OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU AAMATHOOR

ganesheit May 7, 2019

45. திருஆமாத்தூர்

THIRU AAMATHOOR

While nambi aarrorer who has separated his wife from the Thiruvotiyoor who has lost his both eye sight. And then while visited to kangipuram temple he got his mother side left eye and then he prayed in so many temples on the way to thiruvaroor he sang the following songs in the thiru aamathoor temple place

This decade explains sunderer’s abundant love to wards lard Siva

நம்பி ஆரூரர் சங்கிலியாரைப் பிரிந்து திருவொற்றியூரை விட்டு நீங்கியதால் இழந்த கண்களில் இடக்கண்களைக் காஞ்சியில் பெற்று பல தலங்களையும் வணங்கிக் கொண்டு திருவாரூருக்குப் போகும் வழியில் திருஆமாத்தூர் இறைவனைத் தொழுது பாடி அருளியது இத்திருப்பதிகம்.

  இத்திருப்பதிகம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவன் பால் தமக்குள்ள அன்பின் மிகுதியைப் புலப்படுத்தும் வகையில் பாடியது

காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய்

Kaan danan kaan danan kaarigai yaal than karuth thanaai

The disciples are seeing lard Siva as lardess parvathi’s husband only

அடியேன் எம் தலைவனை உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன்


ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் தூரெம் அடிகட்காட்

aandanan aamaath thoor em adikatkaat

I am served under his feet slavery service so many yugas and those lard is descended in the thiru aamathoor temple place

அவருக்கு அடிமையைப் பல காலும் செய்தேன் திருவாமத்தூரில் எழுந்தருளி உள்ள எம் தலைவனுக்கு


பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள்

poondanan poiyanru solluvan kenmingal

I am submitted under his feet as slave it is not false wards and I will tell you some more and you may hear it

அவருக்கு அடிமை பூண்டேன் இவை பொய்யல்ல இன்னும் சொல்வேன் கேளுங்கள்


மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே.

meendanan meendanan vethavi thallaa thavar katkea

Those who are not following the veetha form of life and I have gone away from them

வேத நெறியைப் போற்றுவோர் அல்லாதவர்களை நீங்கினேன்

பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான்

paaduvan paarp pathi thannadi patrinaan

I will think over lard Siva’s feet and sing sings

அவன் திருவடியைக் கருதிப் பாடுவேன்


தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர

theeduvan thinnenap patri seri thara

To cling it firmly and to embrace it I will searching it

உறுதியாகப் பற்றி அணைத்தற்குத் தேடுவேன்


ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளைக்

aaduvan aamath thoorem adigalai

Because of mingling with lard Siva I have got enjoyment and dance for it in that mentality lard Siva who is descended thiru amathoor temple place I pray under his feet and that lard is world leader

யான் இந்த உலகத்தின் தலைவனாகிய திருவாமத்தூரில் எழுந்தருளி உள்ள எம் இறைவனை கூடிய களிப்பினால் ஆடுவேன்

கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே.

kooduvan kooduvan kutrama tharren kurip podea

And searched and seen him as my concept form and the sins are eliminated form I will mingle with him

தேடிக் கண்டு என் கருத்தின் வண்ணம் குற்றம் நீங்கிக் கூடுவேன்

காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப்
kaain thavan kaain thavan kannazha laal anru kaamanai

Once lard Siva burnt down with his fore head eye fire that lust crating god named Kaman

அன்று காமனைத் தனது நெற்றிக் கண்ணில் உள்ள நெருப்பால் எரித்தவன்

பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி னாலன்று கூற்றத்தை

paainthavan paainthavan paathaththi naal anru kootrath thai

Once lard Siva who has leap forward and kicked the death god ema and killed him

அன்று கூற்றுவன் மேல் காலால் பாய்ந்து அவனை அழித்தவன்


ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் தூரெம் மடிகளார்

aaynthavan aaynthavan aamanth thoor em madiga laar

Lard Siva who has elaborately analyzed, who has descended in the thiruaamathoor temple place

எல்லாவற்றையும் நன்கு உணர்ந்தவன் திருவாமத்தூரில் எழுந்தருளி உள்ள எம் தலைவனுக்கு


ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே.

Eaayn thavan eaayn thavan eampi raattiyai paagamea

Lardess parvathi who is embraced in left part of his body

எம் பெருமாட்டியை  ஒரு பாகத்தில் ஆரப் பொருந்தியவன்

ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்

oornthanan oornthanan ullath thul le ninra oneporul

I have in my mind descended in light form which is analyzed and understood it

யான் என் உள்ளத்துள்ளே நிலை பெற்றுள்ள ஒளி உடைய பொருளை ஆராய்ந்தறிந்தேன்


சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்
sernthanan sernthanan senru thiru votri yur pukku

In that light of knowledge form and moved away and entered in the thiru votriyoor place

அந்த அறிவின் வழியே சென்று அதனை தலைப்பட்டேன் இனி வெளியே திருவொற்றியூரில் புகுந்து

சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை
saarnthanan saarnthanan sangili menrol thada mulai

Where my wife house place gone and then mingled with her soft skin

சங்கில் என்பாலது மெல்லிய தோலையும் பெரிய தனங்களையும் பொருந்தினேன்

ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் தூரையன் அருளதே.

aarnthanan aarnthanan aamath thooraiyan arulathea

With that grace of thiruvamathoor temple lard Siva that two types of happiness I have enjoyed

இத் திருவாற்றாலும் இருவகை இன்பத்தையும் நிரம்ப நுகர்ந்தேன் இது திருவாமாத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனது திரு அருள்

வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச்

venravan venravan velviyil vinnavar thangalai

In thakken conducted yaga fire all the devas are defeated and won over them

தக்கன் வேள்வியில் எல்லாத் தேவர்களையும் வென்றவன்


சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெருவிடை

senravan senravan silpalik kenru theru vidai

To collect some food he went in the bare foot form in to every door steps

சிலவாகிய பிச்சைக் கென்று தெருவில் சென்றவன்


நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால்

ninravan ninravan neethi nirainthavar thangalpaal

those who are follow the ethical way of life lard Siva permantly stayed in their mind

நீதியில் சிறிதும் குறையாதவரிடத்தில் நிலைபெற்று நின்றவன்


அன்றவன் அன்றவன் செய்யருள் ஆமாத்தூர் ஐயனே.

anravan anravan seiyarul aamaththoor aiyaneea

Those who are approached him he will instantly put his grace on them that form of lard is descended in the thiru aamathoor temple place

தன்னை அடைந்தார்க்கு அடைந்த அன்றே அருள் செய்தல் ஆகின்றவன் திருமாத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற இறைவன்

காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய்

kaandavan kaandavan kaandar kariya kadavulaai

He is easily seen by his disciples

தன் அடியவர்க்கு எளிதில் காணப்படுபவன்


நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
neendavan neendavan naaranan naanmugan nedavea

To search feet and head by thirumal and bharma he got his extended form and so that they are unable to see him

திருமாலும் பிரம்மனும் தேட அவர்களால் காணுதற்கு அரிய கடவுளாய் நீண்டவன்

ஆண்டவன் ஆண்டவன் ஆமாத் தூரையும் எனையுமாட்

aandavan aandavan aamaath thooraiyum eanaiyum aat

In the aamathoor temple place lard Siva taken me as his slave and ruled me

ஆமாத்தூர் உறையும் ஆண்டவர் என்னையும் ஆளாக வைத்து ஆண்டவன்


பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே.

poondavan poondavan maarpir purinool puralavea

He has on his bosom thee knotted thread in the rolling down form

மார்பினில் முப்புரி நூலைப் புரளப் பூண்டவன்

எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக்

eannavan eannavan eaazhlula kath thuyir thangatku

In the seven world living beings he is concept form
ஏழ் உலகத்திலும் உள்ள உயிர்கட்குக் கருத்தாய் உள்ளவன்

கண்ணவன் கண்ணவன் காண்டுமென் பாரவர் தங்கட்குப்

kannavan kannavan kaandumen paaravar thangatku

Those who are love form try to see him he is visual eye sight form

தன்னை காண்போம் என்று அன்பால் முயல்கின்றவர்கட்குக் கண்ணாய் உள்ளவன்


பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன்

pennavan pennavan meniyoor paagamaai pijgnagan

He has adorned on his left part of his body his wife lardess parvathi and decorated form of head he has possessed

திருமேனி ஒரு பாகம் பெண்ணாகியவன் பொருந்திய தலைக்கோலத்தை உடையவன்


அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூரெம் அடிகளே.

annavan annavan aamath thoorem adigalea

In that way he is easily attainable form who is descended in the thiruaamathoor temple place

அடையத்தக்கவன் திருமாத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் தலைவன்

பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் தென்னைப்போ கவிடா

ponnavan ponnavan ponnaith than thennai po kavi daa

He is gold form to his disciples and he gave me gold and then permanently made me to serve under his feet

அடியவர்க்குப் பொன்போல்பவனாய் உள்ளவன் பொன்னைக் கொடுத்து என்னைத் தன்னிடத்தில் இருந்தும் நீங்கவிடாது பிணித்துக் கொண்ட


மின்னவன் மின்னவன் வேதத்தி னுட்பொரு ளாகிய

minnavan minnavan veethath thi nut poru laakiya

He is light form and veetha inner meaning form existing in this world

ஒளி வடிவினன் வேதத்தின் உட்பொருளாய் உள்ள அத்தன்மையை உடையவன்


அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்

annavan annavan aamaaththoor aiyanai aar vaththaal

He is right owner to me that form he has descended in the thiru aamathoor temple place

எனக்கு உரிமை உடையவன் திருமாத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற இறைவன்

என்னவன் என்னவன் என்மனத் தின்புற் றிருப்பனே.

ennavan ennavan enmanath thinput rirup panea

And that form of lard Siva I will think over in my mind and happily seated here forever

அவனை யான் என் மனத்தில் அன்பால் நினைத்து  இன்பமுற்று இருப்பேன்

தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும்

theduvan theduvan semmalar paathangal naadorum

I will daily search my lard Siva’s feet

எம் தலைவனது திருவடிகளை நாள்தோறும் தேடுவேன்


நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்

naaduvan naaduvan naapikku mele yor naal viral

I will search him in the above yombical card four finger above existing heart place

அவனை உந்திக்கு மேல் நால்விரல் அளவில் உள்ள இருதயத்தில் நினைப்பேன்


மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே

maaduvan vankai pidiththu magizhinthule

If he has gone away I will cling his hands and again made him to enter in my heart

வெளியில் சென்றால் வலிய கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்ப்பேன்


ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளே.

aaduvan aaduvan aamaath thoor em adigalea

I will dace before thiru amathoor lard Siva as he liked form

யான் திருமாத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற எம் தலைவனுக்கு ஏற்புடையன ஆகும் படி கூத்துகளை ஆடுவேன்

உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துள்பொருள்

utranan utravar thammai o zhlinthulla thul porul

I have kept away my relatives so that in my mind place I have attained lard Siva

உற்றாரை நீங்கி உள்ளத்தில் உள்ள பொருளை அடைந்தேன்


பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல

patrinan patrinan pangaya sevadi ke sella

The red lotus flower form of feet I have got guide form and garbed it

தாமரை மலர் போலும் செவ்விய திருவடியிடத்தே அவற்றைத் துணையாகப் பற்றினேன்


அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயானடி யார்கட்காட்

arranan arranan aamathoor meyaanadi yaar kat kaat

So that I have relieved from the pain in that free form I have prayed lard Siva in the thiruaamathoor temple place

ஆதனால் துன்பங்கள் நிங்கப் பெற்றேன் திருமாத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற இறைவன்

பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்பிற வாமைக்கே.

perranan perranan peyarth thum peyarth thum pira vaamaikkea

So as to not to get rebirth I am gone in the form of disciple’s disciple in that boon I have got

யான் மீண்டும் மீண்டும் பிறவாமை பொருட்டு அவன் அடியார்க்கு அடியனாகும் பேற்றை ப் பெற்றேன்

ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை

aiyanai aththanai aaludai aamath thoor annalai

He is leader to all and father to all and ever permanent form existing in this world and that lard is ruling in the thiru aamathoor temple place

யாவர்க்கும் தலைவனும் தந்தையும் என்றும் உள்ளவனும் திருவாமத்தூர் ஆளுகின்ற இறைவனை


மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை

meiyanai meiyark ku meip poru laana vima lanai

Those who are true mind he is experience matter form existing in this world that clean person

மெய்மையான உள்ளம் உடையவர்க்கு அனுபவப் பொருளால் விளங்குகின்ற தூயவனும்


மையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன்சொல்

maiyanai maiyani kandanai van rondan  yooran sol

That sacred grace cloud form and dark paste like throat possessed lard Siva

திரு அருள் மேகமானவனை மைபோலும் அழகிய கண்டத்தை உடையவனும் வன் தொண்டன் ஆகிய நம்பி ஆரூரன் பாடிய பாடல்கள்


பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே.

Poi yonru minri pulampuvaar porkazhal searvarea

Those dispels who are without any vengence mind and sang the above songs they will attain lard Siva’s golden feet

வஞ்சனை சிறிதும் இன்றிப் பாடுகின்றவர் அப்பெருமானது பொன்போலும் திருவடிகளை அடைவர்

OM THIRU CHITRAM BALAM

May 7, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: