OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru arisi karai puthoor

ganesheit March 23, 2019

9 திருவரிசிற்கரைப்புத்தூர்

Thiru arisi karai puthoor

Suntharer went to Thiruvagiyam and Thiru naaraiyoor Siteecharam where prayed lard Siva and then went to thiru aricilkarai puthoor temple where he sang the following praising songs

சுந்தரர் திருவாஞ்சியமும் நறையூர்ச் சித்தீச்சரமும் பணிந்து  பின்பு திரு அரிசில் கரைப்புத்தூர் இறைவனைப் போற்றிப் பாடியது இத்திருப்பதிகம். இப்பதிகம் இறைவன் புகழைப் பாடுவது

மலைக்கும்மக ளஞ்ச மதகரியை

MALAIKKUM MAKALANJA MATHA KARIYAI

You have put lardess yumaadevi who is hill lady to get afraid of that mad elephant
நீர் இமயமலைக்கு மகளாகிய உமதேவி அச்சம் கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை

URITHTHEER ERITH THEER VARU MUP PURANG KAL

உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள்

Lard Siva you have pealed the skin of this mad elephant and fired the three castles with laughing vibration fire

உரித்தீர் பெயர்ந்து வந்து எதிர்த்த முன்று நகரங்களை எரித்தீர்


சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர்

SILAIKKUNG KOLAICH SEYUKAN THEA ROLIYEER

The roaring and killing instinct filled bull on it you are willingly ascended on it and you will not leave it

முழங்குகின்ற கொல்லும் தொழிலை உடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர்

சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர்

SILPALIK ILKAL THORUNJ SELA VOLIYEER

To get begging food daily you are going door to door

சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர்

கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக்

KALAIK KOMBUNG KARI MARUPPUM MIDARIK

The Arisil River has thrown away the horns of deer and elephant long teeth

மான் களின் கொம்புகளையும் யானையின் தந்தங்களையும் எடுத்தெரிந்து

கலவம்மயிற் பீலியுங் காரகிலும்

KALAVAM MAYIR PEELI YUNG KAAR AKILUM

The peacock feathers and dark color agil wood

தோகையை உடைய மயிலினது இறகுகளையும் கரிய அகில் கட்டைகளையும்

அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை

ALAIKKUM PUNAL SERARI SITREN KARAI

All are lashed by the river water of arisil River southern side bank where situated

அலையப் பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென் களுயில் உள்ள

அழகார்திருப் புத்தூர் அழகனீரே

ALAKAAR THIRUP PUTHTHOOR ALAKANEEREA

In this lovely place you have descended in handsome form

அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளி உள்ள அழகரே

அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர்

ARU MALARON SIRAM ONDRU ARUTH THEER

On the rare lotus flower place seated Bharama whose one head you have cut off

நீர் அரிதாகிய தாமரை மலரின் கண் இருக்கும் பிரமதேவன் தலை ஒன்றை அறுத்தீர்.


செறுத்தீர்அழற் சூலத்தில் அந்தகனைத்

SERUTH THEER ALALR SOOLATH THIL ANTHA KANAITH

With fire spitting soolam battle force you have destroyed the assura named andagaswaran

நெருப்பை வீசும் சூலத்தினால் அந்த காஸ்வரனை அழித்தீர்

திருமகள் கோனெடு மால்பலநாள்

THIRUMAKAL KONODU MAAL PALANAAL

Lardess Lakshmi whose husband Thirumal daily with so many days

திருமகளுக்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உனக்கு பல நாள்

சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்

SIRAP PAAKIYA POOSANAI SEI POLUTHIL

In special form who has conducted pujaass and one day

சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாள்களில் ஒரு நாள்   
ஒருமலர் ஆயிரத் திற்குறைவா

ORU MALAR AAYIRATH THIR KURAI VAA

Who has chanted mantras and put lotus flower one by one at last one flower is short to one thousand and so as to complete the prayer he has plucked one of his eyes and then placed it under lard Siva’s feet and then happily completed the prayer

அவன் சாத்துகின்ற ஆயிரம் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய

நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே

NIRAIVAAKA VOOR KAN MALAR SOOT TALU MEA

அந்த பூஜை நிறைவாகும்படி தனது கண்ணாகிய மலரைப் பறித்து சாத்தி மகிழ்ந்து

பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர்

PORUVIRAL AALI PURITHTH ALITH THEER

Lard Siva on see his firm devotion the winning force filled circle force he gave him as gift

போரின் கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப்படையை அருளினார்

பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே

POLILAAR THIRUP PUTH THOORP PUNITHA NEEREA

In that way you have descended in thiru puthoor temple place in pure form

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளி உள்ள புனிதரே

3. தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்

THARIKKUN THARAI NEER THALAL KAAT RANTHARANJ

Lard Siva you are bearing the land water wind space moon and sun and soul form
எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம்

சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்

SANTHIRAN SAVITHAA IYAMAANAN AANEER

சந்திரன் சூரியன் ஆன்மா ஆகிய எல்லாப் பொருள்களும் ஆனிர்

சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்

SARIKKUM PALIK KUTH THALAI ANGEAI YENTHI

So you are in popper form wandering everywhere to collect begging food from the ladies, is it dignified act on your part

ஆதலின் ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டு

தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்

THAIYALAAR PEIYAK KOLVATHU THAKKA THANDRAAL

பெண்டிரின் சில பொருள்களை இட அதனை ஏற்பது உமக்குத் தகுவது அன்று

முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்

MURIKKUN THALIRCH SANTHANATH THODU VEAYUM

To adorn by nipping the tender leaves of sandal trees and bamboo trees

கிள்ளி அணியத்தக்க தளிர்களை உடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும்

முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி

MULANGU KUN THIRAIK KAIKALAAL VAARI MOTHI

With sound raising form of river waves are carried on their hands and then placed it on the banks of the river
ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக் கொண்டு வந்து கரையை மோதி

அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை

ARIKKUM PUNAL SER ARISIR REN KARAI

And then freely flowing that river named arisil and its southern bank place

அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றுத் தென்கரையில் உள்ள

அழகார்திருப் புத்தூர் அழகனீரே

ALKAAR THIRUP PUTH THOOR ALAKA NEEREA

That lovely form of thiruputhoor place you have descended in handsome form

அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளி உள்ள அழகரே

கொடியுடை மும்மதில் வெந்தழியக்

KODI YUDAI MUMMATHIL VEN THALIYAK

The flag hoisted three enemies castles are destroyed by fire

நீர் கொடிகளை உடைய மூன்று அரக்கன் வெந்து அழியும்படி


குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால்

KUNDRAM VILAA NAANIYIR KOL ONDRI NAAL

The Meru hills converted as bow and then snake tied as rope and then shot

மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நானில் தொடுத்த


இடிபட எய்தெரித் தீர்இமைக்கும்

IDIPADA EITH ERITHTHEER IMAIKKUM

To raise a sound from the bow rope and shot an arrow with in a wink time

ஓர் அம்பில் ஓசை உண்டாகுமாறு எய்து


மளவில்லுமக் காரெதிர் எம்பெருமான்

MALA VILLU MAK KAA EATHER EM PERUMAAN

So you do not have any powerful person to compare with you

ஆதலின் உமக்கு நிகராக வாழ்பவர் ஒருவரும் இல்லை


கடிபடு பூங்கணை யான்கருப்புச்

KADIPADU POONG KANAI YAAN KARUPPUCH

The fragrance filled five types of flower arrows and then sugar cane

மனம் பொருந்திய மலர்களையே அம்பாகவும் கரும்பையே


சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால்

SILAIK KAAMANAI VEVAK KADAIK KANNI NAAL

Is converted as bow that person comman is destroyed by the fore head fire of lard Siva

வில்லாகவும் கொண்ட காம வேளை வெந்து

பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ

PODI PADA NOKKIYA THENNAI KOLLO

You have converted him into ashes in that way red color eye you have seen him please tell me the reason for it

