பாண்டிக் கொடிமுடி என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
najasa ni kanda naan ma rak kinunj sollum naa namachi vaayavea
The poison tainted throat you have possessed that glory filled form you are existing and even if I have forgotten you by tongue will always chanting your sacred name namasivaya without fail
நஞ்சு அணிந்த கண்டத்தை உடையவனே இன்ன பெருமை உடைய முதன்மையும் உடைய உன்னை நான் மறந்தாலும் எனது நாக்கு உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதனை இடையறாது சொல்லும்
ஏடு வானிளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல்
eaadu vaanilan thingal soodinai enpin kol puli tholin meal
Lard Siva you have soft petal like moon you have adorned on your hair is there yet another evidence is available to prove your mighty power and then the killer instinct filled the tiger skin
நீ வானத்தில் தோன்றுகின்ற பூவிதழ் போலும் இளம் சந்திரனை முடியில் சூடினாய் அதன் பின் சான்று சொல்ல வேண்டுவது என் கொல்லுகின்ற புலியினது தோலின் மேல்
ஆடு பாம்பது அரைக்க சைத்த அழக னேயந்தண் காவிரிப்
aadu paampatha raikka saiththa azhaga ne yan than kaaviri
The dancing snake you have tied on your waist place that hand some form you are appearing in this world and the lovely Cauvery covered place
ஆடுகின்ற பாம்பை அரையின் கண் கட்டி உள்ள அழகனே அழகிய சூழ்ந்த காவிரியாற்றினது
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
paadu than punal vanthi zhli paranj sothi paandi kodu mudi
the sound raising form of cool water flowing that place is thiru pandi kodumudi temple place lard Siva you have descended and highly regarded light form you are appearing in this world and all the glory filled form you are existing
ஒலிக்கின்ற குளிர்ந்த நீர் வந்து பாய்கின்ற திருப்பாண்டிக் கொடிமுடி என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற மேலான ஒளியாய் உள்ளவனே பெருமை உடையவனே
சேட னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
seeda ne yunai naan ma rak kinuj sollum naa namachi vaayavea
So even if I have forgotten you my tongue will always not forgotten you and then chanting your name namasivaya without any interruption
அதனால் உன்னை நான் மறந்தாலும் எனது நாக்கு உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதனை இடையறாது சொல்லும்
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டனன்
virumpi ninmalarp paatha me ninai thean vi naigalum vindanan
I am your disciple so I have been thinking over your sacred feet always so that my rare bad deeds are melted away
அடியேன் உனது மலர்போலும் திருவடிகளையே விரும்பி நினைந்தேன் அதனால் நீங்குதற்கு அரிய பிணிகள் நீங்கின
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
nerunki van pozhlil soozhin the zhlil pera ninra kaaviri kottidai
The fertile plantations are covered in thick form in that lovely place
வளப்பமான சோலைகள் நெருங்கிச் சூழ்ந்து அழகுண்டாக நிற்கின்ற கரைக்கண் உள்ள
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
kurumpai men mulaik kothai maar kudai thaadu paandi kodu mudi
The young coconut like tender breasts are possessed young girls taking dip in the river water and played there in place situated thiru pandy kodumudi temple place
தென்னங்குரும்பை போலும் மெல்லிய கொங்கைகளை உடைய கண்ணியர் மூழ்கி விளையாடுகின்ற காவிரியாற்றினது திருப்பாண்டிக் கொடிமுடி என்னும் கோயிலில்
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
virumpa ne yunai naan ma rakkinunj sollum naa namachi vaayavea
And all are liking you and here after I will forget you my tongue will always chanting your name namasivaya without any interruption
எழுந்தருளி இருக்கின்ற விரும்பப்படுபவனே இனி உன்னை நான் மறந்தாலும் எனது நாக்கு உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதனை இடையறாது சொல்லும்
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ ழச்சிலை கோலினாய்
sem po ner sadai yaai thi ripuran thee ye zhach silai kolinaai
The golden color hair possessed lard Siva and the three castles are destroyed by fire with fire arrow and bow
செம்பொன் போலும் சடை உடையவனே திரிபுரத்தில் தீ உண்டாகும் படி வில்லை வளைத்தவனே
வம்பு லாங்குழ லாளைப் பாகம மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
vampu laam kulaa lai paagama marnthu kaaviri kottidai
The fragrance filled lardess yumathevi is kept on your left part of your body and in the river bed place plantations
மணம் வீசுகின்ற கூந்தலை உடைய இறைவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்து காவிரி ஆற்றினது கரையின் கண் உள்ள சோலைகளில்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி லாடு பாண்டிக் கொடுமுடி
kompin merkuyil koova maa mayi laadu paandi kodumudi
On the tree branches the coco birds are singing and then where the peacocks are dancing in the thirupandi kodumudi place all are liked form you have descended
கிளைகளின் மேல் குயில்கள் கூவ சிறந்த மயில்கள் ஆடுகின்ற திருப்பாண்டிக் கொடிமுடி என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற விரும்பப்படுபவனே
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
nampa ne yunai naan ma rak kinunj sollum naa namachi vaayavea
My dear reliable lard Siva and even if I have forgotten you my tongue will always will be chanting your name namasivaya without any interruption
நம்பனே உன்னை நான் மறந்தாலும் என் நாக்கு உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதை இடையறாது சொல்லும்
சார ணன்தந்தை எம்பி ரானெந்தை தம்பிரா னென்பொன்மா மணியென்று
saara nan thanthai empi raan enthai thampiraa nen ponmaa maniyenru
The innumerable form of deevass said that he is the protector to them and who is my father and who is my leader and he is my father’s father and he is my gold and he is my ruby diamond form and then said
அளவற்ற தேவர் எமக்குப் புகலிட மானவன் எம் தந்தை எம் தலைவன் எம் தந்தைக்கும் தலைவன் எங்கள் பொன் எங்கள் மணி என்று சொல்லி
பேரெ ணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
pere naayiraa kodi thevar pitharri ninru piri kilaar
Lard Siva you have so many names that are murmured and stand there without separation in that way you are prime lard in this world.
உன் பெயர்கள் பலவற்றையும் பிதற்றி நின்று உன்னை பிரிய மாட்டார் இன்ன பெரியோன் ஆகிய உன்னை நான்
நார ணன்பிர மன்றொ ழுங்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
naara nan pira man ro zhlungarai yurir paandi kodumudi
And lard Siva you are prayed by bharma and thirumal in karaiyoor place established temple name thiru pandi kodu mudi where you have descended in principal form
திருமாலும் பிரமனும் வணங்குகின்ற காறையூரில் உள்ள திருப்பாண்டிக் கொடிமுடி என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற முதல்வனே
கார ணாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
kaara naa unai naan ma rak kinunj sollum naa namachi vaayavea
You are prime matter form to this world and even if I have forgotten you, my tongue will always be chanting your name sivayanama always without any interruption
முழுமுதற் பொருளே உன்னை நான் மறந்தாலும் என் நாக்கு உனது திருப்பெயராகிய நமச்சிவாய் என்பதனை இடையறாது சொல்லும்
கோணி யபிறை சூடியைக் கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
koni ya pirai soodiyai karai yurir paandi kodumudi
The curved moon adorned on your hair and then in thiru kariyoor place established temple named thirupandi kodumudi where you have descended that form of lard Siva you are
வளைந்த பிறையைச் சூடியவனும் ஆகிய கறையூரில் உள்ள திருப்பாண்டிக் கொடிமுடி என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற பெருமானை
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் பித்த னைப்பிறப் பில்லியைப்
peni ya peru maanai pinjgngap piththa naip pirap pilliyai
The highly decorated hair styled you have possessed and big bliss you have possessed and you do not have any birth in this world
தலைக் கோலம் உடையவனும் பேரருள் உடையவனும் பிறப்பு இல்லாதவனும்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத் தார னைப்படப் பாம்பரை
paanu laavari vanda rai konrai thaara naip padap paam parai
The musical noted filled form of stripped wings are possessed the honey bees are encircled kontrai flower garland adorned form and the dancing snake
இசையோடு உலாவுகின்ற வரிகளை உடைய வண்டுகள் ஒலிக்கும் கொன்றை பூ மாலைகளை அணிந்தவனும் படத்தை உடைய பாம்பாகிய
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லு வார்க்கில்லை துன்பமே.
naana naith thondan uooran sol livai sollu vaark killai thunpamea
The waist rope is tied form of lard Siva whose disciple I am named nambi aarroran who has sung the above songs those people will not affect any sorrow in this world
அரை நாணை உடையவனும் அவன் தொண்டனாகிய நம்பி ஆரூரன் பாடிய இப்பாடல்களை பாடுபவர்களுக்குத் துன்பம் இல்லையாம்
OM THIRUCHITRAMBALM