Thiru poovanam
11 திருப்பூவணம்
Thiru poovanam
While Sunderer stayed with three kings in Mathurai place and then proceeded to Thirpoovanam whose disciples are showed Thirupoovanam temple to Sunderer with astonished form he has enquired is it poovanam and then sang the following songs
சுந்தரர் வேந்தர்கள் உடைய மதுரையில் தங்கி இருந்த நாட்களில் திருப்பூவணம் செல்லும் பொழுதில் தொண்டர்கள் இத்தலத்தைக் காட்டக்கண்டு பெருமான் உறையும் பூவன மீதோ என்று பாடி அருளியது
1.திருவுடை யார்திரு மாலய னாலும்
THIRU UDAIYAAR THIRUMAAL AYANAALUM
To do specific act of creation and preservation by Bharma and thermal where lard Siva entrusted the above work to them so he is highly elevated person in this world
திருமால் பிரமன் ஆகிய காரணக் கடவுளிலும் மேலான
உருவுடை யார்உமை யாளையொர் பாகம்
URU UDAIYAAR UMAIYAALAI YOR PAAKAM
That lard Siva who gave left part of his body to lardess yumadevi
தமது திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாக உடையவரும்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
PARIYU UDAIYAAR ADAIVAAR VINAI THEERKKUM
He is love form in this world so those who are surrendered under his feet he will remove their misdeeds
அன்புடையவராய்த் தம்மை அடைவாரது வினைகளைத் தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ!
PURIYU UDAIYAAR URAI POOVANAM EETHO
That loveable form lard Siva descended place is it I do not know it up to this time
விருப்பம் உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளி உள்ள திருப்பூவணம் என்னும் தலம் இதுதானோ
2. எண்ணி யிருந்து கிடந்தும் நடந்தும்
ENNI YIRUNTHTHU KIDANTHTHUM NADANTHUM
If we are thinking form or laid down form or walking form
இருப்பினும் கிடப்பிலும் நடப்பினும்
அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்
ANNAALENAA NINAIVAAR VINAI THEERP PAAR
Those who are accepted as prime god that people bad deeds are removed by him that ethical form following lard Siva
தம்மையே முதல்வராக வந்து நினைவாரது வினைகள் நீக்கி பவரும் அறவடிவினரும் ஆகிய இறைவர்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்
PANNIDAIYAAR MOLIYAAR PALAR PAADAP
The musical notes filled form of in good language so many ladies are singing in attractive form
பண்ணாகிய இசைபோலப் பொருந்திய மொழியினை உடைய மகளீர் பலர் இனிய பாடல்களை பாட
புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ!
PUNNIYANAAR URAI POOVANAM EETHO
That punniya form of lard Siva’s descended place is it. I do not know it
எழுந்தருளி உள்ள திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ
3. தெள்ளிய பேய்பல பூத மவற்றொடு
THELLIYA PEI PALA POOTHA MAVTR RODU
The clear form of so many demon forces and ghosts
தெளிவுடைய பல பேய் பூதங்களுடன்
நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர்
NAL LIRUL NATTAMA THAADAL NAVINROR
In the mid-night time dancing in the burial ground
செறிந்த இருள் நடனத்தைப் புரிகின்றவரும்
புள்ளுவ ராகும் அவர்க்கவர் தாமும்
PULLUVA RAAGUM AVARK KAVAR THAAMUM
Those who are vengeance filled minded persons lard Siva also in that way appear to them
வஞ்சகராகின்றவர்களுக்கு தாமும் வஞ்சகராவோரும் ஆகிய இறைவர்
புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ!
PULLUVANOOR URAI POOVANAM EETHO
That lard Siva’s descended place is it
எழுந்தருளி உள்ள திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ
4. நிலனுடை மான்மறி கையது தெய்வக்
NEELANUDAI MAAN MARI KAIYATHU THEI VAK
In the land place living stage is carried on his hand
நிலத்தை வாழும் இடமாக உடைய மான் கன்று கையிடத்தாக
கனலுடை மாமழு ஏந்தியோர் கையில்
KANALUDAI MAA MALU ENTHIYOR KAIYIL
On his hands carried fire form of battle force
தெய்வத்தீயாம் தன்மை உடைய பெரிய பூ மாலை ஒரு கையில் பிடித்து
அனலுடை யார்அழ கார்தரு சென்னிப்
ANAL UDAIYAAR ALAKAAR THARU SENNIP
And fire pot carried on yet another hand and then on his head
அதனோடு மற்றொரு கையில் நெருப்பை உடையவரும் ஆகிய இறைவர்
புனலுடை யார்உறை பூவணம் ஈதோ!
PUNALUDAIYAAR URAI POOVANAM EETHO
Lard Siva carried Ganges on his head that Thirpoovanam place is it
எழுந்தருளி உள்ள இடம் நீர் நிறைந்த திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ
5. நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்
NADAI YUDAI NALLERU THERUVAR NALLAAR
With royal walking form of bull that good bull on it ascended
பெருமித நடையை உடைய நல்ல ஆனேற்றின் மீது ஏறுபவரும்
கடைகடை தோறிடு மின்பலி என்பார்
KADAI KADAI THERIDU MIN PALI ENBAAR
And then went every door steps and begged for food
மகளீரது வாயில் தோறும் சென்று பிச்சை இடு மின் என்று இரப்பவரும்
துடியிடை நன்மட வாளொடு மார்பில்
THUDI YIDAI NAN MADA VAALODU MAARPPIL
The narrow waists are possessed lardess yumadevi on her lovely body
உடுக்கை போலும் இடையினை உடைய தேவியின் அழகிய மேனியில் பொழிவோடு
பொடிஅணி வார்உறை பூவணம் ஈதோ!
PODI ANIVAAR URAI POOVANAM EETHO
In lovely form white ashes are adorned that lard Siva descended Thiru poovanam temple place is it
சாம்பலைப் பூசிக் கொள்வோரும் ஆகிய இறைவர்எழுந்தருளி உள்ள திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ
6. மின்னனை யாள்திரு மேனி விளங்கஓர்
NINANAI YAAL THIRU MENI VILANGA OOR
Lardess yumadevi whose glittering left part is given to lard Siva
மின்னலைபோலும் மாதரால் திருமேனி தனது திருமேனியின் ஒரு பாகத்தில்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
THANNAMAR PAAKA MATHAA KIYA SANKARAN
Who liked that part of that body and lard Siva has taken the name of Sangaran
விளங்க விரும்பி வந்த சங்கரன் என்னும் பெயரை உடையவரும்
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய
MUNNINAI YAAR PURAM MUNNERI OOTTIYA
Those disciples who did not
Think over him whose three castles are fired and then converted in to ashes
தன்னை நினையாதவரது ஆணவங்களை முன்பு தீக்கு இறையாக்கிய
பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ
PONNANAI YAAN URAI POOVANAM EETHO
That golden color body possessed lard Siva whose residential place is it
பொன்போலும் நிறத்தை உடையவனும் ஆகிய இறைவன் விருப்பம் எழுந்தருளி உள்ள திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ
7. மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
MIK KIRAIYEA AVAN THUN MATHI YAALIDA
Ravana who has exceeded his leadership place and whose bad thinking who is tried to lift the kaiyilai hills
தனது தலைமையை எல்லை கடந்து மதித்தவனாகிய இராவணது தீய எண்ணங்கள் காரணமாக
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
NAK KIRAIYEA VIRALAAL IRA VOONDRI
Lard Siva laughed at him and then stamped him under the hills with his leg big finger
வெகுளி நகை செய்து தனது இடமாகிய கயிலையை அவர் தெரியுமாறு விரலால் சிறிதே ஊன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
NEK KIRAIYEA NINAIVAAR THANI NENJAM
And those disciples who are think over in their unique mind entered and did leftover there and then taken it as his dwelling place
தன்னையே உருகி நினைவாரது ஒப்பற்ற நெஞ்சினை குடி புகுந்து ஒரு பொழுதும் நீங்காது உறையும் இறைவர்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ!
PUKKURAI VAAN URAI POOVANAM EETHO
That lard Siva’s poovanam temple place is it
எழுந்தருளி உள்ள திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ
10 சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
SEERIN MIGAP POLI YUNTH THIRUP POOVANAM
The lovely place is Thirupoovanam in that sacred temple place
அழகினால் மிகப் பொலிகின்ற திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில்
ஆர விருப்பிட மாவுறை வான்றனை
AARA VIRUP PIDA MAA YURAI VAAN THANAI
Lard Siva who has liked this place and descended in this Thiupoovanam temple
விருப்ப மிக இடமாகக் கொண்டு எழுந்தருளி இருக்கும் இறைவனை
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை
OORAN URAITHTHA SON MALAIKAL PATH THIVAI
Sunderer who has sang the ten poems who are in this land
நம்பி ஆருரன் பாடிய இச்சொல் மாலைகள் பத்தினையும் இந்த நில உலகில்
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே
PAARIL URAIP PAVAR PAAVAM ARUP PAREA
Those who sing it they will terminate their sins
பாடுவார் தம் பாவத்தை அறுப்பவராவர்
Om thiruchitrambalam