OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUPARAM KUNDRAM

ganesheit March 21, 2019

2. திருப்பரங்குன்றம்

THIRUPARAM KUNDRAM

சுந்தர மூர்த்திச் சுவாமிகள் முப்பெரும் வேந்தர்களோடும் மதுரை மாநகரில் திரு ஆளவாய் உடையாரை வணங்கி, திருவாப்பனூர் திருவேடகம் முதலான பதிகளைப் பணிந்து மீண்டும் மதுரை நகரில் மகிழ்ந்திருக்கும் நாளில் திருப்பரங்குன்றில் பரமரைப் பணிந்து அவர்கள் முன்னே பதினோரு பாடல்களாக பாடி அருளியது இப்பதிகம் இறைவனைப் பழிப்பது போல் புகழுதல் வகையில் பாடப்பட்டது.

Sundarer prayed with three kings (seara chola Pandya) in Thiru aalavaai temple. After wards he went to thiru aappanoor thiruveadagam and then so many other places are prayed and submitted under Lard Siva’s feet and then afterwards returned to Madurai and stayed there happily. At that time he prayed thiruparam kundram lard Siva and sang the following eleven songs. In this decade he outwardly criticized lard Siva and inwardly praised him

  1. கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண்டீர்

KOOTHITTAIYUM KOVALUM KOYIL KONDEER

 You have taken abode in big mountains and heated desert land

பெரிய மலையையும் சுரத்தையும் பாலை நிலத்தையும் கோயிலாகக் கொண்டீர்.

உமைக்கொண்டுழல் கின்றதோர் கொல்லைச்சில்லைச்

UMAIKKONDU ULAL KINDRATHOR KOLLAICH SILLAI

 You are travelling on the back of young mountain bull


உம்மைச் சுமந்து கொண்டு திரிகின்ற முல்லை நிலத்து இளைய ஓர்

 எருது

சேத்திட்டுக்குத் தித்தெரு வேதிரியுஞ்

SEATHITUKKU THITHERU VEETHI YUM

The sand mud is pierced by the horn of the bull and wandered everywhere in the street in care free form

மண் மேடுகளைத் தன் கொம்பால் குத்தித் தெருவில் துள்ளித் திரியும்


சிலபூதமும் நீரும் திசைதிசையன

SILA POOTHAMUM NEERUM THISAI THISAI YENA

A small number of demon forces and its raised sounds and other fear emanating activities

சில பூதங்களும் ஆற்றின் உரப்பில்(சப்தம்) முதலிய செயல்களும்


சோத்திட்டுவிண் ணோர்பல ருந்தொழநும்

SOTHTHITU VINNOOR PALARUM THOL NUM ARAIK

 So many deevass are prayed under your feet and then salute you

தேவர் பலரும் சோத்தம் எனச் சொல்லி வணங்குமாறு


மரைக்கோவணத் தோடொரு தோல்புடைசூழ்ந்

ARAI KOVANATH THOO DORU THOOL PUDAI SOOLNTHU

You have adorned low in cloths and in the waist wears a skin cloth and on it

நீங்கள் அரையில் கோவணத்தோடு ஒரு தோலைச் சுற்றி அதன் மேல்


 தார்த்திட்டதும் பாம்புகைக் கொண்டதும்பாம்

AAR THITHITATHUM PAAMBUGAIK KONDATHUM PAAMBU

A snake is tied as belt on the waist and also hold snake on hands

கச்சகா கட்டியுள்ள நும் பாம்பு கையில் பிடித்திருப்பதும் பாம்பு


படிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே

ADIKEL UMAKKU AATSEYA ANJUTHUMEA

 On seeing it to get afraid of it to serve your feet

ஆதலால் அடியோர்கள் உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்.

2.முண்டந்தரித் தீர்முது காடுறைவீர்

MUNDAM THARI THTHEER MUTHU KAADURAI VEER

You have adorned head garland and three line white ashes and then living in dead body burial and burning ground

தலை மாலை சூட நீர் சுடுகாட்டில் வாழ்கின்றீர்கள்


முழுநீறுமெய் பூசுதீர் மூக்கப்பாம்பைக்

MUZHU NEERU MEI POOSUTHEER MOOKKAP PAAMBAIK

From it emanated burnt down ashes are adorned all over the body and then wild snakes

அதன்கண் உள்ள சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்வீர் கொடிய பாம்பை


கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர்

KANDATHTHULUM THOLILUM KATI VAITHTHEER

Are tied on your neck and solders

கழத்திலும் தோளிலும் கட்டிவைத்துள்ளீர்


கடலைக்கடைந் திட்டதோர் நஞ்சையுண்டீர்

KADALAIK KADAN THITTATHOR NANJAI UNDEER

Devas grinded the big sea and then poison emanated from the sea and you have collected it and then consumed it easily

தேவர்கள் கடலைக் கடைந்து கொணர்ந்து ஊட்டிய பெருவிஷத்தை எளிதாக் உண்டீர்.


பிண்டஞ்சுமந் தும்மொடுங் கூடமாட்டோம்

PINDAUM SUMANTHUM MODUM KOODA MAATTOM

So we are unable to bear this flesh body and go with you and then get communion with you that capacity we do not have it

அதனால் ஊனினது திரட்சியாகிய இந்த உடம்பைச் சுமந்து கொண்டு உம்மோடு தொடர்பு கொள்ள வலிமையுடையோம் அல்லோம்


பெரியாரொடு நட்பினி தென்றிருத்தும்

PERIYAA RODU NAT PINI THENRI RUNTHTHUM

 We are disciples and got intimate relationship with elderly disciples which will give us happiness even though

அடியார்கள் ஆகிய நாங்கள் பெரியாரோடு நட்பு இன்பம் தருவது என்று கருதி இருப்போம் ஆயினும்

அண்டங்கடந் தப்புறத்தும் மிருந்தீர்

ANDAM KADANTHTH APPURATHTHUM IRUNTHEER

But you have crossed so many universe and go beyond it and then stayed there
இந்த அண்டத்தைக் கடந்து அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர்.

அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே

ADIKEL UMAKKU AATSEYA ANJUTHUMEA

 So we are got afraid of to serve under your feet 

ஆதாலின் உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்

3.மூடாய முயலகன் மூக்கப்பாம்பு

MOODAAYA MUYA LAGAN MOOKAP PAAMBU

 With ignorance filled MUYALAGAN assura and wild snake

உம்மிடத்தில் அறியாமை உள்ள முயலகன் கொடிய பாம்பு


முடைநாறிய வெண்டலை மொய்த்தபல்பேய்

MUDAINAARIYA VENDALAI MOITHTHA PAL PEI

 The stinking filled white skull and thick form of ghosts

முடைநாற்றம் வீசும் வெண் தலை நெருங்கிய பல பேய்கள்


பாடாலரு பூதங்கள் பாய்புலித்தோல்

PAADAA LARU POOTHANGKAL PAAI PULITH THOL

 The singing demons and leaf forward that tiger skin

பாட்டும் பாடுகின்ற பூதங்கள் பாய்கின்ற புலியினுடைய தோல்


பரிசொன்றறி யாதன பாரிடங்கள்

PARISU ONDRU ARIYAATHA PAARIDANGKAL

 The good and bad are not known in this world

நன்மை தீமை அறியாத பாரிடங்கள்


தோடார்மலர்க் கொன்றையும் துன்னெருக்குந்

THODAAR MALARK KONDRAIYUM THUNERUKKUM

All that flowers are garlanded to you and petals are filled konrai flowers and earukku flowers

