Mudipathu gangai
44.முடிப்பது கங்கை
Mudipathu gangai
Sunderer went with Searamaan peruman and then prayed lard Siva seated in eyi yaaru place and after wards prayed so many temple places and then crossed the kongu kingdom and then entered in the hilly state capital city named kodunga noor which is searman peruman state and with him and then prayed in thiru anjai kalm lard Siva and then blessed form of sang this decade
In this decade lard Siva’s mannerism is enquired form sang it
சேரர் பெருமானுடன் சுந்தரர் ஐயாற்று இறைவரைத் தொழுது பல தலங்களையும் வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டைக் கடந்து மலை நாடு சென்று சேரமான் பெருமானது தலைநகரமாகிய கொடுங்கோனுரை அடைந்து அவருடன் திருவஞ்சைக் களத்து இறைவரை வணங்கிப் பாடி அருளியது இத்திருப்பதிகம்
இது சிவபிரான் தன்மையை ஆராயும் முறையில் அருளிச் செய்தது
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்
Mudip pathu kangai yun thingaluj setra thu moo veyil
lard Siva on his hair adorned Ganges and moon and then destroyed three castles
எம்பெருமான் தலையில் சூடுவது கங்கையும் சந்திரனையும் அழித்தது மூன்று மதில்களை
நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்
Nodip pathu maathirai neere zhak kanai noori naar
lard Siva who has destroyed with in a second with fire arrow shot and converted it in to dust
அவற்றைக் கை நொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார்
கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற்
Kadip pathu merumen ranju van riruk kai kalaar
after bit by the snake the poison will enter in to head in that way I will always got afraid of
பாம்பு கடித்தவுடன் நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்பொழுதும் அஞ்சுவேன்
பிடிப்பது பாம்பன்றி இல்லை யோவெம் பிரானுக்கே.
Pidip pathu paampanri illai yo vem praanukkea
lard Siva who has corner the snakes with his hand and there is no other commodity available in this world
தனது வலிய வலிமை மிக்க திருக்கையால் பிடிப்பது பாம்பு இவை தவிர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ
தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி
Thoor anri aadarang killai yo suda lai podi
to lard Siva dancing ground is burial place only and there is no other place available to him and then the burial ground ashes are paste form adorned all over the body
எம்பெருமானுக்கு ஆடுகின்ற அரங்கு காடன்றி வேறு இல்லையோ சாந்து சுடலைப் பொடி
நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள்
Neer anri saantha mar rilai yo ema vaan magal
that ashes only available to him is there no other fragrance available to him and then the hill lady who is the daughter of mountain king
ஆகிய சாம்பல் அன்றி வேறு இல்லையோ மலை அரையன் மகள்
கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள்
kooranrik kuruva thillai yo kollai silai vel
that lady has taken a part of his body is there any other thing available to him and then the hilly place
தனது திருமேனியில் ஒரு கூறார் நிற்பது வேறு இல்லையோ ஏறுவது முல்லை நிலத்தில்
ளேறன்றி ஏறுவ தில்லை யோவெம் பிரானுக்கே.
leranri earuva thillai yo vem piranuk kea
wandering the bull which is his moving vehicle and is there any other thing available to him
உள்ள சிறுமை உடைய வெள்ளை எருதன்றி வேறு இல்லையோ
தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை
thattenunth thattenunth thondar gall thadu maatra thai
and the wavering mind of the disciples and all the objects that settle down in this land ultimately
மன அலையையும் எல்லாப் பொருட்கும் நிலைக்களமாகிய பெரிய நிலத்தின் கண்
ஒட்டெனும் ஒட்டெனும் மாநி லத்துயிர் கோறலைச்
ottenum ottenum maani lath thuyir koralai
and then in this world all the living beings are at the end of its life which is killed and then given heavenly life to them but the ordinary disciples who are thinking it as false one
உள்ள உயிர்களைக் கொல்லுதலையும் நன்நெறிக்குத் தடை என்று உணர்ந்த அடியவர்களே
சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை
sittan thiri puranj sutta thevargal thevanai
lard Siva who is highly regarded person and appropriate judgment giver and who is lard Siva
மேலானவனும் திரிபுரம் எரித்த தேவதேவனும் ஆகிய எம்பெருமானை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.
vettena pesan min thondar kaalem piraa naiyea
do not talk in defied and enmity form
வெறுத்துப் பேச வேண்டாம்
நரிதலை க வ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள்
Nari thalai kavva nin rori koop pida nal lirul
my dear lard Siva’s disciples and the foxes are dead man’s skull are pulling out and then raised the fear some sounds and in that utter darkness filled place of burial ground
அடியவர்களே நரிகள் இறத்தோரது தலைகளைக் இழுக்க நரிகள் கூக்குரல் இட செறிந்த இருட்டுச் சுடுகாட்டில்
எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச்
Eari thalai pei pudai soozha aarirul kaat tidai
in that fire burning place and ghost forces are encircled form in that rare burial ground
நெருப்பு எரிகின்ற இடத்தில் பேய்கள் புடைசூழ்ந்திருக்க அரிய இருளை உடைய காட்டில்
சிரிதலை மாலை சடைக்க ணிந்தவெஞ் செல்வனைப்
Siri thalai maalai sadaik ka nintha venj selvanai
the laughing form of the skull garland is adorned on his neck who is my wealth filled lard Siva
சிரிப்பது போலும் தலை மாலையைச் சடையின்கண் அணிந்த எம்செல்வனாகிய எம்பெருமானை
பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.
pirithalai pesan min thondar kaa lem piraanaiyea
that un towards wards are not to be talked
விட்டு நீங்குதற்குரிய சொற்களைப் பேசன்மின்
வேயன தோளி மலைம களைவி ரும்பிய
veeyana tholi malai ma kalai vi rum piya
the bamboo like shoulders are possessed the hill lady lardess yumathevi who is liked by
மூங்கில் போலும் தோள்களை உடையவளாகிய மலைமகளை விரும்புகின்ற
மாயமில் மாமலை நாட னாகிய மாண்பனை
maayamil maa malai naada naakiya maan panai
lard Siva who has not possessed any types of vengeance in that kaiyilai hill place seated that balanced mind possessed lard Siva
வஞ்சனை இல்லாத பெரிய மலையிடத்தவனாகிய மாட்சியையுடைய எம்பெருமானை
ஆயன சொல்லிநின் றார்கள் அல்லல் அறுக்கிலும்
aayana solli nin raar gal allal aruk kilum
those disciples who are praised lard Siva with whatever wards they know and stood there those disciples sorrows are seen and then removed it and on seeing it and then some people
தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்ரவர்களது துன்பங்களைக் களைதலைக் கண்டும் அவனைச் சிலர்
பேயனே பித்தனே என்ப ராலெம் பிரானையே.
peeyanee piththanee ean pa raa ealaam piranaiyea
Cursed him that he is dancing with ghosts forces and lunatic person and in this way cursed him
பேய் உடன் ஆடுபவன் பித்துக் கொண்டவன் என்று இகழ்வர் எம்பெருமானை அவர்கள் அங்ஙனம் இகழுமாறு இருத்தல் என்
இறைவனென் றெம்பெரு மானை வானவ ரேத்தப்போய்த்
Erai vanen rem peru maanai vaanava r eththa pooi
and lard Siva who is deva’s deeva in that way known form and then pray him under his feet
தேவர் எம்பெருமானை இறைவன் என்று அறிந்து துதிக்கச் சென்று
துறையொன்றித் தூமல ரிட்ட டியிணை போற்றுவார்
Thurai yonri thoo mala ritta dyi nai potru vaar
in that good ethical life with it mingled form and today bloomed flowers are carried and then sprayed under his feet and praised lard Siva’s feet
நன்னெறியில் பொருந்தி தூய மலர்களைச் சொரிந்த அவன் அடியினைப் போற்றுவார்
மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம்
Marai yanrip paaduva thillai yo malku vaa nilam
in that way singing songs are only the veethass and nothing else
அங்ஙனம் அவனுக்குப் பாடும் பாட்டு மறைகளன்றி வேறு ஒன்றும் இல்லையோ
பிறையன்றிச் சூடுவ தில்லை யோவெம் பிரானுக்கே.
Pirai yanri sooduva thillai yo vem piraa nukkea
and he adorned the moving moon on his head is there any other ornament available to him
ஆடும் கண்ணி வானத்திற் செல்லும் இளம்பிறையன்றி வேறு ஒன்றும் இல்லையோ
தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும்
Thaarun than konrai yung koovi lan thani math thamum
to lard siva the neck garlands are the konrai flowers and vilvam leaves and lowly hanging low graded form of yoomathai flowers
எம்பெருமானுக்கு மாலையும் தண்ணிய கொன்றைப் பூ கூவிளையிலை மிகத் தாழ்ந்த ஊமத்தம் பூ என்பன
ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும்
aarum alavari yaatha aathi yum anthamum
the limit is not known by anybody else that abundant form of love showered on his disciples without any begging and end form
அளவும் யாராலும் அறியப்படாத முதலும் முடிவும் அன்பு செய்பவர்
ஊருமொன் றில்லை உலகெ லாமுகப் பார்தொழப்
Uoorum one rillai ulage laam ugap paar thozhap
there is no single place to pray him and he is available in the whole world from sacred dust to mountain forms and in all animates and inanimate form
சென்று தொழுதற்கு ஊரும் ஒன்றாய் இல்லை உலகம் முழுவதுமாம்
பேருமோ ராயிரம் என்ப ராலெம் பிரானுக்கே.
Peru mo raayiram enparaa lem piraa nukkea
there is no single ward to say his name and he has thousands and thousands of names and others are laughed at him, is he available in that form tell me the reason for it
சொல்வதற்கு பேரும் ஒன்றல்ல ஓர் ஆயிரம் என்று சொல்ல யாவரும் நகைப்பர் அவர் அவ்வாறு இருத்தல் என்னோ
அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்
Ari yodu poo misai yaanum aathiyum arikilaar
the lard Siva’s feet and head is not known by thirumal and bharma then who is available in this world to know it
திருமாலும் பூ மேல் இருப்பவனாகிய பிரமனும் அடியும் முடியும் அறியமாட்டார் பிறர் யார் அறிவார்
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
Vari tharu paam podu vanni thingalum math thamum
with sand holes place living snakes and vanni leaves and yoomathai flowers and moon and all are
புற்றுகளை உடைய பாம்போடு வன்னி ஊமத்தை பிறை என்பவைகளை
புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி
Puri tharu pun sadai vaith tha em puni thar kini
in the well tied crown form of hair on it all are adorned that lard Siva who is in pure form
புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை
எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே.
Eri yanri angai kon rillai yo vem piranuk kaea
and that lard Siva who has carried fire on his hands is there any other thing available to him to carry in his hands
அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ
கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால்
kariya mana chaman kaadi yaadu kazhluk kalaal
the gruel is consuming the dark color samanas
எம்பெருமானுக்கு கரிய மனத்தை உடைய கஞ்சியைக் குடிக்கின்ற கழுமரங்கள் போல தோன்றுகின்ற சமணர்களால்
எரிய வசவுணுந் தன்மை யோஇம வான்மகள்
eariya vasayu ununth thanmai yo ema vaan magal
who are the mind burning form of cursing lard Siva but lard Siva’s nature is
மனம் எரிந்து இகழப்படுதல் தான் இயல்போ மலையரையன் மகளாகிய
பெரிய மனந்தடு மாற வேண்டிப்பெம் மான்மதக்
periya manath thadu maara veendi pem maan matha
the hill king daughter lardess Yumadevi and her mind is shattered form
தன் தேவியின் பெருமை பொருந்திய மனம் கலங்க வேண்டி அவன்
கரியின் உரியல்ல தில்லை யோவெம் பிரானுக்கே.
kariyin uriyalla thillai yo vem piranukkea
the mad elephant pealed skin is adorned as upper dress is there any other thing available him as dress
மதத்தை உடைய யானையினின்றும் உரித்த தோல் அல்லாது வேறு போர்வை அவருக்கு இல்லையோ
காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக் கண்டத்
Kaai sina maalvidai maanik kath theng karai kanda
my dear disciples the ferocious angry filled the big bull on it ascended and ruby diamond form to us and dark color throat possessed lard Siva
அடியவர்களே காய்கின்ற(கோபப்படுகின்ற) சினத்தை உடைய பெரிய எருதை ஏறுகின்ற எங்கள் மாணிக்கம் போல்பவனும் கறுப்பு நிறத்தை உடைய கண்டத்தை உடைய
தீசனை ஊரனெட் டோ டிரண்டுவி ரும்பிய
Thee sanai uoora det to diran du vi rum piya
who is lard to me and his last grade disciple I am and I have sung the above ten poems
இறைவனும் ஆகிய பெருமானை அவன் அடித் தொண்டனும் மிக புகழை உடைய இப்பத்துபாடல்களை
ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்னடித் தொண்டன்றான்
Aa yina seerp pagai gnaaniya pannadi thondan raan
the gaana form of father to vanappagai and who has willingly sung the above poems
வனப்பகைக்கு ஞானத் தந்தையும் ஆகிய நம்பி ஆரூரன் விரும்பிப் பாடியனவும்
ஏசின பேசுமின் தொண்டர் காளெம் பிரானையே.
Eaa sina pesu min thondar kaal em piraanaiyea
as if the cursed form of sang the above poems you may with good faith sang it
ஏசிப்பாடியனவும் ஆகிய இப்பாடல்கள் எம்பெருமானைப் பாடுமின்
OM THIRU CHITRAM BALAM