சாம்பலாய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கிய எதைக் கருதியோ


பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே

POLILAAR THIRUP PUTHTHOORP PUNITHA NEEREA

My dear lard Siva you have descended in the flower plantation place in pure and holly form

எம்பெருமானே சோலைகள் நிறைந்த திருப்பத்தூரில் எழுந்தருளி உள்ள புனிதரே

5. வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன்

VANANGITH THOLU VAARA VAR MAAL PIRAMAN

Thirumal Bharama who are bowed their head before you and summited under your feet
உம்மை அடி பணிந்து கை கூப்பித் தொழுகின்ற அடியவர்கள் திருமால் பிரமன்

மற்றும்வானவர் தானவர் மாமுனிவர்

MATRUM VAANAVAR THAANAVAR MAA MUNIVAR

And others are deevass asurass big saints

மற்றைய தேவர்கள் அசுரவர் பெரிய முனிவர்கள்


உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே

UNANGKA THALAI YIR PALI KONDAL ENNEA

In that way you are highly elevated place but you have been in the dried human skull collecting the begging food please tell me the reason for it

அவ்வாறு இருக்க நீ உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது எதனால் சொல்வீர்களாக


உலகங்களெல் லாமுடையீர் உரையீர்

ULAKANGLELLAM MUDAIYEER URAIYEER

You have possessed whole world at your disposal please tell me the reason for begging

இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய

IANGIK KIKAYAL SEAL ILA VAALAI PAAYA

In the water bodies all the kayal seal and young vaalai fishes are leap and jump upward
கயலும் சேலும் இளைய வாளையுமாகிய மீன் கள் ஒன்றோடு ஒன்று பொருந்தி மேல் எழுந்து பாயவும்

இனக்கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம்

INAK KENDAI THULLAK KAND IRUNTHA ANNAM

And then in group form of kendai fishes are leap forward and on seeing it hitherto in passive form seated anna birds which are in active form

கூட்டமாகிய கெண்டை மீன் கள் துள்ளவும் அவற்றைக் கண்டு முன்பு வாளா இருந்த அன்னப் பறவைகள் அலைகளைத்


அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை

ANANGIKI KUNANG KOLLARI SITREN KARAI

Caught the fishes and then ate it in that mannerism filled place is, arisil river southern bank where situated

துன்புறுத்தி தம் இயல்பினை மேல் கொள்கின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள


அழகார்திருப் புத்தூர் அழகனீரே

ALGAAR THIRUPUTHTHOOR ALAGANEEREA

In the lovely place of thiru puthoor temple place you have descended in hand some deity form

அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற அழகரே

அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்

AKKATH THADIMAI SEIYYUM ANTHANNA RAAN

Daily as per rule one anthana Bharamin

நீர் உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒரு


அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்

ARISIR PUNAL KONDU VANTH AATTU KINDRAAN

Who has collected arisil river sacred water and then giving sacred bath to you

அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு நீராட்டுகின்றனர்

மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்

MIGATHTHALAR VEITHIK KUDAI THAIYUM NUM

Who has so much tired and got leaned body and then the water pot
பசியால் மிகவும் உடல் மெலிவடைந்து நீர் குடத்தையும் உமது

முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்

MUDIMEL VILUTH THITTU NADUNGU THALUM

Inadvertently he dropped the pot on your head and for that act he got shivering form and then after wards you have appeared in his dream

முடிமேல் நழுவி விழவிட்டு அப்பிழைக்காக நடுக்க முற நீர் அவரது கனவில் தோன்றி


வகுத்தவ னுக்குநித் தற்படியும்

VAGUTH THAVANUKKU NITHTHAR PADIYUM

And then informed him this act is accident one you do not feel sorrow for it hear after a while you are collecting water in the pot a gold coin will be placed in to it

அப்பனே நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க உன் உடல் மெலிவிற்குக் காரணமான இந்த கடம் நீர் நிரப்பும் பொழுது நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசு கிடைக்கும்


வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்

VARUM ENRORU KAASINAI NINDRA NANDRI

In that way lard Siva put his grace on him and then one gold coin is placed into the pot without fail and that ever permanent service is done by him

என அருள் செய்து நாள்தோறும் ஒரு பொற்காசினை கடத்திலும் தவறாது நிலை பெற்ற திருத்தொண்டினைச் செய்த


புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்

PUGAL THTHUNAI KAIPPUGACH SEITHU YUGAN THEER

In this way you have helped to that pugal thunai naayanaarand then ultimately you gave him a place in mukthi

அப்புகழ்த் துணையாரது கையில் சேரும்படி செய்து அவரை ஆட்கொண்டு அருளினர்


பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே

POLILAAR THIRUP PUTHTHOORP PUNITHANEEREA

Lard Siva you have descended in the plantation covered place of Thiruputhoor in pure form

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளி உள்ள புனிதரே

7. பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப்

PALIKKUM PERUN THAKKAN ECHCHAM MALIYAP

Thakken who has disregarded you so that his big yaga fire is destroyed form

நீர் உம்மை இகழ்ந்த பெரிய தேவனாகிய தக்கனது வேள்வி அழியும்படி


பகலோன்முத லாப்பல தேவரையும்

PAKALOOAN MUTHAALAP PALA DEVARAIYUM

Where taken part that sun and other deevass of so many in number

சூரியன் முதலான நின்ற தேவர் பலரையும்


தெழித்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ்

THOLITH THITTAVAR ANGKANJ SITHAITH ARULUJ

To get all in shivering form so that all the deevass body parts are smashed form one by one

அவர் நடுங்கும்படி அதிர அவரது உறுப்புக்களில் ஒவ்வொன்றை சிதைத்தது என்னையோ


செய்கையென்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர்

SEIKAI YENNAI KOLOMAI KOL SEM MIDATREER

To do such type of act please tell me the reason for it and you have blue color throat tainted with poison

சிறிதிடத்தில் கருமை நிறத்தைக் கொண்ட முழுவதும் செம்மையாய் உள்ள


விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி

VILIKKUN THALAIP PEELI YODOLA MUNTHI

To open eyes in that way the peacock feathers possessed on the top of the feather and ealem trees are pushing forward

கண் விழிப்பது போலத் தோன்றும் அழகிய வட்டங்களை உடைய தாழையாகிய மயிர் தோகையோடு ஏலக்காய் மரங்களைத் தள்ளி


விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி

VILANGUM MANI MUTH THODU PON VARANDRI

And ever glittering form of ruby diamond and pearls and gold all are carried

ஒளிவீசுகின்றா மாணிக்கம் முத்துபொன் என்பனவற்றை வாரிக்கொண்டு


அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை

ALIKKUM PUNAL SER ARISIL THEAN KARAI

And the river banks are eroded by the arisil river southern bank situated

கரைகளை அழித்து ஓடும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் கரையின் தென்கரையில் உள்ள


அழகார்திருப் புத்தூர் அழகனீரே

ALAGAAR THIRU PUTHTHOOR ALAKANEEREA

Lard Siva you have descended in the thiru puthoor temple place in lovely form

அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளி உள்ள அழகரே

பறைக்கண்ணெடும் பேய்க்கணம் பாடல்செய்யக்

PARAI KANNODUM PEIK KANAM PAADAL SEIYYAK

The ghosts are in clubbed form which have bigger eyes just like drum eye form and singing
நீப் பறைபோலும் பெரிய கண்களை உடைய பேய்க் கூட்டம் பாடுதலைச் செய்யும்

குறட்பாரிடங் கள்பறை தாம்முழக்கப்

KURAT PAARIDANGAL PARAI THAAM MULAGAGAP

The pigmy form of small demon forces which are beating the drums
குறுகிய வடிவத்தை உடைய பூதங்கள் பறைகளை முழங்கவும்

பிறைக்கொள்சடை தாழப் பெயர்ந்துநட்டம்

PIRAIK KOL SADAI THAALAP PEYARNTHU NATTAM

The curved moon adorned pig tail hanging in the lower form and you are infinitive

பிறையைக் கொண்ட சடைகீழே தாழ்ந்து அலைய காலம் கடந்த


பெருங்காடரங் காகநின் றாடலென்னே

PERUNG KAADARANG KAAKAK NINDRAADAL ENNEA

Lard Siva you have considered the burial ground as dancing stage please tell me the reason for it

காடே அரங்கமாக நின்று அடிபெயர்ந்து நடனமாடுதல் ஏன்


கறைக்கொள்மணி கண்டமுந் திண்டோள்களுங்

KARAIKOL MANI KANDA MUM THENDOL KALUM

You have possessed poison tainted throat and with powerful solders

நஞ்சைக் கொண்ட நீல கண்டத்தில் கண்டகரமாகவும் திண்ணிய தோள்களில் வருவலயமாகவும்

கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்

KARANGKAL SIRAN THANILUNG KACHCHU MAAKA

In the fore hand you have adorned small snakes as bangles and in the head place as head ornament form and in the waist the snake is tied as belt form

முன் கையில் கங்கனமாகவும் தலையில் தலைச்சூட்டாகவும் அறையில் கச்சாகவும்


பொறிக்கொள்ளர வம்புனைந் தீர்பலவும்

PORIK KOLL ARAVAM PUNNAI THEER PALAVUM

In that way so many doted snakes are adorned all over the body

புள்ளிகளைக் கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே


பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே

POLI LAAR THIRU PUTHTHOOR PUNITHA NEEREA

Lard Siva you have descended in the thiruputhoor place in holly form

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளி உள்ள புனிதரே

9. மழைக்கண்மட வாளையொர் பாகம்வைத்தீர்

MALAIK KAN MADA VAALAI YOOR BAAKAM VAITH THEER

The water clouds like grace filled eyes are possessed lardess yumadevi has been kept in your left part of the body

நீர் மேகம் போலும் பெரிய கண்களை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் வைத்தீர்

வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்

VALAR PUN SADAIK KANGAIYAI VAITH THU KAN THEER

Besides one more lady is named Ganges you have kept on your hair willingly
அதன் மேலும் வளர்கின்ற புல்லிய சடையின்மேல் கங்கை என்பவரை விரும்பி வைத்தீர்

முழைக்கொள்ளர வோடென் பணிகலனா

MULAIK KOLL ARAVO DEN PANI KALANAA

In that way wealthy life is not led and in the sand don living snakes and bones are adorned as ornaments
அவ்வாறு செல்வ வாழ்க்கை வாழ நினையாது புற்றினை இடமாகக் கொன்ற பாம்பு எலும்புமே அணிகலன் களாக

முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ

MULUNEER MEI POOSUTHAL ENNAI KOLO

And the ashes are adorned all over the body and then living here please tell me the reason for it

மேனி முழுவதும் சாம்பலைப் பூசி வாழ்தல் என்னே


கழைக்கொள்கரும் புங்கத லிக்கனியுங்

KALIK KOL KARUM PUNGATHA LIK KANIYUNG

The weed crop like sugar cane and banana fruits

கழை என்றும் தன்மையைக் கொண்ட கரும்புகளையும் வாழைப் பழத்தையும்


கமுகின்பழுக் காயுங் கவர்ந்துகொண்டிட்

KAMUKIN PALUK KAAYUNG KAVARNTHU KONDIT

And the beetle nut tree ripped fruits all are carried

கமுகு மரத்தின் முற்றியகாய்களையும் வாரிக்கொண்டு வந்து

டழைக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை

ALAIKKUM PUNAL SEAR ARISIL THEN KARAI

In the water filled river arisl and its southern bank

கூப்பிடுகின்ற நீர் பொருந்திய அரிசி ஆற்றின் தென்கரையில்

அழகார்திருப் புத்தூர் அழகனீரே

ALGAAR THIRU PUTH THOOR ALAGA NEEREA

In that lovely Thiruputhoor place you have descended in lonely form

உள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளி உள்ள புனிதரே

கடிக்கும்மர வால்மலை யாலமரர்

KADIKKUM MARAVAAL MALAIYAAL AMARAR

The water biting snake is used as rope and hill as pole
நீர் கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு மலையாகிய மத்தினால்

கடலைக்கடை யவ்வெழு காளகூடம்

KADALAIK KADAI YAV VELUKALA KOODAM

With them while grinding the milk sea and from it emanated big poison

பாற்கடலைக் கடைந்த போது உண்டாகிய பெரு நஞ்சு


ஒடிக்கும்முல கங்களை யென்றதனை

ODIKKUM MULA KANGKALAI YEND RATHANAI

That poison will destroy the whole world so it is

எல்லா உலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி அதனையே


உமக்கேஅமு தாகவுண்டீர் உமிழீர்

UMAIKEA AMUTHAAKA YUNDEER UMILEER

You have consumed it as nectar and did not up to this time spit it

உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர் பின்பு இதுவரை அதனை உமிழவும் இல்லை


இடிக்கும்மழை வீழ்த்திழுத் திட்டருவி

IDIKKUM MALAI VEETH THILUTH THIT TARUVI

The thunder clouds are pushed down as waterfalls and running afterwards

இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இடித்துக் கொண்டு முன்பு அருவியாக ஓடிப்பின்பு


யிருபாலுமோ டிய்யிரைக் குந்திரைக்கை

YIRU PAALUMOO DIYIRAIK KUN THIRAIK KAI

And then flow as river and then sound raising waves form
ஒலிக்கும் அலைகளாகிய

அடிக்கும்புனல் சேரரி சிற்றென்கரை

ADIKKUM PUNAL SER ARI SI THEN KARAI

And then afterwards the two sides of the river banks and then flow as flood form of arisil river southern side

கைகளால் இருபக்கத்தும் உள்ள கரைகளைமோதும் வெள்ளமாய்ப் பெருகி ஒளிக்கின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள


அழகார்திருப் புத்தூர் அழகனீரே

ALGAAR THIRU PUTH THOOR ALAGA NEEREA

Lard Siva you have descended in the thiruputhoor temple place in handsome form

அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளி இருக்கின்ற அழகரே

11. காரூர்மழை பெய்து பொழிஅருவிக்

KAAROOR MALAI PEITHU POLI ARUVIK

The clouds are gave huge rain so that water falls are flooded
மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய அதனாலே விழ்ந்த

கழையோடகில் உந்திட் டிருகரையும்

KALAIYODU AKIL UNTH THI IRU KARAIYUM

So that bamboo and agil trees are pushed down by the water falls

மூங்கிலையும் அகில் கட்டையையும் தள்ளிக் கொண்டு இருகரையின்மிதும்


போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப்

POROOR PUNAL SEAR ARI SIL THEN KARAI

So that war form of sound raised that water flooded river arisil southern bank situated

போரினை மேற்கொள்ளும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள


பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை

POLIL AAR THIRU PUTHTHOOR PUNITHAR THAMMAI

The flower plantations are filled place thiru puthoor lard Siva in holly form
சோலைகள் நிறைந்த திருப்புத்தூர் புனிதரை

ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந்

AARURAN ARINTHAMIL AINTHI NODAITH

Sunderer whose rare this ten Tamil poems
நம்பி ஆரூரனது அரிய தமிழ்ப் பாடல்கள் பத்தினையும்

தழகால்உரைப் பார்களுங் கேட்பவரும்

THALAKAAL URAIP PAAR KALUNG KET PAVARUM

In pure form chanting and those are hearing

மொழிக்குற்றம் இசைக் குற்றம் இன்றி துதிப்பவர்களும் அத்துதியைக் கேட்பவரையும்


சீரூர்தரு தேவர்க ணங்களொடும்

SEERUR THARU DEVAR KANAGKA LODUM

They will ultimately clubbed deeva cluster and lived there long life
சிறப்பு மிக்க தேவர் கூட்டத்துள் கூடி வாழ்ந்து

இணங்கிச்சிவ லோகம தெய்துவரே

INANGICH SIVALOGAMA THEI THUVAAREA

And then afterwards attained Sivalogam place

பின் சிவயோகத்தை அடைவார்கள்

Om thiruchitrambalam

March 23, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: