19 திருநின்றியூர்
Thiruninriyoor
Sunderer prayed in thirunanipalli thirusemponpalli and then entered in to thirunanipalli and stayed some more days there at that time he sang the following decade. In this decade he explains the greatness of lard Siva
சுந்தரர் திருநனிப்பள்ளி திருச்செம் பொன்பள்ளி முதலான தலங்களை வணங்கித் திருநின்றியூர் தொழுது பாடி அருளிய திருவும் வண்மையும் என்னும் திருப்பதிகத்திற்குப் பின்பு அத்தலத்தில் அன்பருடன் அமர்ந்திருந்த நாள்களில் பாடி அருளியது.
இத்திருப்பதிகம் இறைவன் பெருமைகளை எடுத்து இயம்புகின்றது.
- அற்றவ னாரடி யார்தமக் காயிழை பங்கினராம்
ATRAVA NAAR ADIYAAR THAMAKKU KAAYILAI PAN KINA RAAM
To terminate other relationships and then surrender under lard Siva’s feet He has been appearing with lardess yumadevi in artanareswarer form
பிற பற்றுகளில் இருந்து விடுபட்டு தம் அடியையே பற்றும் பெண்ணொடு பாகத்தாராகிய
பற்றவ னாரெம் பராபரர் என்று பலர்விரும்பும்
PATRAVANAA REM PARAA PARAR ENDRU PALAR VIRUMBUM
That lust filled person is lard Siva In that way all the disciples are liked him
பற்றினை உடையவர் எம் பெருமான் என்று பலராலும் விரும்பப்படுகின்ற
கொற்றவ னார்குறு காதவர் ஊர்நெடு வெஞ்சரத்தால்
KOT RAVANAAR KURU KAATHAVAR OOR NEDU VEN SARATH THAAL
That that type of leader he is and where as the opponent Places are destroyed by the wild arrow
தலைவரும் பகைவரினுடைய ஊரினை பெரிய கொடிய அம்பினால்
செற்றவ னார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே
SETRAVA NAARK KIDA MAAVATHU NANTHI THIRU NINDRI YOOREA
And that lard Siva’s residential place is our best place thirunin riyoor
அழித்தவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே
2 வாசத்தி னார்மலர்க் கொன்றையுள் ளார்வடி வார்ந்தநீறு
VAASATH THINAAR MALARK KONDRAI YUL LAAR VADIVAARNTHA NEERU
The fragrance filled konrai flower garland adorned and the lovely sacred ashes are adorned all over the body
மனம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவரும் அழகிய திருநீற்றைப் பூசுதலை உடையவரும்
பூசத்தி னார்புக லிந்நகர் போற்றும்எம் புண்ணிய வடிவினரும்
POOSATHTHINAAR PUGALINTH NAGAR POTRUM EM PUNNIYA VADIVINARUM
He has taken seerkaali place as permanent residential one and that is protected at the yooli time of destruction that pounniya form of lard Siva That boon form appearing to the whole world
சீர்காழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற
புண்ணியத்தார்
நேசத்தி னால்என்னை ஆளுங்கொண் டார்நெடு மாகடல்சூழ்
NESATH THINAAL ENAI AALUNG KON KONDAAR NEDUMAA KADAL SOOL
With grace form he has taken me as his slave and that big sea covered
அருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும் நீண்ட பெரிய கடல் சூழ்ந்த
தேசத்தி னார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே
THESATH THINAAR KIDA MAAVATHU NATH THIRU NINDR I YOOREA
World possessed form to whom his staying place is thiruninriyoor
உலகத்தை உடையவரும் ஆகிய இறைவனுக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே
அங்கையின் மூவிலை வேலர் அமரர் அடிபரவச்
ANGAIYIN MOOVILAI VELAR AMARAR ADI PARAVACH
On the hand three leaves form of soolam force carried on hand Deevass are saluted under his feet
அங்கையில் மூவிலை வேலை சூலத்தை உடையவரும் தேவர்கள் தம் திருவடியைத் துதிக்க
சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சமுண்டார்
SANGAIYAI NEENGA ARULITH THADANG KADAL NAJA MUNDAAR
Those persons problematic mind is cleaned and then poured his grace on them from the big sea emanated poison is consumed that form prime lard he is
அவர்கள் தம் மனக்கலகத்தை நீக்குமாறு அருள் சுரந்து பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்பவரும் ஆகிய இறைவர்
மங்கையொர் பாகர் மகிழ்ந்த இடம்வளம் மல்குபுனற்
MANGAI YOR PAAKAR MAKIL NTHA IDAM VALAM MALGU PUNAL
Lard Siva who has given his left part of his body to lardess yumadevi happily And fertile place where abundant water available
உமாதேவியை ஒரு பாகமாக மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளி உள்ள இடம் வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண்
செங்கயல் பாயும் வயல்பொலி யுந்திரு நின்றியூரே
SENGKAYAL PAAYUM VAYAL POLI YUN THTHIRU NINDRI YOOREA
The red color fishes are jumped and leap forward that ever active place is thiru ninriyoor
செவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் விளங்கும் திருநின்றியூரே
ஆறுகந் தார்அங்கம் நான்மறை யார்எங்கு மாகிஅடல்
AARUKANTHAAR ANGAM NAANMARAI YAAR ENGU MAAKI ADAL
Four veethass and six angaass are composed willingly Which is possessed by him and ever winning force filled form
வேதத்தின் ஆறு அங்கங்களையும் விரும்பிச் செய்த நான்கு வேதங்களையும் உடையவரும் எவ்விடத்தும் நிறைந்து நின்று வெல்லுதலை உடைய
ஏறுகந் தார்இசை ஏழுகந் தார்முடிக் கங்கைதன்னை
Erukanthaar isai elukanthaar mudik kangai thannai
Who has ascended on the back of the bull and seven forms of musical notes filled are willingly heard. He has liked to keep Ganges on his head
எருதை விரும்பி ஏறு பவரும் ஏழ் இசைகளையும் விரும்பி கேட்பவரும் கங்காதேவியை சிறப்பாக விரும்பித்
வேறுகந் தார்விரி நூலுகந் தார்பரி சாந்தமதா
VEERU UKANTHAAR VIRI NOOLAKANTH THAAR PARI SAANTHA MAATHAA
He has kept her in concealed form and the broad form of three knotted thread on his bosom adorned form and all over the body he has sacred ashes as paste form
தலையில் மறைத்து வைத்திருப்பவரும் அகன்ற முப்புரி நூலை விரும்பி அணிபவரும் பூசிக் கொள்கின்ற சாந்தமாகத் திருநீற்றை
நீறுகந் தார்உறை யும்மிட மாந்திரு நின்றியூரே
NEERU YUGANTHAAR URAIYUM MIDA MAAN THIRU NINDRI YOOREA
Which is liked by him and whose residential place is our loveable thiru ninri yoou place
விரும்புகின்றவரும் அணிபவரும் ஆகிய இறைவர் எழுந்தருளி உள்ள இடம் திருநின்றியூரே
வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில் லார்நறு நெய்தயிர்பால்
VANJSANG KONDAAR MANANJ SERA KIL KILLAAR NARU NEI THAYIR PAAL
Those who are in vengeance filled mind with them he did not enter in their mind the pure ghee cured milk and with it
வஞ்சனை உடையவரது மனத்தில் சேராதவரும் நறு நெய் தயிர் பால் முதலிய
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி னார்அதி கைப்பதியே
ANJUNG KONDAA DIYA VETKAIYI KAYI NAAR ATHIKAIP PATHIYEEA
That five type of cow products with it he has taken bath daily and those disciples who are coming with willingness form. That surrended disciples under lard Siva’s feet
ஆள் ஐந்தினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற பெறு விருப்புடைய வரும்
தஞ்சங்கொண்டார்தமக் கென்றும் இருக்கை சரணடைந்தார்
THANJANG KONDAAR THAMAK KENDRUM IRUKKAI SARA NADAI THAAR
that surrendered disciples those considered him as his destination
அதனைத் தஞ்சமாகக் கொண்டவரும் தமக்கு என்றும் இருக்கையாகும்படி
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே
NENJANG KONDAAR KIDA MAAVATHU NAN THIRU NINDRI YOOREA
And then taken him as their protection place and their mind is considered as the paddy field form to that lard Siva. That dwelling place is thiru ninriyoor
தம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே
ஆர்த்தவர் ஆடர வம்மரை மேற்புலி ஈருரிவை
AARTHTHAVAR AADARAVAM MARAI MER PULI EERURI VAI
In the waist place tied snake as belt and under it the tiger skin is tied
அரையில் ஆடுகின்ற பாம்பைக் கட்டிய வரும் அதன் கீழ் புலியினது பசுந் தோலையும் உரித்துப்
போர்த்தவர் ஆனையின் தோலுடல் வெம்புலால் கையகலப்
PORTH THAVAR AANAIYIL THOL UDAL VEM PULAAL KAIYA KALA
As lower cloth and elephant skin is adorned as upper dress So that the bad flesh stinging is not emanated from his body
போர்த்தவரும் உடம்பில் யானையின் தோலை போர்த்தியவரும் அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு
பார்த்தவர் இன்னுயிர் பார்படைத் தான்சிரம்
PAAR THAVAR INNUYIR PAAR PADAITH THAAN SIRAM
And then in this world the life form is creating
செய்து கொண்டவரும் பூமியில் இனிய உயிர்களைப் படைத்தவனாகிய
அஞ்சிலொன்றைச்
That bharma from his five heads out of one
பிரமதேவன் தலைகள் ஐந்தில் ஒன்றைத்
சேர்த்தவ ருக்குறை யும்மிட மாந்திரு நின்றியூரே
SERTHT THAVARUKKU KURAIYUM MIDAM MAANTHI THIRU NINDRI YOOREA
Who has plucked it and then kept on his hand as begging bowel whose residential place is thiru ninriyoor
தம் கையில் வைத்துக் கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடம் ஆகும் திருநின்றியூரே
7. தலையிடை யார்பலி சென்றகந் தோறுந்
THALAI YIDAI YAAL PALI SEND RA KAN THORUNTH
To carry begging bowel on hand and then go for begging food to every house steps that rich person is lard Siva
தலை ஓட்டைப் பொருந்துகின்ற பிச்சைக்குச் சென்று இல்லங்கள்
திரிந்தசெல்வர் தோறும் திரிகின்ற தன்மையை உடைய செல்வரும்
மலையுடை யாள்ஒரு பாகம்வைத் தார்கற் றுதைந்தநன்னீர்
MALAI YUDAIYAAL ORU PAAKAM VAITHTHA THAAR KAT RUTHAINTHA NANNEER
The hill as birth place possessed that lardess yumadevi and lard Siva carried in his left part of body from the hilly place emanated pure water
மலையைப் பிறந்த இடமாக உடையவளை ஒரு பாகத்தில் கொடுத்தவரும் மலையின் கண் நிறைந்து வீழ்கின்ற நல்ல நீரினது
அலையுடை யார்சடை எட்டுஞ் சுழல அருநடஞ்செய்
ALAIYUDAIYAAR SADAI ETTUNJ SULALA ARU NADANJ SEI
That waves are emanating Ganges on lard Siva’s hair on eight direction rotating in the form dancing lard Siva
அலையை உடைய நிறைந்த சடைகள் எட்டும் எட்டு திசைகளில் கழலுமாறு அரிய நடனத்தை செய்கின்ற
நிலையுடை யார்உறை யும்மிட மாந்திரு நின்றியூரே
NILAI YUDAI YAAR URAIYUM MIDA MAAN THIRU NINDRI YOOREA
That lard Siva’s descended place is Thiru ninriyoor
நிலையினை உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளி உள்ள இடம் ஆகும் திருநின்றியூர்
எட்டுகந் தார்திசை யேழுகந் தார்எழுத் தாறுமன்பர்
ETTU YUKANTHAAR THISAI YEAL UKANTH KANTHAAR ELUTH THAARU MANBAR
The eight direction and with seven letters Created seven types of musical notes
திசைகள் எட்டினையும் ஏழ எழுத்துக்களால் தோற்றுவிக்கப்படும் இசைகள் ஏழினையும்
இட்டுகந் தார்மலர்ப் பூசைஇச் சிக்கும் இறைவர்முன்னாள்
ITTU YUKANTHAAR MALARP POOSAI ICH SIKKUM IRAIVAR MUNNAAL
The controlled mind possessed disciples who are carried the fragrance filled flowers on hand before him prayer is conducted
மனம் அடங்கப் பெற்ற அன்பர்கள் விரும்பி இருத்தலால் நிறைந்த மலர்களை உடைய வழிபாட்டினையும் முன்னொரு நாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக் காய்ந்து பலியிரந்தூண்
PATTUKUM PAARIDAIK KAALA NAIK KAAINTHU PALI YIRANTHOON
In the land place fallen and died that death god ema In that way lard Siva got angry with him and lard Siva always going for begging food
நிலத்தில் இறந்து வீழ்ந்த கூற்றுவனை அவன் அவ்வாறு ஆகுமாறு வெகுண்டமையோடு பிச்சை ஏற்று உண்ணுதலை
சிட்டுகந் தார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே
SITTU KANTHAAR KIDA MAAVAATHU NAN TH THIRU NINDRI YOOREA
That form of character possessed lard Siva whose residential place is that thiruninriyoor place
உடைய ஒழுக்கத்தினையும் விரும்புகின்றவராகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே
9. காலமும் ஞாயிறு மாகிநின் றார்கழல் பேணவல்லார்
KAALAMUM GNAYIRU MAAKI NIN NIND RAAR KAL PENA VALLAAR
The time factor which is divided by the sun in that way lard Siva stands those lard Siva’s feet are clinging with love form and those disciples
காலமும் அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும் தமது திருவடியை அன்போடு பற்றவல்ல அடியார்களது
சீலமுஞ் செய்கையுங் கண்டுகப் பார்அடி போற்றிசைப்ப
SEELA MUNJ SEIKAI YUNG KANDU KAP PAAR ADI POT RISAIPPA
Whose activities are liked that lard Siva whose sacred feet is prayed by his disciples
நோன்பினையும் செயல்களையும் கண்டு விரும்புகின்றவரும் அவரது திருவடிகளை அந்த அடியவர்கள் துதி செய்யவும்
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத் தால்வணங்க
MAAL OODU NAAN MUGAN INDHIRAN MANTHIRATH THAAL VANANGA
Thirumal bharma and Indiran and all others chanted with manthira wards
திருமால் பிரமன் இந்திரன் முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும்
நீலநஞ் சுண்டவ ருக்கிட மாந்திரு நின்றியூரே
NEELA NANJ UNDA VARUK KIDA MAAN THIRU NINDRI YOOREA
That blue color poison consumed by lard Siva Thiru ninriyoor is his dwelling place
நீல நிறம் பொருந்திய நஞ்சினை உண்டவருமாகிய இறைவர்க்கு திருநின்ரியூரே இடமாய் நிற்கும்
வாயார் மனத்தால் நினைக்கு மவருக் கருந்தவத்தில்
VAAYAAR MANATH THAAL NINAIKKU MAVARUK KARUN THAVATHTHIL
With mouth praised and in the mind all the time remembering that true matter form existing in this world that rare form of penance performer that pure form of
வாயால் வாழ்த்தி மனத்தால் எப்பொழுதும் மறவாது நினைப்பவருக்கு உண்மைப் பொருள் ஆகின்றவரும் அரியதவக் கோலத்தை உடைய தூயவரும்
தூயார் சுடுபொடி ஆடிய மேனியர் வானில்என்றும்
THOO YAAR SUDU PODI AADIYA MEA NIYAR VAANIL ENDRUM
White ashes are adorned form of lard Siva that space place existing
வெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும் என்றும் பரவெளியில் இருப்பவரும்
மேயார் விடையுகந் தேறிய வித்தகர் பேர்ந்தவர்க்குச்
MEYAAR VIDAI YUKANTH THERIYA VITHTHAKAR PORN THAVARK KUK
He has ascended on the back of bull that specialty filled person those who are not approached him
இடபத்தை விரும்பி ஏறும் சதுரப்பாட்டை உடையவரும் தம்மை அடையாதவர்க்கு
சேயார் அடியார்க் கணியவர் ஊர்திரு நின்றியூரே
SEYAAR ADIYAAR KANI YAVAR OOR THIRU NINDRI YOOREA
He is far away to them and whose residential place is Thiru ninriyoor
சேய்மைக் கண்ணராகின்ற வரும் ஆகிய இறைவரது ஊர் திருநின்றியூரே
11 சேரும் புகழ்த்தொண்டர் செய்கை யறாத்திரு நின்றியூரிற்
SERUM PUGALTH THONDAR SEIKAI YAARATH THIRU NINDRI YOORI
The best glory filled disciples are always and their services all the time not left away in that thiru ninri yoor place
திரண்ட புகழை உடைய அடியர்களது தொண்டுகள் எந்த நாளும் நீங்காது இருக்கின்ற திருநின்றியூரின் கண்
சீருஞ் சிவகதி யாய்இருந் தானைத் திருநாவல்ஆ
SEERUNJ SIVA KATHIYAAI IRUNTH THAANAITH THIRUNAAVAL AA
The best heaven giving form descended that thirunavaloor place
சிறந்த வீடுபேறாய் எழுந்தருளி இருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினை
ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல் லார்வினைபோய்ப்
AARURAN URAITHTHA URU TAMIL PATHTHUM VALLAAR VINAIPOI
Nambi aaroorer who has sung in this appropriate songs are that ten poems are singing disciples whose bad deeds are removed form
நம்பி ஆரூரன் பாடிய பொருந்தமான இத்தமிழ் பாடல்கள் பத்தினையும் பாடவல்லவர் வினை நீங்கப் பெற்று
பாரும் விசும்புந் தொழப்பர மன்னடி கூடுவரே
PAARUM VISUM PUNTH THOLAP PARA MAN NADI KOO DUVAREA
In this world people and upper world people are prayed form they will ultimately enter under lard Siva’s feet
மண்ணுலகத் தவரும் விண்ணுலகத்தவரும் வணங்கும்படி சிவபெருமானது திருவடியை அடைவார்கள்
Om chitrambalam