THIRUVENNAI NALLOOR
சுந்திர மூர்த்தி சுவாமிகள்
ஏழாம் திருமுறை
SUNDERA MOORTHY SWAMIGAL BLESSED AND GAVE TO THIS WORLD THEAVAARAM SACREAD DECADES
SEVENTH THIRUMURAI
THIRUVENNAI NALLOOR
Sunderer while doing service under Lard Siva’s feet in Thiru kailai hills where lard Siva things over that he must write the Thiru thonder thogai (the saints names of sixty three Nayanmaars). The sacred act of services done by the saints should be revealed to this world. Lard Siva wanted to send him to this world for that act, once he saw two flower plucking spinsters and at once his mind got intimacy with them. Lard Siva on seeing it he ordered sunderer to go in the world and then got birth there.
In Thiru munai paadi state where thiru navaloor place is existed. He has taken birth in the aathi Saiva sect whose father name is Sadaiyanaar and mother name is Easai gaaniyar. He is called in the name of Nambi aaroorer. He has attained his marriage age so parents tried to fix marriage
They selected a bride in Puthoor whose father name is Sadam kavai Siva achariyaar. At the movement of marriage time Lard Siva descended in this world as old Bharamin form and showed palm leaf on it written that he is slave to him. In thiru vennai nalloor place litigation started and then ultimately the judges gave the ruling that he is slave to him. They ordered to go with him. Afterwards Sunderer realized that he is lard Siva so that he beg under his feet to pardon him. Lard Siva ordered him to sing songs with pure Tamil poem form
At first he is hard minded form and cursed him as pithaa (lunatic person) so that lard Siva ordered him to sing the song started with pithaa as first ward accordingly he started this pathigam (decade)
1.திருவெண்ணெய் நல்லுர்
திருக்கயிலாயத்தில் சிவபெருமனுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்த சுந்தரர், திருதொண்டர் தொகை வெளிப்படுத்த ஏதுவாக பூக் கொய்ய வந்த பெண்கள் இருவர் இடம் சிறிது மனத்தைச் செலுத்த பெருமாள் இட்ட கட்டளைப் படி. திருமுனைப் பாடி நாட்டில் திருநாவல் ஊரில் ஆதிசைவ அந்தனர் குலத்தில் சடையனாருக்கும், இசை ஞானியருக்கும் மகனாகத் தோன்றி நம்பி ஆரூரர் என்னும் திருநாமம் பெற்று வளர்ந்தார். மணப்பருவம் அடைந்த அவருக்கு புத்தூர் சடங்கவி சிவாசாரியாருடைய மகளை மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தனர். மனப்பந்தலில் சிவபெருமான் தாம் முன்பு கயிலையில் அளித்த வாக்கின்படி கிழவேதியராக வந்து ஒலைச்சுவட்டை காட்டி ஆரூரரைத் தமக்கு அடிமை என்று திருவெண்ணெய் நல்லுரில் கட்டளை இட்டு அருளினார்.
அப்பொழுது வன் தொண்டர் முன்பு இறைவனைப் “பித்தன்” பேசிய சொல்லையே முதலாகக் கொண்டு பாடும்படி அருள் ஆணையின் வண்ணம் பாடி அருளியது இந்த திருப்பதிகம்.
பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
PITAA PIRAI SOODI PERU MAANEA ARULAALAA
Lard Siva you have unlimited bliss and which is being given to everybody without any reservation so you are called lunatic person and you have adorned moon on your hair. You have glorified others without any reservation and in that way you may also bless me
பேரருள் உடைய பித்தனே, பிறையை கண்ணியாகச் சூடியவனே பெருமை
உடையவனே, அனைவருக்கும் பேதம் பார்க்காமல் அருள்பவனே
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
EATHTHAAL MARAVATHEA NINAIK KINDREN MANATH THUNAI
What is the reason for it, you have not forgotten me, you have always be in my mind So that in reciprocal form I am always think over you in my mind
எதனால் எனது நெஞ்சத்துள் உன்னை அகளாது வைத்திருக்கின்றாய்
அதனால் எவ்வாறாயினும் உன்னை மறவாமலே மனத்தில்
நினைந்து
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
VAITH THAAI PENNAITH THENPAAL VENNEI NALOOR ARUL THURAIYUL
You are residing in Pennai River southern side situated thiru vennai nalloor temple place and in the nalloor place of Arul thurai abode
தென் பெண்ணை ஆற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்
நல்லூரில் அமைந்துள்ள அருள்துறை என்னும் திருக்கோயிலின் கண்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே
ATHTHAA UNAKKU AALAAI EINI ALLEAN ENAL AAMEA
In this place you have descended and every birth I am your slave disciple which is forgotten by me I have waged legal war against you and said that I am not your disciple, is this wards are acceptable one, please tell me
எழுந்து அருளி இருக்கும் தலைவனே, முன்பே உன்க்கு அடியவனாகி இப்பொழுது உனக்கு அடியவன் அல்லேன் என எதிர் வழக்கும் பேசியது பொருந்துமோ
நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
NAAYEN PALA NAALUM NINAIP PINDRI MANATH THUNNAI
I am dog like person and because of lust I have wandered everywhere in my younger days so I do not think over you and forgotten you. I did not turned my mind towards you because world pleasure enjoyment
நாய் போலும் கீழ்மை உடையோனாகிய யான் உன்னை எனது இளைய நாட்களில் பலவற்றிலும் மனத்தால் நினைத்தல். இன்றி மனத்தை உன்பால் செலுத்தாமல் உலகியல் பால் வேட்கை கொண்டு
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற இயலாத அருள் பெற்றேன்
PEYAAITH THIRINTHEITH THEEAN PERA IYALAATHA ARUL PETREAN
Just like ghost I have wandered day and night everywhere. Now I have got old age and anyhow I have got your rare Blessings now I have got it
பேய் போல் அலைந்து இளைத்தேன் ஆயினும் இப்பொழுது பெறுதற்கு அரிய உனது திரு அருளை நான் பெற்றேன்.
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
VEYAAR PENNATH THENPAAL VENNAI NALLOR ARUL THURAIYUL
The bamboo poles are floated on the river Pennai southern side where Thiruvenai Nalloor place situated temple named arul thurai where you have descended
மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பகுதியில் உள்ள திருவெண்ணெய். நல்லூரின் கண்ணதாகிய அருள் துறைத் திருக்கோயிலின் கண் எழுந்தருளி இருக்கும்
ஆயாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே
AAYA UNAKKU AALAAI EINI ALLEN ENAL AAMEA
You are the leader of this cow herd of souls so that you have wanted to give me your blessings and in every birth I am your slave disciple Now in this birth I have forgotten and waged legal battle against you is it appropriate one please tell me
தலைவனே இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு முன்பே நான் அடியவனாகி இப்பொழுது அடியவன் அல்லென் என எதிர் வழக்கும் பேசியது பொருந்துமோ,
மன்னேமற வாதே நினைக்கின்றேன் மனத் துன்னைப்
MANNEA MARAVAA THE NINAIK KINDREN MANATH THUNAAIP
You are permanent god and I will not forget it in my mind. Now I have think over you and done error in this life so please forgive it and then bless me
நிலைபெற்றவனே உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமல் நினைப்பேன் முன்பு செய்த பிழையை மனத்தில் பொறுக்குமாறு வேண்டி அருளிச் செய்து
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
PONNEA MANI THANEA VAYI RAM MEA PORU THUNTHI
You are gold diamond and ruby rays form Where all the things are pushed on the river bank
பொன்னும் மணியும் வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளி கொண்டு
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
MINAAR PENNAITH THENPAAL VENNEI NALLOOR ARUL THURAIYUL
That glittering stones are carried by the river Pennai where situated Thiruvennai Nalloor, there Siva temple situated named Arul thurai where god is residing
ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பகுதியில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருள் துறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளி உள்ள
அன்னேஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே
ANNAEA UNAK KAALAAI EINI ALLEAN EANAL AAMEA
You are mother like to me and in the previous birth I have slave to you and in this birth I have I have denunciated that I am not your disciple and then put a dispute against you is it acceptable one please tell me and then retrieve me
தாய் போன்றவனே உனக்கு நான் முன்பே அடியவனாகி இப்பொழுது
அடியவன் அல்லேன் என்று எதிர் வழக்கு பேசியது பொருந்துமோ
முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
MUDIYEN INIP PIRAVEN PERIN MOOVEAN PETRAM OORTHEE
I am going on repeated birth and death in this world so as to toil and moil in this world And then got old age in this world and then subsequently affected by deceases and I am unable to bear this pain and you are proceeding on the back of bull
நான் இறக்கவும் பின் பிறக்கவும் இந்த உலகத்தில் வாழப்பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன் இடபத்தில் ஊர்பவனே
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
KODIYEN PALA POI YEA URAIP PENAIK KURIK KOL NEE
In the pure place of thiru Kailaayam I have sent my eyes and mind in the wandering mood but I did not inform the same to lard Siva and any how he has realized it and I am gone away from the good path of living I am a liar please do not get enmity against me and please accept me and then bless me
திருக்கயிலாயத்தில் மாதர் பால் மனம் போக்கினேன். மாதர்பால் மனம் போக்கினமை விண்ணப்பிக்காது முன்போல் வழிபாட்டில் நின்றேன். நன்னெறியை விட்டு பொய் பேசு பவனாகிய என்னை நீ வெறுத்து ஒதுக்காமல் ஏற்று அருள்வாயாக
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
SEDIYAAR PENNAITH THENPAAL VENNEI NALLOOR ARUL THURAIYUL
The rays are spread over without any sin that Pennai river southern side In that Thiru vennai naloor place where temple Arul thurai is existing
ஒளி நிறைந்த குற்றமற்ற தென்பெண்ணெயாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருட்துறைத் கோயிலின் இடத்தில் எழுந்தருளி இருக்கும்
அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே
ADIKEL UNAK KAALAAI INI ALLEN ENAL AAMEA
You are my leader, and in the previous births I have surrounded as slave but now I renounce it and then waged legal war against you is it appropriate one
தலைவனே நான் முன்பே அடியவனாகி இப்பொழுது அடியவன் அல்லேன் என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்து அருளினாய்.
பாதம்பணி வார்கள்பெறு பண்டம்மது பணியா
PAADHAM PANI VAARKAL PERUM PANDAM ATHU PANIYAAI
By submitting under your feet and get blessing accordingly But I did not submit under your feet and did an unacceptable act so that I have turned as idiot person
உம்முடைய திருவடிகளில் பணிந்து பெறும் பேற்றை நான் பணியாமல் அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேன் ஆயினேன்.
யாதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா
ATHAN PORUL AANEN ARI VILEEAN ARULAALAA
So I am in the meaning of the ward idiot form appeared to all but any how You did not curse me and I am placed in the place rare saints that type of blessing I have got
அதனால் ஆதன் என்னும் சொல்லுக்குப் பொருள் ஆயினேன் ஆயினும்
என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அடியவர் பெறும் பேற்றைப் பெற்றேன்
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
THAATHAAR PENNAITH THENPAAL VENNEI NALLOOR ARUL THURAIYUL
Within the flower appeared pollen which is washed by the Pennai River on its southern side situated place is thiru vennai Nallor where Siva temple is situated and in to that place lard Siva you are dwelling
பூக்களில் மகரந்தம் நிறைந்த தென்பெண்ணெய்யாற்றின் தென்பகுதியில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருள்துறை கோயிலில்கண் எழுந்தருளி உள்ள
ஆதீஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே
AATHEE UNAK KAALAAI INI ALLEN ENAL AAMEA
You are prime good old lard and hitherto I am your slave disciple Now I have talked before you that I am not you disciple is it acceptable one
முதல்வனே நான் உனக்கு முன்பே அடியவன் ஆகி இப்பொழுது அடியவன்
அல்லென் என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ
தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
THANNAAR MATHI SOODI THALAL POLUM THIRU MEENI
You have adorned cool moon and hot fire carried on your hand. You have fire like hot body you have possessed
குளிர்ச்சி நிறைந்த சந்திரனைச் சூடியவனே நெருப்பு போலும் திருமேனியை உடையவனே
எண்ணார்புர மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
ENNAAR PURAM MOONDRUM ERI UNNA NAGAI SEITHAAI
Those assuraas who are disregarded you and their three castles are destroyed by fire in that way you have laughed at them
உன்னை மதியாதவர்கள் அரண்கள் மூன்ரையும் நெருப்பு உண்ணும் படி சிரித்தவனே
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
MANNNAAR PENNAITH THENPAAL VENNEI NALLOOR ARUL THURAIYUL
Those who have taken bath in the pennai river and their sins are washed away that southern side situated place is thiruvennai and in that naloor place temple you have descended
மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் இருக்கும் அருள்துறை கோயிலில் எழுந்தருளி இருக்கும்
அண்ணாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே
ANNAVUNAK KAALAAI INI ALLEN ENAL AAMEA
My dear leader in the previous births I am your slave but here after shall I repudiate your statement is it acceptable one
தலைவனே நான் உனக்கு முன்பே அடியவன் ஆகி இப்பொழுது
அடியவன் அல்லேன் என எதிர் வழக்கு பேசியது பொருந்துமோ
ஊனாய்உயி ரானாய்உடல் லானாய்உல கானாய்
OONAI UYIR AANAAI UDAL AANAAI ULAKAANAAI
You have concealed in this flesh filled body and then informed material things in this world and you are in this world form and all are combined in this world the living being form
தீ இந்த சதை உடல் இடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும் அலைகள் நிற்கின்ற இந்த உடல்கள் ஆகியும் இந்த உலகங்கள் ஆனாய்
வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய்
VAANAAI NILAN AANAAI KADAL AANAAI MALAI AANAI
You are also in the space form land form and sea form and also in mountain form
வானாகியும், நிலமாகியும் கடலாகியும் மலையாகியும் நிற்கின்றாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
THENAAR PENNAITH THENPAAL VENNEI NALLOOR ARUL THURAIYUL
And in the flower honey form and in the pennai river southern side situated Thiru vennai you have permanently settled down in this thiru Arul thurai temple
பூக்களில் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருள்துறைத் திருக்கோயிலில் நிங்காது
ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே
AANAAI UNAKKU AALAAI INI ALLEN ENAL AAMEA
This mad person already as your slave and surrounded under your feet Now shall I repudiate the statement is it acceptable one
எழுந்தருளி இருப்பவனே இப்பெற்றியேன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி இப்பொழுது அடியவன் அல்லேன் என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ
8.ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய்
ETRAAR PURAM MOONDRUM ERI UNNA CHILAI THOTTAAI
You have destroyed opponent three castles by fire. You have touched arrow at once it caught fire and then destroyed
நீ உனக்குப் பகையார் எதிர்த்தவர்களது அரண்கள் முன்றையும் தீ உண்ணும்படி போர் செய்து அம்பு எய்தி அழித்தாய்
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர்
THOTRAA THANA SOLLITH TIRI VENO SEKKAR VAANEER
Because of ignorance I do not understand your glory and whatever form of arrogant wards are comes in
to my mind I spoke it and in your red color hair you have carried space Ganges
உம்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீனே உழல்வேனோ இலந்த சடையில் ஆகாய கங்கையைத்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
EAATRAAR PENNAITH THENPAAL VENNEI NALLOOR ARUL THURAIYUL
And in the Pennai River southern side city is thiru vennai and nallor place nearby Arul thurai temple you have descended. You are following good code of life
தாங்கினாய். பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் என்ற இடத்தில் உள்ள அருள்துறை கோயிலில் எழுந்தருளி இருக்கும் நன்னெறி ஆனவனே
ஆற்றாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே
AATRAAI UNAK KAALAAI INI ALLEN ENAL AAMEA
You are River water form helping others and up to last birth I am your slave and contrary in this birth I am not your slave in that way shall I repudiate it
ஆறுபோல் உதவுபவனே முன்பு உனக்கு அடியவன் ஆனேன் அதற்கு மாறாக இப்பொழுது அடியவன் அல்லேன் என் எதிர் வழக்கு பேசியது பொருந்துமோ
மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீ மங்கை பங்கா
MAZHUAAL VALAN ENTHIEE MARAI OOTHEE MANGAI PAANGA
You have carried malu battle force on your right hand and veethass are chanting and then given left part of your body to ladess Yumadevi
மழுப்படையை வலப்பக்கதில் ஏந்தியவனே வேதங்கள்ஓதுபவனே உமையை ஒருபாகமாக உடையவனே
தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே
THOZHU VAAR AVAR THUYAR AAYINA THEER THTHALL UNA THOLILEEA
Those who are prayed under your feet it is your duty to remove their miseries. It is your work to remove it
உன்னை வணங்குவரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால்
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
SELUVAAR PENNAITH THENPAAL VENNEI NALLOOR ARUL THURAIYUL
With rich vegetative growing and water flowing Pennai river’s southern side In the thiruvennai nallor Arul thurai temple place
செழுமை வாய்ந்து இடையராது ஒழுகுகின்ற பெண்ணெய் ஆற்றின் தென்பால் நல்லூரில் அருள்துறைக் கோயில்
அழகாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே
ALAGAA UNAIK AALAAI INI ALLEN ENAL AAMEA
You have descended in hand some form and you have forcefully taken me under your control and to refuse it that now I am not your slave is it acceptable one
எழுந்தருளி இருக்கும் அழகா, என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய் அதனை அறியாது உனக்கு முன்பே அடியவன் ஆகினேன். அதை மறுத்து இப்பொழுது அடியவன் அல்லன் என எதிர் வழக்கு பேசியது பொருந்துமோ
காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால்
KAROOR PUNAL EITHI KARAI KALLITH THIRAIK KAIYAAL
மேகத்தின்னின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி நிலம் முழுவதும்
பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச்
PAAROOR PUGAL EITHIK THIKAL PANMAA MANI UNTHICH
From the dark clouds the water is emanating and we collect it. The best ruby is pushed in to the shore
பரவிய புகழைப் பெற்று ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகலைத் தள்ளிக் கொண்டு
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
SEERUR PENNAITH THENPAAL VENNEI NALLOOR ARUL THURAIYUL
The lovely excessive water is giving Pennai River and its southern side situated thirvennai nallor Where Arul thurai temple you are dwelling
அழகு மிகுகின்ற பெண்ணெயாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்
நல்லூர் உள்ள அருள்துறை கோயிலில் எழுந்தருளி இருக்கும்
ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்என லாமே
AARURAN EM PERU MAARKAAL ALLEN ENAL AAMEA
I am disciple to lard Siva and my name is Arroren Shall it be appropriate to defy him that I am not his disciple?
எம் பெருமானுக்கு ஆரூரன் அடியவன் அல்லேன் என எதிர்த்துப் பேசியது பொருந்துமோ
Om chitrambalam
March 21, 2019