என்றும் இவையே உமக்கு மாலை இதழ் நிறைந்த கொன்றையும் எருக்கம் பூவும்


துணைமாமணி நாகம் அரைக்கசைத்தொன்

THUNAI MAA MANI NAAGAM ARAIK KASAITH THONDRU

 And in admission the big snake and in its mouth ruby diamond possessed one is tied on the waist
இவற்றோடு அறையில் பெரிய மணியை உடைய பாம்பைக் கட்டிக் கொண்டு

றாடாதன வேசெய்தீர் எம்பெருமான்

AADAATHANA VEA SEITHEER EM PERUMAAN

You have done the above acts which is not acceptable one to us. You are my lard

எங்களுக்கும் பொருந்தாத செயல்களையே மேற்கொண்டீர் எம் பெருமானே


அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே

ADIKEL UMAKKU AATSEYA ANJUTHU MEA

So we are got fear to serve under your feet

அதனால் அடியோர்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்


4.மஞ்சுண்டமா லைமதி சூடுசென்னி 

MANJUNDA MAA MLAI MATHI SOODU SENNI

In the evening time clouds are covered space place appearing moon is adorned on the hair of lard Siva

மேகம் சூழ்ந்த மாலை பொழுதில் தோன்றும் பிறையைச் சூடி முடியினை உடைய 


மலையான்மடந் தைமண வாளநம்பி

MALAIYAAN MADANTHAI MANA VAALA NAMBI

Lardess parvathi who is daughter of rock king and you are bride groom to her

மலை மகளாகிய  நங்கைக்கு மணவாள நம்பியாகிய நீர்


பஞ்சுண்டவல் குற்பணை மென்முலையா

PAN JUNDA ALKUL PANAI MEN MULAIYAA

And cloth covered body and then possessed big breasts which is always the reserve wire of milk to world people

துகில் சூழ்ந்த புறத்தினையும் பெருத்த ஊற்றினை பொருந்திய தனங்களையும்


ளொடுநீருமொன் றாயிருத் தல்லொழியீர்

LODU NEERUM ONDRAAI IRUTHTHAL OLIYEER

With that Yuma Devi you are always living together without any separation

உடைய அவளும் நீரும் ஒன்றாய் இருத்தலை ஒரு ஞான்றாயினும் ஒழிகின்றீர் இல்லை

நஞ்சுண்டுதே வர்க்கமு தங்கொடுத்த

NANJUNDU DEVARKKU AMUTHAM KODUTHTHA

You have consumed poison and gave nectar to deevass
நீங்கள் நஞ்சினை உண்டு தேவர்களுக்கு அமுதம் ஈந்த 

நலமொன்றறி யோம்உங்கை நாகமதற்

NALAM OND RARIYOM UNGAI NAAGAM ATHARKU

That good act is not known by us and then you have carried snakes on your hand

நற்செயலை நாங்கள் சிறிதும் அறியோம். உமது கையில் உள்ள பாம்பிற்கு


கஞ்சுண்டுப டம்மது போகவிடீர்

ANJUNDU PADAM ATHU POKA VEDEER

The five headed dancing snake and you did not allow to go away

படங்கள் ஐந்து உள்ளன அப்பாம்பை ஒரு நாளும் தூரப் போக விடுகின்றீர் இல்லை


அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே

ADIKEL UMAKKU AATSEYA ANJU THUMEA

We are disciples to you but we are not in a possession to do menial service under your feet because of above things

அடியோர்கள் உம்மை அணுகி உமக்கும் பணி செய்ய அஞ்சுவோம்

5. பொல்லாப்புறங் காட்டகத் தாட்டொழியீர்

POLLAAP PURANG KAATU AGATHTHU AATTOLIYEER

You are dancing in the burial ground which has all the defects but you won’t leave that place

நீங்கள் பொல்லாங்குடைய மயிலத்தில் ஆடுதலைத் தவிரீர்


புலால்வாயன பேயொடு பூச்சொழியீர்

PULAALA VAAYANA PEYODU POOCH SOLIYEER

Where flesh filled mouths possessed ghosts with it you are wandering everywhere with emotional sound raising form

