OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PURAM PAYAM

ganesheit April 15, 2019

35.திருப்புறம்பயம்

THIRU PURAM PAYAM

The hard disciple named sunderer who has prayed in Thitu aarai Thiru innamber and other places are prayed and then wanted to go in to Thiru puram bayam in love filled form he sang the following songs

This decade sang with the aim of to go so many temple places and then pray there in that mentality he gave this decade

  வன் தொண்டர் திருஆறை மேற்றளி முதலான பல தலங்களை வணங்கிக் கொண்டு திருஇன்னம்பர் சென்று வணங்கி அங்கு இருக்கும் நாளில் திருப்புறம்பயத்திற்குச் செல்ல வேண்டும் என்று அன்பு உண்டாகப் பாடி அருளியது இத்திருப்பதிகம்.

   இப்பதிகம் இறைவன் எழுந்தருளிய பல பதிகளைச் சென்று வணங்க வேண்டும் என்ற குறிப்பினால் அருளிச் செய்தது.

351.அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி நின்றும்போந்துவந் தின்னம்பர்த்

angam oothiyoor aarai metrali ninrum poonthu van thin namparth

My dear mind the six angaas and four veethass are chanted by bharmins in that place is thiru aarai matrali place standing form and then entered in to thiru eannamber place

மனமே ஆறு அங்கங்களையும் ஓதியவராகிய அந்தணர்களது திரு ஆறை மேற்றளியில் நின்றும் புறப்பட்டு வந்து திருவின்னம்பரில்


தங்கினோமையும் இன்னதென்றிலர் ஈசனாரெழு நெஞ்சமே

Thanki nomaiyum innathen rilar eesaa naar elu nenjamea

where stayed in so many days but lard Siva did not inform me what to do next So that we will go to lard Siva’s so many temples and then conduct prayer there my dear mind

பல நாள் தங்கியும் நம்மை இங்குள்ள இறைவர் இனி நாம் செய்யத்தக்கது இன்னது என்று தெளிவித்தார் இல்லை எனவே நாம் சிவனுடைய பல தலங்களையும் சென்று வண்ங்குவோம் மனமே

கங்குல்ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்திவானவர் தாந்தொழும்

kangul eamangal kondu thee varkal eaththi vanavar thaan tholum

So that the upper world deevaas are to get higher position then stayed all over the night in the early morning time praised lard Siva and then prayed

ஆதலின் வானவர்கள் தம் நிலையினும் மென்மேல் உயர்தல் பொருட்டு இரவு எல்லாம் காத்து நின்று விடியலில் ஏத்தித் தொழுகின்ற


பொங்குமால்விடை யேறிசெல்வப் புறம்பயந்தொழப் போதுமே.

Pongu maal vidai yeri selva purampayan thola pothumea

The lovely bull on it ascended that lard Sivas wealth filled place the thiru purambayam place so as to pray we may start our journey

அழகு மிக்க பெரிய விடையை ஏறும் பெருமானது செல்வம் நிறைந்த திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் புறப்படு

352.பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும் பண்டையாரலர் பெண்டிரும்

pathiyunj sutramum petra makkalum pandai yaaralar pendirum

My dear ignorant mind our living place and married wife be gotten children and other relatives and then earned wealth and from good old days all the going to be disconnected one

அறியாமை உடைய மனமே, நாம் வாழ்கின்ற ஊரும் மணந்த மனைவியாரும் பெற்ற மக்களும் பிற சுற்றத்தாரும் தேடிய பொருளும் எல்லாம் பழைகாலம் தொட்டு தொடர்பு இல்லாதவர்கள்


நிதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும் நினைப்பொழிமட நெஞ்சமே
nithiyili manai vaalum vaalk kaiyum ninaipoli mada nenjame

With that wealth and living in the house and all are no to go with us so to think over it my dear idiot mind that sorrow you may keep it away

அப்பொருளால் மனையில் வாழும் இந்த வாழ்க்கையும் அதனால் என்றும் உடன் தொடர்ந்து வரா மாட்டார்கள் ஆதலின் அவர்களைப் பற்றிய கவலைப்படுதல் ஒழி மட நெஞ்சமே


மதியஞ்சேர்சடைக் கங்கையாளிடம் மகிழும்மல்லிகை செண்பகம்

Mathiyan seer sadai kangai yaa nidam makilum malligai senbagam

Here after the moon and Ganges are clubbed form of hair possessed lard Siva in the place Jasmin creeper plant and sanbaga flower tree

இனி நாம் சந்திரன் சேர்ந்த சடையிடத்து கங்கையை அணிந்தவன் தம் இடமாக மகிழம் மல்லிகை கொடியும் சண்பக மரமும்


புதியபூமலர்ந் தெல்லிநாறும் புறம்பயந்தொழப் போதுமே

Puthiya poomalar thelli naarum puram payan thozha poo thumea

The new flowers are the whole night spread over fragrance that thiru puyamparam place we may pray so that started from this place

புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருபுயம் பயத்தை வணங்கச் செய்வோம் புறப்படு மனமே

புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீயுரை யாற்றளர்ந்

Puran thirainthu naram pelunthu naraiththu nee yurai yaatralarnthu

My dear mind the skin is shrinking form so that the veins are appeared outside of our body and hair got gray form and from the mouth emanated wards are in not legible form to hear it in that stage attained

மனமே தோல் திரைத்து நரம்புகள் வெளி தோன்றி வாய் குழறும் நிலை வந்த பின்பு

தறம்புரிந்து நினைப்பதாண்மை அரிதுகாண்இஃ தறிதியேல்

Tharam purinthu ninaippa thanmai arithu kaaneq thari thiyel

Afterwards to do benevolent act which will not give any benefit if you know it

அறத்தை செய்ய நினைப்பது பயன் இலாததம் இதனை நீ அறிவாய் ஆயின்


திறம்பியாதெழு நெஞ்சமேசிறு காலைநாமுறு வாணியம்

Thiram piyaa thelu nenjamea siru kaalai naa muru vaaniyam

In the younger age we have earned the remuneration this is the barter trade now it is

நாம் இளமையிலேயே செய்து ஊதியம் பெறுதற்கு உரிய வாணிபம் இதுவே ஆகும்


புறம்பயத்துறை பூதநாதன் புறம்பயந்தொழப் போதுமே

Purampayath thurai pootha naathan puram payan thola pothumea

In the outer place covered demon forces whose leader is lard Siva we will pray in the thiru puyam bayam place and without any deviation we may at once started our journey

புறத்திலே அச்சத்தோடு சூழும் பூதங்களுக்கு தலைவனாகிய இறைவனது திருபுயம் பயத்தை வணங்க செய்வோம் என்னை பிறழ்வியாது விரையப்புறப்படு

குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்

Kut roruvaraik koorai kondu kolaikal sooln tha kala velaanj

my dear idiot mind so as to corner others wealth and who has possessed it to kill that person with instruments and then garbed their wealth in that force full robbery

அறியாமை உடைய மனமே பொருளை பறித்தல் வேண்டி அஃது உடைய ஒருவரை கருவியால் குத்தி உடைமையை பறித்து மேலும் கொலைச் செயல்களை செய்ய துணிந்த களவினால்


செற்றொருவரைச் செய்ததீமைகள் இம்மையேவருந் திண்ணமே

Set roruvarai seitha theemaikal immaiye varun thin namea

In that sins are doing, that person with got enmity with him and then from that enmity to do harm to others that sins will not enter in to next birth as extended form and in this birth itself affect you

ஆகிய பாவங்கள் முறையில் நிற்கும் ஒருவரை முறையின்றி பகைத்து அப்பகை காரணமாக அவர்களுக்கு தீங்கு இழைத்த  பாவங்களும் மறுமை வரை நீட்டியாது


மற்றொருவரைப் பற்றிலேன்மற வாதெழுமட நெஞ்சமே

Matroru varai partilen mara vaa tholu mada nenjamea

In this life it will give pain and sorrow so that it is not happened in this way so that I have been clinging you only as my guide and no one else

இம்மையே வந்து வருத்தும் இது திண்ணமே ஆதலில் இவை போல் நிகழாதிருத்தற்கு உன்னை அன்றி பிறர் ஒருவரையும் நான் துணையாக பற்றாது உன்னையே பற்றினேன்


புற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயந்தொழப் போதுமே

Putrav yudai petram eri puram payan thola poothumea

So my dear mind you may think over him and then started your journey lard Siva who has adorned snakes living in the sand holes as ornaments that bull traveler whose thirupuam baram place you may start journey to pray there

அவனை நினைந்து புறப்படு மட நெஞ்சமே புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய இடபவாகனனை  திருப்புயம் பயத்தை வணங்க செல்வோம்

கள்ளிநீசெய்த தீமையுள்ளன பாவமும்பறை யும்படி

Kalli ne seitha themai yullana paavamum paraiyum padi

My dear mind because of vengeance you have did bad acts that type of sins are to be removed form

மனமே நீ வஞ்சித்து செய்த தீமையால் உளவாகிய பாவமும் நீங்கும் படி


தெள்ளிதா வெழு நெஞ்சமேசெங்கண் சேவுடைச்சிவ லோகனூர்
thelli thavelu nenjame sengan seyudaich siva loganoor

That clear form of mind you may started your journey and the red color eyes are possessed that bull possessed lard Siva’s dwelling place

தெளிவுடைய மனமே புறப்படுவாயாக சிவந்த கண்களை உடைய இடப்பத்தை உடைய சிவலோகனது ஊராகிய

துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல் தோன்றுதாமரைப் பூக்கள்மேல்

Thullivel lila vaalai paai vayal thonru thamarai pookkal meal

The young vallai fishes are leap forward in that fields where the lotus flower bloomed on it

இளைமையான வாளை மீன்கள் துள்ளி பாய்கின்ற வயல்களில் மலர்கின்ற தாமரை பூக்களில் மேல்


புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயந்தொழப் போதுமே

Pulli nalligal palli kollum puram payan thola poothumeea

The doted filled grabs are taking rest in that place named thiru puram payam place so as to pray we start our journey so as to get clear idea in mind

புள்ளிகளை உடைய நண்டுகள் பள்ளி கொள்கின்ற திருபுயம் பயத்தை வணங்கத் தெளிவு கிடைக்கும்

படையெலாம்பக டாரஆளிலும் பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்

Padai yelaam paga daara aalilum povvanj suulnthara saali lung

the ignorance filled mind the elephant filled battle field and other battle forces are driven to win over the war even if we get victory and then the sea covered land is wholly ruled and then at the end

அறியாமை பொருந்திய மனமே யானைகள் நிரம்பி இருக்கின்ற பல படைகளையும் ஏவல் கொண்டு வெற்றியை பெரினும் அந்த வெற்றியினால் கடல் சூழ்ந்த நிலம் முழுவதும் ஆட்சி செய்தாலும் முடிவில் எல்லாம்


கடையெலாம்பிணைத் தேரைவால்கவ லாதெழுமட நெஞ்சமே

Kadai yelam pinai therai vaal kava la thelu mada nenjame

and then at younger age the frogs have tails and then it will fall down so in that way so you do not get sorrow so you may start your journey my dear ignorant filled mind

தேரை[தவளை]யோடு ஒட்டியுள்ள வால் போல விழுந்துவிடும் ஆதலால்
அவைகளைப் பற்றி கவலை கொள்ளாது புறப்படு மட நெஞ்சமே


மடையெலாங்கழு நீர்மலர்ந்து மருங்கெலாங்கரும் பாடத்தேன்

Madai yelaan galu neer malarnthu marungelan karum paadathen

in all the water ways the kaluneer flowers are bloomed and in the so many places the sugar cane industry extracting the juice
நீர் மடைகளில் எல்லாம் கழநீர்ப் பூக்கள் மலர்ந்தாலும் பல இடங்களில் கரும்பை ஆலையில் இட்டுப் பிழிந்தாலும்


புடையெலாம்மணம் நாறுசோலைப் புறம்பயந்தொழப் போதுமே

pudai yelaam manam naaru solai puram payan thozhap pothumea

And in all the directions the fragrance is spread over that plantation filled place that is purambayam place where we start our journey to pray god there

எல்லா பக்கங்களிலும் தேனின் மணம் வீசுகின்ற சோலைகளை உடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்

முன்னைச்செய்வினை இம்மையில்வந்து மூடுமாதலின் முன்னமே

munnais sei vinai immaiyil vanthu moodu maathalin munnamea

my dear ignorance filled mind and one person in the previous birth did bad deeds and in this birth come over and then cover (engulfed) him before that

அறியாமையை உடைய மனமே ஒருவர் முன் பிறப்பில் செய்த வினை இப்பிறப்பில் வந்து அவரைச் சூழ்ந்து கொள்ளும் என்பது உண்மையாதலின் அவ்வாறு வந்து சூழ்வதற்க்கு முன்பே


என்னைநீதியக் காதெழுமட நெஞ்சமேயெந்தை தந்தையூர்

yennai neethiya kaathezhu mada nenjasa mey enthai thanthai yoor

You need not give me shattered mind you may started your journey my dear ignorance filled mind to me and others lard Siva is father whose residential place

நீ என்னை கலங்கச் செய்யாது  புறப்படு மடநெஞ்சமே எமக்கும் பிறர்க்கும் தந்தையாகிய சிவபெருமானது ஊராகிய


அன்னச்சேவலோ டூடிப்பேடைகள் கூடிச்சேரு மணிபொழிற்

annach sevalo dudi pedaigal koodi seru mani pozhli

The she Anna birds are got soft angry with the male Anna bird and then got rid of its angry and then mingled together in that lovely plantation filled place

அன்னப்பேடைகள் அவற்றின் சேவல்களோடு முன்னே ஊடல் கொண்டு பின்பு கூடலைச் செய்து வாழ்கின்ற அழகிய சோலைகளில்


புன்னைக்கன்னி கழிக்கணாறும் புறம்பயந்தொழப் போதுமே

Punnai kanni kazhli kanaarum puram payan thozha pothume

Where grown the young punnai trees in that place stood and spread over fragrance we start our journey towards thiru puyam param to pray there

உள்ள இளைய புன்னை மரங்கள் கழிக்கரையில் நின்று மணம் வீசுகின்ற

திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்

மலமெலாமறும் இம்மையேமறு மைக்கும்வல்வினை சார்கிலா

Mala melaa marum immaiye maru maikkum val vinai saar kila

My dear mind in this birth itself all the impurities will be left out in the next rebirth also wild misdeeds won’t approach us so

மனமே இப்பிறப்பில் தானே மலங்கள்யாவும் நீங்கும் மறுபிறப்பின் வாயிலாக வலிய வினைகள் வந்து அடைய மாட்டா ஆதலின்


சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள் சங்கரன்வந்து தங்குமூர்

Sala melaa mozhli nenjamea yengal sankaran vanthu thanku moor

You may get rid of your sorrow and then our lard Siva who has come down and stayed in that place is

நீ துன்பத்தை வீட்டொழி எங்கள் சங்கரன் வந்து தங்கி இருக்கும் ஊராகிய


கலமெலாங்கடல் மண்டுகாவிரி நங்கையாடிய கங்கைநீர்

Kalamelaan kadal mandu kaaviri nangai yaadiya kangai neer

The river Cauvery River is running and then ultimately mingling with the sea where ships are abundantly available that Ganges river water form you are

காவிரி நதி என்கின்ற கங்கை முழுக ஓடுகின்ற கடலில் காணப்படுவது போல கப்பல்கள் மிகுந்து காணப்படுகின்ற கங்கை நீர் போலும் நீர்


புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும் புறம்பயந்தொழப் போதுமே

pulamelam mandi pon vilaikkum puram payan thozha pothumea

And all the fields are flowing and growing the golden color red paddy is growing that thiru purampayam place we may go to pray god there

வயல்களில் எல்லாம் மிகப் பாய்ந்து பொன்போலும் செந்நெற்களை விளைவிக்கின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்

பண்டரியன செய்ததீமையும் பாவமும்பறை யும்படி

Pandari yana seitha thee maiyum pavamum paraiyum padi

My dear ignorance mind in the previous birth that bad acts and habits are formed to be removed from that’s acts sins are emanated and which are to be fastly removed form of and then I have found out rare

அறியாமை உடைய மனமே முற்பிறப்பில் நீக்குதற்கு அறியவனாகக் செய்த தீயசெயல்களை பழக்கமும் அச்செயல்களால் வந்த பாவமும் விரைய நீங்கும்படி நான் கண்ட


கண்டரியன கேட்டியேற்கவ லாதெழுமட நெஞ்சமே

Kandari yana ketti yer kava la thezhu mada nenja meea

That rare so many ways if you hear and then follow it without any sorrow you may start at once my dear idiot mind

அரிய பல வழிகளை நீ கேட்டு நடப்பதாயின் கவலை படாமல் புறப்படு மட நெஞ்சமே


தொண்டரியன பாடித்துள்ளிநின் றாடிவானவர்தாந் தொழும்

Thond ariyana paadi thulli nin raadi vaanavar thaan thozhum

Devas are so many rare services are doing and then singing and then jumping form stand there and then dancing and then praying

தேவர்கள் அரிய பல தொண்டுகளைச் செய்து பாடியும் குதித்து நின்று ஆடியும் தொழுகின்ற


புண்டரீக மலரும்பொய்கை புறம்பயந்தொழப் போதுமே.

pundariga malarum poigai puram payan thozha pothumea

The lotus flowers are blooming in that natural flower ponds are possessed place we will go to thiyu puram payam temple place and there conduct prayer and poojaas

தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகளை உடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்

துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந் துயக்கறாத மயக்கிவை

thunjiyum pira thunji siranthu thuyak karaatha mayakkivai

to die and then got rebirth and then growing that weeping state of mesmerized work is not left over and to all

இறந்தும் பின்பு பிறந்தும் அதன் பின் வளர்ந்தும் அழுதல் நீங்காத மயக்கத் தொழிலாகிய இவைகளுக்கு


அஞ்சிஊரன் திருப்புறம்பயத் தப்பனைத்தமிழ்ச் சீரினால்

anji uooran thirupurampayan thappanaith thamizhi seerinaal

Got afraid of that suntherer thiru puyambayam place prayed and then got upliftment in life and in that way think over in mind where descended our father lard Siva prayed with Tamil poems

அஞ்சி நம்பி ஆரூரன் திருப்புறம்பயத்தை வணங்கி உய்வோம் என்று நெஞ்சினாலே நினைந்து அங்கு இருக்கின்ற தன் தந்தையைத் தமிழ்ச் சீர்களால்


நெஞ்சினாலே புறம்பயந்தொழு துய்துமென்று நினைத்தன

Nenje naale puram payan thozhu thuithu menru ninaith thana

With the mind think over and then sang prayer songs those above poems

என்று நெஞ்சினாலே நினைந்து பாடிய இப்பாடல்களை


வஞ்சியாதுரை செய்யவல்லவர் வல்லவானுல காள்வரே

Vansiyaa thurai seiya vallavar valla vaanula kaalvarea

Without any reservation those disciples who are sang with excellent form that mighty upper world will be ruled by them

கர வில்லாது பாட வல்லவர்கள்.அவைகளை நீக்கவல்ல வானுலகத்தை ஆள்வார்கள்

OM THIRU CHITRAM BALAM.

April 15, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: