Thiru kalaiyanalloor
16 திருக்கலயநல்லூர்
Thiru kalaiyanalloor
After Sundarer prayed in thiruvedai maruthoor thiru nagas waram sivapuram and then ultimately entered in to thirukalaiya naloor place and then sang the following songs
This decade composed lard Siva’s legend and which is given here
நம்பியாரூரர் திருவிடைமருதூர் திருநாகேச்சுரம் சிவபுரம் முதலான பல பகுதிகளையும் வணங்கிப் போற்றித் திருக்கலயநல்லூரில் இறைவரைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம்.
இந்தப் பதிகம் சிவ பிரானுடைய புராணத்தைத் தொகுத்துத் தருகின்றது.
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
KURUMBAI MULAI MALARK KULALI KONDA THAVANG KANDU
The tender raw coconut like breasts are possessed and mullai flower is on the hair and then lardess Yumadevi has gone into penance and on hearing it
தென்னங் குரும்பை போலும் தனங்களையும் முல்லைப் பூவை அணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
KURIPPI NODUNJ SETRAVAL THAN GUNATH THINAI NAN KARINTHU
Lard Siva entered there and try to marry here and then try to examine her love
அவளை மணக்கும் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆராய்ந்து
விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
VIRUMBUM VARANG KODUTH THAVLAI VETTARULICH SEITHA
And then gave her the boons as per her request and then married her and then blessed her
அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து அவளை திருமணம் செய்து அருளிய
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
VINNAVARKON KANNUTHALON MEVIYA OOR VANAVIL
That lard Siva who is also leader to deevass and possessed fore head eye and whose residential place if you enquired
தேவர் தலைவனும் கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது என்று வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
ARUM PARUKEA SURUM PARUVA ARU PATHAM PAN PAADA
Where the flower buds are bloomed and honey bees are encircled and then raised the humming sounds and other female bees are raised musical notes
பேரரும்புகளின் அருகே சென்று சுரும்பு ஆண் வண்டுகள் இசை கூட்ட ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
ANIMAYIL KAL NADAM AADUM ANI POLIL SOOL AYALIN
The lovely peacocks are dancing in the lovely plantation place in that near by
அழகிய மயிகள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலைகள் சூழ்ந்த அயலிடத்தில்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
KARUM PARUKEA KARUNG KUVALAI KAN VALARUNG KALANI
In the sugar cane fields where bloomed dark color kuvalai flowers ponds where taking rest
கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண் உறங்குகின்ற வயல்களில்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே
KAMALANGKAL MUGAM MALARUNG KALAYA NALOOR KAANEA
That place is kalaiya nallor where lotus flowers are appeared in happy face form
தாமைரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே அறிக
செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
SERU MEYU SALAN THARANAIP PILANTHA SUDAR AALI
To like wage war that assura named salantharan who is cut off with the circle force
போரை விரும்பிய சலந்தராசுரனை அழித்த ஒளியை உடைய சக்கரத்தை
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
SENKAN MALAR PANGAYA MAACH SIRANTHAANUK KARULI
That circle fore is given as gift to Thirumal who has prayed lard Siva with one thousand lotus flower and conducted prayer
தன் சிவந்த கண்ணாகிய மலரையே தாமரை மலராகச் சாத்தி வழிபாட்டில் சிறந்து நின்றவனாகிய திருமாலுக்கு அளித்து
இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி
IRUL MEVUM ANTHAKAN MEL THIRISOOLAM PAAICHCHI
That dark color body possessed assura named Anthagaswaran who is killed by the sharpened soolam battle force and destroyed
இருள் போலும் அந்த காசுரன் மேல் கூர்மையான சுலத்தை பாய்ச்சி அழித்து
இந்திரனைத் தோள்முரித்த இறையவன்ஊர் வினவில்
INDHIRANANAITH THOL MURITHTHA IRAIYAVAN YOOR VINAVIL
The upper world deevaas leader named Indiran whose shoulders are broken by lard Siva whose residential place is enquired
இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர் யாது என்று வினவின்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
PERUMETHAI MARAIYOLIYUM BEEARI MULA VOLIYUM
The big prime knowledge is given by veethaas sound and musical instruments named big drum mathallam which are raised sounds
மிக்க பேரறிவைத்தரும் வேதத்தினது ஓசையும் முரசு மத்தளம் ஆகிய வாத்தியங்கள் ஓசையும்
பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக்
PILLAIYINANTH THULLI VILLAI YAATTOLIYUM PERUKAK
The young children are happily jumping and playing from it emanated big sound
சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் ஓசையும் மிகுதியாக எழுதலினால்
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
KARUMETHI PUNAL MANDAK KAYAL MANDAK KAMALANG
On hearing that emotional sound and got fear that buffaloes are jumped into the water ponds so that from the water jumped the kayal fishes are fallen on the lotus flowers which is encircled
கரிய எருமை நீரில் புக அதனால் துள்ளி எழுந்த கயல் மீன் கள் தாமரை மலரின் மேல் நெருங்கி விழ தாமரை மலரைச் சூழ்ந்திருந்த
களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் காணே
KALI VANDIN KANAM IRIYUM KALAYA NALLOOR KAANEA
The honey enjoyed cluster of bees are got afraid of and fly fast and that place is Thiru kalaiyanaloor you may know it
களிப்புடைய வண்டுகள் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூரே அறிக
இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி
INDAI MALAR KONDU MANAL ILINGKA MATHU IYATRI
The head garland and loose flowers are collected and then went to Manni River where sand Sivalingam is created
இண்டை மாலையும் விடு பூவும் திரட்டிக் கொண்டு சென்று மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
INATH THAAVIN PAAL AATTA IDARIYATHAA THAIYA THTHAAL
The cluster of cow milk is collected and poured on Sivalingm and on seeing it got angry and then destroyed that Sivalingam with the leg that father feet are amputated
கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய அதனைக் கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
THUNDA MIDU SANDI YADI ANDAR THOLU THETHTHA
By Sandeswerer nayanar whose feet is prayed by the upper world deevass
வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி
தொடர்ந்தவனைப்பணிகொண்ட விடங்கனதூர்வினவில்
THONDARN THAVANAIP PANI KONDA VIDANGKA NATHOOR VINAVIL
Lard Siva who has taken him in his fold that lovely place if you enquired
அவரை விடாது சென்று ஆட்கொண்ட அழகனது ஊர் யாது என்று வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
MANDAPAMUM KOPURAMUM MAALIKAI SOOLI KAIYUM
Where mansions temple towers big houses and other sooligai
மண்டபங்களிலும் கோபுரங்களிலும் மாளிகைகளிலும் சூளிகைகளிலும்
மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
MARAI OLIYUM VILAL OLIYUM MARUGU NIRAI VEITHIK
Where veetha sound and auspecius musical instruments sounds are filled form
வேதங்களின் ஓசையும் மங்கள ஓசை வீதிகளில் நிரம்புதல் பொருந்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
KANDAVARKAL MANAM KAVARUM PUNDARI POIKAI
Those who are seen that lotus flower ponds are attracted their mind
கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற தாமரைப் பொய்கைகளில்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே
KAARIKAI YAAR KUDAINTH THADUNG KALAYA NALLOORI KAANEA
Where ladies are swimming in the pond water that place is kalaiyanalloor you may know it
மகளீர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூரே அறிக
மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
MALAI MADANTHAI VILAIYAADI VALAI YAADU KARATH THAAN
The rock lady plays where lard Siva sees it happily
மலைமகள் விளையாட்டை மேற்க்கொண்டு
மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
MAKILNTHA VAL KAN PUTHAI THALUMEA VALL IRULAAI ELLAA
With happy form lardess yumadevi who is closed the eyes of lard Siva with his hands at once the whole world plunged in to darkness
மகிழ்ச்சி மேலிட்டவளாய் அவளது எல்லா வளையல் பொருந்திய கையால் தனது கண்களை மூடியமையில் எல்லா உலகங்களையும் ஒருங்கே வலிய இருள் படிந்து முடிக்கொள்ள
உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி
ULAGUDAN RAAN MOODA IRUL ODUM VAGAI NETRI
That utter darkness is engulfed the whole so as to remove darkness lard Siva opened his fore head eye
ஒருங்கே வலிய இருள் பரந்து மூடிகொள்ள அந்த இருள் நீங்கும் படி நெற்றியிடத்து
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
ONDRRAIK KAN PADATH THU KANTHA UTHTHAMA NOOR VINAVIL
That single fore head eye opened and blessed the whole world whose residential place if you enquire
ஒரு கண்களைத் தோற்றுவித்து அருள் புரிந்த மேலானவனது ஊர் யாது என்று வினவில்
அலைஅடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி
ALAI ADAINTHA PUNAL PERUKI YAANAI MARUP PIDARI
அலை பொருந்திய நீர் பெருக்கெடுத்து யானை தந்தத்தை புரட்டி
The waves are emanated river water flooded form where elephant horns are rolled down
அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்தென் கரைமேல்
AAKILODU SANTH THUNTHI VARUM ARISILIN THEN KARAI MEAL
And agil tree and sandal wood trees are pushed downward that river named arisil southern bank
அகில் மரத்தையும் சந்தனமரத்தையும் தள்ளிக் கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரைமேல்
கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையால்
KALALI YADAINTHU KALI KADIYAN THANAR OOMAP PUGAI YAAL
Where Bharimins are well learnt the veethas and chanting manthiraas and driven out the poverty from this place where yaga fumes are engulfed form
உள்ள நூல்களை உணர்ந்து அந்நெறியினே வறுமையை ஓட்டுகின்ற அந்தணர்களது வேள்விப் புகையால்
கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே
KANAMUKIL POND RANI KILA RUNG KALAYA NALOOR KAANEA
That fumes are appeared in cluster form of clouds that lovely place is thiru kalaiyanalloor you may know it
கூட்டமாகிய மேகத்தின் தோற்றம் போன்ற அழகு மிகுகின்ற திருக்கலயநல்லூரே அறிக
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
NIRPAANUM KAMALATH THIL IRUP PAANUM MUTHALAA
Those who are pray before that disciples thirumal stands in form appeared and lotus flower residing bharma
தன்னை வழிபடுவோர்க்கு நின்ற கோலமாய்த் தோன்றுபவனாகிய திருமாலும் தாமரை மலரின் இருப்பவனாகிய பிரமனும் முதல்வராகத்
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
NIRANTH AMARAR KURANTH THIRAPPA NINAIN THARULI YAVARKKAAI
The deficiency filled deevaas are stood before lard Siva and requested boon from lard Siva and lard Siva enquired their requirements
தேவர் பலரும் குறை உடையவராய் நிறைந்து வந்து இரங்க அவரது துன்பத்தைத் திரு உள்ளத் தடைத்து அவர் பொருட்டாக
வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
VER PAARVIL ARAVU NAAN ERI AMBAAL VIRA VAAR
The bow made from rock and the rope is snake and fire tip is arrow and with it enemies
மலையாகிய வில்லும் பாம்பாகிய நாணையும் தீயாகிய அம்பும் என்னும் இவற்றால் பகைவரது
புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்
PURA MOONDRUM ERI VITHTHA VIKIRTHA NOOR VINAVIL
That three castles are destroyed by fire that lard Siva’s residential place if enquired
முப்புரங்களையும் எரித்தொழியச் செய்த உலகியலுக்கு வேறுபட்டவரது ஊர் யாது என்று வினவில்
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
SOR PAALA PORT PAALA SURUTHI ORU NAANGUM
The four veethas are filled with meaning and matter filled form of
சொல் வளங்கள் பலவற்றையும் பொருள் வளங்கள் பலவற்றையும் உடைய வேதங்கள் நான்கையும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் திறத்தே
THOTHTHI RAMUM PALA SOLLITH THUTH THIRAITH THAN THIRATHTHEA
The prayer songs are chanted and then prayed where lard Siva’s forehead eye
தோத்திரமும் பலவற்றியும் சொல்லி துதிக்கும் ஆற்றில் இறைவனது நெறிக்கண்
கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்
KAR PAARUNG KET PAARU MAAYENGUM NANAAGAR
Those who are learning and hearing it and all the places are goodness filled form of
கற்பாரும் கேட்பாருமாக நின்று எவ்விடத்திலும் நன்மை அமைந்த
கலைபயில்அந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே
KALAIPAYIL ANTHANAR VAALUNG KALAYA NALLOOR KAANEA
The books are learnt by bharimins whose residential place is Thiru kalanaloor you may see it
நூல்களைப் பயில்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலயநல்லூரே கான்
பெற்றிமைஒன் றறியாத தக்கனது வேள்விப்
PETRIMAI ONDRARI YAATHA THAKKA NATHU VELVIP
The goodness is not known in that Thakkan yaga fire
தக்கது சிறிதும் அறியாத தக்கனது வேள்வியில்
பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள்பீ டழியச்
PERUNTH DEVAR SIRAN THOL PAL KARANGKAL PEED ALIYACH
The big deevaas are lost their head solders teeth hands and their mighty powers
பெரிய தேவர்கள் தங்கள் தலை தோள் பல் கைகள் என்றும் உறுப்புக்கள் வலிமை அழிந்து ஒழியுமாறு
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித்
SETRU MATHIK KALAI SITHAIYATH THIRU VIRALAAL THEAI VITH
And then moon rays are destroyed form of stamped and then erased
ஒலித்து சந்திரனது கலைகள் சிதையும்படி கால் திருவிரலால் தேய்த்து
தருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்
ARUL PERUGU SIVA PERUMAAN SER THARUM OOR VINAVIL
Afterwards to all of them lard Siva poured his grace and gave them life that lard Siva’s residential place if enquired
பின்பு அவர் எல்லாரிடத்திலும் கருணையை மிக வழங்கிய சிவபெருமான் சேர்ந்திருக்கும் ஊர் யாது என்று கேட்டால்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமும்
THOTRU KODI MULLAIYODU MALLIGAI SENPA KAMUM
The coiled form of mullai creeper plants and with it Jasmin creeper plants and sanbagam with it
பின்னிக் கிடக்கின்ற முல்லைக் கொடியோடு மல்லிகைக் கொடி சண்பகமரம் என்னும் இவைகளும்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல்
THIRAI PORUTHU VARU PUNAL SEAR ARISILIN THEN KARAI MEAL
The wavers are pushing in the arisil river bank of south side
அலைகளால் உந்தம்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில்
கற்றினம்நல் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
KATRINAM NAL KARUMBIN MULAI KARI KARKAK KARAVAI
The calf groups are eaten the tender sugar cane sprouted shoots are eaten
கன்றுக் கூட்டம் நல்ல கரும்பின் முளையின் கறித்தலைப் பழக பசுக்கூட்டம்
கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே
KAMAL KALUNEER KAVAR KALANIK KALAYA NALLOOR KAANEA
Where the fragrance filled seng kalluneer creeper plant are eaten that fields are filled place is thiru kalaiyanalloor you may see it
மனம் விசுகின்ற செங்கழநீர்க் கொடியை மேய்கின்ற வயல்களை உடைய திருக்கலயநல்லூரே அறிக
இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் தோளும்
ILANGAIYAR KON SIRAM PATH THODI IRUPATHU THINN THOLUM
Sri Lanka king ravana whose ten heads and twenty solders are
இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தனது பத்துத் தலைகளும் இருபது வலிமை மிக்க தோள்களும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மேல் ஊன்றி
ITRU ALARA ONTRAI VIRAL VERP ATHAN MEAL OONDRI
Smashed and cried of pain in that way lard Siva put his one finger on the hills
சிதைந்து அரற்றுமாறு ஒரு விரலால் கயிலை மலையின் மீது ஊன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாசம் ஆகி
NILANGKILIR NEER NERP PODU KAAT RAAKAASAM AAKI
That lard Siva in the form of land fire water wind and space form
நிலம் மிக்க நீர் நெருப்பு காற்று வானம் என்னும் பெரும் பொருள்கள் ஆகியும்
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன்ஊர் வினவில்
NIRPANAVUM NADAPANAVUM NIMALAN OOR VIAVIL
And standing and moving form of lard Siva whose residencies place if enquired
நிற்பனவும் நடப்பனவுமாகிய உயிர்களாகியும் நிற்கின்ற தூயவனது ஊர் யாது என்று வினவினால்
பலங்கள்பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப்
PALANGKAL THIRAI UNTHIP PARUMANI PON KOLITH THU
The waves of river so many fruits are pushed down and big diamonds and gold are winnowed
அலைகளால் பல பழங்களைத் தள்ளி பெரிய மாணிக்கங்களையும் பொன்னையும் கொழித்து
பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
PAATHIRI SANTH AKILINODU KE THAKAIYUM PARUKIK
The trees are pathiri sandal agil and thalam flower bushes all the carried by the water force
பாதிரிசந்தனம் அகில் என்ற மரங்களையும் தாழம் புதர்களையும் உள்வாங்கி
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்தென் கரைமேல்
KALANGU PUNAL ALAMBI VARUM ARISILIN THEN KARAI MEAL
With all the river water appeared in polluted form which is flowed in emotional sound raised way and in that aricil river southern bank
இவற்றால் எல்லாம் கலங்கல் பொருந்திய நீர் ஆரவரித்து வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள
கயல்உகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே
KAYAL UKALUM VAYAL PUDAI SOOL KALAYA NALLOOR KAANEA
The kayal fishes are rolled down that fields are filled place is thiru kaliya nalloor you may see it
கயல் மீன்கள் பிறழும் வயல்கள் புடை சூழ்ந்த திருக்கழய நல்லூரே அறிக
மாலயனுங் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்
MAALAYANUNG KAAN PARIYA MAAL ERIYAAI NIMIRN THOON
Thirumal and Bharama are not in a possisson to know the feet and head and then appeared before them in fire pole form
திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி அறியாதபடி நெருப்பு உருவாய் நீண்டு நின்றவனும்
வன்னிமதிசென்னிமிசைவைத்தவன்மொய்த்தெழுந்த
VANNI MATHI SENNI MISAI VAITH THAVAN MOITH THELUNTHA
The vanni leaves and curved moon adorned on his head
வன்னியும் பிறையும் சடையில் சூடியவனும்
வேலைவிடம் உண்டமணி கண்டன்விடை ஊரும்
VELAI VIDAM UNDA MANI KANDAN VIDAI VOORUM
In the sea place emanated dark color poison is consumed so that his throat is appeared in ruby diamond form and who is moving on the back of bull
கடலில் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த நீல மணி போலும் கண்டத்தை உடையவனும் இடபவாகனத்தை ஊர்பவனும்
விமலன்உமை யவளோடு மேவியஊர் வினவில்
VIMALAN UMAI YAVALODU MEVIYA VOOR VINAVIL
That flawless form of lard Siva who is residing with lardess Yumadevi if you enquire that place
ஆகிய குற்றமற்ற இறைவன் உமாதேவியோடு விரும்பி இருக்கின்ற ஊர் யாது என்று வினவினால்
சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச்
SOLAIMALI KUYIL KOOVAK KOLA MAYIL AALACH
In the flower plantation filled coco birds are raised sound and lovely peacocks are dancing
சோலைகளில் நிறைந்த குயில்கள் கூவவும் அழகிய மயில்கள் ஆடவும்
சுரும்பொடு வண்டிசை முரலப் பசுங்கிளி சொல் துதிக்கக்
SURUMPODU VANDISAI MURALAP PASUNGKILI SOL THUTHIK KAK
The honey bees and insects are raised musical sound and green color parrots are as per instruction it talked and prayed lard Siva and then daily morning and evening surrendered under lard Siva’s feet
சுரும்பும் வண்டும் இசை கூட்டவும் பசிய கிளிகள் தாம் கேட்டவாறே சொல்லி இறைவனைத் துதிக்கும்படி
காலையிலும் மாலையிலும் கடவுள்அடி பணிந்து
KAALAI YILUM MAALI YILUM KADAYUL ADI PANI NTHU
காலை மாலை இரண்டு பொழுதிலும் இறைவனது திருவடிகளை வணங்கி
கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே
KASINTHA MANATH THAVAR PAYILUNG KALAYA NALOOR KAANEA
That melted form of mind possessed disciples are abundantly available place is Thiru kalaiyanaloor
உருகிய மனத்தை உடைய அடியார்கள் மிக்கு இருக்கின்ற திருக்கலையநல்லூரே அறிக
9. பொரும்பல ம துடையசுரன் தாரகனைப் பொருது
PORUM BALAM THUDAIYA ASURAN THAARA KANAIP PORUTHU
The mighty powerful fighter named Tharagan
போர் செய்கின்ற வலிமையை உடைய அசுரனாகிய தாரகன் என்பவனை
பொன்றுவித்தபொருளினைமுன்படைத்துகந்தபுனிதன்
PONDRU VITHTHA PORULINAI MUM PADAITH THU KANTHA PUNITHAN
Lard muruga who waged war against him and destroyed and who is lard Siva’s son
போர் செய்து அழியச் செய்த முதல்வனாகிய முருகனை முன்பு படைத்து அவனைத் தன் மகனாக விரும்பிக் கொண்ட தூயவனும்
கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக்
KARUMBU VILIN MALAR VAALIK KAAMAN UDAL VEVAK
The sugar cane bow and flower garland arrows which is possessed by lust creating god manmatha
கரும்பினால் இயன்ற வில்லையும் மலர்களால் இயன்ற அம்புகளையும் உடையவனாகிய மன்மதன்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில்
KANAL VILITHTHA KANNUTHA LON KARUTHUM OOR VINAVIL
Whose body is destroyed by the fore head fire that Lard Siva, whose residential place if you enquire
உடம்பு வெந்தொழியுமாறு நெருப்பாக நோக்கிய கண்ணையும் உடைய நெற்றிக்கண்ணணும் ஆகிய சிவபெருமான் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட ஊர் யாது என கேட்டால்
இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்
IRUM PUNAL VENDIRAI PERUKI ELAM ILA VANGAM
The abundant water flowing with ealam ealavangam trees are carried
மிக்க நீரினது அலைகள் மேல் எழுந்து சென்று ஏலம் இலவங்கம் என்னும் மரங்களோடே
இருகரையும் பொருதலைக்கும்அரிசிலின்தென்கரைமேல்
IRU KARAIYUM PORU THALAIK KUM ARISILIN THEN KARAI MEAL
That two sides of the river banks are destroyed that aricil river southern side bank
இருகரைகளையும் மோதி அழிக்கின்ற அரிசிலாற்றின் தென்கரையில்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
KARUMPUNAI VEN MUTH THARUMBIP PON MALARNTHU PAVALAK
The lust green punnai trees are bloomed in white pearls form and in golden color and then in coral color form appearing
பசுமையான புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி பொன்னை மலர்ந்து பவளத்தினது
கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே
KAVIN KAATTUNG KADI POLIL SOOL KALAYA NALLOOR KAA NEA
That beautiful appearance possessed plantations are filled place is thiru kalaiya nalloor
அழகைக் காட்டுகின்ற நறுமணச் சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூரே அறிக
தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில்
THAN KAMALAP POIKAI PUDAI SOOLNTHA THALAKAAR THALATH THIL
The cool form lotus flower ponds in four sides are covered form of that place sacred water bodies are filled form
குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நான்கு புரங்களிலும் சூழப்பட்ட ஊரில் திருக்குளத்தைக் கொண்ட
தடங்கொள்பெருங் கோயில்தனில் தக்கவகை யாலே
THADANGKOL PERUNG KOYIL THANIL THAKKA VAGAI YAALEA
In the big temple before it as per rule
பெரும் கோயிலின் முன் முறைப்படி
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
VANKA MALATH THAYAN MUN NAAL VALIPAADU SEIYYA
In the lotus place residing Bharama once who has conducted prayer
வளவிய தாமரை மலரில் இருக்கும் பிரம்ம தேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
MAKILN THARULI IRUNTHA PARAN MARUVIYA OOR VINAVIL
From that prayer lard Siva got happy that Siva whose residential place if you enquire about it
அதற்கு மகிழ்ச்சியுற்று இருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது என்று வினவினால்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
VEN KAVARI KARUMPEELE VENGAI YODU KONGIN
The white color cauvery deer hair and green color peacock feathers and vengai tree and kongu tree
வெண்மையான கவரி மயிரும் நீலமான மயில் இறகும் வேங்கை மரம் கோங்குமரம்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல்
VIRAI MALARAUM VIRAYU PUNAL ARISILIN THEN KARAIMEAL
And the fragrance filled flowers are filled form of flowing
இவற்றினது வாசனை பொருந்திய மலர்களும் கலந்து வருகின்ற
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
KAN KAMUKIN POOMPAALAI MATHU VAASANG KALANTHA
The betel nut trees flower place the honey bees are clubbed form of honey fragrance filled form
கணுக்களையுடைய கமுகு மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்ந்து தேனினது வாசனையோடு கலந்த
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே
KAMAL THENDRAL PUGUNTH ULAVU KALAYA NALOOR KAANEA
Of that breezes are flowing where penetrated that place is thiru kalaiya nalloor
பல மணங்களை வீசும் தென்றல் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூரை அறிக
தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன்
THAN PUNALUM VEN MATHIYUM THAANGIYA SENSADAIYAN
The cool water and white color moon is carried on the head that form of hair possessed lard Siva
குளிர்ந்த நீரையும் வெள்ளிய திங்களையும் தாங்கிய் சடையை உடையவனும் ஆகிய சிவபெருமான்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
THAMARAI YON THALAI KALANAAK KAAMARA MUN PAADI
Bharama’s skull is carried on hand as begging bowel and before that songs are singing form moving from pace to place
பிரம்ம தேவனது தலை ஒட்டினையே பாத்திரமாக ஏந்தி முன்னதாக இசையைப் பாடிக் கொண்டு
உண்பலிகொண் டுழல்பரமன் உறையும்ஊர் நிறைநீர்
UNPALI KOND ULAL PARAMAN URAIYUM YOOR NIRAI NEER
That consumable articles are collected that highly regarded person lard Siva who’s descended place is
உண்ணுகின்ற பிச்சைப் பொருட்களை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர் ஆகிய நிறைந்த நீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை
OLUGU PUNAL ARISILIN THEN KALAYA NALLOOR ATHANAI
That water flowing aricil river southern side situated place is Thiru kalaiyanalloor place
ஓடுகின்ற அரிசிலாற்றுத் தென்கரையில் உள்ள திருக்கலயநல்லூரே
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
NAN PUDAIYA NAN SADAIYAN ISAIGNANI SIRUVAN
To be friend with all that good person named Easaigaaniyar’s son
யாவரிடத்தும் நண்பார் தன்மையை உடைய நல்லோர் ஆகிய உடையன் இசைஞானி என்பவருக்கு மகனும்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
NAAVALARKON AARURAN NAAVIN NAYAN THURAI SEI
Nambi aarroorer who is leader to thiru navaloor place who has willingly sung
திருநாவலுருக்குத் தலைவனும் ஆகிய நம்பி ஆரூரன் விரும்பிப் பாடிய
பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட
PANPAYILUM PATH THUM IVAI PATHTHI SEITHU PAADA
The musical notes filled form ten poems who are sung with love filled minded form
இசை பொருந்திய பத்து பாடல்களாகிய அத்தலப் பெருமானிடத்து அன்பு செய்து
வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே
VALLAVARKAL ALLALODU PAAVAM ILAR THAAMEA
Those who are sung before him and they will not affected by sins and sorrows
நாள்தோறும் பாட வல்லவர்கள் துன்பமும் பாவமும் இல்லாதவர் ஆவார்
Om thiruchitrambalam