OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

PANDAYA NANMARAI

ganesheit March 1, 2019

48. பண்டாய நான்மறை அனுபவத்து ஐயமின்மை உரைத்தல் 

PANDAYA NANMARAI

(திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா) 

இறைவன் தந்த அருள் அனுபவத்தை உறுதிப்படுத்தி அதற்குக் கைம்மாறு காட்ட முடியாமையை உரைப்பது இப்பகுதி ஏழு வெண்பாக்களைக் கொண்டது பழையதாகிய வேதங்களும் அவன் பக்கத்தில் போக மாட்டாதே

என்னை அடிமை ஏற்ற இறைவர்க்கு நாம் செய்யும் கைம்மாறு ஒன்றும் இல்லை. இறைவன் கைம்மாறு எதிர் பாராதவன் பிறவிக்காட்டின் கரு அற்றுவிடும் என்கிறார்கள்.

          திருவடியை வாழ்த்தினால் நம் வினைகள்  அழியும். திருவடியை அணைந்தோரே வாழ்ந்தனர். பிறவி நோய்கள் அகலப் பெருந்துறைக் கோயிலை எண்ணித் தொழவும், இறைவன் தானே பிறப்பு அகற்றும் தொழிலைச் செய்கின்றான், எல்லாம் சிவமயமாகப் பார்த்தல், இடைவிடாது அவன்

புகழைப் பேசுதல் ஆகிய அணைந்தோர் தன்மை அறிவித்தல்.

          இறைவன் பிறவியை நீக்கக் கொடுத்த மருந்தை உண்ணாமலேயே நினைத்த மாத்திரத்தில் நோய் நீங்கியது. இவ்வாறு பரிபாகிகட்கு முக்தி நெறியினை விளக்கிஅருளுகின்றார்.

          சமாதி நிலையில் பரம்பொருளில் கலக்கின்ற ஜீவன் பரம்பொருள் ஆகின்றான். அதுவே சிதம்பர ரகசியம்.

With explain our experiences without any deficiencies the guru teacher who bestowed his blessings to Manikavasager and it is continuously developing and ultimately leads to internal experiences. He praised it and sang it under coming songs


பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் 

PANDAAYA NAANMARAIYUM PAAL ANUKAA MAAL AYANUM

 The good old veethas won’t go near to him and Thirumal and Bharma unable to see him

மிகப் பழமையான வேதங்களும் இறைவனிடம் அணுகவும் செய்யா திருமாலும் பிரம்மனும் அவனைக் கண்டாரும் இல்லை


கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டனாகக்

KANDAARUM ILLAI KADAIYENAITH THONDANAKA

 I am last grade person but you have taken me as your disciple

எல்லாருக்கும் கடைப்பட்ட என்னைத் தொண்டானாகக் 


கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே 

KONDAARULUM KOKALI EM KOOMARKKU NENJAMEA

 He has taken me and blessed me and descended in Thiruperumthurai temple place who is Lard Siva

ஏற்று அருளிய திருவாவடுதுறைக் கண் எழுந்தருளி உள்ள அத்தகைய எம்


உண்டாமோ கைம்மா றுரை. 628 

UNDAAMOO KAIMAARU YURAI

 Is there any consideration available to give lard if there is anything available please tell me

யான் செய்யும் கைமாறு உண்டோ உரை

உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்

ULLA MALAM MOONDRUM MAAYA YUGU PERUNTHEEN

 This soul has possessed three types of impurities they are anavam kanmam and mayai( ego. Deeds illusiyary mentality)  Which have right to go in to our body but Lard Siva completely eliminated and eradicated from our body and life that form of honey is given to us happily

மலர்களும் மாய்ந்து ஒழியச் செய்கின்ற பெருமை வாய்ந்த தேனாகிய

 
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த வள்ளல்

VELLAM THARUMPARIYIN MEEALVANTHA VALLAL

He came on the back of veetha horse and descended here who is generously giving person (PHILONTHIRUPIST)

வெள்ளத்தைக் கடக்க உதவுகின்ற வேதக் குதிரையின் மேல் எழுந்தருளி வந்த வள்ளல் ஆகிய சிவபெருமான்  


மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக் 

MARUVUM PERUNTHURAIYAI VAALTHU MENGAL VAALTHTHA

He has descended in Thiruperumthurai so we may praise him

சேர்ந்து இருக்கின்ற திருப்பெருந்துறையை வாழ்த்துங்கள்


கருவுங் கெடும்பிறவிக் காடு. 629 

KARUVUM KEDUMPIRAVI KAADU

 Your forest of birth is eliminated at thegermination stage itself
உங்கள் பிறவியாகிய காட்டின் கருவே அழியும் என்ற வாறு


காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன் 

KAATUAGATHU VEEDAN KADHALIL VALAIVAANNAN

 If he descended in forest place he will be in hunter form and if he descended in sea place he will be in fisherman form

காட்டில் வேடனாகவும் கடலில் வலையால் வாழும் பரதவனாகவும்


நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி 

NATTIL PARIPPAKAN NAM VINNAIYAI VEETI

 If he descended in land place he will be in horse form so that he removes our soul miss deeds

நாட்டில் குதிரைச் சேவகனாகவும் எழுந்தருளி ஆன்மாக்களாகிய நம் வினைகளைப் போக்கி


அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்

ARULUM PERUNTHURAIYAAN ANGAMALA PAADHAM

He will bless you by heart and descended in Thiruperumthurai temple place and his feet are in lotus flower form so we praise him 

 அருள்வான் நெஞ்சே திருப்பெருந்துறை இறைவன் அழகிய தாமரை மலர் போன்ற பதங்களை வாழ்த்துவாயாக என்ற வாறு


மருளுங் கெடநெஞ்சேவாழ்த்து. 630 

MARULUM KEDANENJEEA VAALTHTHU

To go away your ignorance so that my heart will bless you

உன்னுடைய அறியாமையும் போக நெஞ்சமே வாழ்த்துவாயாக

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்

VAALNTHARGAL AAVAARUMVAL VINNAIYAI MAAIPPAARUM

 Those who live in this world forever and those who eradicate our heinous crimes and those who did it he will be praised by all

உலகம் என்றும் அழியாது வாழ்ந்தவர்களும் வலிய வினையைமாய்ப்பவர்களுக்கு இந்த உலகம் அனைத்தும் பணிந்து ஏத்ததக்கவர்களும் ஆவார்கள் என்ற வாறு 

 
தாழ்ந்துலகம் எத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்

THAALNTHU YULLAKAM EETHA THAGUVAARUM SOOLNTU AMARER

All are submitted under his feet and deevas are encircled him

தேவர்கள் சூழ்ந்து  


சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை

SENTRU IRAINGHI EEATTHUM THIRUVAAR PERUNTHURAIYAI

 That persons will go to Thiruperunthurai temple and bowed their heads and prayed Lard Siva

வணங்கித் துதிக்கும் ஞானச்செல்வம் நிறைந்த திருப்பெருந்துறையை 

 
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 631 

NAND EARIGHI EEATTHUM NAMAR

 Those who are chanting poems before Lard Siva They are our relatives

நன்றாக வணங்கித் தோத்தரிக்கும் நம்மாவர்களே

நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல

NANNIP PERUNTHURAYAI NAM IDARKAL POI AGALA

 My mind and heart will go to Thiruperunthurai place and settle down there so that he will remove our birth defects

நெஞ்சே திருப்பெருந்துறையில் அமைந்த  நம் பிறவித்துன்பங்கள் போய் அகல

எண்ணி எழுகோகழிக்கரசைப்-பண்ணின் 

ENNI ELUGOKALIKKU ARASAIP PANIN

 Think over it and rise up he is the king of Thiruperum thurai where with music we will salute him

எண்ணி  எழுவாயாக திருவாவடுதுறை அரசும் இசையில் இனிய


மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்

MOZHIYAALODU YUTHTHARA KOOSAMANGAI MANNI

 Lardess Yumadevie’s voice is more harmonious than the musical instruments Where lard Siva descended with lardess Parvathi

மொழியை உடைய உமாதேவியாரோடும் உத்தரகோசமங்கையில் எழுந்தருளி  


கழியா திருந்தவனைக் காண். 632

KALIYAATHU IRUNTHAVANAI KAAN

 WHO do not separate from Thiruperumthurai temple and you may see them there

பிரியாது உறைபவனுமாகிய சிவபெருமானைக் காண்பாயாக என்ற வாறு 

காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப் 

KAANNUM KARANANGAL ELLAAM PERINBAM ENA

 Our external sensual organs are only  short term happiness giving instruments so our mind MUST think over it

நெஞ்சே புலன்கள் அறியும் பொறிகள் அனைத்தும் பேரின்பம் பயப்பனவே என


பேணும் அடியார் பிறப்பகலக் காணும் 

PEENUM ADIYAAR PIRAPPU AGALAK KAANNUM

 Those true devotees who are praising you and you have eliminated their repeated births and showered your blessing sight on them

பாவிக்கும் அடியார்களின் பிறப்பு அகலத் திருஅருள் பார்வை  செலுத்தும்


பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் 

PERIYAANAI NENJEA PERUNTHURAIYIL ENTRUM

 He is a great person who do not separate from Thiruperumthurai place

பெரியவனாகிய திருப் பெருந்துறையில் என்றும் பிரியாது


பிரியானை வாயாரப் பேசு. 633 
PIRIYANAI VAYARAP PESU

 That not separated lard Siva who is prime god you may praise him with mouthful of wards

பிரியாது எழுந்தருளி இருக்கும் பெருமானை வாயாரப்  புகழ்வயாக என்றவாறு

பேசும் மொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த

EEASUM PORULUKKU ILAKITHAMAAM PEEACHIRANTHA

 What we are talk about that is the ultimate aim of our talking and he is all above our talk and surpassed all our expectations

பேசப்படும் பொருட்கள் அனைத்திற்கும் குறிக்கோளாக விளங்கும் பேச்சினையும் கடந்த

 
மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்

MASIL MANIYIN MANI VAARTHAI PEEASI

Lard Siva is pure diamad form so we will talk like diamond like wards and praise him

மாசிலாமணியாகிய பெருமானின் மாணிக்க மணிபோலும்  உபதேச வார்த்தைகளைப் பேசி  


பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல

PERUNTHURAIYEEA ENTRU PIRAPU ARUNTHEEN NALLA

 By saying the abode name only that is Thiruperumthurai lard Siva will terminate the root cause of birth decease and he is that good smariyan

திருப்பெருந்துறை என்று கூறி எனது  பிறவிநோயை வேறு அறுத்தான் நல்ல  


மருந்தினடி என்மனத்தே வைத்து. 634 

MARUNTHIN ADI ENMANAITHEEA VAITHU

He is just like medicine and I place his feet in to my mind and then get integration with HIM
மருந்து போல்பவனகிய சிவபெருமான் திருவடிகளில் என் மனத்தே பொருந்தச் செய்து முக்த்திப் பேறு பெற்றேன்


திருச்சிற்றம்பலம்  THIRUCHITRAMBALAM.


March 1, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: