OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KADAYOOR VEERATTAM

ganesheit April 5, 2019

28.திருக்கடவூர் வீரட்டம்

THIRU KADAYOOR VEERATTAM

Nambi aarroorer who has prayed in thirunallaru place seated lard Siva and then entered in to thiru kadayoor temple place and then prayed lard Siva here named thiru veerastawshwarer and then sang the following decade. Here lard Siva who has destroyed death god Ema and saved margandayer and that god alone is our savior in this intuition filled way the following songs are sung

   நம்பி ஆரூரர் திருநள்ளாற்று அமுதைத் தொழுது திருக்கடவூர் அடைந்து வீரடேஷ்வரரை வணங்கிப் பாடி அருளியது இத்திருப்பதிகம். காலனைக் காய்ந்த பாலனைக் காத்த இவ்பெருமானையன்றி நமக்குத் துண்டையாவர்யாவர் என்று எழுந்த உணர்வினால் அருளிச் செய்யப்பட்டது.

பொடியார் மேனியனே புரி நூலொரு பாற்பொருந்த

PODI YAAR MENI YANEA PURI NOOL ORU PAAR POUNTHA

The sacred arts are adorned all over the body in that sacred form appeared He has adorned sacred three knotted thread on his bosom and yet another side lardess yumadeavi taken form

திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே புரியாகிய நூல் ஒரு பக்கம் மாதினோடும் மற்றொரு பால்


வடியார் மூவிலைவேல் வள ரங்கையின் மங்கையொடும்

VADI YAAR MOOVILAI VEL VALAR KAN GAIYIN MANGAI YODUM

The three leaves form of soolam battle force carried on hand all the time And on the head place ever flowing Ganges are kept in concealed form on his head

பொருந்தி விளங்க கூர்மை பொருந்திய முத்தலை வேல் (சூலம்)நீங்காது இருக்கின்ற அகங்கையினை உடைய தொடர்ந்து பாயும் கங்கையை தலையில் மறைத்தவனே


கடியார் கொன்றையனே கட வூர்தனுள் வீரட்டத்தெம்

KADIYAAR KONDRAI YANEA KADAVOOR THANUM VEERATTA THEM

The fragrance filled konrai flower garland on the head place Lard Siva you have descended in the thiru Kadavoor veerattam temple place as my leader form

நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே திருக்கடவூர் வீரட்டம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற எங்கள் தலைவனே


அடிகேள் என்னமுதே எனக் கார்துணை நீயலதே

ADIKEL EN AMUTHEA ENAKKU AAR THUNAI NEE YALATHEA

You are my nectar form existing here you are the only guide to me there is no one available

என்னுடைய அமுதம் போல்பவனே எனக்கு நீ அல்லாது வேறு யார் துணை

பிறையா ருஞ்சடையாய் பிர மன்தலை யிற்பலிகொள்

PIRAI YAARUNJ SADAI YAAI PRAMAN THALAIYIR PALI KOL

The decorated hair you have possessed you have carried bharma skill on your hand and then gone for begging food

பிறை பொருந்திய சடையை உடையவனே பிரம்மன் தலையைக் கையில் ஏந்தி அதில் பிச்சை எடுக்கின்ற


மறையார் வானவனே மறை யின்பொரு ளானவனே

MARAIYAAR VAA NAVANEA MARAIYIN PORUL AANA VANEA

You are always chanting veethass on your mouth you are existing the veetha meaning form

வேதத்தை ஓதுகின்ற தேவனே வேதத்தின் பொருளாய் உள்ளவனே


கறையா ரும்மிடற்றாய் கட வூர்தனுள் வீரட்டத்தெம்

KARAI YAARUM MIDAT RAAI KADAVOOR THANUL VEERATTA THEM

You have the poison tainted throat and stayed in the thiru kadavoor temple place

நஞ்சு தங்கிய கண்டத்தை உடையவனே திருக்கடவூர் வீரட்டம் என்னும்

இறைவா என்னமுதே எனக் கார்துணை நீயலதே

IRAIVAA EN AMUTHEA ENAKKU AAR THUNAI NEE YALATHEA

Where you have descended and you are my lard and you are my nectar form you are the only guide to me and there is no one else

கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற எங்கள் இறைவனே என்னுடைய அமுதம் போல்பவனே எனக்கு நீ அல்லாது வேறு யார் துணை

அன்றா லின்னிழற்கீழ் அறம் நால்வர்க் கருள்புரிந்து

AND RAALIN NILAR KEEIL ARAM NAALVARK KUM ARUL PURIN THU

Once you have seated under the papal tree the four saints you have preached the veetha’s inner meaning to them

நீ அன்று ஆல் நிழலின்கண் இருந்து நால்வர் முனிவர்களுக்கு அருள் பண்ணி


கொன்றாய் காலனுயிர் கொடுத் தாய்மறை யோனுக்குமான்

KOND RAAI KAALAN YUIR KODUTH THAAN MARAI YENUKKU MAAN

You have killed the death god ema and that hard act you have done and then gave that bharmin child infinitive life

காலன் உயிரைக் கொன்று வன் செயலைச் செய்தாய் அந்தணச் சிறுவனுக்கு முடிவு இல்லாத வாழ்நாளைக் கொடுத்தாய்


கன்றா ருங்கரவா கட வூர்த்திரு வீரட்டத்துள்

KANDR AARUNG KARA VAA KADAVOOR THANUM VEERATTATH THULL

Lard Siva you have carried stage on your hand In the Thiru kadavoor veeratam place

மான் கன்று பொருந்திய கையை உடையவனே திருக்கடவூர் வீரட்டத்துள்


என்றா தைபெருமான் எனக் கார்துணை நீயலதே

ENTHAA THAI PERU MAAN ENAKKU AAR THUNAI NEE YALATHEA

You have descended in my father form to protect me In that form except you are there is no one guide to me

எழுந்தருளி இருக்கின்ற என் தந்தையாகிய எம்பெருமானே அன்ன தன்மையை உடைய நீ யல்லாது வேறு யாவர் எனக்குத் துணை

போரா ருங்கரியின் னுரி போர்த்துப்பொன் மேனியின்மேல்

PORAARUM KARIYIN URI PORTHTHUP PON MENI YIN MEAL

The fighting force filled elephant and its skin you have adorned it in your golden color body

போர் தொழில் பொருந்திய யானையின் தோலைப் பொன் போலும் மேனிமேல் போர்த்துப் கொண்டும்


வாரா ரும்முலையாள் ஒரு பாக மகிழ்ந்தவனே

VAA RAARUM MULAI YAAL ORU PAAKAM MAKIL THAVANEA

And in that body one side the bra adorned lardess parvathi is given left part of your body happily In that happy form you have seated

அம்மேனியின் ஒரு பாகத்தில் கச்சுப் பொருந்திய தனங்களை உடைய உமையை மகிழ்ந்து வைத்தும் உள்ளவனே


காரா ரும்மிடற்றாய் கட வூர்தனுள் வீரட்டானத்

KAAR AARUM MITAT RAAI KADAVOOR THANUM VEERATTA THEM

The dark color throat you have possessed Lard Siva you have descended in the thiru Kadavoor veerattam temple place

கருமை நிறம் பொருந்திய கண்டத்தை உடையவனே திருக்கடவூர் வீரட்டம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற

தாரா வென்னமுதே எனக் கார்துணை நீயலதே

AARAA EN AMUTHEA ENAKKU AAR THUNAI NEE YALA THEA

You are always tastier amutham form existing in this world you are the only guide and protection to me

தெவிட்டாத என்னுடைய அமுதம் போல்பவனே எனக்கு நீ அல்லாது வேறு யாவர் துணை

மையார் கண்டத்தினாய் மத மாவுரி போர்த்தவனே

MAIYAAR KADATH THINAAI MATHA MAAVURI PORTH THAVANEA

The dark color throat you have possessed the mad elephant skin you have adorned it

கருமை பொருந்திய கண்டத்தை உடையவனே மதயானையின் தோலைப் போர்த்தவனே


பொய்யா தென்னுயிருட் புகுந் தாய் இன்னம் போந்தறியாய்

POIYAATHU EN YUIRUL PUGUN THAAI INNAM PONTH THARIYAAI

Without fail you have entered in to my soul once you have entered and then after wards you did not go away from this place

நீ தப்பாது என் உயிரினுள் புகுந்தாய் அவ்வாறு புகுந்தது அன்றி இது காலும் வெளியில் போய் அறியார்


கையார் ஆடரவா கட வூர்தனுள் வீரட்டத்தெம்

KAIYAAR AADARA VAA KADAVOOR THANUM VEERATTA THEM

You have carried dancing snake on your hands you have descended in the thiru kadavor veerattam temple place as my father form

கையின் கண் பொருந்தி நிற்கும் படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை உடையவனே திருக்கடவூர் வீரட்டம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற

ஐயா என்னமுதே எனக் கார்துணை நீயலதே

AIYAA EN AMUTHEA ENAKKU AAR THUNAI NEE YALATHEA

You are my leader and amutham form you are the only protector to me there is no one else available in this world

எங்கள் தலைவா என்னுடைய அமுதம் போன்றவனே ஆதலின் நீ அல்லாது வேறு யாவர் துணை

மண்ணீர் தீவெளிகால் வரு பூதங்க ளாகிமற்றும்

MANNEER THEE VELI KAL VARU POOTHANGKAL AAKI MATRUM

You are in the form of land fire water wind and space form in that big vast form existing in this world

நிலம் நீர் தீ காற்று வானம் என்று சொல்ல வருகின்ற பூதங்கள் ஆகியும்


பெண்ணோ டாணலியாய்ப் பிற வாவுரு வானவனே

PEN NODU AAN ALIYAAI PIRAVAA URU AANAVANEA

And then with that mingled form of created male female Ali and in those body form of living In that creation you have taken a form of which is apart from it

அப்பூதங்களாகிய பெண் ஆண் அலி என்னும் உடம்புகளோடு காணப்படும் உயிர்கள் ஆகியும் அவற்றில் வேறற நின்று நீ உருவம் கொள்ளும் இடத்து யாதொரு பிறப்பினும் படாத திருமேனியைக் கொண்டு நிற்பவனே

கண்ணா ருண்மணியே கட வூர்தனுள் வீரட்டத்தெம்

KANN AARUM MANIYEA KADAVOOR THANUM VEERATTA THEM

You are with in the eye the pupil form Lard Siva you have descended in the thiru kadavoor veerattam temple place
கண்ணின் உள்ளில் பொருந்தி உள்ள மணி போன்றவனே திருக்கடவூரில் உள்ள வீரட்டம் என்னும் கோயிலில் எழுந்தருளி உள்ள


அண்ணா என்னமுதே எனக் கார்துணை நீயலதே

ANNA EN AMUTHEA ENAKKU AAR THUNAI NEE YALATHEA

You are my leader and amutham form you are the only guide to me in this troubled world

எங்கள் தலைவனே என்னுடைய அமுதம் போல்பவனே எனக்கு நீ அல்லாது வேறு யாவர் துணை

எரியார் புன்சடைமேல் இள நாக மணிந்தவனே

ERIYAAR PUN SADAI MEL ILA NAGAM ANINTHA VANEA

The red color fire form of hair on that soft place the young snakes are adorned

தீப்போலப் பொருந்தி உள்ள மெல்லிய சடையின் மேல் இளமையான பாம்பை அணிந்தவனே


நரியா ருஞ்சுடலை நகு வெண்டலை கொண்டவனே

NARI YAARUNJ SUDALAI NAGU VEN THALAI KONDA VANEA

The foxes are filled burial ground, the laughing form of white skull carried on hands

நரிகள் பொருந்திய சுடலைக்கண் உள்ள சிரிக்கும் வெண்டலையைக் கையில் கொண்டவனே


கரியா ரீருரியாய் கட வூர்தனுள் வீரட்டத்தெம்

KARIYAAR EER YURIAAI KADAVOOR THANUM VEERATTA THEM

From the elephant place pealed skin you have adorned it as upper dress in the thiru kadavoor veeratam temple place you have descended

யானை இடத்துப் பொருந்தி இருக்கும் உரிக்கப்பட்ட தோலை உடுத்தியவனே திருக்கடவூரில் உள்ள வீரட்டம் என்னும் கோயிலில் எழுந்தருளி உள்ள


அரியாய் என்னமுதே எனக் கார்துணை நீயலதே

ARIYAAI EN AMUTHEA ENAKKU AAR THUNAI NEE YALATHEA

You are rare form to me and my nectar form you are and you are the only guide to me

எங்கள் அரிய பொருள் ஆனவனே என்னுடைய அமுதம் போன்றவனே எனக்கு நீ அல்லாது வேறு யார் துணை

வேறா உன்னடியேன் விளங் குங்குழைக் காதுடையாய்

VERAA UNNADIYEN VILANGUNG KULAI KAA THUDAI YAAI

I am your slave the light emanating the ear ornament kulai you have adorned it

உன் அடியவனாகிய நான்ஒளி வீசுகின்ற குழையணிந்த காதினை உடையவனே


தேறேன் உன்னையல்லாற் சிவ னேஎன் செழுஞ்சுடரே

THEREN UNNAI YALLAAL SIVANEA EN SELUN SUDAREA

You are the only prime god in this world Lard Siva is in light form

உன்னை அல்லாது வேறு யாரையும் கடவுளாக உள்ளவராக நினையேன் சிவனே செழுமையான் சுடர் வடிவினன்


காறார் வெண்மருப்பா கட வூர்த்திரு வீரட்டத்துள்

KAARAAR VEN MARUPPAA KADAVOOR THANUM VEERATTA THEM

The white teeth are adorned as garland in the thiru kadavoor temple place you have descended

கறையாகப் பொருந்திய வெள்ளிய தந்தத்தை உடையவனே திருக்கடவூரில் உள்ள வீரட்டம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற


ஆறார் செஞ்சடையாய் எனக் கார்துணை நீயலதே

AARAAR SENJ SADAIYAAI ENAKKU AAR THUNAI NEE YALATHEA

The water filled red color hair you have possessed so you are the only protector and guide to me

நீர் பொருந்திய சடையை உடையவனே ஆதலின் எனக்கு நீ யல்லாது வேறு யார் துணை

அயனோ டன்றரியும் மடி யும்முடி காண்பரிய

AYANODU ANDRU ARIYUM ADI MUDI KAAN PARIYA

Once bharma And Thirumal You have stood before them in fire pole form

முன்னொரு நாள் பிரமனும் திருமாலும் நின்ற பொருளாய் உள்ளவனே


பயனே யெம்பரனே பர மாய பரஞ்சுடரே

PAYANEA EM PARANEA PARAMAAYA PARANJ SUDAREA

You are my god and highly regarded light form you are The much water filled hair you have possessed

எங்கள் கடவுளே மேலான் ஒளிக்கும் மேலான ஒளியாய் இருப்பவனே மிக்க நீர் பொருந்திய சடையை உடையவனே


கயமா ருஞ்சடையாய் கட வூர்த்திரு வீரட்டத்துள்

KAYA MAAYANJ SADAI YAAI KADAVOOR THANUM VEERATTATH THULL

மிக்க நீர் பொருந்திய் சடையை உடையவனே திருக்கடவூரில் உள்ள திருவீரட்டானம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற
You have descended in the thiru kadavoor temple place


அயனே என்னமுதே எனக் கார்துணை நீயலதே

AYANEA EN AMUTHEA ENAKKU AAR THUNAI NEE YALATHEA

You have no birth and death in this world and my nectar form you are the only guide to me

பிறப்பில்லாதவனே என்னுடைய அமுதம் போல்பவனே எனக்கு நீ அல்லாது வேறு யார் துணை

காரா ரும்பொழில்சூழ் கட வூர்த்திரு வீரட்டத்துள்

KAARAARUM POLIL SOOL KADAVOOR THIRU VEERATTA THUL

The clouds are crawyalling plantations are covered place in the thiru kadayoor temple place dwelling

மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரில் உள்ள திருவீரட்டானம் என்னும் கோயிலில் விளங்குதல்


ஏரா ரும்மிறையைத் துணை யாஎழில் நாவலர்கோன்

EERAARUM IRAI YAITH THUNAI YAA ELIL NAA VALAR KON

In well settled form and in the thiru navaloor place descended

பொருந்திய இறைவனேயே துணையாக சிறப்பித்து அழகிய திருநாவலூரில் தோன்றியவனும்


ஆரூ ரன்னடியான் அடித் தொண்ட னுரைத்ததமிழ்

AARURAN ADIYAAN ADITH THONDAN URATH TAMIL

I am slave to thiruvarroor god and that lard Siva’s shadow never moved away in that way doing menial service

திருவருள் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடி நிழலை நீங்காதிருந்து தொண்டு செய்பவனும்


பாரோர் ஏத்தவல்லார் பர லோகத் திருப்பாரே

PAAROR ETHTHA VALLAAR PARALO GATHTHU IRUPPAA REA

That nambi arroren who has sung the above poems and this land people who are sung it they will definitely settled down in the sivalogam

ஆகிய நம்பி ஆரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களை நில உலகில் உள்ளவர் பாடவல்லாராயின் சிவலோகத்தில் இருத்தல் திண்ணம்

OM CHITRAMBALAM

April 5, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: