THIRUKANATTU MULLOOR
40.திருக்கானாட்டு முள்ளூர்
THIRUKANATTU MULLOOR
The heard disciple at first prayed in Thiru valgoli puthoor temple and then entered in to thiru kaanattu mulloor place and at that time lard Siva allowed him to see real appearance before him. He said that I have seen the pure lard Siva’s flowery feet and prayed. In that concept embedded in the following poems
This decade explains that lard Siva stands in each and every objects in this world. In the way the following poems are blessed and given to this world
வன் தொண்டர் திருவாழ் கொளிபுத்தூரைத் தொழுது திருக்கானாட்டு முள்ளுரையடைந்த பொழுது பெருமான் காட்சி கொடுக்கக் கண்டு இறைவரது செம்மையாகிய திருவடி மலர்க்களைக் கண்டு தொழுதேன் என்ற கருத்தினைப் புலப்படுத்திப் பாடி அருளியது இத்திருப்பதிகம்.
இத்திருப்பதிகம் இறைவன் எல்லாமாய் நிற்கும் தன்மையை வகுத்து அருளி செய்தது
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
valvaaya math imilirum valar sadaiyi naanai
The sharpened mouth possessed the tender moon is glittering form on the long hair of lard Siva
கூரிய வாயை உடைய பிறை ஒளிரும் நீண்ட சடையை உடையவனும்
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
Marai yavanai vaai mozhliyai vaanavar thang konai
In the mouth uttering the veethas and other blessing wards and also he is in the form Inthiran Thirumal and Bharma that manner form appearing in this world
வேதம் வாயால் சொல்லப்படும் பிற சொற்கள் இந்திரன் திருமால் என்னும் பொருளாய் உள்ளவனும் ஆகிய இறைவனை
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
pulvaayai keend ulagam vizhunki yumizhin thaanai
Thirumal who has engulfed the whole world and then spitted it (the concept is soil appears from water and then disappeared in to the water) and whose leader
திருமால் மண் உலகத்தை உண்டு உமிழ்பவனும் திருமாலுக்குத் தலைவன் மண் நீரில் தோன்றி நீரில் ஒடுங்கும் என்பது கருத்து
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
Pon niraththin muppuri nool naan mugaththi naanai
Lard Siva who has possessed golden color body and three knotted thread adorned on his bosom and then the four faces are possessed bharama
பொன் போன்ற நிறத்தையும் மூன்று புரிகள் உள்ள நூலை மார்பில் அணிந்தவறும் நான்கு முகம் உடைய பிரமன்
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
Mul vaaya madal thadavi mudath thaazhlai eenru
Lare Siva I am your disciple and in this place the flower buds are emanated from the thallai tree place
அடியேன் தாழை அரும்புகள் விளைந்த தாழை மரத்தினால் ஈன்றிடப்பட்டு
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
Mottu alarnthu virai naarum murugu viri pozhlil soozhi
That flower has possessed thorn filled leaves and from it emanated fragrance spread over every where
முட்களை உடைய வாயினை உடைய இதழ்களைப் பொருந்தி மலர்ந்து மணம் வீசுகின்ற
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
Kal vaaya karun guvalai kan valarung kazhani
In that honey filled and shedding from the dark color kuvalai flowers where honey bees are sleeping form of that ponds encircled place
தேன் மிகுந்த சோலைகள் சூழ்ந்த மது ஒழுகும் வாயினை உடைய கருங்குவளை மலர்கள் கண் உறங்குவது போல காணப்படுகின்ற வயல்களை உடைய
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
Kaa naattu mullurir kandu thozhu thenea
I have seen lard Siva in this thir kanattu mullor temple place seen and prayed him and it is my penance effect
திருக்கானாட்டு முள்ளுரில் கண்டு வணங்கப் பெற்றேன் இஃது என் தவப்பயன் இருந்தவாறு
ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்
Oru mega mukilaagi oththulagan thaanaai
In this world the big helper is the clouds and in this universe so many other worlds are existing in the comparable form and in that appearance form of lard Siva
உலகிற்கு ஒரு பெரும் துணையாய் உள்ள மேகமாகியும் தம்முள் ஒத்த உலகங்கள் பலவும் தானே ஆகியும்
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்
Oor vanavum nir panavum oozhli kalun thaanaai
And in this variety of worlds lard Siva in the form of crawling and standing all the living object form and to its creation and destruction cause and effect form and the ultimate destruction of this whole universe in that yooli form
அவற்றில் உள்ள ஊர்வனவும் நிற்பனவுமாகிய உயிர்களும் அவற்றின் தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணமாகிய ஊழிக் காலங்களும் தானே ஆகியும்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
Poru mevu kadal aagi poothangal ain thaai
The waves are lashing the sea shores that sea form and five vast natural forces form (land water wind space and fire)
அலைகள் கரையை மோதுகின்ற கடல்களாகவும் ஐந்து பூதங்கள் ஆகியும்
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
Punain thavanai punniyanai puri sadaiyi naanai
All are created and stand behind it in cancelled form and maintain ethical standard (tharma) in every object and crown form of hair tied and that form of lard Siva
அவற்றைப் படைத்து நிற்பவனும் அறவடிவினனும் புரிந்த சடையை உடையவனும் ஆகிய இறைவரை
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
Thiru meyu selvath thaar thee moonrum valarththa
I am lard Siva’s disciples, seen the following such as the wealth god Lakshmi and good persons whose wealth filled mansions and three types of fire developing that highly regarded
அடியேன் திருமகளும் விருப்பத்தக்க செல்வத்தை உடையவர்களது மாளிகைகளும் மூன்று தீக்களையும் வளர்க்கின்ற மேலான
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங்
Thruth thakka antha narkal oothu naga rengung
The qualified Bharmins are chanting the veethas and their mansions are filled place and their living places
தகுதி உடைய அந்தணர்கள் வேதத்தை ஓதி வாழ்கின்ற மாளிகைகள் உள்ள இடங்கள் எல்லாம்
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்
Karu methi sen thaama rai meung kazhani
The black color buffaloes are eating that the red color lotus flowers that water bodies filled place
கரிய எருமைகள் செந்தாமரை மலர்களை மேய்கின்ற வயல்களை உடைய
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே
Kaa naattu mullurur kandu thozhlu thenea
In that Thiru kanattu mullor place prayed seen lard Siva and then prayed him and it is my penance effect
திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன் இது என் தவப்பயன் இருந்தவாறு
இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
Erum puyarntha moovilai ya soolath thi naanai
The powerful battle force which is named three leaves form of soolam carried on his hand
வலிமை மிகுதியாக உடைய மூன்று இலைகளை உடைய சூலத்தை உடையவனும்
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
Irai yavanai marai yavanai yen kunaththi naanai
That form of lard Siva who has always chanting veethas and eight types of manarism filled form existing in this world
இறைவனும் வேதத்தை ஓதுபவனும் எட்டு குணங்களை உடையவனும்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
Surum puyarntha konrai yodu thoo mathiyanj soodunj
The honey bees are cover on the top place of konrai flower garland and moon adorned form lard Siva on his hair
வண்டுகள் மேலே சூழ்கின்ற கொன்றை மாலையோடு வெள்ளிய சந்திரனைச் சூடிய
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
Sadai yaanai vidai yaanai sothi yenuj sudarai
That hair style possessed lard Siva and who is ascended on the back of bull and self-light filled form and that form of lard Siva
சடையை உடையவனும் இடபத்தை ஏறுபவனும் சுயமான சோதி எனப்படுகின்ற ஒளியானவனும் ஆகிய இறைவனை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
Arum puyarntha aravintha thanai malarka leri
அடியேன் அரும்புகள் மேல் அன்னப்பறவைகள் எழுந்து காணப்படுகின்ற தாமரையினது ஒப்பற்ற மலர்களில் மேல் ஏறி விளையாடுகின்ற
அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே
annagal vilai yaadum agan ruraiyin aruke
And in the water bodies nearby honey bees are growing
அகன்ற நீர்த்துறையின் அருகே சுரும்புகள் வளரப்பட்டு
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
Karum puyarnthu perunj sennel nerungki vilai kazhani
And sugar cane growing and red color paddy are growing in the fields and that place is
செந்நெல்பயிர்கள் செறிந்து விளைகின்ற வயல்களை உடைய
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
kaanattu mullurir kandu thozhlu thenea
Thiru kanattumuloor place seen lard Siva and prayed him what type of boon I have got in this world
திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன் இது என் தலப்பயன் இருந்தவாறு
பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
Poolai punai kon raiyodu purisadaiyi naanai
The poolai flower and lovely kondrai garland and well tied crown form of hair possessed lard Siva
பூளைப் பூவையும் அழகிய கொன்றை மாலையையும் புரிந்த சடையின் கண் உடையவனும்
புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
punalagi anlaaki poo thangal ainthaai
Water fire and five vast natural form
நீராகியும் நெருப்பாகியும் ஐந்து பூதங்கள் ஆகியும்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
naalai inru neru nalaai aagaya maaki
Yesterday today and tomorrow in that day’s form and other outer space form of
நாளை இன்று நேற்று என்னும் நாள்களாகியும் பிற வெளியாகியும்
ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்
Gnayi raai mathiya maai ninravem paranai
Moon and sun form of appearing lard Siva who is my lard
சூரியன் ஆகியும் சந்திரனாகியும் நிற்கின்ற எங்கள் இறைவரை
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்
Paalai padu pain kamukin soo zhalilan thengin
I am lard Siva’s disciple and newly flowered the beetle nut trees and rich grown young coconut trees from it emanated
அடியேன் பாளைகள் உள்ளாகிய பசிய கமுகுகளினது செறிவின் இடத்தே உள்ள இளமையான தென்னையினது
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
Padu mathan sei kozhlun theral vaai maduththu parugi
The much fainting are giving toddy water which is consumed by the male bees and got enjoyment
மிக்க மயக்கத்தை உண்டாக்குகின்ற கள்ளினை இளைய ஆண் வண்டுகள் உட்கொண்டு திளைத்து
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
Kaalai vandu paada mayil valar solai
And then raised the humming musical sounds and accordingly the peacocks are dancing that high grow plantations are filled place it is
இசையை பாட மயில்கள் ஆடுகின்ற உயர்ந்த சோலைகளை உடைய
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே
kaanaattu mullurir kandu thozhlu thenea
Where I have seen lard Siva in real form and then prayed him it is my penance effect
திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன் இது என் தவப்பயன் இருந்தவாறு
செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்
Serukku vaai paingan vel lara varaiyi naanai
The ferocious form of leaf forward the mouth possessed and the lust green white snake which is tied in his waist as belt
சீறுகின்ற வாயினையும் பசிய கண்களையும் உடைய வெள்ளிய பாம்பினை அரையில் கட்டியவனும்
தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
thevarkal soo laa maniyai sengan vidai yaanai
The crown place studded ruby diamond form red color eyes are possessed the elephant chariot possessed form of
முடியில் பதிக்கும் மணி போன்றவனும் சிவந்த கண்களை உடைய யானை வாகனத்தை உடையவனும்
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை
Murukku vaai malar okku thirumeni yaanai
The drum stick tree place bloomed the red color flower of body possessed lard Siva
முருக்க மரத்தின் கண் பொருந்தி உள்ள மலர் போலும் திருமேனியை உடையவனும்
முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
Munnilai yaai muzhlu thulaga maaya peru maanai
To all in this world evidence form existing in the whole world who himself stand here that lard form
எல்லாவற்றிற்கும் சான்றாய் நிற்பவனும் உலகம் முழுதும் தானேயாய் நிறைந்தவனும் ஆகிய இறைவனை அடியேன்
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும்
irukkuvaai anthanar gal eazhlu pirappu lengum
The seven form of births are evolved in this world in those places veethas are chanting and yagaa fire is developed by Bharmins
எழு வகைப் பிறப்பினவாகிய உயிர்கள் உள்ள இடங்களில் எல்லாம் வேதத்தை ஒதுகின்ற அந்தனர்கள் வேள்வி வேட்டி இருந்தலால்
வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்
Velvi yirun thiru nithiyam vazhangu naga rengum
To those Bharmins much wealth is given by the mansion place persons and it’s all the sides
அவர்களுக்க்கு மிக்க நிதிகளை வழங்குகின்ற மாளிகையின் பக்கங்களில் எல்லாம்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
Karuk kuvaai pennai yodu thengu mali solai
The hardened palm trees and coco nut trees plantations are filled places where situated
கருக்கு வாயினை உடைய பனை மரங்களும் தென்னை மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே
kanattu mullurir kandu thozhlu thenea
Place is Thiru kanattu molloor place where I have seen in my visual eyes and prayed him which is the boon emanated from my penance effect
திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன் இது என் தவப்பயன் இருந்தவாறு
விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
Vaidai yarava kodi yenthum vinnavar thang konai
The bull emblem studded flag carried on hands that devas leader
எருதினை எழுதிய ஒலிக்கும் கொடியை ஏந்துகின்ற தேவர் பெருமானும்
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
vellaththu maal avanum vetha mutha laanum
In the sea water place sleeping sub lard thirumal and veetaas are chanting and that leader Bharma
நீரில் துயில்கின்ற திருமாலும் வேதத்திற்குத் தலைவனாகிய பிரம்மனும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
Adi yinaiyun thiru mudiyung kaana vari thaaya
The sacred feet and lovely head which are not seen by them that rare form
அடி இனையையும் அழகிய முடியினையும் காண்டல் அரிதாகிய
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
Sanga ranai thath thuvanai thaiyal mada vaargal
Sankara that cause effect name possessed who is true matter form in this world lard Siva
சங்கரன் என்னும் காரணப் பெயர் உடையவனும் மெய் பொருளானவனும் ஆகிய இறைவனை
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
Udaiya vizha kuzhal avizhak kothai kudan thaada
the young ladies are swimming in the river water so that their dress is untied form and garland adorned hair is shattered form in that way dipped and played in the river water so that in their body pastes are
அடியேன் இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும் மாலையை அணிந்த கூந்தல் அவிழவும் மூழ்கி விளையாடுதலால் கிடைத்த
குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற்
Kungu mangal unthi varu kollidath thin karai meal
In slush form pushing down in the kolidam river bank
குங்குமச் சேற்றைத் தள்ளிக் கொண்டு வருகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
Kadaikal vidu vaar kuvalai kalai vaarung kazhani
The farmer ladies are plucked the weeds of kuvalai flower stems and then thrown in the river in that place of
கடையர்கள் தாங்கள் களைந்து நீண்ட குவளைக் கொடியைக் சேர்த்து எடுக்கின்ற
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
kanattu mullurir kandu thozhlu thenea
Thiru kanattu mulloor temple place I have seen lard Siva and prayed him which is the effect of my penance
திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன் இது என் தவப்பயன் இருந்தவாறு
அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்
Aru maniyai muth thinai aanaj sum aadum
The rare ruby diamond form and pearl form and with the five types cow products from it taken bath daily that devas leader lard Siva
அரிய மணியாகிய மாணிக்கம் போல்பவனும் முத்துப் போல்பவனும் ஐந்து வகையான பொருட்களைக் கொண்டு அபிசேகம் செய்யப்படும் தேவர் பெருமானும்
அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
Amarargal tham peru maanai arumaraiyin porulai
The rare veetha meaning form existing in this world
அரிய வேதத்தின் பொருளாய் உள்ளவனும்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
Thiru maniyai then karumpin ooralirun theenai
And lovely other diamonds form and the tastier sugar cane juice form
அழகிய பிற மணிகள் போல்பவனும் இனிய கரும்பினின்றும் வடிதலை உடைய மிக்க சாறு போல்பவனும்
தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
Thire variya maa maniyai thigazhi tharusem ponnai
The rare diamond named chintha Mani form and twenty four gold pure form
அறிதற்கு அரிய மணியாகிய சிந்தாமணி போல்பவனும் மாற்று விளங்குகின்ற செம்பொன் போல்பவனும்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்
Kuru manigal kozhlith thizhinthu sushi thizhiyun thiraivaai
That lovely god and I am his disciple and variety of color filled diamonds are winnowed form bring down by the water falls and then placed it on the land place and waves emanated place
அழகிய இறைவனை அடியேன் முன்னே நிறம் பொருந்திய மணிகளைக் கொழித்து மலையில் இருந்தும் பாய்ந்து பின்பு நிலத்தில் இழித்துக் கொண்டு ஒடுகின்ற அலைகளுக்கிடையில்
கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற்
Kol valaiyaar kudain thaadug kollidath thin karai mer
Where in row form of bangles are adorned ladies are taking dip in the kolidam river water and on its banks
வரிசையான வளையல்களை அணிந்துள்ள மகளிர் முழ்கி விளையாடுகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
Karu manigal pol neelam malar ginra kazhani
The dark color water flower named neelorpavam bloomed in the water bodies place is
நீலோற்பவ மலர்கள் நீலமணி போல மலர்கின்ற வயல்களை உடைய
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே
kanattu mullurir kandu thozhlu thenea
thiru kanaattu mulloor place I have prayed lard Siva because of my penance effect
திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன் இஃது என் தவப்பயன் இருந்தவாறு
இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்
Ilia thazhluvu ven noolum meyu thiru maarpin
The snake ornament and with it the three knotted thread adorned on the bosom
பாம்பாகிய அணிகலமும் அதனோடு சேர்ந்த வெண்மையான முப்புரி நூலும் பொருந்திய அழகிய மார்பினை உடையக் கடவுளும்
ஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக்
Eesan ran eando lgal veesi yeri yaada
Lard Siva who is with his eight soldiers are swayed form of dancing with the fire carried hand
தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம் ஆடுதல் பொருட்டு
குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்
Kulai thazhluvu thiruk kaathir kolarava masaith thu
The kulai ear ornament with it wild Snake is also adorned and low in cloth is tied lovely form and
குழை பொருந்திய காதில் கொடிய பாம்பையும் இட்டு உடையைக் கோவணமாக உடுத்த அழகனும்
கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்
Kovanang kol kuzhaganai kulir sadaiyi naanai
And with Ganges water the cool hair possessed lard Siva
கங்கை நீரால் குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே
thazhai thzhluvu thannir aththa sennelathan ayalea
And I am lard Siva’s disciple where the flourishing form of the red color paddy growing nearby place
அடியேன் தழைத்தலை உடைய பசுமையான நிறத்தை உடைய செந் நெல் பயிரின் பக்கத்தில்
தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே
Thadan tharala men karumpin thaazhi kidangi narukea
The big sprouting pearls are possessed that sort form of sugar cane covered place and its nearby place
பெரிய முத்துக்களை உடைய மென்மையான கரும்பின் சூழ்ந்த இடங்களின் அருகே
கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக்
Kazhai thazhluvi theen rodukkung kazhani soozhi pazhanak
The honey bees are constructed the honey hives in the top of the sugar cane that plantations are covered place is
வண்டுகள் அக்கரும்பைப் பொருந்தித் தேன் கூட்டை அமைக்கின்ற வயல்களை சூழ்ந்த பண்னைகளை உடைய திருக்கானாட்டு
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
Ka naattu mullurir kandu thozhlu thenea
Thiru kanattu muloor place seen lard Siva and prayed him it is the effect of my penance
முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன் இஃது என் தவப்பயன் இருந்தவாறு
குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்
Kuni viniya kathir mathiyanj soodu sadai yaanai
The curved form of moon is adorned by lard Siva on his hair and honey bees cluster
வளைந்த இனிய ஒளியை உடைய சந்திரனைச் சூடியும் வண்டுக் கூட்டங்கள்
குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
Kundalan ser kaa thavanai vandu inagal paada
And the ear ornament adorned on his ear named gundalm and the honey bees cluster all are singing humming songs
குண்டலம் பொருந்திய காதினையும் உடையவனும் வண்டுக் கூட்டங்கள் பாட
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்
Pani yuthirunj sadai yaanai paal venneer raanai
The milk like white ashes are adorned on the whole body places and water droplets spill over that hair possessed lard Siva
பால்போலும் வெள்ளிய நீற்றை அணிந்தவனும் நீர்த்துளிகள் சிந்துகின்றதுமாகிய சடையினையும்
பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத்
Pala uruvun than nuruvea aaya peru maanai
All the world forms are his own form in that body form possessed lard Siva
எல்லா உருவங்களும் தன் உருவமேயாய் நிற்கின்ற பெருமானும் ஆகிய இறைவனை
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
Thuni viniya thooya mozhi thondai vaai nallaar
The pure form of neelorpavam flowers adorned on the body and in pure wards are speaking form
தூய நீலோற்பவங்கள் உடலிலும் இனியனவையும் தூயனவாயும் தோன்றும் மொழிகளையும்
தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே
Thoo neelang kan valaruj soozhi kidangi narukea
The red color kovai fruit like mouth possessed beautiful ladies taking rest
கொவ்வைக் கனிபோலும் வாயினையும் உடைய அழகிய பெண்களைப் போல் கண் வளர்கின்ற
கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்
Kani viniya kathali vananth thazhluvu pozhir solai
And in the big go down place preserved the banana fruits are in ripped form of and that plantations are covered place is
கண் வளர்கின்ற நிறைந்த கிடங்கின் அருகில் உள்ள பழங்களைப் பழுத்த இனிய வாழைத் தோட்டங்களைப் பொருத்தி உள்ள சோலைகளை உடைய
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
Ka naattu mullurir kandu thozhlu thenea
Thiru kaanattu mulloor place I have seen lard Siva and prayed and it is emanated from my penance power
திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன் இஃது என் தவப்பயன் இருந்தவாறு
தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத்
Thevi yam pon malai koman ran paavai yaaga
The lovely golden hills king whose daughter is lard Siva’s wife
அழகிய பொன் மலைக்கு அரசன் மகள் தனக்கு மனைவியாய் வாய்க்க
தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்
Thana thuruvam oru paganj serththu viththa perumaan
Lard Siva gave her left part of his body that lard Siva
அவளைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகச் சேர்த்திருக்கும்படி வைத்த பெருமானும்
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
Meviya ven nagarath thil azhun thaamai namakku
The sinners are liked that hell place we are not fallen down and lard Siva showed us
பாவிகள் விரும்பும் கொடிய நரகத்தில் வீழாதபடி நமக்கு
மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
Mein neriyai thaan kaattum vetha mutha laanai
The true ethical way of life is showed to us that veetha chanting prime god
உள்ளம் நெறியைக் காட்டுகின்ற வேதத்தால் துணியப்பட்ட முதல் கடவுளும்
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்
Thoovi vaai naarai yodu kuruku paai thaarp path
The wings are possessed the lark birds and small birds are flying form raised sounds
சிறகுகள் வாய்ந்த நாரைகளும் குருகுகளும் பறந்து ஒலிக்க
துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்
Thurai kendai milirnthu kayal thulli vilai yaada
In the water bodies the kendai fishes are rolling down and other fishes are jumping and playing
நீர்த்துறைகளில் கெண்டை பிறழ பிற மீன்கள் துள்ளி விளையாட
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்
Kaavi vaai vandu pala pan seiyum kazhani
And in the kuvalai flower place honey bees are so many varieties of humming sounds are raised those fields are filled place
குவளைப் பூவின் கண் வண்டுகள் பல வகையான இசைகளைப் பாடுகின்ற வயல்களை உடைய
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
kanattu mullurir kandu thozhlu thenea
That thiru kanattu mollor place I have seen lard Siva and prayed him and it is my penance effect
திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன் இஃது என் தவப்பயன் இருந்தவாறு
திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
Thirai yinaar kadal soolntha then nilangai konai
The waves are filled and sea covered place of southern srilanka and its king named Ravana
அலையால் நிறைந்த கடல் சூழ்ந்த தென் இலங்கைக்கு அரசனாகிய இராவணனைச்
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
Setrava nai senj sadai mel ven mathiyi naanai
Whose ego is suppressed by lard Siva and whose golden color hair where white moon is adorned
செருக்கடக்கியவனும் செம்மையான சடையின் மேல் வெண்மையான சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
Karai yinaar punal thazhluvu kollidath thin karai mer
In the kolidam river bank water is flowing in full level where situated
கரையின் கண் நிரம்பிய நீரைப் பொருந்திய கொள்ளிட நதியின் கரை மேல் உள்ள
கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
kanattu mullurir kandu kazhal thozh luthu
That thiru kanattu mullor place fallen down and prayed lard Siva
திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு அடிவணங்கி
உரையினார் மதயானை நாவலா ரூரன்
Urai yinaar matha yanai naval aarooran
In the glory filled place elephant pike power possessed nambi aarrooren who has descended here
புகழ் மிகுந்த மதம் பொருந்திய யானையை உடைய திருநாவலூரில் தோன்றிய நம்பி ஆரூரன்
உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
Urimai yaal urai seitha ondamizhi gal vallaar
In direct form prayed with that rightful way who sang the above Tamil poems those disciples who are repeatedly sung it
வணங்கப் பெற்ற அந்த உரிமையினால் பாடிய இந்த ஒளி பொருந்திய தமிழ் பாடலைப் பாட வல்லவர்கள்
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்
Varai yinaar vagai gnalam aandavark ku thaam pooi
In this world boundary covered land place they will rule it as head king to all other kings
எல்லையால் பொருந்திய வகைகளை உடைய நில உலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய்
வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.
vaanavarkku thalai varaai nirpar avar thaamea
And then ultimately enter in to upper world and ruled there for long period
பின்பு சென்று வானுலகத்தாருக்கும் தலைவராய் நெடிது வாழ்வர்
OM THIRU CHITRAM BALAM.