Thiruanjaikalam
4. திருவஞ்சைக்களம்
Thiru anjai kalam
Nambi arroorer (sunderer) at first went to thiru pukku oliyoor and then at avinaai place where he retrieved the child who is engulfed by a crocodile long ago. Afterwards we went to hilly area named Chera kingdom. Where he is invited by king Cheramaan perumaanan then stayed with that capital city place named vangi and then afterwards he went to so many temple places and prayed lard Siva and then ultimately entered the place named magothai
Once while taking bath he has been thinking over that in this world lust feelings and bonded family life should be broken and in this way he sang the following songs
Lard Siva who has taken so many forms which is not liked by all and the reason for it is that the world people will move away from the relationship bond and then enter in to lard Siva’s fold that is mukthi
நம்பி ஆரூரர்(சுந்தரமூர்த்தி சுவாமிகள்) திருப்புக் கொளியூர், அவிநாசியில் முதலை உண்ட பாலகனை அழைத்து தந்து அருளினார். மலைநாடு சென்றார். அங்கு சேரமான் பெருமான் முன்னின்று அழைத்து வந்து வஞ்ஜி மாநகரில் அவருடன் தங்கி மகிழ்ந்து இருந்தார் பின்னர் அங்கிருந்து பல தலங்களை வணங்கி மகோதையை அடைந்தார்.
ஒரு நாள் சேரமான் பெருமான் நீராடும் வேலையில் இந்த உலகில் பாசத்தால் கட்டப்பட்ட மனை வாழ்க்கை அறுத்திட்டுத் திருவடியில் சேர்ந்து அருள வேண்டும் என்றும் குறிப்போடு பாடியது இத்திருப்பதிகம்
சிவபெருமான் உலகத்தவர் வெறுக்கும் பல கோலங்களை ஏற்றது இந்த உலகில் மற்றவர்கள் பாசத்தை அறுத்தல் வேண்டும் என்பதற்காகவே ஆகும் என்ற குறிப்போடு இந்த பாடல்களை அருளிச் செய்தார்
தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
THALAIK KUTH THALAI MAALAI ANINTHA THENNEA
You have adorned skull garland what is the reason for it
நீ தலைக்கு அணிகலனாகத் தலை மாலையை அணிந்தது ஏன்
சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே
SADAI MEL KANGAI VELAM THARITH THA THENEA
You have carried on your head the Ganges River what is the reason for it
சடைமேல் கங்கை என்னும் ஆற்றைத் தாங்கியது ஏன்
அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே
ALAIKKUM PULITH THOL KONDU ASAITHTHA THENNEA
The killer instinct filled tiger skin adorned in the waist
கொல்லும் தன்மை உடைய புலியினை தோல் உரித்தெடுத்து அரையில் உடுத்தது ஏன்
அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே
ATHAN MER KATHA NAAKACH AARTHTHA THENEA
On the dress you have tied the angry filled snake as belt what is the reason for it
அந்த உடையின் மேல் சினத்தை உடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது ஏன்
மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
MALAIKKU NIGAR OPPANA VAN THIRAIKAL
The rock like mighty power full waves are roaring form approaching on the sea shores
மலைக்கு நிகராகிய தன்மையில் தமக்கு ஒப்பனாவாகிய வலிய அலைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
VALITH THETRI MULANGI VALAM PURI KONDU
Those waves are carrying the right squaved conches and throw away on the sea shore
வலம்புரிச் சங்குகளைப் பற்றி ஈத்து வந்து எறிந்து முழங்கி
டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை
ALAIKUM KADAL ANKARAI MEAL MAA KOTHAI
In that ever dynamic sea shore place named maagothai city place
மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய மாகோதை என்னும் நகரில் உள்ள
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே
ANIYAAR POLIL ANJAIK KALATH THAP PANEA
In that lovely place of plantation covered place is thiruvangaikalam where you have descended as my father form
அழகு நிறைந்த சோலைகளை உடைய திருவாஞ்சைக்களம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற தந்தையே
பிடித்தாட்டிஓர் நாகத்தைப் பூண்டதென்னே
PIDITH THAATTI OOR NAAGATH THAIP POONDA THEN NEA
That unwanted snake is captured and then allow to dance and then you have adorned it as ornaments tell me what is the reason for it
விரும்பத் தகாத பாம்பை பிடித்து ஆட்டுதலையும் பூணாகப் பூனுதலையும் மேற்கொண்டது ஏன்
பிறங்குஞ்சடை மேற்பிறை சூடிற்றென்னே
PIRANGUCH SADAI MER PIRAI SOODIT RNNEA
In the ever active form of hair you have adorned moon as ornament what is the reason for it
விளங்குகின்ற சடையின்கண் பிறையைச் சூடியது ஏன்
பொடித்தான்கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே
PODITH THAAN KONDU MEIM MUTRUM POOSIT RENNEEA
You have collected burial ground ashes and then adorned all over the body what is the reason for it
சாம்பலை எடுத்து உடம்பு முழுவதும் பூசிக்கொண்டது ஏன்
புகர்ஏறுகந் தேறல் புரிந்ததென்னே
PUGAR ERUKANTHU ERAL PURINTHATHU ENNEA
The ignanimus bull which has been taken as chariot to travel and tell me what the reason is for it
இழிந்த எருதினையே ஊர்தியாகக் கொள்ள விரும்பியது ஏன்
மடித்தோட்டந்து வன்றிரை யெற்றியிட
MADI THOTTANTHU VANDRIRAI ETRI YIDA
The mighty waves are one after another converted in coil form and then lashed on the sea shore
வலிய அலைகள் தம் வடிவத்தைத் அருளாகச் செய்து ஓடி வந்து மோதுதலினால்
வளர்சங்கம்அங் காந்துமுத் தஞ்சொரிய
VALAR SANGAM ANGKAAN THU MUTHTHAM SORIYA
The fetus growing conches are opened its mouth and delivered pearls
கருவளர் கின்ற சங்குகள் வாய் திறந்து முத்துகளை ஈன
அடித்தார்கட லங்கரை மேல்மகோதை
ADITHTHAAR KADAL ANGKARAI MEL MAKOTHAI
In this way roaring form of sea waves that appeared are filled sea shore where magothai place available
அங்ஙனம் அலைத்து முழங்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய மகோதை என்னும் நகரின்கண் உள்ள
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே
ANIYAAR POLIL ANJAIK KALATHTH APPANEA
And lovely flower plantations are filled place is Thiruvangai kalam where lard Siva you have descended in father form
அலகு நிறைந்த சோலைகளை உடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் தந்தையே
சிந்தித்தெழு வார்க்குநெல் லிக்கனியே
SINTHITHU ELU VAARKKU NELLIK KANIYEA
Those who are thinking over and then get up you are amla fruit like tastier one
உன்னை நினைத்து துயில் உணர்வார்க்கு நெல்லிக்கனி போன்றவனே
சிறியார்பெரி யார்மனத் தேறலுற்றால்
SIRIYAAR PERIYAAR MANATH THERAL UTRAAL
If anybody has got clear picture about you in his mind even a smaller person will be considered as bigger one
உன்னை உள்ளம் தெளியப் பெற்றால் சிறியாரும் பெரியராவர்
முந்தித்தொழு வார்இற வார்பிறவார்
MUNTHITH THOLUVAAR IRAVAAR PIRAVAAR
Those who are come over fastly and pray you they will not get repeated birth and death
விரைந்து வந்து உன்னை வணங்குபவர் இறத்தலும் பிறத்தலும் இலதாவர்
முனிகள்முனி யேஅம ரர்க்கமரா
MUNIKAL MUNIYEA AMARARK KAMARAA
To all the saints you are prime saint and to all the deevass you are prime deevaa
முனிவர்களுக்கு எல்லாம் முனிவனே தேவர்களுக்கு எல்லாம் தேவனே
சந்தித்தட மால்வரை போற்றிரைகள்
SANTHI THADA MAAL VARAI POL THIRAIKAL
The bamboo gowned big hills where bamboo are swayed just like sea waves lashed on the sea shore
மூங்கில்களை உடைய பெரிய மலைகள் போலும் அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது
தணியாதிட றுங்கட லங்கரைமேல்
THANIYAA THIDARUNG KADALANG KARAIMEL
Without any interruption waves are lashing on lovely sea shore
இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையின்மேல்
அந்தித்தலைச் செக்கர்வா னேஒத்தியால்
ANTHITH THALAICH SEKKAR VAANEA OTHTHIYAAL
To control the minds of disciples you are appearing in red color body form just like evening time sky form
அவரது உள்ளத்தைப் பிணித்தற்கு நீ மாலை காலத்தில் தோன்றும் செவ்வானம் போலும் அழகிய திருமேனியை உடையவராய் இருக்கின்றாய்
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே
ANIYAAR POLIL ANJAIK KALATHTH APPANEA
In the maakothai place situated temple named thiru anjaikalm which is surrounded lovely flower plantation
மாகோதை என்னும் தலத்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளை உடைய திருவஞ்சிக்களம் என்னும் திருக்கோயில் எழுந்தருளி இருக்கும் தந்தையே
4 இழைக்கும்மெழுத் துக்குயி ரேஒத்தியால்
ILAIKUM ELUTHHU KUYIREA OTHTHIYAAL
You are activating the whole universe so you are considered in vowel letter form
நீ உலகத்தை இயக்குவதால் எழுதப்படும் எழுத்துகளுக்கு உயிர் எழுத்து போல் இருக்கின்றாய்
இலையேஒத்தி யால் உனை யேஒத்தியால்
ILAIYEA OTHTHIYAAL UNNAIYEA OTHTHIYAAL
You are not known in material form but any how you are behind in all the activities existed in cancelled form
இல்லாதாய் போல்கின்றாய் ஆயினும் உள்ளாய் போல்கின்றாய்
குழைக்கும்பயிர்க் கோர்புய லேஒத்தியால்
KULAIKUM PAYIR KOR PUYALEA OTHTHIYAAL
To help the growing life plant firm you are existed in rain form
உயிர்களுக்கு உதவுதலில் தளிர்க்கும் பயிர்க்கு மேகம் போல்கின்றாய்
அடியார்தமக் கோர்குடி யேஒத்தியால்
ADIYAAR THAMAK KOR KUDIYEA OTHTHIYAAL
You are living with the disciples so you are part of their family life
ஒரு குடிப் பிறப்பினை போல்கின்றாய்
மழைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
MALAKKU NIGAR OPPANA VAN THIRAIKAL
The waves are emanating water droplets so it is just like rain water droplets
துளிகளைத் துற்றுதலில் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள்
That way comparable mighty ways
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
VALITH THETRI MULANGI VALAM PURI KONDU
In this way so many commodities are pulling by the sea waves and then placed it on the sea shore where the right squied the conch
பலபொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி வலம்புரிச் சங்கின் இனிய
டழைக்குங்கட லங்கரை மேல்மகோதை
ALAIKKUM KADALANG KARAI MEL MAKOTHAI
Form it emanated attractive sound and entertained all the people and in that lovely sea shore place maakothai where lard Siva’s temple situated
ஓசையில் யாவரையும் தன்பால் வருவிக்கின்ற கடலினது அழகிய கரையில் உள்ள மாகோதை என்னும் தலத்தில்
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே
ANIYAAR POLIL ANJAIK KALATHTH APPANEA
And in the lovely plantation place established the temple named Thiru anjai kalam and you have descended my father form
உள்ள அழகு நிறைந்த சோலைகளை உடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் தந்தையே
5 வீடின்பய னென்பிறப் பின்பயனென்
VEEDIN PAYA NEN PIRAPPIN PAYANEN
Lard Siva you have created heaven to live happily and then also created this world to remove lust feelings from the mind of living beings. Why you have created two types of world please tell me the reason for it
இரண்டில் ஒன்றையே அமையாது மறுதலைப் பொருள்களாகிய இவ்விரண்டையும் அமைத்ததன் பயன்யாது
விடையேறுவ தென்மத யானை நிற்கக்
VIDAI YERU VATHEN MATHA YAANAI NIRKAK
There is ferocious elephant available to travel but you have used only the bull to travel please tell me the reason for it
மதத்தையை உடைய யானை இருக்க எருதினை ஊர்வது ஏன்
கூடும்மலை மங்கை யொருத்தியுடன்
KOODUM MALAI MANGAI ORUTHTHI YUDAN
In your sacred body ever permanent form of given left part of your body to lardess yumaadevi who is rock king daughter
திருமேனியில் நீங்காத பொருந்தியுள்ள மலை மகளாகிய ஒருத்தியோடு
சடைமேற்கங்கை யாளைநீ சூடிற்றென்னே
SADAIMER GNAGAI YAALAI NEE SOODIR RENREA
You have adorned Ganges on your hair please tell me the reason for it
கங்கை என்பவளையும் சடையில் வைத்தது ஏன்
பாடும்புல வர்க்கரு ளும்பொருளென்
PAADUM PULAVARK KARULUM PORULEN
Those poets to whom you gave reward tell me what it is
உன்னைப் பாடுகின்ற புலவர்க்கு நீ அளிக்கும் பரிசில் யாது
நெதியம்பல செய்த கலச்செலவின்
NATHIYAM PALA SEITHA KALACH SELAVIL
The abundant wealth is bringing by the wooden ships which are always moving from sea shores
செல்வங்களைத் தந்த மரக்கலங்களினது செலவினை உடைய
ஆடுங்கட லங்கரை மேல்மகோதை
AADUNG KADALANG KARAI MEL MAKOTHAI
To take bath in the sea that lovely place is maakothai city place
மூழ்குதற்குரிய கடலினது அழகிய கரையின் மேல் உள்ள மாகோதை என்னும் நகரில் உள்ள
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே
ANIYAAR POLIL ANCHAIK KALATHTH APPANEA
The lovely thiru anjai kalam temple place you have descended in my father form
அழகு நிறைந்த சோலைகளை உடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் தந்தையே
6 இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே
IRAVATH THIDU KAAT ERI YAADIRENNEEA
Lard Siva you have in the mid night time you are dancing in the burial ground what is the reason for it please tell me
நீ இரவுப் பொழுதில் புறம் காட்டில் எரியில் நின்று அடியது ஏன்
இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே
IRANTHAAR THALAIYIR PALI KODAL ENNEA
On the dead man skull you have been collecting the begging food please tell me the reason for it
இறந்தார்கள் தலையில் பிச்சை ஏற்றல் ஏன்
பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே
PARAVITH THOLUVAAR PERU PANDAM ENNEA
Those disciples who are praying under your feet what benefits they have got form you please tell me
உன்னை ஏத்தி வணங்குவோர் பெறும் பொருள்யாது சொல்லி அருள்வாயாக
பரமாபர மேட்டி பணித்தருளாய்
PARAMAA PARAMETTI PANITHARULAAI
You are possessed highly regarded place in this world you are leader to all in this world
யாவர்க்கும் மேலானவனே எல்லார்க்கும் மேலிடத்தில் உள்ளவனே
உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங்
URAVATH THODU SANGA MODU IPPI MUTHTHAMUM
With mighty powerful form of conches and chippee and pearls
வலிமையோடு சங்டு சிப்பி முத்து
கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
KONAR THETRI MULANGI VALAMPURI KONDU
All are thrown on the sea shore place that conches are used to raise sound
என்பனவற்றைக் கொணர்ந்து வீசி வலம்புரி சங்கை மேலே கொண்டு முழங்கு
டரவக்கட லங்கரை மேல்மகோதை
ARAVAK KADAL ANG KARAI MEL MAAKOTHAI
That emotional filled way in that sea shore place situated maagothai city place
ஆர்ப்பரவத்தை உடையதாகிய கடலினது அழகிய கரையின்கண் உள்ள மாகோதை என்னும் நகரில் உள்ள
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே
ANIYAAR POLIL ANCHAIK KALATHTH APPANEA
In the flower plantation surrounded temple named thiruvanjai kalam where you have descended into my father form
அழகு நிறைந்த சோலைகளை உடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் தந்தையே
7 ஆக்கும்மழி வும்மைய நீயென்பன்நான்
AAKKUM ALUVUM AIYA NEE ENPAN NAAN
You are responsible for creation as well as destruction and now I have fully understood your nature
அடியேன் இப்பொழுது உன்னை நன்குணர்ந்தேன் ஆதலின் எப்பொருளின் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் காரணம் நீயே என்றும்
சொல்லுவார்சொற் பொருளவை நீயென்பன்நான்
SOLLUVAAR SOL PORUL AVAI NEE ENPAN NAAN
You are responsible form of other cause which is tell by others that matter is also you are
அவற்றிற்க்குக் காரணங்களாகப் பிற பிறவற்றைச் சொல்லுவாரது சொல் பொருள்களும் நீயே என்றும்
நாக்கும்செவி யும்கண்ணும் நீயென்பன்நான்
NAAKKUM SEVIYUM KANNUM NEE ENBAN NAAN
The stimulus and response to five sense organs (ear nose eye skin and Tung) all are you are in that way I will firmly said
புலன் உணர்வுக் காரணமாக நாக்கு செவி கண் என்பனவும் நீயே என்றும் துணிந்து சொல்லுலேன்
நலனேஇனி நான்உனை நன்குணர்ந்தேன்
NALANEA INI NAAN UNAI NANKUNAR THEAN
You are better form in this world now I have fully known it
நோக்குந்நெதி யம்பல எத்தனையும்
NOKKUM NATHIYAM PALA ETHTHANAI YUM
All the consumable articles in this world are abundantly filled
பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக
கலத்திற்புகப் பெய்துகொண் டேறநுந்தி
KALATHTHIR PUTHU PEITHU KONDEARU NUNTHI
In to the wooden ships and driven to all over the world
மரக்கலன்களில் ஏற்றி நடுவண் செல்லச் செலுத்தி
ஆர்க்குங்கட லங்கரை மேல்மகோதை
AARKKUNG KADALANG KARAI MEAL MAKOTHAI
That emotional filled lovely sea shore place situated maagothai city place
ஆரவாறிக்கின்ற கடலினது அழகிய கரையில் உள்ள மாகோதை என்றும் நகரில் உள்ள
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே
ANIYAAR POLIL ANCHAIK KALATHTH APPANEA
Where the temple named thiru anjai kalam and lard Siva you have descended in father form to help all
அழகு நிறைந்த சோலைகளை உடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் தந்தையே
8 வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்
VERUTH THEAN MANAI VAALKKAI YAI VIT OLINTHEAN
I am your disciple I have been hating my family life even in to my mind and with this body I gave away
அடியேன் எனது மனை வாழ்க்கையை மனத்தாலும் வெறுத்தேன் உடம்பாலும் துறந்துவிட்டேன்
விளங்குங்குழைக் காதுடை வேதியனே
VILANGUM KULAIK KAATHUDAI VETHIYANEA
Always sound raising ear ornaments are adorned and descended in this world bharamin form
ஒளி விடுகின்ற குழை அணிந்த காதினை உடைய அந்தணனே
இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத்
IRUNTHAAI ILANGAI KIRAIYAAYA VANANITH
The Sri Lanka king Ravana whose ten heads and
நீ இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அலறும் பத்துத்
தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக்
THALAI PATHTHODU THOL PALA EATRU VILAK
Twenty shoulders all are stamped and broken form
பத்து தலைகளோடு பலதோள்கள் இற்று விழ்வன போலும் நெரித்தாய்
கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங்
KARUTH THAAI KADAL NANJAMUTHU UNDU KANDAM
In the milk sea place emanated dark color poison you have consumed so that your throat turned in to dark color form
பால் கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு கண்டம்
கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன்
KADUKAP PIRA MAN THALAI AINTHILUM ONDRU
Out of five heads possessed sub lard Brahma
One head is amputated
கருப்பாயினாய் பிரமன் தலைகள் ஐந்தனூள் ஒன்றை
றறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை
ARUTH THAAI KADALANG KARAI MEL MAKOTHAI
And in the lovely sea shore place of maagothai city place where situated
விரைவில் அறுத்தலும் செய்தாய் கடலினது அழகிய கரையின்மேல் மாகோதை என்னும் நகரில் உள்ள
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே
ANIYAAR POLIL ANCHAIK KALATHTH APPANEA
The lovely flower plantations are filled place is Thiru anjai kalm temple place you have descended
அழகு நிறைந்த சோலைகளை உடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் தந்தையே
9 பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான்
PIDIKUM KLIREA OTHTHI YAAL EM PIRAAN
To the female elephant the guard is male elephant in that way you’re always guards the souls and you are my guard
நீ பெண் யானைக்கு ஆண்யானை போல் உயிர்களுக்கு எப்பொழுதும் உடன் செல்லும் துணைவனாய் உள்ளாய் என் போலும் மக்களுக்கு
பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
PRAMARKUM PIRAAN MATRAI MAARKUM PIRAAN
Lard Siva you are leader to sub lards Brahma and thiru mal
பிரமன் திருமால் முதலிய தேவர்களுக்கும் தலைவனாய் உள்ளாய்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
NODIKUM MALAVIR PURAM MOONRU EARIYACH
The three castles are destroyed with in a second
மூன்று அரண்கள் ஒருமுறை கை நொடிக்கும் அளவிலே எரித்து ஒழியுமாறு
சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்
SILAI THOTTA VANEA UNAI NAAN MARAVEAN
So that you have touched an arrow and all are known disciple you are I am known it so I will not forget you
வில்லை வளைத்தவனே இவற்றை எல்லாம் உணர்ந்து அடியேன் உன்னை மறத்தல் ஒழிந்தேன்
வடிக்கின்றன போற்சில வன்றிரைகள்
VADIKINDRANA PER SILVAN THIRAIKAL
The pearls are winnowed form of sea waves emanated
முத்துக்கள் முதலியவற்றை வடித்தெடுப்பன் போல சில வலிய அலைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
VALITH THETRI MULANGI VALAMPURI KONDU
And then waves are pulling the right squid conches
அலைகளை ஈர்த்து வந்து வீசி வலம்புரிச் சங்கினால்
டடிக்குங்கட லங்கரை மேல்மகோதை
ADIKUNG KADALANG KARAI MEAL MAKOTHAI
Those who are standing nearby sea waves they are attacked by it where situated maagothai temple place
கரையில் உள்ளாரைத் தாக்குகின்ற கடலினது அழகிய கரையில் மாகோதை என்னும் நகரில் உள்ள
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே
ANIYAAR POLIL ANCHAIK KALATHTHAPPANEA
Of that thiruanjai kalam temple place which is surrounded flower gardens
அழகு நிறைந்த சோலைகளை உடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் தந்தையே
10 எந்தம் அடிகள்இமை யோர்பெருமான்
ENTHAM ADIKAL IMAI YOOR PERUMAAN
Always he is first person to his disciples and always leader to deevass
எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன்
ENNK ENDRUM ALIKKUM MANI MIDATRAN
Lard Siva who is always blesses me and possessed ruby diamond color throat
அந்தண்கட லங்கரை மேல்மகோதை
ANTHAN KADALANG KARAIMEAL MAKOTHAI
In that lovely sea shore place where maagothi is existing
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனை
ANIYAAR POLIL ANJAIK KALANTH APPANAI
The lovely flower plantations covered place is thiru anjai kalathi lard Siva
மந்தம்முழ வுங்குழ லும்மியம்பும்
MANTHAM MULAYUM KULALUM IYAMBUM
The drum mathalam, flute made of bamboo stick and mantham instrument all are raised sounds
மத்தளமும் குழலும் மந்தம் என்னும் அளவாக இயம்பப்படுகின்ற
வளர்நாவலர் கோன்நம்பி ஊரன்சொன்ன
Sunderer who sang sons to praise lard Siva who has descended in thiru navaloor place
நம்மை வளர்கின்ற திருநாவலூரில் உள்ளார்க்கு தலைவனாகிய நம்பி ஆரூரன் போற்றிய
சந்தம்மிகு தண்தமிழ் மாலைகள்கொண்
SANTHAM MIGU THANN TAMIL MAALAI KAL KONDU
With musical notes filled wards are used in his poem garland which is adorned by lard Siva
இசை நலம் மிக்க தமிழ் சொற்கள் என்றும் மலர்களால் இயற்றிய இம்மாலைகளை வாயிலாகக் கொண்டு எம்பெருமான்
டடிவீழவல் லார்தடு மாற்றிலரே
ADI VEELA VALLAR THADU MAARI LAREA
Those disciples who are singing the above songs under lard Siva’s feet they will be removed from infirmity and live forever under lard Siva’s feet
திருவடிகளில் பணிய வல்லார் நிலையாமை நீங்கப் பெற்று நிலை பேறுடையவரானார்
om chitrambalam