OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

AANANDHAMALAI

ganesheit March 1, 2019

50. ஆனந்தமாலை சிவானுபவ விருப்பம் 

AANANDHAMALAI

(தில்லையில் அருளியது – சிவானுபவ விருத்தம் – 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 
சிவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டு ஆனந்தத்தை வேண்டும் மாலை ஆனந்த மாலைஆகும்.

நான்கு யுகங்கள்: கிருதாயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம்

[Pt cghjp ePq;fpr; rpt mDgtk; tpUg;gj;ij tpistpf;f Mde;j khiyahf ,jid mUspr; nra;jhh;.

          சிவானந்தம் பெறுதலை நோக்கமாகக் கொண்டு இறைவன் முன் சாத்திய மாலை ஆதலின் இப்பதிகம் ஆனந்தமாலை எனப் பெயர் பெற்றது.

          என் பிழையை நான் உணர்ந்தேன்இனிஉன்னைக் கூடும் வண்ணம் அருள் உரை வழங்க வேண்டும். உன் அடிமைக்கு வேறு யார் துணை ஆவார்கள். தன்னைக் கொடியேன் என்கின்றார். நரகத்தில் விழாமல் காக்க வேண்டுகின்றார். நான் உனக்கு வேண்டாமா என்று கேட்கின்றார். தலைவன் ஆகிய நீ அப்பா வா மயங்காதே அருள் பெற்று உய்க என்று தேற்ற வேண்டும் என்கின்றார். உன்னுடன் கூட வழி சொல்ல வேண்டும் என்கின்றார்.

          அப்படிச் செய்ய வில்லையாயின் அரசனாகிய இறைவனுக்கு வர இருக்கும் இழிவையும் விண்ணப்பித்து இன்றே இப்பொழுதே சிவானுபவம் தந்து உதவுக எனச் சிவத்தை வேண்டுகின்றார்.

To enjoyed lard Siva our desire is revealed here in the form of happiness so this part is called anantha malai in that way our happiness has no beginning and end

To remove this body problemsand then attain experience by songs

 Happiness garland has no begging and end


மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்

MINNEER ANNAIYA PUUNG KLALKAL ADANTHAAR KADANTHAAR VIYAN YULLAGAM

 Those who are pro to lard Siva’s feet which is lightning one and those who prayed under it all are gone in to heaven

மின்னலை ஒத்த பொலிவினை உடைய நின் திருவடிகளைச் சார்ந்த அடியார்கள் அகன்ற இந்த உலகத்தைக் கடந்தனர்  


பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்

PONNEER ANNAIYA MALRKONDU POTRAA NINDRAAR AMARAR ELLAAM

 Deevass are standing before him with golden color flowers on their hands 

தேவர்கள் எல்லாம் பொன்னை ஒத்த மலர்களைக் கொண்டு வழிபட்டனர் நின்று அமரர்கள்  எல்லாம்


கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த 

KALNEER ANNAIYA MANKADAIYAAI KALIPPUNDU AVALAK KADALVEELNTHA

I have possessed rock like mind so that I am eliminated and kept in the last part so I am fallen in to the sea and unable to get away from it and placed in the miserable situation

கல்லை ஒத்த மனத்தை உடைய யான் கடையேன் கழிக்கப் பெற்ற துன்பக் கடல் உள்ளே விழுந்து வருந்துகின்ற எனக்கு


என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாவே. 643

ENNER ANNAIYEEAN INI YUNNAIK KUUDUM VANNAM IYAMBAAYEA 

 I am such a mentality person and here after I will be pro to you and help me to get upliftment in life

 ஒத்த என்னை இனியேனும் உன்னைச் சார்ந்து உய்யும் வண்ணம் அருள் செய்வாயாக என்றது

என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன் 

ENNAAL ARIYAA PATHAMTHANTHAAI YAAN ATHU ARIYAATHEE KETTEEAN

 You have given me a ward to attain higher position( om sivaya nama, om namasivaya , om ponnam balam) and I am unable to know its glory so I am spoilt

என்தலைவா என்னால் அறியப்படாத பதவியைத் தந்தாய் யான் அதன் அருமையைப் பெருமையை அறியாதே கெட்டேன்


உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன்

UNNAALONDRUM KURAI VILLAI YUDAIYAI ADIMAIKU AARENPEEAN

 You did not do any harm to me and you have taken me as slave so that you are the only guide to me  

உன்னால் ஒரு குறையும் இல்லை என்னை உடையவனே அடிமையான எனக்கு யார் துணை


பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா 

PANNAAL UNNAI PANINTHU EEATHUM PALAIYA ADIYAARODUM KUUDATHU

 So many days I have submitted under your feet and prayed bud I do not mingle with good old devotees

பல நாட்கள் உன்னை வணங்கித் துதித்தும் பழைய அடியார்களுடன் சேராமல்

தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே. 644

EN NAYAKAMEEA PIR PATU INGU IRUTHEEAN NOIKKU VIRUNTHAAYEEA 

 My dear lard I have stood back and stagnated and then eaten by the miseries of this world
பின் தங்கித் துன்பத்திற்கு விருந்ததாக இங்கு இருந்தேன்


சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித் 

SEELAM INDRI NOONBUINDRI SERIVEEA INDRI ARIYU INDRI

 I have no character and I do not no fasting I have no fast form of thinking and I have no knowledge

ஒழுக்கம் இல்லாமலும் விரதம் இல்லாமலும் தோய்வு இல்லாமலும் அறிவும் இல்லாமலும்


தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை

THOOLIN PAAVAIK KUTHTHATTHAAI SULANTRU VILUNTHU KIDAPPEENAI 

 In the hand tied string puppet happily dancing form and in that way I have and I have been going in the happy and sorrow wheel and then got fainting just like idiot fellow

தோல் பொம்மை கூத்தாடுவதைப் போலத் துன்ப இன்பங்களில் சுழன்று அவற்றால் மயங்கி அறிவற்றுக் கிடக்கின்ற என்னை


மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்

MAALUM KAATI VALIKKATTI VARAA YULAGA NERIEERAK

You have showed me the reason for fainting and then showed the way to get out of it and then put me in the way to go to heaven

என் மயக்கத்திற்கு ஏற்ற காரணங்களையும் காட்டி மயக்கத்தினில்  இன்று கரை ஏறுவதற்கு உரிய உபாயங்களையும் காட்டி மீண்டும் வார உலகமாகின்ற முக்திக்குப் போகின்ற வழியே நான் முன்னேறிச் செல்ல


கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே. 645

KOLLAM KAATI AANDANAIK KODIYEEAN ENTRO KUDUVATHEEA

 Lard Siva you have showed me your guru teacher form and then taken me under your fold but I am wild person so how will I mingle with you

குருவடிவான கோலத்தையும் காட்டி ஆண்ட என் தலைவனைக் கொடிய பிணிகளை உடைய யான் கூடுவது என்றோ என்ற வாறு   

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய் 

KEDUVEEAN KEDUMAA KEDUKINDREEAN KEEDU ILLAA THAAI PALIKONDAAI

 I have bad mentality so I am being spoilt and you do not have any fault on your part and you have accepted me and then removed my sins

கெடும் தன்மை ஆகிய யான் கெடக்கூடிய நியதியின் வண்ணமே கெடுகின்றேன்.


படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே

PADUVEEAN PADUVATHU ELLAAM NAAN PATTAAL PINNAK PAYAN ENNEEA

 I am in destitute state and put myself in to trouble and if I had put in to the suckles of trouble then what is the reason to surrender under your feet

துன்பப்பட வேண்டிய யான் பட வேண்டிய துன்பங்கள் அனைத்தையும் பட்டால் பிறகு உன்னால் யாம்பெற்ற பயன் என்னே  


கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே 

KODUMAA NARAKATHU ALUNTHAAMEEA KAATHU AATKOLLUM GURUMANIYEEA

 I am not submerged in to the hell and you have retrieved me and have taken me under your fold so you are diamond form

கொடிய பெரிய நரகத்துள் யான் அழுந்தி அழியாமல் என்னைக் கை கொடுத்து ஆட்கொள்ளும் குரு மணியே


நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே. 646

NADUVAAI NILLAATHU OLINTHAKKAAL NANTRO ENGAL NAYAKAMEEA

Happiness or sorrow and good or bad you do not go pro to anything and stands in the balanced form and if you do not stand before me now is it good on your part you are my dear father 

இன்பம் துன்பம் நல்வினை தீவினை ஒன்றையும் சாராது நடுவுநிற்றற்கு உரிய நீ நடுவாய் நிற்கவில்லையாயின் அது உனக்கு நன்றோ எங்கள் நாயகனே

தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் 
THAYAAI MULAIYAITH THARU VAANO THAARATHU OLINTHAAL SAVALAIYAAI

எல்லா உயிர்களுக்கும் தாயின் முலைகளைக் கொடுத்துப் பாலூட்டி வளர்ப்பவளே

 You have been giving all the living beings Brest milk and you do not give that breast milk to me then I will be leaned child

எனக்கு மட்டும் நீ பால் தராது ஒழிந்தால் நாயேன் சவலைக் குழந்தையாய் இருப்பேனே


நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே 

NAYEEAN KALINTHU POVEENOO NAMBI INITHTHAAN NALKUTHIYEEA

 My dear father I do not want to be a lean child atleast here after bless me

நாயேன் சவலைக் குழந்தையாய் இருப்பேனோநம்பி இனியாவது அருளிச்செய்


தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே 

THAYEEA ENTRU YUN THAAL ADAINTHEEAN THAYANEE ENPAAL ILLAIYEEA

 I have submitted under your feet and you are also mother to me so please show me favor to me

தாயே என்று உன் திருவடியை அடைந்தேன் உமக்கு என் பால் கருணை இல்லையே


நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ. 647

NAYEN ADIMAI UDANAAKA AANDAAI NAANTHAAN VENDAAVO

 You have once accepted me as your disciple with other disciples and given that prominent place but today whether I am unwanted person please tell me

பழைய அடியார்கள் பலருடன் நாயேனையும் அடிமையாக ஆண்டவனே இன்று நான் மட்டும் உனக்கு வேண்டுவது இல்லையோ என்றது  

கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே 

GOVEEA ARULA VENDAVOO KODIYEEAN KEDAVEEA AMAIYUMEEA

 My dear king don’t you bless me. I am a sinner if I will go into wrong way is it acceptable to you

அரசே அடியோர்க்கும் அருள் செய்ய வேண்டுவது இல்லையோ கொடியவன் ஆகிய யான் கெட்டு ஒழிய நிற்கும் அது உனது தகுதிக்குப் பொருந்துமோ


ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்

AAVA ENNAVIDIL ENNAI ANJEEAL ENBAAR AAROTHAAN 

 Oh you do not call me loudly by name and then protect me and is there any other person available in this world not too afraid of anything in this world

ஆவா என்று என்னை அழையாவிடில் என்னை அஞ்சாதே என்று எனக்கு  அபயம் தருபவர் வேறுயார்


சாவா ரெல்லாம் என்னளவிவோ தக்க வாறன் றென்னாரோ

SAAVAAR ELLAAM EN ALAVOO THAKKAVAARU ANDRU EN NAARROO

 You have disregarded me is it myself alone or in that state is there so many other persons are available If so all will die and on seeing it all the world people will curse you and in this world  are you a god 

நீ செய்யும் தகுதி இன்மை என்னளவிலோ மட்டுமா நிற்கும் என்னைப்போல் உம்மால் அருள்பெறாமல் இருப்பார் அத்தனை பேரும்


தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.

DEVEA THILLAI NADAMMAADI THIKATHTHEEN INITHAAN THEETRAIYEEA 

 You are my lard and always are in dancing position and I am in fainting form so that you may console me

தேவனே தில்லையின் கண் திருநடனம் செய்பவனே மயங்கினேன் இனி என்னைத்தேற்றுவாயாக என்றது

நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் 

NARIYAK KUTHIRAP PARAIAKKI GAALAM ELLAAM NIKAL VITHU

 You have converted foxes in to horse and in this way you have done magic in this world

நரிகளை குதிரைகளாக ஆக்கி விரைந்து செலவினை உடைய ஊர்தியாம் சென்று இந்திரஜாலம் அனைத்தும் நிகழ்த்திப்


பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்

PERIYA THENNAI MATHURAI ELLAAM PICHATHU EATRUM PEUNTHURAIYAAI 

You have converted Pandiya kingdom as lunatic one and inthat way you have in Thiuperumthurai temple

பெரிய பாண்டிய மன்னனது மதுரைப் பட்டணம் எல்லாம் பித்தாக்கும்     திருபெருந்துறையாய்


அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே

ARIYA PORULEEA AVINAASI APPAA PANDI VELLAMEEA

 You are rare form to see and in that way you are avinasi place god and Pandiya king form

காணுதற்கும் அடைதற்கும் அறிய பொருளே அவினாசியப்பா பாண்டி வெள்ளமே


தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே. 649 

THERIYA ARIYA PARAJOTHI SIVATHU ONDRUM ARIYENEEA

 To whom so ever you are rare person to search and in that bacon light form and you are prime lard so that I am unable to do anything in this world

யாவர்க்கும் ஆராய்ந்து அறிதற்கு ஒன்றை பரஞ்ஜோதிப் பெருமானே நன் செய்வது ஒன்றும் அறியேன் என்றது .

திருச்சிற்றம்பலம் 

 THIRUCHITRAMBALAM

March 1, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: