THIRUVAARUR
37.திருவாரூர்
THIRUVAARUR
Om thiru chitrambalam
Sunderer has second time married yet another lady named sangili nachiyaar. He promised her that he did not leave her alone in thiru votriyoor. But he broke his promise. So he lost his two eye sight. After wards while praying in kanchipuram, he got his left eye sight (that is yumadevi part of eye sight). After wards he got removed his decease in thiru thurithi temple place, and then he prayed in so many temple places and then ultimately entered in to thiruvaroor temple. At first the pravaiyul mandala lard Siva is prayed with the song starting with thoovaya, and then afterwards to pray in the main deity place named moolater, he entered at the late night time. After that prayer he saw his old disciples and all are come towards him, at that time sang the kai killai (one sided love) form of internal feeling filled songs
This decade describes that a lady who got love towards lard Siva and then sends so many diplomats such as birds bees send towards lard Siva and try to inform her love towards him
சங்கிலி நாச்சியாரை மணந்த சுந்தரர் திருவொற்றியூரை நீங்கியதால் இழந்த கண்களில் காஞ்சியில் ஒரு கண்ணைப் பெற்று திருத்துருத்தியில் பிணி நீங்கப் பெற்று பல தலங்களை வணங்கிக் கொண்டு திருவாரூர் அடைந்தார். முதலில் பரவையுண் மண்டளிப் பெருமானை தூவாயா என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித் தொழுதார் பின்னர் திருமூலட்டானரை வழிபட அர்த்த யாம வழிபாட்டிற்குச் செல்லும் பொழுது அன்பர்கள் எதிரணையக் கண்டு அயலார் வினவுவது போல கைக்கிளை அகப்பொருள் துறையமையப் பாடியருளியது இத்திருப்பதிகம்.
இத்திருப்பதிகம் திருவாரூர் பெருமானிடத்துக் காதல் கொண்டாள் ஒருத்தி அக்காதல் மிகுதியால் பறவைகளையும் வண்டுகளையும் நோக்கிச் சில செய்திகள் கூறும் கூற்றாக அருளிச் செய்தது.
குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா
Kuruku paa ya kozhung karumpugal nerinthasaa
The birds you are flying in the wandering form of on the sugar cane fields where the friction of sugar cane from it emanated sugar juice abundantly
குருவிகளே நீங்கள் பறந்து உலாவுவதனால் செழுமையான கரும்புகள் உராய்ந்து பெருகிய சாறு
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப்
Raruku paa yum vayal anthanaa roorarai
And the flowing in the nearby fields that lovely cool place is thiruvaaroor lard Siva
அருகாகச் சென்று பாய்கின்ற வயல்களை உடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்
parugumaa rum paninth theththu maa run ninai
And in mind got astonishment form and that direction turned and prayed lard Siva in that way think over my mind
யான் உள்ளத்தால் திளைக்கின்றவாறும் திசைநோக்கி வணங்கித் துதிக்கின்றவாறும் நினைந்து நெஞ்சு
துருகுமா றும் மிவை உணர்த்த வல் லீர்களே.
thurukumaa rum mivai unrththa val leer kalea
I am melting down here that matter may be informed to him
உருகுகின்றவாறும் ஆகிய இவைகளை என் பொருட்டு அவர்களுக்குத் தெரிவிக்க வல்லீரோ
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
Parakku men killai kaal paadum em poovai kaal
The flying form of parrot and singing mannerism filled naganavaai birds
பறக்கும் இயல்புடைய எங்கள் கிளிகளே பாடும் இயல்புடைய எங்கள் நாகணவாய் புட்களே
அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை
arakkan en nath thagum adigal aa rurarai
அறத்திற்குக் கண் என்று சொல்லத்தக்க தலைவராகிய திருவாரூர் இறைவரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
Marakka kil laa maiyum valaigal nil laa maiyum
I am not in a position to forget you on a wink time so that my body got leaned form and then my bangles are worn out from my hands and then fallen down in to the land
யான் ஒரு பொழுதும் மறக்க இயலாமையையும் அது காரணமாக எனது கைவளையங்கள் நில்லாது கழன்று வீழ்தலையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.
Urakka mil laa maiyum unarththa val leerkalea
My eyes are not got sleep that mater on my behalf my dear birds you may inform it to lard Siva
கண்கள் உறங்குதல் இல்லாமையும் எம்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ
சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்
soozhumo di chulan ruzhalum ven naarai kaal
In and around places are running fast that white color lark birds
சுற்றிலும் ஓடிச் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே
ஆளும்அம் பொற்கழல் அடிகளா ரூரர்க்கு
aalumam por kazhal adika laa roorark ku
The disciples are taken as slaves and ruled them that golden form of feet possessed lard Siva you have descended in the Thiruvaaroor temple place
அடியவர்களை ஆளுகின்ற அழகிய பொன் போலும் திருவடிகளை உடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு
வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக்
vaazhumaa rum valai gazhalu maa rum mena
I am in this body ever permanent form living and my bangles are nor worn out
நான் இந்த உடம்பில் நீங்காது வாழுமாறும் என் வளையல்கள் சுழலுமாறும் மாறாத முறையும்
கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
koozhuma rum mivai unarththa val leerkalea
All the activities are informed it lard Siva will you help me in this mission
என்னிடத்துமாறி நிகழுமாறும் ஆகிய இவைகளை என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ
சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள்
sakkiravaa lath thilam pedai kaal seval kaal
The bird’s specie named sakiravagam from it emanated young birds
சக்கிரவாகம் என்னும் இனத்து இளைய பேடைகளே சேவல்களே
அக்கிரமங் கள்செயும் அடிகளா ரூரர்க்கு
Akkira ma gal seyum adigala roorark ku
The untoward acts are done by the lard Siva seated in thiru varoor temple place
முறையல்லாதவற்றைச் செய்கின்ற தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு
வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்
Vakkira mil laa maiyum valaikal nil laa maiyum
I am not in a position turn away my love towards lard Siva so that my bangles are gone away from the hands
யான் மனம் மாறுபடாமையையும் என் வளையல்கள் நில்லாது கழலுதலையும்
உக்கிரமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே
Ukkira mil laa maiyum unarththa val leerkalea
And on the part of lard Siva the reciprocal act is not emanated and that matter may be informed to him
அவர் மிதுபுலவி தோன்றாமையையும் என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ
இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள்
Elai kol so laith thalai erukkum ven naarai kaal
The leaves are filled the plantation place living young lark birds
இலைகளைக் கொண்ட சோலையிடத்து இருக்கின்ற வெள்ளிய நாரைகளே
அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்
Alaikol soo lap padai adigal aa roorarkku
The killing instinct filled solar force carried on hand that leader lard Siva seated in thiruvaroor temple place
அழித்தல் தொழிலைக் கொண்ட சூலப்படையை உடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு
கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும்
kalaigal sor kinrathung kanavalai kazhan rathum
My bony tied dress is go away from it place and the valuable bangles are gone away from its place
எனது உடை நெகிழ்கின்றதையும் உயர்ந்த வளையல்கள் கழன்று ஒழிந்ததையும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.
mulaigal peer kondathum mozhliya val leer galea
And in breast place love emanating decease is affected (pasalai) that matter may be inform to lard Siva by you
கொங்கைகள் பசலை அடைந்ததையும் என் பொருட்டு சொல்ல வல்லீர்களோ
வண்டுகாள் கொண்டல் காள் வார்மணற் குருகுகாள்
Vandu gaal kondal kaal vaar manar kuruku kaal
The bees the clouds and small sand place seated the small birds
வண்டுகளே மேகங்களே நுண்ணிய மணல்மேல் இருக்கின்ற குருகுகளே
அண்டவா ணர்தொழும் அடிகளா ரூரரைக்
andavaa nar thozhum adigal aa roorarai
In the upper world place living devas are come down in thiuvaroor and then pray lard Siva here
வானத்தில் வாழ்வோராகிய தேவர்கள் வணங்குகின்ற தலைவராகிய திருவாரூர் இறைவரை
கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய்
kandavaa run gaama theek kanan rerinthu mei
Once I have seen you and then lust fire emanated from my mind and then it is burning my body
ஒரு நாள் யான் கண்டவாறும் அன்று முதல் காமத்தீ கனன்று எரிந்து என் உடம்பை
உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
Unda vaa rum mivai unarththa val leer galea
That lust flames are consuming me that matter on my behalf you may inform him
உண்டுவிட்டவாறும் ஆகிய இவைகளை என் பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ
தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள்
thenalang konda theen vandugaal kondal kaal
The taste is enjoyed by honey bees and other insects and clouds
தேனினது இன்பத்தை நுகர்ந்த தேன்களே வண்டுகளே மேகங்களே
ஆனலங் கொண்டவெம் மடிகளா ரூரர்க்குப்
aanalang konda vem madigalaa roorark ku
Lard Siva who has daily taking bath with cow milk happily that my thiruvaroor lard Siva
பசுவினது பயனாகிய பால் முதலியவற்றை உவந்து கொண்ட எம் தலைவராகிய திருவாருர் இறைவருக்கு
பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன்
Paa nalang kondavem panai mulai payanthu pon
In that way the milk emanating in my breast place the golden color lust emanating decease
பாலாகிய நற்பொருளைக் கொண்ட எனது பருத்த கொங்கைகள் பசப்பெய்தி பொன்போலும் பசலை என் மேனியினது
ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே.
Yoon alang kondathum unrththa val leergalea
My whole body flesh is worn out that matter may be inform to him
அழகை எல்லாம் கொள்ளை கொண்டமையை என் பொருட்டுத் தெரிவிக்கவும் வல்லீர்களோ
சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள்
sutramur runj suzhan ruzhalum ven naarai kaal
In the surrounding place encircling the white color lark birds
சுற்றியுள்ள இடம் முழுவதும் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே
அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூரர்க்குப்
Atra mutrap pagarn thadigal aa roorarkku
Lard Siva who is leader to all who is seated in thiruvaarroor place
யாவர்க்கும் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு
பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும்
Patru mat rinmaiyum paadu mat rinmaiyum
You may inform lard Siva that he is the only creeper pole to save me and there is no other protection available to me that matter may be in form to lard Siva
எனது துன்பத்தை முடியச் சொல்லி எனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையையும்
உற்றுமற் றின்மையும் உணர்த்த வல்லீர்களே.
Utru mat rinmaiyum unarth tha valleergale
I do not have any other relative to protect me that matter on my behalf you may inform him
எனக்கு உறவு ஆவார் வேறு இன்மையையும் என் பொருட்டு தெரிவிக்க வல்லீர்களோ
குரவநா றக்குயில் வண்டினம் பாடநின்
Kurava naa rak kuyil vandinam paada nin
The kuraa trees are spread flower fragrance everywhere and coco bird and bees clusters are raised the humming sounds
குராமரங்கள் தமது மலர் மனத்தை வீச குயில்களும் வண்டுக்கூட்டமும் பாட
றரவமா டும்பொழில் அந்தணா ரூரரைப்
Rarava maa dum pozhlil anthan aa roorarai
The snakes are dancing in that garden cool thiruvaroor temple place where descended lard Siva
பாம்புகள் படம் எடுத்து நின்று ஆடுகின்ற சோலைகளை உடைய அழகிய குளிர்ந்த திருவாரூர் இறைவரை
பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும்
Paravi naa dum mathum paadi naa dum mathum
I am prayed form searching and singing form searching that matter
யான் தொழுது தேடுகின்ற வகையையும் துதித்துத் தேடுகின்ற வகையையும்
உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே.
Urugi naa dum mathum unarththa val leergale
The mind melted form searching and on my behalf you may inform lard Siva
நெஞ்சுருகித் தேடுகின்ற வகையையும் என் பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ
கூடுமன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
Koodu man nap pedai kaal kuyil vandu kaal
You are mingling with your male birds and coco birds and bees
நும் சேவலோடு கூடுகின்ற அன்னப் பெடைகளே குயில்களே வண்டுகளே
ஆடும்அம் பொற்கழல் அடிகளா ரூரரைப்
Aadum am por kazhal adigal aa roorarai
The dancing feet are possessed lard Siva that lovely form of feet possessed lard Siva who has descended in the thiruvaroor place where I will attain him and then afterwards
நடனம் ஆடுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளை உடைய திருவாரூர் இறைவரை அடையப் பெற்ற பின்பு யான் அவரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
Paadu maa rum pani theth thumaa rung koodi
Singing proper way and praising way and then mingling with them and then
பாடும் முறையையும் பணிந்து புகழும் முறையையும் அவரோடு கூடுதலும்
ஊடுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே
Uoodu maa rum mivai unarththa val leer gale
To go into soft form of angry and all are you may inform him on my behalf
ஊடுதலும் செய்யும் முறையையும் அவையன்று அவருக்கு என் பொருட்டு தெரிவிக்க வல்லீர்களோ
நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும்
Niththa maa kan ninai thulla me thith thozhum
The lard Siva’s disciples and those who are known the truth who are think over with mind and then with mouth chanted form and with hands folded form prayed and that father form of lard Siva
அடியவராய் உள்ளவர்களே மெய்யுணர்ந்தோர் எல்லாம் உள்ளத்தால் நிலையாக நினைந்து வாயால் துதித்து கையால் தொழுகின்ற தந்தையாரும்
அத்தன்அம் பொற்கழல் அடிகளா ரூரரைச்
Aththan am por kazhal adigal aa roorarai
The lovely golden form of feet possessed lard Siva who is leader form descended in thiruvaroor temple place who is all the times
அழகிய பொன்போலும் திருவடிகளை உடைய தலைவரும் ஆகிய திருவாரூர் இறைவரை அவரையே எப்பொழுதும்
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்
Siththam vai tha pugazhl singadi yappan mei
Placed in the mind place so that emanated from this glory that suntherer who is father of singadi and the true disciples
சித்தத்தில் வைத்ததனால் வந்த புகழை உடையவனும் சிங்கடிக்குத் தந்தையும் உண்மையான
பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.
Paththa noo ran sonna paadumin paththa rea
Named suntherer alias nambi aarroorer who has sung this pure Tamil decade you may sing it up to the end of life time
திருத் தொண்டனும் ஆகிய நம்பி ஆரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடுமின்
OM THIRU CHITRAMBALAM.