THIRU KALAIPPAALAI
23. திருக்கழிப்பாலை
THIRU KALAIPPAALAI
Lard Siva who has seated in thiru karugaayoor temple place and where Sunderer prayed lard Siva and then afterwards he went to thirkalippaalai temple place where he sang the following songs. He praised lard Siva in variety of ways
சுந்தரர் திருககுருகாவூர் அமர்ந்தருளும் குழகரை பணிந்து பின் பல பதிகளையும் வணங்கி திருக்கழிப்பாலை சென்று தொழுது பாடி அருளியது இத்திருப்பதிகம். இறைவனை பலவாறு புகழ்ந்து போற்றப் பெற்றது.
1 செடியேன் தீவினையில் தடு
SEDIYEAN THEE VINAIYIL THADU
I am not good character filled person and then I have fallen the bad habit deeds
குணம் இல்லா தவனாகிய யான் தீ வினையில்
மாறக் கண்டாலும்
MAARAK KANDAALUM
And then toiling and moiling there which is seen in with own eyes
கிடந்து தருமாறுவதை நேரே பார்த்தலும்
அடியான் ஆவஎனா தொழி
ADIYAAN AAVA ENAA THOLI
Alas! He is our disciples
அந்தோ இவன் தம் அடியவன்
தல்த கவாமே
TAL THA GAVAAMEA
In that way not melted down and is it acceptable one
என்பது இரங்காது வாளா இருத்தல் தகுமகுமோ
முடிமேல் மாமதியும் அர
MUDIMEL MAA MATHIYUM ARA
On the sacred head the moon is adorned
திருமுடிமேல் பெருமை பொருந்திய பிறையும்
வும்மு டன்துயிலும்
VUM MUDAN THUYILUM
And snake where in clubbed form sleeping without any enmity
பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயிலும்
வடிவே தாம் உடையார் மகி
VADIVEA THAAM UDAI YAAR MAKI
In that appearance possessed lard Siva
வடிவத்தை உடையவன்
ழுங்கழிப் பாலையதே
LUNG KALIP PAALAI YATHEA
Who has willingly descended place is thiru kalippaalai
தாம் மகிழ்ந்து எழுந்தருளி உள்ள திருக்கழிப்பாலையில்
2. எங்கே னும்மிருந்துன் னடி
ENGENUM MIRUN THUNNADI
Lard Siva I am your disciple and where ever is my dwelling place
உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும்
யேன்உ னைநினைந்தால்
YEEAN UNNAI NINATHTHAAL
If I think over you
இருந்து உன்னை நினைத்தால்
அங்கே வந்தென்னொடும் முட
ANGEA VAN THEN OODUM MUDA
You may go over there and then with me
அங்கே வந்து என்னோடு
னாகி நின்றருளி
NAAKI NIN RARULI
You may clubbed with me and then stand there
கூடி நின்று
இங்கே என்வினையை யறுத்
INGEA EN VINAIYAI YARUTH
Where you may terminate my bad deeds
என் வினையை நீக்கு
திட்டெ னையாளுங்
THIT TENAI YAALUNG
And then taken me under your control
அறுத்துவிட்டு என்னை ஆண்டருள்கின்ற
கங்கா நாயகனே கழிப்
KANGAA NAAYA KANEA KALIP
You are hero to Ganges
கங்கைக்கு நாயகனே
பாலை மேயானே
PAALAI ME YAANEA
That kalippalai place you have willingly descended and then blessed all
திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளி இருக்கின்றவனே
3. ஒறுத்தாய் நின்னருளில் லடி
ORUTH THAAI NIN ARULIL LADI
With your grace you have given me punishment
உனது கருணையினாலே என்னை ஒறுத்தாய்
யேன்பி ழைத்தனகள்
YEN PILAITH THANAKAL
Once I have did a mistake
அடியேன் ஒரு பிழைக்காக முன்பு
பொறுத்தாய் எத்தனையுந் நா
PORUTH THAAI ETH THANAI YUNTHAA
And then after wards whatever form of mistakes it will be you have forgiven me
பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்துனையாயினும் அவை அனைத்தையும்
யேனைப் பொருட்படுத்துச்
YENAAIP PORTUT TPADUTHTHU
I am dog like person you consider me as a disciple and then forebears it
நாய் போலும் என்னை ஒரு பொருளாக வைத்து பொறுத்துக் கொண்டாய்
செறுத்தாய் வேலைவிடம் மறி
SEUTH THAAI VELAI VIDAM MARI
So as to preserve veethass you have consumed from the sea emanating poison
வேதங்கள் இறவாது இருத்தல் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை
யாமல் உண்டுகண்டங்
YAAMAL UNDU KANDANG
And then made it to stay in the throat so that not to do any harm to others
இறவாமல் கண்டத்தில் நிறுத்தினாய்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்
KARUTHTHAAI THAN KALANIK KALIP
So that the throat place is converted as dark form and then put your grace to all
அதனால் அந்த இடம் கரிதாயினாய் இவை உன் அருள் செயல்கள்
பாலை மேயானே
PAALAI MEE YAANEA
In that way you have descended in thirukallip paalai temple place
குளிர்ந்த கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளி இருக்கின்றவனே
4. சுரும்பார் விண்டமல ரவை
SURUMBAAR VINDA MALAR AVAI
While bees are raising the humming sound
வண்டுகள் ஒலிக்கின்ற அப்பொழுது
தூவித் தூங்குகண்ணீர்
THOOVITH THOONGU KANNEER
At that time bloomed the flowers are carried on hands and water is shedding down
மலரும் மலர்களைத் தூவி பாய்தற்கு உரிய கண்ணீர்
அரும்பா நிற்குமனத் தடி
ARUMBAA NIRKU MANATH THADI
From the eyes that melted form of mind possessed
அரும்புகின்றமைக்குள் காரணமான மனத்தை உடைய
யாரொடும் அன்புசெய்வன்
YAARO DUM ANBU SEIVAN
With that dispels clubbed form showered love towards you
அடியார்களோடு கூடி நின்று அடியேன் உனக்கு அன்பு செய்வேன்
விரும்பேன் உன்னையல்லால் ஒரு
VIRUMPEAN UNNAIY ALLAAL ORU
Without you I will not show love towards any other sub gods
உன்னையன்றி வேறு ஒரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன்
தெய்வம் என்மனத்தால்
THEI VAM EN MANTH THAAL
It is emanated from my mind place
இது என் மன உணர்வில் இருந்தவாறு
கரும்பா ருங்கழனிக் கழிப்
KARUM BAARUNG KALANIK KALIP
The sugar canes are growing the fields are surrounded place
கரும்புகள் நிறைந்த கழனிகளை உடைய
பாலை மேயானே
PAALAI MEEYAA NEA
In that kalippaalai place lard Siva you have descended
கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளி இருக்கின்றவனே
5. ஒழிப்பாய் என்வினையை உகப்
OLIPPAAI EN VINAIYAI UKAP
You may terminate my bad deeds and then afterwards put me
என் வினையை நீக்கி என்னை
பாய்மு னிந்தருளித்
PAAI MUNI THARULITH
In that happiness mood and on the contrary form of you my show angry towards me
இன்புறச் செய்யினும் செய்வார் அன்றி என்னை கோபித்து உரக்க
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை
THELIP PAAI MOTHU VIPPAAI VILAI
And then uttered cursing wards towards me
கடும் சொற்களால் இகழிலும் இகழ்வாய்
ஆவ ணம்முடையாய்
AAVANAM MUDAI YAAI
You have purchased me as slave with the help of palm leaf document in that principal form you are
நீ என்னை உனக்கு உரியவனாக்கிக் கொண்டு விலை பத்திரத்தை உடையவன் ஆதலின்
சுழிப்பால் கண்டடங்கச் சுழி
DOLIP PAAL KAN THA ADANGKACH SULI
You may like me and then talk me with good wards and then afterwards with that reason
என்னோடு விரும்பி அளவளாவினும் அளவளாவுவாய் பின் அது காரணமாக
யேந்து மாமறுகிற்
YEAN THU MAA MARUKIR
You may deep water place where I have trapped and then you may retrieved me and give relief to my bad deeds and then put me in happiness form
நீர்ச் சுழிகளை அலை கழியிடத்தை அடைந்து அடங்குமாறு தங்கி நிற்கின்ற தெருக்களை உடைய என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய்
கழிப்பா லைமருவுங் கன
KALIP PAALAI MARU YUNG KANA
Lard Siva in that way you have descended in thiru kalippaalai temple place
திருக்கழிப்பாலையில் எழுந்தருளி இருக்கின்றவனே
லேந்து கையானே
LENTHU KAI YAANEA
Lard Siva you have carried fire pot on your hands
தீயேந்திய கையினை உடையவனே
6. ஆர்த்தாய் ஆடரவை அரை
AARTH THAAI AADA RAIVAI ARAI
The dancing snake you have tied on your waist as belt
ஆடுகின்ற பாம்பை கட்டியவனே
ஆர்பு லியதள்மேற்
AAR PULI YATHAL MER
In the waist place tied the tiger skin on it
அரையின்கண் பொருந்திய புலிதோலின்மேல்
போர்த்தாய் யானையின்தோல் உரி
PORTH THAAI YAANAI YIN THOL URI
From the elephant place pealed down the skin
யானையின் உரிக்கப்பட்டதாகிய
வைபு லால்நாறக்
VAIPU LAAL NAA RAK
Which is adorned on your upper body place as carpet form which highly stinking one
தோலால் புலால் நாற்றம் வீசும்படி போர்த்திக் கொண்டாய்
காத்தாய் தொண்டுசெய்வார் வினை
KAA THHTHAAI THONDU SEIVAAR VINAI
Those who are doing service under your feet
உனக்கு தொண்டு செய்வாரது
கள்ள வைபோகப்
KALLA VAI POKA
Whose bad deeds are removed form you have turned your benevolent eyes
வினைகள் நிங்கும்படி திருக்கண் நோக்கக்
பார்த்தாய் நுற்கிடமாம் பழி
PAARTH THAAI NUR KIDA MAAM PALI
You have put me and then preserve me and then blessed me so your residential place is
வைத்து பார்த்து காத்து அருளியவனே உனக்கு புகழிடம்
யில்கழிப் பாலையதே
YIL KALIP PAALAI YATHEA
Thiru kalippaalai temple place
ஆவது திருக்கழிப்பாலையே
7. பருத்தாள் வன்பகட்டைப் பட
PARUTH THAAL VAN PA KATTAIP PADA
The mighty powerful leg possessed
பருத்த கால்களை உடைய வலிய
மாகமுன் பற்றியதள்
MAAKA MUN PATRIYA THAL
That elephant is trapped and then its skin is
யானையைப் பிடித்து அதன் தோலை
உரித்தாய் யானையின்தோல் உல
URITH THAAI YAANAI YIN THOL ULA
Pealed and adorned it
உரித்தாய்
கந்தொழும் உத்தமனே
KAN THOLUM UTHTHA MANEA
In that form the whole world is praying you in pure form that highly regarded person you are
உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே
எரித்தாய் முப்புரமும் மிமை
ERITHTHAAI MUPPURA MUM MIMAI
You have fired three castles which is your brave act on your part
முப்புரங்களையும் எரித்தாய் இவை உனது வீரச் செயல்கள்
யோர்க ளிடர்கடியுங்
YOR KALI DAR KADIYUNG
You have removed deevaas sorrows and then blessed them in that leadership qualities you have possessed
தேவர்கள் துன்பத்தை நீக்கி அருள்கின்ற தலைவனே
கருத்தா தண்கழனிக் கழிப்
KARUTH THAA THAN KALANIK KALIP
The cool paddy fields are filled place
குளிர்ந்த வயல்களை உடைய
பாலை மேயானே
PAALAI MEEYAANEA
In that kalippaalai place you have descended willingly
திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளி இருக்கின்றவனே
8. படைத்தாய் ஞாலமெலாம் படர்
PADAITHTHAAI GNALAMELAAM PADAR
You have created the whole world
நீ உலகம் எல்லாவற்றையும் படைத்தாய்
புன்சடை யெம்பரமா
PUN SADAI YEM PARA MAA
The spread over form of pigtail you have possessed and you are our prime lard
விரிந்த புல்லிய சடையினை உடைய எங்கள் இறைவனே
உடைத்தாய் வேள்விதனை உமை
UDAI THTHAAI VELVI THANAI UMAI
You have destroyed Thakkan yaga fire
தக்களது வேள்வியை அழித்தாய்
யாளையொர் கூறுடையாய்
YAALAI YOR KOOR UDAIYAAI
Lard Siva you have possessed lardess parvathi in your left part of body
உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே
அடர்த்தாய் வல்லரக்கன் தலை
ADARTH THAAI VAL ARAKKAN THALAI
The mighty powerful Ravana head
வலிய அரக்கனாகிய ராவணனது
பத்தொடு தோள்நெரியக்
PATHTHODU THOL NERIYAK
Are in ten and shoulders are twenty in number AND all are smashed that is your power
பத்து தலைகளோடு இருபது தோள்களும் நெறியும்படி நொருக்கினாய் இது உன் வல்லமைகள்
கடற்சா ருங்கழனிக் கழிப்
KADAR SAARUNG KALANIK KALIP
And sea side nearby place fields are filled form
கடலைச் சார்ந்த கழனிகளை உடைய
பாலை மேயானே
PAALAI MEEYAANEA
You have descended in thiru kalippaalai temple place
திருக்கழிப்பாலையில் எழுந்தருளி இருக்கின்றவனே
9. பொய்யா நாவதனாற் புகழ்
POIYAA NAA VATHAA NNAR PUGAL
Without telling lie with that tongue
பொய் கூறுதல் இல்லாத நாவினால்
வார்கள் மனத்தினுள்ளே
VAARKAL MANATHTHI NULLEA
Those who are glorify your glory in their mind
புகழ்கின்றவர்களது மனத்தில்
மெய்யே நின்றெரியும் விளக்
MEIYEA NINDRIYUM VILAK
You are burning not to be extinguished in that lamp form
அனையாது எரியும் விளக்கே போல்
கேயொத்த தேவர்பிரான்
KE YOTHTHA DEVAR PIRAAN
In that form existing lard Siva
விளங்கு நிற்கின்ற பெரிய தேவனும்
செய்யா னுங்கரிய நிறத்
SEIYAA NUNG KARIYA NIRATH
The red color body possessed Bharma
செம்மை நிறமுடைய பிரமனும்
தானுந் தெரிவரியான்
THAANUNTH THEIR VARIYAAN
And black color body possessed Thirumal who are unable to know him in that rare form of lard Siva
கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபெருமான்
மையார் கண்ணியொடும் மகிழ்
MAIYAAR KAANI YODUM MAKIL
The eye paste adorned that glittering eyes are possessed lardess Yumadevi and with her
மை பொருந்திய கண்களை உடைய உமா தேவியோடும்
வான்கழிப் பாலையதே
VAAL KALIP PAALAI YATHEA
Who has descended in that kalippaalai temple place willingly?
எழுந்தருளி இருப்பான் மகிழ்வுடன் திருக்கழிப் பாலையை விரும்பியே
10. பழிசே ரில்புகழான் பர
PALISERIL PUGALAAN PARA
Without sin that glory filled form of lard Siva
பழி பொருந்துதல் இல்லாத புகழை உடையவனும்
மன்ப ரமேட்டி
MAN PARA MEETTIL
He is highly regarded person to all others in this universe
யாவருக்கும் மேலானவனும் மேலிட்டத்தில் உள்ளவனும்
கழியார் செல்வ மல்குங் கழிப்
KALIYAAR SELVA MALGUNG KALIP
In that wealth filled sea side place
ஆகிய கழியின் கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற
பாலை மேயானைத்
PAALAI ME YAANAITH
In that thiru kalippaalai place descended lard Siva willingly
திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை
தொழுவான் நாவலர்கோன் ஆ
THOLUVAAN NAAVALAR KON AA
Those disciples who are under lard Siva’s feet and thirnavaloor leader
அவனைத் தொழுபவர்க்கு உரியவன் ஆகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம்
ரூரன் உரைத்ததமிழ்
AARURAN URAITH THA TAMIL
Who is Nambi arroren who sung the above Tamil Poems?
நம்பி ஆரூரன் பாடிய இத்தமிழ் பாடல்களைத்
வழுவா மாலைவல்லார் வா
VALUVAA MAALAI VALLAAR VAA
Those who are sung without any defect in that excelled form of
தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள்
னோருல காள்பவரே
NOR ULA KAAL PAVAREA
They will rule the upper world
தேவர் உலகத்தை ஆள்பவர்கள்
OM THIRUCHITRAMBALAM