அங்கு புலால் வாயோடு திரிவனவாகிய பேய்களோடு ஆரவரித்தலை ஒழியீர்


எல்லாம்அறி வீர்இது வேயறியீர்

ELLAM ARIVEER ITHUVEA ARIYEER

You know all the things in this world but did not understand the above act

எல்லாவற்றையும் அறிகின்ற நீர் இது மட்டில் அறிகின்றிலீரே


என்றிரங்குவேன் எல்லியும் நண்பகலும்

ENDRINANGUVEN ELLIYUM NAN PAKALUM

I am your disciple so I got sorrow day and night

என்று உம் அடியவர்களாகிய யான் இரவும் பகலும்

 
கல்லால்நிழற் கீழொரு நாட்கண்டதுங்

KALLAAL NILARKEEL ORU NAATKANDATHUM

Once I have seen under the papal tree as teacher form

முன் ஒரு நாள் கல்லல நிழலில் ஆசிரியர் கோலமகன் கண்டதும்


கடம்பூர்க்கரக் கோயிலின் முன்கண்டதும்

KADAMBOORK KARAK KOYILIN MUN KANDATHUM

In yet another day I have seen you in the kadamboor temple place in Sivalingam deity form

மற்றொரு நாள் கடம்பூர்க் கரக்கோயிலில்  லிங்க மூர்த்தியாகக் கண்டதும்


அல்லால்விர கொன்றிலம் எம்பெருமான்

ALLAAL VIRAGU ONDRILAM EM PERUMAAN

Except under the two occasions you are dancing always in the funeral ground and no other good place I did not see you

தவிர பிரிதொரு காலத்தும் மயானத்தின் இழிவை நீர் அறிந்து நீங்கியது யாம் சிறிதும் கண்டது இல்லை 

அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே

ADIKEL UMAKKU AATSEYA ANJUTHU MEA

We are your disciple, we got fear to serve under your feet
அதனால் அடியோர்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்.

6. தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்

THENNATH THENNA THTHEA THNAA ENDRU PAADI

The musical sound of thenna thenna theththenna form we are singing

தென்னாத தெனாத் தெத்தெனா என்று பாடுகின்ற


சில்பூதமும் நீருந் திசைதிசையன

SIL POOTHAMUM NEERUM THISAI THISAIYENA

Some demon forces and its activates are all the sides covered you

சில பூதங்கள் அவற்றின் செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன.


பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்

PANAAL MARI PAADU THIREER PASOOR YULIEER

Any how you are always singing the four types of veethaas and dwelling in thiru paasoor place

ஆயினும் நீர் பலவாகிய நான்கு வகைப்பட்ட வேதங்களைப் பாடுவீர் திருப்பாசூரில் இருக்கின்றீர்.


படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்

PADAM PAKKAM KOTTUM THIRU VOOTRIYOOR REER

Afterwards you are residing in the temple place of thiruvottriyoor where the musical instrument named padam pakkam is beaten to raised sound

எனினும் படம் பக்கம் என்றும் பறையைக் கொட்டும் தாலமாகிய திருவொற்றி ஊறில் இருப்பவராய் தோன்றுகின்றீர்

.
பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்

PANNAAR MOLI YAALAI YOR PANGUDAIYEER

Musical instrument like voice possessed lardes Yumadeevi has been taken permanently in your left part of your body and living family life

பண்போலும் மொழியினை உடைய உமையை ஒரு பாகத்தில் நீங்காது கொண்டு குடி வாழ்க்கையீராய்க் காணப்படுகின்றன.


படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்

PADU KAAT AKATH THETRUM ORR PATROLIYEER

Any how you are not given up burial ground dwelling

ஆயினும் புறங்காட்டிடத்தில் பற்று நீங்க மாட்டீர்

அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்

ANNA MALAIYEN ENREER AARUR ULEER

You say that your dwelling place is thiru annamalai but you are appeared in thiruvaaroor place

அண்ணாமலையிடத்தேன் என்றீர் ஆயினும் ஆரூரில் இருக்கின்றீர் ஆதலால் உம்மை ஒரு தலையாகத்  துணிதல் கடமையால்


அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே

ADIKEL UMAKKU AATSEYA ANJU THU MEA

We are your disciple but got fear to serve under your feet

அடியோர்கள் உமக்கு ஆட்பட்டுப் பணி செய்ய அஞ்சுவோம்.

7. சிங்கத்துரி மூடுதிர் தேவர்கணம் 

SINATH THURI MOODU THEER THEEA VAR KANAM

 You are just like adorn with tiger skin and deevaa cluster

நீங்கள்  வேட்டுவர் போல சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொள்வீர்


தொழநிற்றீர்பெற் றமுகந் தேறிடுதிர்

THOLA NIT REER PETRAM UKANTHU ERIDUTHIR

Are praying under your feet you have not taken horse or elephant as yours travelling mode and you have only possessed bull as yours travelling vehicle

வணங்க நிற்பீர் யானை முதலியன இன்றி எருதை விரும்பி ஊர்வீர்


பங்கம்பல பேசிடப் பாடுந்தொண்டர்

PANGAM PALA PESIDAP PAADUM THONDAR

 So many people are talking ill about you but those disciples who sings songs

உம்மைப் பலரும் பல குறை சொல்லுமாறு பாடவல்ல தொண்டர்கள்


தமைப்பற்றிக்கொண் டாண்டு விடவுங்கில்லீர்

THAMAIP PATRIK KONDU AADNDUM VIDAVUM KILEER

You have forcefully taken as your disciples and did not leave them to go away from your fold

வலிய ஈர்த்து அடிமை கொண்டு அவர்களை விடவும் மாட்டீர்


கங்கைச்சடை யீர்உம் கருத்தறியோம்

KANGAI SADAIYEER UM KARUTHU ARIYOM

Lard Siva you have taken Ganges on your head we do not know the concept of your thinking

கங்கையை உடைய சடையை உடையவரே உங்கள் கருத்தை நாங்கள் அறியவில்லை


கண்ணுமூன்றுடை யீர்கண்ணே யாய்இருந்தால்

KANNUM MOOMDRUDAIYEER KANNEA YAAY IRUNTHAAL

You have possessed three eyes but anyhow we did not go away from you

கண்கள் மூன்று உடையீர், ஆயினும் நாங்கள் உம் எதிர் நின்று அகலா திருக்கின்றோம்.


அங்கத்துறு நோய்களைந் தாளகில்லீர்

ANGKATH THURU NOI KALAIN THAALA KILEER

You will not cure our deceases and afterwards allow us to do menial service under your feet

நீங்கள் எங்கள் உடம்பில் பொருந்தியுள்ள நோயைத் தீர்த்துப் பணி கொள்ள மாட்டீர்.


அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே

ADIKEL UMAKKU AATSEYA ANJUTHU MEA

Your disciple we are got afraid of to do menial service under your feet

ஆதலின் அடியோர்கள் உமக்கு ஆட்பட்டுப் பணி செய்ய அஞ்சுவோம்.


8. பிணிவண்ணத்த வல்வினை தீர்த்தருளீர்

PINI VANNATH THA VAL VINAITH THEERTHTH ARULEER

You have not removed our binding misdeed

நீங்கள் பிணிக்கும் இயல்பினை உடைய எங்கள் வலிய வினையை அருள் செய்யவில்லை


பெருங்காட்டகத் திற்பெரும் பேயும்நீரும்

PPERUNG KAATDAKATH THIL PERUM PEAYUM NEERUM

And then in the big burial ground the ghosts and you are

அன்றியும் பெரிய காட்டிடத்தில் பெரிய பேயும் நீரும்மாய் 


துணிவண்ணத்தின் மேலும்ஓர் தோலுடுத்துச்

THUNI VANNATH THIN MELUM OOR THOL UDUTHTHU

Stood there without any fear and skin dress adorned on your body

துணிந்து நிற்கின்ற தன்மையின் மேலும் தோல் ஒன்றை உடுத்து


சுற்றுநாகத்த ராய்ச்சுண்ண நீறுபூசி

SUTRUM NAAGATHTH ARAAI SUNNA NEERU POOSI

And on it snake is tied as belt and then fragrance filled ashes are adorned on the whole body

அதன்மேல் சுற்றிய பாம்பை உடையவனாய் சாம்பலை நறுமணப் பொடியாக் பூசிக்கொண்டு


மணிவண்ணத்தின் மேலும்ஓர் வண்ணத்தராய்

MANI VANATHTHIN MELUM OOR VANATH THARAAI

Besides ruby diamond color yet another color is adorned

நீல மணி மேலும் நிறத்தி மேலும் மற்றொரு நிறத்தை உடையவனாய்

மற்றும்மற்றும் பலபல வண்ணத்தராய்

MATRUM MATRUM PALA PALA VANNATH THARAAI

In addition so many other colors are possessed form
அதன் மேலும் பற்பல நிறத்தை உடையவனாய்

அணிவண்ணத்த ராய்நிற்றீர் எம்பெருமான்

ANINVANNATH THARAAI NEET REER EM PERUMAAN

In all respective form you are hand some form appeared

எல்லாவற்றாலும் அழகிய வடிவத்தை உடையவராகியே நின்றாய்


அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே

ADIKEL UMAKKU AATSEYA ANJUMEA

We are your disciple but to do service under your feet we afraid of

அடியோர்கள் உமக்கு ஆட்பட்டுப் பணி செய்ய அஞ்சுவோம்


9.கோளாளிய குஞ்சரங் கோளிழைத்தீர்

KOLAALIYA KUNJSARANG KOOL ILAI THTHEER

You have killed the killing instinct filled elephant


மலையின்தலை யல்லது கோயில்கொள்ளீர்

MALAIYIN THALAI ALLATHU KOYIL KOLLEER

You have taken top of the hills as temple abode


வேளாளிய காமனை வெந்தழிய

VEL AALIYA KAA MANAI VENTHALIYA

The lust creating god named coman who has shot flower arrow towards lard Siva but he is burnt down by fore head fire


விழித்தீர்அது வன்றியும் வேய்புரையும்

VILITHTHEER ATHU VANRIYUM VEI PURAIYUM

On the contrary the bamboo pole like soft hand possessed lardess umadevi has been given your left part of your body


தோளாள்உமை நங்கையொர் பங்குடையீர்

THOLLAAL UMAI NAGAI OOR PANGU YAI YEER

That type of shoulder possessed lardess yumaadevi got half part of your body


உடுகூறையுஞ் சோறுந்தந் தாளகில்லீர்

UDU KURAYUM SORUM THAN THAALL KILEER

To your disciples you did not provide sufficient cloth and food


ஆளாளிய வேகிற்றீர் எம்பெருமான்

AALAALIYA VEA KITREER EM PERUMAAN

You have taken them as your slave


அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே

ADIKEL UMAKKU AATSEYA ANJUTHU MEA

So your disciples we are got afraid of to do menial service under your feet


10.பாரோடுவிண் ணும்பக லுமாகிப்

PAAR ROODU VINNUM PAKALUM AAKI

You are in the form of land space and day time form

மண்ணுலகம் விண்ணுலகம் பகல்பொழுது ஆகியும்


பனிமால்வரை யாகிப் பரவையாகி

PANIMAAL VARAI AAKIP PARAVAI AAKI

You are in the form of hill and sea and then move everywhere in the form of wind

மலை ஆகியும் கடல் ஆகியும் எவ்விடத்தும் இயங்குகின்ற காற்றும் ஆகியும்


நீரோடுதீ யுந்நெடுங் காற்றுமாகி

NEERODU THEEYUM NEDUNG KAATRU MAAKI

You are in the form of water fire

தண்ணீர், நெருப்பு ஆகியும்


நெடுவெள்ளிடை யாகி நிலனுமாகித்

NEDU VELLIDAI YAAKI NILANU MAAKI

You are in the universe form and land form

அண்டவெளியாகி நிலமும் ஆகி


தேரோட வரையெடுத் தவரக்கன் சிரம்பத்திறுத்

THEARODA VARAI EDUTHTHA ARAKKAN SIRAM PITHTHU

To move chariot freely Ravana who tried to excavate the Kailai hills whose ten heads and

இனி தனது ஊர்தி தடையின்றி ஒடுதற்கு உமது மலையை பெயர்த்த அரக்கன் தலைகள் பத்தையும்


தீரும செய்கையெல்லாம்

THEERUMA SEIKAI ELLAAM

You have stamped and all your activities

நெரித்தீர் உம்முடைய இச்செயல்கள் எல்லாம்

ஆரோடுங்கூ டாஅடி கேள்இதுஎன்

AARODUNG KOODA ADIKEL ITHU EN

All the above acts not go pro with others
யார் செய்கையோடும் ஒத்துப் போகாது

அடியோம்உமக் காட்செய அஞ்சுதுமே 

ADIKEL UMAKKU AATSEYA ANJUMEA

So we are your disciples we have got fear to do menial service under your feet

அதனால் அடியோர்கள் உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்

11.அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமென்

ADIKEL UMAKKU AATSEYA ANJUTH MEAN

அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சும் என்று சொல்லிப் பாடிய


றமரர்பெரு மானையா ரூரன்அஞ்சி

AMARAR PERUMAANAI AARURAN ANJI

 In that way named arroorer got fear towards lard Siva

தேவர் பெருமானாகிய சிவபெருமானிடத்தில் அச்சம் கொண்டு நம்பி ஆரூரன்


முடியால்உல காண்டமூ வேந்தர்முன்னே

MUDIYAAL ULAKAANDA MOOVENTHAR MUNNEA

With crown adorned form of three kings before them
முடியோடு நின்று உலகத்தை ஆள்கின்ற மூவேந்தர் முன்னிலையில்

மொழிந்தாறுமோர் நான்குமோ ரொன்றினையும்

MOZHINTHAARUM OOR NAANGU M OOR ONRU EINAIYUM

Who has sung the above eleven songs

பாடிய இப்பதின்னோரு பாடல்களையும்


படியாஇவை கற்றுவல் லவடியார்

PADIYAA IVAI KATRUVALLA ADIYAAR

 Those disciples who are chanted with meaning known form

இவையே நமக்கு நெறியாகும்படி ஓதியுரைவல்ல அடியார்கள்


பரங்குன்றமே யபர மன்னடிக்கே

PARANGKUNDRAM MEAYA PARAMAN ADIKEA

Lard Siva who has descended willingly in thiruparam kundram place whose sacred feet shadow under it living people

திருப்பரம்குன்றத்தை விரும்பி எழுந்தருளி உள்ள அப்பரமனது திருவடி நிழலிலெ வாழ்கின்றவனாய்


குடியாகிவா னோர்க்கும்ஓர் கோவுமாகிக்

KUDIYAA KI VAANORK KUM OOR KOYUM AAKIK

They will get birth in the king sect and then ruled the upper world

அரசர் குடியில் தோன்றி வானவர்களுக்கும் அரசன் ஆகி


குலவேந்தராய் விண்முழு தாள்பவரே

KILA VENTHA RAAI VIN MUZHUTHU AAL PAVA REA

 And then unique ruler form and then ruled the whole universe

பின் தேவர்க்கும் ஒப்பற்ற அரசராகி பின் முழுதும் ஆள்பவரே ஆவார்

Om thiruchitrambalam.

March 21, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: