THIRU NAAGAI KAARONAM
46.திருநாகைக் காரோணம்
THIRU NAAGAI KAARONAM
Sunderera moorthi swamigal went to thiru nagai karoonam and then sang the following decade and got this worldly things such as nine types of diamonds sandal paste the horse upper roof surugai and all other things are got
Lard Siva gave in this world itself put his grace on it and then give you whatever you want. Suntherer with forceful way prayed the following things
சுந்தர மூர்த்திச் சுவாமிகள் திருநாகைக் காரோணம் சென்று இப்பதிகம் பாடி மணிப்பூனும் நவ மணிகளும் ஆடை, சாந்தம் குதிரை சுரிகை முதலியனவும் பெற்றார்.
இறைவன் தம் அடியவர்களுக்கு இம்மையே அருள் புரிபவன் ஆதலின் இம்மைக்கு வேண்டுவன பலவற்றை அவர் பால் வற்புறுத்தி வேண்டி அருளி பெற்றது
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
Paththoor puk kiran thundu pala pathigam paadi
You have went to so many places and then sang songs and then collected begging food
நீர் பல ஊர்கள் சென்று பல பாமாலைகள் பாடி இரந்து உண்டீர்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
paavaiyarai kiri pesi padi raadi thiri veer
In that begging time those ladies who tried to put the food in to your vessel and you will talk with them the nice wards and then concealed form wandering every place
அவ்வாறு பிச்சை எடுக்கும் பொழுது பிச்சை இடவருகின்ற பாவை போலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசி கரவு கொண்டு திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
Seththaar tham ealum paninthu severi thiri veer
The dead man bones adorned all over the body and ascended on the back of the bull and then wandering every where
இறந்தவர்கள் எலும்புகளை மேலே பூண்டு கொண்டு எருதின் மேல் ஏறித்திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
selvath thai maraith thuvaith theer eanakoru naa l irangeer
In that way your things are kept in concealed form and did not melt your mind you will say that you are popper and in that way said and all these types of acts not appropriate one
அவைகளைப் போலவே உள்ள பொருளை மறைத்து வைத்து எம்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது ஏதும் இல்லை என்பீர் இவை எல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வாது
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
muththaaram elangi milir mani vayirak kovai
Now you must give me pearls garland and diamond garland and above it adorned the ruby diamond garland
இப்பொழுது நான் அணிவதற்கு முத்தாரமும் மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிர மாலையும் ஆகிய
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
avaipoona thantharuli meikkinitha naarung
All are given to me and then on the skin place pasting the fragrance filled
ஆகிய அவைகளைத் தந்து உடம்பில் பூசிக் கொள்வதற்கு இனிதாக மணம் வீசும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
kaththoori kamazhli saanthu panith tharula vendum
Kasthuri (a type of product from the stage) and sandal paste and all are without fail you must give it to me
கஸ்தூரியையும் அத்தகையதான சந்தனமும் நீர் தவிராது அளித்தருதல் வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
kadalnaagai kaaroonam mevi yirun therea
In the sea side place situated thiru nagai karoonam temple place you have willingly descended
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி
veempi nodu tneen garumpu viravi yenai theerri
You have allow me to drink the sore taste possessed the neem tree juice and the sugar cane juice in clubbed form and then
நீர் என்னை கசப்புடைய வேம்பினையும் தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து
விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
Viruththi naan umai venda thuruththi pukkang kerun theer
I am here to ask from you the day today things to conduct daily life but you have not stood before me and then entered in to the thiru thurithy temple place and then stayed there now I have seen you in this place
நான் இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க நீர் என் முன் நில்லாது திருத்துரித்தியில் புகுந்து அங்கே இருந்துவிட்டீர் இப்போது உம்மைக் கண்டேன்
பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்
paampinodu padarsadaiga lavaikatti verutti
But you tied snakes all over the body and spread over hair and then showed it to me and then giving me fear
நீர் பாம்பும் விரிந்த சடைகளுமாகிய இவைகளைக்காட்டி என்னை பயமுருத்தி
பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
Pagatta naan ottuvano pala kaalum uzhan rean
And then you have try to appear in dignified way so I do not accept your acts because with body I have wandered everywhere that long time period
பெருமை அடைந்துவிட நினைத்தார் நான் அதற்கு ஒட்டுவேனோ ஒட்டேன் ஏனெனில் உடம்பில் பலகாலும் திரிந்து விட்டேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்
sempinodu sengazhlu neer than kidankir rigazhlun
Water seambu flowers and red color senkaluneer flowers and cool water bodies all are existing place
நீர்ச் சேம்பும் செங்கழு நீரும் குளிந்த அகழியும் விளங்குகின்ற
திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
thiruvaarur pukkiruntha theevannar neerea
In the thiruvaaroor temple place entered the fire form of lard that Siva you are
திருவாரூரில் குடி புகுந்திருக்கும் தீ வண்ணராகிய நீர்
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்
Kaam pinodu neth thirangal panith tharula vending
And you are now itself the different verities of silk clothes should give it to me (kaambu and neatherm)
நீர் இப்பொழுது எனக்கு காம்பு என்னும் நேத்திரம் என்னும் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்து அருளல் வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
kadalnaagai kaaronam mevi yirun thee rea
Lard Siva you have descended in the nagai karonam temple place willingly
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
பூண்பதோர் இளஆமை பொருவிடையொன் றேறிப்
poon pathoor ela aamai poruvidai yon reri
You have adorned on your bosom the young tortoise skull and war waging bull and then ascended on its back
நீர் அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி
பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
pollaatha vedangon dellaarung kaana
And that liking form of family life is carried on and then all are seen form
விரும்புதல் இல்லற வேடத்தைப் பூண்டு எல்லாரும் காண
பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
Paan peasi padu thalaiyir pali kolkai thavireer
And then singing musical notes filled form of going everywhere and then collecting begging food
இசை பாடி இறந்தோர் தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர்
பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
Paampi nodu padar sadai meal mathi vaiththa panpeer
In the spread overhead you have adorned the snakes and moon that greatness filled form you have been existing in this world
விரிந்த சடையின் மேல் பாம்பையும் சந்திரனையும் வைத்த பெருமை உடையீர்
வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
veenpesi madavaarkai vel valaigal kondaal
While accepting begging food you have not only accept it but also cornered their bangles with nice wards are talking form of
அவ்வாறு பிச்சை ஏற்குங்கால் பிச்சையைப் கொணர் ஒழியாது வீண் சொற்களை பேசி பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளையலகளைக் கவர்வீராயின்
வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
Verparai yan mada paavai poruk kumo solleer
The rock king daughter lardess yumadevi will give consent to your acts
மலையரன் மகளாகிய உம் தேவி மனம் பொருப்பாளோ சொல்லீர்
காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதிக்
Kaan piniya mani maadam nirain tha nedu veethi
To see lovely form of that diamond studded mansions are filled place it is
காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களை உடைய
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
Kadal naagai kaaronam mevi yirun theerea
In the sea shore place existing nagai karonam temple where you are willingly descended
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
vettathoor sadai thaazha veenai vedang gaaga
You have un tied form of pig tail hanging low form and veena musical instrument lovely form raised sound
நீர் அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ விணை அழகுடையதாய் விளங்க
வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
Veethi vidai yeru veer veenadi mai yugan theer
In that appearance form you have wandering in on the bull and then you have disuse form possessed the slave army of
தெருவில் விடையை ஏறிச் செல்வீர் நீர் வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
thuttaraa yina peigal soozha nada maadi
That wild ghost forces are covered form of dancing all the time
கொடியவனவாகிய பேய்கள் சூழ நடனமாடுதலை மேற்கொண்டு
சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
sunthara raai thoo mathiyanj soodu vathu suvandea
In that lovely form that pure curved moon adorned on his heads is it acceptable one on your part
அழகுடையவராய் மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
vattavaar kuzhal madavaar thammai mayal seithal
And more over the round shaped form of hair decorated ladies are to be mesmerized by you is it acceptable act on your part
அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலை உடைய மகளிரை மயக்குவது தான் உமக்கு
மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
Maa thavamo thaa thimaiyo vaattam elaanth theera
Is it big penance or and dignified act and anyhow kept it away and all my sorrows are to be removed form
பெரிய தவமோ அல்லது பெருமையோ அவை எல்லாம் எல்லாராயினும் ஆக எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி
கட்டியெமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
Katti yemak keevathu thaan eppothu sol leer
when will you give me gold bars please tell me
எங்களுக்கு பொன் கட்டியைக் கொடுப்பது எப்போது சொல்லீர்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
kadalnaagai kaaronam mevi yiruntheerea
Lard Siva you have descended in the sea shore place nagai karonam willingly
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
mindaadi thiri thanthu verup panavea seithu
The wild cats are did and defied forms of acts are done
வன்கண்மை கொண்டு திரிந்தும் வெறுக்கப்படும் செயல்களையே செய்தும்
வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
Venae kedu pala peasi vendiyavaa thiri veer
So many bad acts are said and as per your mind wandering form you have been wandering every where
காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் உம் மனம் வேண்டியவாறே திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
thondaadi thirivenai thozhlum puthalai keerrunj
I am always doing menial service under your feet and then taken me as your slave but you did not put your grace on me how will you trap you
நீர் உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் செய்யாது உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும்
சுந்தரனே கந்தமுதல் ஆடையா பரணம்
suntharane kantha muthal aadai yaa paranam
In this nature you have left over and then fragrance filled dress and ornaments
நும் இயல்பை விடுத்து நறுமணம் ஆடை ஆபரணம்
பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
pandaara they enakku panith tharula veendum
From your treasurer take it out and then give it to me
உமது கருவூலத்திலிருந்து முதலியவற்றை கொடுத்து அருளுதல் வேண்டும்
பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நும்மைக்
Pandu thaan pira maanam onru unde umami
In that way anybody seen you is there any evidence available in this world உம்மை அவ்வாறு யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
Kandaark kung kaan parithaai kana laaki nimirn theer
So as to try to see you but you have rare form of seeing head and feet you have appeared in fire glow form
உம்மை கண்டோம் என்பார்க்கும் அடிமுடி காணுதல் அரிதாம் படி நெருப்பாகியே நீண்டு நீண்டு நிற்றீர்கள்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
Kadal naagai kaaroonam mevi yirun theerea
In that lovely sea shore place you have descended in the nagai karonam temple place
அழகரே கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்
elava vithazhi vaa yumaiyo derutheri pootham
The elava tree flower petals like red color mouth possessed lard Siva’s wife lardess parvthi and then with her ascended on the back of the bull and then demon forces
இலவம்பூப் போலும் இதழ் பொருந்திய வாயை உடைய உமையவளோடு எருதின் மேல் ஏறிக் கொண்டு பூதங்கள்
இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
Esai paada edu pichchai kechchu cham pothu
Are singing songs and then beaten the drums accordingly and then so many people are putting the begging food and in that midday time
இசையைப் பாட பலரும் இடுகின்ற பிச்சைக்கு வேள்வியை உடைய உச்சிப் பொழுதில்
பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்
Palava gampuk kuzhli tharveer pattodu saan tham
In this way you have been wandering that door steps and that way now itself you must give me the silk cloths and sandal paste
பல இல்லங்களில் புகுந்து திரிவீர் அங்ஙனமாக இப்பொழுது எனக்குப் பட்டும் சாந்தும்
பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
Panith tharula thiruk kinra parisenna padiro
You did not give to me what type of vengeance act it is
பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
Ulavu thirai kadal nanjai anramarar venda
Once deevass are requested under your feet so as to save them and the poison which is emanated from the sea waves is consumed by you
நீர் அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளை உடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு
உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
undaruli seithathu ma kiru konna thidavea
And then blessed them all and there request heard and you did not keep you in passive form and then with grace filled form
அவர்களுக்கு அருள் செய்தது அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்கவொன்னது கருணை மேலிட்டமையாலே
கலவமயில் இயலவர்கள் நடமாடுஞ் செல்வக்
Kalava mayil iyala varkal nadamaadunj selvak
The feathers are filled peacock like shadows are possessed ladies are dancing and that wealth filled place
தோகையை உடைய மயில் போலும் சாயலை உடைய மகளிர் நடனம் புரிகின்ற செல்வத்தை உடைய
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
Kadal naagai kaaroonam mevi yirun theerea
lard Siva you have descended in the sea shore place temple named nagai karoonam where you have descended willingly
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
Thoo sudaiya agal alkul thoomozhliyaal uoodal
The good dress is adorned lardess yumadevi whose broad waists and pure wards that lardess yumadevi who has got soft form of angry
நல் ஆடையை உடுத்த அகன்ற அல்குலையும் தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை
தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
tholaiyaatha kaalathoor sor paadaai vanthu
You have tried to remove it but in vain and at that time as per your instruction and then I have come over here
நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில் நீர் சொல்ல அதைக் கேட்டு வந்தவன் போல
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
thesudaiya elangaiyar kon varai yedukka adarththuth
The lighting form of Sri Langa and its king is ravana who has come over and then tried to excavate your kailai hills and then you have punished him
ஒளியை உடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க முன்னர் ஒறுத்து
திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
Thippiya kee tham paada therodu vaal koduth theer
Afterwards he sang Sama geetha and then got happy and gave him chariot and sphere and long life and then moreover
அவன் சிறந்த இசையைப் பாட அவனுக்கும் தேரும்வாளும் கொடுத்தீர் அதுவன்றி
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
Nesa mudai adiya vargal varun thaamai aruntha
And love filled disciples are not got sorrow from hungry, and then good form consumed food and stayed there
அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவு அருந்தி இருக்குமாறு
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
Nirai maraiyoor urai veezhli mizhalai thanil neththal
The bharmins are filled form of thiruveelimelalai place daily once
மறையவர் நிறைந்த திருவீழிவிழலையில் நாள்தோறும் அன்று
காசருளிச் செய்தீரின் றெனக்கருள வேண்டும்
kaasaruli seithee rin renakkarula veandum
You have given steps gold coins so as to remove hungry in the same way you must bless me
படிக்காசு அருளினீர் அதுபோல இன்று எனக்கு அருளல் வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
Kadal naagai kaaroonam mevi yirun therea
In the sea shore place situated temple place is nagai karoonam where you have descended
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர்
Maatra meel onrurai yeer vaala neer eruntheer
You have stayed in mum form and did not talk any thing
மறுமொழி ஒன்று சொல்லாது வாய் பேசாது இருக்கின்றீர்
வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
Vaazhli vippan ean aaandeer vazhli yadiyen umakku
I am your time immoral generation to generation slave under your feet and more over you are forcefully taken me under your fold and said to give me better life in this way you have taken me as your slave
யான் உமக்கு வழிவழியாக் அடியேன் அதுவன்றி நீர் வலிந்து என்னை வாழ்விப்பேன் என்று சொல்லி அடிமை கொண்டீர்
ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்
Aatra ver riru udaiyeer nal koornthee ralleer
You have much wealth and did not poverty stricken person so you did not talk any wards and seated in mum form
மிக்க செல்வம் உடையீர் வறுமை உடையீரும் அல்லீர் ஆயினும் மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய்வாளாதிருக்கின்றீர்
அணியாரூர் புகப்பெய்த அருநிதிய மதனில்
Ani yaarur pugap peitha aru nithiya mathanil
In the rare thiru vaaroor place you have possessed the collective form of wealth in heap form
அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள பொருள்குவியல்
தோற்றமிகு முக்கூற்றி லொருகூறு வேண்டுந்
Thorra migu muk kutrri loru kooru vendunth
So I wanted out of three heaps one heap should be given to me and then bless me to enjoy it
எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்கு தோன்றுகின்ற மூன்று கூற்றில் ஒரு கூறு எனக்கு அளித்து அருளுதல் வேண்டும்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
Thaa reerel orupozhlu thum adi yedukka lotten
If you do not give me and then I will not allow to move you from this place and then tightly garbed your feet
இவைகளை கொடுக்காது ஒழியின் உம்மை ஒரு பொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க வொட்டாது உன் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன்
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்
kaarranaiya kadum parima earu vathu vendum
The wind speed form moving that horse you must give me
காற்றோடு ஓத்த விரைந்து நடையினை உடைய குதிரை வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
Kadal naagai kaaroonam mevi yirun therea
Lard Siva you have in the sea shore place situated nagai karoonam temple willingly descended
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
mannulagum vinnulagum ummathea aatchi
In this land and upper land you are the only ruler so that
இந்த நில உலகிலும் தேவர் உலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது ஆதலின்
மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
malai yaraiyan por paavai siruvanaiyun th therean
In did not have clear knowledge about you and you wife lardess yumadevi and small child lard muruga I will not have clear thinking
உம்மையும் தெளிய மாட்டேன் உம் தேவியாகிய மலையரையன் மகளையும் சிறுவனாகிய முருகனையும் தெளியமாட்டேன்
எண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான்
eanniliyun peru vayiran kana pathi yon rariyaan
Without any limit eating that lard Ganapathi does not know anything except his food so that
அளவன்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி தன் உணவை அன்றி வேறு ஒன்றையும் அறியான் ஆதலின்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர்
emperumaan ethu thagavo eyampi yarul seiveer
So go near him what I will request and your whole family is in this form what do for it please tell me
அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன் உன் குடி முழுதும் இவ்வாறு இருத்தல் தக்கதோ சொல்லி அருளீர்
திண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில்
Thin nenaven udal viruththi thaareerea yaakil
If now itself firm form not given wealth and livelihood
இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
thirumeni varun thavea valaikkinrean naalai
As your body will emanate pain form I will cling you and then after wards
உன் திருமேனி வருந்தும் படி கட்டிப் பிடித்துக் கொள்வேன் பின்பு
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
Kan naraiyan kodum paadan en ruraikka venda
You should not say that he has no mannerism in that way you should not curse me
இவன் சிறிதும் கண்ணோட்டம் இல்லாதவன் கொடுமை உடையவன் என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
Kadal naagai kaaroonam mevi yirun there
In the sea shore temple place you have descended willingly
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
மறியேறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர்
Mari yeru kara thalath theer maathimai yeal udaiyeer
The stage carried on your hand that leader you are and you have highly glory form existing in this world
மான் கன்று பொருந்திய கையை உடையவரே தலைவரே நீர் பெருமையோ மிக உடையீர்
மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
Maa nithiyanth tharuva nenru vallee raai aandeer
I will give you much wealth and then won over in the court place and then you have taken me as slave
மிக்க பொருள் குவியலைத் தருவேன் என்று சொல்லி வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர்
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
Keeri pesi keezhil velur puk kiruntheer adikeal
And now you have talked you do not have any wealth in that way you are talking and then in that vengeance form you have stayed in the thiru keel vellore place
ஆனால் இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி திருக்கீழ்வேளூரில் போய்த் தங்கி இருக்கின்றீர்
கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
Kiriyum maar padu veeno thiruvaanai yundeal
Your firm commitment is given to me then will I be
உமது உறுதி மொழி எனக்கு உள்ளது என்றால் நான் உம்மால் வஞ்சிக்கப் படுவேனோ படேன்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
Pori viravu nar pugar kol por surigai meloor
The emblem studded lovely form of hand sphere is carried
இலச்சினை பொருந்திய நல்ல அழகினைக் கொண்ட பொன்னால் ஆகிய உடையவாளும்
பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
Por poovum pattigaiyum purn tharula vendum
And in the head place adorned the lotus flower form of crown and silk waist dress you must give me
தலையில் குடி கொள்ளும் பொன் தாமரைப் பூவும் பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும்
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்
kari viravu nei soru mup pothum vendum
More over the three times a day the vegetable filled food and with it mingling the ghee all are to be provided to me
அன்றி மூன்று பொழுதும் கறியும் சோறும் இவை இரண்டோடு கலக்கின்ற நெய்யும் ஆகிய இவையும் வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
Kadal naagai kaaroo nam mevi yirun therea
Lard Siva you have descended in the sea shore place situated nagai karoomam temple
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
Pan mayaththa mozhli paravai sangilik kum eanakkum
The musical notes filled wards are possessed that paravai and sangili of that two wives
இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களை உடைய பரவை சங்கிலி என்னும் இருவருக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்
parraaya peru maane marraa rai udaiyen
I am only surrender under your feet there is no one to protect me
எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
Un mayaththa umak kadiyean kurai theerkka vendum
As per mind and body surrendered as true slave form so you must remove my short falls
உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையை உடையேனாகிய என் குறையை நீக்கி அருளல் வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங்
Oli muth tham poon aaram vonn pattum poovung
The light glittering form of pearls with it made garland and smart silk cloth and flowers
ஒளியை உடைய முத்துகளால் ஆக்கி அணிகின்ற மாலையும் ஒள்ளிய பட்டாடையும் பூவும்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
Kan mayaththa kaththoori kamazhli saanthum vending
And the eye lace adorning fragrance filled sandal paste you must give me
கண் நோக்கி நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற சந்தனமும் வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென்
Kadal naagai kaaroonam mevi yirun theeren
And in the sea shore place in the nagai karoonam temple you have descended willingly
And eye place adorning the fragrance filled paste
திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே
றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன
Ranmayath thaal ani naava laaruran sonna
And in the lovely thiru navaloor place descended nambi aarroran
அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பி ஆரூரன்
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.
Arun thamizhigal evai vallaar amar ulagaal pavareea
This rare Tamil poems those who are sung it and then they will ultimately place in the deevaa’s world
அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள் உலகினை ஆள்வார்கள்
OW THIRU CHITRAM BALAM